Pages

Showing posts with label Kungumam Tamil Magazine. Show all posts
Showing posts with label Kungumam Tamil Magazine. Show all posts

Saturday, February 14, 2015

4 Comic Cuts 61: R K Laxman Tribute – Part 4 (Kungumam Tamil Weekly)

Dear ComiRades,

Welcome back to TCU. The promise is on as we move on to the next part of the tribute to the legendary cartoonist R.K.Laxman, who passed away on 26th Jan 2015. TCU wants to make sure that these wonderful tributes are chronicled and made available to the public for reference in the longer run. Hence these posts are planned and uploaded here for the sole purpose of recording  and making all the tributes available in one single place.

For those who came in late, here are the previous posts made in this particular series, starting with Dr 7’s wonderful post with lots of details, which none of these magazines took notice off while making a tribute.

Dr 7’s Tribute Post on R.K.Laxman

TCU’s R.K.Laxman Tribute Post – Part 1 (The Hindu Tamil)

TCU'S R.K.Laxman Tribute Post – Part 2 (Cartoonist Madhan in Jannal Magazine)

TCU’s R.K.Laxman Tribute Post – Part 3 (Aanandha Vikatan Tamil Weekly)

So, here is our 4th post in this series: R K Laxman:Tribute By Kungumam Tamil Weekly

Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 22
Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 22
Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 23
Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 23
Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 24
Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 24
Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 25
Kungumam Tamil Weekly Magazine Issue Dated 09022015 On Stand Date 01022015 RKL Tribute Page No 25

Tomorrow we shall have another wonderful tribute to this great artist by another leading Tamil Magazine, which has not only paid a full fledged tribute but also made s special reference in one of their top Q & A section..

Well, that’s all for this post and  As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

Monday, June 23, 2014

8 Comic Cuts 55 – News 55: Vandu Mama Tribute in Kungumam, New Wave of Tamil Comics in DC & Nostalgia Post in The Hindu

Dear ComiRades,

Welcome back to TCU. This week has been a hectic one for yours truly. Personal commitments and official work both took their toll & hence, instead of a regular post, we are going to have a self explanatory post here.

What i mean by self explanatory is, these posts do not require any other add on information. The precisely is the reason why they are titled as self explanatory post.

1. Kungumam Tamil Weekly – Vandu Mama Tribute (23rd June 2014 issue)

Kungumam Tamil Weekly Dated 30th June 2014 On Stand 23rd June 2014 Page No 122 VanduMama Story

2. Deccan Chronicle – Article on the emergence of Graphic Novels & TCU Books Launch (23rd June 2014)

Deccan Chronicle Chennai Chronicle Dated 23rd June 2014 TCU Story

3. The Hindu (Tamil) Nostalgia Post on Tamil Comics (22nd June 2014)

22nd june 2014 the hindu tamil daily page no 08 steel claw memories

22nd june 2014 the hindu tamil daily page no 01 steel claw memories box news

The beauty of this particular article is that, there was a linker headline for this. This is a lovely gesture from the editorial of The Hindu. Thanks, Team.

Well, that’s all for this post and  As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

Wednesday, August 29, 2012

20 Comic Cuts 47-News 47: இரத்தப் படலம், பெருங்களத்தூர் புத்தகக்கடை, ரஸ்கின் பான்ட்டின் ஃகிராபிக் நாவல் மற்றும் பல செய்திகள்

காமிரேட்ஸ்,

இந்த காமிக் கட்ஸ் - செய்திகள் பதிவானது பல நாட்களாக என்னுடைய கணினியில் தூங்கிக் கொண்டு இருந்தது. இந்த பதிவில் சொல்லப்பட்ட காரணங்களால் இவ்வளவு தாமதமாக வலையேறுகிறது. வழக்காமான தாமதத்திற்கு நான் காரணம் என்றாலும், இம்முறை அந்தப் பழி என்மீதில்லை என்ற வரைக்கும் சந்தோஷமே.

இரத்தப் படலம் - லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் - தினகரன் வெள்ளி மலர் சிறப்பு கட்டுரை:  சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை மதியம் நம்முடைய லயன், முத்து காமிக்ஸ் சந்தாதாரர் தோழர் சிவராமன் அவர்கள் எனக்கு கைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். வழமை போல அப்போதும் ஒரு மீட்டிங்கில் இருந்து தொலைத்த நான், சிறிது நேரம் கழித்து அவரிடம் பேசினேன். இரத்தின சுருக்கமாக பேசும் அவர், இரத்தப்படலம் பற்றிய சில விவரங்களையும், லயன் காமிக்ஸ் அலுவலக தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக்கொண்டு, பிறகு பேசுகிறேன் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு நானும் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.

இது நடந்து இரண்டு வாரம் கழித்து ஒரு புனித வெள்ளிகிழமை அன்று தினகரன் வெள்ளிமலரை படித்தால், பின்னட்டையில் இந்த அற்புதமான கட்டுரை (காமிக்ஸ் பற்றிய நியூஸ் வந்ததால் அந்த வெள்ளி, புனித வெள்ளியாக மாறியது என்பதை சொல்லவும் வேண்டுமோ?). அடுத்து நான் சொல்லப்போகும் வசனத்தை பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக வரும் இன்ஸ்பெக்டர் சஷிகுமார் போல படிக்கவும். சாதாரண ஒரு எடிட்டர் எழுதிய கட்டுரை அல்ல இது. நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் காமிக்ஸ் வெறி ஊறிப்போன ஒருவராலேயே இப்படிப்பட்ட கட்டுரையை எழுத முடியும்.

இந்த கட்டுரை வெளியான அன்று அடியேன் இந்தியத் தலைநகரில் இருந்ததாலும், அங்கு ஸ்கான் வசதிகள் சரிப்படாததாலும் உடனடியாக பதிவிட முடியவில்லை. ஈரோட்டின் காமிக்ஸ் குபேரர் ஸ்டாலின் அவர்கள் இந்த பதிவில் இதைப்பற்றி இட்ட பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.

 

Dinakaran Tamil Daily Friday Supplement Velli Malar Book Dated 10082012 Page No 24 Bourne Legacy Article by ComiRade K.N.Siva Raman
Dinakaran Tamil Daily Friday Supplement VelliMalar Book Dated 10082012 Page No 24 Bloune Legacy Article

ஒரு சோகமான பின்குறிப்பு: இந்த நியூஸ் வெளியான சிறிது நேரத்திலேயே (மதியம் பனிரெண்டு மணிக்குள்ளாக) சுமார் நாற்பது தொலைபேசி அழைப்புகள் லயன் ஜம்போ ஸ்பெஷல் இரத்தப்படலம் பற்றி விசாரித்து விற்பனைக்காக வர ஆரம்பித்து விட்டது. இது ஆரம்ப நிலை. ஆனால் சோகமான தகவல் என்னவெனில் ஏற்கனவே இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழ்கள் முற்றிலும் விற்று தீர்ந்துவிட்டன என்பதே. ஒரு தர்ம சங்கடமான நிலையை ஆசிரியருக்கும், லயன் காமிக்ஸ் அலுவலக ஊழியர்களுக்கும் ஏற்படுத்தியமைக்கு இங்கே மன்னிப்பு கோருகிறேன். இருந்தாலும் தோழர் அவர்கள் என்ன விஷயத்திற்காக தகவல் சேகரித்தார் என்பது தெரியாத சூழலிலேயே நான் தகவல் தெரிவித்தேன். ஆகையால் .....

பெருங்களத்தூர் புத்தகக் கடை மீரா முருகன்: ஏற்கனவே திரு நூல் பாண்டியன் அவர்களின் புத்தகக் கடை பற்றிய செய்திகளை வெளியிட்டு இருந்தோம். இப்போது அடுத்த புத்தகக் கடைக்காரர். ஆனாலும் மிகவும் இனிய, பழகுவதற்கு எளிய, கூச்ச சுபாவம் கொண்ட மருகன் அவர்களிடம் காமிக்ஸ் எதுவும் இல்லையாம். பின்னே, தகவல் வந்து ஒரு மாதம் கழித்து போன் செய்தால் எப்படி இருக்கும்? என்று சொல்கிறார் நண்பர் இரவுக் கழுகு. ஆனால் அவரது Behind the screen story படிப்பதற்கு அருமையாக இருக்கிறது.

 

Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article by S.Kiruba Karan
Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article

குங்குமம் வரவேற்பறை:  விகடனை தொடர்ந்து குங்குமம் வார இதழிலும் இப்போது ஒவ்வொரு வாரமும், ஒரு புத்தகம், ஒரு இணையதளம் என்று சிறப்பாக அறிமுகம் செய்கிறார்கள். சிறுவர்களுக்கான இரண்டு தகவல்கள் இருந்ததால் அந்த ஸ்கான்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

 

Kungumam Tamil Weekly Dated 13082012 Page No 106 107 Pavalakkodi Magazine Intro
Kungumam Tamil Weekly Dated 13082012 Page No 106 107 Pavalakkodi Magazine Intro
Kungumam Tamil Weekly Dated 06082012 Page No 085 Tamil Tutor Site F0r Children
Kungumam Tamil Weekly Dated 06082012 Page No 085 Tamil Tutor Site Fir Childrens

பழைய வின்டேஜ் காமிக்ஸ் விற்பனை: படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு தகவல். சத்தியமாக நம்மூரில் இல்லை. இனி தொடர்ந்து படிக்கவும். அட, எங்க சார் போறீங்க? ஓ, இதுக்கு மேல படிக்க என்ன இருக்கு என்று தானே? அதுவும் ஒரு வகையில் சரிதான். தகவலுக்காக இந்த ஸ்கான்.

 

Deccan Chronicle Chennai Edition Supplement Chennai Chronicle Page No 27 Comics Sales Article
Deccan Chronicle Chennai Edition Supplement Chennai Chronicle Page No 27 Comics Sales Article

ராப்பிட் ராப் - ஆங்கில ஃகிராபிக் நாவல்: ஃபாரூக்கி தம்பதியினரின் இந்த சித்திரக்கதை வடிவ நாவலை மிகவும் விரும்பி படித்தேன். பள்ளி / கல்லூரி நாட்களில் அனிமல் ஃபார்ம் என்கிற அட்டகாசமான கதையை நினைவூட்டினாலும், ஒரு சதாவீதம் கூட சார்ந்திராமல் ஒரு தனிப்பட்ட கதையாகவே இந்த நாவல் இருக்கிறது. சாவகாசமான ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியநேரத்து வாசிப்புக்கு உகந்தது.

 

The Hindu Daily Sunday Magazine Page No 08 Rabbit Rap Graphic Novel Review by Swati
The Hindu Daily Sunday Magazine Page No 08 Rabbit Rap Graphic Novel Review

ரஸ்கின் பான்ட் - ஒரு ரசிக்கும்படியான பேட்டி: சிறுவயதில் வாண்டுமாமா அவர்களுடனே பயணம் செய்ததால் ரஸ்கின் பான்ட் அவர்களின் கதை சொல்லும் திறனை ரசிக்க முடியவில்லை (அவர் ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார் என்பது வேறொரு கிளைக்கதை). பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா இனைந்து நடத்திய உங்கள் ஜூனியர் மாத நாவலில் வந்த உலக புத்தக அலமாரி என்கிற கதை தொடரில் ரஸ்கின் பான்டின் ஒரு சிறுகதையின் தமிழாக்கத்தை படித்து வியந்தேன். அதனைவிட அந்த கட்டுரையாசிரியர் அந்த சிறுகதையை நாம் ஏன் காதலிக்கவேண்டும் என்று விவரித்தவிதம் என்னை கவர்ந்தது. இதில் கொடுமை என்னவெனில் அந்த சிறுகதையை ஏற்கனவே நான்-டீடெயில் ஆக பள்ளியில் ஏற்கனவே படிதிருந்ததுதான். அதன் பின்னர் அவரது அனைத்து சிறுகதைகளையும் தேடிப்பிடித்து படித்து விட்டேன். வாசகர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இந்தமாத (ஆங்கில) கோகுலம் இதழில் இவரைப்பற்றிய ஒரு கவர் ஸ்டோரியும் வந்துள்ளது. இனி இவரது பேட்டி:

 

Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview
Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview
Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 07 Ruskin Bond Interview Part 02

நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Friday, July 06, 2012

10 Comic Cuts 43-News 43: இந்திய சூப்பர் ஹீரோயின், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் திரு ரோஜா முத்தையா Indian Super Heroine on DC Comics Cover, Artist Maniam Selven in Lime Light & The Man Behind Roja Muthiah Library

காமிரேட்ஸ்,
வெல்கம் பேக். இந்த பதிவானது இந்திய தலை நகரில் இருந்து இடப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் தில்லி வரும்போது குர்கா(வ்)னில் வசிக்கும் காமிரேட் செந்தழல் ரவியை சந்திக்க தொடர்பு கொள்வேன். அவரும் சந்திக்கலாம் என்றே இசைவார். ஆனால் அவரது பணியோ அல்லது என்னுடைய நேரமின்மையோ நாங்கள் இதுவரையில் சந்தித்துக்கொள்ளவேயில்லை. ஒரே ஒரு நாள் தான் பிரயாணமே என்பதால் இந்த முறையும் அதே கதைதான். ஆகையால் நெக்ஸ்ட் டைம் கண்டிப்பாக அவரை சந்தித்து விடுவேன் என்று கூறிவிட்டு இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்.

இந்த முறை ஏகப்பட்ட காமிக்ஸ் செய்திகள் உள்ளன. முதலாவது செய்தி நமது இந்திய கதாபாத்திரம் ஒன்று காமிக்ஸ் அட்டையில் இடம்பெற்றது குறித்து. இந்த கதாபாத்திரம் (இந்திய சூப்பர் ஹீரோயின்) கதாசிரியர்களால் உருவாக்கப்பட்டது. வழக்கம் போல இந்த கதாபாத்திரமும் ஒரு மார்கெட்டிங் சமாச்சராமில்லாமல் தொடருமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

இந்த தகவல் இந்த வாரம் செவ்வாய் கிழமை அன்று டைம்ஸ் ஆப் இந்தியா தினசரியில் வெளிவந்தது. இதனை ஸ்கான் செய்து மின்னஞ்சலில் அனுப்பிய காமிரேட் பாலாஜி சுந்தர் அவர்களுக்கு நன்றி. இதுபோன்ற காமிரேட்டுகள் இருப்பதால்தான் இந்த தளம் தொடர்ந்து இயங்கி வருகின்றது. நண்பர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

 

Times of India English Daily Chennai Times Page 01 Tuesday 03072012 Indian SuperHeroine Story: DC Comics Nuclear Men Issue No 10-The Fury of Firestorm
Times of India English Daily Chennai Times Page 01 Dated Tuesday 03072012 Indian Super Heroine Story

சென்ற வாரம் நான் தென்தமிழக சுற்றுப் பயணத்தில் இருந்தபோது ஈரோட்டில் ஹிந்து தினசரியை வாங்கினேன். அப்போதுதான் இந்த அழகான ஒரு கட்டுரை என் கண்ணில் தென்பட்டது (அன்றுதான் காமிரேட் ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன் என்பதும், இரவுக்காட்சி அமேசிங் ஸ்பைடர்மேன் சென்று நொந்தோம் என்பதுவும் தனிக்கதை). இந்த ஸ்கான் இமேஜை க்ளிக் செய்து முழுவதுமாக படியுங்கள்.

The Hindu English Daily Dated 29062012 Friday Review Special Interview With Maniam Selvam Page 02: Maniam Selven’s Oeuvre
The Hindu English Daily Dated 29062012 Friday Review Special Interview With Maniam Selvam Page 02

சொல்லி வைத்தார்ப்போல, குங்குமம் இதழிலும் கூட ஓவியர் மணியம் செல்வம் அவர்களின் முழுநீள பேட்டி இடம்பெற்றது. அதுவும் அந்த ஆரம்ப கால நிகழ்வுகளை படிக்கும் போது மனம் மெழுகுவர்த்தி போல உருக ஆரம்பித்து விட்டது. கண்டிப்பாக ஒவ்வொரு காமிரேட்டும் படிக்க வேண்டிய பேட்டி இது. அதற்காகவே இதனை ஸ்கான் செய்து முழு பேட்டியையும் வலையேற்றி உள்ளேன்.

எக்ஸ்டிரா பிட்:இந்த குங்குமம் இதழின் கவர் ஸ்டோரி நம்ம முகமூடி படத்தினை பற்றியதே. ஆகையால் கண்டிப்பாக படிப்பதற்கு இரண்டு விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும். மிஸ் செய்யாதீர்கள்.

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 84 & 85, 86 & 87 and 88 & 89

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 84 & 85

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 86 & 87

Kungumam Tamil Weekly Issue Dated 09072012 Story on Artist Maniam Selvam Page No 88 & 89

ரோஜா முத்தையா நூலகம் அடையாரில் இருக்கிறது. இங்கே பல அரிய, கிடைக்காத, பதிப்பில் இல்லாத பல நூல்களும், பத்திரிக்கைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலகம் தனி மனிதர் ஒருவரின் முயற்சி என்று தெரியவ் வரும்போது நாம் வியப்பில் ஆழ்வது தவிர்க்க இயலாத ஒன்று.


அடையாரில் இருக்கும் திரு ரோஜா முத்தையா அவர்களின் நூலகத்திர்ற்கு (சாரு நிவேதிதா சொன்ன பிறகு) இரண்டு மூன்று முறை சென்றுள்ளேன். ஆனால் சிறுவர் இதழ்கள் நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. கண்டிப்பாக காமிரேட்டுகள் ஒருமுறையாவது விசிட் செய்யவேண்டிய நூலகம் இது.

Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 67, 68, 69  Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 67 Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 68 Pokkisham Segment Roja Muthiah Story
Anandha Vikatan Tamil Weekly Magazine Issue Dated 11072012 Page No 69 Pokkisham Segment Roja Muthiah Story

நாளை மறுநாள் இந்த கதையின் இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியாகிய தற்செயலாய் ஒரு தற்கொலை புத்தகத்தின் விமர்சனப் பதிவு வெளியாகும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Monday, January 16, 2012

6 Comic Cuts 37-News 37: லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் பா.ராகவன்–குங்குமம் Issue Dated 23-01-2012

Dear ComiRades,

இன்றைய தினம் ஒரு சோகமான தினமாக ஆரம்பித்தது. காலையிலேயே சில பல வேலைகள் வந்துவிட, அவற்றை முடித்து விட்டு மதியமோ அல்லது மழைக்கால மாலை நேரத்திலோ புத்தக கண்காட்சிக்கு வந்து சேர்ந்துவிடலாம் என்று நினைத்திருக்கையில், என்னுடைய பாட்டி மறைந்த செய்தி வந்தடைந்தது. உடனடியாக அங்கு செல்ல நேரிட்டதால், இன்றைய வர்த்தக வேளையில் மட்டுமாவது (மாலை ஆறு முதல் ஒன்பது மணி வரை) புத்தக கண்காட்சி வர நினைத்த என்னுடைய ஆசை, நிராசையாகவே போனது. இருக்கட்டும், நாளைக்காவது காலையில் இறுதி கடமைகளை முடித்து விட்டு நேரத்திற்கு புத்தக கண்காட்சிக்கு வர உத்தேசித்துள்ளேன். இன்றைய தினம் நேரில் ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பினை இழந்தமைக்கு ஈடாக நாளை மற்றும் கடைசி நாளாகிய செவ்வைக் கிழமை ஆகிய இரு தினங்களும் தொடர்ந்து வர முடிவெடுத்துள்ளேன்.

இறைய காமிக் கட்ஸ் பதிவில் பிரபல எழுத்தாளர் பா ரா என்றழைக்கப்படும் எங்களின் குருவாகிய பா.ராகவன் அவர்கள் (Wikipedia, எழுத்தாளர் பா. ராகவனின் இணைய தளம்)  தங்கள் காமிக்ஸ் வேட்டையை பற்றுதலைப் பற்றி குங்குமம் வார இதழில் கூறிய தகவலே ஒரு பதிவாக மாறியுள்ளது.

Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on CBS CBF Day 03 Photo 36 Stall No 372 Ace Writer Pa Ra with Editor S Vijayan Along with Cop John Simon in Right to Left Order
Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on CBS CBF Day 03 Photo 36 Stall No 372 Ace Writer Pa Ra with Editor S Vijayan Alon with Cop John Simon in Right to Left Order

இந்த குங்குமம் இதழ் இன்னமும் கடைகளில் கிடைக்கின்றது. வாங்க விரும்பும் வாசகர்கள் வாங்கிப்படிக்கலாம். இந்த குறிப்பிட்ட பகுதியில் பிரபல எழுத்தாளர்கள் தாங்கள் வாங்கிய முக்கியமான புத்தகங்களைப் பற்றி விவரிக்கிறார்கள். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் இந்த புத்தக வெளியீட்டிற்கு முன்பாகவே பேட்டி கண்டதால் அவர் இதனைப்பற்றி (லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல்) பற்றி கூறவில்லை.

இந்த நிகழ்ச்சியை கட்டுரையாகி, செய்தி வடிவில் தொகுத்த நண்பர் வெ.நீலகண்டன் அவர்களுக்கும், புகைப்பட கலைஞர் திரு அருண் அவர்களுக்கும் நன்றி. தொடர்ந்து நம்முடைய காமிக்ஸ் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் குங்குமம் வார இதழ் நிர்வாகத்திற்கும் நன்றி.

Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on Comics
Kungumam Dated 23012012 Issue Stand Date 14012012 Page No 103 Pa Ra on Comics

நாளைக்கு வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களின் தொகுப்பாக ஒரு புத்தக கண்காட்சி காமிக்ஸ் ரசிகன் பார்வை வெளிவரும். இன்று நான் செல்லாததால், இன்றைய தினத்தை பற்றி நோ பதிவு.  இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Friday, July 08, 2011

10 Comic Cuts 34-News 34: M.S.Subbu Lakshmi’s Graphic Novel (Kungumam), Spider Man’s Death (Kumudham) & A New Steel Claw?

Dear ComiRades,

Welcome back to TCU with another dose of Comics & related news features. As TCU is nearing 100 posts, the number of news posts (Comic Cuts) keep on increasing and this trend is rather healthy. Healthy in the sense that at least we have some news and related articles when we don’t have enough comics in Tamil. Hopefully this shortage of Comics will be overcome very shortly and we will be having our monthly new comics review very, very soon. Enough of the future and let’s get on with the current news.

01 Kungumam – Lakshmi Devnath’ s Graphic Novel: Since the launch, this particular book is getting more and more positive reviews in the media space and this holds good for the other entrants in the graphic novel domain. The message is loud and clear: If the content is good and provided the presentation is world class, we will welcome with both arms. Now, it is the turn of Kungumam Weekly and the review is wonderful, to say the least.

Kungumam Tamil Weekly - Issue Dated 11072011 - Page No 70 - Article on MS Subbulakshmi Graphic Novel – Conceptualized & Created By Ms Lakshmi Devnath

Kungumam Tamil Weekly Isue Dated 11072011 Page No 70 Article on MS Subbulakshmi Graphic Novel

02 Kumudham – Spider man’s Death: TCU has already covered this particular news in the regular Comic Cuts section in THIS post. On the heels of those news articles in English news papers comes this article in Kumudham weekly. Sadly none of the other frontline media cared to give coverage to this news. Anyway, here is what Kumudham got to say on this topic.

Kumudham Tamil Weekly Issue dated 13072011 Page No 30 Spiderman's Death Kumudham Tamil Weekly Dated 13072011 Page No 32
Kumudham Tamil Weekly Issue dated 13072011 Page No 30 31 Spiderman's Death Kumudham Tamil Weekly Issue dated 13072011 Page No 32 Spiderman's Death

03 Dina Malar Siruvar Malar – Another Steel Claw?: We all loved THE Steel Claw aka Irumbuk kai Maayavi (இரும்புக்கை மாயாவி) as he is known in South India since the last 41 years. There have been more than a dozen copy-cat Steel claws from the local comics stories and most of them were failures and the few ones which got some sort of success was from Mullai Thangarasan himself. Some years ago, there was a TV Serial in Jaya TV which was in 3-D format where the hero had similar traits to that of Louis Crandell.  Now, here comes another one. Some time back TCU has done a post about the resurrection of Siruvar Malar. Sadly, they have reverted to the old style with very little space for comics, that too translated from Hindhi market. On the wake of that thought, here is Lee Rock.

Remember, you can read Siruvar Malar free of cost in their home page. Here is the link for that: Siruvar Malar

Dina Malar Siruvar Malar Issue Dated 08072011 Page No 22 Lee Rock Becomes Steel Claw 01 Dina Malar Siruvar Malar Issue Dated 08072011 Page No 23 Lee Rock Becomes Steel Claw 02
Dina Malar Siruvar Malar Issue Dated 08072011 Page No 24 Lee Rock Becomes Steel Claw 03 Dina Malar Siruvar Malar Issue Dated 08072011 Page No 25 Lee Rock Becomes Steel Claw 04

Well, that's all for the time being & TCU will be back with the next issue of Mekala Comics in the next post-which happens to be one of the very few Special issues in Tamil comics history where Editor S.Vijayan was not involved. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa.

Sunday, June 26, 2011

14 Comic Cuts 32-News 32: ‘Nool’ Pandiyan, Graphic Novel on M.S.Subbulakshmi & TV Celebrity Reading Comics

Dear ComiRades,

Welcome back to TCU after a very short break. Over the last 3 months, the trend on the number of posts and the sequence has been similar. Not much posts in the first 20 days and a continuous uploading of them in the next 10 days. Even in this month, the trend is following and try as hard, TCU couldn’t break the repeating of the same trend. Hopefully from next month onwards the trend may get reversed. However, one good thing for the last 3/4 months is that the number of posts is being constant: A Minimum of 5 posts per month, though most of them are Comic Cuts and TCU Presents series. A Lot of reader request are arriving with post requests on golden oldies of Tamil comics being the top of the request list. TCU is trying the best to accommodate them in the near future.

Moving on to the current post, this Comic Cuts is also similar to that of the News Post 28 (Comic Cuts 28) for the simple reason that all the news items are in Tamil language. TCU will try to differentiate the news articles in language wise in the near future as well. Henceforth the news articles in English will be segregated and posted in a single post and the remaining Tamil news articles related to Comics will be featuring in Tamil Comic Cuts.

01 Puthiya Thalaimurai – Nool Pandiyan: The name Nool Pandiyan is very popular amongst book collectors. Ever since TCU regained the Comics interest, the hunt was on to get the missing issues of Tamil comics and at that time Nool Pandiyan was introduced by one of the ComiRades. Nool Pandiyan is more popular and got more access to many book series than Mylapore Alwar and his book shop. His TV Interview will also be featured in the forthcoming Comic Cuts with the video. Watch out for that.

Note: Nool Pandiyan can be reached at This mobile Number: +91 94444 29649.

Puthiya Thalaimurai - Tamil Weekly - Issue Dated 23062011 - Page No 44 – Article on Nool Pandiyan By Yuva Krishna – Titled ad Pandiyan Parisu

Puthiya Thalaimurai Tamil Weekly Issue Dated 23062011 Page No 44 Pandiyan Parisu

02 Dina Malar – Nool Pandiyan: The very next day, this particular piece was carried out in Dina Malar in the page next to the headliner. Dina Malar has been doing this kind of Un-credited article usage for many years. However, since it has given more mileage to out best friend, we left the stones as they were.

DinaMalar Tamil Daily Dated 18062011 Nool Pandiyan Article
DinaMalar Tamil Daily Dated 18062011 Nool Pandiyan Article

03 Anantha Vikatan – M.S.Subbulakshmi Graphic Novel: TCU has done a complete post on this book and that can be read over here (TCU Presents 04). It was nice to see leading magazines give their due respect to a honest work in the field of Comics. TCU expects much more coverage for the same in the near future.

Anantha Vikatan Tamil Weekly - Issue Dated 29062011 - Vikatan Jannal Section – Page No 96 - Book Intro - Heritage Press M.S.Subbulakshmi Graphic Biography
Anantha Vikatan Tamil Weekly Issue Dated 29062011 Vikatan Jannal Section Book Intro Heritage Press M

04 Dina Mani Kathir – M.S.Subbulakshmi Graphic Novel: Anantha Vikatan has given only a small introduction about the book. Dina Mani Kathir has given a wonderful review of the same with photos and scans. We expected such work from Dina Mani based on their literary likening. Hopefully their own Children's magazine (Siruvar Mani) may get revamped, just like Dinamalar Siruvar malar gotten for a shorter period.

Dina Mani Kathir Weekly Supplement to Daily Dina Mani Dated 26062011 Page 01 Dina Mani Kathir Weekly Supplement to Daily Dina Mani Dated 26062011 Page 02
DinaMani Kathir Weekly Supplement to Tamil Daily Dinamani Dated 26062011 Page 01 DinaMani Kathir Weekly Supplement to Tamil Daily Dinamani Dated 26062011 Page 02

Kungumam – Graphic Novel on Steve Jobs & Kumudham – Mamathi Chari reading Comics: Most of the Tamilians know that Mamathi chari is a popular RJ/TV Compere. She was also an ex colleague of Yours truly. During those days, the Comics fire was not re-ignited with Yours truly and hence may not looked after those interest. The next time we meet, you can bet on the topic of the 1st question. The Photo of SriDevi was un-edited in the scan for some old timers.

Kungumam Tamil Weekly Dated 27062011 Page No 02 News Way Comics Book on Steve Jobs

Kumudham Tamil Weekly Issue Dated 29062011 Page No 48 Mamathi Chari Reading Tamil Comics Cut

Kungumam Tamil Weekly Dated 27062011 Page No 02 News Way Comics Book on Steve Jobs Kumudham Tamil Weekly Issue Dated 29062011 Page No 48 Mamathi Chari Reading Tamil Comics Cut

Well, that's all for the time being. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget in the Blog.

Thanks & Regards,

King Viswa.

Tuesday, May 17, 2011

22 கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ் Ponnar Sankar Comics

தமிழ் சினிமாவில் பிரபலமான கதையாசிரியர்களில் கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. திராவிட கழக பிரச்சாரதிர்க்கும், கொள்கை பரப்ப உதவும் ஒரு கருவியாகவும் கதை மாந்தர்களை உபயோகப் படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டாலும், கருப்பு வெள்ளை காலத்தின் மத்திம தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பல வசனங்கள் கலைஞர் எழுதியதே. பராசக்தி, மனோகரா என்று இன்றளவும் அவரது வசனங்கள் பல இடங்களில் பல படங்களில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த படங்களை தவிர கலைஞர் வசனம் எழுதி சிறப்பாக பேசப்பட்ட படங்களாகிய மலைக்கள்ளன், புதுமை பித்தன், மருதநாட்டு இளவரசி போன்றவையும் வெற்றி பெற்றவையே. இவையெல்லாம் தமிழ் சினிமாவின் மத்திம காலத்தில் வந்த படங்கள்.

கருப்பு வெள்ளையில் இருந்து முழு வண்ணத்திற்கு படங்கள் மாறிய பின்னரும் கலைஞர் பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினர். குறிப்பிடும்படியான படங்கள் என்று நீதிக்கு தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனிக்கள், நியாயத்தராசு, தென்றல் சுடும்  போன்றவற்றை சொல்லலாம். இவையெல்லாம் எண்பதுகளில் வந்தவை (என்று நினைக்கிறேன்). கலைஞர் ஆட்சியில் இல்லாதபோது நிறைய நேரம் இருந்ததால் இப்படி ஒரே படங்களாக எடுத்துக்கொண்டு இருந்தார் என்று கிண்டலாக சொல்வோரும் உண்டு. இந்த படங்கள் எல்லாம் அவை ரிலீஸ் ஆன காலகட்டங்களில் சிலாகித்து பேசப்பட்டாளும்கூட இவற்றில் எதுவுமே மகத்தான வெற்றி பெற்ற (சூப்பர் ஹிட்) படங்கள் இல்லை என்பதை தீவிர திமுக அனுதாபி கூட சொல்லிவிடுவார்.

ஆனால் தற்போதைய புதிய தலைமுறைக்கு கலைஞர் கொடுத்துள்ள படங்களை சற்றே பார்ப்போம்: பாசக்கிளிகள் (உண்மையில் இந்த படத்தின் பெயர் பாசக் மட்டும்தான், போஸ்டரிலேயே பாசக் என்று மட்டும்தான் போட்டு இருப்பார்கள். அருகில் மூன்று கிளிகளின் படங்கள் இருக்கும். நாம் அதனையும் இணைத்து படித்து பாசக்கிளிகள் என்று புரிந்துகொள்ள வேண்டுமாம்), கண்ணம்மா, உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் போன்றவையே. இவற்றை எல்லாம் பார்த்த (அ) கேள்விப்பட்ட இன்றைய புதிய தலைமுறை கண்டிப்பாக கலைஞரை ஒரு மொக்கையான எழுத்தாளர் என்றே முடிவெடுதிருப்பார்கள்.  உண்மையை அறிய இவர்கள் கண்டிப்பாக பராசக்தி, மனோகரா போன்ற படங்களை பார்க்கப்போவதும் இல்லை. பார்த்தவர்கள் சொல்வதை கேட்கப்போவதும் இல்லை. ராணி காமிக்ஸின் கடைசி காலத்தில் வந்த மொக்கை கதைகளை மட்டுமே படிக்கும் வாய்ப்பை பெற்ற இன்றைய புதிய தலைமுறை ஒட்டுமொத்த ராணி காமிக்ஸ் கதைகளையும் மொக்கை என்று சொல்வதைப்போன்றது இந்த கருத்து.

இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும்விதமாக கடைசியாக ஒரு ஹிட் கொடுங்கள் கலைஞரே என்று திமுக திம்மிகள் பலரும் ஆசைப்பட அதற்க்கு பதில் சொல்லும்விதமாக வந்ததே பொன்னர் சங்கர். (ராஜ்கிரண் போல மீசையை முறுக்கிக்கொண்டு சொல்வதனால் பொன்னர்-----------------------------------------------------ஷங்கர்).  யுவகிருஷ்ணா சொல்வதைப்போல, கடந்த இரு தசாப்தங்களாக கலைஞர் மொக்கையாக மட்டுமே வசனம் எழுதுவார் என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டை தூள் தூளாக்கியிருக்கும் திரைப்படம் பொன்னர் சங்கர். இந்த படத்தை பற்றிய ஒரு ஒப்பீட்டிற்கு செல்லும்முன் ஒரு சிறிய ப்ளாஷ் பேக்:

கதையின் வடிவம்: கொங்குமண்டலம் என்று சொல்லப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளில் எல்லை தெய்வங்களாக இன்றளவும் வழிபடும் குல தெய்வங்களாக இருப்பவர்களே பொன்னர் சங்கர் (இவர்களின் கோவில்கள் பற்றிய ஒரு நேரடி பதிவிற்கு இங்கே கிளிக்கவும்). கதையானது பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், கதையின் முக்கிய பாத்திரங்கள் இரண்டு இனங்களை சேர்ந்தவர்களாகவும் (வெள்ளாளர் மற்றும் வேட்டுவ இனத்தார்) பரம்பரைக் கதைகளாக சொல் வழக்கில் கூறப்பட்டு பின்னர் தமிழக கலைகளில் ஒன்றாகிய உடுக்கையடிப்பாடல் மூலம் பிரபலப்படுதப்பட்டு (முக்கியமாக அழியாமல் தொடர்ந்து வழக்கில் இருக்க வகை செய்து) வந்த கதையே இது.

உடுக்கையடிப்பாடல் மூலம் இந்த கதையானது பரம்பரை பரம்பரையாக பயணம் செய்து வந்தது. ஒரு காலகட்டத்தில் எங்கே வெறும் சொல் வழக்கில் இருந்தே அழிந்து விடுமோ என்ற சிந்தனை தலைதூக்க ஆரம்பித்த நேரத்தில் இந்த கதையை எழுத்துருவாக்க பலரும் நினைத்தனர். அவ்வாறே திரு பிச்சன் அவர்கள் முன்வந்தார். இவரே இந்த கதையை அண்ணன்மார் கதை என்ற பெயரில் எழுதினார். இவருடைய கதை வடிவை ஒட்டியே இன்றளவும் பலராலும் பொன்னர் சங்கர் கதைகள் எழுதப்படுகின்றன (வால்மீகி ராமாயணத்தை எழுதினாலும், அதனை சார்ந்து தங்கள் நடையில் பலரும் எழுதுவதைப்போல).

கலைஞரின் பொன்னர் சங்கர் தொடர்கதை

எண்பதுகளின் மத்திமத்தில் (17-07-87) குங்குமம் இதழில் கலைஞரின் கைவண்ணத்தில் தொடர்கதையாக வாராவாரம் வந்து (62 weeks) கலைஞர் ரசிகர்களால் சிறப்பாக பேசப்பட்ட தொடர்கதை இந்த பொன்னர் ஷங்கர். தொடர்கதைக்கு கோட்டோவியங்கள் வரைந்தவர் கோபுலு. முதல் வாரம் கலைஞர் கருணாநிதி அவர்கள் பொன்னர் சங்கர் பற்றி ஒரு முன்னுரையை எழுதி இருப்பார். மொத்தம் எட்டு பக்கங்களுக்கு வந்த அந்த முன்னுரை ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல. இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்து அறுவது வாரங்கள் கதை விறுவிறுப்பாக சென்றது. கதை முடிந்த பின்னர் ஒரு முடிவுரையை எழுதி சில விளக்கங்களையும் அளித்தார் கருணாநிதி. ஆக மொத்தம் அறுபத்தி இரண்டு வாரங்கள் வந்த இந்த பொன்னர் சங்கர் தொடர் சிறந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை கதை முடிந்த பின்னர் வந்த வாசகர் கடிதங்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த கதையானது வேறெந்த பதிப்பகம் மூலமாக தனி புத்தகமாக வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்த வாசகர்கள் யாரேனும் பின்னூட்டங்கள் மூலம் தெரிவியுங்களேன்.

முன்னுரை - நுழைவாயில்: முன்சொன்னது போல, கலைஞர் அவர்கள் ஒரு முன்னுரையை இந்த கதையின் முதல் இதழில் வெளியிட்டார். அதனைக்கூட கவித்துவமாக நுழைவாயில் என்று பெயரிட்டு தன்னுடைய கதையின் ஆதாரங்களை பற்றியும் தான் இந்த குறிப்பிட்ட கதையை எழுதியதின் காரணத்தையும் கூறுகிறார். இந்த குறிப்பிட்ட புத்தகத்தினை இப்போது பலராலும் தேடிப்பிடித்து படிக்க இயலாது என்ற காரணத்தினால் முதல் பாகம் முழுமையும் உங்களின் பார்வைக்கு:

Prologue 1
Prologue 2
Prologue 3
Prologue 4

தன்னுடைய கண்களை பராமரிக்க அர்ச்சனா என்ன செய்கிறார் போன்ற செய்திகளை விட்டுவிட்டு கதையின் முன்னுரையை மட்டும் படித்து விட்டீர்கள் அல்லவா? முதல் இதழில் படங்கள் அவ்வளவாக இல்லை. ஒரே ஒரு கோட்டோவியம் மட்டுமே இருக்கும். அதுவும் போர்ட்ரெய்ட் போல வரையப்பட்டு இருக்கும். ஆகையால் கோபுலு அவர்களின் ஓவியத்திறனை இதில் அவ்வளவாக காண இயலாது. கதையின் கடைசி பாகத்தில் இருக்கும் ஓவியத்தில் இருக்கும் அந்த நுணுக்கமான டீடய்லிங்'ஐ சற்றே கூர்ந்து பாருங்கள். அவரது திறமைக்கு இது ஒரு சிறிய சான்று. 

குங்குமம் வார இதழ் - பொன்னர் சங்கர் - அண்ணன்மார் கதை - முதல் பகுதி - கதை: கலைஞர் கருணாநிதி - ஓவியங்கள்: கோபுலு

First Episode

இந்த கதையை எழுத ஆரம்பித்த உடனேயே பல சர்ச்சைகளும் ஆரம்பித்தன. தவறான புத்தகங்களையும் ஆதாரமில்லாத தகவல்களையும் மேற்கோள் காட்டி கலைஞர் இந்த கதையை எழுதுகிறார் என்று பல கடிதங்களும், புகார்களும் எழ, கலைஞர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விளக்கம் அளித்தார்.

ஏனோ தானோ என்று எழுதவில்லை அண்ணன்மார் வரலாறு - ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் - கலைஞர் மேற்கொண்ட பயணங்கள்

Research

இவ்வாறாக பல ஆரம்பகால சர்ச்சைகளுக்கு பிறகு அண்ணன்மார் கதை ஒரு வருடத்திற்கு மேலாக வெற்றியுடன் வெளிவந்து சிறப்பான வரவேற்ப்பை பெற்றது.வரலாற்று கதைகளுக்கு வரவேற்ப்பு குறைந்து இருந்த அந்த காலகட்டத்தில் இவ்வாறாக ஒரு வருடம் ஒரு வரலாற்று தொடர்கதை விறுவிறுப்புடன் வெளிவந்தது பாராட்டத்தக்கதே. இந்த ஓவியத்தை பாருங்கள். நீண்ட சடை முடிகளை கொண்டு (வைகிங்குகளை போல), தினவெடுத்த தோள்களுடன் இருக்கும் அந்த வீரனை பாருங்கள். கோபுலு அவர்கள் கேலிச்சித்திரங்கள் மட்டுமில்லாமல் இதுபோல மனதை கவரும் அற்புதமான மூவிங் ஓவியங்களையும் வரைவதில் வல்லவர் என்பது நிரூபணமாகும். (இந்த படத்தை பார்த்தவுடனே நண்பரொருவர் இந்த ஓவியத்தில் இருப்பது கண்டிப்பாக சகோதர-சகோதரி உறவு முறையாளர்கள் என்பதை அடித்து சொன்னார். அது எப்படி கதையை பற்றி தெரியாமல், படிக்காமல் சொல்ல முடிகிறது என்று விசாரித்தால், அவர்கள் அணைத்து இருக்கும் முறையிலேயே அது தெரிகிறது என்று கூறினார்).

குங்குமம் வார இதழ் - பொன்னர் சங்கர் - அண்ணன்மார் கதை - கடைசி பகுதி - கதை: கலைஞர் கருணாநிதி - ஓவியங்கள்: கோபுலு

Last Episode

இவ்வாறாக கதையை முடித்தவுடன், அதில் விளக்கமளிக்க வேண்டிய இடங்கள் பல இருப்பதை உணர்ந்த கலைஞர் உடனடியாக ஒரு முடிவுரையை எழுதினர். அதில் கதை முடிந்தவுடன் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களையும் விளக்கினார். அந்த கடைசி பாகத்தின் முழு ஸ்கான் பக்கங்கள் இதோ:

Epilogue 1
Epilogue 2
Epilogue 3
Epilogue 4Cover

பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு by இல.பரணன்கதை குறித்த சர்ச்சைகள்: மிகவும் பரவலாகவும் சிறப்பாகவும் பேசப்பட்ட இந்த கதையில் பல கேள்விகளும், சர்ச்சைகளும் எழாமலில்லை. குறிப்பாக கதையின் போக்கும், ஒரு குறிப்பிட்ட இனத்தினரை பழிக்கும் வகையிலும் மற்றொரு இனத்தாரை உயர்த்தியும் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டது இந்த கதை என்று இன்றளவும் சொல்வோர் உண்டு. கரூரில் இயங்கும் பெரியாரியல் கலை இலக்கிய ஆய்வு மன்றத்தை சார்ந்த வரலாற்று சமூக ஆய்வாளர் திரு.இல.பரணன் அவர்கள் கூற்றுப்படி இந்த கதையின் மூலப்படியாக இருக்கும் பிச்சன் அவர்கள் எழுதியதற்கே வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அதில் செய்துள்ள தவறுகளையே மற்றவர்களும் பின்பற்றி வந்தார் என்று கூறுகிறார். குறிப்பாக பிச்சன் அவர்களின் மூலப்படியில் வேளாளர் இனத்தாரை உயர்வாகவும், வேட்டுவரை தாழ்த்தியும் ஆதாரமின்றி எழுதி இருப்பதை குறிப்பிடுகிறார், மேலும் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த புத்தகமானது சாதி வெறியை தூண்டும் வகையில் இருந்ததால் அப்போதே இந்த புத்தகம் தடை செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு இவர் எழுதியுள்ள பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு ஒரு குறிப்பிடத்தக்க நூலாகும்.

பொன்னர் சங்கர் காமிக்ஸ் தொடர்

தொடர் கதை வடிவில் ஒரு வடத்திற்கு மேலாக வந்து பெருவெற்றி பெற்ற பொன்னர் சங்கர் கதையை தொடர்ந்து 2 வருடங்கள் கழித்து இதே கதை புதிய தலைமுறை வாசகர்களை கவரும் வகையில் முழுக்க முழுக்க சித்திரக்கதை வடிவில் (காமிக்ஸ்) வருவதாக விளம்பரம் செய்யப்பட்டவுடன் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. தொடர் கதை வெளிவந்த போது கோபுலு அவர்களின் கோட்டோவியங்கள் கதைக்கு உயிரூட்டின. அதே எதிர்பார்ப்பில் வாசகர்கள் இருந்தனர். இந்த சித்திரக்கதைக்கு ஓவியங்களை வரையப்போவது யார் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கரோ என்ற புதிய ஓவியரின் (காமிக்ஸ் ரசிகர்களுக்கு புதியவர்) கைவண்ணத்தில் இந்த சித்திரத்தொடர்கதை ஆரம்பித்தது. நாற்பது வாரங்கள் வந்த இந்த கதை மீள்வாசிப்பில் மிகவும் சிறப்பாக தோன்றுகிறது. மொத்தம் இருநூறு பக்கங்கள் கொண்ட இந்த கதை (ஒவ்வொரு வாரமும் ஐந்து பக்கங்கள்) 80 பக்கங்கள் முழு வண்ணத்திலும், மீதமுள்ள 120 பக்கங்கள் கருப்பு வெள்ளையிலும் வந்தது.

இந்த காமிக்ஸை ஒரு நூலகர் தொகுத்து பைண்டிங் செய்து வைத்திருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்பு அதனை நான் கையகப்படுதினேன். அப்போது முதல் ஒவ்வொரு முறையும் இந்த கதையை படிக்க முயலும்போதெல்லாம் ஐந்து பாகங்களுக்கு மேல் கதையின் போக்கில் பயணிக்க இயலாமல் போனது. கதையில் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருப்பதும், கதையின் ஓட்டம் வேகமாக இருப்பதும் அவற்றிற்கு காரணங்கள் என்றாலும் என்னுடைய சோம்பேறித்தனமும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த கதையை திரைப்பட வடிவில் பார்த்தவுடன் அன்றிரவே புத்தகத்தை எடுத்து படித்து விட்டேன். அப்போது எனக்கு மந்தியப்பன்தான் பிரகாஷ் ராஜ், காளியண்ணன் தான் நெப்போலியன், குன்றுடையான் தான் ஜெயராம் என்று நடிகர்களை கொண்டு பாத்திரங்களை இனம்காண முடிந்தது. மிகவும் சுலபமாக கதையை புரிந்து கொண்டு படித்து விட்டேன். அந்த கதையின் முதல் பாகம் இதோ: 

Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 01

Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 02

Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 01 Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 02
Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 03 Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 04
Kungumam Dated Nov 1989 Ponnar Shankar Comics Part 01 Page 05 Map
Map உதவி: K.Senthil Sivan (முழு கதையையும் படிக்க, இங்கே கிளிக்வும்)

பெரியகாண்டியம்மன் திருக்கோவில், வீரப்பூர் - கரூர்
Photo ஜெகதீஸ்வரன்: கோவில் பற்றிய முழு பதிவிற்கு இங்கே கிளிக்கவும்.

கிட்டதட்ட தொடர் கதையை அப்படியே காமிக்ஸ் வடிவத்திற்கு (எழுத்து வடிவில் இருந்து படங்களிற்கு) மாற்றி இருந்தார்கள். இவ்வாறு நடந்த போது கலைஞர் அவர்கள் அந்த விவகாரங்களில் பங்கேற்றாரா என்பது தெரியவில்லை. [ஏனென்றால் அவ்வாறு செய்வது சாதாரண வேலையல்ல. ஒரு திறமை வாய்ந்த கதாசிரியராலேயே அவ்வாறு செய்ய இயலும். தமிழில் தான் எழுதாத ஒரு கதைக்கு இவ்வாறு காமிக்ஸ் வடிவிற்கு மாற்றியவர் ஒருவர் உண்டென்றால் அவர் நம்ம வாண்டுமாமா தான். தமிழில் கதை: X , படக்கதை வடிவாக்கம்: வாண்டுமாமா, ஓவியங்கள்: Y என்று வந்த கதையை பற்றி பின்னொரு பதிவில் விரிவாக காண்போம்].

மிகவும் திறமையாக எடிட்டிங் செய்யப்பட்டு படக்கதை வடிவில் வந்த இந்த தொடர் சிறந்த வரவேற்ப்பை பெற்றது என்றால் அது வியப்புக்குரியதல்ல. கண்ணைக்கவரும் வண்ணக்கலவையும், சிறப்பான கோணங்களையும் கொண்டு அமைந்த இந்த சித்திர தொடர்கதை இன்றைய இந்த புதிய தலைமுறைக்கு நான் முன்மொழியும் கதைகளில் ஒன்றாகும். கதையின் நாற்பதாவது மற்றும் கடைசி பாகம் இதோ:

Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 01

Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 02

Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 01 Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 02
Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 03 Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 04

Kungumam Dated Sep 1990 Ponnar Shankar Comics Part 40 Page 05

பொன்னர் சங்கர் திரைப்படம்: சமீபத்தில் திரைக்கு வந்து 'வெற்றிகரமாக' ஓடிக்கொண்டு இருக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை படம் ரிலீஸ் ஆன இரண்டாம் நாளே பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நண்பர்களுடன் சென்று படத்தை பார்க்க முடிவு செய்தோம். எங்களைப்போன்ற கோயிஞ்சாமிகளின் வழிகாட்டி மட்டும் வருவதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார். இதுநாள் வரை அவர் இந்த படத்தை பார்க்கவில்லை என்று சிறு பறவை சொல்கிறது. ஒரு சிறந்த படத்தை அவர் மிஸ் செய்து விட்டார் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஆமாம் தோழர்களே, ஒரு விறுவிறுப்பான மன்னர் கால (பீரியட் படம்?) தமிழ் படத்தை பார்த்து பல வருடங்களாகிறது. அந்த குறையை பொன்னர் சங்கர் போக்கி விட்டது. Ponnar Sankar Tamil Movie Poster

இந்த காமிக்ஸ் கதையை படித்துவிட்டு மறுபடியும் (சத்தியமாக) இரண்டாம் முறையாக படத்தை பார்த்தபோது ஆச்சர்யம் ஏற்ப்பட்டது. அதாவது சிதிரக்கதையின் கட்டங்கள் எவ்வாறு நகர்கிறதோ அவ்விதமே கதையும் முன்னேறியது. கிட்ட தட்ட இந்த படக்கதை ஒரு ஸ்டோரி போர்ட் ஆகவே உபயோகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் தியாகராஜன் கண்டிப்பாக இந்த காமிக்ஸ் கதையை படித்திருக்க வாய்ப்பிலாத வேளையில் எப்படி இந்த ஒற்றுமை ஏற்பட்டது என்று வியந்தேன். படத்தின் பல காட்சிகள் அப்படியா காமிக்ஸ் கதை நகர்வது போல இருந்தது.

ஆனால் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தையும், நாசர் வேடத்திற்கு அதே லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் வரும் கேண்டால்ப் பாத்திரத்தையும் உபயோகப்படுத்தாமல் இருந்திரக்கலாம். அட, உண்மையிலேயே படத்தின் மத்தியில் (இரண்டு ஹீரோயின்களை காப்பாற்றும் காட்சியில்) வரும் சண்டைக்காட்சிகள் அப்படியே லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போல படத்தின் இரண்டாம் பாகத்தில் வருவதைப்போல இருக்கும். தியாகரஜான் ஒரு கலைரசனை கொண்ட இயக்குனர் (உண்மையிலேயே இப்படி ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சிகளை சமீபத்தில் எந்த படத்திலும் பார்க்கவில்லை). அழகியல் காட்சிகளை மிகவும் திறமையாக வெளிக்கொனருபவர். அவர் இந்த கோ-இன்சிடென்ஸ்'ஐ தவிர்த்து இருக்கலாம்.

அதைப்போலவே இயக்குனர் தியாகராஜன் அவர்கள் ஹீரோயிசம் காண்பிக்க கதையமைப்பில் இருந்து விலகாமல் இருந்திருக்கலாம். உதாரணமாக கலைஞர் எழுதிய கதையில் ஆரம்பத்தில் அந்த இரண்டு ஹீரோயின்களையும் காப்பாற்றுவது உண்மையில் ராஜ் கிரணின் மகனே. பொன்னரும் சங்கரும் காப்பாற்ற முயன்றாலும்கூட முதலையிடமும், மலைப்பாம்பிடமும் அவர்களால் தனித்தே வெற்றி கொள்ள முடியாது. அப்போது ராஜ் கிரணின் மகனே வந்து இவர்களை காப்பாற்றுவார். ஆனால் கதையில் பொன்னரும் சங்கரும் தனித்தே காப்பாற்றும்படி இருக்கும். இதைதவிர கதையின் பல இடங்களில் இப்படி பல சினிமாட்டிக் சுதந்திரத்தை இயக்குனர் கையாண்டிருப்பார். குறிப்பாக படத்தின் இறுதியில் பொன்னர் மட்டுமே உயிரோடு இருப்பார். சங்கர் வீரமரணம் தழுவி இருப்பார். ஆனால் அப்படி காட்டினால் சென்டிமென்ட் அடிப்பட்டு விடும் என்று இருவரையும் உயிருடனே காட்டி இருப்பார் இயக்குனர்.

சன் டிவி - தினகரன் - குங்குமம் நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்: இந்த சித்திரக்கதையானது தமிழிக வரலாற்றில் ஒரு முக்கிய இடம்பெறக்கூடியதாகும். அப்படிப்பட்ட இந்த கதையை பலருக்கும் சென்றடையும் வகையில் ஒரு முழு நீளக்கதையாக மறுபதிப்பு செய்யலாமே? கண்டிப்பாக குங்குமம் நூலகத்திலேயே இந்த கதையின் பிரதிகள் இருக்கும். அப்படி இல்லைஎன்றாளும்கூட என்னைப்போன்ற பல வாசகர்களிடம் கண்டிப்பாக இருக்கும். எவ்வளவோ புத்தகங்களை மறுபதிப்பு செய்கிறார்கள். இது மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் குங்குமம் ஸ்டாலில் சந்தா விண்ணப்பங்களும், கடைசி இரண்டு மூன்று இதழ்களுமே விற்பனைக்கு இருக்கும். இது போன்ற அறிய புத்தகங்களை மறுபதிப்பு செய்து அங்கே விற்கலாமே?

Related Posts with Thumbnails