Pages

Saturday, July 07, 2012

14 முத்து காமிக்ஸ் - தற்செயலாய் ஒரு தற்கொலை - டிடெக்டிவ் ஜெரோம் அறிமுகப் படலம்–பாகம்2 of 2 - Muthu Comics #316 – June 2012 – Jerome K.Jerome Bloche

காமிரேட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். கடந்த இரண்டு மாதங்களாகவே தொடர்ந்து பயணத்தில் இருக்கும் எனக்கு இந்த வாரயிறுதி கூட ஒரு பயணத்திலேயே முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது. ஆனால் இந்த பயணம் தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு முக்கியமானதாக இருக்கும் என்றே நம்புகிறேன். அதனைப்பற்றிய விவரங்களை (இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தவுடன்) எழுதுகிறேன். அதுவரையில் இந்த பதிவை படியுங்கள்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முடிந்த நிலையில் இதுவரை வந்துள்ள காமிக்ஸ் புத்தகங்களின் எண்ணிக்கை நிச்சயமாக ஒரு மாபெரும் நம்பிக்கையை தருகிறது. கடைசியாக வந்தவர்களுக்கு, இதோ அந்த புத்தகங்களின் பட்டியல்:

1. லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் – Jan 2012

2. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - கொலைகார கலைஞன் – Jan 2012

3. முத்து காமிக்ஸ் - விண்ணில் ஒரு குள்ளநரி – Jan 2012

4. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு – March 2012

5. லயன் காமிக்ஸ் - சாத்தனின் தூதன் டாக்டர் செவன் – Apr 2012

6. முத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் - என் பெயர் லார்கோ – May 2012

7. முத்து காமிக்ஸ் - சிகப்புக் கன்னி மர்மம் – June 2012

8. முத்து காமிக்ஸ் - தற்செயலாய் ஒரு தற்கொலை – June 2012

பல வருடங்களாக தீவிர முத்து காமிக்ஸ் ரசிகர்கள் எடிட்டரை நோக்கி வைக்கும் ஒரு குற்றச்சாட்டு என்னவெனில் அவர் முத்து காமிக்ஸை லயன் காமிக்ஸ் அளவிற்கு கவனிப்பதில்லை என்பதே. காமிரேட்டுகளுக்கு இந்த குற்றச்சாட்டு அர்த்தமற்ற ஒன்று என்று தெரியும். அதனை நிரூபிக்கும் வகையில் உள்ளது இந்த வருடத்திய காமிக்ஸ் கதைகளின் எண்ணிக்கை:

லயன் காமிக்ஸ் = 2

காமிக்ஸ் கிளாசிக்ஸ்  = 2

மற்றும் (Hold your horses) முத்து காமிக்ஸ் = 4.

அடுத்த ஆறு மாதங்களில் அவர் வெளியிடவிருக்கும் புத்தகங்கள் இந்த எண்ணிக்கையை மாற்றலாம். இருப்பினும் இப்போதைக்கு முத்து காமிக்ஸ் இஸ் லீடிங். ஆகவே பலத்த கரகோஷத்துடன் இந்த பதிவுக்குள் செல்வோம்.

 

Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai: Jerome K Jerome Bloche The Letter – Tamil Version Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Back Cover
Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Back Cover

ஏற்கனவே சென்ற பாகம் / பதிவை படித்தவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதால் இந்த பாகத்தினை நேரிடையாக ஆரம்பிக்கிறேன். இருப்பினும் கதாசிரியர், கதாபாத்திரங்கள் மற்றும் கதை குறித்தான ஒரு முன்னுரை தேவைப்படுபவர்கள் இங்கே சென்று படித்துக்கொள்ளலாம்.

 

Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 03 & 04: Jerome K Jerome Bloche The Letter – Tamil Version
Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 03 & 04

செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படும் நமது கதாநாயகன் ஜெரோம், அந்த கொலை முயற்சிக்கான பழியை தவிர்க்க அவனது காதலியுடன் செய்யும் ஒரு போராட்டமே இந்த இரண்டாம் பாகம். இதைவிட மொக்கையாக ஒரு நூறு பக்க காமிக்ஸ் கதையின் சுருக்கம் அளிக்க முடியாதுதான். இருந்தாலும் ஒரு ஈ எப்படி ஒரு மனிதனை பழிவாங்குகிறது என்ற ஃபேன்டசி கதையை சிறப்பான திரைக்கதை மூலம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அளித்திருக்கும் S.S. ராஜமவுளி போல,இந்த கதையையும் சிறப்பான தருணங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி வெற்றி காண்கிறார் கதாசிரியர். அந்த கதையை தொய்வில்லாமல் சிறப்பான தமிழாக்கத்துடன் அளித்திருக்கிறார் நமது எடிட்டர். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 108 & 109: Jerome K Jerome Bloche The Letter – Tamil Version
Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 108 & 109

சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கதையின் கடைசி பக்கத்தினை இங்கே (ஸ்கான் செய்து இருந்தாலும்) பிரசுரிக்கவில்லை. அந்த பக்கம் இங்கே வெளியிடப்பட்டால் இதுவரை புத்தகம் கைவரப்பெறாதவர்கள் கடுப்பாகிவிடுவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை. மன்னிக்கவும்.

கடந்த நான்கு வருடங்களாக அச்சிடாமல் இருந்த ஒரு கதையை ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே புதிதாக சேர்த்து கதையின் கண்ணியத்தை காப்பாற்றிவிட்ட எடிட்டருக்கு ஒரு பூச்செண்டு.

வழக்கம் போல நம்முடைய அணைத்து பதிவுகளிலும் இடம்பெறும் மூலக்கதையின் அட்டையும், முதல் பக்கமும். முழு வண்ணத்தில் எடிட்டர் தாராளமாக இந்த கதையினை (அதாவது, அடுத்த கதைகளை) வெளியிடலாம். ஜெரோம் is here to STAY.

 

Jerome K Jerome Bloche 16 La Letre Cover Jerome K Jerome Bloche 16 La Letre 1st Page
Jerome K Jerome Bloche 16 La Letre Cover Jerome K Jerome Bloche 16 La Letre 1st Page

நமது லயன், முத்து மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களில் இப்போது கைவசம் விற்பனைக்கு இருக்கும் புத்தகங்கள் இவை மட்டுமே: வெகு விரைவில் இவையும் விற்று தீர்த்து விடும். இதுவரை இந்த புத்தகங்களை வாங்காதவர்கள், இவற்றை உடனடியாக வாங்கிவிடுங்கள்.

Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 112 & 113 Books Available for sale
Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 112 & 113 Books Available for sale

எடிட்டரின் காமிக்ஸ் டைம் இல்லாத இந்த புத்தகத்திலேயே அட்டகாசமான பகுதி இந்த விரைவில் வரவிருக்கும் இதழ்களின் விளம்பரங்களே. அதிலும் இரண்டு ஸ்பெஷல் இதழ்கள் அடுத்தடுத்து வரவிருப்பது இப்போதே ஒரு எதிர்ப்பார்ப்பை கிளப்புகிறது. இரண்டு புத்தகங்களையும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாசகர்களே, எக்ஸ்டிரா சந்தா தொகையை கட்டி விட்டீர்களா? இல்லையெனில் உடனடியாக கட்டவும்.

 

Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 111 28th Annual Advt

Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 111 28th Annual Advt

Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 114 Advt for Forthcoming Issues

Muthu Comics Issue No 316 Dated June 2012 Detective Jerome Tharseyalai Oru Tharkolai Page 114 Advt for Forthcoming Issues

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

14 comments:

  1. oh ho ho.... i have visited this site after a very long time and suddenly i see another new post today itself. very good.

    i need to read this story soon. yet to get these 2 set of books. will try to post about this very soon.

    ReplyDelete
  2. //கடந்த நான்கு வருடங்களாக அச்சிடாமல் இருந்த ஒரு கதையை ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே புதிதாக சேர்த்து கதையின் கண்ணியத்தை காப்பாற்றிவிட்ட எடிட்டருக்கு ஒரு பூச்செண்டு. //

    explain with reference to the context.

    ReplyDelete
  3. Dear King Viswa,
    அடுத்தடுத்த பதிவுகளை அதிரடியாக இட்டு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள். நல்ல நுணுக்கமான புள்ளி விவரம். நல்லது நடந்தால் சரி.
    அது சரி ஐயா, ஏதோ காமிக்ஸ் சம்பந்தமான பயணம் என்று பொடி வைத்து சஸ்பென்ஸை கிளரி விட்டுவிட்டீர்கள். சிந்துபைரவி ஜனகராஜ் தலை வீங்கியது மாதிரி அந்த காமிக்ஸ் விஷயத்தை தெரிந்துகொள்ள என் மண்டையும் ZOOM VIEW-வில் குடைச்சல் எடுத்து வீங்குகிறது.
    காமிக்ஸ் சம்பந்தமான விஷயம் என்கிறீர்கள். உங்கள் முயற்சியும், பயணமும் வெற்றிபெற அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    எப்படியோ நம் எல்லோருக்கும் நல்லது நடந்தால் சந்தோஷம்.
    அன்புடன்,
    பாலாஜி சுந்தர்.

    ReplyDelete
  4. அப்பப்பா...
    நான் உள்ளே வந்து கமெண்ட் இடும் வரை காலியாகதான் இருந்தது. தமிழில் டைப் அடித்து பப்ளிஷ் செய்வதற்குள், இரண்டு காமிரேட்கள் துண்டை போட்டுவிட்டார்கள்.

    ReplyDelete
  5. அடக்கடவுளே.
    முழுவதையும் படித்து விட்டு வந்தால் அதற்குள் நான்கு கமென்ட்டுகளா? விளங்கிடும்.

    ReplyDelete
  6. கண்டிப்பாக எடிட்டர் அடுத்த முறை இந்த ஜெரோம் கதைகளை கலரிலேயே அச்சிட வேண்டும். முதல் பக்கம் அருமையான வண்ணக் கலவையில், கண்களை உறுத்தாமல் இருக்கிறது.

    ReplyDelete
  7. good post viswa . Yet to read these books as i am in Hyderabad.From you post it clear that this series looks good to me .hope editor will continue this series in the coming days

    ReplyDelete
  8. நண்பரே முதல் பதிவில் இந்த பதிவில் கூறுவதாக இருந்த அட்டை பட விளக்கம் என்ன?
    ஒரு நாணயப் போராட்டம் கதையின் ஆங்கில மூலத்தின் பெயர்தேரிந்தால் கூறுங்கள் please

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா,
      என்னுடைய வால்ட் டிஸ்னி பதிவிலேயே இந்த விவரங்கள் இருக்கிறதே?

      இதோ அந்த பதிவிற்கான லிங்க்: http://tamilcomicsulagam.blogspot.in/2009/05/uncle-scrooge-in-tamil-language-tribute.html

      Delete
  9. ஓவியர் தாத்தா என்பது போல் கதை செல்வதாக ஒரு எண்ணம். புத்தகம் கிடைக்காதவர்களின் நன்மைக்காக கமெண்ட்டை நீக்கி விடுங்களேன். (எங்கள் ஊரில் இந்தவாரம்தான் புத்தகம் கிடைத்தது) லார்கோ, லக்கி லுக், மற்றும் இந்த இரு புத்தகங்கள் ஒரு சேர....,

    ReplyDelete
  10. தல,

    தயவு செய்து சந்தா கட்டி விடுங்கள். இன்றுகூட ஒரு நூறு ருபாய் ஸ்பெஷல் இதழ் வெளியிட்டு இருக்கிறார்கள். அட்டகாசமான புத்தகம். கடைகளில் கிடைக்க தாமதம் ஆகும்.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails