Pages

Sunday, January 29, 2012

10 ஒற்று உளவு சதி – கௌசிகன் (எ) வாண்டுமாமா 190* Not Out

 Dear ComiRades

இப்போதைய சூழலில் கிரிக்கெட் போட்டிகளைபற்றி எந்தவிதமான ஒரு குறிப்பும் இல்லாமல் எழுதவே ஆசை. இருந்தாலும் சென்ற பதிவின் முதல் பின் குறிப்பில் (நாளைய ஸ்பெஷல் பதிவு வெகு விரைவில் இரட்டை சதமடிக்க போகின்ற ஒருவரைப்பற்றியது. ஊகிக்க முடிகின்றதா?) என்று ஒரு கேள்வியை எழுப்பி இருந்தோம். அதற்க்கான விடையே இந்த பதிவின் தலைப்பு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழின் மிகச்சிறந்த கதை சொல்லியாகிய வாண்டுமாமா அவர்களைப்பற்றி ஒரு முழுநீள வாழ்க்கை குறிப்பு அடங்கிய பதிவு இடும்வரை அவரைப்பற்றி இணையத்தில் தேடினால் கிடைத்தது நம்ம சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அய்யம்பாளையம் சாரின் இந்த பதிவு மட்டுமே. அதனால்தான் அப்போது முதல் இன்று வரை முடிந்தவரை வாண்டுமாமா அவர்களின் புத்தகங்களைப்பற்றியும், தகவல்களையும் இந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். நம்மைப்போலவே பல நண்பர்களும் அவரைப்பற்றி எழுதி வருகிறார்கள். Children of all ages என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு எழுத்தாளர் வாண்டுமாமா. அவரை சிறுவர் இலக்கியத்தின் சுஜாதா என்று நான் அடிக்கடி சொல்வேன். இப்படி சொல்வதால் சுஜாதா அவர்களுக்குத்தான் பெருமை என்பது உண்மையும் கூட.

கடந்த நவம்பர் மாதம் வழக்கம் போல வானதி பதிப்பக உரிமையாளரை சந்திக்க சென்றபோது, அவர் இப்படி ஒரு லேட்டஸ்ட் புத்தகம் வெளிவரப்போகிறது என்று சொன்னார். அடுத்த இரண்டு நாட்கள் தொடர்ந்து வானதி நிலையம் சென்று புத்தகம் வர காத்திருந்தது ஒரு சுகமான அனுபவம் (அந்த இரண்டு நாட்களில் வானதியின் வேறு பல சுவையான புத்தகங்களை வாங்கியது தனி கதை). ஒற்று,உளவு சதி என்கிற இந்த புத்தகம் வாண்டுமாமாவின் நூற்றி தொண்ணூறாவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம். விரைவில் இரட்டைசதமடிக்க வாழ்த்தி விட்டு இந்த புத்தகம் பற்றி அலச துவங்குவோம்.

 

Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam October 2010 Front Cover Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam October 2010 Back Cover
Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Cover Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Back Cover

சமீப நாட்களில் நான் வாங்கிய அனைத்து புத்தகங்களின் அட்டைப்படங்களுமே ஏமாற்றத்தை அளித்தது. அப்படி இருக்கையில் இந்த அட்டைப்படம் ஒரு வரவேற்க்கத்தக்க மாற்றம். இந்த அட்டைப்படத்தை நுனிப்புல் மேயாமல் சற்று கூர்ந்து கவனித்தால் பல நுணுக்கமான விஷயங்களில் தனிக்கவனம் கொடுத்துள்ளது தெரிய வரும். அதற்க்கான முழு கிரெடிட்டும் (வழமைபோல) வாண்டுமாமா அவர்களையே சாரும். ஏனெனில் இந்த புத்தகத்தின் முழு வடிவமைப்பும் அவரது மேற்பார்வையிலேயே நடந்தது.

புத்தகங்கள் விற்காத ஒரு சூழலில், இப்படி ஒரு வித்தியாசமான புத்தகத்தை பதிப்பிப்பதற்க்கே ஒரு அலாதி தைரியம் வேண்டும். வழக்கம்போல சிறுவர் இலக்கியம் சார்ந்த காதல் கொண்ட வானதி பதிப்பக உரிமையாளருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. தொடர்ந்து அவருக்கு நம்முடைய ஆதரவை அளித்து அவரை இதுபோன்ற பல புத்தகங்கள் வெளியிட ஊக்குவிப்போம்.

 

Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Title Page Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Credits Page
Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Title Page Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Credits Page

இந்த புத்தகத்தை நான் வாங்கியபோது என்னுடைய நண்பர் "இரவுக்கழுகு" அவர்களும் என்னோடு வந்து இருந்தார். அவருடன் திருப்பூரை சேர்ந்த (காமிக்ஸ்/சிறுவர் இலக்கியம் படிக்காத) நண்பரொருவரும் வந்து இருந்தார். இந்த புத்தகத்தை நாங்கள் வாங்கியபோது அவர் எங்களைப்பார்த்து கேட்ட கேள்வி:"ஏங்க, இருநூற்றி அறுபது பக்கம் கொண்ட இந்த புத்தகத்திற்கு இருநூறு ருபாய் என்பது கொஞ்சம் அதிகமில்லையா?". வழக்கம் போல அவருக்கு எந்தவிதமான பதிலும் அளிக்காமல் இந்த புத்தகத்தை வாங்கினோம். பின்னே என்னங்க, இரும்பு கிலோ 40 ருபாய் என்று விற்கும்போது நீங்கள் ஏன் தங்கத்தை மட்டும் கிராம் 2600 ருபாய் என்று வாங்குகிறீர்கள்? என்று யாராவது கேட்டால் அதற்க்கு நீங்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பீர்களா என்ன.

பண்டைக்காலம் தொட்டு இன்றுவரை உளவு வேலைகளும், ஒற்றர்களும், சதிகாரர்களும் நம்மை சூழ்ந்து காணப்படுகிறார்கள். ஆனால் அவர்களை இனம்கண்டு கொள்வது வைக்கோல்போரில் ஊசியைதேடுவது போலத்தான். இதுபோல ஒரு நாற்பத்தி ஐந்து சம்பவங்களை காலவேறுபாடு இன்றி அருமையாக தொகுத்து தென் சொட்டும் இன்பத்தமிழில் வழங்கியிருக்கிறார் வாண்டுமாமா. ஒவ்வொரு கதைக்கும் ஏற்ற, கண்ணுக்கு விருந்தாக அமைகின்ற பல படங்களையும் இனிதே தொகுத்து இருப்பது மற்றுமொரு சிறப்பம்சம்.

 

Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Forward By the Author Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Index  Page
Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Forward By the Author Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Index Page

நல்ல விஷயம் ஒன்றை பதிவாக்கும்போது (சினிமாவாகவோ, அல்லது எழுத்தாகவோ), அதற்க்கான எடிட்டிங் மிகவும் அவசியம். இந்த விஷயத்தில் நம்ம சன் ஃபிக்ச்சர்ஸ் எடிட்டர்கள் கில்லாடிகள். (பின்னே, வெடி போன்ற ஒரு படத்தை கூட பார்க்க ஒரு சூப்பர் ட்ரைலரை வெளியிட்டு நம்மையெல்லாம் தியேட்டருக்கு வரவழைத்தவர்கள் ஆயிற்றே). அதுபோலவே இதுபோன்ற வரலாற்று சம்பவங்களை கோர்வையாக தொகுப்பதும் கத்திமேல் நடப்பது போன்ற ஒரு ரிஸ்க் ஆன விஷயம். சற்றே தடம் பிழன்றாலும்கூட போரடிக்க ஆரம்பித்து விடும். இதில் எடிட்டரின் வேலை மிக முக்கியம். அந்த ஒரு பணியை மட்டுமின்றி எழுதுவதையும் சேர்த்து திறம்பட இயங்கும் ஒரு ஆல்-ரவுண்டராக விளங்கும் வாண்டுமாமாவை பாராட்ட வார்த்தைகள் குறைவு என்பது தமிழில் உள்ள பெரிய குறை.

இந்த தொகுப்பில் இருக்கும் நாற்பத்தி ஐந்து கதைகளையும் இங்கே குறிப்பிடவே ஆசை. அப்படி செய்தால் மொத்த புத்தக விவரங்களையும் ஸ்கான் செய்து வெளியிட வேண்டியிருக்கும் & That is something, well, Impossible. ஆகவே ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரே ஒரு அத்யாயத்தை மட்டுமே இங்கே வெளியிட்டிருக்கிறோம். இதுவுமே புத்தகத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் ஒரு காரியம்.

 

Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 01 Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 02
Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 01 Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 02
Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 03 Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 04
Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 03 Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 04
Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 05 Useful Links
Otru Ulavu Sathi By Vandumama aka Kausikan Gangai Puthaga Nilaiyam Chapter 5 Page 05
 • எதிர்நீச்சல்-வாண்டுமாமாவின் வாழ்க்கை வரலாறு-கங்கை புத்தக நிலைய வெளியீடு-தமிழ் காமிக்ஸ் உலகின் சிறப்பு பதிவு

 • இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

  Thanks & Regards,

  King Viswa.

  10 comments:

  1. //
   பின்னே என்னங்க, இரும்பு கிலோ 40 ருபாய் என்று விற்கும்போது நீங்கள் ஏன் தங்கத்தை மட்டும் கிராம் 2600 ருபாய் என்று வாங்குகிறீர்கள்? என்று யாராவது கேட்டால் அதற்க்கு நீங்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பீர்களா என்ன.
   //

   சூப்பரான உவமை. இனிமே எவராவது காமிக்ஸ் விலை என்னை கேட்டால், சொல்வதற்கு சூப்பர் பதில் ஒன்று ரெடி :)

   ReplyDelete
  2. अच्छा ,यह हुयिना बात , अय्सेयी और बोहुत लिकियिएगा

   ReplyDelete
  3. நல்ல பதிவு , அந்த தங்கம் ,இரும்பு உவமை, ...... ஐ வான்ட் மோர் எமோசன் வால்டரு

   ReplyDelete
  4. விஸ்வா!
   2012: சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் ஓர் ஆண்டாக அமையபோகிறது. புதிய காமிக்ஸ்களும் ஏனைய சிறுவர் நூல்களும் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.!

   ReplyDelete
  5. ayyambalayam sir, puthiya thalai murai book-la unga photo parthutten...
   aama ...
   unga padam vanthatha yen yenkitta sollala..
   CBS vangitten. neenga sonnathu sarithan..sumaarthan...

   ReplyDelete
  6. விஷ்வா ..ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும் .. நீங்கள் "துப்பறியும் சாம்பு " என்கிற பட கதை படித்து இருகிறீர்களா? நான் சின்ன வயதில் படித்து இருக்கேன் .. ஆனால் எந்த புத்தகம் , ஆசிரியர் பெயர் எதுவும் நியாபகம் இல்லை .. நகைச்சுவை உடன் கூடிய துப்பறியும் காமிக்ஸ் அது.. உங்களுக்கு இந்த கதை பற்றி எதாவது தெரிந்தால் சொல்லவும் ..மற்ற நண்பர்கள் கூட தங்கள் கருத்தை தெரிவிக்கவும் ..நன்றி ...

   ReplyDelete
   Replies
   1. //விஷ்வா ..ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும் .. நீங்கள் "துப்பறியும் சாம்பு " என்கிற பட கதை படித்து இருகிறீர்களா? நான் சின்ன வயதில் படித்து இருக்கேன் .. ஆனால் எந்த புத்தகம் , ஆசிரியர் பெயர் எதுவும் நியாபகம் இல்லை .. நகைச்சுவை உடன் கூடிய துப்பறியும் காமிக்ஸ் அது.. உங்களுக்கு இந்த கதை பற்றி எதாவது தெரிந்தால் சொல்லவும் ..மற்ற நண்பர்கள் கூட தங்கள் கருத்தை தெரிவிக்கவும் ..நன்றி// நண்பர் ஸ்ரீனி,
    என்னுடைய அடுத்த ஸ்பெஷல் பதிவு உங்கள் கேள்விக்கு விடையளிக்கும். நீங்கள் கூறிய துப்பறியும் சாம்பு காமிக்ஸ் தான் என்னுடைய அடுத்த பதிவின் மைய்யக்கரு.

    Delete
   2. 'துப்பறியும் சாம்பு' தொடர் பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் தேவன் அவர்களது படைப்பில் கோபுலு அவர்கள் ஓவியம் வரைய வெளிவந்த தொடர் என்று நினைக்கிறேன். நண்பர் ஒருவர் அந்தக் கதைத் தொடரை பைண்ட் செய்துவைத்திருந்து எனக்கு கொடுத்தார். இப்போது அது எங்கே போச்சு என்று தெரியவில்லை. கையில் கிடைத்தால் ஒன்றிரண்டு பக்கங்களையாவது ஸ்கான் செய்து தர முயல்கிறேன். அவசரக் குடுக்கையாக விஸ்வாவிற்கு முந்திக்கொண்டு இந்தத் தகவல்களைப் பதிந்ததற்கு மன்னிக்கவும். விஸ்வாவின் பதிவு முழுமையாக விரிவாக இருக்கும். :)

    Delete
  7. தகவலுக்கு நன்றி, இந்த புத்தகம் நான் வாங்க விருப்பப்படுகிறேன், அவர்கள் தொலைபேசி எண் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். பதிப்பகத்தின் முகவரி மட்டும் scan-இல் உள்ளது. நன்றி!!!

   ReplyDelete
  8. Phone: (044) 24310769, (044) 24342810

   Address: 23, Deenadayalu Street, T.Nagar, Chennai- 600017, Tamil Nadu

   Landmark: Near T Nagar Head Post Office

   ReplyDelete

  Dear ComiRade,

  Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

  Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

  Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

  Strictly No PDF Requests.

  Related Posts with Thumbnails