Pages

Showing posts with label Articles. Show all posts
Showing posts with label Articles. Show all posts

Saturday, October 05, 2013

33 Comic Cuts 53 – News 53: A Discussion on Tamil Comics & Latest Advertisement

Dear ComiRades,

Welcome back to TCU. Though the first 100 Posts were in the language of our earlier masters, It’s been Almost 2 years since we blogged in English. May be this is the right time to come back to that in order to cater to a larger audience. When we say larger audience, what we mean by that is the comics reading community from places like UK, France, USA, Singapore and Sri Lanka etc etc.

For a blog like this, language can be a double edged sword. Ideally it should be in the regional language or the language of the content (That is, Tamil, since we talk mostly about Tamil comics only). However, when we sculpt articles on characters that cut the national and linguistic barriers, people want to know more about that and Google is not helping in that area as Language converter from Tamil Language to others is only in the initial stage.

When Yours truly wrote an article on Modesty Blaise some time back, it reached many researchers and they are still in contact through mail and update on their front whenever there is a news about Modesty Blaise. That was made possible because the article was penned in English language and hence it catered a wider target group. Later on, when we did a similar post on Chick Bill , we did it in Tamil Language and the reason being our change in blogging style, Some of our fellow ComiRades mailed me stating the fact that though they could enjoy the Pictures in the Post, they were unable to comprehend the post with language being the barrier. One ComiRade went to a level saying that seeing the post & unable to read is like getting nectar and realising that your mouth is sealed, thereby preventing you from drinking it.

Throughout our visits during the Comic con in Mumbai, Delhi etc, people started sort of complaining about the language barrier. To start a new blog and trying to translate the same content in Tamil language was one of the ideas suggested to yours truly. However, such a task will be not only improbable at the moment but humanly not possible as well. So, from now onwards, you’ll find our posts being in English only. Apologies to my Tamil Reading friends.

Deccan Chronicle – Chennai Chronicle Cover Story: Today’s Deccan Chronicle news paper (Chennai edition) has a wonderful cover story in the Chennai Chronicle supplement. Thanks to Kedar Koushik, Reporter / Sub Editor, we have this news article on Tamil Comics. Yours truly Thanks the Editor and the management of DC for such a honour. Here is the cover page of Chennai Chronicle. You can click on the image to enlarge it or go to this link to see it online. Deccan Chronicle Chennai Chronicle Cover Story on Comics Dated 05th October 2013 Here is the detailed cover story with fantastic interviews from Artist / Creator Gaman and Mr S.Vijayan, Editor / Publisher of Lion & Muthu Comics, Sivakasi. To read it, You can click on the image to enlarge it or go to this link to see it online. For those who came in late, Here is the link to Editor S.Vijayan’s Official Home page and his Blog.

Without sounding like promoting myself, which will be tough for a third person to realise the difficulties, i’ve been trying to paint a sketch and pave a small way for Tamil Comics’ awareness. Under such circumstances, articles like these do really Help. A Big Hug, Brother Kedar, Thanks a Ton.

Deccan Chronicle Chennai Chronicle Cover Story on Comics Dated 05th October 2013 story

Comics Advertisements: Last paragraph was about non promotion and this one is about promotion. Though the idea was to create awareness about the re launch of Tamil comics, the write ups in magazines, interviews in TV and more than 60 blogs to promote Tamil comics, we felt that the sum is not equal to the individual parts. Hence the idea to give advertisements in print media. With that in our mind, the 1st comeback advertisement of Tamil comics was published in last Saturday (27th September 2013) in Junior Vikatan, Tamil’s No.1 Political investigative Bi weekly magazine.

The logic behind choosing Junior vikatan was simple. The Kid who was reading comics in the 80’s would have graduated to reading Novels (Both Tamil & English) in the 90’s and by this time he would have been in his mid-to-late thirties or 40’s. So the gradual reading curve would have taken him to this type of reading habit and hence the choice of Junior vikatan as our advertising medium. Here is the initial design of the advertisement.

Initial Design for Advt 1

This initial design was later on changed to this final design with the addition of the evergreen super star of Tamil comics, Steel Claw and the latest entry in to the ever growing world of Tamil comics heroes, Kid Lucky. The re launch concept was highlighted with “Comics in Full Colour” being the Tag line of the advertisement.

Response for the Advertisement: Though initial response for such an advertisement will be tough to analyse, the number of phone calls and new enquiries to the publishers office indicate that the investment was really worth it. Keeping with this in mind, the next few advertisements will be released in this month and early part of next month, with Diwali festival being the  focal point of our advertisements.

Advt 1  Final Design 

Well, that’s all for this post and TCU will be back with another post on Monday (Comics Time 3) and will try to be as regular as possible from here onwards. As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

Tuesday, September 17, 2013

3 Comic Cuts 52 – News 52: வாண்டுமாமா is Back


டியர் காமிரேட்ஸ்,

கடந்த ஒரு மாதமாக, இன்றைய தினம் தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு மறக்க முடியாத தினமாக இருக்கும் என்று என்னுடைய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். அதற்க்கான காரணம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் கேட்டுக்கொண்டதால் காரணத்தை மட்டும் சொல்லாமல் தவிர்த்து வந்தேன்.

உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரக்கூடிய ஒரு சங்கதியை உங்களிடம் சொல்லிவிட்டு அதனை குறிப்பிட்ட காலம் வரையில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பூட்டு போடுவதை விட கொடுமையான விஷயம் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்களேன், ப்ளீஸ்?

எனிவே, இன்று முதல் வெளிவர துவங்கியுள்ள The Hindu குழுமத்தின் தமிழ் தினசரியை பற்றியதே அந்த தகவல். கடந்த நான்கு மாதங்களாக என் நண்பர்கள் ஒவ்வொருவராக அங்கே சேர்ந்தவண்ணம் இருந்தனர். சில விஷயங்களை பற்றி தீவிரமாக விவாத்தித்தோம். அதைப்பற்றியெல்லாம் பின்னால் எழுதுகிறேன். இப்போது முதன்மையான தகவல்.

The Return of வாண்டுமாமா: பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு வெகுஜன பத்திரிகையில் வாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதை வெளிவந்தது. அதற்க்கு பிறகு அவரது புத்தக தொகுப்புகள் பதிப்பகங்களால் வெளிவந்தாலும் (Special Thanks to வானதி பதிப்பகம்), அனைவரும் படிக்கும் வெகுஜன பத்திரிக்கைகளில் அவரது பங்களிப்பு இல்லாமல் போனது இந்த தலைமுறைக்கு மிகப்பெரிய சாபக்கேடு.

அதனை சரிகட்டும் விதமாக இன்றைய தி ஹிந்து தமிழ் தினசரி பத்திரிகையில் சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி வாண்டுமாமா அவர்களின் புதிய ஸ்ட்ரிப் ஒன்று துவங்கியுள்ளது. நேற்று முகப்புத்தகத்தில் (For the Un initiated, நம்ம Facebook தாங்க!) தினத்தந்தியின் கன்னித்தீவு பற்றி எழுதி  ஒரு Hint கொடுத்திருந்தேன்.இந்த ஸ்ட்ரிப் உருவான பின்னணியை சொன்னால்..... வேண்டாம். நம்ம சுயசரிதம் எழுதும்போது அதனைப்பற்றி பேசுவோம், ஒக்கே? இப்போதைக்கு இந்த ஸ்ட்ரிப்பை பார்த்து, படித்து மகிழுங்கள்.

Vaandu Desam 001 Monday 16th Sept 2013 The Hindu Tamil Alternative Scan நமது ப்ளாக்கை தொடர்ந்து படித்து வரும் காமிரேட்டுகளுக்கு வாண்டுமாமாவின் பலே பாலுவைப்பற்றி நன்றாக தெரியும். புதியதாக படிப்பவர்கள் இந்த பதிவை படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பலே பாலுவும் பாட்டில் பூதமும் (அறிமுகம் 1 அறிமுகம் 2) என்கிற பிரபலமான அவரது தொடரின் Re Boot வெர்ஷனாக இந்த கதையை பார்க்கிறேன். நண்பர்களுக்கு ஒரு போனசாக இந்த கதையின் இரண்டாவது பகுதியையும் இங்கே அளிக்கிறேன் (இந்த பதிவு இடப்ப்படும்போது இரவு மணி ஒன்று).Vaandu Desam 002 Tuesday 17th Sept 2013 The Hindu Tamil 

தினத்தந்தி - கன்னித்தீவு - முழு வண்ணத்தில்: இன்றுமுதல் ஹிந்து குழுமத்தில் இருந்து புதியதாக தமிழில் தினசரி (தி இந்து ) என்று ஆரம்பாமாகியுள்ளது. இந்தன் வருகையை எதிர்நோக்கி ஏற்கனவே களத்தில் இருக்கும் தினசரிகள் போட்டி போட்டுக்கொண்டு அமர்க்களம் செய்ய துவங்கி விட்டன.

1.தினகரன் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பாகவே எடிட்டோரியலில் இருந்து கன்டென்ட் வரை அனைத்தையும் புதுமையாக பேக்கேஜ் செய்ய துவங்கி விட்டார்கள். தினகரனில் செய்யப்பட்ட மாற்றங்கள் நன்றாகவே இருக்கிறது.

2. தின இதழ் (சென்னை மற்றும் திருவள்ளூர்) இந்த வாரம் முதல் 4 ருபாய் என்று இருந்த விலையை 2 ரூபாயாக குறைத்து இருக்கிறார்கள்.

3. தினகரன் போலவே தினத்தந்தியும் முழுமையான வண்ண தினசரியாக மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். அதன் முதல் வடிவம் நேற்று (ஞாயிற்று கிழமை முதல்).

எது நடக்கிறதோ இல்லையோ, வண்ணத்தில் முதன்முறையாக கன்னித்தீவு தொடர் சித்திரக் கதையை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். 18,920 நாட்கள் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் (51 வருடங்கள் மை லார்ட், 51 வருடங்கள்) முழு வண்ணத்தில் மெருகூட்டப்பட்ட ஓவியத்தரத்துடன் சிறப்பாக இருக்கின்றது. இனிமேல் தினத்தந்தியும் வாங்க வேண்டும் போலிருக்கிறதே?

சில பல சாம்பிள் ஸ்கான்களை கண்டு மகிழுங்கள்: மாலைமதி காமிக்ஸ் கடைசி இதழில் (அக்டோபர் 1976) பின் அட்டையில் இனிமேல் மாலைமதி காமிக்ஸ் மாலைமதி நாவலாக, வார இதழாக வெளிவரும் என்று விளம்பரம் செய்தார்கள். அதனாலேயே அந்த விளம்பரம் இன்றளவும் காமிக்ஸ் ரசிகர்களால் மறக்கப்படாமல் இருக்கிறது.

அதைப்போலவே தினத்தந்தியின் கன்னித்தீவு கதைத்தொடர் முழு வண்ணத்திற்கு மாறுவது சிறப்பு என்றால் அதன் கடைசி கருப்பு வெள்ளை ஸ்ட்ரிப் பிற்காலத்தில் மதிக்கப்படும் (என்று நம்புகிறேன்). ஆகையால் அதனை உங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

Kanni Theevu 18920 14th Sept 2013 Saturday 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 15ம் நாளான ஞாயிற்று கிழமை சித்திரக்கதை வரலாற்றில் இடம் பெற்றது எதனால் என்று கேள்வி எழுந்தால், அதற்க்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில் - அன்று முதல் தான் கன்னித்தீவு முழு வண்ணத்தில் வெளிவர ஆரம்பித்தது என்பதே. இதோ அந்த முதல் ஸ்ட்ரிப்:

Kanni Theevu 18921 15th Sept 2013 Sunday போனசாக இரண்டாவது ஸ்ட்ரிப்பும்:Kanni Theevu 18922 16th Sept 2013 Monday நண்பர்களே, நேரமின்மையால் பல தகவல்களின் பின்புலத்தை பற்றி எழுதாமல் வெறும் ஸ்கான் மட்டுமே அளிக்கிறேன். படித்து இன்புறுங்கள்:

1. Times Of India – Star Wars

The Times of India Chennai Editon Dated 5th Sept 2013 Page No 15 Star Wars Comics 

2. Deccan Chronicle – Super Man – Action Comics

Deccan Chronicle Chennai Chronicle Dated 3rd Sept 2013 Pg No 27 Superman Comics

3. Deccan Chronicle – TinTin Car Race

Deccan Chronicle Chennai Chronicle Dated 4th Sept 2013 Pg No 31 TinTin Car Race

4. Deccan Chronicle – Daley’s Comics Book

Deccan Chronicle Chennai Chronicle Dated 24th Aug 2013 Pg No 40 Daley  Comics

5.Deccan Chronicle – Disney’s Cartoon Characters

Deccan Chronicle Chennai Chronicle Dated 20th Aug 2013 Pg No 25 Disney Characters 

6. Salman Khan Inspires Gaming Character

Deccan Chronicle Chennai Chronicle Dated 20th Aug 2013 Pg No 22 Salman Khan Video Game

7. Anifest 2013 – News Update

Deccan Chronicle Chennai Chronicle Dated 23rd Aug 2013 Pg No 32  Animated Expressions

8. News about early reading Habits

The Hindu Chennai Edition Metro Plus Dated 22nd Aug 2013 Chennai Week Readin Habit

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Friday, August 23, 2013

4 Comic Cuts 51 – News 51: மகாபாரதம் ஃக்ராபிக் நாவல் + ஸ்டார் காமிக்ஸ் விமர்சனம் தினமலரில்

டியர் காமிரேட்ஸ்,

சமீப காலங்களில் பதிவுலகம் பக்கம் வருவதற்கே நேரமில்லாமல் இருப்பதால், இரண்டு மூன்று பதிவுகள் ஃட்ராப்ட்டிலேயே உறங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் அவற்றை வலையேற்ற முயற்சிக்கிறேன். அதற்குள்ளாக ஒரு இடைச்செருகலாக இந்த காமிக் கட்ஸ் பதிவு. நம்முடைய காமிக் கட்ஸ் பதிவுகளில் இது 51ஆவது பதிவு என்பது Stats ரீதியிலான சிறப்பு அம்சம்.

மகாபாரதம் - ஃக்ராபிக் நாவல் காணொளி வடிவில்: புகழ் பெற்ற காமிக்ஸ்/ஃக்ராபிக் நாவல் கதாசிரியர் Grant Morrisson பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரைப் பற்றி தேடினால் விக்கியும், கூகுளாண்டவரும் தேவைக்கு அதிகமான தகவல்களை தருவார்கள். இவருடன் பல ஃக்ராபிக் நாவல்களில் பணியாற்றிய என்னுடைய ஓவிய நண்பர் இவற்றைப்பற்றி மணிக்கணக்கில் புகழ்ந்து பேசி இவரைப்பற்றிய மதிப்பை எனக்குள் உயர்த்தி இருக்கிறார்.

இவருடன் நம்முடைய இந்திய காமிக்ஸ் விற்பன்னர்களான ஷரத் தேவராஜனும், கோதம் சோப்ராவும் இணைந்து இந்திய கதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த உருவாக்கிய நிறுவனமே Graphic India. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களையோ / திரைப்பட வரிசைகளையோ கூர்ந்து கவனித்தால் அவற்றில் பெரும்பாலானவை மேஜிக்கல் ரியாலிசம் (புராதான காலத்து கதை, ராஜா ராணி, விசித்திர ஜந்துக்கள், கடவுள்கள் மற்றும் அவர்களின் சார்ந்த கதைகள்) என்றே இருக்கும். ஒரு ஹாரி பாட்டரும், லார்ட் ஆப் தி ரிங்ஸ் தொடரும் மாத்திரமே இங்கே இல்லை. பல தொடர்கள், பல சினிமாக்கள், பல கதைகள்.

இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த மகாபாரதம் இங்கே ஃக்ராபிக் நாவல் மற்றும் காணொளி வடிவில் தயாரிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Deccan Chronicle Chennai Chronicle Saturay 10th Aug 2013  Mahabharatha in You Tube

சான் டியாகோ காமிக் கானில் க்ராண்ட் மோரிசன்னும் நம்ம கோதம் சோப்ரா மற்றும் சரத் தேவராஜன் உடன் இணைந்து மகாபாரதம் பற்றி கொடுத்த மிகவும் விரிவான பேட்டி இது. நேரம் கிடைக்கும்போது பொறுமையாக பாருங்கள். நம்முடைய இதிகாசத்தை அயல்நாட்டை சேர்ந்த ஒருவரின் மதிப்பீடாகவே இதனை நான் பார்க்கிறேன். நம்முடைய கதாபாத்திரங்களை அவர்கள் உச்சரிக்கும் விதமும், சில பெயர்களை உச்சரிக்க முடியாமல் சுருக்கி அழைப்பதும் நிஜம்மாகவே சிரிப்பை வரவழைக்கிறது. உதாரணமாக யுதிஷ்டிரன் (அதாங்க, நமகெல்லாம் தர்மர் என்று சொலப்படுவாறே, அவர்) பெயரை உச்சரிக்க கஷ்டப்பட்டு "யுதிஷ்" என்று அழைப்பதும், அதுவும் துரியோதனனே அவ்வாறு அழைப்பதும் முரண் நகையின் உச்சம்.

பகுதி 1 - நான்கு யுகங்களின் கதை: இந்த மகாபாரதம் தொடர் ஃக்ராபிக் நாவல் வடிவில் மட்டுமின்றி காட்சி தொடராகவும் உருப்பெற்று இருக்கிறது. க்ராபிக் இந்தியா நிறுவனத்தின் வலைதளத்தில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் ஐந்து பகுதிகள் வெளியாகி இருக்கின்றது. இதோ இதுதான் அந்த தொடரின் முதல் பகுதி.

பகுதி 2 - கண்ணனின் பேச்சு: ஜீவன் J காங்'கின் கைவண்ணத்தில் ஓவியங்கள் வழக்கமான பாணியிலேயே அமைந்து இருக்கின்றன. நம்முடைய நேர்த்தியான கட்டமைப்பு கொண்ட காமிக்ஸ் கதைகளை படித்தோருக்கு இந்த மாதிரியான ஓவிய ஒழுங்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ரசிக்கும்படியாகவே அமைந்து இருக்கிறது. மறக்காமல் பாருங்கள்.

பகுதி 3 - பாண்டவர்களின் மறு வருகை: வழக்கமாக க்ராண்ட் மோரிசன்னின் கதையமைப்பில் இருக்கும் டெம்பிளேட் வகையிலேயே இந்த கதையிலும் பீமனின் கதா பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நான் பார்த்த / படித்த மகாபாரதத்தில் கேட்டறியாத சில சம்பவங்கள் இந்த தொடரில் வருவதும் புதுமையாகவே இருக்கிறது.

பகுதி 4 -  பீஷ்மரின் கோபம்: இதுதான் நான் குறிப்பிட்ட அந்த பகுதி. யாராவது இப்படி ஒரு சம்பவம் நாம் பார்த்த / படித்த மகாபாரதத்தில் வருகிறதா? இல்லையா என்று பின்னூட்ட பகுதியில் தெரிவித்தால் நலம். கவிஞர்களுக்கு என்று ஒரு சுதந்திரம் வழங்கப்படுவதை போல, லாஜிக் விஷயத்தில் நம்ம சினிமா இயக்குனர்கள் ஒரு சுதந்திரம் எடுத்துக்கொள்வது போல இங்கே க்ராண்ட் மோரிசன் ஏதாவது சுதந்திரம் எடுத்துக்கொண்டு அவரே இந்த காட்சியை அமைத்தாரா என்பதே என் கேள்வி.

பகுதி 5 - உன் ரத்தத்தில் நான் குளிப்பேன் - சபதம்: தொடர்ந்து க்ராபிக் இந்தியாவின் இணையதளம், காணொளி பக்கம், டுவிட்டர் மற்றும் முகப்புத்தக பக்கங்களை கவனித்து ஒவ்வொரு வாரமும் புதிய பகுதியை கண்டு களியுங்கள். இதோ அந்த லின்க்குகள்:

ஃக்ராபிக் இந்தியா யூ டியூப் தளம்: http://www.youtube.com/graphicindia

ஃக்ராபிக் இந்தியா டுவிட்டர் ஹேண்டில்: http://twitter.com/graphicindia

ஃக்ராபிக் இந்தியா Facebook லிங்க்: http://www.facebook.com/graphicindia

ஓவியர் விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் - அயல்கிரகத்தில் ராஜா: புதியதாக இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் காமிக்ஸ் / க்ராபிக் நிறுவனங்கள் கையில் எடுக்கும் ஒரு தளம் - இதிகாச / புராண கால கதைகள். இந்தியா என்றாலே இப்படித்தான் என்று ஒரு காட்சி விரிந்து அது க்ளீஷே ஆகும் அளவிற்கு இப்படிப்பட்ட கதைகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. எவ்வளவோ கதை தளங்கள் இருக்கையில் இப்படி ஒன்றின் பின்னே ஓடி வருவதின் ரகசியம் எனக்கு இது வரையில் புரியவில்லை.

இப்படி இல்லாமல் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருந்த கதைகளில் நான் விரும்பி ரசித்து படித்தது ஒரு கதை வரிசையை. அதைப்பற்றி விரைவில் பதிவிடுகிறேன்

அது வரையில் இந்த கதையை பற்றி சற்று கவனிப்போம். சென்ற ஆண்டு டிஸ்னி மூலம் திரைக்கு வந்த ஜான் கார்ட்டர் திரைப்படம் நினைவிருக்கிறதா? டார்ஜான் கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் அவர்களின் கதையான இது நூறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் திரைக்கு வந்தது. ஒரு பூலோகவாசி திடீரென்று அயல்கிரகத்திற்கு வந்தடைகிறான். அந்த உலகமே அவனுக்கு புரியாத புதிராக இருக்கிறது. திடீரென்று அவன் வேட்டையாடப் படுகிறான். தப்பிக்கும்போது நண்பர்கள் உருவாகிறார்கள், பின்னர் அந்த கிரகத்தில் நடக்கும் உள்நாட்டு அரசியலில் நுழைகிறான்.

இப்போது நமது செய்தியில் இருக்கும் காமிக்ஸ் பற்றிய செய்தியை பார்ப்போம். D.I. காமிக்ஸ் (Digitally Inspired Comics) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நிறுவனம் சுராஜ் குமாரால் இயக்கப்படுகிறது. இவர்களின் முதல் வெளியீடாக "அயல் கிரகத்தில் ராஜா - Alien Raja" என்ற காமிக்ஸ் கதையை ஓவியர் விஜயன் அவர்களின் துணையுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்.

நம்முடைய இந்திய ராஜா ஒருவர் (ராஜா என்றாலே அது புராதான காலம்தானே?) அயல் கிரகத்தில் நிகழ்த்தும் சாகசங்களே இந்த கதையின் மையகருவாக  அமைக்கப்பட்டு இருப்பது இதன் ஸ்பெஷல். இந்த ஆண்டின் இறுதியில் மும்பையில் நடைபெறவிருக்கும் காமிக் கானில் இந்த கதையை புத்தக வடிவில் வெளியிட உள்ளார்கள்.

Deccan Chronicle Chennai Chronicle Saturay 10th Aug 2013  DI Comics

பேட் மேன் & ராபின் - என்ன கொடுமை சார் இது? ஏற்கனவே டின்டின் பற்றி இப்படி ஒரு தகவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கிளம்பியது இந்த தளத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அதைப்போலவே கிளப்பப்பட்டுள்ளது ஒரு புதிய கதை - பேட் மேன் & ராபின் இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாம்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ரிட்டையர் ஆன அனைத்து கிரிக்கெட் விளையாட்டாளர்களும் தங்களது புத்தகம் விற்பனை ஆக சச்சின் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் எதையாவது எழுதுவது என்பதை ஒழுக்க நெறியாகவே கடைப்பிடித்து வரும் இந்த வேளையில், சூப்பர் ஹீரோக்களை பற்றிய ஒரு புத்தகம் எழுதும்போது என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்து செய்தது போல நடந்துள்ளது இந்த விஷயம்.

மார்க்கோ மேன்கசொலா (பெயரிலேயே மேன் இருப்பதை கவனியுங்கள்) என்கிற பத்தி எழுத்தாளர் (சொல்லாடல் உபயோகம் - நன்றி பேயோன்) தன்னுடைய புத்தக விற்பனை சூடுபிடிக்க இப்படி ஒரு விஷயத்தை கிளப்பியுள்ளார். மார்க்கோ தன்னுடைய சூப்பர் ஹீரோக்களின் காதல் (காம?) வாழ்க்கை என்கிற புத்தகம் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அதைப்பற்றி ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயம் கிளம்பினால் ஒழிய அந்த புத்தகத்தை சீண்டுவாரில்லை என்பதால் இப்படி எழுதி இருக்கிறார் (என்பது என் எண்ணம்).

Deccan Chronicle Chennai Chronicle Wednesday 7th Aug 2013  Batman and Robin

ஸ்டார் காமிக்ஸ் - தின மலர் புத்தக விமர்சனம்: ஸ்டார் காமிக்ஸ் இதழ் வெளியீடு சென்னையில் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. அதனைப்பற்றிய செய்திகள் தினமலர், தி இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினசரி  போன்ற காலை நாளிதழ்களிலும், ஜெயா டிவி, ஜெயா செய்திகள் போன்ற ஊடகங்களிலும் இடம்பெற்றது. குமுதம் (அ) குங்குமம் மற்றும் தி சன்டே இண்டியன் ஆகிய வாரந்திர இதழ்களிலும் வெளியானது. நண்பர் சுந்தர புத்தன் அவர்கள் அட்டகாசமான ஒரு கட்டுரையை அப்போதுதான் எழுதி எனக்கு அறிமுகம் ஆனார். இப்போது அந்த கட்டுரைகளை எல்லாம் தேடிக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 முறை மடிக்கணினி மாற்றியதால் பல போட்டோக்கள், ஸ்கான்கள் எங்கே இருக்கின்றன என்பதே தெரியாமல் இருக்கிறது. நண்பர்கள் யாரிடமாவது இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

ஸ்டார் காமிக்ஸின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நண்பரும் எழுத்தாளருமான திரு எஸ் ரா அவர்கள் இதனைப்பற்றி ஒரு சிறு குறிப்பாக தன்னுடைய கட்டுரை ஒன்றில் போட்டோவுடன் குறிப்பிட்டு இருந்தார் (7ஆவது பத்தி). இதோ அதற்க்கான லிங்க்: http://www.sramakrishnan.com/?p=522

Star Comics DinaMalar 25122007

பின் குறிப்பு: இந்த ஸ்டார் காமிக்ஸ் இப்போதும் கூட (சில இதழ்கள் மட்டுமே) சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக கடலில் விற்பனைக்கு கிடைக்கின்றது. தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளவும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Tuesday, July 16, 2013

25 Comic Cuts 49 – News 49: இந்தியா டுடேவில் தமிழ் காமிக்ஸ் பிளாக்கர்கள், பேட்மேன் காமிக்ஸ் அட்டைப்பட ஏலம், சூப்பர் ஹீரோக்களும் கிறிஸ்தவமும் மற்ற காமிக்ஸ் தகவல்களும்

டியர் காமிரேட்ஸ்,

கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு பிறகு இந்த ஒரு பதிவு. இதையும் இடவேண்டுமா? என்று யோசித்துக்கொண்டே வலையேற்றிக்கொண்டு இருக்கிறேன். இருந்தாலும் இதனை பதிவேற்றும் வரையில் வேறு யாரும் இந்த தகவல் பற்றிய பதிவிடுவதர்க்கான எந்த புகை சமிக்ஞையும் வராததால் நானே இதனை வலையேற்ற முடிவு செய்தேன்.

ஒரு காலத்தில் காமிக்ஸ் பற்றிய (குறிப்பாக தமிழ் காமிக்ஸ் பற்றிய) எந்த தகவல் வந்தாலும் அதனை ஆவணப்படுத்தும் வகையில் இந்த வலைப்பதிவு செயல்பட்டுக்கொண்டு வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இயங்க முடியாத சூழல் ஏற்பட்டாலும்கூட காமிக்ஸ் தகவல்களை "காமிக் கட்ஸ்" என்ற வரிசையில் தொடர்ந்து வலையேற்றிக்கொண்டே இருந்து வந்தேன். அதிலும் குறிப்பாக பல தமிழ் காமிக்ஸ் தகவல்கள் வீடியோக்கள், விளம்பரங்கள் என்று பலவும் இங்கே வெளிப்பட்டன. காமிக் கட்ஸ் வரிசையில் இது 49வது பதிவு. கிட்ட தட்ட மூன்று பதிவுக்கு ஒரு காமிக் கட்ஸ் பதிவு என்கிற வகையில் நமது வலைப்பதிவில் இருக்கிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பாக நண்பர் (முன்னாள் காமிரேட்) நரசிம்மன் அவர்கள் காமிக்ஸ் வலைப்பதிவர்கள் குறித்த ஒரு கட்டுரைக்காக தொடர்பு கொண்டபோதுதான் அவர் இந்திய டுடேவில் சமீபத்தில் இணைந்தது நினைவுக்கு வந்தது (சில மாதங்களுக்கு முன்பாக கவின்மலர் அவர்களுடனே இவரும் அங்கே சேர்ந்தார்). நண்பர் நரசிம்மன் அவர்கள் நம்முடைய காமிக்ஸ் வலைப்பதிவர்கள் அனைவரையுமே தொடர்பு கொண்டு அனைவரையும் பற்றியே எழுத ஆசைப்பட்டார்.

ஆனால் அறுபதுக்கும் மேற்ப்பட்ட காமிக்ஸ் வலைப்பதிவர்கள் இருந்ததையோ அல்லது ஒரு அறிமுக கட்டுரைக்கு ஒதுக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கையையோ அவர் அப்போது மனதில் கொள்ளவில்லை. ஆகையால் பல காமிரேட்டுகளை இந்த பக்கத்தில் அவரால் இணைக்க இயலவில்லை. அவர் சார்பாக விடுபட்ட நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இந்த குறையை ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் சந்திப்பை நடத்தி ஈடு கட்டிவிடுவோமா தோழர்களே?

India Today Tamil Edition Dated 24th July 2013 On Stands 14th July 2013 Page No 50 51 Article on Tamil Comics Bloggers

அவசரமாக எடிட் செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள எழுத்துப் பிழைகளுக்கும் வாக்கிய அமைப்புகளுக்கும் (பிலேடே பீடியா/ஒற்றைக்கை மாயாவி etc) நரசிம்மன் அவர்கள் சார்பாக மன்னிப்பு கோருகிறேன். அதே சமயம் தேசிய அளவிலான ஒரு வார இதழில் தமிழ் காமிக்ஸ் பற்றிய கட்டுரை வருவதும், காமிக்ஸ் வலைப்பதிவர்கள் பற்றி எழுதப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

இன்னுமொரு முக்கிய விஷயம் - விரைவில் தமிழின் முன்னணி வார இதழ் ஒன்றில் தமிழ் காமிக்ஸ் குறித்த வாரந்திர கட்டுரை ஒன்றும் ஆரம்பம் ஆகப்போகிறது. ஆகையால் இனிமேல் வெகுஜன பத்திரிக்கைகளில் தமிழ் காமிக்ஸ் பற்றிய தகவல்  வருவதில்லை என்று ஏங்கிய நாட்கள் கண்முன்னே மறையும் காலம் நெருங்கி விட்டது. விரைவினில் அது பற்றிய தகவலை இங்கேயே காமிக் கட்ஸ் பகுதியினில் அளிக்கிறேன்.

Times Of India Chennai Edition Saturday 5th July 2013 Page No 16 Batman Comics 1966

இதற்க்கு மேல் இருக்கும் காமிக்ஸ் தகவல்கள் அனைத்துமே படித்து தெரிந்துக்கொள்ளக் கூடிய எளிய விஷயங்களே ஆகையால் அவற்றை பற்றி எழுதி எதுவும் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை. So, Read  & Enjoy காமிரேட்ஸ்.

Deccan Chronicle Chennai Chronicle Tuesday 9th July 2013 Superman and Vatican News 

இன்னுமொரு முக்கியமான விஷயம்: தமிழ் ஆங்கிலத்தில் வெளிவரும் பெரும்பாலான தினசரி, வார இதழ்களை நான் வாங்கி வருகிறேன். அவற்றில் வரும் காமிக்ஸ் குறித்தான சங்கதிகளை இங்கே பரிமாறியும் வருகிறேன்.

சில சமயம் பயணம்-பணி நிமித்தமாக சிலவற்றை தவற விடுவதும் உண்டு. ஆகையால் தோழர்கள் தமிழ் காமிக்ஸ் குறித்தான தகவல்களோ அல்லது சுவையான காமிக்ஸ் குறித்த தகவலோ ஏதேனும் பத்திரிக்கையிலோ,வார இதழிலோ வெளிவந்தால் உடனடியாக ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்புமாறு வேண்டுகிறேன்

Deccan Chronicle Chennai Chronicle Monday 8th July 2013  Batman 1966 Comics 

எந்த ஒரு தகவலையும் நீங்கள் ஸ்கான் செய்யவோ, போட்டோ எடுக்கவோ தேவை இல்லை. வெறும் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது என்று தகவல் அளித்தாலே போதுமானது. உங்கள் தகவலுக்கான கிரெடிட் கண்டிப்பாக இங்கேயே அளிக்கப்படும்.

நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: tamilcomicsulagam@gmail.com 

The Hindu Chennai Edition Literary Review Sunday 7th July 2013 Going Ape

பின்குறிப்பு: வழக்காமாக சென்னையில் இருந்தே பெரும்பாலான பதிவுகள் வலையேற்றப்பட்டுள்ளன. பயணம் நிமித்து கோவை, சேலம், ஈரோடு, சிவகாசி பெங்களூரு, மும்பை, டெல்லி என்றும்கூட சில பல பதிவுகள் இடப்பட்டுள்ளன. ஆனால் பஞ்சாபில் இருந்து ஒரு பதிவு இடப்படுவது இதே முதல் முறை (டெக்னிகலி, பஞ்சாபில் டைப் செய்யப்பட்டு WiFi தகராறு செய்ததால் சென்னையில் இருந்தே அப்லோட் செய்யப்பட்டது).

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Wednesday, August 29, 2012

20 Comic Cuts 47-News 47: இரத்தப் படலம், பெருங்களத்தூர் புத்தகக்கடை, ரஸ்கின் பான்ட்டின் ஃகிராபிக் நாவல் மற்றும் பல செய்திகள்

காமிரேட்ஸ்,

இந்த காமிக் கட்ஸ் - செய்திகள் பதிவானது பல நாட்களாக என்னுடைய கணினியில் தூங்கிக் கொண்டு இருந்தது. இந்த பதிவில் சொல்லப்பட்ட காரணங்களால் இவ்வளவு தாமதமாக வலையேறுகிறது. வழக்காமான தாமதத்திற்கு நான் காரணம் என்றாலும், இம்முறை அந்தப் பழி என்மீதில்லை என்ற வரைக்கும் சந்தோஷமே.

இரத்தப் படலம் - லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் - தினகரன் வெள்ளி மலர் சிறப்பு கட்டுரை:  சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை மதியம் நம்முடைய லயன், முத்து காமிக்ஸ் சந்தாதாரர் தோழர் சிவராமன் அவர்கள் எனக்கு கைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். வழமை போல அப்போதும் ஒரு மீட்டிங்கில் இருந்து தொலைத்த நான், சிறிது நேரம் கழித்து அவரிடம் பேசினேன். இரத்தின சுருக்கமாக பேசும் அவர், இரத்தப்படலம் பற்றிய சில விவரங்களையும், லயன் காமிக்ஸ் அலுவலக தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக்கொண்டு, பிறகு பேசுகிறேன் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு நானும் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.

இது நடந்து இரண்டு வாரம் கழித்து ஒரு புனித வெள்ளிகிழமை அன்று தினகரன் வெள்ளிமலரை படித்தால், பின்னட்டையில் இந்த அற்புதமான கட்டுரை (காமிக்ஸ் பற்றிய நியூஸ் வந்ததால் அந்த வெள்ளி, புனித வெள்ளியாக மாறியது என்பதை சொல்லவும் வேண்டுமோ?). அடுத்து நான் சொல்லப்போகும் வசனத்தை பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக வரும் இன்ஸ்பெக்டர் சஷிகுமார் போல படிக்கவும். சாதாரண ஒரு எடிட்டர் எழுதிய கட்டுரை அல்ல இது. நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் காமிக்ஸ் வெறி ஊறிப்போன ஒருவராலேயே இப்படிப்பட்ட கட்டுரையை எழுத முடியும்.

இந்த கட்டுரை வெளியான அன்று அடியேன் இந்தியத் தலைநகரில் இருந்ததாலும், அங்கு ஸ்கான் வசதிகள் சரிப்படாததாலும் உடனடியாக பதிவிட முடியவில்லை. ஈரோட்டின் காமிக்ஸ் குபேரர் ஸ்டாலின் அவர்கள் இந்த பதிவில் இதைப்பற்றி இட்ட பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.

 

Dinakaran Tamil Daily Friday Supplement Velli Malar Book Dated 10082012 Page No 24 Bourne Legacy Article by ComiRade K.N.Siva Raman
Dinakaran Tamil Daily Friday Supplement VelliMalar Book Dated 10082012 Page No 24 Bloune Legacy Article

ஒரு சோகமான பின்குறிப்பு: இந்த நியூஸ் வெளியான சிறிது நேரத்திலேயே (மதியம் பனிரெண்டு மணிக்குள்ளாக) சுமார் நாற்பது தொலைபேசி அழைப்புகள் லயன் ஜம்போ ஸ்பெஷல் இரத்தப்படலம் பற்றி விசாரித்து விற்பனைக்காக வர ஆரம்பித்து விட்டது. இது ஆரம்ப நிலை. ஆனால் சோகமான தகவல் என்னவெனில் ஏற்கனவே இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழ்கள் முற்றிலும் விற்று தீர்ந்துவிட்டன என்பதே. ஒரு தர்ம சங்கடமான நிலையை ஆசிரியருக்கும், லயன் காமிக்ஸ் அலுவலக ஊழியர்களுக்கும் ஏற்படுத்தியமைக்கு இங்கே மன்னிப்பு கோருகிறேன். இருந்தாலும் தோழர் அவர்கள் என்ன விஷயத்திற்காக தகவல் சேகரித்தார் என்பது தெரியாத சூழலிலேயே நான் தகவல் தெரிவித்தேன். ஆகையால் .....

பெருங்களத்தூர் புத்தகக் கடை மீரா முருகன்: ஏற்கனவே திரு நூல் பாண்டியன் அவர்களின் புத்தகக் கடை பற்றிய செய்திகளை வெளியிட்டு இருந்தோம். இப்போது அடுத்த புத்தகக் கடைக்காரர். ஆனாலும் மிகவும் இனிய, பழகுவதற்கு எளிய, கூச்ச சுபாவம் கொண்ட மருகன் அவர்களிடம் காமிக்ஸ் எதுவும் இல்லையாம். பின்னே, தகவல் வந்து ஒரு மாதம் கழித்து போன் செய்தால் எப்படி இருக்கும்? என்று சொல்கிறார் நண்பர் இரவுக் கழுகு. ஆனால் அவரது Behind the screen story படிப்பதற்கு அருமையாக இருக்கிறது.

 

Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article by S.Kiruba Karan
Anandha Vikatan Tamil Weekly Supplement En Vikatan Dated 15082012 Page No 112 113 Meera Old Book Shop Article

குங்குமம் வரவேற்பறை:  விகடனை தொடர்ந்து குங்குமம் வார இதழிலும் இப்போது ஒவ்வொரு வாரமும், ஒரு புத்தகம், ஒரு இணையதளம் என்று சிறப்பாக அறிமுகம் செய்கிறார்கள். சிறுவர்களுக்கான இரண்டு தகவல்கள் இருந்ததால் அந்த ஸ்கான்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

 

Kungumam Tamil Weekly Dated 13082012 Page No 106 107 Pavalakkodi Magazine Intro
Kungumam Tamil Weekly Dated 13082012 Page No 106 107 Pavalakkodi Magazine Intro
Kungumam Tamil Weekly Dated 06082012 Page No 085 Tamil Tutor Site F0r Children
Kungumam Tamil Weekly Dated 06082012 Page No 085 Tamil Tutor Site Fir Childrens

பழைய வின்டேஜ் காமிக்ஸ் விற்பனை: படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு தகவல். சத்தியமாக நம்மூரில் இல்லை. இனி தொடர்ந்து படிக்கவும். அட, எங்க சார் போறீங்க? ஓ, இதுக்கு மேல படிக்க என்ன இருக்கு என்று தானே? அதுவும் ஒரு வகையில் சரிதான். தகவலுக்காக இந்த ஸ்கான்.

 

Deccan Chronicle Chennai Edition Supplement Chennai Chronicle Page No 27 Comics Sales Article
Deccan Chronicle Chennai Edition Supplement Chennai Chronicle Page No 27 Comics Sales Article

ராப்பிட் ராப் - ஆங்கில ஃகிராபிக் நாவல்: ஃபாரூக்கி தம்பதியினரின் இந்த சித்திரக்கதை வடிவ நாவலை மிகவும் விரும்பி படித்தேன். பள்ளி / கல்லூரி நாட்களில் அனிமல் ஃபார்ம் என்கிற அட்டகாசமான கதையை நினைவூட்டினாலும், ஒரு சதாவீதம் கூட சார்ந்திராமல் ஒரு தனிப்பட்ட கதையாகவே இந்த நாவல் இருக்கிறது. சாவகாசமான ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியநேரத்து வாசிப்புக்கு உகந்தது.

 

The Hindu Daily Sunday Magazine Page No 08 Rabbit Rap Graphic Novel Review by Swati
The Hindu Daily Sunday Magazine Page No 08 Rabbit Rap Graphic Novel Review

ரஸ்கின் பான்ட் - ஒரு ரசிக்கும்படியான பேட்டி: சிறுவயதில் வாண்டுமாமா அவர்களுடனே பயணம் செய்ததால் ரஸ்கின் பான்ட் அவர்களின் கதை சொல்லும் திறனை ரசிக்க முடியவில்லை (அவர் ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார் என்பது வேறொரு கிளைக்கதை). பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா இனைந்து நடத்திய உங்கள் ஜூனியர் மாத நாவலில் வந்த உலக புத்தக அலமாரி என்கிற கதை தொடரில் ரஸ்கின் பான்டின் ஒரு சிறுகதையின் தமிழாக்கத்தை படித்து வியந்தேன். அதனைவிட அந்த கட்டுரையாசிரியர் அந்த சிறுகதையை நாம் ஏன் காதலிக்கவேண்டும் என்று விவரித்தவிதம் என்னை கவர்ந்தது. இதில் கொடுமை என்னவெனில் அந்த சிறுகதையை ஏற்கனவே நான்-டீடெயில் ஆக பள்ளியில் ஏற்கனவே படிதிருந்ததுதான். அதன் பின்னர் அவரது அனைத்து சிறுகதைகளையும் தேடிப்பிடித்து படித்து விட்டேன். வாசகர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இந்தமாத (ஆங்கில) கோகுலம் இதழில் இவரைப்பற்றிய ஒரு கவர் ஸ்டோரியும் வந்துள்ளது. இனி இவரது பேட்டி:

 

Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview
Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 01 Ruskin Bond Interview
Times Of India English Daily Chennai Edition Supplement Chennai Times Page No 07 Ruskin Bond Interview Part 02

நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Tuesday, July 31, 2012

11 Comic Cuts 46-News 46: காமிக்கான் எக்ஸ்ப்ரெஸ்,பேட்மேன் செய்திகள்,அனிமேஷன் கார்ட்டூன் படமாக கோகுலத்தில் கண்ணன் மற்றும் 50வது ஆண்டில் அமுல் கார்ட்டூன்கள்

டியர் காமிரேட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். மின்சார பஞ்சம், மின் தடை என்றெல்லாம் தமிழ் நாடே கடந்த இரண்டு ஆண்டுகளாக புலம்பிக் கொண்டிருக்க,நம் தலை நகரில் ஒரு ரியாக்ஷனுமே இல்லையே என்று பலரும் கடுப்பில் இருந்தனர். "தலைவலியும், காய்ச்சலும், கரண்ட் கட்டும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றுகூட சொல்ல ஆரம்பித்தார்கள். அதன் விளைவா இல்லையா என்பது தெரியாது. ஆனால் திங்கள்கிழமை காலையிலும், இன்று மதியம் வரையிலும் இங்கு தில்லியில் முழு மின்சார ப்ரேக். எந்த அளவுக்கு என்றால்,மெட்ரோ ரெயில்கள் கூட தடை பட்டன. அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இந்த பதிவு வலை ஏற்றப்படுகிறது.

காமிக்கான் எக்ஸ்ப்ரெஸ்: கடந்த ஞாயிறன்று எடிட்டரின் வலைதளத்தில் இந்த செய்தி வந்தவுடன் பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இது ஒரு நல்ல ஆரம்பம் என்றும், இதன் தாக்கம் மற்றும் விளைவுகள் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை காண இப்போதே நம்மை தயாராக்கிக் கொள்ளுங்கள் தோழர்களே. இங்கே எடிட்டர் கூறியதை மறுபடியும் பதிக்கிறேன்:

“செப்டம்பர் 8 & 9 தேதிகளில் பெங்களூரில் COMIC CON 2012 என்றதொரு காமிக்ஸ் திருவிழாவினை நடத்திட டெல்லியில் தலைமையகம் கொண்டிட்டதொரு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது! ஏற்கனவே டெல்லியிலும். மும்பையிலும் இது போல் ப்ரேத்யேக shows நடத்தி வெற்றி கண்டுள்ளார்கள்! இம்முறை பெங்களூரில் நடநதேறிடவிருக்கும் இந்தத் திருவிழாவில் நாமும் பங்கேற்கிறோம்! நமது லயன் - முத்து காமிக்ஸின் ஸ்டால் அங்கே இருந்திடும்! உங்களை அங்கு வரவேற்பது எனது கடமையும் ; பெருமையும்! Hope to see you there guys!”.

ஆகையால் தோழர்களே, செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் நம்முடைய தாரக மந்திரம் "சலோ,சலோ -பெங்களூரு சலோ" என்பதாகவே இருக்கட்டும். என்னைப் பொறுத்தவரையில் 5 Weeks is Too far to plan ahead right Now. பார்க்கலாம். பயணமும், பணியும் தடையாக வராத வரையில் கண்டிப்பாக ஸ்டாலில் வருகை புரிவேன். அந்த காமிக்கான் எக்ஸ்ப்ரெஸ் பற்றிய ஒரு துணுக்கு செய்தி கடந்த வார டெக்கான் க்ரோனிக்கள் தினசரியில்.

 

Deccan Chronicle Chennai Edition Chennai Chronicle Dated Sunday 22nd July 2012 Page No 22 ComiCon Express Bangaluru News
Deccan Chronicle Chennai Edition Chennai Chronicle Dated Sunday 22nd July 2012 Page No 22 ComiCon Express Bangaluru News

பேட்மேன் செய்திகள் -  சூப்பர் ஹீரோக்களின் சாபம்: பேட்மேன் திரைப்பட துவக்க நாளில் நடந்த துக்க சம்பவம் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது இப்படி ஒரு ஆர்டிக்கிள் கண்டிப்பாக வருமென்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக இந்த செய்தி டெக்கான் க்ரோனிக்கள் பத்திரிக்கையில் வராமல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் சென்னை டைம்ஸ் முதல் பக்க செய்தியாக வந்தது.

 

The Times Of India Chennai Edition Chennai Times Page 01 Dated Monday 23rd July 2012 Curse of the Super Heroes Article
The Times Of India Chennai Edition Chennai Times Page 01 Dated Monday 23rd July 2012 Curse of the Super Heroes Article

பேட்மேன் செய்திகள் -அடுத்த சூப்பர் ஹீரோ படம்?: பேட்மேன் ட்ரைலஜியின் மூன்றாம் பாகமும் முடிந்து விட்டதால் அடுத்த காமிக்ஸ் சூப்பர் ஹீரோவை தேடும் படலம் பற்றிய செய்தியாக இருந்தாலும் சந்தடி சாக்கில் லந்து கொடுக்கும் வகையாக ரசிகர்களுக்கு ஆடோகிராஃப் போட்டு விட்டு கைகளை ஜெல் போட்டு கழுவிய ஹீரோ பற்றி செய்தி போட்டு கொளுத்தி விட்டு விட்டதுதான் இந்த எடிட்டரின் ஸ்பெஷாலிடி.

 

Times Of India Chennai Edition Dated Sunday 22nd July 2012 Page No 13 Hunt for Next Super Hero after Batman
Times Of India Chennai Edition Dated Sunday 22nd Jyly 2012 Page No 13 Hunt for Next Super Hero after Batman

பேட்மேன் செய்திகள் -சிறுவர்களின் உணவுப் பழக்கமும்: நம்ம ஊரில் சினிமா நட்சத்திரங்களை கொண்டு இரத்த தானம், போலியோ ஊசி போட்டுக்கொள்வது போன்ற சமூக நலச் செய்திகளை பாமர மக்களுக்கு கொண்டு செல்கிறோம்.அதுபோலவே ஜன்க் ஃபுட் எனப்படும் உணவு வகைகளின் கெடுதலையும், சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தவும் சூப்பர் ஹீரோக்களை பயன்படுத்துவது பற்றிய செய்தி இது:

 

The Times Of India Chennai Edition Page 13 Dated Tuesday 24th July 2012 The Healthy Knight Rises Article
The Times Of India Chennai Edition Page 13 Dated Tuesday 24th July 2012 TheHealthy Knight Rises Article

பேட்மேன் செய்திகள் - மாட்டிக்கொண்டார் போலி பேட்மேன்: பிரேசில் நாட்டில் ஒரு உணவகத்தில் பேட்மேன் போல உடையணிந்துக்கொண்டு திருட முயன்ற வாலிபரை கைது செய்துள்ளனர். இதற்க்கு மேலே என்ன சொல்வது? வேறு ஏதாவது என்றால் கூட Better Luck Next Time என்று சொல்லலாம், இங்கே? ஹ்ம்ம் ஒன்றுமே இல்லை. 

 

The Times of India Chennai Edition Page 13 Dated Sunday 29th July 2012 Dark Knight Falls News
The Times of India Chennai Edition Page 13 Dated Sunday 29th July 2012 Dark Knight Falls News

கோகுலத்தில் கண்ணன் - அனிமேஷன் கார்ட்டூன் படம் - தமிழில்: ரிலையன்ஸ் நிறுவனம் கார்ட்டூன் / அனிமேஷன் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்பது நாமெல்லாம் அறிந்ததே (அட்லீஸ்ட் எனக்காவது தெரியும்). அவர்களின் தயாரிப்பில் இந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வரவிருக்கும் ஒரு படத்தை பற்றிய செய்திகள் இங்கே. படித்து தெரிந்து கொள்ளுங்கள், என்னுடைய பழைய நிறுவனத்தை பற்றி அதிகமாக சொல்வதற்கில்லை.

 

The Hindu Chennai Edition Metro Plus Page No 01 Dated Wednesday 25th July 2012 Gokulathil Kannan Article
The Hindu Chennai Edition Metro Plus Page No 01 Dated Wednesday 25th July 2012 Gokulathil Kannan Article
Deccan Chronicle Chennai Edition Chennai Chronicle Paper Dated 26th July 2012 Thursday Gkulatil Kannan Article
The Hindu Chennai Edition Metro Plus Page No 07 Advt for Gokulathil Kannan

அமுல் நிறுவனத்தையும், அதனுடைய ட்ரேட்மார்க் கார்ட்டூன் பற்றியும் தெரியாதவர்கள் இந்தியாவில் குறைவானவர்களே இருப்பார்கள். அவர்களுக்கு சென்ற மாதம் ஒரு சிறப்பான மாதமாகும். ஆமாம், அமுல் பேபியின் கார்ட்டூன் வர ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகளை நிறைவடைந்ததையொட்டி சிறப்பான கொண்டாட்டங்களை ஒழுங்கு செய்தார்கள். அதனைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. மிகவும் அருமையாக, ஒரு கார்ட்டன் ரசிகரால் எழுதப்பட்ட கட்டுரை இது, ஆகையால் க்ளிக் செய்து முழுமையாக படித்து மகிழுங்கள்.

 

The Hindu Chennai Edition Metro Plus Page 01 Dated Sunday 29th July 2012 Amul Spoof 50 Years Article
The Hindu Chennai Edition Metro Plus Page 01 Dated Sunday 29th July 2012 Amul Sppof 50 Years Headline
The Hindu Chennai Edition Metro Plus Page 01 Dated Sunday 29th July 2012 Amul Sppof 50 Years Article

இன்னும் இரண்டு நாட்களில் நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails