Pages

Friday, July 06, 2012

10 Comic Cuts 43-News 43: இந்திய சூப்பர் ஹீரோயின், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் திரு ரோஜா முத்தையா Indian Super Heroine on DC Comics Cover, Artist Maniam Selven in Lime Light & The Man Behind Roja Muthiah Library

காமிரேட்ஸ்,
வெல்கம் பேக். இந்த பதிவானது இந்திய தலை நகரில் இருந்து இடப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் தில்லி வரும்போது குர்கா(வ்)னில் வசிக்கும் காமிரேட் செந்தழல் ரவியை சந்திக்க தொடர்பு கொள்வேன். அவரும் சந்திக்கலாம் என்றே இசைவார். ஆனால் அவரது பணியோ அல்லது என்னுடைய நேரமின்மையோ நாங்கள் இதுவரையில் சந்தித்துக்கொள்ளவேயில்லை. ஒரே ஒரு நாள் தான் பிரயாணமே என்பதால் இந்த முறையும் அதே கதைதான். ஆகையால் நெக்ஸ்ட் டைம் கண்டிப்பாக அவரை சந்தித்து விடுவேன் என்று கூறிவிட்டு இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்.

இந்த முறை ஏகப்பட்ட காமிக்ஸ் செய்திகள் உள்ளன. முதலாவது செய்தி நமது இந்திய கதாபாத்திரம் ஒன்று காமிக்ஸ் அட்டையில் இடம்பெற்றது குறித்து. இந்த கதாபாத்திரம் (இந்திய சூப்பர் ஹீரோயின்) கதாசிரியர்களால் உருவாக்கப்பட்டது. வழக்கம் போல இந்த கதாபாத்திரமும் ஒரு மார்கெட்டிங் சமாச்சராமில்லாமல் தொடருமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

இந்த தகவல் இந்த வாரம் செவ்வாய் கிழமை அன்று டைம்ஸ் ஆப் இந்தியா தினசரியில் வெளிவந்தது. இதனை ஸ்கான் செய்து மின்னஞ்சலில் அனுப்பிய காமிரேட் பாலாஜி சுந்தர் அவர்களுக்கு நன்றி. இதுபோன்ற காமிரேட்டுகள் இருப்பதால்தான் இந்த தளம் தொடர்ந்து இயங்கி வருகின்றது. நண்பர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

 

Times of India English Daily Chennai Times Page 01 Tuesday 03072012 Indian SuperHeroine Story: DC Comics Nuclear Men Issue No 10-The Fury of Firestorm
Times of India English Daily Chennai Times Page 01 Dated Tuesday 03072012 Indian Super Heroine Story

சென்ற வாரம் நான் தென்தமிழக சுற்றுப் பயணத்தில் இருந்தபோது ஈரோட்டில் ஹிந்து தினசரியை வாங்கினேன். அப்போதுதான் இந்த அழகான ஒரு கட்டுரை என் கண்ணில் தென்பட்டது (அன்றுதான் காமிரேட் ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன் என்பதும், இரவுக்காட்சி அமேசிங் ஸ்பைடர்மேன் சென்று நொந்தோம் என்பதுவும் தனிக்கதை). இந்த ஸ்கான் இமேஜை க்ளிக் செய்து முழுவதுமாக படியுங்கள்.

The Hindu English Daily Dated 29062012 Friday Review Special Interview With Maniam Selvam Page 02: Maniam Selven’s Oeuvre
The Hindu English Daily Dated 29062012 Friday Review Special Interview With Maniam Selvam Page 02

சொல்லி வைத்தார்ப்போல, குங்குமம் இதழிலும் கூட ஓவியர் மணியம் செல்வம் அவர்களின் முழுநீள பேட்டி இடம்பெற்றது. அதுவும் அந்த ஆரம்ப கால நிகழ்வுகளை படிக்கும் போது மனம் மெழுகுவர்த்தி போல உருக ஆரம்பித்து விட்டது. கண்டிப்பாக ஒவ்வொரு காமிரேட்டும் படிக்க வேண்டிய பேட்டி இது. அதற்காகவே இதனை ஸ்கான் செய்து முழு பேட்டியையும் வலையேற்றி உள்ளேன்.

எக்ஸ்டிரா பிட்:இந்த குங்குமம் இதழின் கவர் ஸ்டோரி நம்ம முகமூடி படத்தினை பற்றியதே. ஆகையால் கண்டிப்பாக படிப்பதற்கு இரண்டு விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும். மிஸ் செய்யாதீர்கள்.

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 84 & 85, 86 & 87 and 88 & 89

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 84 & 85

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 86 & 87

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 88 & 89

ரோஜா முத்தையா நூலகம் அடையாரில் இருக்கிறது. இங்கே பல அரிய, கிடைக்காத, பதிப்பில் இல்லாத பல நூல்களும், பத்திரிக்கைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலகம் தனி மனிதர் ஒருவரின் முயற்சி என்று தெரியவ் வரும்போது நாம் வியப்பில் ஆழ்வது தவிர்க்க இயலாத ஒன்று.


அடையாரில் இருக்கும் திரு ரோஜா முத்தையா அவர்களின் நூலகத்திர்ற்கு (சாரு நிவேதிதா சொன்ன பிறகு) இரண்டு மூன்று முறை சென்றுள்ளேன். ஆனால் சிறுவர் இதழ்கள் நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. கண்டிப்பாக காமிரேட்டுகள் ஒருமுறையாவது விசிட் செய்யவேண்டிய நூலகம் இது.

Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 67, 68, 69  Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 67 Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 68 Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 69 Pokkisham Segment Roja Muthiah Story

நாளை மறுநாள் இந்த கதையின் இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியாகிய தற்செயலாய் ஒரு தற்கொலை புத்தகத்தின் விமர்சனப் பதிவு வெளியாகும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

10 comments:

  1. ஐ நான் தான் முதல் .....
    ம . செ வின் சொற்கள் ஒவ்வொன்றும் ஆணித்தரமானவை . மனநிறைவுடன் செய்யும் தொழில் தான் சிறந்தது என்பது எவ்வளவு உண்மை . இது போன்ற உங்கள் பதிவுகள் தொடரட்டும் .

    அப்புறம் .. அந்த // நொந்த // கதைக்கு நீங்கள் எடுத்த sms முயற்சிக்கு ஏதாவது பதில் வந்ததா ?

    ReplyDelete
    Replies
    1. //அப்புறம் .. அந்த // நொந்த // கதைக்கு நீங்கள் எடுத்த sms முயற்சிக்கு ஏதாவது பதில் வந்ததா ?//

      அன்றிரவு நாம் படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே பதில் வந்துவிட்டது. அந்த தியேட்டரின் மீது ஒரு நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம்.

      Delete
  2. மணியம் செல்வத்தின் ஓவியங்களின் பின்னே இப்படியும் ஒரு சோகக்கதை இருக்கிறதோ? இதுபோல தொடர்ந்து அருமையான பேட்டிகளை தொகுத்து வழங்குவதற்கு நன்றி.

    கு.ஞான சம்பந்தன்

    ReplyDelete
    Replies
    1. இந்த நன்றிகள் இந்த பேட்டிகளை எடுக்கும் நிருபர்களுக்கும், அதனை பிரசுரிக்கும் பதிரிக்கையாளர்களுக்குமே உரித்தாகும். நான் அதனை தொகுத்து இங்கே வெளியிடுகிறேன்.

      Delete
  3. தகவல்களுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. Got the download for the firestorm series, but not for this story.

    if somebody is interested, let me know. i will provide the series download links.

    ReplyDelete
  5. Vishwa Ji,

    this pollisham page from the vikatan book is from which year? which book, to be precise?

    this data is not there in the scan. can you please tell me the date of the original book?

    ReplyDelete
  6. thanks for posting maniam selvan's interview...he is one of my early inspirations to choose the art field.
    -kamal
    www.rkamalart.blogspot.in

    ReplyDelete
  7. Hi

    thanks fot the wonderful post on the great artist ma.se.

    my aunt used to live next door in chennai and during the summer vocations, we vist her often.

    i saw a younger, smart looking ma.se in those days and like wine, he has become better with age. still he draws like the good old days.

    however, even he himself will agree that he is nowhere near in comparison with his illustrious father.

    always nice to read about an artist, especially if he is much celebrated like ma.se

    it would have been fair, if you've mentioned about his comics trials with kalki group.

    or, take it as a request: do a post on the comics drawn by ma.se

    ReplyDelete
  8. i think, Siv has done a post on ma.se's work in comics. here is the link:

    http://comicstamil.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

    unfortunately he hasn't talked (rather, written) about ma.se's graphic novel venture with vandumama.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails