Pages

Tuesday, February 07, 2012

7 Comic Cuts 38-News 38: வெற்றிவேல் வீரவேல் - தினமலர் நாளிதழின் சிறப்பு காமிக்ஸ் வெளியீடு–தைப்பூச சிறப்பிதழ் 07-02-2012

Dear ComiRades,

தமிழின் முன்னணி நாளிதழாகிய தினமலர் உடன் இன்றைக்கு (தைப்பூசம்) சிறப்பு வெளியீடாக வெற்றிவேல் வீரவேல் என்கிற ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வெளியிடுகிறார்கள்.  தமிழில் ஏற்கனவே தரமான கதைகளை காமிக்ஸ் வடிவில் கொண்டு சேர்த்ததில் தினமலருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு. குறிப்பாக ஆரம்பகால சிறுவர் (வண்ண) மலர். பின்னர் காலப்போக்கில் அவை (ரசனை உட்பட) மாறினாலும், வெய்யில் காலத்து மாலைநேரச்சாரல் போல திடீரென்று சில காமிக்ஸ் கதைகளை வெளியிட்டு அசத்துவதில் தினமலருக்கு ஈடு தினமலரே.

கடந்த ஆண்டு தீபாவளியன்று இவ்வாறு ஒரு அசத்தலான காமிக்ஸ் இதழை வெளியிட்டு இருந்ததை காமிரேட்டுகள் அவ்வளவு சுலபத்தில் மறந்து இருக்க மாட்டார்கள். அதற்க்கு அடுத்ததாக இன்று தைப்பூச சிறப்பு வெளியீடாக இந்த வெற்றிவேல் வீரவேல் என்கிற காமிக்ஸ் புத்தகம் வந்து (வரப்போகிறது?) இருக்கிறது. இவ்வாறாக, இனிமேல் வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு சிறப்பு வெளியீடுகளாக காமிக்ஸ் கதைகளை தினமலர் நாளிதழ் வெளியிடப்போவதாக பட்சி ஒன்று என் காதில் கூறியதை இங்கே தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த சிறப்பு வெளியீட்டிற்காக கடந்த இரண்டு நாட்களாக தினமலர் சென்னை பதிப்பில் தொடர்ந்து விளம்பரங்கள் வந்ததோடிலாமல், இன்று சென்னையின் பல இடங்களிலும் இந்த செய்தி குறித்த போஸ்டர்களை காணப்பெற்றோம். மறக்காமல் இன்றைய தினமலர் நாளிதழை வாங்குவதோடில்லாமல், நண்பர்களுக்கும் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 
Dina Malar Tamil Daily Dated 05022012 Sunday Advertisement about the Forthcoming Comics Issue on Tuesday 07022012 Dina Malar Tamil Daily Dated 06022012 Monday Advertisement about the Forthcoming Comics Issue on Tuesday 07022012
DinaMalar 2nd Headliner Tamil Daily Dated 05022012 Sunday Advertisement about the Forthcoming Comics Issue on Tuesday 07022012 DinaMalar Tamil Daily Dated 06022012 Monday Advertisement about the Forthcoming Comics Issue on Tuesday 07022012
 

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

7 comments:

 1. //வெய்யில் காலத்து மாலைநேரச்சாரல்//

  நல்லாத்தானே போய்கிட்டிருந்தது?!! எதுக்கு இப்படியெல்லாம்?!!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. பார்ப்பனிய எதிர்பாளன்Tuesday, February 7, 2012 at 2:26:00 PM GMT+5:30

  நன்றி. உங்கள் பதிவை பார்த்துவிட்டு தினமலர் வாங்கினேன். பல உண்மைக்கு புறம்பான செய்திகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் தினமலருக்கு காமிக்ஸ் பற்றிய இப்படி ஒரு முகம் இருப்பது ஆச்சர்யமே. இந்த கதைக்கான ஓவியங்களை வரைந்தது யார்? நம்ம ஊர் ஓவியர்களின் கைவண்ண தெரிகிறதே?

  ReplyDelete
 3. ayyo nan late pick up pa!
  ipppathan parkiren. analum try panren!
  nanrigal pala!

  ReplyDelete
 4. King Vishwa,

  One suggestion...

  To promote Vijayan Sir's blog(and in turn our lion comics reach) - lion-muthucomics.blogspot.com, can you put some banner/link to this site, in your home page itself @ top? Many dont know the above blog i think.atleast for new comers, this would help. I see that there is a link at the bottom of your blog, but having some prominent banner at top would do wonders I think.

  Since many people visit your blog quite often,(no of ppl following your site - 168,wherein lion-muthucomics blog is 128+)..it would improve the reach I think

  ReplyDelete
 5. Yes, I Agree.

  However, IMHO there is absolutely no comparison between Yours Truly and Our Beloved Editor. It's similar to comparing Sachin with some local cricket player who has just started playing.

  Note: These 160+ followers came in 3+ Years; Whereas it took less than 50 Days for our Editor to get these 120+ followers.

  ReplyDelete
 6. Vishwa

  Saw the Link @ the top..

  What you are saying is right. 120+ followers in a short time is great news.

  ReplyDelete
 7. அருமை ....காணாமல் போன கடல் புத்தகத்துக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன் ...மீண்டும் ஒருமுறை சிறுவயத்துக்கு கூட்டிச்செல்லும்..இந்த புத்தகம் படிக்கும்போது எனது தந்தை புத்தகத்தை அடுப்பில் போட்டுவிட்டார் மறுபடியும் இந்த புத்தகத்தை பல பழைய மார்க்கெட்களில் தேடி கிடைக்கவில்லை கடைசில அப்படியே விட்டுவிட்டேன் மீண்டும் ஒரு முறை ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்...

  ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails