காமிரேட்ஸ்,
அநேகமாக நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் தான் இருப்பேன் (என்று நினைக்கிறேன்).ஆகையால் செய்து முடிக்கவேண்டிய பல வேலைகளை முடிக்க உத்தேசம். நண்பர்கள் ரெக்வஸ்ட் செய்துள்ள புத்தகங்களையும் அவர்கள் வசம் ஒப்படைக்க இது சிறந்த தருணம். புதிதாக இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள ஒரு தமிழ் கிராபிக் நாவலை இந்த ஐந்து நாட்களில் வாங்கி, படித்து, பதிவிட எண்ணியுள்ளேன். அது என்ன கிராபிக் நாவல் என்பதை ஒரு சில நாட்களில் இந்த தளத்திலேயே தெரிந்து கொள்ளுங்கள். பொறுமை இல்லாதவர்கள், என்னுடைய ஆரம்ப கால டுவிட்டுகளை படிக்கவும். ஒரு க்ளூ கிடைக்கும். இந்த புத்தகத்தின் ஆங்கில பிரிண்ட் எனக்கு இயக்குனர் மிஷ்கின் அவர்களால் அன்பளிப்பாக கிட்டியது.
ஆபாச காமிக்ஸ்களின் தோற்றம்: அடுத்த வாரயிறுதியில் அமெரிக்காவில் நடக்கவுள்ள போர்ட் எல்லியட் இசை மற்றும் இலக்கிய விழாவில் போர்னோ காமிக்ஸ்களின் தோற்றம் குறித்தான ஒரு கருத்து அடிப்படையாக நடுவர்களின் பார்வைக்கு கொண்டுவரப்படுகிறது. அதில் இந்த (சவீதா பாபி போன்ற கில்மா) காமிக்ஸ்கள் அமெரிக்காவில் கள்ளச்சாராய மாஃபியாக்களால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று ஒரு தியரியை விவாதிக்கிறார்கள். அதாவது மட்டமான காகிதத்தில் இந்த காமிக்ஸ் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு இரண்டு பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று மோதிவிடுவிடுவதை தவிர்க்க அந்த இரண்டு பாட்டில்களுக்கு இடையே வைக்கப்பட்டன. ஒரு பேக்கேஜிங் மெட்டீரியல் ஆகவே இந்த காமிக்ஸ் புத்தகங்கள் ஆரம்பத்தில் செயல்பட்டு இருந்துள்ளன. போகப்போக இவற்றிற்கு என்று ஒரு ரசிகர்வட்டம் உருவாகி, இதுவே தனியாக ஒரு வேலையாக மாறியது. அமெரிக்காவில் உலகப்புகழ் பெற்ற Will Eisner கூட இந்த மாதிரி போர்னோ காமிக்ஸ் உருவாக்கும் சந்தைக்கு வரும் வாய்ப்பிருந்து,தவிர்த்துவிட்டார்.
The Times of India Chennai Edition Dated 08th July 2012 Sunday Edition Page 15 Story on the Porn Comics and their link with US Mafia |
சென்னையில் இருக்கும் Da Vinci Media College அதிபர் திரு Digital Magic அருள் மூர்த்தி அவர்களை சமீபத்தில் சந்தித்து நீண்ட நேரம் காமிக்ஸ் குறித்து பேசிக்கொண்டு இருந்தேன். தமிழில் மற்றும் தென்னிந்திய மொழிகளில் என்று .ஐநூறு படங்களுக்கு மேலாக கிராபிக்ஸ் செய்துள்ள அவர் நமது லயன் மற்றும் முத்து காமிக்ஸின் அதி தீவிர வாசகர். என்னுடைய பையில் எப்போதுமே இருப்பதுபோல லேட்டஸ்ட் காமிக்ஸ் ஆக என் பெயர் லார்கோ இருக்க, அதை நான் அவருக்கு பரிசளித்தேன். பேசிக்கொண்டு இருக்கையில் திடீர் என்று "விஜயன் சார் எப்படி இருக்கிறார்?" என்று வினவ, "அவரை உங்களுக்கு தெரியுமா? பழக்கம் உண்டா?" என்று நான் விசாரித்தேன். அதற்க்கு அவர் "அவரது எழுக்களின் மூலம் எனது நண்பரானவர் அவர்" என்று சென்டிமெண்டாக அடித்து விட்டார்.
ஐயப்பன் அனிமேஷன் படம்: சமீப காலங்களில் அனிமேஷன் படங்களுக்கான மோகம் பெருகி வருகிறது. நான் அவரை சந்தித்தபோது (சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக) அன்றைய தினசரியில் பல கோடி செலவில் தயாராகும் ஒரு (இராமாயணத்தை சார்ந்த) ஒரு அனிமேஷன் படத்தை பற்றி பேசினோம். அந்த படத்தின் தாயாரிப்பாளர்கள் என்னுடைய பழைய கம்பெனியினர் என்பதால் அவரிடம் சுவாரஸ்யமாக என்னால் பேச முடிந்தது. அவர் கூறியது ஒன்றே ஒன்றுதான்: உலகத்தரத்தில் இல்லையெனில் எத்தனை கோடி செலவழித்தாலும் அது வேஸ்ட்தான். இது நமது காமிக்ஸ் தயாரிப்பிற்கும் அப்படியே பொருந்துவதை கவனியுங்கள்.
The Hindu Chennai Edition Metro Plus Dated 11th July 2012 Wednesday Paper Page 1 Animation Movie on Ayyappan News |
தி ஜங்கிள் கேங் - அனிமேஷன் படம்: சமீபத்தில் இந்த ஜங்கிள் கேங் வீடியோ வெளியீடு நடந்தது. மூன்று மிருகங்கள் ஊடாக வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து தெளிவாக, சிறு வயதினருக்கும் புரியும்படியாக எடுக்கப்பட்ட படம் இது. நண்பரொருவர் இந்த புராஜெக்டில் இருப்பதால் இங்கே செய்தி தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
The Hindu Chennai Edition Metro Plus Dated 11th July 2012 Wednesday Paper Page 4 The Jungle Gang Animated Tamil Film News |
சினிமா கதைகள் சித்திரக்கதைகள் வழி: முதலில் ஷாருக் கான் நடித்த டான் படம் வந்த பொது போட்டோ காமிக்ஸ் ஒன்றினை வெளியிட்டார்கள். பின்னர் இரண்டாம் பாகம் வந்தபோது அசல் காமிக்ஸ் ஒன்றினை தயாரித்தார்கள். படத்தை போலவே அந்த காமிக்சும் எடுபடவில்லை. ஏஜென்ட் வினோத் படம் ஃப்ளாப் ஆனாலும் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று: அந்த படத்தின் ஃக்ராபிக் நாவல் அட்டகாசமாக தயாரிக்கப்பட்டு சூப்பர் ஆக வெளிவந்தது. இரண்டு: அது நமது லார்கோ வின்ச் சம்பந்தப்பட்டது. அதை விரைவில் முழு பதிவாக வெளியிடுகிறேன்.
இப்போது புகழ்பெற்ற இயக்குனர் பிரகாஷ் ஜா அவர்களின் தயாரிப்பில் வரப்போகும் "சக்ர வியூக்" படத்தின் ஃக்ராபிக் நாவல் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. பிரகாஷ் ஜா அவர்களின் படங்கள் பெரும்பாலும் அரசியல் த்ரில்லர் ஆகவே இருக்கும். இந்த வகையில் வரும் சினிமாக்களுக்கு ஃக்ராபிக் நாவல்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளும் ஆவலில் நானும் காத்திருக்கிறேன்.
அதே சமயம் டைம்ஸ் ஆப் இந்தியா வழக்கம் போல சொதப்பியுள்ளது. இந்த படத்தின் செய்திகளை இணையத்தில் தேடியபோது அவர்களின் தல முகப்பில் இந்த செய்தி துணுக்கு இடம்பெற்று இருந்தது. ஆனால் காமெடி என்னவெனில் பிரகாஷ் ஜா சம்பந்தப்பட்ட இந்த செய்தியில் அவர்கள் வெளியிட்டுள்ள படம் நம்ம பிரகாஷ் ராஜினுடையது. வேறென்ன சொல்ல? (காமிக்ஸ் விஷயத்தில் தான் அப்படி இப்படி என்றால் எல்லோருக்கும் பரிச்சயமாக இருக்கும் சினிமா செய்தியிலும் அப்படியா?)
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
இந்த பதிவின் தலைப்பே ஒரு மாதிரியாக இருந்ததால் வந்து பார்த்தேன். இப்போதான் நம்ம ப்ளேட் கார்த்திக் டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி எழுதி இருக்கார். அதைப்படிச்சுட்டு வந்தா இங்கே இப்படி.
ReplyDeleteThanks for Sharing.
ReplyDeleteIts a unique combination of gilma+spritual+entertainment.
Masala Mix.
Super...........................
நல்லதொரு தகவல் களஞ்சியம். குறிப்பாக சினிமா துறையினர் காமிக்ஸ் உலகில் அடியெடுத்து வைப்பது காமிக்ஸ் உலகிற்கு நல்ல செய்தியே. அடிஷனல் விளம்பரமும், புதிய வாசகர்களும் உருவாகக்கூடும்.
ReplyDeleteஅடுத்த காமிக்ஸ் எப்போது வரும்?
ReplyDeleteசிவா
உண்மையிலேயே அந்த பிரகாஷ் ஜா பிரகாஷ் ராஜ் மேட்டர் சூப்பர் நியூஸ்.
ReplyDeleteஇந்த அளவிற்கா அஜாக்கிரதையாக இருப்பது?
டியர் கிங்,
ReplyDeleteகிங் விஸ்வா என்பதற்கு பதில் காமிக்ஸ் கலைக் களஞ்சியம் விஸ்வா என்ற பட்டப் பெயரை பெறுவதற்கு தகுதியான நபர் நீங்கள்தான்.
அய்யா, அதென்ன காமிக்ஸ் புத்தகம், நல்லாத்தான் சஸ்பென்ஸ் வைக்கிறீங்க!
உங்க ட்வீட்ட படிக்க வைக்க இப்படியெல்லாம் வழி இருக்குதா!
நடத்துங்க, நடத்துங்க. ஏற்கெனவே அங்கே பெருங் கூட்டமா இருக்குது, இப்ப இன்னும் களைகட்ட போகுது.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்,
first கிரேட் thanks to விஸ்வா,,,,,,,,,,, காமிக்ஸ் (லயன் &முத்து ) மீண்டு வர உதவி செய்ததற்கு ,,,,,,,,,,,,,,, உங்களிடம் oru siriya வருத்தம் உண்டு ,,,,,,,,,,,,,, பழைய புத்தக கடையில் ( மெயின் கடைகளில் ),,,,, bulk amount கொடுத்து ,,,,,,,,,, எங்களை மாதிரி kutti kuttiyai ,,,,,,,, oru காமிக்ஸ் ,ரெண்டு காமிக்ஸ் ,,,,என்று சேமிபவற்கு,,,,,,,, காமிக்ஸ் கிடைக்காமல் செய்யறீங்க ,,,,,,,,,, ethu நியாயமா the கிரேட் king விஸ்வா ,,,,,,,,,,,,,,,, கண்டிப்பா உங்களிடம் பழைய முத்து காமிக்ஸ் செட் 2 ஆவது இருக்கும் ,,,,,,,,,,, பழைய முத்து காமிக்ஸ் யை nri இடம் வித்து lakshs ல் yearn செய்ய வேண்டிய avasiyam உங்களுக்கு கிடையாது ,,,,,,,,,,,,,, கொஞ்சம் consider seithu எங்களை மாதிரி சின்ன பசங்களுக்கு வழி vidalame ,,,,,,,,,,,, பின்ன நாங்களும் eppathan காமிக்ஸ் வாங்கு வது ?,,,,,,,,,,,,,,,,, எந்த பழைய புத்தக கடையில் sendru காமிக்ஸ் கேட்டாலும் ,,,,,,, madras ல் இருந்து car ல் வந்து oru காமிக்ஸ் ரூபா 200 கொடுத்து வாங்கி செல்கிறார்கள் ,,,,,,,, என்று சொல்றாங்க ,,,,,,,,,,,,,,, athu நீங்கள் ஆகத்தான் இருக்கும் என்ற நம்பி கை ல் பதிவு இடுகிறேன் ,,,,,,,,,,,,, தவறாக இருந்தால் மன்னிக்கவும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, டேக் கேர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ReplyDelete//பழைய புத்தக கடையில் ( மெயின் கடைகளில் ),,,,, bulk amount கொடுத்து ,,,,,,,,,, எங்களை மாதிரி kutti kuttiyai ,,,,,,,, oru காமிக்ஸ் ,ரெண்டு காமிக்ஸ் ,,,,என்று சேமிபவற்கு,,,,,,,, காமிக்ஸ் கிடைக்காமல் செய்யறீங்க ,,,,,,,,,, ethu நியாயமா the கிரேட் king விஸ்வா//
ReplyDeleteகண்டிப்பாக இப்படி செய்வது நியாயம் இல்லைதான். ஆனால் நீங்கள் சொல்வது என்னைப்பற்றி அல்ல. நான் இந்த மாதிரி பெரிய அமவுண்ட் கொடுத்து புக்கிங் செய்து வாங்குபவனும் அல்ல. கொஞ்சம் தேடினால் உங்களுக்கும் கடைகளில் புத்தகம் கிடைக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட நான் திருப்பூர் வந்தபோது கொஞ்சம் புக்ஸ் வாங்கினேன். அனைத்துமே டபுள்ஸ் தான். அவற்றை நான் சென்னை கூட கொண்டு வரவில்லை. திருப்பூரிலும் ஈரோடிலும் இருக்கும் காமிரேட்டுகளிடமே (அன்பளிப்பாக) கொடுத்துவிட்டேன். நான் கேள்விப்பட்டவரை சென்ற மாதம் கோவையில் சுமார் நானூறு லயன்/முத்து/மினி லயன்/திகில் காமிக்ஸ்கள் கொண்ட ஒரு பெரிய சேட்டை ஒருவர் வாங்கியதாக கோவையில் இருக்கும் இருக்கும் ஒரு புத்தக கடைக்காரர் சொன்னார். அப்படி நான் அட்வான்ஸ் புக்கிங் செய்து இருந்தால் எனக்கு அல்லவா அவை கிடைத்து இருக்க வேண்டும்? இவ்வளவு ஏன்? சென்னையிலேயே ஒரு நூற்றி நாற்பது (லயன்-முத்து குழும) இதழ்களை ஒருவர் வாங்கியிருந்தார். ஆனால் அது நான் அல்ல. அப்படி இருக்க, என்னிடம் இந்த கேள்வி கேட்பது எப்பாடி முறையாகும்?
தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரி இந்த தளத்திலேயே இருக்கிறது. அல்லது லயன் காமிக்ஸ் ஆபீசில் கேட்டால் என்னுடைய தொலைபேசி எண்ணையுமே கொடுப்பார்கள். ஏதாவது இது போன்ற வதந்திகளை கேள்விப்பட்டால் நம்பாமல் உடனடியாக சந்தேக நிவாரணி பெற்றுவிடுங்கள்.
//கண்டிப்பா உங்களிடம் பழைய முத்து காமிக்ஸ் செட் 2 ஆவது இருக்கும் ,,,,,,,,,,, பழைய முத்து காமிக்ஸ் யை nri இடம் வித்து lakshs ல் yearn செய்ய வேண்டிய avasiyam உங்களுக்கு கிடையாது ,,,,,,,,,,,,,,//
ReplyDeleteமுதல் விஷயம்: நான் சென்னைக்கு வந்ததே ல் தான். ஆகையால் பழைய இதழ்களை நான் கஷ்டப்பட்டு கடந்த நான்கு வருடங்களாகத்தான் வாங்கி வருகிறேன். லயன்-முத்து காமிக்ஸ் சேகரிப்பில் எனக்கு அந்த அளவிற்கு விருப்பம் கிடையாது, ஏனென்றால் அவற்றை முழுமையாக செட் சேர்க்க முடியாது என்பது கண்கூடாக தெரியும். ஆகையால் இந்த ரெண்டு செட், மூன்று செட் என்ற பேச்சை விடுங்கள். என்னிடம் ஒரு செட்டே முழுமையாக கிடையாது. லயன் காமிக்ஸ் கூட முழுமையாக என்னிடம் கிடையாது.
எனக்கு தேவையானது எல்லாம் ATC - Authentic Tamil Comics என்று நான் பெயரிட்டு தமிழில் தயாரிக்கப்பட்டு வந்த சிதிரக்கதைகளே. அவற்றை நான் என்ன விலைக்கு வாங்கே வேண்டுமாலும் ரெடி. அதற்காக நான் ஒரு புக்கை இருநூறு என்றெல்லாம் வாங்குவேன் என்று நினைத்து விடாதீர்கள். இந்த விஷயத்தில் நானும் முத்து விசிறி போலத்தான். ஒரு புத்தகத்தின் மேக்சிமம் விலை பத்து ருபாய் தான் (ஸ்பெஷல் இதழ்கள்,விலை அதிகம் உள்ள இதழ்கள் தனி, அவையுமே MRP விலையைவிட டபுள் என்றாலே வாங்க மாட்டேன்).
அதைப்போல இதுவரைக்கும் நான் யாருக்குமே புத்தகங்களை விற்றது கிடையாது. அந்த அவசியமும் எனக்கில்லை. நண்பர்கள் தேவைப்பட்டால் அவற்றை அன்பளிப்பாக தருவேனே ஒழிய, விடறதில்லை.
//எந்த பழைய புத்தக கடையில் sendru காமிக்ஸ் கேட்டாலும் ,,,,,,, madras ல் இருந்து car ல் வந்து oru காமிக்ஸ் ரூபா 200 கொடுத்து வாங்கி செல்கிறார்கள் ,,,,,,,, என்று சொல்றாங்க ,,,,,,,,,,,,,,, athu நீங்கள் ஆகத்தான் இருக்கும் என்ற நம்பி கை ல் பதிவு இடுகிறேன் ,,,,,,,,,,,,, தவறாக இருந்தால் மன்னிக்கவும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, டேக் கேர் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,//
ReplyDeleteஏனுங்க, சென்னையில் இருந்து நான் மட்டும்தான் வருகிறேனா என்ன? கண்டிப்பாக தவறான தகவலே. நான் தமிழக அளவில் ஒரு வருடத்திற்கு நான்கு முறை டூர் சென்றாலே அது அதிகம். ஆகையால் இது தவறான ஒரு வதந்தியே. மன்னிக்க வேண்டியதில்லை, ஆனால் வதந்திகளை நம்ப வேண்டாம்.
வழக்கமாக இது போன்ற விஷயங்களுக்கு நான் பதில் அளிப்பதில்லை. ஆனால் இன்று ஏனோ பதில் அளித்து விட்டேன். அதற்காக இப்படி ஒவ்வொரு வதந்திக்கும் பதில் அளிப்பேன் என்றும் எண்ண வேண்டாம். அது என் வேலையும் அல்ல.
உங்களின் கேள்வியே எனக்கு மிகவும் கிண்டலான ஒரு தொனியிலேயே தென்பட்டது. இருந்தாலும் அது கிண்டலாக இருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டே இந்த பதிலை அளித்துள்ளேன்.
//first கிரேட் thanks to விஸ்வா,,,,,,,,,,, காமிக்ஸ் (லயன் &முத்து ) மீண்டு வர உதவி செய்ததற்கு ,,,//
ReplyDeleteஐயா சாமி, இப்போதுதான் இந்த "விஷயத்தை" கவனித்தேன். ஏன் இந்த கொலைவெறி? தயவு செய்து எண்ணத்தை/கருத்தை மாற்றிக் கொள்ளவும். இது தவறான தகவல். அப்படி நான் ஒருபோதும் நினைத்ததும் கிடையாது, நினைக்கப்போவதும் கிடையாது. என்னுடைய அன்றாடப் பிரச்சினைகளுக்கு ஒரு விடுதலையாக எனக்கு கிடைத்த வடிகாலே இந்த காமிக்ஸ் கதைகள். ஆகையால் நான் தான் எடிட்டர்(களுக்கு) நன்றி சொல்ல வேண்டும்.
நண்பர் லூசு பையன்,
ReplyDeleteநீங்கள் பெங்களூருவில் எங்கே இருக்கிறீர்கள்? இந்த மாத இறுதியில் ஒரு இரண்டு நாட்கள் அங்கே வருவேன். முடிந்தால் நேரில் சந்தித்து உங்கள் வருத்தங்களை நிவர்த்தி செய்ய இயலுமா என்று பார்க்கிறேன்.
வழக்கம்போல மிக அருமையான தகவல்கள் மிக்க நன்றி விஸ்வாஜி :))
ReplyDelete.
டியர் விஸ்வா,,,,,,,, என்னுடைய கேள்வி க ள் கண்டிப்பாக கிண்டல் தொனி அல்ல ,,,,,,,,,, கிட்டத்தட்ட ஒரு வருடமாக என் மனதில் இருந்த எண்ணம் ,,,,,,,,,,,,எந்த ஊர்ருக்கு சென்றாலும் பழைய புத்தக கடையை நாடுவேன்,,,, பட் ,இப்போ எல்லா எடதியும் முன்பணம் பெரும்பனமாக கொடுத்து வைக்க பட்டு உள்ளது,,,,, என் நண்பர் சொன்ன தகவல் முன்பணம் ஆசாமி நீங்கள் என்று ,,,,அது ஒரு வருடமாக விஷ செடி போல வளர்ந்து (one டாலர் சிறுகதை சிறுவயதில் படித்தோமே !) உங்கள் பெயரை யாராவது காமிக்ஸ் நண்பர் சொன்னால் ,,சிறு கசப்பு தோன்றியது உண்மை ,,,but இப்போது clear ஆகிவிட்டது ,,காமிக்ஸ் மீண்டு வர உதவி செய்தது விஸ்வா &friends என்று எடிட்டர் certify கொடுத்த பிறகு ,நான் சொல்வதை ஏன் மறுகிறேர்கள்? கிட்டத்தட்ட 18 மாதமாக புத்தக கடைக்கு படை எடுத்து (வார வாரம்) after vellayai ஒரு வேதாளம் ,, பெரும் ஏமாற்றம் ,, வெறும் கை யோடு திரும்ப கூடாது என்று ,,உயிர்மை புத்தகம் வாங்கி,,munsyaputhran ,சாரு ,s .ராமகிருஷ்ணன் எழுத்துக்கு அடிமை ஆனது பெரும்கதை ,,, நான் பெங்களூர் கிடையாது ,,தினமும் அலுவல் முடிந்து எல்லா நண்பர்கள் காமிக்ஸ் ப்ளாக் பார்த்துவிட்டு தான் தூங்குவேன் ,, சோ ,, நீங்கள் என் ஊர வரும்போது நானே ph மூலம் காண்டக்ட் செய்து சந்திக்கிறேன் (if u r free or available ),, OR சென்னை bookfair 2013 நம் எடிட்டர் ஸ்டால் போட்டால் ,,,,,, கட்டாயம் உங்களை மீட் செய்கிறேன் ,,,,,,,,,, thanu u for ur reply myfriend ,,,,,,,,,,,,,, டேக் கேர் ,,,,,,,,,,,,,,,,,,
ReplyDeleteநண்பர் கிங் விஸ்வா,
ReplyDeleteவணக்கம், என்னடா எந்த கமெண்ட்டுக்கும் பதில் பதிவை காணோமே என்று நினைத்தேன். லூசு பையனுடைய கமெண்டை மதியமே படித்துவிட்டேன். படித்த உடன் இந்த கேள்விக்கு நீங்கள் கட்டாயம் உடனே பதில் அளிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பலாம் என்று நினைத்தேன். மெயில் அனுப்ப நினைத்ததற்கு காரணம், எடிட்டரின் ப்ளாகில் இதே போல் ஒரு கடுமையான குற்றச்சாட்டு, உங்கள் மீது சுமத்தப்பட்டது. அப்போது நீங்கள் மௌனம் காத்ததாக நினைக்கின்றேன். வேறொருவருடைய ப்ளாகில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, அது எடிட்டருடைய ப்ளாகாக இருந்தாலும், அங்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்/அவசியம் உங்களுக்கு இல்லை. அந்த சம்பவத்தை குறிக்கும் விதமாக என்னுடைய ப்ளாகில் ஒரு பதில் பதிவிடும்போது கிங் விஸ்வா கல்லடிபடுகிறார், அவர் காய்த்து பழுத்த மரம் கல்லடி படத்தான் செய்யும் என்று எழுதியிருந்தேன். இது போன்ற சம்பவங்களுக்கு இன்னும் ஒரு சில காரணங்கள் இருக்கின்றதாக நினைக்கின்றேன். அவற்றுள் இரண்டு முக்கியமான விஷயங்கள்.
1. லயன், முத்து காமிக்ஸ் மீண்டும் வாசகர்களை சென்றடைய தேவையான பாலம் கட்டுவதற்கு நீங்கள் ஏதோ ஒருவகையில் உங்களால் முடிந்த அளவுக்கு கல்லைத்தூக்கி போட்டிருக்கின்றீர்கள். ஒரு அணிலைப் போல!.
2. அடுத்த முக்கியமான காரணம், முத்து காமிக்ஸின் 40 வருட பயணத்தில், வெவ்வேறு காலகட்டங்களில், அந்த காமிக்ஸ்களின் பால் ஈர்க்கப்பட்டு, ரசிகர்களான ஒவ்வொருவரும் அவர்கள் வாங்கிய புத்தகத்திற்கு முந்தைய வெளியீடுகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் பழைய புத்தக கடைகளில் தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். இதில் நானும் அடக்கம்.
முத்து, லயன் காமிக்ஸின் முதல் இதழில் இருந்தே படிக்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனாலும் என்னிடம் முழு கலெக்ஷன் இல்லை என்பது இப்போதும் என் நெஞ்சை கனக்கச் செய்கிறது. அதனால் நானும் என் கலக்ஷனை நிறைவு செய்ய பழைய புத்தக கடைகளில் தேடிக் கொண்டே இருக்கின்றேன். நீங்களும் உங்களிடம் முழு கலக்ஷன் இல்லை என்றே தெரிவித்திருக்கின்றீர்கள். இந்த வாரம் கூட மூர் மார்க்கெட் போகலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையை போக்குவதற்கு உங்களிடமும் எடிட்டர் திரு விஜயன் அவர்களிடமும் ஒரு கோரிக்கை. பழைய காமிக்ஸ் புத்தகங்களை கலக்டார்ஸ் எடிஷனாக தெளிவான நல்ல முறையில் கதைகளின் எண்ணிக்கையிலோ அல்லது வருடங்களை அடிப்படையாகக் கொண்டும் ஒரு கதை கூட விட்டுப் போகாமல் வரிசைக்கிரமாக பதிப்பிக்க, கருத்தளவிலேயாவது ஒரு முயற்சி செய்யப் படவேண்டும். இந்த புத்தகங்களை முன்பதிவு முறையிலே விற்பனை செய்யலாம்.
லூசு பையனா அவர்? இல்லை புத்திசாலிப் பையன். இல்லையென்றால் ஒரு கேள்வியை கேட்டு உங்களிடமிருந்து 5 பதில்களை வாங்கி விட்டார். அதுமட்டுமில்லாமல் நீங்களே பெங்களூருக்கு நேரில் சென்று அவரை சந்தித்து சாமாதானம் வேறு செய்யப் போகின்றீர்கள்.
நல்லது உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள். இங்கே உள்ளூரில் ஒருத்தன் ஜூலை முதல் வாரத்திலிருந்து கால் கடுக்க க்யூவில் காத்திருக்கின்றேன். நடக்கட்டும் நடக்கட்டும். :-/.
நண்பர்களுக்கு இதுபோல் சில எண்ணங்கள் உங்களது சில பதிவில் நீங்கள் கூறியிருக்கும் சில விஷயங்களும், சில ட்வீட்டுகளுமே. முழுமையாக உங்கள் ட்வீட்டுகளை நண்பர் லூசு பையன் (என்னப்பா பெயர் இது, ஒவ்வொரு முறை அவரை விளிக்கும் போதும் அவரை திட்டுவது போலவே இருக்கின்றது)படித்திருந்தால் அந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் நீங்கள் அன்பளிப்பாக கொடுத்துவிட்டது தெரியவந்திருக்கும். ஒருவேளை அனைத்தையும் படித்துவிட்டுதான் கமெண்ட்டே போட்டாரோ, அப்போதுதான் நீங்கள் அவரை சந்திப்பீர்கள் என்பதற்காக!. ;-)
நண்பர்களுக்குள் ஊடலும், கூடலும் சகஜம் என்று எப்போதோ ஒரு ட்வீட்டிலோ அல்லது பதிவிலோ படித்த ஞாபகம்.;-)
எது எப்படியோ உங்கள் மேலே கடுமையான புகார் கூறினால் நீங்கள் சமாதானம் செய்ய நேரில் சந்திப்பீர்கள் என்றால் இப்போது நானும் உட்கார்ந்து யோசித்து உங்கள் மேல் ஏதாவது ஒரு புகாரை தயார் செய்து கமெண்ட் போட தயவு செய்து பெரிய மனது பண்ணி அனுமதி தருவீர்களா.
Just Joking to Get Relaxed from Hot Topic.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
பெங்களூரில் எங்கே தங்குகிறீர்கள் பாஸ்? நேரம் உள்ளபோது ஒரு ஃபோனோ ட்விட்டர் டிஎம்மோ எழுதுங்கள், சந்திப்போம் :)
ReplyDelete: என். சொக்கன்,
பெங்களூரு.
கண்டிப்பாக சார். நிச்சயம் உங்களுக்கு தொலைபேசியில் தகவல் அளிக்கிறேன்.
Delete