லியானார்டோ டா வின்சியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? முதலில், அது டா வின்சி இல்லை. ட வின்ச்சி. ஆக, நமக்கு அவரது பெயரே சரியாகத் தெரியாதபோது, மற்ற விவரங்கள் எல்லாம் எப்படியென்று தெரியவில்லை. ஒருவேளை, அஸாசின்ஸ் க்ரீட் வீடியோ கேமில் அவரது மறுபக்கத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கும். அவர்தான் மோனாலிஸாவை வரைந்தவர் என்பதைத் தாண்டி, அவர்தான் ஹெலிகாப்டர், பாராச்சூட், பீரங்கி ஆகியவற்றை உருவாக்கியவர் என்பது தெரியுமா?
02nd December 2018 – Aftershock Comics – Monstro Mechanica – Part 1
அறிமுகம்: லியானர்டொ ட வின்ச்சி ஒரு ஓவியர், சிற்பக் கலைஞர், பொறியாளர், அனாட்டமிஸ்ட், கார்த்தோகிராஃபர் & திட்டவடிவ ஏவியேட்டர். இது மட்டுமல்ல, அவரது கண்டுபிடிப்புகளில் பலருக்கும் தெரியாத ரகசியம் ஒன்று இருக்கிறது. முதன்முதலாக ஒரு இயந்திர மனிதனை உருவாக்கியது அவர்தான். அந்த இயந்திர மனிதனை மையமாக வைத்து ஒரு புதிய காமிக்ஸ் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள்.
தலைப்பு: My Robot Will Save me
கதாசிரியர்: பால் அல்லோர்
ஓவியர்: க்ரிஸ் ஈவன்ஹ்யூஸ்
கலரிஸ்ட்: ஷான் வெய்ர்ஸ்
லெட்டரிஸ்ட்: பால் அல்லோர்
பதிப்பாளர்: ஆஃப்டர்ஷாக் காமிக்ஸ்
எடிட்டர்: மைக் மார்ட்ஸ்
பக்கங்கள்: 36
விலை: 3.99 $
வெளியீடு (ஆன்லைன் & அச்சில்): டிசம்பர் 13, 2017.
வயது வரம்பு: 9+
One Liner: லியானர்டோ ட வின்சியின் மறுபக்கம்!!!
கதைச் சுருக்கம்: கதையின் ஆரம்பத்தில், போப்-பின் ஆட்கள் சிலர் ட வின்ச்சியைக் கடத்த வருகிறார்கள். வீரத்துடன் போராடும் ட வின்ச்சி, எதிரிகள் நிறைய பேர் இருப்பதால், பிடிபடுகிறார். அவரை ஒரு வண்டியில் கடத்தும்போது, தெலுங்கு சினிமாவில் ஹீரோ எண்ட்ரிக்கான காட்சி போல, அவரது உதவியாளரான இஸபெல் அங்கே வருகிறார். அந்தக் காலத்திலேயே ஆண்கள் போல உடையணிந்து பெண்ணியம் பேசும் இஸபெல் இங்கே ஹீரோ இல்லை. அவரது உத்தரவின் பேரில் ஒரு இயந்திர மனிதன் ஓடி வந்து, அதிரடியாக ட வின்ச்சியைக் காப்பாற்றுகிறது. அடித்து வீழ்த்தப்பட்ட அந்தக் குழுவில் இருந்த அனைவருமே தற்கொலை செய்துகொண்டு இறந்து விடுகின்றனர்.
அதன் பிறகு, கதை அந்தக் கால அரசியலுக்கு மாறுகிறது. அலுமினிய சுரங்கங்களுக்கு உரிமை கொண்டாடுவது, போப்பின் ஆட்கள் செய்யும் அரசியல், மாக்கியவல்லியைப் பற்றிய குறிப்புகள், வால்ட்டேராவை முற்றுகையிடுதல் என்று பல விஷயங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் வருகின்றன. கவனத்தைக் கோரும் வாசிப்பு இங்கே தேவைப்படும்.
அதன் பிறகு, அந்தக் காலத்திய ஆணாதிக்கம் பற்றிய ஒரு சம்பவமும் ட வின்ச்சி எப்படிப்பட்ட ஒரு பெண்ணியவாதி என்பதை உணர்த்தும் ஒரு விவாதமும் நடக்கிறது. முதல் மோதலில் காயமுற்ற இயந்திர மனிதனை இஸபெல்லா சரி செய்யும்போது அவர் ஒரு மிக முக்கியமான ஸ்டேட்மெண்ட்டை முன்வைக்கிறார்.
“எரிபொருளால் நிரப்பப்பட்ட ஒரு கலனாக இவ்வுலகம் இருக்கையில், கையில் தீக்குச்சியுடன் ட வின்ச்சி நின்று கொண்டிருக்கிறார்”. இவ்வுலகம் அவரது கைகளால் தீப்பற்றி எரியும்போது, நீ (இயந்திர மனிதன்)தான் அங்கே வர வேண்டும். ஆனால், அது அவரைக் காப்பாற்றவா? அல்லது, அவரை தடுத்து நிறுத்துவதற்கா என்பதுதான் எனக்குத் தெரியவில்லை”.
Verdict: வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், சிறப்பு!!!!
குறிப்பு: கடந்த 20 ஆண்டுகளாக மார்வல் மற்றும் டிசி காமிக்ஸில் பல முக்கியமான காமிக்ஸ் தொடர்களுக்கு வடிவம் கொடுத்தவர் மைக் மார்ட்ஸ். பேட்மேன், எக்ஸ்மென், கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி போன்ற தொடர்களில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் தனியாக இந்த ஆஃப்டர்ஷாக் காமிக்சை ஆரம்பித்தார். விலையில் ஆரம்பித்து, வடிவமைப்பில், உள்ளடக்கத்தில் என்று பல மாற்றங்களுடன் இதை நடத்தி வருகிறார். இவருடன் நட்பில் இருந்த பல ஜாம்பவான்கள் இவருக்கு துணையாக இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நல்ல பிராண்டை உருவாக்கி வருகிறார் மைக்.
ஆன்லைனில் வாங்க :
0 Comments / Ennangal:
Post a Comment
Dear ComiRade,
Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.
Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.
Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.
Strictly No PDF Requests.