டியர் காமிரேட்ஸ்,
கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு பிறகு இந்த ஒரு பதிவு. இதையும் இடவேண்டுமா? என்று யோசித்துக்கொண்டே வலையேற்றிக்கொண்டு இருக்கிறேன். இருந்தாலும் இதனை பதிவேற்றும் வரையில் வேறு யாரும் இந்த தகவல் பற்றிய பதிவிடுவதர்க்கான எந்த புகை சமிக்ஞையும் வராததால் நானே இதனை வலையேற்ற முடிவு செய்தேன்.
ஒரு காலத்தில் காமிக்ஸ் பற்றிய (குறிப்பாக தமிழ் காமிக்ஸ் பற்றிய) எந்த தகவல் வந்தாலும் அதனை ஆவணப்படுத்தும் வகையில் இந்த வலைப்பதிவு செயல்பட்டுக்கொண்டு வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இயங்க முடியாத சூழல் ஏற்பட்டாலும்கூட காமிக்ஸ் தகவல்களை "காமிக் கட்ஸ்" என்ற வரிசையில் தொடர்ந்து வலையேற்றிக்கொண்டே இருந்து வந்தேன். அதிலும் குறிப்பாக பல தமிழ் காமிக்ஸ் தகவல்கள் வீடியோக்கள், விளம்பரங்கள் என்று பலவும் இங்கே வெளிப்பட்டன. காமிக் கட்ஸ் வரிசையில் இது 49வது பதிவு. கிட்ட தட்ட மூன்று பதிவுக்கு ஒரு காமிக் கட்ஸ் பதிவு என்கிற வகையில் நமது வலைப்பதிவில் இருக்கிறது.
மூன்று வாரங்களுக்கு முன்பாக நண்பர் (முன்னாள் காமிரேட்) நரசிம்மன் அவர்கள் காமிக்ஸ் வலைப்பதிவர்கள் குறித்த ஒரு கட்டுரைக்காக தொடர்பு கொண்டபோதுதான் அவர் இந்திய டுடேவில் சமீபத்தில் இணைந்தது நினைவுக்கு வந்தது (சில மாதங்களுக்கு முன்பாக கவின்மலர் அவர்களுடனே இவரும் அங்கே சேர்ந்தார்). நண்பர் நரசிம்மன் அவர்கள் நம்முடைய காமிக்ஸ் வலைப்பதிவர்கள் அனைவரையுமே தொடர்பு கொண்டு அனைவரையும் பற்றியே எழுத ஆசைப்பட்டார்.
ஆனால் அறுபதுக்கும் மேற்ப்பட்ட காமிக்ஸ் வலைப்பதிவர்கள் இருந்ததையோ அல்லது ஒரு அறிமுக கட்டுரைக்கு ஒதுக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கையையோ அவர் அப்போது மனதில் கொள்ளவில்லை. ஆகையால் பல காமிரேட்டுகளை இந்த பக்கத்தில் அவரால் இணைக்க இயலவில்லை. அவர் சார்பாக விடுபட்ட நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இந்த குறையை ஒரு காமிக்ஸ் வலைப்பதிவர் சந்திப்பை நடத்தி ஈடு கட்டிவிடுவோமா தோழர்களே?
அவசரமாக எடிட் செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள எழுத்துப் பிழைகளுக்கும் வாக்கிய அமைப்புகளுக்கும் (பிலேடே பீடியா/ஒற்றைக்கை மாயாவி etc) நரசிம்மன் அவர்கள் சார்பாக மன்னிப்பு கோருகிறேன். அதே சமயம் தேசிய அளவிலான ஒரு வார இதழில் தமிழ் காமிக்ஸ் பற்றிய கட்டுரை வருவதும், காமிக்ஸ் வலைப்பதிவர்கள் பற்றி எழுதப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.
இன்னுமொரு முக்கிய விஷயம் - விரைவில் தமிழின் முன்னணி வார இதழ் ஒன்றில் தமிழ் காமிக்ஸ் குறித்த வாரந்திர கட்டுரை ஒன்றும் ஆரம்பம் ஆகப்போகிறது. ஆகையால் இனிமேல் வெகுஜன பத்திரிக்கைகளில் தமிழ் காமிக்ஸ் பற்றிய தகவல் வருவதில்லை என்று ஏங்கிய நாட்கள் கண்முன்னே மறையும் காலம் நெருங்கி விட்டது. விரைவினில் அது பற்றிய தகவலை இங்கேயே காமிக் கட்ஸ் பகுதியினில் அளிக்கிறேன்.
இதற்க்கு மேல் இருக்கும் காமிக்ஸ் தகவல்கள் அனைத்துமே படித்து தெரிந்துக்கொள்ளக் கூடிய எளிய விஷயங்களே ஆகையால் அவற்றை பற்றி எழுதி எதுவும் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை. So, Read & Enjoy காமிரேட்ஸ்.
இன்னுமொரு முக்கியமான விஷயம்: தமிழ் ஆங்கிலத்தில் வெளிவரும் பெரும்பாலான தினசரி, வார இதழ்களை நான் வாங்கி வருகிறேன். அவற்றில் வரும் காமிக்ஸ் குறித்தான சங்கதிகளை இங்கே பரிமாறியும் வருகிறேன்.
சில சமயம் பயணம்-பணி நிமித்தமாக சிலவற்றை தவற விடுவதும் உண்டு. ஆகையால் தோழர்கள் தமிழ் காமிக்ஸ் குறித்தான தகவல்களோ அல்லது சுவையான காமிக்ஸ் குறித்த தகவலோ ஏதேனும் பத்திரிக்கையிலோ,வார இதழிலோ வெளிவந்தால் உடனடியாக ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்புமாறு வேண்டுகிறேன்
எந்த ஒரு தகவலையும் நீங்கள் ஸ்கான் செய்யவோ, போட்டோ எடுக்கவோ தேவை இல்லை. வெறும் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது என்று தகவல் அளித்தாலே போதுமானது. உங்கள் தகவலுக்கான கிரெடிட் கண்டிப்பாக இங்கேயே அளிக்கப்படும்.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: tamilcomicsulagam@gmail.com
பின்குறிப்பு: வழக்காமாக சென்னையில் இருந்தே பெரும்பாலான பதிவுகள் வலையேற்றப்பட்டுள்ளன. பயணம் நிமித்து கோவை, சேலம், ஈரோடு, சிவகாசி பெங்களூரு, மும்பை, டெல்லி என்றும்கூட சில பல பதிவுகள் இடப்பட்டுள்ளன. ஆனால் பஞ்சாபில் இருந்து ஒரு பதிவு இடப்படுவது இதே முதல் முறை (டெக்னிகலி, பஞ்சாபில் டைப் செய்யப்பட்டு WiFi தகராறு செய்ததால் சென்னையில் இருந்தே அப்லோட் செய்யப்பட்டது).
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
நல்ல முயற்சி
ReplyDeleteஇந்தியா டுடேவில் ஏற்கனவே நம்ம எடிட்டரின் பேட்டி வெளியானதே?
நன்றி ராஜேஷ்
Deleteவெகுஜன இதழ்களில் மட்டுமின்றி தேசிய அளவிலான தமிழ் பத்திரிக்கைகளிலும் நமது காமிக்ஸ் குறித்தான கட்டுரைகள் வருவது கண்டு மகிழ்ச்சி.
ReplyDeleteஅந்த கட்டுரையை எழுதிய நண்பருக்கு நன்றி.
நண்பர் கே ராஜேஷ்,
ReplyDeleteஆமாம், ஏற்கனவே ஒரு முறை கட்டுரையும், இன்னொருமுறை புத்தக முன்னோட்டமும் வந்துள்ளது.
இதோ அதற்க்கான லிங்க்
http://tamilcomicsulagam.blogspot.in/2009/06/news-17-prakash-publishers-in-limelight.html
நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள் நண்பரே..!
ReplyDeleteமிக்க நன்றி கலீல் சார்.
Deleteமேலே ஒலக காமிக்ஸ் ரசிகர் கொடுத்துள்ள லின்க்கில் உங்களைப்பற்றிய டெக்கன் குரோனிக்கல் செய்தியும் உள்ளது.
Congratulations ....
ReplyDeleteமிக்க நன்றி அஹ்மத் பாஷா சார்.
Deleteடியர் MR.விஸ்வா,
ReplyDeleteகாமிக்ஸ் எனும் நமது கனவுலகம் வாடாவுயிர்ப்புடன் மலர்ந்த முகமாய் காட்சியளிக்க நீங்கள் மேற்கொள்ளும் தளரா முயற்சிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!
நன்றி நண்பரே,
Deleteஇது பலரின் கூட்டு முயற்சியே.
வாழ்த்துக்கள் விஸ்வா ஜி.
ReplyDeleteதொடர்ந்து நமது தமிழ் காமிக்ஸ் குறித்தான செய்திகள் வருவது கண்டு மகிழ்ச்சி.
போட்டோவில் எடிட்டர் செம ஸ்மார்ட் ஆக காட்சியளிக்கிறார்.
சுரேஷ்.
நன்றி சுரேஷ் ஜி
Deleteமேலே இருப்பவர் நானல்ல, வாழ்த்து சொல்வதற்கு கூட என் பெயரை உபயோகப் படுத்த வேண்டிய அவசியம் என்ன வென்று தெரியவில்லை தல., எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
Deleteதல
Deleteஅவர் (அநேகமாக) அயனாவரம் சுரேஷ் ஆக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்
அவரும் உங்களைப்போல (அல்லது உங்களைப்பார்த்து?) இப்படி பெயரை எழுத ஆரம்பித்து விட்டாரோ?
//உங்களைப்போல (அல்லது உங்களைப்பார்த்து?) இப்படி பெயரை எழுத ஆரம்பித்து விட்டாரோ? //
Deleteஎன்ன கொடுமை தல இது? நான் காப்பிரைட் வேறு வாங்கி வைக்க வில்லை
உடனடியாக இந்த வித்தியாசமான முறையில் பெயரை எழுத காப்பி ரைட் வாங்கிவிடுங்கள் தல.
Deletevalthukkal thozhare! thangal thangamaana muyarchigal thodarattum!
ReplyDeleteமிக்க நன்றி தோழர் ஜான் சைமன் அவர்களே
Deleteநமது காமிக்ஸ் உலக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் . . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி யஷ்வந்த்.
DeleteSir..,antha tamil vaara puthagam edu endru sonnal ippoluthu irunthay vaangi viduwen.
ReplyDeleteபரணிதரன் சார்,
Deleteஇப்போதுதான் பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆகையால் இரண்டு மாதங்கள் காத்திருங்கள். ஒரே ஒரு க்ளூ - அந்த இதழின் பெயரின் முதல் எழுத்து என்னுடைய பெயரின் முதல் ஆங்கில எழுத்து.
King = Kumudam
DeleteViswa = Vikatan
????
நீங்களே சொல்லிடலாமே விஸ்வா ஜி ...
அப்புறம் இரண்டு வேண்டுகோள்:
1. பதிவுகள் தொடர்ந்து இடுங்கள்
2. நமது லயன் வலைப்பூவில் உங்களது பதிவுகள் இடையில் காணாமல் போய்விட்டு, இப்பொழுது தான் மீண்டும் பதிய ஆரம்பித்து உள்ளீர்கள். அதை தொடரவும்.
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
காமிரேட் திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்,
ReplyDeleteநீங்கள் சொல்வதுபோல
K = கல்கி, கலைமகள், குடும்ப மலர், etc
V = விகடன், வாரமலர், வண்ணத்திரை, etc
என்றெல்லாம்கூட வருகிறதே? ஆகையால் Wait & Watch.
உங்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க
1. தொடரும்.
2. தொடரும்
வாழ்த்துக்கள் - பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பர்கள் அனைவருக்கும்.
ReplyDeleteகுறிப்பு: இந்த வாழ்த்து நண்பர்களுக்கு மட்டுமே