டியர் காமிரேட்ஸ்,
கடந்த ஒரு மாதமாக, இன்றைய தினம் தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு மறக்க முடியாத தினமாக இருக்கும் என்று என்னுடைய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். அதற்க்கான காரணம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் கேட்டுக்கொண்டதால் காரணத்தை மட்டும் சொல்லாமல் தவிர்த்து வந்தேன்.
உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரக்கூடிய ஒரு சங்கதியை உங்களிடம் சொல்லிவிட்டு அதனை குறிப்பிட்ட காலம் வரையில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பூட்டு போடுவதை விட கொடுமையான விஷயம் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்களேன், ப்ளீஸ்?
எனிவே, இன்று முதல் வெளிவர துவங்கியுள்ள The Hindu குழுமத்தின் தமிழ் தினசரியை பற்றியதே அந்த தகவல். கடந்த நான்கு மாதங்களாக என் நண்பர்கள் ஒவ்வொருவராக அங்கே சேர்ந்தவண்ணம் இருந்தனர். சில விஷயங்களை பற்றி தீவிரமாக விவாத்தித்தோம். அதைப்பற்றியெல்லாம் பின்னால் எழுதுகிறேன். இப்போது முதன்மையான தகவல்.
The Return of வாண்டுமாமா: பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு வெகுஜன பத்திரிகையில் வாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதை வெளிவந்தது. அதற்க்கு பிறகு அவரது புத்தக தொகுப்புகள் பதிப்பகங்களால் வெளிவந்தாலும் (Special Thanks to வானதி பதிப்பகம்), அனைவரும் படிக்கும் வெகுஜன பத்திரிக்கைகளில் அவரது பங்களிப்பு இல்லாமல் போனது இந்த தலைமுறைக்கு மிகப்பெரிய சாபக்கேடு.
அதனை சரிகட்டும் விதமாக இன்றைய தி ஹிந்து தமிழ் தினசரி பத்திரிகையில் சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி வாண்டுமாமா அவர்களின் புதிய ஸ்ட்ரிப் ஒன்று துவங்கியுள்ளது. நேற்று முகப்புத்தகத்தில் (For the Un initiated, நம்ம Facebook தாங்க!) தினத்தந்தியின் கன்னித்தீவு பற்றி எழுதி ஒரு Hint கொடுத்திருந்தேன்.இந்த ஸ்ட்ரிப் உருவான பின்னணியை சொன்னால்..... வேண்டாம். நம்ம சுயசரிதம் எழுதும்போது அதனைப்பற்றி பேசுவோம், ஒக்கே? இப்போதைக்கு இந்த ஸ்ட்ரிப்பை பார்த்து, படித்து மகிழுங்கள்.
நமது ப்ளாக்கை தொடர்ந்து படித்து வரும் காமிரேட்டுகளுக்கு வாண்டுமாமாவின் பலே பாலுவைப்பற்றி நன்றாக தெரியும். புதியதாக படிப்பவர்கள் இந்த பதிவை படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பலே பாலுவும் பாட்டில் பூதமும் (அறிமுகம் 1 அறிமுகம் 2) என்கிற பிரபலமான அவரது தொடரின் Re Boot வெர்ஷனாக இந்த கதையை பார்க்கிறேன். நண்பர்களுக்கு ஒரு போனசாக இந்த கதையின் இரண்டாவது பகுதியையும் இங்கே அளிக்கிறேன் (இந்த பதிவு இடப்ப்படும்போது இரவு மணி ஒன்று).
தினத்தந்தி - கன்னித்தீவு - முழு வண்ணத்தில்: இன்றுமுதல் ஹிந்து குழுமத்தில் இருந்து புதியதாக தமிழில் தினசரி (தி இந்து ) என்று ஆரம்பாமாகியுள்ளது. இந்தன் வருகையை எதிர்நோக்கி ஏற்கனவே களத்தில் இருக்கும் தினசரிகள் போட்டி போட்டுக்கொண்டு அமர்க்களம் செய்ய துவங்கி விட்டன.
1.தினகரன் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பாகவே எடிட்டோரியலில் இருந்து கன்டென்ட் வரை அனைத்தையும் புதுமையாக பேக்கேஜ் செய்ய துவங்கி விட்டார்கள். தினகரனில் செய்யப்பட்ட மாற்றங்கள் நன்றாகவே இருக்கிறது.
2. தின இதழ் (சென்னை மற்றும் திருவள்ளூர்) இந்த வாரம் முதல் 4 ருபாய் என்று இருந்த விலையை 2 ரூபாயாக குறைத்து இருக்கிறார்கள்.
3. தினகரன் போலவே தினத்தந்தியும் முழுமையான வண்ண தினசரியாக மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். அதன் முதல் வடிவம் நேற்று (ஞாயிற்று கிழமை முதல்).
எது நடக்கிறதோ இல்லையோ, வண்ணத்தில் முதன்முறையாக கன்னித்தீவு தொடர் சித்திரக் கதையை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். 18,920 நாட்கள் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் (51 வருடங்கள் மை லார்ட், 51 வருடங்கள்) முழு வண்ணத்தில் மெருகூட்டப்பட்ட ஓவியத்தரத்துடன் சிறப்பாக இருக்கின்றது. இனிமேல் தினத்தந்தியும் வாங்க வேண்டும் போலிருக்கிறதே?
சில பல சாம்பிள் ஸ்கான்களை கண்டு மகிழுங்கள்: மாலைமதி காமிக்ஸ் கடைசி இதழில் (அக்டோபர் 1976) பின் அட்டையில் இனிமேல் மாலைமதி காமிக்ஸ் மாலைமதி நாவலாக, வார இதழாக வெளிவரும் என்று விளம்பரம் செய்தார்கள். அதனாலேயே அந்த விளம்பரம் இன்றளவும் காமிக்ஸ் ரசிகர்களால் மறக்கப்படாமல் இருக்கிறது.
அதைப்போலவே தினத்தந்தியின் கன்னித்தீவு கதைத்தொடர் முழு வண்ணத்திற்கு மாறுவது சிறப்பு என்றால் அதன் கடைசி கருப்பு வெள்ளை ஸ்ட்ரிப் பிற்காலத்தில் மதிக்கப்படும் (என்று நம்புகிறேன்). ஆகையால் அதனை உங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 15ம் நாளான ஞாயிற்று கிழமை சித்திரக்கதை வரலாற்றில் இடம் பெற்றது எதனால் என்று கேள்வி எழுந்தால், அதற்க்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில் - அன்று முதல் தான் கன்னித்தீவு முழு வண்ணத்தில் வெளிவர ஆரம்பித்தது என்பதே. இதோ அந்த முதல் ஸ்ட்ரிப்:
போனசாக இரண்டாவது ஸ்ட்ரிப்பும்: நண்பர்களே, நேரமின்மையால் பல தகவல்களின் பின்புலத்தை பற்றி எழுதாமல் வெறும் ஸ்கான் மட்டுமே அளிக்கிறேன். படித்து இன்புறுங்கள்:
1. Times Of India – Star Wars
2. Deccan Chronicle – Super Man – Action Comics
3. Deccan Chronicle – TinTin Car Race
4. Deccan Chronicle – Daley’s Comics Book
5.Deccan Chronicle – Disney’s Cartoon Characters
6. Salman Khan Inspires Gaming Character
7. Anifest 2013 – News Update
8. News about early reading Habits
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
வாண்டுமாமாவுக்கு ஒரு வெல்கம்
ReplyDeleteராஜேஷ் கே
வாண்டுமாமாவின் return காமிக்ஸ் வடிவத்தில் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது!
ReplyDeleteDaily ஸ்ட்ரிப் வடிவத்தில் தொடர்கதையாக அமைந்திருப்பது சற்று ஏமாற்றம்தான். ஒருவேளை வாரத்திற்கு ஒரு சிறுகதை என்கிறமாதிரி அமைந்தால் சிறுவர்களுக்கு எளிதாக இருக்கும். மாறாக கன்னித்தீவு மாதிரி தொடர்ந்தால் கொடுமையாகிவிடும்! :D
Thanks for the post King Viswa!
வாண்டு மாமாவுக்கு ...வாழ்த்துகள் ....
ReplyDeleteபட் ....தினமும் ஒரு பத்தி தொடரை படிக்கும் அளவுக்கு பொறுமை இல்லை இந்த கரடிக்கு ....
அதற்கு பதில் வாரம் ஒரு சிறு கதை காமிக்ஸ் வந்தால் நன்றாக இருக்கும் .