Dear ComiRades,
கடந்த சில நாட்களாக ஒரே மன அழுத்தம். நம்முடைய சென்னை புத்தக கண்காட்சி குறித்த தொடர் போட்டோ பதிவுகளின் முதல் பதிவாக இந்த பதிவில் புத்தக கண்காட்சி ஆரம்பிக்கும் முன்னர் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து ஒரு பதிவிட்டு இருந்தோம். ஆனால் அதற்க்கு பின்னர் (நிஜம்மாலுமே) நிறைய வேலைகள் வந்து விட்டதால் முதல் நாள் பற்றிய பதிவையோ அல்லது அதற்க்கு பிறகு நடந்த சம்பவங்களை குறித்தோ விளக்கமாக பதிவிட இயலவில்லை.
காமிக்ஸ் குறித்த விஷயம் என்றாலே அதில் தாமதம் வந்து விடும் என்று நண்பர் பயங்கரவாதி டாக்டர் செவன் இன்று காலையில்கூட கிண்டல் அடித்ததால் பொங்கி எழுந்து இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன். புத்தக கண்காட்சியின் ஐந்தாவது நாளன்று முதல் நாளைப்பற்றிய பதிவை இடுவதால் "என்னது, காந்தி செத்துட்டாரா?" என்ற கமெண்ட்டுகளை தவிர்க்க பாருங்கள்.
வழக்கமான மொக்கைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, முடிந்த அளவுக்கு போட்டோக்களை மட்டுமே கொண்ட பதிவாக இந்த தொடர் இருக்கும். ஆகையால் கண்ணுக்கு மட்டுமே விருந்தாக இந்த பதிவுகளை பாருங்கள். ஒவ்வொரு போட்டோவையும் கிளிக் செய்தால் அது வேறொரு விண்டோவில் பெரிதாக காட்சியளிக்கும்.
புத்தக கண்காட்சி ஆரம்பித்த அன்று நடந்த ஒரே குறைபாடு என்னவெனில் அன்று மாலை அலுவலக பணி நிமித்தமாக ஒரு முக்கிய மீட்டிங் இருந்த காரணத்தினால் என்னால் ஆறு மணிக்கு மேலாக அங்கே புக் ஸ்டாலில் இருக்க இயலவில்லை. ஆகையால் முதல் நாள் வந்த நண்பர்களின் போட்டோக்களை இங்கே அப்லோட் செய்ய முடியவில்லை. தோழர்கள் உங்களது போட்டோக்கள் இருந்தால் என்னுடைய மெயில் ஐடிக்கு மின் அஞ்சல் செய்யவும். அவை இங்கே பிரசுரிக்கப்படும் வலையேற்றப்படும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்கள்டைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
ஹையா ரொம்ப நாளைக்கு அப்புறம்
ReplyDeleteMe the 1st...... :))
.
அண்ணாத்தே நம்ம போட்டோவ காணலியே
ReplyDeleteஏதாவது சென்சர் பண்ணிட்டீங்களா ;-))
.
போட்டோவுல இருக்கிற புத்தகங்கள் இன்னமும் இருக்கிறதா அண்ணாத்தே ;-))
ReplyDelete.
தலைவா....காமிக்ஸ் புக் சீக்கிரம் தீர்ந்து போச்சாம்...என்ன பண்றது....? ஆன்லைன்ல வாங்க முடியுமா....?
ReplyDeleteநடக்கட்டும்... நடக்கட்டும்!
ReplyDelete@கோவை நேரம் நண்பரே, நாளைக்கு மறுபடியும் புல்செட் புத்தகங்களை அனுப்புகிறார்கள். வியாழன் முதல் கம்பேக் ஸ்பெஷல் மறுபடியும் கிடைக்கும்.
ReplyDeleteகம்பேக் எடிஷன் புத்தக கண்காட்சியில் எப்போ கிடைக்கும் ? அந்த புத்தகத்துக்காகவே கண்காட்சிக்கு தினமும் வந்துகொண்டிருக்கிறேன்
ReplyDelete@மேவி ..
ReplyDelete//மேவி .. said... 7
கம்பேக் எடிஷன் புத்தக கண்காட்சியில் எப்போ கிடைக்கும் ? அந்த புத்தகத்துக்காகவே கண்காட்சிக்கு தினமும் வந்துகொண்டிருக்கிறேன் //
நண்பரே, இன்று முதல் சென்னை புத்தக கண்காட்சியில் லயன் கம்பேக் ஸ்பெஷல் கிடைக்கும். சுமார் நூற்றைம்பது புத்தகங்கள் இன்று வரும்.
உங்கள் சேவை தொடரட்டும். சென்னையில் லைன் அண்ட் முத்து காமிக்ஸ் எந்த கடைகளில் கிடைக்கும்...
ReplyDelete@Jagan தோழர் ஜகன்,
ReplyDeleteசென்னையில் தற்பொழுது வெறும் புத்தக கண்காட்சியில் மட்டுமே லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் கிடைக்கும். வெகு விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.