டியர் காமிரேட்ஸ்,
ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 2 நாட்களாக நமது வலைதளத்தில் இந்த சித்திரக்கதை செய்திகள் என்ற பகுதி தொடர்கிறது. இப்பகுதியில் அன்றாடம் நமது சித்திரக்கதை மற்றும் அதனை சார்ந்த செய்திகள் இடம்பெறும்.உங்களது வரவேற்ப்பை பொருத்து இப்பகுதி தொடர்ந்து இயங்கும்.
இப்பகுதியில் இடம்பெறப்போகும் செய்திகள் ஏற்கனவே அன்றைய தேதியில் காமிக் கட்ஸ் என்ற வாட்ஸ்-அப் குழுமத்தில் பகிரப்பட்டவையே. நீங்களும் இந்த குழுமத்தில் இணைய வேண்டுமென்றால் உங்களது முழுப்பெயர், நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் உங்களது செல்போன் எண் ஆகிய மூன்றையும் tamilcomicsulagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இனி இன்றைய சித்திரக்கதை செய்திகளுக்கு சொல்வோம்.
19th October 2014: 5th Death anniversary of Joseph Wiseman – On Screen Dr No
சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில்தான் (அக்டோபர் 19ம் தேதியன்று) 007 - ஜேம்ஸ்பாண்ட் எனும்அற்புத நாயகனை திரையில் அறிமுகப்படுத்திய டாக்டர் நோ திரைப்படத்தின் தலைப்பின் பெயர் கொண்ட வில்லனாக நடித்த ஜோஸஃப் வைஸ்மேன் இறைவனடி சேர்ந்தார்!
இவர் நடித்த திரைப்படங்களில் நான் இரண்டே இரண்டுதான் பார்த்துள்ளேன் (Viva Zapata & Stiletto). இந்த இரண்டிலுமேகூட இவரது பாத்திரம் துணை பாத்திரமே. ஆனால் டாக்டர் நோ படத்தில் இவரது அலட்டல் இல்லாத அதே சமயம் ஒரு தீர்க்கமான பாத்திரம்.
அவருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலி.
இனி டாக்டர் நோ பற்றிய காமிக்ஸ் தகவல்கள்:
டாக்டர் நோ - செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடர்: நமக்கு மிகவும் பரிச்சயமானது டாக்டர் நோ-வின் இந்தபரிமாணம் தான்! 1958 முதல் 1983 வரை DAILY EXPRESS முதலிய பல பிரிட்டிஷ் செய்தித் தாள்களில் காமிக்ஸ்தொடராக வெளிவந்த பல 007 ஜேம்ஸ்பாண்ட் கதைகளை நாம் அனைவரும் ராணி காமிக்ஸ் மூலம் படித்துமகிழ்ந்துள்ளோம்! அவற்றில் டாக்டர் நோ-வும் ஒன்று!
டாக்டர் நோ மூலக்கதையை செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடருக்காக உருமாற்றியவர் யார் தெரியுமா?நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான் மாடஸ்டி ப்ளைஸி-யை உருவாக்கிய அதே பீட்டர் ஒ’டான்னல் தான்! இச்சித்திரத் தொடர் திரைப்படங்களுக்குப் பல வருடங்கள் முன்பே வெளிவந்து திரைப்படத்திற்கு ஒருமுன்னோடியாகத் திகழ்ந்தன! படத்திற்கு STORYBOARD-ஆக இச்சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன!
டாக்டர் நோ மொத்தம் இரண்டு கதைகளில் இச்சித்திரக்கதைத் தொடரில் தோன்றியுள்ளார்! என்ன? ஆச்சரியமாஇருக்கா?ஆம்! இயன் ஃப்ளெமிங்-ன் நாவலைத் தழுவிய காமிக்ஸ்/படத்தில் கதையின் முடிவில் டாக்டர் நோ இறந்துவிடுவார்!
ஆனால் செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடரில் அவர் மீண்டு(ம்) உயிர்த்தெழுந்து வருவது போல் ஒருகதை அமைக்கப்பட்டது! அது நமதுராணி காமிக்ஸ்-லும் கதிர் வெடி என்ற பெயரில் வந்தது!
Actually இந்த கதையிலும்கூட டாக்டர் நோ தீர்மானமாக இறந்துவிட்டார் என்று கூறமுடியாதபடி தான் இந்த கதையின் க்ளைமேக்ஸையும் அமைத்து இருப்பார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் மறுபடியும் தேவைப்படும் என்று கதாசிரியர்கள் அப்போதே நினத்தார்களோ என்னவோ? See, for yourself.
19th October 2014: 59th Anniversary of Chick Bill’s Debut in Chez Nous Junior Magazine in French
நமக்கெல்லாம் மிகவும் பிடித்தமான நகைச்சுவை கௌபாய் கதைகளில் முதலிடம் லக்கிலூக் கதைகளுக்கு என்றால், சந்தேகமில்லாமல் இரண்டாம் இடம் சிக் பில்லுக்குத்தான்.
இந்த சிக் பில் கதைகள் இதே நாளில் 1955ஆம் ஆண்டு ஒரு ஃப்ரென்ச்சு பத்திரிக்கையில் துவங்கியது. முதல் மூன்று கதைகளில் நமது ஹீரொக்கள் விலங்குகளாகவே சித்தரிக்கப்பட்டனர். பின்னர் 1956-ஆம் ஆண்டு இத்தொடர் Tintin இதழுக்கு மாற்றப்பட்டவுடன் அவர்களை மனிதர்களாக சித்தரித்து கதைகள் துவங்கின.
அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்புடன் தொடரும் இந்த கதை வரிசை துவங்கிய நாள் இன்றுதான்.
முதன்முதலில் சிக் பில் கதை விளம்பரம் வந்தது ஜூனியர் லயன் காமிக்சின் இரண்டாவது இதழான உலகம் சுற்றும் அலிபாபாவின் உள் அட்டையில் தான்.
முதல் கதையாக வெளிவந்தது அதிரடி மன்னன். ஆனால் அவர்களை பற்றிய முறையான அறிமுக குறிப்பு பின்னர் வெளியான இதழ்களில் தான். ஆனால் இப்போது இதுவும் வருவதில்லை.
தேவை உள்ள பின்குறிப்பு: சிக் பில் கதைகளின் கதாசிரியர்(கள்), ஓவியர்(கள்), தமிழில் இதுவரை வந்துள்ள கதைகள், அவற்றின் அட்டைப்படங்கள், அந்த கதைகளின் மூலக்கதை (ஃப்ரென்ச்சில் வந்தவை) அட்டைப்படங்கள் ஆகியவற்றை காண இந்த பதிவை படிக்கவும்: http://tamilcomicsulagam.blogspot.in/2011/02/chick-bill-wonderful-comics-character.html
19th Oct 2014: Modesty Blaise – 19th Daily Strip The Zombie Started in 1970
மாடஸ்டி ப்ளைசி கதைகள் தினசரி செய்தித்தாளில் காமிக் ஸ்ட்ரிப்பாக வெளியானவை. இவற்றுல் மொத்தம் 96 கதைகள் உள்ளன. இதில் 19ஆவது கதைதான் இந்த The Green Eyed Monster.
இதுதான் ஓவியர் ரொமெரோவின் மூன்றாவது மாடஸ்டி ப்ளைசி கதை.
இந்த கதையை லயன் காமிக்சில் கானகத்தில் கண்ணாமூச்சி அன்றும் ராணி காமிக்சில் வயிரக்கண் பாம்பு என்றும் வெளியிட்டார்கள். இந்த இதழ்களை கைவசம் வைத்து இருக்கும் பாக்கியவான்கள் இரண்டு இதழ்களையும் அடுத்தடுத்து படித்து பாருங்கள்.
ஒரு அயல்நாட்டு கதையின் வெற்றியும் தோல்வியும் அது எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது, எவ்விதம் மொழிமாற்றம் செய்யப்படுகிறது என்பதை பொருத்தே அமையும்.
மாடஸ்டி கதைகளின் முக்கியமான அம்சமே மாடஸ்டிக்கும், வில்லி கார்வினுக்கும் இடையே இருக்கும் உறவுதான். அதனை நட்புக்கும் மேலான ஒரு நிலையில் நிறுத்தியே இருப்பார்கள். (The X Files தொடரில் வரும் Fox Mulderம் Dana Scullyக்கும் இடையேயும் இதே மாதிரியான ஒரு நட்பு இருந்தது,, ஆனால் டீவி தொடரை தாண்டி அது திரைப்படமாக வந்தபோது அந்த நட்பை கேள்விக்குறியதாக்கிவிட்டார்கள்).
ஆனால் ராணி காமிக்சை பொருத்தவரையில் மாடஸ்டியும் வில்லி கார்வினும் காதலர்கள். அதோடு முடிந்தது அந்த கதை.
இதுகூட பரவாயில்லை, ராணி காமிக்சில் தோர்கல் கதையை கொத்துக்கறியாக்கியதோடு நிற்க்காமல் ஆரிசியாவை தோர்கலின் தங்கச்சியாக ஆரம்பித்தார்கள் பாருங்கள், அங்கே தான் நிற்கிறார் அந்த மொழிபெயர்ப்பாளர்.
சரி, இந்த பதிவு மொழிபெயர்ப்பை பற்றியதல்ல. அதை பிறகொரு நாளில் பார்ப்போம்.
இந்த கதை(யும்) ஆனலைனில் டவுண்லோட கிடைக்கிறது. படித்து மகிழுங்கள்.
Story Title: The Green Eyed Monster
Author: Peter o Donnel
Artist: Romero
Starting Date: Monday, 19th October 1970
Finishing Date: Saturday, 20th Feb 1971
Total No of Strips: 107
தேவையுள்ள பின் குறிப்பு: மாடஸ்டி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள, தமிழில் வெளிவந்துள்ள அவரது கதைகளின் அட்டைப்படங்களை காண, இந்த பதிவை படியுங்கள்: http://tamilcomicsulagam.blogspot.in/2010/06/modesty-blaise-arguably-best-comics.html
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
super.
ReplyDeleteAdada ! :)
ReplyDeleteநீண்ட காலத்தின் பின் வலைகளில் வருகிறேன்,இங்கு இன்னமும் நீங்கள் கலக்கிக் கொண்டு உள்ளீர்கள். நல்ல பதிவு சார்
ReplyDeleteஅரிய தகவல்கள் ......எளிய வடிவில் .......விரைவில் What's app குழுமத்தில் இணைவேன் ...
ReplyDeleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr