Pages

Friday, July 27, 2012

25 மாய மூன் காமிக்ஸ் - சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில வெஸ்டர்ன் காமிக்ஸ் - Wild West Series From Chennai – Maya Moon Comics

டியர் காமிரேட்ஸ்,
இந்த பதிவு நம்முடைய வழமையான பதிவுகளில் இருந்து சற்றே மாறுபடுகின்ற ஒன்று. ஆமாம், இது ஒரு என்குயரி பதிவு. முன்பே சொன்ன மாதிரி தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். அதற்காக தமிழில் வெளிவந்த அனைத்து (கிட்டத்தட்ட) வகையான காமிக்ஸ் புத்தகங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். உதாரணமாக மலர் காமிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ், அதில் (அட்லீஸ்ட்) ஒரே ஒரு மாதிரி இதழாவது சேகரித்து அந்த காமிக்ஸ் பற்றியும், அந்த பதிப்பாளரைப் பற்றிய கூடுதல் விவரங்களை சேகரித்து அதனை தொகுத்து ஆவணப்படுத்துதலே என் நோக்கம்.

ஆகையால் உங்களுக்கு தெரிந்த தமிழில் வெளிவந்த வித்தியாசமான காமிக்ஸ் புத்தகங்கள் உங்களிடம் இருந்தால் (A) அதனை எனக்கு விற்பனை செய்யலாம் அல்லது (B) அந்த புத்தகத்தின் முன் அட்டை, பின் அட்டை, முதல் பக்கம், கடைசி பக்கம் என்று சில பக்கங்களை எனக்கு ஸ்கான் / போட்டோ அனுப்பலாம். சரி, சொந்தக் கதை சோகக் கதையை ஓரம் கட்டி விட்டு வந்த விஷயத்தை கவனிப்போம். அதாவது மாய மூன் காமிக்ஸ். எஸ், தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்த வெஸ்டர்ன் காமிக்ஸ்.

இந்த புத்தகத்தினைப் பற்றி தெரிந்து கொள்ள நாமெல்லாம் இப்போது ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக்கில் செல்வது மிக அவசியம். இந்த விஷயம் நடந்து சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிறது. சென்னையின் ஒரு வெயில்கால மாலை நேரத்தில் ஒரு புத்தக கடையில் இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது. வழக்கமான ஒரு மொக்கை காமிக்ஸ் தானே என்று புரட்டினால், உள்ளே இருந்ததோ நம்மூர் தயாரிப்பு. ஆனால் அதை எல்லாம் விட என்னை மிகவும் கவர்ந்தது இந்த காமிக்ஸ் புத்தக வரிசையின் லோகோ. அச்சு அசலில் அப்படியே நம்ம முத்து மினி காமிக்ஸ் லோகோ போலவே இருந்தது குறிப்பிட தக்க விஷயம்.

 

Maya Moon MM Comics English Western Comics Created in Chennai Operation Bingo Brothers Cover Maya Moon MM Comics English Western Comics Created in Chennai Operation Bingo Brothers Page 01 Intro
Maya Moon MM Comics English Western Comics Created in Chennai Operation Bingo Brothers Cover Maya Moon MM Comics English Western Comics Created in Chennai Operation Bingo Brothers Page 01 Intro

புத்தகம் பைண்டிங் செய்யப்பட்ட நிலையில் இருப்பதால் அட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. ஏதோ, எனக்கு தெரிந்த போட்டோஷாப்பில் இந்த அட்டைப் படத்தையும், சில பக்கங்களையும் ஒப்பேற்றி இருக்கிறேன். நண்பர்களே, இந்த காமிக்ஸ் புத்தகங்கள் இப்போதைக்கு பார்க்க காமெடியாகவும், கிண்டலாகவும் தெரிந்தாலும்கூட இவை எனக்கு மிகவும் அவசியம். ஆகையால் உங்களிடம் இது போன்ற வித்யாசமான புத்தகங்கள் இருந்தால் அவற்றை டிஸ்போஸ் செய்யவும்.

Maya Moon MM Comics English Western Comics Flash Page 2 and 3
Maya Moon MM Comics English Western Comics Flash Page 2 and 3

இந்த புத்தகம் நமக்கெல்லாம் பரிச்சயமான ஃப்ளீட்வே நிறுவன வெஸ்டர்ன் காமிக்ஸ் இதழ்களைப்போலவே அறுபத்தி நான்கு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. ஒரு பக்கத்திற்கு இரண்டு கட்டங்கள் என்று ஸ்டாண்டர்ட் ஆக இருந்தது. இந்த ஆங்கில வெஸ்டர்ன் காமிக்ஸ் புத்தகத்தின் வசனங்கள் (இன்றைய சூழலில்) சிரிப்பூட்டுவதாகவே அமைந்துள்ளது. ஆனால் இந்த புத்தகம் வெளிவந்த போது அதன் வரவேற்ப்பு எப்படி இருந்தது என்பதை கண்டறிய ஆசை.

 

Maya Moon MM Comics English Western Comics Created in Chennai Operation Bingo Brothers Cover 2

Maya Moon MM Comics English Western Comics Created in Chennai Operation Bingo Brothers Cover 2

அநேகமாக இந்த புத்தகம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டும்.அப்போதுதான் ஒரு ரூபாய்க்கு அறுபத்தி நான்கு பக்கங்கள் கட்டுபடியாகி இருக்கும். எண்பதுகளின் மத்தியத்தில் எல்லாம் புத்தக விலை ஒன்றரை ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்க்கும் மாறி விட்டது.

அட்டை மற்றும் படங்களை வரைந்த ஓவியரின் கிரெடிட் எங்கேயும் இல்லை. பதிப்பகத்தாரின் முகவரியை வைத்து கணிக்கும்போது அநேகமாக விமல் காமிக்ஸ் கதைகளுக்கு வரைந்த ஓவியரே இவராகவும் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அவர்களிடம் ஒருமுறை பேசி இருக்கிறேன். அந்த பேட்டியின் விவரங்களை மறுபடியும் சரி பார்த்தால் இதனை ஊர்ஜிதப்படுத்த இயலும் என்றே நினைக்கிறேன். தற்சமயம் வெளியூரில் இருப்பதால் உடனடியாக தகவலை சரி பார்க்க முடியவில்லை.

ஓவியர் ராணு அவர்கள் எண்பதுகளின் முடிவில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் குட்டி & குண்டு காமிக்ஸ் என்று ஒரு சிறுவர் இதழை துவக்கினார். நான்கு ருபாய் விலையில், கருப்பு வெள்ளையிலும், இரு வண்ணங்களிலும் சுமார் முப்பது இதழ்கள் வரை வெளிவந்த அந்த புத்தகம் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறு சிறு சித்திரக் கதைகளையும், பல எழுத்துக் கதைகளையும், துணுக்குகளையும் உள்ளடக்கிய அந்த இதழ், சரிவர விற்பனையில் சோபிக்கவில்லை என்பதே உண்மை. சிற்சில விளம்பரங்களையும், தன்னுடைய சொந்தக் காசையும் நம்பியே ஓவியர் ராணு அவர்கள் அந்த இதழை துவக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் நாட்டில் இருந்து இதுபோல ஆங்கில மொழியில் காமிக்ஸ் அல்லது சிறுவர் இலக்கிய புத்தகங்கள் வந்து இருந்தால் அதனை பற்றி மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல்.

வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தமிழில் சுமார் நூற்றி அறுபதிற்கும் மேற்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் வந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக கடின முயற்சியில் சேகரிக்க முடிந்த தகவல்கள் இவை. இவற்றில் என்னிடம் பாதிக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் இல்லை. ஆகையால் இந்த மாதிரியான புத்தகங்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்தாலோ தயவு செய்து தகவல் அளிக்கவும். அவற்றை வாங்கவோ அல்லது ஸ்கான் / போட்டோ எடுக்கவோ அனுமதி தேவை.

இன்னும் இரண்டு நாட்களில் நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

25 comments:

  1. KING VISWA

    Great Job...

    I don't have this kind of comics in my collection (only Lion & Muthu)

    Let u know in case I will get this kind of books in future.

    Thanks
    Tiruppur Blueberry

    ReplyDelete
  2. //இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட நான் திருப்பூர் வந்தபோது கொஞ்சம் புக்ஸ் வாங்கினேன். அனைத்துமே டபுள்ஸ் தான். அவற்றை நான் சென்னை கூட கொண்டு வரவில்லை. திருப்பூரிலும் ஈரோடிலும் இருக்கும் காமிரேட்டுகளிடமே (அன்பளிப்பாக) கொடுத்துவிட்டேன். //

    நண்பர் விஸ்வா

    திருப்பூரில் எந்த கடையில் நீங்கள் புத்தகங்கள் வாங்கினீர் ? இன்னமும் உள்ளதா ?

    நான் திருப்பூரில் உள்ள அனைத்து கடைகளிலும் கேட்டு விட்டேன் :( எங்கும் கிடைக்க வில்லை.

    தகவல் கிடைத்து, புத்தகங்கள் கிடைத்தால் மகிழ்வேன் ...

    நன்றி

    ReplyDelete
  3. தோழர் திருப்பூர் ப்ளூபெர்ரி (என்னா பேருங்க?),

    நான் வாங்கியது ஜூன் மாதம் முப்பதாம் தேதி. அப்போதுதான் நான் திருப்பூர் வந்து இருந்தேன். திருப்பூர் புதிய பஸ் நிலையம் வாசலில் இருக்கும் அந்த வயதான பெரியவரிடம் தான் வாங்கினேன். அவரிடம் கடந்த பத்து வருடங்களில் வந்த (தற்போது லயன் காமிக்ஸ் ஆபீசில்) இருக்கும் சுமார் நூற்றி ஐம்பது காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன.

    அவற்றில் கொஞ்சம் பழைய காமிக்ஸ் மற்றும் நான் வாங்கினேன். பல காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களும் அங்கே இருந்தன. அவற்றை நண்பர்களிடம் வாங்க தகவல் அளித்து விட்டுதான் கிளம்பினேன். எதற்கும் நீங்கள் ஒருமுறை சென்று வாருங்கள்.

    ReplyDelete
  4. நண்பர் விஸ்வா

    தகவலுக்கு நன்றி ....

    நாகராஜன் (பெயர் கிடைத்து விட்டாதா ?)

    ReplyDelete
    Replies
    1. பெயர் கிடைத்து விட்டது. ஆனால் நான் கமெண்ட்டாக சொன்னது உங்களின் ரைமிங் ஆன திருப்பூர் ப்ளூபெர்ரி பற்றியே.

      Delete
  5. ஹாய் விஸ்வா!
    அந்த வெஸ்டர்ன் காமிக்ஸ் உள்ளூர் தயாரிப்பா? படங்கள் அருமையாக இருக்கின்றன. காமிக்ஸ் பற்றிய ஆவணபடத்தை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. //ஹாய் விஸ்வா!
      அந்த வெஸ்டர்ன் காமிக்ஸ் உள்ளூர் தயாரிப்பா? படங்கள் அருமையாக இருக்கின்றன.//

      இதில் கிண்டல் எதுவும் இல்லையே?

      //காமிக்ஸ் பற்றிய ஆவணபடத்தை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்//

      ஆயத்த பணிகள் முடிந்து விட்டது. இனிமேல் ஸ்க்ரிப்டிங் வேலைதான் பாக்கி.

      Delete
  6. //உதாரணமாக மலர் காமிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ், அதில் (அட்லீஸ்ட்) ஒரே ஒரு மாதிரி இதழாவது சேகரித்து அந்த காமிக்ஸ் பற்றியும், அந்த பதிப்பாளரைப் பற்றிய கூடுதல் விவரங்களை சேகரித்து அதனை தொகுத்து ஆவணப்படுத்துதலே என் நோக்கம்.//

    நண்பரே என்னிடம் பலதரப்பட்ட காமிக்ஸ்கள் உள்ளன.
    என்னிடம் சில மலர் காமிக்ஸ்களும் உள்ளன.நீங்கள் கூறும் புத்தகம் அதுதானா என்று தெரியவில்லை.
    அதனை பற்றிய என்னது பதிவை பாருங்கள்.

    http://www.kittz.info/2012/07/x.html

    அதில் உங்களுக்கு தேவையான புத்தகம் இருந்தால் கூறுங்கள் அதனுடைய புகைப்படங்கள் எடுத்து உங்களுக்கு அனுப்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா அவர்களே.

      நான் மலர் காமிக்ஸ் என்று கூறியது ஒரு உதாரணம் காட்டவே. என்னிடமும் பல மலர் காமிக்ஸ் புத்தகங்கள் உள்ளன.

      I May require a few books in that list. Most of them i do have.Thanks in Advance.

      Delete
    2. Sure Viswaa,

      Send me the names.will try to send as early as possible.
      as all my books are at my home.will take litle time.

      My Mail ID is krishnavv1983@gmail.com

      Delete
  7. சிறப்பான உங்களது ஆவணப்படம் விரைவில் வெளி வர எனது வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி காமிரேட்.

      ஆயத்த வேலைகள் முடிந்த. இனிமேல் ஸ்க்ரிப்டிங் மற்றும் சிறிய பேட்ச் அப் ஷூட்டிங் மற்றும் தான் பாக்கி

      Delete
  8. தங்களின் காமிக்ஸ் தேடலை நினைக்கும் பொழுது " தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிர மாதித்தன் " வாசகம் தான் நினைவில் வருகின்றது

    ஆவணப்படம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க தல.

    ReplyDelete
    Replies
    1. தொலைத்ததை கிடைக்கும்வரை தேடித்தானே ஆகணும் காமிரேட்?

      Delete
  9. தங்கள் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் விஸ்வா...

    புதுச்சேரி வந்துட்டு போயிட்டிங்களா? இப்போதுதான் உங்கள் ப்ளாக் ஐ பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எஸ்'சு.

      புதுச்சேரியில் ஒரு நண்பரிடம் புத்தம் புதிதாக பின் பிரிக்கப்படாத திகில் காமிக்ஸ் பல வாங்கினேன்.

      இன்றைக்கு என்னுடைய ட்விட் பிக்சரில் அவற்றை அப்லோட் செய்கிறேன்.

      Delete
  10. " தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் " சத்தியமா இத நான் சொல்லலீங்கோவ்......

    நம்ம பகவான் ரஜனீஸ் சொன்னதுங்கோவ்

    நீங்கள் தேடும் அனைத்து புத்தகங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாறாக :))
    .

    ReplyDelete
    Replies
    1. //நம்ம பகவான் ரஜனீஸ் சொன்னதுங்கோவ் //

      எனக்கு ரஜினியை தெரியும். இந்த ரஜினிஸ் என்பது ரஜினியின் மேலுள்ள மரியாதை காரணமாக நீங்க பன்மையில் சொன்னதுதானே?

      Delete
  11. தங்கள் தங்கமான முயற்சி வெல்லட்டும்! எந்தன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவரே.

      சமீபத்தில் நண்பர் செந்தழல் ரவி அவர்களை சந்தித்து மதிய உணவு உண்டேன். அதைப்பற்றி நாம் பிறகு பேசுவோம்.

      Delete
  12. Fun to learn English for free
    http://www.elearning-directory.com/arabic-see2

    ReplyDelete
  13. i am sure your next post on Jim Corbett comics by ACK

    ReplyDelete
  14. //Arun PrasadTuesday, July 31, 2012 6:33:00 PM GMT+05:30

    i am sure your next post on Jim Corbett comics by ACK//

    What makes you to think so, Arun?

    Next post (Probably tonight) is going to be a Comic Cuts with lots of news on Batman, Comic Con express and other stuff.

    That will be followed by another post on New Look special and then another on a movie tie up comics. so that's my order of going ahead.

    kindly do let me know why you said so?

    BTW, how is that ACK Comics? Good?

    ReplyDelete
  15. I have ordered for that book and yet to read that .
    If there is any new comic on the market , normally you will be first to review it and that's why i said ur post will be on Jim Corbett .Nothing else

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails