Pages

Tuesday, January 24, 2012

10 Muthu Comics # 313-Jan 2012-Vinnil Oru KullaNari-A Johnny Hazard Adventure-முத்து காமிக்ஸ்-விண்ணில் ஒரு குள்ளநரி

 Dear ComiRades,

ஒரே மாதத்தில் மூன்று புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ் வெளியீடுகள் என்பது சமீப தசாப்தத்தில் தமிழ் காமிக்ஸ் உலகில் நடக்காத ஒரு சம்பவமாகும். ஆனால் தற்போதைய நிலையில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் எடிட்டராகிய திரு விஜயன் அவர்கள் தண்ணீரின் மேலே நடக்கிறார் என்பதுவும் நம்பக்கூடிய ஒரு செயலாகவே எனக்கு தெரிகிறது.

சற்றே மிகை படுத்தப்பட்ட ஒரு வாக்கியமாக சென்ற பத்தி தெரிந்தாலும், அதன் சாராம்சம்  உண்மையே. சமீப வருடங்களில் ஒரே சமயத்தில் இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் என்பதுவும் நடந்துள்ளது (Feb 2011). ஆனால், ஒரே மாதத்தில் மூன்று காமிக்ஸ் வெளியீடுகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. அதுவும் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்று மூன்று காமிக்ஸ் வெளியீடுகளும் ஒவ்வொரு புத்தக வரிசையில் இருப்பதும் ஒரு கவித்துவமான ஒற்றுமை. கடந்த இரண்டு ஆண்டுகளில் (பல தவிர்க்க முடியாத காரணங்களால்) மொத்தமே மூன்று மூன்று காமிக்ஸ்கள் வெளியாகியிருக்க, திடீரென்று ஒரே மாதத்தில் மூன்று வெவ்வேறு தமிழ் காமிக்ஸ் வெளியீடுகள் வருவது என்பது வரவேற்க்கதக்க மாற்றமே. இந்த முயற்சி இனிமேலும் தொடரும் என்று எடிட்டர் அவர்களே கூறியிருப்பது சிறப்பான ஒரு  செய்தியாகும்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Adventure Next Issue Ad Johnny Hazard
robbins Lion Comics Issue No208 Next Issue Ad for Muthu Comics

இந்த காமிக்ஸ் வெளியீடானது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. எடிட்டர் எஸ்,விஜயன் அவர்களை நேரில் சந்தித்தபோது (30th டிசம்பர் 2009) இந்த கதையின் மொழி பெயர்க்கப்பட்ட முதல் பக்கங்களை அவரது டேபிளில் பார்த்தேன். அப்போதே கதையின் ஆரம்பத்தை படித்தும் விட்டேன். ஆனால் மற்ற பக்கங்களை படிக்க இவ்வளவு நாட்கள் ஆகுமென்பது எனக்கு அப்போது தெரியாது. அதுவுமில்லாமல் இந்த கதையை பற்றிய ஒரு முன்னோட்ட பதிவினை ஒரு வருடம் முன்பே நம்முடைய தமிழ் காமிக்ஸ் உலகம் இணைய தளத்தில் வெளியிட்டு வேறு தொலைத்திருந்தேன். சத்தியமாக அப்போது கூட இவ்வளவு லேட் ஆக வெளிவரும் என்பது தெரியாது. ஆனால், வழக்கம் போல Light at the end of the Tunnel என்று சொல்வார்களே, அந்த Tunnelஐ விட்டு வெளியேறி விட்டதாகவே தோன்றுகிறது. Anyway, For good reasons, Past is well behind us.

Muthu Comics Issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Front Cover Muthu Comics Issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Editors Page
Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Front Cover Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Editors Page

இந்த கதையின் முன்னோட்டத்தினை (அப்போதைய) லயன் காமிக்ஸ் இணைய தளத்தில் எடிட்டர் திரு விஜயன் அவர்கள் வெளியிட்டு இருந்தார்கள். பின்னர் பல்வேறு டெக்னிகல் காரணங்களால் முடங்கிவிட்ட அந்த இணையதளம், வெகு விரைவில் இயங்க ஆரம்பிக்கும் என்பது மற்றுமொரு குட் நியூஸ். இதோ அந்த சிறிய முன்னோட்டம் அல்லது கதை சுருக்கம்:

விங்-கமாண்டர் ஜார்ஜ் தோன்றும் விண்ணில் ஒரு குள்ளநரி! ஐந்தே 5 பயணிகளுடன் சென்றிடும் ஒரு விமானத்தில் பயணமாகின்றார் நமது விங்-கமாண்டர் ஜார்ஜ். வழக்கம்போல சோதனைகள் அவரைத் தேடி வருகின்றன! விமானம் கடத்தப்படுகிறது! பனி படர்ந்த மலைப்பிரதேசத்தில் தரையிரங்கும் விமானத்தை கடத்தியவர்களின் நோக்கம் தான் என்ன? ஜார்ஜ் இந்த இக்கட்டிலிருந்து எப்படி வெளிவந்திட வழி தேடுகிறார்? விடைகள் "விண்ணில் ஒரு குள்ளநரி”யில்.

 

Muthu Comics Issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Johnny Hazard Adventure 1st Page:Daily Strip 58–The Long Return–2nd Jan 61 to 8th Apr 61
Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Johnny Hazard Adventure 1st Page

இந்த இதழின் இரண்டாவது கதையின் நாயகன் ரோஜர் மூர் பற்றிய நம்முடைய ஆவணப்பதிவு இங்கே இருக்கிறது. ஜான் மெக்நமாராவின் கைவண்ணத்தில் ஈவ்னிங் ந்யூஸ் என்கிற லண்டன் மாலைநேரத்து பத்திரிக்கையில் அறுபதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த இந்த கதையை படிப்பதே ஒரு சுவையோட்டும் நாஸ்டால்ஜியா. இந்த கதையை பற்றிய எடிட்டரின் முன்னோட்டம்:

இந்த இதழின் இன்னுமொரு highlight - ஏஜெண்ட் ரோஜர் மூர் தோன்றும் "அழகிய அவஸ்தை"! இதுவும் ஒரு விமானக் கடத்தலோடு துவங்கியது...ஆனால் இம்முறை கடத்தப்படுவதோ புதிதாய் மகுடம் சூட்டிய உலக அழகி! அழகும், ஆபத்தும் ஒருங்கே இருக்கிறதென்றால் நமது ஹீரோ  ரோஜர் மூரும் அங்கே பிரசன்னமாகிவிடுவது வழக்கம் தானே! பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர்! படிக்கத் தவறாதீர்கள்.

 

Muthu Comics Issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Roger Moore AKA PT Adventure 1st Page – Azhagiya Avasthai
Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Roger Moore AKA PT Adventure 1st Page

சமீபத்திய விற்பனைக்கு வந்துள்ள, வரப்போகும் இதழ்களை பற்றிய கண்ணைக்கொள்ளும் விளம்பரங்களுக்கு இந்த புத்தகத்தில் பஞ்சமேயில்லை. இதோ சில விளம்பரங்களின் ஸ்கான்கள். அதுவும் குறிப்பாக லயன் கம்பேக் ஸ்பெஷலைப்ப்பற்றிய விளம்பரத்தின் முதல் வரியை மறவாமல் படியுங்கள்.

 

Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Advertisements of the On Sale and Forthcoming Issues of Lion Comics & Muthu Comics

Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Advertisements of the On Sale and Fothcoming Issues

சமீபத்தில் தினகரன் நாளிதழின் ஞாயிறு இலவச இணைப்பாக வரும் வசந்தம் இதழின் கவர் ஸ்டோரியாக வந்த "இரும்புக்கை மாயாவிக்கு வயது 40" கட்டுரையை குறித்த எடிட்டரின் நன்றி தெரிவிக்கும் பக்கம்.

 

Muthu Comics Issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Dinakaran Vasantham Article
Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Dinakaran Vasantham Article

ஆனால், நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் இதழ்: சூப்பர் ஹீரோ ஸ்பெஷலே ஆகும். என்னதான் (இப்போது ஒன்றிரண்டு காமிக்ஸ்களைப் படித்துவிட்டு அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும்) கும்பல் ஒன்று இந்த கதை வரிசையை ஏற்க மறுத்தாலும், என்னுடைய ஃபேவரிட் இன்னமும் இரும்புக்கை மாயாவி தான். வெல்கம் பேக், குற்றவியல் சக்கரவர்த்தி.

 

Muthu Comics Issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Advertisements of the Forthcoming Issue: Super Hero Special
Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Advertisements of the Fothcoming Issue

இது அடுத்து வரப்போகும் இதழ் மற்றும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு கிடைக்கப்போகும் புத்தகங்களின் பட்டியல். இப்படியாக இந்த வருடத்திய காமிக்ஸ் கனவுகள் சிறகடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த யுகத்திலும் காமிக்ஸ் மேலுள்ள ஆர்வம் குறையாமல், பல சிரமங்களையும் மேற்கொண்டு, உண்மை என்னவென்பதே தெரியாத மொக்கை விமர்சகர்களின் விமர்சனங்களையும் பொறுத்துக்கொண்டு, (பலரின் வதந்திகளையும் மீறி) தொடர்ந்து நட்டத்திலேயே நடத்தி வந்தாலும், தொடர்ந்து காமிக்ஸ் இதழ்களை தமிழில் வெளியிடுவதற்கு நன்றி விஜயன் சார். இந்த நன்றி என்கிற மூன்றெழுத்து நீங்கள் படும் கஷ்டங்களுக்கு ஈடாகாதுதான். இருந்தாலும் இது ஒன்றுதான் இப்போதைக்கு எங்களால் முடிகின்ற ஒரே விஷயம்.

 

Muthu Comics Issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Advertisements of the Forthcoming Issues Muthu Comics issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Back Cover
Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Advertisements of the Fothcoming Issues Muthu Comics issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Back Cover

இவையே தற்போதுள்ள பழைய காமிக்ஸ்களின் அப்டேடட் ஸ்டாக் விவரம். இதிலும்கூட சில பல புத்தகங்கள் மிஸ் ஆகலாம். லயன் காமிக்ஸ் அலுவலகத்தினரை தொலைபேசியில் விசாரித்துக்கொள்ளவும்.

 

Muthu Comics Issue No 313 Dated Jan 2012 Vinnil Oru KullaNari Inner Cover Advt for currently available issues

Muthu Comics Issue No 313 Dated Jn 2012 Vinnil Oru KullaNari Inner Cover Advt for currently available issues

பின் குறிப்பு 1: நாளைய (டெக்னிகலி இன்றைய) டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் சதம் அடிக்கிறாரோ இல்லையோ, நம்ம விஜயன் சாரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை சதமடித்து உள்ளது. ஆமாம், ஆரம்பித்து ஒரு மாதம் கூட ஆகாத அவரது பிளாகிற்கு பின்தொடருபவர்களின் எண்ணிக்கை இன்றுடன் 101. (ஆனால் அதில் முதலாவது சாட்சாத் அடியேன்தான்). அதுசரி, நாளைய ஸ்பெஷல் பதிவு வெகு விரைவில் இரட்டை சதமடிக்க போகின்ற ஒருவரைப்பற்றியது. ஊகிக்க முடிகின்றதா?

பின் குறிப்பு 2: என்னுடைய காமிக்ஸ் ஆர்வம் மீட்கொள்ளப்பட்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் புதிதாக காமிக்ஸ் புத்தகங்கள் என் வீட்டிற்க்கு அஞ்சலில் வந்தடைந்தவுடன் என் வீட்டிலுள்ளோர் உடனடியாக கைபேசி மூலம் தெரிவிப்பார்கள். உடனே வேறு எந்த தலை போகிற வேலை இருந்தாலும் அதனை அப்படியே தள்ளி வைத்து விட்டு (பாதி நாள் லீவு போட்டு விட்டாவது) வீட்டிற்கு சென்று அந்த புத்தகத்தை படித்து விடுவேன். ஒரு முறை இப்படி ஒரு புதியபுத்தகம் வந்தபோது என்னுடைய நெருங்கிய நண்பரொருவருக்கு தாம்பரம் அருகில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் விடியற்காலையில் முத்துமாரியம்மன்  பார்சல் சர்வீசில் ஜம்போ ஸ்பெஷல் வருகிறது என்பதை கேள்விப்பட்டவுடன் திருமணதிற்கு கூட செல்லாமல் அந்த புத்தகத்தை கைப்பற்றிவிட்டேன். இப்படி என்னுடைய காமிக்ஸ் விவகாரம் இருக்க, இன்று மதியம் இந்த புத்தகம் வந்துவிட்டது  என்பதை தெரிந்துக்கொண்டவுடன் உடனடியாக லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு போக இயலாத சூழல். அலுவலகப்பணி என்னை கட்டிப்போட்டு விட்டது. நண்பர் ஹாலிவுட் பாலா வேறு இன்றுதான் சென்னை வந்திருந்தார். அவரையும் பார்க்க இயலவில்லை. ஒருவாறாக இன்றைய பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பியபோது இரவு மணி பனிரெண்டு. அதற்க்கு பின்னர் உள் பக்கங்களை ஸ்கான் செய்து இந்த பதிவை இடும்போது இரவு மணி இரண்டரை.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

10 comments:

  1. காமிக்ஸ் புத்தகம் வந்த அன்றே அதைப்பற்றிய பதிவு போட இரவு இரண்டரை மணி வரை விழித்திருந்து பதிவிட்ட உங்களைப்பற்றி இதோ ஒரு விவேக் கமெண்ட்.

    'உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா'

    ஆசிரியர் கூறியது போல் பழைய முறையில் புத்தகம் விற்பது சரிப்படவில்லை என்பது சரியென்றாலும், சிறிய நகரங்களில் உள்ள சந்தா கட்ட வசதியில்லாத வாசகர்களை எப்படி அனுகப்போகிறோம் என்பது ஒரு கேள்விக்குறிதான். உங்களுக்கு எதாவது வழி தெரிந்தால் சொல்லுங்களேன்.

    இந்த கதையை ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் படிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். புத்தகம் கைக்கு வர ஒரு வாரம் ஆகலாம். படித்துவிட்டு மறுபடியும் வருகிறேன்.

    இந்த ஜனவரி மாதம் ஒரு மறக்க முடியாத மாதம், பல வழிகளில். விரைவில் என்னிடமிருந்து இது பற்றிய ஒரு பதிவை எதிர்பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த ஜனவரி மாதம் ஒரு மறக்க முடியாத மாதம், பல வழிகளில். விரைவில் என்னிடமிருந்து இது பற்றிய ஒரு பதிவை எதிர்பாருங்கள்//

      இன்னும் அந்த பதிவுகளை காணோமே?

      Delete
  2. me the second nanbare!
    amam solliputten. Romba nala ninaichirunthathu!

    ReplyDelete
  3. இந்த யுகத்திலும் காமிக்ஸ் மேலுள்ள ஆர்வம் குறையாமல், பல சிரமங்களையும் மேற்கொண்டு, உண்மை என்னவென்பதே தெரியாத மொக்கை விமர்சகர்களின் விமர்சனங்களையும் பொறுத்துக்கொண்டு, (பலரின் வதந்திகளையும் மீறி) தொடர்ந்து நட்டத்திலேயே நடத்தி வந்தாலும், தொடர்ந்து காமிக்ஸ் இதழ்களை தமிழில் வெளியிடுவதற்கு நன்றி விஜயன் சார். இந்த நன்றி என்கிற மூன்றெழுத்து நீங்கள் படும் கஷ்டங்களுக்கு ஈடாகாதுதான். இருந்தாலும் இது ஒன்றுதான் இப்போதைக்கு எங்களால் முடிகின்ற ஒரே விஷயம். நானும் வழி மொழிகிறேன் நண்பரே!

    ReplyDelete
  4. ஸ்பைடர், ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி கதைகளுக்கு நான் எப்போவுமே ரசிகன்தான்.. புதிய வெளியீட்டு அறிவிப்புகள் உற்சாகப்படுத்துகின்றன :).

    ReplyDelete
  5. //பின் குறிப்பு 2: என்னுடைய காமிக்ஸ் ஆர்வம் மீட்கொள்ளப்பட்ட கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் புதிதாக காமிக்ஸ் புத்தகங்கள் என் வீட்டிற்க்கு அஞ்சலில் வந்தடைந்தவுடன் என் வீட்டிலுள்ளோர் உடனடியாக கைபேசி மூலம் தெரிவிப்பார்கள். உடனே வேறு எந்த தலை போகிற வேலை இருந்தாலும் அதனை அப்படியே தள்ளி வைத்து விட்டு (பாதி நாள் லீவு போட்டு விட்டாவது) வீட்டிற்கு சென்று அந்த புத்தகத்தை படித்து விடுவேன். ஒரு முறை இப்படி ஒரு புதியபுத்தகம் வந்தபோது என்னுடைய நெருங்கிய நண்பரொருவருக்கு தாம்பரம் அருகில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் விடியற்காலையில் முத்துமாரியம்மன் பார்சல் சர்வீசில் ஜம்போ ஸ்பெஷல் வருகிறது என்பதை கேள்விப்பட்டவுடன் திருமணதிற்கு கூட செல்லாமல் அந்த புத்தகத்தை கைப்பற்றிவிட்டேன். இப்படி என்னுடைய காமிக்ஸ் விவகாரம் இருக்க, இன்று மதியம் இந்த புத்தகம் வந்துவிட்டது என்பதை தெரிந்துக்கொண்டவுடன் உடனடியாக லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு போக இயலாத சூழல். அலுவலகப்பணி என்னை கட்டிப்போட்டு விட்டது. நண்பர் ஹாலிவுட் பாலா வேறு இன்றுதான் சென்னை வந்திருந்தார். அவரையும் பார்க்க இயலவில்லை. ஒருவாறாக இன்றைய பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பியபோது இரவு மணி பனிரெண்டு. அதற்க்கு பின்னர் உள் பக்கங்களை ஸ்கான் செய்து இந்த பதிவை இடும்போது இரவு மணி இரண்டரை.//

    சரி! இதுக்கு இப்போ என்னான்றீங்க?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. supera.... mokkai pottathukku nandri. appuram comics ulagathuku nanmai seiya piranthavare, lion comics blog-iyum vijayan paeril eluthupavare, pesamal asiriyar endru ungal perai pottudalam enpathu en aasai. nadakkuma? come back spl - comics ulagin aaga sirantha MOKKAI. KURIPPAGA IRUMMPU KAI MAAYAAVI -in kathaigal padu mosam. aama nee oru 5 or 6 varushama comics padikkirennu ninaikkiren. aana nee eluthurathai paarthal , ana...aavanna.. padichathe comics-lathanu maathiri irukku. CBS-in translation padu mosam.athayum nee than panniNAAYA? adutha ithal full B&W . athum Rs.100. aalaiyilla ooril iluppai poo thane sarkkarai. NANDRI. NEE AADUM MANGAATHTHA aattam viraivil vijayanukku puriyum. appo MULLAI THANGARASANIN kathi unakkum varum.

    ReplyDelete
  7. அருமையான முன்னோட்டம். ஸ்கேன் செய்து பதிவிடுவது எவ்வளவு கடினம் என்பதை கண்டுணுர முடிகிறது. புத்தகக்காட்சியில் உங்களைப் பார்த்தும், அடையாளம் தெரியாததால் பேச இயலவில்லை. பிறிதொரு சமயம் சந்திக்கும் வாய்ப்புகிட்டும் என்ற நம்பிக்கை

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails