2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால ஆங்கிலப் புத்தகங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளின் இனவாத அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் பல விருதுகளைப் பெற்றது. அதை எழுதியவர்தான் ட நஹஷி கோட்ஸ். மார்வல் காமிக்ஸ்சின் பிளாக் பான்த்தர்தான் (Black Panther) உலகின் முதல் வெள்ளையரல்லாத காமிக்ஸ் சூப்பர் ஹீரோ. 2015ல் ட நஹஷி கோட்ஸை வைத்து ஒரு புதிய காமிக்ஸ் தொடரை ஆரம்பித்தார்கள். மிக அதிகமாக விற்ற காமிக்ஸ் புத்தகம் என்று விற்பனையில் சாதனையைப் படைத்தது. சமீபத்தில் வந்த மார்வல் திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்த பிளாக் பான்த்தரின் தனி சாகச திரைப்படம் 2018 ஃபெப்ரவரியில் வர இருக்கும் வேலையில், ட நஹஷி கோட்ஸ் ஒரு புதிய காமிக்ஸ் தொடரை ஆரம்பித்திருக்கிறார்.
04th Jan 2018 – Marvel Comics – Black Panther
அறிமுகம்: வகான்டா என்ற நாட்டில் மட்டும்தான் வைப்ரேனியம் என்ற ஒரு அரிய உலோகம் கிடைக்கிறது. அந்த உலோகத்தால், உலகின் மிக முன்னேறிய சமூகமாக, விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற்ற நாடாக வகான்டா உருவெடுத்தது. வைப்ரேனியத்தைக் கைப்பற்ற பலரும் முயல, வகான்டாவின் காவலனாக கருஞ்சிறுத்தை (ப்ளாக் பான்த்தர்) என்ற நாயகன் உருவெடுக்கிறான். வேதாளர் (The Phantom) கதைகளில் வருவதைப்போல, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் ப்ளாக் பான்த்தர் ஆக இருக்கிறார்கள். ப்ளாக் பான்த்தர்தான் நாட்டின் அதிபரும் கூட. இப்போதைய ப்ளாக் பான்த்தர் ட்டி சாலா என்ற இளைஞர் இருக்கிறார்.
தலைப்பு: The Rise of Black Panther Part 1
கதாசிரியர்: ட நஹஷி கோட்ஸ் & இவான் நர்சிஸ்
ஓவியர்: பால் ரெனார்ட்
கலரிஸ்ட்: ஸ்டெஃபான்
லெட்டரிஸ்ட்: ஜோ சபீனோ
பதிப்பாளர்: மார்வல் காமிக்ஸ்
எடிட்டர்: வில் மாஸ்
பக்கங்கள்: 24
விலை: 3.99 $
வெளியீடு (ஆன்லைன் & அச்சில்): ஜனவரி 3, 2018 (நேற்று)
வயது வரம்பு: 9+
One Liner: ப்ளாக் பான்த்தரின் ஆரம்பம் – புதிய வாசகர்களுக்காக!!
கதைச் சுருக்கம்: பேட்மேனின் ஆரம்பத்தை, அதாவது சிறுவன் ப்ரூஸ் வேய்ன் எப்படி பேட்மேனாக மாறினான் என்பதை ஒவ்வொரு எழுத்தாளரும் அவருக்கான பாணியில் பலமுறை சொல்லிவிட்டார்கள். ஒவ்வொரு தசம ஆண்டிலும் இது நடக்கும். புதிய தலைமுறை வாசகர்களுக்காக இப்படி புதிய அறிமுகங்கள் தேவைப்படுகின்றன. இதே ஸ்டைலில், இந்தத் தலைமுறை வாசகர்களுக்காக மார்வல் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ட நஹஷி கோட்ஸ். ஏற்கனவே தனது புதிய பாணியிலான கதை சொல்லும் உத்தியால் பல லட்சம் வாசகர்களைக் கவர்ந்த இவர், நமது காலத்து ப்ளாக் பான்த்தரின் கதையைச் சொல்ல, அவரது தந்தையான டி சாகாவின் ஆட்சிக் காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்.
இரண்டாம் உலகப் போரின்போது, கேப்டன் அமெரிக்கா வகான்டாவில் நுழைய, அவருடன் அப்போதைய ப்ளாக் பான்த்தரான டி சாகா மோதுகிறார். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நண்பர்களாகிறார்கள். வகான்டாவை விட்டு கேப்டன் அமெரிக்கா பிரியும்போது, அவருக்கு தனது நினைவுப் பரிசாக, ஒரு வைப்ரேனியத்தைக் கொடுக்கிறார், டி சாகா. அதன் விளைவுகள்தான் இந்தக் கதையின் பேசுபொருள்.
Verdict: (வழக்கமான) ட நஹஷி கோட்சின் வசனங்கள் அதிகம் கொண்ட, ஆனால், கிளாசிக் படைப்பு.
குறிப்பு: ஆறு பாகங்களைக் கொண்ட தொடராக ஆரம்பித்துள்ளது இந்தக் கதை. ஜேஸன் ஆரோனின் மார்வல் லெகசி முதல் பாகத்தையும், சீக்ரெட் வார்ஸ் தொடரையும் தொடர்ந்து படித்து வருபவர்கள் இந்த முதல் பாகத்தின் முழுமையான வீச்சைப் புரிந்துகொள்ள முடியும். அதற்காக, மற்றவர்கள் படித்தால், புரியாதா? என்று கேட்க வேண்டாம். இதுவரையில் ப்ளாக் பான்த்தர் காமிக்சைப் படிக்காதவர்கள் இந்தைப் படிக்க ஆரம்பித்தாலும் எளிமையாக புரிந்து கொள்ள இயலும்.
ஆன்லைனில் வாங்க : https://www.comixology.com/Rise-of-the-Black-Panther-2018-1-of-6/digital-comic/598145?ref=c2VhcmNoL2luZGV4L2Rlc2t0b3Avc2xpZGVyTGlzdC90b3BSZXN1bHRzU2xpZGVy
அருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...