உலகின் தலைசிறந்த காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் பட்டியலில் வாட்ச்மென் கதைக்கு எப்போதுமே இடமுண்டு. அதை உருவாக்கிய ஆலன்மூர், பின்னர் பேட்மேனின் தலைசிறந்த கதைகளில் ஒன்றான The Killing Jokeஐ எழுதும்போது ஒரு விஷயம் சொன்னார். அதாவது, வாட்ச்மென்னில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் மறு உருவாக்கம்தான் இந்த கில்லிங் ஜோக்கின் அடிப்படை. இது இப்படி இருக்க, மேலே சொன்ன இரண்டு காமிக்ஸ்களுக்கும் மரியாதை செய்யும்விதமாக ஒரு காமிக்ஸைப் படைத்தால், எப்படி இருக்கும்?
03rd Jan 2018 – DC Comics – Batman Issue No 38
அறிமுகம்: எழுத்தாளர் டாம் கிங் சமீப காலமாக ரெகுலராக பேட்மேன் கதைகளை எழுதி வருகிறார். ஆனால், அவர் எழுதுவது எல்லாமே நீண்ட வரிசையான தொடர்கள்தான். இந்த சூழலில் அவரிடம் ஒரே ஒரு புத்தகத்தில் முடியும் ஒரு பேட்மேன் கதையைப் படைக்கச் சொன்னால், எப்படி இருக்கும்? அதைத்தான் டிசி காமிக்ஸ் நிர்வாகம் செய்துள்ளது. ஆனால், டாம் கிங் படைத்த இந்த ஒன் ஷாட் காமிக்ஸ் காலையில் இருந்து உலக அளவில் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளில் என்னை அசர அடித்த ஒரு காமிக்ஸ் என்றுகூடச் சொல்வேன்.
மேலும், அதிரடியாக ஆக்ஷன் கதைகள் மட்டும்தான் என்று இருந்த பேட்மேனின் கதைக்களத்தை மாற்றி, அவரை ஏன் உலகின் தலைசிறந்த துப்பறிவாளர் என்று அழைக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக கதையை எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் அதிரடி ஆக்ஷன் இருந்தாலும், பேட்மேன் காற்றிலிருந்து பொருட்களை வரவழைக்கும் மாயவித்தைக்காரன் போல க்ளூக்களைக் கண்டுபிடித்து, அட்டகாசமாக துப்பறிகிறார்.
தலைப்பு: The Origin of Bruce Wayne
கதாசிரியர்: டாம் கிங்
ஓவியர்: ட்ராவிஸ் மூர்
கலரிஸ்ட்: க்ளேட்டன் கௌள்ஸ்
லெட்டரிஸ்ட்: டிம் சேல்
பதிப்பாளர்: டிசி காமிக்ஸ்
எடிட்டர்: ஜேம்ஸ் ரிச்
பக்கங்கள்: 36
விலை: 2.99 $
வெளியீடு (ஆன்லைன் & அச்சில்): ஜனவரி 3, 2018 (இன்று)
வயது வரம்பு: 12+
One Liner: பேட்மேனின் ஆரம்பம் – புதிரானதொரு மறு ஆரம்பம்!
கதைச் சுருக்கம்: கோத்தம் நகரில் ஒரு சிறுவனின் பெற்றோர் கொல்லப்படுகின்றனர். ஆதரவின்றி இருக்கும் அந்தச் சிறுவனுக்கு ப்ரூஸ் வேய்ன் (இவர்தான் பேட்மேனும் கூட) அடைக்கலம் அளிக்கிறார். அதே சமயம் நகரில் தொடர்ச்சியாக பல கொலைகள் நடக்கிறது. அந்தக் கொலைகள் செய்யப்பட்ட விதம் சிறையில் இருக்கும் விக்டர் ஸாஸ் பாணியிலேயே இருக்கிறது. ஆனால், கடுங்காவல் சிறையில் இருக்கும் விக்டரால் எப்படி வெளியே வந்து இந்தக் கொலைகளைச் செய்ய இயலும்?
3 க்ரிட் பேனல் பாணியிலான ஓவியங்கள் மூலம் ஆலன் மூர் மற்றும் டேவ் கிப்பன்சுக்கு மரியாதை செய்வது முதல் விக்டர் ஸாசை மொட்டைத் தலையாக இல்லாமல், பழைய ஸ்டைலில் வரைந்திருப்பது, கமிஷனர் கோர்டன், ஆல்ஃப்ரெட், செலீனா கைல் என்று பேட்மேனின் ஒட்டுமொத்தக் குழுவையும் இந்த ஒரு கதையிலேயே கொண்டு வந்தது என்று ரசிக்க வைக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன.
Verdict: ஒவ்வொரு பேட்மேன் ரசிகனும் படிக்க வேண்டிய ஒன்று!!!
குறிப்பு: மதியத்தில் இருந்து இதுவரைக்கும் மூன்று தடவை இக்கதையைப் படித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் புதிய அடையாளங்களை, குறியீடுகளைக் கொண்ட புதிய படைப்பாகவே எனக்குப் படுகிறது. குறிப்பாக, கதையின் முடிவில் “ப்ரூஸ் வேய்னை யாருக்குத்தான் பிடிக்காது?” என்ற ஒரு கேள்வி இனிமேல் பேட்மேனின் சரித்திரத்தில் மிக முக்கியமானதொரு கேள்வியாக அமையப் போகிறது.
ஆன்லைனில் வாங்க :
Tempting a lot... :O
ReplyDeletenice
ReplyDelete