டியர் காமிரேட்ஸ்,
இந்த ஞாயிற்று கிழமை முதல் "காமிக்ஸ் டைம்" என்கிற புதிய தொடர் பதிவு ஆரம்பம் ஆகின்றது. இந்த தொடர் பதிவில் தமிழில் தற்போது வந்துக்கொண்டு இருக்கும் சித்திரக்கதை, காமிக்ஸ் வடிவில் வரும் கதைகளின் ஸ்கான்கள் இடம்பெறும்.
இந்த தொடர் பதிவுகளின் நோக்கம் என்னவெனில், மிகவும் அறிய வகையாக மாறிக்கொண்டு இருக்கும் சித்திரக்கதைகளின் தொகுப்பிடமாக இருக்க வேண்டும் என்பதே. மேலும் நமது காமிரேட்டுகளில் பலரும் அயல் நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழில் வெளிவரும் சித்திரக்கதைகளை படிக்க வகை செய்வதும், அவ்வாறு படித்த கதைகளை பின்னாளில் தொகுத்து வைத்துக்கொள்ளவும் இந்த தொடர் உதவும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
தி இந்து - வாண்டு தேசம் By வாண்டுமாமா: நமது ப்ளாக்கை தொடர்ந்து படித்து வரும் காமிரேட்டுகளுக்கு வாண்டுமாமாவின் பலே பாலுவைப்பற்றி நன்றாக தெரியும். புதியதாக படிப்பவர்கள் இந்த பதிவை படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பலே பாலுவும் பாட்டில் பூதமும் (அறிமுகம் 1 அறிமுகம் 2) என்கிற பிரபலமான அவரது தொடரின் Re Boot வெர்ஷனாக இந்த கதையை பார்க்கிறேன்.
டோரா, சோட்டா பீம் என்று பழகிய இன்றைய புதிய தலைமுறைக்கு வாண்டுமாமா என்று ஒருவர் இருப்பதே தெரியாது.இவ்வளவு ஏன்? சென்ற தலைமுறைக்கே அவரைப்பற்றி தெரியாது போது இன்றைய தலைமுறையை குற்றம் சொல்லி பயனில்லை. அந்த குறையை போக்கும் வண்ணம் தி இந்து தினசரி பூச்செண்டு என்கிற பெயரில் அவரது சித்திரக்கதையை வெளியிடுவது மனதிற்கு அளிக்கின்றது. ஊதா கலர் ரிப்பன் பாடல் டிவியில் ஒளிபரப்பாவது,பூதம் மாடர்ன் ட்ரெண்டில் அதுவே இருப்பது போன்றவை இந்த ரீபூட்டின் மீது நம்பிக்கையை அளிக்கிறது.
அதே சமயம் கோகுலம் இதழில் இரண்டு முழு பக்கங்களில் வெளிவந்த சம்பவங்களை வெறும் நான்கே நான்கு கட்டங்களில் எடிட்டியிருப்பது எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வண்ணக்கலவை கொஞ்சம் உறுத்துகிற வகையில் இருப்பதும், ஏழாம் நாள் கடைசி கட்டத்தில் வசன பலூனின் அம்புக்குறி ஆள்மாறி இருப்பது போன்ற விஷயங்கள் இந்த தொடர் அவசரகதியில் ஆரம்பிக்கப்பட்டதை பறைசாற்றுகின்றன.
போகட்டும், விரைவில் இவை களையப்பட்டு சீரான வேகத்தில் இந்த தொடர் சென்று, பலே பாலுவின் பல கதைகளும் (பாட்டில் பூதம்,பறக்கும் டிராயர், மர்ம தீவு) புதியதாக பல கதைகளும் வெளிவந்து நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன். தி இந்து குழுமத்தினர் ஆனந்த விகடன் போல இந்த கதைகளை தொகுத்து ஒரு முழு நீள புத்தகமாகவும் வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த ஸ்கான்களை க்ளிக் செய்தால் அவை தனியாக பெரியதாக வேறொரு பக்கத்தில் ஒப்பன் ஆகும். தெளிவாக படிக்க இது உதவும். இனி கதைக்கு செல்லுங்கள்:
வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 001 வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 002 வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 003 வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 004 வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 005 வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 006 வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 007
தினத்தந்தி - கன்னித்தீவு தொடர்: வண்ணத்தில் முதன்முறையாக கன்னித்தீவு தொடர் சித்திரக் கதையை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். 18,920 நாட்கள் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் (51 வருடங்கள் மை லார்ட், 51 வருடங்கள்) முழு வண்ணத்தில் மெருகூட்டப்பட்ட ஓவியத்தரத்துடன் சிறப்பாக இருக்கின்றது. கருப்பு வெள்ளையுடனான அந்த கடைசி ஸ்ட்ரிப்புடன் இந்த தொடர் பதிவை ஆரம்பிக்கிறேன். கதையை பற்றி கேட்பவர்கள் அய்யம்பாளையத்தாரின் பதிவை ஒருமுறை படித்துவிட்டு வந்து இங்கே தொடருங்கள்.
சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,920 சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,921 சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,922 சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,923 சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,924 சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,925 சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,926 சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,927 சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,928 முதல் மூன்று நாட்கள் வேறு வேறு விதமாக இருந்த அந்த டைட்டில் ஸ்ட்ரிப் பிறகு ஒரே சீராக வருவதை கவனியுங்கள். அதைப்போலவே பின்னணி வண்ணங்களையும் கொஞ்சம் கவனம் செலுத்தி இன்னமும் மெருகூட்ட வாழ்த்துக்கள்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
வாழ்த்துக்கள் அண்ணா! தொடரட்டும் உங்கள் பணி....
ReplyDeleteஎன் எண்ணத்துக்கு இத்தனை அழகாக உயிர் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவரே! வாழ்க!
ReplyDeleteThodarattum ungal pani!
ReplyDeleteபிரம்மாதமான முயற்சி.
ReplyDeleteஇப்போதுதான் பார்த்தேன். தொடருங்கள்
தொடர் முடிந்தவுடன் ஒரு முழு புத்தகமாக டவுன்லோடவும் வசதியாக இருக்கும்
நமது தமிழ் காமிக்ஸ் இப்போது மறுமலர்ச்சி பெற்றுள்ள தருணத்தில் வாண்டுமாமா அவர்களும் புதுப்பொலிவுடன் வண்ணத்தில் வருவது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்
ReplyDelete"கிளம்பிருச்சுய்யா கிளம்பிருச்சு" என்றெல்லாம் வருகிறதே! கதையில் வெகுவாக மாற்றங்கள் செய்திருப்பதாகத் தெரிகிறதே!
ReplyDelete