டியர் காமிரேட்ஸ்,
ஏற்கனவே அறிவித்தபடி நேற்றுமுதல் நமது வலைதளத்தில் இந்த சித்திரக்கதை செய்திகள் என்ற பகுதி தொடர்கிறது. இப்பகுதியில் அன்றாடம் நமது சித்திரக்கதை மற்றும் அதனை சார்ந்த செய்திகள் இடம்பெறும்.உங்களது வரவேற்ப்பை பொருத்து இப்பகுதி தொடர்ந்து இயங்கும்.
இப்பகுதியில் இடம்பெறப்போகும் செய்திகள் ஏற்கனவே அன்றைய தேதியில் காமிக் கட்ஸ் என்ற வாட்ஸ்-அப் குழுமத்தில் பகிரப்பட்டவையே. நீங்களும் இந்த குழுமத்தில் இணைய வேண்டுமென்றால் உங்களது முழுப்பெயர், நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் உங்களது செல்போன் எண் ஆகிய மூன்றையும் tamilcomicsulagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
17th October 2014: Centenary Day of Jerry Siegel – Co Creator of Superman & The Spider
இன்று ஒர் மகத்தான கதாசிரியரின் நூற்றாண்டு தினமாகும். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இன்றுதான் ஜெர்ரி சீகல் பிறந்தார். இவர்தான் சூப்பர்மேனின் சக-ஸ்ருஷ்டிகர்த்தா. இவரும் ஜோ ஷுஷ்டரும் சேர்ந்துதான் 1937-ல் உலகின் முதல் சூப்பர் ஹீரோவை உருவாகினார்கள்.
ஆனால் தமிழ் காமிக்ஸ் உலகின் நூற்றாண்டு நாயகனாக அறிவிக்கப்பட்ட ஸ்பைடரின் பெரும்பாலான கதைகளை எழுதியவர் இவர்தான்.
குற்ற சக்ரவர்த்தி, வலை மன்னன் என்றெல்லாம் பல பெயரில் அழைக்கப்படும் ஸ்பைடர் உருவாக்கப்பட்டடு என்னவோ Ted Cowan என்ற எழுத்தாளரால் தான். ஆனால் முதல் இர்ண்டு கதைகளுக்கு பிறகு (ஸ்பைடர் படை, மீண்டும் ஸ்பைடர்) அவர் இந்த தொடரை விட்டு விலகிவிட இவர்தான் ஸ்பைடரின் அடுத்தடுத்த கதைகளை நமக்கெல்லாம் விருந்தாக படைத்தார். மிஸ்டர் மர்மம் தான் இவர் முதலில் எழுதிய கதை.
நூற்றாண்டு நாயகனுக்கு ஒரு ராயல் சல்யூட்.
பின் குறிப்பு: அதென்ன தமிழ் காமிக்ஸ் உலகின் நூற்றாண்டு நாயகன் என்று சிலர் கேட்பார்கள். For those who came in Late, 1999 ஆம் ஆண்டின் இறுதியில் லயன் காமிக்ஸ் எடிட்டர் ஒரு போட்டியை அறிவித்து இருந்தார். அதாவது தமிழில் வெளியான காமிக்ஸ் கதைகளில் யார் மக்களின் மனங்கவர்ந்தவர் என்று. அந்த போட்டியின் முடிவில் அதிக ஓட்டுக்கள் பெற்றது ஸ்பைடரே என்று தெரியவந்தாலும், கள்ள வோட்டு போட்டே ஸ்பைடரை ஜெயிக்க வைத்த ஒரு ரசிகரால் போட்டியின் முடிவுகள் மறுபரிசீலனையின்றி தள்ளி வைக்கப்பட்டது.
இந்தாருங்கள் அது பற்றிய ஸ்கான்கள்:
மற்றபடி ஸ்பைடரை பற்றி ஆடி அந்தம் அறியவும், ஸ்பைடரின் இதுவரை வெளிவந்த கதைகளின் விவரங்கள் அறியவும், அந்த புத்தகங்களின் அட்டைப்படங்களை காண்வும் இங்கே செல்லவும்:
http://tamilcomicsulagam.blogspot.in/2010/08/spider-millennium-hero-of-tamil-comics.html
பின் குறிப்பு: அமெரிக்காவில் ஸ்பைடரை அறிமுகம் செய்ய எண்ணிய டைட்டன் புக்ஸ் நிறுவனம் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. ஆனால் இந்த புத்தகத்துக்கு ஸ்பைடர் என்று பெயரிட முடியவில்லை. ஏற்கனவே அமெரிக்காவில் The Spider என்ற பெயரில் ஒரு நாவல் ஹீரோ இருந்ததால் இந்த புத்தகத்தின் தலைப்பு The King of Crooks என்று மாற்றப்பட்டது. இந்த புத்தகம் இப்போதும்கூட அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்பைடர் வெறியர்கள் வாங்கலாம்.
17th October 2014: 94th Birth Anniversary of John Prentice – Artist of Rip Kirby for 43 Years
இன்று மற்றுமொரு மகத்தான காமிக்ஸ் நாயகனின் பிறந்த நாளும்கூட. 94 ஆண்டுகளுக்கு முன்பாக இன்றுதான் ஜான் ப்ரெண்டிஸ் பிறந்தார். இவர் தன்னுடைய 20-ஆவது வயதிலேயே இரண்டாம் உலகப்போர் காரணமாக ராணுவத்தில் சேர்ந்து 7 ஆண்டுகள் ராணுவ சேவை செய்தார். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய வரலாற்று விஷயம் ஒன்று இருக்கிறது – பேர்ல் ஹார்பர் சம்பவத்தின்போது இவர் அங்கேதான் இருந்தார். அதை நேராக பார்த்வர்களுல் இவரும் ஒருவர்.
1946ல் ராணுவ சேவையிலிருந்து வெளியேறி தனக்கு பிடித்தமான காமிக்ஸ் துறையில் நுழைந்து ரிப் கிர்பியின் ஸ்ருஷ்டிகர்த்தாவான Alex Raymond இடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். பின்னர் 1956ஆம் ஆண்டு அலெக்ஸ் ரேமண்டின் அகால மரணத்துக்கு பின்னர் இவர் முழுநேர ரிப் கிர்பி ஓவியராக நியமனம் செய்யப்பட்டார்.
அது முதல் 1999 வரை (ரிப் கிர்பி தொடர் முடிந்த வரைக்கும்) இவர்தான் அந்த தொடரை வரைந்தார். 43 ஆண்டுகள் ஒரே தொடரை வரைந்தவர் இவராகவே இருக்கக்கூடும். நம்ம தினத்தந்தி கன்னித்தீவு தொடரைக்கூட பலபேர் வரைந்தனர். ஆனால் இத்தொடரை பெரும்பாலும் இவரே முழுமையாக வரைந்தார்.
அது சரி, 1999 ஆம் ஆண்டு ஏன் ரிப் கிர்பி தொடர் நிறுத்தப்பட்டது என்றுதானே கேட்கிறீர்கள்? அந்த ஆண்டுதான் ஜான் ப்ரெண்டிஸ் காலமானார்.
John Prentice ன் ஓவியத்தால் மற்றுமொரு வரலாற்று சம்பவமும் நடந்தது. இவரது ஓவியங்களால் ரிப் கிர்பி கிட்டதட்ட ஒரு அமெரிக்க ஹீரோவாகவே பாவிக்கப்பட்டு New York Police Department ல் ஒரு கௌரவ போலிசாராக சேர்க்கப்பட்டார்.
இதைவிட வேறென்ன மரியாதை ஒரு கலைஞனுக்கு கிடைத்துவிட போகிறது?
17th Oct 2014: Modesty Blaise – 19th Daily Strip The Killing Ground Completed in 1970
மாடஸ்டி ப்ளைசி கதைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதை இன்றுதான் 44 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவடைந்தது. அது என்ன முக்கியத்துவம் என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.
மாடஸ்டியின் கதை லண்டனில் இருந்து வெளிவரும் The Evening Standard பத்திரிக்கையில் தினசரி காமிக்ஸ் தொடராக ஆரம்பித்த வருடம் 1963. அப்போது அந்த கதைக்கு ஓவியம் வாரைந்தவர் ஜிம் ஹோல்டவே. இவரும் மாடஸ்டியின் கதாசிரியர் பீட்டர் ஓ டெனெல்லும் மிகச்சிறந்த நண்பர்கள். ஆனால் 1970-ஆம் ஆண்டு மார்ச் மாதம் The War Lords of Phoenix என்ற தொடருக்கு ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோதே ஜிம் மரணமடைய, பாதியில் அந்த தொடருக்கு ஓவியராக நியமிக்கப்பட்டவர்தான் ஜார்ஜ் ஏ ரொமேரோ.
ஒரு சிறிய இடைச்செருகல்: இந்த The War Lords of Phoenix என்ற கதை தமிழில் திகில் நகரம் டோக்கியோ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதன் Strip No 2099 (Dated 17th March 1970) முதல் ரொமேரோ தான் வரைந்தார். நமது லயன் காமிக்சில் இது 37 ஆவது பக்கத்தில் இரண்டாவது வரிசையில் இருக்கும் கட்டம். புத்தகம் கைவசம் இருப்பவர்கள் ஓவியமுறையில் மாற்றம் இருப்பதை கூர்ந்து கவனிக்கவும்.
இப்படியாக, ரொமேரோ பாதியில் அந்த கதையை தொடர்ந்து பின்னர் வெற்றிகரமாகவும் முடித்தார். அதன்பின்னர் ரொமேரோ முழுமையாக ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை வரைந்த முதல் மாடஸ்டி கதைதான் இந்த Willie – The Djinn.
இந்த கதையின் தலைப்பு ஏன் இப்படி இருக்கிறது என்றால், கதைப்படி அரபு மன்னர் ஒருவரை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் நமது சாகச ஜோடி மன்னரின் பெண்ணை அரண்மனையில் இருந்து காப்பாற்ற வேண்டியபோது ஒரு சம்பவம் நடக்கும்.
அதாவது பயந்து போய் இருந்த அந்த குழந்தை, தன்னிடம் இருக்கும் மோதிரத்தை மூன்று முறை தேய்த்து ஒரு பூதம் வந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று மோதிரத்திடம் கேட்க, சரியாக அதே நேரம் வில்லி ஜன்னல் மூலம் அறையில் நுழைய, அந்த பெண் வில்லியை பூதம் என்று நினைத்து மகிழ்கிறாள். அடுத்து என்ன நடந்தது என்பது மிகவும் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட இந்த கதை 44 ஆண்டுகளுக்கு முன்பு இன்றுதான் முடிந்தது.
Story Title: Willie The Djinn
Author: Peter o Donnel
Artist: Romero
Starting Date: Monday, 01st June 1970
Finishing Date: Saturday, 17th October 1970
Total No of Strips: 120
தமிழில்:
வெளியீட்டு எண்: லயன் காமிக்ஸ் 102 (7 ஆவது ஆண்டு மலர்)
வெளியான மாதம்:ஜூலை 1994
தலைப்பு: மந்திர மண்ணில் மாடஸ்டி
மொழியாக்கம்: எஸ் விஜயன்
ராணி காமிக்ஸில் வெளியான புரட்சிப்பெண் ஷீலா கதாபாத்திரம் (Axa) ரொமேரோவின் ஓவிய கைவண்ணமே.
தேவையுள்ள பின் குறிப்பு: மாடஸ்டி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள, அவரது கதைகளின் அட்டைப்படங்களை காண, இந்த பதிவை படியுங்கள்: http://tamilcomicsulagam.blogspot.in/2010/06/modesty-blaise-arguably-best-comics.html
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
நான் இதுவரை அறிந்திராத தகவல்கள். நன்றி நண்பரே.!
ReplyDeletegood post friend! thanks for translator link!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅடடா! நல்ல தகவல்கள் பல, சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவகையான பிரம்மிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி நண்பரே
ReplyDelete