Pages

Showing posts with label தி இந்து தமிழ் நாளிதழ். Show all posts
Showing posts with label தி இந்து தமிழ் நாளிதழ். Show all posts

Saturday, October 18, 2014

10 Comic Cuts 57-News 57: The Hindu (Tamil) Diwali Special issue – Special Article on Tamil Comics

dear

Dear ComiRades,

welcome back to TCU. As the festival season is gearing up, so is TCU with lots and lots of posts – both informative and initiative. Well, as the talk of initiation rings up, here is our new series of posts: சித்திரக்கதை செய்திகள் .

However, this article is all about The Hindu news paper (Tamil Edition)’s diwali special issues in which celebrated author S.Ramakrishnan has penned a nostalgic post on Tamil comics and the need to index them.

What he has not taken into account is that, we have already taken the initiative and almost, almost indexed all the comics books printed in Tamil language. Well, that’s news for him and usual story for our regular readers.

The Hindu (Tamil) Diwali Special Issue – Comics Article by S .Ramakrishnan

 

1

2

3

4

5

6

Most of these points were already handled by him in his online portal some 5 years ago. The news about the library and his recalling of the stories with his friends were new and was joyful to read.

Thank you, Sir.

Well, that’s all for this post and  As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

Monday, June 23, 2014

8 Comic Cuts 55 – News 55: Vandu Mama Tribute in Kungumam, New Wave of Tamil Comics in DC & Nostalgia Post in The Hindu

Dear ComiRades,

Welcome back to TCU. This week has been a hectic one for yours truly. Personal commitments and official work both took their toll & hence, instead of a regular post, we are going to have a self explanatory post here.

What i mean by self explanatory is, these posts do not require any other add on information. The precisely is the reason why they are titled as self explanatory post.

1. Kungumam Tamil Weekly – Vandu Mama Tribute (23rd June 2014 issue)

Kungumam Tamil Weekly Dated 30th June 2014 On Stand 23rd June 2014 Page No 122 VanduMama Story

2. Deccan Chronicle – Article on the emergence of Graphic Novels & TCU Books Launch (23rd June 2014)

Deccan Chronicle Chennai Chronicle Dated 23rd June 2014 TCU Story

3. The Hindu (Tamil) Nostalgia Post on Tamil Comics (22nd June 2014)

22nd june 2014 the hindu tamil daily page no 08 steel claw memories

22nd june 2014 the hindu tamil daily page no 01 steel claw memories box news

The beauty of this particular article is that, there was a linker headline for this. This is a lovely gesture from the editorial of The Hindu. Thanks, Team.

Well, that’s all for this post and  As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

Tuesday, June 17, 2014

25 VanduMama (21 April 1925 - 12 June 2014) வாண்டுதேசத்தின் மாமன்னர்

Dear ComiRades,

Welcome back to TCU. As Yours truly was gearing up for the launch of “TCU Books” publication, a shocking news was awaiting: Vandu Mama: Greatest Ever Story Teller in Tamil For Children of All Ages passed away. Here is a tribute paid by Yours truly & this appeared in The Hindu (Tamil Daily news paper) on Sunday, 15th June 2014.

வாண்டுதேசத்தின் மாமன்னர்

தமிழர்கள் பலரது இளம்பிராயக் கற்பனைகளை, சாகசக் கனவுகளை வார்த்தைகளால் வடிவமைத்தவர் வாண்டுமாமா (21 ஏப்ரல் 1925 - 12 ஜூன் 2014). சித்திரக் கதைகள், சிறுவர் நாவல்கள், சாகசக் கதைகள் என்று பலதளங்களில் இயங்கியவர் அவர். படிப்பவர்களைச் சுண்டியிழுக்கும் வசீகரம் கொண்டது அவருடைய எழுத்து நடை. சூரியனுக்குக் கீழே உள்ள எதைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதக் கூடிய வித்தைக்காரர் அவர். அறிவியல் என்றாலே காத தூரம் ஓடிய மாணவர்கள்கூட ரசித்துப் படிக்கும் வகையில் அறிவியல் தொடர்பான கட்டுரைகளையும் குறிப்புகளையும் சுவையுடன் வழங்கியது அவரது தனிச் சிறப்பு. அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் குடிமக்கள் அனைவரும் குழந்தைகளாகத்தான் இருந்தனர். குறைந்தபட்சம் குழந்தை மனது கொண்டவர்களாக!

The Hindu Tamil Daily News Paper Dated Sunday 15th June 2014 Page 1 Headlines for VM Story

புதுக்கோட்டை அருகில் இருக்கும் அரிமழம் கிராமத்தில் 1925-ம் ஆண்டு பிறந்த வி.கிருஷ்ண மூர்த்திதான், பின்னாளில் வாண்டுமாமா ஆனார். திருச்சி லால்குடி திண்ணியம் கிராமத்தில் வளர்ந்த இவர், பாரதி என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். சென்னையில் நடந்த கையெழுத்துப் பத்திரிகைகள் மாநாட்டில் இவரது பத்திரிகை முதல் பரிசு பெற்றது.

கலைமகள் இதழில் வெளியான குல்ருக் என்ற கதையின் மூலம் பள்ளியில் படிக்கும்போதே எழுத்தாளர் ஆகிவிட்டார். குடும்பச் சூழ்நிலை காரண மாகக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் அப்போதே திருச்சியில் இருந்த பல நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள், பிரசுரகர்த்தர்களின் புத்தக அட்டை, உள்பக்கப் படங்கள் வரையும் கமர்ஷியல் ஆர்ட்டிஸ்ட்டாகச் செயல்பட்டார். சென்னையில் சில காலம் இருந்துவிட்டு, திருச்சிக்கே திரும்பி சிவாஜி இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் பின்னர், வானவில் என்ற பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்தார். இந்த வானவில்தான் வாண்டுமாமா உருவாக்கிய முதல் சிறுவர் இதழ். அதன் பின்னர் மின்னல், சிவாஜி சிறுவர் மலர், கிண்கிணி, அரு. இராமநாதனின் பத்திரிகைகளான கலைமணி, காதல் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தார்.

அரு. இராமநாதனின் காதல் பத்திரிகை சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது, இவரும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் அரு. இராமநாதனுடன் ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தால் மறுபடியும் திருச்சிக்கே திரும்பி ஒரு பள்ளியில் நூலகராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர், சென்னைக்குத் திரும்பி விகடன், குமுதம் என்று பல பத்திரிகைகளில் முயன்று, பிறகு கல்கி அதிபர் சதாசிவத்தைச் சந்தித்தார். இவரது திறமையைக் கண்டுவியந்த சதாசிவம், உடனடியாக வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்.

விற்பனைப் பிரிவு குமாஸ்தாவாகத்தான் கல்கியில் சேர்ந்தார். ஆனால், வெகுவிரைவில் ஆசிரியர் குழுவில் சேர்க்கப்பட்டார். பின்னர், சிறுவர் விருந்து என்ற பல்சுவைப் பகுதியைக் கல்கியில் கொண்டுவந்தார். பல ஆண்டுகள் கல்கியில் பல சித்திரக் கதைகளையும், சிறுவர் கதைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார். அப்போது, கல்கி நிறுவனம், கோகுலம் என்ற சிறுவர் பத்திரிகையை ஆரம்பித்தது. சிறுவர் இலக்கியப் பத்திரிகைகளில் இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. அதுவரை ஒரு சிறிய வட்டத்திலேயே நடத்தப்பட்டுவந்த சிறுவர் பத்திரிகை, முதன்முறையாக ஒரு பெரிய நிறுவனத்தால் இந்தியாவெங்கும் சிறப்பாக வெளியிடப்பட்டது.

கோகுலம் இதழில்தான் வாண்டுமாமா தன்னுடைய புகழ்பெற்ற கதாபாத்திரங்களாகிய பலே பாலு, சமத்து சாரு போன்றவற்றை உருவாக் கினார். தொழிலாளர் பிரச்சினை காரணமாக கல்கி இதழ் வெளிவருவது நின்றபோது, குங்குமம் பத்திரிகையில் சேர்ந்தார். மறுபடியும் கல்கி-கோகுலம், பின்னர் தினமணிக்கதிர் என்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவர், பணி ஓய்வுபெற்ற பின்னர் கேரளத்தின் பூம்பட்டா நிறுவனம் வெளியிட்ட பூந்தளிர் இதழின் நிர்வாக ஆசிரியராகச் சேர்ந்தார். பூந்தளிர் அமர் சித்திரக் கதை, பைகோ கிளாசிக்ஸ் போன்ற இதழ்களையும் திறம்பட நிர்வகித்தார் வாண்டுமாமா. இவற்றில் வெளிவந்த கதைகளை மொழிமாற்றம் செய்ததும் இவரே. அந்த இதழ்களின் நிறுவனர் தினேஷ் பையின் மறைவுக்குப் பின்னர், பூந்தளிரும் நின்றுபோனது. பிற்காலத்தில் வாண்டுமாமாவே சொந்தமாகப் பூந்தளிரை வெளியிட்டார்.

புற்றுநோய் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளாகச் சரியாகப் பேச முடியாமல் இருந்தார் வாண்டுமாமா. அவரது எண்ணங்களை சைகைகள் மூலமே புரிந்துகொண்டு செயல்பட்ட அவருடைய மனைவி சாந்தா, கடந்த ஆண்டு மறைந்த பின்னர், மனதளவில் மிகவும் தளர்ந்திருந்த வாண்டுமாமா வியாழக்கிழமை இரவு காலமானார். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த வாண்டுமாமா, பொருளாதாரரீதியான சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது ஒரு துயரம். வாண்டுமாமாவின் இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது என்பது சம்பிரதாயமான வாக்கியம் அல்ல. நம்முள் உயிர்ப்புடன் இருக்கும் இளம்பிராயத்தின் விசும்பல் அது.

பின்குறிப்பு: வாண்டுமாமாவின் சித்திரக் கதைகளை ‘தமிழ் காமிக்ஸ் உலகம்’ காப்புரிமை பெற்று விரைவில் வெளியிடவிருக்கிறது.

The Hindu Tamil Daily News Paper Dated Sunday 15th June 2014 Page 8 VanduMama RIP News

வாண்டுமாமா விட்டுச்சென்ற செய்தி:

வாழ்க்கைதான் என்னைக் குழந்தை எழுத்தாளனாக ஆக்கியது. ஓவியனாக வேண்டும் என்றுதான் இளம் வயதில் ஆசைப்பட்டேன். அதுதான் என் கனவாக இருந்தது. அதே கனவுடன்தான் பத்திரிகைத் துறையிலும் நுழைந்தேன்.

வானவில் பத்திரிகைக்காகத்தான் நான் வாண்டுமாமா ஆனேன்.

குழந்தைகள் இலக்கியம் என்பது ஒரு தனி உலகம். பெரியவர்களுக்கான உலகின் தர்க்க நியாயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது அது. குழந்தை எழுத்தாளன் ஒருவகையில் தானே குழந்தையாகிவிடுகிறான். காலமெல்லாம் குழந்தையாக இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்!

இந்தக் காலக் குழந்தைகள் பாவம் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர்களுக்கென்று எழுத யாருமே இல்லையே. நவீன சாதனங்களின் வளர்ச்சி வரவேற்கக் கூடியதுதான். எனினும், அவைதான் வாழ்க்கை என்றால் அது என்ன வாழ்க்கை?

உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். படிக்கச் சொல்லுங்கள். கதைப் புத்தகங்கள் வாங்கிக்கொடுங்கள்.

The Hindu Tamil Daily News Paper Dated Sunday 15th June 2014 Page 8 VanduMama RIP News Box News After the tribute got published in the newspaper, many letters also reached and got published in the letters to the editor page. You can also contribute by mailing to editpage@thehindutamil.co.in  Here are some:

The Hindu Tamil Daily News Paper Dated Sunday 16th June 2014 Page 6 VanduMama RIP News Letters to the Editor

As usual, post your comments in the comments section. For those who want to Pen their thoughts in Tamil, Kindly Use the Option Provided in the Widget section or Click Here.

Thanks & Regards, 
King Viswa.

Monday, September 30, 2013

10 காமிக்ஸ் டைம் 2: Week 39 வாண்டு தேசம் & கன்னித் தீவு

டியர் காமிரேட்ஸ்,

சென்ற வாரம் முதல் துவங்கப்பட்ட இந்த காமிக்ஸ் டைம் பகுதி தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட துவங்கியுள்ளது. அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நேரிலும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து என்னுடைய தொலைபேசி எண்ணை பலரிடமும் கேட்டு, முயற்சியில் மனம் தளராமல் நம்பரை பெற்று பின்னிரவுப் பொழுதில் பேசிய நண்பருக்கும் சிறப்பு நன்றி.

வாண்டு மாமாவின் வாண்டு தேசம் - Week 2: முதல் வாரத்தில் அறிமுகம் ஆன பாட்டில் பூதம் ஷெர்தில் தன்னுடைய அறிமுகத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக்கொண்ட வாரம் இது. ஆகையால் கதையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. ஆனால் கதாபாத்திரங்களின் அறிமுகம் கதைக்கு அவசியம் என்பது உங்களுக்கு தெரியாதது அல்லவே?

முதலில் பலே பாலுவிடம் அறிமுகம் ஆன ஷெர்தில், பின்னர் அவனுடைய பெற்றோர்களிடமும், பிறகு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடமும் அறிமுகம் ஆவதோடு இந்த வாரம் கழிந்தது. முதல் சாகசமாக பாலுவும் பூதமும் கடற்கரைக்கு செல்கிறார்கள். அவர்களின் அட்டகாசங்கள் வரும் வாரத்தில் ரசிக்கும்படியாக இருக்கும் என்று நம்புவோம்.

இந்த ஸ்கான்களை க்ளிக் செய்தால் அவை தனியாக பெரியதாக வேறொரு பக்கத்தில் ஒப்பன் ஆகும். தெளிவாக படிக்க இது உதவும். இனி கதைக்கு செல்லுங்கள்.

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 008Vaandu Desam 008 Monday 23rd Sept 2013 The Hindu Tamil 

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 009Vaandu Desam 009 Tuesday 24th Sept 2013 The Hindu Tamil

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 010Vaandu Desam 010 Wednesday 25th Sept 2013 The Hindu Tamil

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 011Vaandu Desam 011 Thursday 26th Sept 2013 The Hindu Tamil

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 012Vaandu Desam 012 Friday 27th Sept 2013 The Hindu Tamil

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 013Vaandu Desam 013 Saturday 28th Sept 2013 The Hindu Tamil

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 014Vaandu Desam 014 Sunday 29th Sept 2013 The Hindu Tamil

தினத்தந்தி - கன்னித்தீவு தொடர்: கன்னித்தீவில் இருந்து வந்த மறையும் மாயத்தன்மை கொண்ட மந்திரவாதியிடம் இருந்து நாட்டையும், லைலாவையும் காப்பாற்றிய சிந்துபாத், அந்த நாட்டு இளவரசியின் திருமணத்தில் கலந்துகொண்டு பின்னர் அந்த நாட்டை விட்டு கன்னித்தீவை நோக்கி கிளம்புகிறார். இவரது சேவையில் மனம் மகிழ்ந்த அந்நாட்டு மன்னர், சிந்துபாத் பயணிக்க ஒரு கப்பலை அளிக்கிறார். கப்பலில் அந்நாட்டில் இருந்து கிளம்பும் சிந்துபாத், லைலாவிடம் கன்னித்தீவு நோக்கி பயணிப்பதை சொல்கிறார். அப்போது கேப்டன் (அட, இவரு வேற கேப்டனுங்க- அதாவது கப்பல் கேப்டன் / தலைவர்) வந்து எங்கே செல்ல வேண்டும் என்று கேட்கிறார்.

கன்னித்தீவு எங்கே இருக்கிறது என்று கப்பல் தலைவருக்கும் தெரியாமல் போக, சிந்துபாத் திகைக்கிறார். அப்போது லைலா கப்பலில் வரைபடம் (மேப்) இருக்கிறதா? என்று வினவ, தலைவரும் வரைபடத்தை லைலாவிடம் கொடுக்கிறார்.

இந்த ஸ்கான்களை க்ளிக் செய்தால் அவை தனியாக பெரியதாக வேறொரு பக்கத்தில் ஒப்பன் ஆகும். தெளிவாக படிக்க இது உதவும். இனி கதைக்கு செல்லுங்கள்.

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,929Kanni Theevu 18929 23rd Sept 2013 Monday

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,930Kanni Theevu 18930 24th Sept 2013 Tuesday

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,931Kanni Theevu 18931 25th Sept 2013 Wednesday

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,932Kanni Theevu 18932 26th Sept 2013 Thursday

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,933Kanni Theevu 18933 27th Sept 2013 Friday

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,934Kanni Theevu 18934 28th Sept 2013 Saturday

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,935Kanni Theevu 18935 29th Sept 2013 Sunday

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Monday, September 23, 2013

6 காமிக்ஸ் டைம் 1: Week 38 வாண்டு தேசம் & கன்னித் தீவு

டியர் காமிரேட்ஸ்,

இந்த ஞாயிற்று கிழமை முதல் "காமிக்ஸ் டைம்" என்கிற புதிய தொடர் பதிவு ஆரம்பம் ஆகின்றது. இந்த தொடர் பதிவில் தமிழில் தற்போது வந்துக்கொண்டு இருக்கும் சித்திரக்கதை, காமிக்ஸ் வடிவில் வரும் கதைகளின் ஸ்கான்கள் இடம்பெறும்.

இந்த தொடர் பதிவுகளின் நோக்கம் என்னவெனில், மிகவும் அறிய வகையாக மாறிக்கொண்டு இருக்கும் சித்திரக்கதைகளின் தொகுப்பிடமாக இருக்க வேண்டும் என்பதே. மேலும் நமது காமிரேட்டுகளில் பலரும் அயல் நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழில் வெளிவரும் சித்திரக்கதைகளை படிக்க வகை செய்வதும், அவ்வாறு படித்த கதைகளை பின்னாளில் தொகுத்து வைத்துக்கொள்ளவும் இந்த தொடர் உதவும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

தி இந்து - வாண்டு தேசம் By வாண்டுமாமா: நமது ப்ளாக்கை தொடர்ந்து படித்து வரும் காமிரேட்டுகளுக்கு வாண்டுமாமாவின் பலே பாலுவைப்பற்றி நன்றாக தெரியும். புதியதாக படிப்பவர்கள் இந்த பதிவை படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பலே பாலுவும் பாட்டில் பூதமும் (அறிமுகம் 1 அறிமுகம் 2) என்கிற பிரபலமான அவரது தொடரின் Re Boot வெர்ஷனாக இந்த கதையை பார்க்கிறேன்.

டோரா, சோட்டா பீம் என்று பழகிய இன்றைய புதிய தலைமுறைக்கு வாண்டுமாமா என்று ஒருவர் இருப்பதே தெரியாது.இவ்வளவு ஏன்? சென்ற தலைமுறைக்கே அவரைப்பற்றி தெரியாது போது இன்றைய தலைமுறையை குற்றம் சொல்லி பயனில்லை. அந்த குறையை போக்கும் வண்ணம் தி இந்து தினசரி பூச்செண்டு என்கிற பெயரில் அவரது சித்திரக்கதையை வெளியிடுவது மனதிற்கு  அளிக்கின்றது. ஊதா கலர் ரிப்பன் பாடல் டிவியில் ஒளிபரப்பாவது,பூதம் மாடர்ன் ட்ரெண்டில் அதுவே இருப்பது போன்றவை இந்த ரீபூட்டின் மீது நம்பிக்கையை அளிக்கிறது.

அதே சமயம் கோகுலம் இதழில் இரண்டு முழு பக்கங்களில்  வெளிவந்த சம்பவங்களை வெறும் நான்கே நான்கு கட்டங்களில் எடிட்டியிருப்பது எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வண்ணக்கலவை கொஞ்சம் உறுத்துகிற வகையில் இருப்பதும், ஏழாம் நாள் கடைசி கட்டத்தில் வசன பலூனின் அம்புக்குறி ஆள்மாறி இருப்பது போன்ற விஷயங்கள் இந்த தொடர் அவசரகதியில் ஆரம்பிக்கப்பட்டதை பறைசாற்றுகின்றன.

போகட்டும், விரைவில் இவை களையப்பட்டு சீரான வேகத்தில் இந்த தொடர் சென்று, பலே பாலுவின் பல கதைகளும் (பாட்டில் பூதம்,பறக்கும் டிராயர், மர்ம தீவு) புதியதாக பல கதைகளும் வெளிவந்து நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன். தி இந்து குழுமத்தினர் ஆனந்த விகடன் போல இந்த கதைகளை தொகுத்து ஒரு முழு நீள புத்தகமாகவும் வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த ஸ்கான்களை க்ளிக் செய்தால் அவை தனியாக பெரியதாக வேறொரு பக்கத்தில் ஒப்பன் ஆகும். தெளிவாக படிக்க இது உதவும். இனி கதைக்கு செல்லுங்கள்:

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 001Vaandu Desam 001 Monday 16th Sept 2013 The Hindu வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 002Vaandu Desam 002 Tuesday 17th Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 003Vaandu Desam 003 Wednesday 18th Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 004Vaandu Desam 004 Thursday 19th Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 005Vaandu Desam 005 Friday 20th Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 006Vaandu Desam 006 Saturday 21st Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 007Vaandu Desam 007 Sunday 22nd Sept 2013 The Hindu Tamil 

தினத்தந்தி - கன்னித்தீவு தொடர்: வண்ணத்தில் முதன்முறையாக கன்னித்தீவு தொடர் சித்திரக் கதையை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். 18,920 நாட்கள் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் (51 வருடங்கள் மை லார்ட், 51 வருடங்கள்) முழு வண்ணத்தில் மெருகூட்டப்பட்ட ஓவியத்தரத்துடன் சிறப்பாக இருக்கின்றது. கருப்பு வெள்ளையுடனான அந்த கடைசி ஸ்ட்ரிப்புடன் இந்த தொடர் பதிவை ஆரம்பிக்கிறேன். கதையை பற்றி கேட்பவர்கள் அய்யம்பாளையத்தாரின் பதிவை ஒருமுறை படித்துவிட்டு வந்து இங்கே தொடருங்கள்.

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,920Kanni Theevu 18920 14th Sept 2013 Saturday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,921Kanni Theevu 18921 15th Sept 2013 Sunday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,922Kanni Theevu 18922 16th Sept 2013 Monday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,923Kanni Theevu 18923 17th Sept 2013 Tuesday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,924Kanni Theevu 18924 18th Sept 2013 Wednesday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,925Kanni Theevu 18925 19th Sept 2013 Thursday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,926Kanni Theevu 18926 20th Sept 2013 Friday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,927Kanni Theevu 18927 21st Sept 2013 Saturday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,928Kanni Theevu 18928 22nd Sept 2013 Sunday முதல் மூன்று நாட்கள் வேறு வேறு விதமாக இருந்த அந்த டைட்டில் ஸ்ட்ரிப் பிறகு ஒரே சீராக வருவதை கவனியுங்கள். அதைப்போலவே பின்னணி வண்ணங்களையும் கொஞ்சம் கவனம் செலுத்தி இன்னமும் மெருகூட்ட வாழ்த்துக்கள்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails