காமிரேட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம். இன்று காலை உண்மையிலேயே நல்லபடியாகத்தான் ஆரம்பித்துள்ளது. அதாவது இன்று செல்லவேண்டிய என்னுடைய மும்பை மற்றும் டில்லி பயணம் சரியாக ஒரு வாரம் தள்ளிப்போய் இருக்கிறது. அதாவது அடுத்த திங்கள் இரவு வரை சென்னைவாசிதான். ஆகையால் நடுவில் ஒரு நாள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சென்று வர உத்தேசம். அதுவரைக்கும் இரண்டு மூன்று பதிவுகளையாவது இட உத்தேசம்.திட்டம் நிறைவேறுகிறதா இல்லை தடைபடுகிறதா என்று பார்ப்போம்.
சமீபத்தில் காமிரேட் ஒருவர் (லூசுப் பையன்) இதுபோல பத்திரிக்கைகளில் வரும் தகவல்களை அனைவருமே படித்து விடுகிறார்களே? இவற்றை எல்லாம் கஷ்டப்பட்டு ஸ்கான் செய்து அளிக்க வேண்டுமா? என்று ஒரு கேள்வி எழுப்பினார். உண்மைதான், மக்கள் அனைவரும் இவற்றை படித்துவிடுகிறார்கள்தான். ஆனால் காமிக்ஸ் படிக்கும் ஒரு சிறிய பகுதியினருக்கு இந்த தகவல் முழுவதுமாக சென்றடையவும், பிற்காலத்தில் ஒரு ரெஃபரன்ஸ் செய்துக் கொள்ளவும் இவை தேவைப்படுகிறது. உதாரணமாக இயக்குனர் A.R. முருகதாஸ் அவர்கள் சிறு வயதில் தான் எப்படி முத்துக் காமிக்ஸை விரும்பி படித்தார் என்பதை இப்போது புதிதாக வந்துள்ள காமிரேட்டுகள் தெரிந்து கொள்ள நம் பதிவுகள் உதவும். ஆகவே தான் இந்த காமிக் கட்ஸ் - காமிக் தகவல் பகுதி இங்கே தொடர்ச்சியாக இடம்பெறுகிறது.
ஃகிராபிக் நாவல்கள் - ஒரு அறிமுகம் + சில பரிந்துரைகள்: சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஃகிராபிக் நாவல்கள் பற்றிய ஒரு சிறப்பு கட்டுரை இடம் பெற்றி இருந்தது. அதில் சில கீர்த்தி வாய்ந்த ஃகிராபிக் நாவல்கள் பற்றிய பரிந்துரைகளும் இடம்பெற்று இருந்தது. இந்த லிஸ்ட்டில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு ஃகிராபிக் நாவலும் இடம் பெற்றிருந்தது தனி செய்தி. இந்த ஃகிராபிக் நாவலை "காமெடியாக" மொழி பெயர்த்ததோடில்லாமல்,இதற்க்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தனியாக அங்கலாய்த்தார் இதன் மொழி பெயர்ப்பாளர். சரி, அது ஒரு தனி கதை. அதை அலசுவதை வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர்களுக்கு அளித்து விட்டு நாம் தொடருவோம்.
டின் டின் ரசிகர்களும், அரிய ஓவியங்களும்: கலை உலகில் அரிய ஓவியங்கள் பல சந்தர்ப்பங்களில் நல்ல கலா ரசிகர்களால் தங்களின் தனிப்பட்ட கலெக்ஷனுக்காக வாங்கப்படுவது உண்டு. அந்த மாதிரி இப்போது பாரிஸ் நகரத்தில் (தினத்தந்தியில் படிக்கும்போது பாரிசு என்று படிக்கவும்) நடந்த ஏலத்தில் டின்டின் இன் அமெரிக்கா என்ற காமிக்ஸின் அட்டைப்பட ஓவியம் 1.6 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
Deccan Chronicle Chennai Edition Chennai Chronicle Dated 15072012 Page No 25 TinTin Original Artwork Sale Article |
காமிக்ஸ் கதாநாயகர்களின் ஃபோர்ட்ரெயிட்டுகள்: ஃபிரான்சை சேர்ந்த பெர்க் சென்டர்க் என்கிற ஓவியர் புகழ் பெற்ற ஓவியர்களை ஃபோர்ட்ரெயிட்டுகளாக வரைந்தார். இவை தற்போது பல ஓவிய,காமிக்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நமக்கெல்லாம் தெரிந்த காமிக்ஸ் கதாநாயகர்கள் ஓரிருவர் இங்கேயும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி.
Deccan Chronicle Chennai Edition Chennai Chronicle Dated 14072012 Page No 22 Portaits of Senturk Article |
இரும்புக் கை மாயாவியின் ரசிகர் இயக்குனர் K.V.ஆனந்த்: இயக்குனர் K.V.ஆனந்த அவர்களை தெரிந்தவர்கள் பலர் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக மூன்று ஹிட் / ஹாட் படங்களை கொடுத்தவர், நல்லதொரு போட்டோஃகிராபர், காமெடியாக எழுதும் எழத்தாளர் என்று அவருக்கு பல முத்திரைகள் இருந்தாலும் அவர் ஒரு காமிக்ஸ் ரசிகர் என்பது பலருக்கும் தெரியாது. இதோ, கடந்த வார ஆனத விகடனில் வந்த கவர் ஸ்டோரி. இதில் தன்னுடைய சிறு வயது எண்ணங்கள் எப்படி சித்தரிக்கப்பட்டன என்பதை அழகாக விளக்குகிறார்.
இன்னும் இரண்டு நாட்களில் நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
Nice post. keep on posting such news related to comics alone.
ReplyDelete//இன்னும் இரண்டு நாட்களில் நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும்.//
ReplyDelete??????????????????????????????????
http://tamilcomicsulagam.blogspot.in/2012/07/lion-comics-212-28th-annual-lion-new.html
வாவ் சூப்பர் நியூஸ் தொடர்ந்து போட்டு தாக்குங்கள் தலைவா :))
ReplyDelete.
ஒரே மொக்கையான நியூஸ். போர். சுத்தப் போர்.
ReplyDeleteWHY NO POST?
ReplyDeleteIRAPEKE
Fun to learn English for free
ReplyDeletehttp://www.elearning-directory.com/arabic-see2