Pages

Monday, February 20, 2012

29 தமிழ் காமிக்ஸ் உலகம் - ரீபிரின்ட் ரெக்வெஸ்ட்கள் 01: லயன் காமிக்ஸ்

Dear ComiRades,

லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு எஸ்.விஜயன் அவர்கள் தங்களுடைய சமீப பதிவுகளில் ரீபிரின்ட்டுகள் குறித்து எழுதி வருகிறார். அதில் (இந்த பதிவில்) காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசையில் வெறும் முத்து காமிக்ஸ் (+ ஸ்பைடர், ஆர்ச்சி) கதைகளை மட்டுமே ரீபிரின்ட் செய்யாமல் ஆரம்ப கால லயன்,மினி லயன், திகில் காமிக்ஸ் கதைகளையும் ரீபிரின்ட் செய்தால் என்ன? அப்படி செய்தால் வாசகர்களின் ரிபிரின்ட் லிஸ்ட் என்ன என்றும் எழுதி இருந்தார். அதற்க்கு பலத்த வரவேற்ப்பு. அப்போதே இந்த பதிவினை தயார் செய்து இருந்தாலும், நேரமின்மை காரணமாக இட இயலவில்லை. அடுத்த வாரமும் மும்பையிலேயே கழிக்க இருப்பதால், பதிவுகள் வருவது கேள்விக்குறியே.

என்னுடைய தாமதமான பதிவின் விளைவு: ஆசிரியரே முதல் ரீபிரின்ட் இதழ் பற்றிய விவரங்களையும் பதிவிட்டு விட்டார். முதல் ரீபிரின்ட்: என்னுடைய ரீபிரின்ட் லிஸ்ட்டில் மூன்றாவதாக இருந்த தலைவாங்கி குரங்கு (எடிட்டரின் பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்). இந்த ரீபிரின்ட் லிஸ்ட்டில் நுழையும் முன்னர் சில விளக்கங்கள்:

 • இந்த ரீபிரின்ட் லிஸ்ட் லயன் காமிக்ஸ், மினி லயன் + ஜூனியர் லயன், திகில் காமிக்ஸ், மற்றும் சார்ந்த காமிக்ஸ் என்று தனியாக வெளியிட ஆசை.

 • ஒவ்வொரு லிஸ்ட்டிலும் மொத்தம் பத்து கதை(கள்) இருக்கும்.

 • அவை எப்படி செலக்ட் ஆகியது என்று சின்னக்குறிப்புகள் பாயிண்ட்டுகளாக இருக்கும்.

 • லயன் காமிக்ஸ் வரிசையில் முதல் நூறு புத்தகங்கள் மட்டுமே பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் வந்தவை கிட்டத்தட்ட (படிக்கவாவது) கிடைக்கும் என்பதால் இந்த முடிவு.

 • ஸ்பைடர், ஆர்ச்சி போன்ற டைஜெஸ்ட் கதைகளை ஏற்கனவே ரீபிரின்ட் செய்துக்கொண்டு இருப்பதால் அவற்றை விட்டுவிடலாம் (இன்னமும்கூட ஸ்பைடரின் இராட்சசக் குள்ளன், சைத்தான் விஞ்ஞானி, மரண ராகம் போன்ற கதைகளையும், நீதிக்காவலன் ஸ்பைடர் போன்ற கிளாசிக்குகளையும் வெளியிடாமல் இருக்கையில், அவற்றை பற்றி தனியாக எழுத வேண்டி இருப்பதாலும், இங்கே அவை -கவுண்டர் பாஷையில் சொல்வதானால்-அன் செலக்ட் செய்யப்படுகின்றன).

 • சமீபத்திய புத்தக கண்காட்சி விற்பனையில் கூட எனக்கு மிகவும் பிடித்த மாடஸ்டி கதைகள்  மந்தமாக விற்பனையானதால் மாடஸ்டி கதைகள் கூட இங்கே அன் செலக்ட் ஆகின்றன. குறிப்பாக சொல்வதென்றால் இரட்டைவேட்டையர் கதையாகிய மர்ம எதிரி புத்தகத்தில் இரண்டாவது மூன்றாவது கதையாக வரும் மாடஸ்டியின் கதை மற்றும் தி ரிடர்ன் ஆப் கேப்ரியல் கதையே முதலில் ரீபிரின்ட் செய்யப்பட வேண்டிய மாடஸ்டி கதை. ஆனால் அவற்றை பின்னர் பார்ப்போம்.

இப்போதைக்கு இந்த விவரங்கள் போதும். ஆகையால் லயன் காமிக்ஸ் ரீபிரின்ட் லிஸ்ட்'ஐ பார்ப்போமா?

 

Lion Comics Issue No 13 Dated May 1985 John Master Sahi Valai
 • கதை சதி வலை!
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 13
 • முதல் பதிப்பு மே 1985 (கோடை மலர்)
 • மறுபதிப்புகள் இதுவரை இல்லை
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
 • நாயகர் ஜான் மாஸ்டர்
 • மூலம் MASTER-SPY (ஆங்கிலம்)
 • இதழ் TIGER (Weekly)
 • வெளியீடு IPC MAGAZINES LTD.
 • முதல் பதிப்பு APR 1983 TO JAN 1984
 • கதை ???
 • ஓவியம் SANDY JAMES
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் 8"x11"
 • விலை ரூ:4/- (1985 முதல் பதிப்பின் போது)
 1. தமிழில் வெளிவந்த முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட காமிக்ஸ் ஹீரோ ஜான் மாஸ்டர்
 2. லயன் காமிக்ஸ் # 013 - சதி வலை! தான் லயன் காமிக்ஸ்-ன் முதல் கோடை மலர் ஆகும்
 3. பெரிய சைசில், தெளிவான சித்திரங்களுடன் வெளிவந்த இந்த புத்தகம் ஒரு கலெக்டர்ஸ் டிரீம் என்று சொல்லப்படுகிறது.அதனாலேயே புத்தக சந்தையில் அதிக விலைக்கும் பேசப்படுகிறது.

Lion Comics Issue No 14 Dated June 1985 Barracuda Kaanamal Pona Kadal
 • கதை காணாமல் போன கடல்
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 14
 • முதல் பதிப்பு ஜூன் 1985
 • மறுபதிப்புகள் இதுவரை இல்லை
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
 • நாயகர்(கள்) சிஐடி லாரன்ஸ் + ஜூடோ டேவிட்
 • மூலம் Secret Agent Barracuda (ஆங்கிலம்)
 • இதழ் Lion (Weekly)
 • வெளியீடு IPC MAGAZINES LTD.
 • முதல் பதிப்பு 18-03-1967 to 26-06-1967
 • கதை ???
 • ஓவியம் ரெனாடோ பொலீஸ்
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் 10 x 14 CM
 • விலை ரூ:2/- (1985 முதல் பதிப்பின் போது)
 1. சாகச ஜோடி லாரன்ஸ் + டேவிட் கதையின் புதிய (வாரந்திர) தொடர் வரிசை.வார இதழ்களில் வெளியானது.

 2. பழிக்கு பழி, நட்பு, சென்டிமென்ட் என்று ஒரு வித்யாசமான கலவை இந்த கதை.

 3. கிங் கோப்ரா என்கிற மாபெரும் ஆளுமையின் எதிர்நிலை உருவக அறிமுகம் (அதாங்க பிரம்மாண்ட வில்லன் அறிமுகம்).

 4. இந்த கதையின் தொடர்ச்சி (விளம்பரபடுத்தப்பட்டு) இருக்கிறது.ஆசிரியர் அதனை வெளியிட எண்ணினால், அதன் முதல் பகுதியாக இந்த கதை ஒரு தொடர்ச்சியாக இருக்கும்.

Lion Comics Issue No 20 Dated Dec 1985 Africa Sathi

 1. துடிப்பான, விறுவிறுப்பான சாகச ஜோடி இரட்டை வேட்டையரின் அறிமுகம்.
 2. ஒரு சைக்கோ வில்லன் + பக்கத்திற்கு பக்கம் திகிலான திருப்பங்களுடன், பல தடைகளையும், பொறிகளையும் கடந்து மிகவும் வித்தியாசமான ஒரு முடிவை கொண்ட கதை.
 • கதை ஆப்பிரிக்க சதி
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 20
 • முதல் பதிப்பு Dec1985
 • மறுபதிப்புகள் இதுவரை இல்லை
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
 • நாயகர்(கள்) இரட்டை வேட்டையர்கள் ஜார்ஜ் + டிரேக்
 • மூலம் Hunters – S.I.6 (ஆங்கிலம்)
 • இதழ் Battle (Weekly)
 • வெளியீடு IPC MAGAZINES LTD.
 • முதல் பதிப்பு FROM 27.02.1982 TO 03.04.1982 (6 ISSUES)
 • கதை ஜான் ரிச்சர்ட்
 • ஓவியம் கார்லோஸ் பினோ
 • LETTERER - பீட் நைட்
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் 10 x 14 CM
 • விலை ரூ:4/- (1985 முதல் பதிப்பின் போது)
Lion Comics Issue No 21 Dated Jan 1986 Manidha Erimalai
 • கதை மனித எரிமலை(& மரணப் பணி)!
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 21
 • முதல் பதிப்பு ஜனவரி 1986 (பொங்கல் மலர்)
 • மறுபதிப்புகள் மரணப் பணி(காமிக்ஸ் கிளாசிக்ஸில்)
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
 • நாயகர் இருப்புக் கை நார்மன்
 • மூலம் Gaunt (ஆங்கிலம்)
 • இதழ் Battle Picture Weekly
 • வெளியீடு IPC MAGAZINES LTD.
 • முதல் பதிப்பு 25 Jun 77 TO 16 Jul 77(The Haunted Man)
  23 Jul 77 to 27 Aug 77(Blitzkreig)
 • கதை John Wagner
 • ஓவியம் John Hooper
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் 6"x8"
 • விலை ரூ:3/- (1986 முதல் பதிப்பின் போது)/ரூ:10/-(CC)
 1. இரும்புக்கை உளவாளி என்கிற ஒரு Pathos ஹீரோவின் அறிமுகம்

 2. அழுத்தமான வசனங்கள்.பிற்காலத்தில் கமல்ஹாசன் இதே வசனங்களை தனது குருதிப் புனல் படத்தில் உபயோகித்திருப்பார்.

 3. Revenge-Is-My-Middle-Name Genre. இன்றும் அந்த முதல் கதையை படிக்கும்போது மனம் கனத்த ஒரு வலியுடனே இருக்கும். அதுவும் அந்த ஓவியங்கள், நார்மனின் கண்கள், பாரிஸ் வெறிநாயின் மறக்கமுடியாத அந்த வசியமூட்டும் திறன், கடைசியில் இருளில் அவனை பழிவாங்கும் நார்மன் என்று ஒரு அட்டகாசமான கதையமைப்பு இது.

Lion Comics Issue No 26 Dated Dec 1985 Adhiradi Veerar Herculas
 • கதை அதிரடி வீரர் ஹெர்குலஸ்
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 26
 • முதல் பதிப்பு ஜூன் 1986
 • மறுபதிப்புகள் இதுவரை இல்லை
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
 • நாயகர் அதிரடி வீரர் ஹெர்குலஸ்
 • மூலம் Cannonball Carmody (French)
 • இதழ் TinTin
 • வெளியீடு Operation One-Tel
 • முதல் பதிப்பு 1984 (Lombard Edition)
 • கதை Leonard Starr
 • ஓவியம் Leonard Starr
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் 10 x 14 CM
 • விலை ரூ:2.50/- (1986 முதல் பதிப்பின் போது)
 1. என்னுடைய மனம் கவர்ந்த காமிக்ஸ் கதாசிரியர் லியோனார்ட் ஸ்டார் உருவாக்கிய சினிமா பாணியிலான ஆக்ஷன் கதை

 2. புதியதொரு ஹீரோ, சந்தானம் போன்ற ஒரு ரசிக்கத்தக்க சைட்கிக், மனோவியல் ரீதியிலான நடை என்று ஒரு கலக்கல் காம்பினேஷன்

 3. கதையில் வரும் ஒரு புதியதொரு எந்திரம்,அதனை ட்டரை செய்யும் கட்டம் மிகவும் ரசிக்கவைக்கும். மொட்டைத்தலை வில்லனும், விசித்திரமான ஒரு பெண்ணும் இந்த கதையின் முக்கிய பாத்திரங்கள்.

Lion Comics Issue No 50 Dated May 1988 Dragon Nagaram
 • கதை டிராகன் நகரம்
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 50
 • முதல் பதிப்பு மே 1988 (கோடை மலர்)
 • மறுபதிப்புகள் இதுவரை இல்லை
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி
 • நாயகர் டெக்ஸ் வில்லர்
 • மூலம் டெக்ஸ் வில்லர் (இத்தாலி)
 • இதழ் Tex (Monthly)
 • வெளியீடு Sergio Bonnelli Editore
 • முதல் பதிப்பு Tex No 46, Aug 1964
 • கதை Gianluigi Bonelli
 • ஓவியம் Aurelio Galeppini
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் 6"x8"
 • விலை ரூ:5/- (1988 முதல் பதிப்பின் போது)
 1. நட்பின் வலிமையையும், கடமை உணர்ச்சியையும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு அக்மார்க் கமர்ஷியல் டெக்ஸ் வில்லர் கதம்பம்

 2. கன்பூஷியசை கோட் செய்யும் (கஞ்சா அடிக்கும்) வில்லன், டிராகன் முத்திரை, அமெரிக்காவில் சீன ராஜ்ஜியம் என்று கலக்கல் காக்டெயில்.

 3. அசத்தலான வசனங்கள்,இளைய தளபதி பட வசனங்களைப்போல பல பன்ச் டையலாக்குகள் நிறைந்த கதை.

Lion Comics Issue No 58 Dated Feb 1989 Vaarisu Vettai
 • கதை வாரிசு வேட்டை
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 58
 • முதல் பதிப்பு Feb 1989
 • மறுபதிப்புகள் இதுவரை இல்லை
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி
 • நாயகர் ஹர்லக்  ஷோம்ஸ்
 • மூலம் Herlock Sholmes (Yugoslovian / Translated English0)
 • இதழ் Plavi Vjaesnik (Yugoslovian) / Tingle (Weekly)
 • வெளியீடு Plavi Vjaesnik (Yugoslovian)
 • முதல் பதிப்பு 1967-1972
 • கதை Furtinger
 • ஓவியம் Julio Radilovic.
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் Crime Novel Size
 • விலை ரூ:2.50/- (1989 முதல் பதிப்பின் போது)
 1. Parody அல்லது spoof வகையை சேர்ந்த கதை. தமிழில் இதுபோன்ற (மொழிபெயர்ப்பிலும்) முயற்சிகள் மிக,மிகக் குறைவே.
 2. ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்துக்கு முழுக்க முழுக்க காமிக்ஸ் வடிவிலான ஒரு ஹோமேஜ்.

 3. இதைப்படித்துவிட்டு யாராவது சிரிக்காமல் இருக்க முடியுமா என்று போட்டியே கூட வைக்கலாம்.அந்த அளவிற்கு சிறப்பான சிரிப்பு கதை + வசனங்கள்.

Lion Comics Issue No 61 Dated June 1989 Mandhira Rani cover
 • கதை மந்திர ராணி
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 61
 • முதல் பதிப்பு June 1989
 • மறுபதிப்புகள் இதுவரை இல்லை
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி
 • நாயகர் சாம்சன்
 • மூலம் Taar – The Rebel (French)
 • இதழ் The Golden Hourglass
 • வெளியீடு Dargaud
 • முதல் பதிப்பு Jan 1981 – Complete Edition
 • ஓவியம் Remohí Brocal (Jaime)
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் 10 x 14 CM
 • விலை ரூ:2/- (1989 முதல் பதிப்பின் போது)
 1. தமிழில் மந்திரக்கதைகளை காமிக்ஸ் வடிவில் படிக்க ஒரு அற்புதமான வரம் இந்த கதைதொடர்.உயிரோட்டமான ஓவியங்கள், துடிப்பான கதை.

 2. இந்த கதையில் வரும் புதிர்களும், விவேகமான முடிவுகளும் ரசிக்கத்தக்கவை.

 3. Sword & Sorcery வகை கதைப்பிரியர்களுக்கு முழு விருந்து. கலரில் இப்போது வெளியிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

Lion Comics No.067 - Emanukku Eman - Cover
 1. இராணுவ மற்றும் போர்க்கதைகள் தமிழில் காமிக்ஸ் வடிவில் மிகவும் குறைந்த அளவிலேயே வந்துள்ளன. அவற்றில் மிகச்சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

 2. தலைமை பண்பு, போராடும் விடாப்பிடித்தனம், சமயோஜிதப்புத்தி, பாசம், அன்பினை வெளிபடுத்துதல், பழி வாங்கும் உணர்ச்சி, ராணுவ கட்டுப்பாடு, என்று பல உணர்சிகளின் வெளிப்பாடாக இந்த கதை அமைந்துள்ளது.

Lion Comics Issue No 83 Dated Oct 1992 Kazhugu Vettai Tex Willer Diwali Special Back Wrapper
 • கதை கழுகு வேட்டை
 • இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
 • வெளியீடு 86
 • முதல் பதிப்பு Oct 1992 (தீபாவளி மலர்)
 • மறுபதிப்புகள் இதுவரை இல்லை
 • பதிப்பகம் லயன் காமிக்ஸ்
 • ஆசிரியர் S.விஜயன்
 • அச்சிட்டோர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி
 • நாயகர்(கள்) டெக்ஸ் வில்லர்
 • மூலம் டெக்ஸ் வில்லர் (இத்தாலி)
 • இதழ் Tex (Monthly)
 • வெளியீடு Sergio Bonnelli Editore
 • முதல் பதிப்பு Tex No 190 (Aug 1976)கதை Guido Nolitta
 • ஓவியம் Aurelio Galeppini
 • தமிழில் S.விஜயன்
 • பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
 • சைஸ் 6"x8"
 • விலை ரூ:10/- (1992 முதல் பதிப்பின் போது)
 1. பழிக்கு பழி கதைக்கு பிறகு பழி வாங்குவதை மைய்யமாக கொண்ட ஒரு கதை. கார்சனின் கடந்த காலம், தலை வாங்கி குரங்கு, பழி வாங்கும் பாவை, பழிக்கு பழி கதைகளுடன் இந்த கதையும் டெக்ஸ் வில்லரின் டாப் கதைகளில் ஒன்று.

 2. இந்த கதையின் வில்லன் மிகவும் பயங்கரமான அதே சமயம் (பழிக்கு பழி ரூபி போல) ரசிக்கப்படும் பாத்திரம். அவனின் மறைவுக்கு ஒரு கனம் நீங்கள் கூட வருந்துவீர்கள்.

 3. The Good,Bad & Ugly கிளைமேக்ஸ் காட்சி போல இந்த கதையின் முடிவில் வரும் சண்டையும், இசையை வெளிப்படுத்தும் அந்த கடிகாரமும் மறக்கவியலா விஷயங்கள்.

இந்த பதிவில் மிஸ் ஆன சில அருமையான கதைகள்:

 • அதிரடிப் படை
 • டேஞ்சர் டயபாலிக் (Purely for Collectors)
 • Operation அலாவுதீன்
 • காரிகன் - ஒரு பனி மலை பயங்கரம்

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Wednesday, February 15, 2012

4 டெக்ஸ் வில்லர் ஓவியர் Francesco Gamba (1926-2012) மறைவு: அன்னாருக்கு அஞ்சலி

Dear ComiRades,

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து பல நல்ல விஷயங்கள் நடந்தவண்ணம் இருந்தாலும் காமிரேட்டுகள் உடன் பகிர்ந்து கொள்ள  சில சோக செய்திகளும் உள்ளன. அவற்றில் முதன்மையான ஒன்று நேற்றிரவு நான் கேள்விப்பட்டு இன்று காலையில் உறுதிப்படுத்திய தகவல்: இத்தாலியை சேர்ந்த பழம்பெரும் காமிக்ஸ் (சித்திரக்கதை) ஓவியரும், கதாசிரியருமாகிய ஃபிரான்செஸ்கோ கெம்பா உடல் நலக்குறைவு காரணமாக Feb 13-ம் தேதியன்று காலமானார் என்பதே. 

தமிழ் காமிக்ஸ் உலகின் ரசிகர்களுக்காக இந்த உபரித்தகவல்: இவர் நம்முடைய மனம் கவர்ந்த ரேஞ்சர் டெக்ஸ் வில்லர் தோன்றிய பதினைந்துக்கும் மேற்பட்ட கதைகளுக்கு ஓவியம் வரைந்து இருக்கிறார். அவற்றில் இரண்டினை எடிட்டர் எஸ்.விஜயன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தும் வெளியிட்டுள்ளார். அந்த இரண்டு கதைகள் என்னவென்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக அவர் வரைந்த சில ஓவியங்களின் சாம்பிள் மற்றும் அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு:

Francesco Gamba Artwork – Tex Willer Francesco Gamba Artwork – Tex Willer Francesco Gamba Artwork – Assorted Art Collection
Francesco Gamba Tex Francesco Gamba Tex & Kit Francesco Gamba Tex 2

இத்தாலியின் கடற்கரைப்பகுதியாகிய "லா ஸ்பெசியா" என்கிற நகரத்தில் 1926-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதியில் பிறந்த ஃபிரான்செஸ்கோ கெம்பாவிற்கு சிறு வயதில் ஓவியத்தின் மேல் ஈடுபாடு தோன்றாமல் போய் இருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டியிருந்திருக்கும். ஏனென்றால் ஃபிரான்செஸ்கோ கெம்பாவின் மூத்த சகோதரர் ஒரு புகழ் பெற்ற காமிக்ஸ் ஓவியர். ஆகையால் ஓவியங்கள் வரைவது இவருக்கும் இயல்பாகவே வந்தது. தன்னுடைய பதின்ம வயதுகளில் ஓவியங்கள் வரைவதையே தன்னுடைய முழுநேரப்பணியாக கொள்ள ஆரம்பித்த ஃபிரான்செஸ்கோ கெம்பா, தன்னுடைய இருபத்தியோராவது வயதில் முதன் முதலாக ரேஸ்ஸோ பில் என்கிற காமிக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதையை வரைந்தார்.

Palaivanap Paralogam ஐம்பதுகளில் கேசரொட்டி குழுமத்திற்காக பணி புரிந்தபோது கியான்லூய்ஜி போனெல்லி உருவாக்கிய யோர்கா என்கிற தொடருக்கு படம் வரைந்தார். அப்போதே போனெல்லி உடன் தொடர்பு ஏற்பட்டு பின்னர் போனெல்லி குழுமத்தின் பல கதைகளுக்கு படம் வரையவும் ஆரம்பித்தார். அப்போதுதான் இத்தாலியில் புகழ் பெற்ற காமிக்ஸ் ஹீரோவாகிய டெக்ஸ் வில்லர் கதைத்தொடருக்கும் படங்கள் வரைய தொடங்கினார். பின்னர் போனெல்லி குழுமத்தில் இருந்து வெளிவந்த ஜாகோர் தொடருக்கும் பிரதானமாக வரைந்தார்.

கிட்ட தட்ட பதினைந்து டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு மேலாக ஃபிரான்செஸ்கோ கெம்பா வரைந்து இருந்தாலும், தமிழில் வந்தவை இரண்டே இரண்டுதான் (என்று நினைக்கிறேன்). ஒரு முறை வீட்டிற்க்கு சென்று புத்தகங்களை எடுத்துப்பார்த்தால் உறுதியாக சொல்லிவிடுவேன். இப்போதைக்கு நினைவில் இருப்பதைக்கொண்டு சொல்வதானால் இந்த இரண்டு புத்தகங்களே.

S.No No Title Date Author Artist Cover S.No Date
1 112 பாலைவனப் பரலோகம் May-95 Gianluigi Bonelli  Francesco Gamba Aurelio Galeppini 34/35 Aug-63
2 126 நள்ளிரவு வேட்டை Nov-96 Gianluigi Bonelli  Francesco Gamba Aurelio Galeppini 48/49 Oct-64

இப்போதைக்கு அந்த புத்தகங்களின் உள் பக்கங்கள் ஸ்கான் கைவசம் இல்லாததால் வெறும் அட்டைப்படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.

Lion Comics Issue no 112 Top Ten Special Issue Dated May 1995 Palaivanap Paralogam Cover Lion Comics Issue no 112 Top Ten Special Issue Dated May 1995 Palaivanap Paralogam Back Cover Tex No 034 Issue Dated Aug 1963 Cover Paalaivanap Paralogam
Lion 112 Lion Top 10 Special Lion 112 Lion Top 10 Special 2 Tex No 034 Issue Dated Aug 1963 Paalaivanap Paralogam

டாப் டென் ஸ்பெஷல் பலரின் கைவசம் இல்லாமல் இருந்தாலும்கூட நள்ளிரவு வேட்டை புத்தகம் இருக்கும் என்று நம்புகிறேன். அதிலும் சமீப காலம் வரை இது லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் விற்பனைக்கு இருந்தது குறிப்பிடத் தக்கது.

Lion Comics Issue No 126 Diwali Special Issue Dated Nov 1996 Nalliravu Vettai Cover Lion Comics Issue No 126 Diwali Special Issue Dated Nov 1996 Nalliravu Vettai Back Cover Tex No 048 Issue Dated Oct 1964 Nalliravu Vettai
Lion Comics Issue No 126 Dated Nov 1996 Nalliravu Vettai Lion Comics Issue No 126 Dated Nov 1996 Nalliravu Vettai 2 Tex No 048 Issue Dated Oct 1964 Nalliravu Vettai

ஜாகோர் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்து புகழ் பெற்றவர் என்பதை முன்பே சொல்லியிருக்கிறோம் அல்லவா, அந்த தொடர் ரசிகர்கள் இவருக்காக உருவாக்கிய ஒரு வீடியோ உங்களுக்காக:

ஃபிரான்செஸ்கோ கெம்பா – R.I.P.

இதற்க்கு மேல் இவரின் மறைவைப்பற்றி  சொல்ல வார்த்தைகள்  எதுவும் இல்லை.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Tuesday, February 07, 2012

7 Comic Cuts 38-News 38: வெற்றிவேல் வீரவேல் - தினமலர் நாளிதழின் சிறப்பு காமிக்ஸ் வெளியீடு–தைப்பூச சிறப்பிதழ் 07-02-2012

Dear ComiRades,

தமிழின் முன்னணி நாளிதழாகிய தினமலர் உடன் இன்றைக்கு (தைப்பூசம்) சிறப்பு வெளியீடாக வெற்றிவேல் வீரவேல் என்கிற ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வெளியிடுகிறார்கள்.  தமிழில் ஏற்கனவே தரமான கதைகளை காமிக்ஸ் வடிவில் கொண்டு சேர்த்ததில் தினமலருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு. குறிப்பாக ஆரம்பகால சிறுவர் (வண்ண) மலர். பின்னர் காலப்போக்கில் அவை (ரசனை உட்பட) மாறினாலும், வெய்யில் காலத்து மாலைநேரச்சாரல் போல திடீரென்று சில காமிக்ஸ் கதைகளை வெளியிட்டு அசத்துவதில் தினமலருக்கு ஈடு தினமலரே.

கடந்த ஆண்டு தீபாவளியன்று இவ்வாறு ஒரு அசத்தலான காமிக்ஸ் இதழை வெளியிட்டு இருந்ததை காமிரேட்டுகள் அவ்வளவு சுலபத்தில் மறந்து இருக்க மாட்டார்கள். அதற்க்கு அடுத்ததாக இன்று தைப்பூச சிறப்பு வெளியீடாக இந்த வெற்றிவேல் வீரவேல் என்கிற காமிக்ஸ் புத்தகம் வந்து (வரப்போகிறது?) இருக்கிறது. இவ்வாறாக, இனிமேல் வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு சிறப்பு வெளியீடுகளாக காமிக்ஸ் கதைகளை தினமலர் நாளிதழ் வெளியிடப்போவதாக பட்சி ஒன்று என் காதில் கூறியதை இங்கே தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த சிறப்பு வெளியீட்டிற்காக கடந்த இரண்டு நாட்களாக தினமலர் சென்னை பதிப்பில் தொடர்ந்து விளம்பரங்கள் வந்ததோடிலாமல், இன்று சென்னையின் பல இடங்களிலும் இந்த செய்தி குறித்த போஸ்டர்களை காணப்பெற்றோம். மறக்காமல் இன்றைய தினமலர் நாளிதழை வாங்குவதோடில்லாமல், நண்பர்களுக்கும் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 
Dina Malar Tamil Daily Dated 05022012 Sunday Advertisement about the Forthcoming Comics Issue on Tuesday 07022012 Dina Malar Tamil Daily Dated 06022012 Monday Advertisement about the Forthcoming Comics Issue on Tuesday 07022012
DinaMalar 2nd Headliner Tamil Daily Dated 05022012 Sunday Advertisement about the Forthcoming Comics Issue on Tuesday 07022012 DinaMalar Tamil Daily Dated 06022012 Monday Advertisement about the Forthcoming Comics Issue on Tuesday 07022012
 

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails