டியர் காமிரேட்ஸ்,
நேற்று ஏற்கனவே அறிவித்தபடி இன்றுமுதல் இந்த சித்திரக்கதை செய்திகள் என்ற புதிய பகுதி துவங்குகிறது. இப்பகுதியில் அன்றாடம் நமது சித்திரக்கதை மற்றும் அதனை சார்ந்த செய்திகள் இடம்பெறும்.உங்களது வரவேற்ப்பை பொருத்து இப்பகுதி தொடர்ந்து இயங்கும்.
இப்பகுதியில் இடம்பெறப்போகும் செய்திகள் ஏற்கனவே அன்றைய தேதியில் காமிக் கட்ஸ் என்ற வாட்ஸ்-அப் குழுமத்தில் பகிரப்பட்டவையே. நீங்களும் இந்த குழுமத்தில் இணைய வேண்டுமென்றால் உங்களது முழுப்பெயர், நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் உங்களது செல்போன் எண் ஆகிய மூன்றையும் tamilcomicsulagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
16th October 2014: 96th Birthday of Henri Vernes – Creator of Bob Morane (சாகச வீரர் ரோஜர்)
இன்று நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒருவர் தன்னுடைய சென்சுரியை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறார். ஹென்ரி வெர்னே(ஸ்) என்ற இந்த ஜீனியஸ் தான் சாகச வீரர் ரோஜர் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர். அண்ணனுக்கு ஒரு ராயல் சல்யூட்.
இவரது வாழ்க்கை மிகவும் வித்தியாசமான, வியக்க வைக்கும் ஒன்றாகும். தாய் தந்தையரை பிரிந்து, தாத்தா பாட்டியுடன் சிறுவயதை கழித்த இவர் பதினாரு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கசாப்பு கடையில் வேலைக்கு சேர்ந்து, 19 வயதில் சைனாக்காரியான மேடம் லூவை காதலித்து, போலி பாஸ்போர்ட்டுடன் சீனாவுக்கு சென்ற துணிச்சல்காரர்.
அடுத்த வருடமே வைரவியாபாரி ஒருவரின் மகளை மணம்புரிந்து, மூன்று வருடத்தில் அதுவும் விவாகரத்தில் முடியும்போதுதான் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தது. அதில் இவர் ராணுவ உளவுத்திறையில் பணியாற்றினார். அதன்பின்னர் இவர் தன்னுடைய 28ஆவது வயதில் ஒரேடியாக எழுத்தாளராக மாறிவிட்டார்.
இவர் உருவாக்கிய கதாபாத்திரத்தில் மிகவும் முக்கியமானது பாப் மொரேன் (நம்ம சாகச வீரர் ரோஜர்). இந்த கதை வரிசையில் 160க்கும் மேற்பட்ட கதைகளை இவர் எழுதி இருக்கிறார். இதைதவிர இவர் வயது முதிர்ந்தவர்களுக்கான நாவல்களை ஜாக் கொலம்போ என்ற பெயரில் எழுதினார். சொல்ல மறந்துவிட்டேனே, இவர் 10க்கும் மேற்பட்ட புனைப்பெயரில் எழுதுபவர்.
அண்ணன் விரைவில் சென்சுரி அடிக்க வாழ்த்துகள்.
இவரது கதைகளை தமிழில் நமது லயன் முத்து காமிக்ஸ் குழுமம் வெளியிட்டு வருகிறது. அவற்றின் அட்டைப்படங்கள்;
இதைத்தவிர 1991ல் ஒருமுறை அட்டையை அச்சடித்துவிட்டு, பின்னர் கதையை வெளியிடாமல் நிறுத்திவிட்டார் நமது எடிட்டர் விஜயன் அவர்கள். வழக்கம்போல அந்த வெளியிடப்படாத புத்தகத்தின் அட்டையையும் நான் கைப்பற்றி விட்டேன். இதோ அந்த அட்டை:
சாகச வீரர் ரோஜர் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள:
http://tamilcomicsulagam.blogspot.in/2009/05/bob-morane-treat-for-fantasy-based.html
15th October 2014: 39th Anniversary of James Bond 007’s 36th Daily Strip “The Torch Time Affair” Beginning
டியர் காமிரேட்ஸ்,
ஜேம்ஸ் பாண்டின் காமிக்ஸ் கதைகளில் 36-ஆவது கதையான இது ராணி காமிக்சின் 91-ஆவது இதழாக தலை மட்டும் என்ற பெயரில் ஏப்ரல் 1, 1988-ஆம் ஆண்டு வெளியானது.
இந்த கதையில் ஒரு விஷயம் முதல் தடவையாக நடந்தது. அதாவது முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் மெக்சிகோ போவார். கதையின் முதல் காட்சியே அசத்தும்.
ஜேம்ஸ் கடற்கரையில் காத்துக்கொண்டு இருப்பார். அப்போது ஒரு பெண்ணின் தலை மட்டும் கடற்கரையில் தெரியும். அவளை கழுத்து வரை பள்ளம் தோண்டி மணலில் புதைத்து வைத்து இருப்பார்கள்.
அவளை காப்பாற்ற முனைகையில் கப்பலில் வரும் இருவர் ஜேம்சை சுட முயல, ஜேம்ஸ் தானும் தப்பித்து அந்த பெண்னையும் காப்பாற்றுவார்.
அதன் பிறகுதான் ஒரு பெரிய வேட்டை விளையாட்டு ஆரம்பிக்கும். இந்த விளையாட்டில் மான், பொறி, வேட்டையன் இது மூன்றுமே ஒவ்வொரு கட்டத்திலும் மாறும். ஒரு கட்டத்தில் ஜேம்ஸ் வேட்டையாடப்படுவார், இன்னொரு கட்டத்தில் அவரை பொறியாக உபயோகப்படுத்துவார்கள், கடைசியாக அவர் வேட்டையாடுவார்.
இந்த கதையின் க்ளைமேக்சில் ஜேம்ஸ் பாண்ட் தப்பிக்கும்போது வில்லியின் அடியாட்கள் சுட, ஜேம்ஸ் மீது குண்டு எதுவும் படவில்லை (பின்னே, ஹிரோவாச்சே?). அப்போது வில்லி “உங்க துப்பாக்கி என்ன, லியோ டாய்ஸ் துப்பாக்கியா?” என்று கேலியாக கேட்பாள். அப்போது 1988-89 களில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டு துப்பாக்கி லியோ டாய்ஸ் என்பது இங்கே குறிப்பிடவும் வேண்டுமா என்ன?
அந்த The Torch Time Affair கதை இன்றுதான் ஒரிஜினலாக Daily Express நியூஸ்பேப்பரில் ஆரம்பித்தது.
கதை பற்றிய விவரங்கள்:
Publisher: Daily Express
Story: The Torch Time Affair
Daily Strip No: 36th Story
Creation: Original Story By Jim Lawrence
Artist: Yaroslav Horak
Starting Date: 15th October 1975
Completed Dated: 15th Jan 1976
Total No of Strips: 166
தமிழில் வெளிவந்த விவரங்கள்;
வெளியிட்டவர்: ராணி காமிக்ஸ் எடிட்டர்: திரு ராமஜெயம்
அட்டைப்பட ஓவியர்: ஓவியர் மாலி வெளியீட்டு எண்: 91
வெளியிட்ட தேதி: 01st April 1988
கதையின் தலைப்பு: தலை மட்டும்…
இந்த கதை தற்போதைய லேட்டஸ்ட் டைட்டன் புக்ஸ் ஆம்னி பஸ் எடிஷனில் வெளியாகி இருக்கிறது. இதே கதை ஸ்வீடன் நாட்டு செமிக் பிரெஸ் காமிக்ஸ் வரிசையிலும் வெளியானது.
இந்த கதையில் கவர்ச்சி சற்றே தூக்கலாக இருக்கும். தமிழில் எடிட் செய்யப்பட்டே வெளியிடப்பட்டது. அப்படி எடிட் செய்யப்படாத ஆங்கில ஓவியத்தின் எடிட் செய்யப்படாத ஒரு காட்சி! (நம்ம லோகோவுக்கு எப்படி ஒரு விளம்பரம்???)
15th October 2014: 1st Death Anniversary of George Olesen – Phantom Comic Strip Artist
டியர் காமிரேட்ஸ்,
இன்று (அக்டோபர் 15ஆம் தேதி ஜார்ஜ் ஒலெசென் என்ற காமிக்ஸ் ஓவியரின் முதலாம் ஆண்டு நினைவு நாளாகும். இவர்தான் ஓவியர் சைமர் பேர்ரிக்கு பிறகு வேதாளரின் கதைகளுக்கு ஓவியம் வரைந்தவர் (ராணி காமிக்ஸ் படித்தவர்களுக்கு முகமூடி வீரர் மாயாவி).
கிட்டதட்ட நாற்ப்பது ஆண்டுகள் இவர் வேதாளரின் கதைகளின் ஓவியங்களில் பங்களிப்பு செய்து இருந்தாலும் இவர் பெயர் பேசப்பட்டது பேர்ரியின் ஓய்வுக்கு பிறகே.
எனவே இவர் அதிகாரபூர்வமாக ஓவியராக இருந்தது 1994 முதல் 2005 வரை. இவர் இவர் 33 Daily Strip கதைகளுக்கும், 11 Sunday Strip கதைகளுக்கு தன்னுடைய ஓவியங்களின் மூலம் அழகூட்டினார்.
அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் அவர் வரைந்த சில பல கதைகளின் அட்டைப்படங்களை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். அதே சமயம் அவரது ஓவியம் எப்படி இருக்கும் என்பதற்க்கும் ஒரு சாம்பிளாக ஒரு ராணி காமிக்ஸ் படமும் இணைக்கப்பட்டுள்ளது. (ராணி காமிக்ஸ் அட்டைப்படங்களை வரைந்தவர் ஓவியர் மாலி).
சமீபத்தில் இவர் வரைந்த கதைகளை யூரோ புக்ஸ் இந்தியா நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 புத்தகங்கள். அதை செட் செட்டாக விற்கிறார்கள். அதைப்பற்றிய முழுநீள பதிவுக்கு இங்கே செல்லவும்:
http://tamilcomicsulagam.blogspot.in/2011/05/tcu-presents-02-new-comics-intro-euro.html
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteசூப்பர்.
//சித்திரக்கதை செய்திகள்: தமிழின் முதல் இணைய காமிக்ஸ் செய்தி மடல் // அட்டகாசம்.
இதில் முதல் கமெண்டும் நானே.
IAM ALSO FIRST WITH YOU.
DeleteMURUGAN.
@ கிங் விஸ்வா
ReplyDeleteதகவல்கள் படிக்கபடிக்க,காமிக்ஸ் மேல் உள்ள ஆர்வம்
கூடிக்கொண்டே போகிறது....நண்பரே !
(ஒலக காமிக்ஸ் ரசிகரே...உங்களையும்,கிங் விஸ்வாவையும்,
ஆர்வத்திலும்,நட்பிலும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை.
எனவே நானே முதல்!...ஹிஹி...)
very nice work.. please continue daily..
ReplyDeleteஅருமையான பதிவு.வாழ்த்துகள்.தொடருங்கள்
ReplyDeleteGreat work..
ReplyDeleteCongrate
Super sir.
ReplyDeleteKeep it up.
Welcome back Vishwa Sir.
ReplyDeleteவாழ்த்துகள் சார் ......"வாட்ஸ் அப்பில் " விட பதிவில் படிக்க சிறப்பாக இருக்கிறது .தொடருங்கள் ......
ReplyDeleteமற்ற "உறுதி மொழியை "போல இதுவும் விட்டு விடாமல் இருந்தால் சரி .. :-)
+1
ReplyDeletegood initiative Vishwa ! :)
அருமை,பதிவுகளை இங்கும் தொடரவும்
ReplyDelete