டியர் காமிரேட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்.புதிதாக வாங்கிய செல்போனை தொலைத்து சோகத்துடன் இடப்படும் பதிவு இது என்பதால் ஆங்காங்கே மென்சோக வெளிப்பாடு இருந்தால் மன்னிக்கவும். ஆந்திராவுக்கும் எனக்கும் என்ன ஏழாம் பொருத்தம் என்று தெரியவில்லை. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கு சென்று இருந்தபோது என்னுடைய கண்ணாடியை தொலைத்து விட்டு அவஸ்தை பட்டேன் (கண்ணாடி இல்லாமலேயே மும்பை காமிக் கான் சென்று திரும்பியது தனி கதை). இந்த முறை செல்போன். அந்த மட்டிலும் புதிய செல்போன் என்பதால் பெரிய நஷ்டமில்லை.
பழைய செல்போன் என்றால் அதில் இருக்கும் தகவல்களையும்,எண்களையும் மறுபடியும் ஒன்று சேர்க்க பிரம்ம பிரயத்தனம் செய்திருக்க வேண்டியது இருக்கும். அந்த வகையில் புதிய கைபேசி தொலைந்தது ஒருவகையில் நன்மையே.இனிமேலும் சொந்த கதை சோகக்கதையை வளர்க்காமல் இந்த தகவல் பதிவுக்கு செல்வோம்.
வாண்டுமாமா அவர்களைப்பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இணையத்திலும் சரி, பத்திரிக்கைகளிலும் சரி பெரியதாக தகவல் எதுவும் இல்லாத நிலையில் நம்முடைய தளத்தில் முதன் முதலாக அவரது புகைப்படத்துடன் கூடிய தகவல் பதிவும் சிறியதொரு பேட்டியும் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் சென்ற ஆண்டு ஆனந்த விகடனில் காமிரேட் சமஸ் அவர்களால் மறுபடியும் மீடியா வெளிச்சத்தில் வந்தார் வாண்டுமாமா.
இப்போது மதிப்பிற்குரிய அகிலா கண்ணதாசன் அவர்களின் விடா முயற்சியால் நேற்றைய The Hindu தினசரியில் வாண்டுமாமா அவர்களின் புதிய பேட்டி ஒன்று ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக (வாண்டுமாமா அவர்களின் உடல்நலன் காரணமாக) தொடர்ந்து இரண்டு நாட்கள் எடுக்கப்பட்ட அந்த பேட்டியும் புகைப்படமும் இங்கே வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து விடாமுயற்சியுடன் பேட்டியை முடித்து அதனை அழகாக எடிட் செய்து வெளியிட்ட அகிலா கண்ணதாசன் அவர்களுக்கும், The Hindu நாளிதழின் Metro இணைப்பின் எடிட்டருக்கும், The Hindu நாளிதழுக்கும் தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பாக மனமார்ந்த நன்றி. தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை சிறுவர்களுக்காகவே பயன்படுத்திய வாண்டுமாமா அவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது இன்னமும் எவ்வளவோ உள்ளது.
காமிக்ஸ் உலகில் டின்டின் படைப்பாளியின் ஆவணப்படம் (தமிழில் சொல்வதெனின் (Documentary) மிகவும் புகழ் பெற்ற ஒன்று. நான் தமிழ் காமிக்ஸ் வரலாறு பற்றிய ஆவணப்படம் தொடங்க எத்தனித்தபோது இயக்குனர்/நண்பரொருவர் என்னை அழைத்து அந்த டின்டின் ஆவணப்படத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து குறைந்தது மூன்று முறையாவது அதனை பாருங்கள் என்று அன்புக்கட்டளையும் இட்டார்.
அதில் இருந்து காமிக்ஸ் சார்ந்த ஆவணப்படங்களை தொடர்ந்து தேடிப்பிடித்து பார்த்து வருகிறேன். அந்த வகையில் என்னுடைய மனம் கவர்ந்த கெவின் & ஹாப்ஸ் (உச்சரிப்பு உதவி - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்) பற்றிய ஆவணப்படம் இந்த ஆண்டு தீபாவளி அருகாமையில் வரப்போகும் தகவல் உவகை அளிக்கின்றது.
வார்விக் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Dr Christopher Moron (என்னே ஒரு பெயர்?) ஜேம்ஸ் பான்ட் கதாசிரியர் இயன் பிளெம்மிங்'ன் De-Classified கடிதங்களையும், அறுபதுகளில் வெளிவந்த பல பேட்டிகளையும் ஒருங்கே அவதானித்து சில பல சுவையான தகவல்களை அளிக்கிறார். இயன் பிளெம்மிங்கும் அப்போதைய CIA தலைவர் Allen Dullessம் நட்பு ரீதியாக மரியாதை கொண்டவர்களாக இருந்தனர் என்பதை பின்புலத்தில் கொண்டு மேலே படிக்கவும்.
ஜேம்ஸ்பான்ட் கதைகளில் வருவது போல ஸ்பெஷல் கருவிகளை தயாரிக்க CIA முயன்றது. குறிப்பாக From Russia With Love (ராணி காமிக்ஸ் அழகிய ஆபத்து) படத்தில்/கதையில் வரும் ரஷ்யநட்டு வில்லி ரோஸா க்ளேப் போல ஷூ முனையில் விஷம் தோய்ந்த சிறு ஊசியை / கத்தியை CIAவினர் தயாரித்தனர். அந்த கதையின் முடிவில் ஜேம்ஸ் பான்ட் இடம் தோற்றுவிடுவதை பொறுக்கமுடியாத ரோஸா, ஜேம்ஸை இந்த விஷ ஊசி/கத்தி மூலம் உதைக்க, அதனால் ஜேம்ஸ் மருத்துவமனைக்கு சென்று மீள்வதெல்லாம் தனி கதை.
அதைப்போலவே இயன் பிளெம்மிங் இந்த கால கட்டத்தில் எழுதிய கதைகளில் எல்லாம் CIA பற்றிய உயர்வான கண்ணோட்டதோடே எழுதி இருப்பார். ஒற்றைக் கை ஃபெலிக்ஸ் ரைட்டரை யாருக்காவது நினைவுக்கு வருகிறதா? பல கதைகளில் ஜேம்ஸ் பாண்டுக்கு உதவி செய்து இருப்பார். ராணி காமிக்ஸ் மந்திர தீவு கதையில் அவரது ஒரு கையை சுறாமீன் ஒன்று கடித்துவிட, அதற்க்கு காரணமானவனை ஜேம்ஸ் பான்ட் பழி வாங்குவார். இந்த CIA உளவாளி தொடர்ந்து கதைகளில் வருவதற்கு இவர்களது நட்பே முக்கிய காரணமாக இருக்குமோ?
இன்னுமொரு முக்கியமான விஷயம்: தமிழ் ஆங்கிலத்தில் வெளிவரும் பெரும்பாலான தினசரி, வார இதழ்களை நான் வாங்கி வருகிறேன். அவற்றில் வரும் காமிக்ஸ் குறித்தான சங்கதிகளை இங்கே பரிமாறியும் வருகிறேன்.
சில சமயம் பயணம்-பணி நிமித்தமாக சிலவற்றை தவற விடுவதும் உண்டு. ஆகையால் தோழர்கள் தமிழ் காமிக்ஸ் குறித்தான தகவல்களோ அல்லது சுவையான காமிக்ஸ் குறித்த தகவலோ ஏதேனும் பத்திரிக்கையிலோ,வார இதழிலோ வெளிவந்தால் உடனடியாக ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்புமாறு வேண்டுகிறேன்.
எந்த ஒரு தகவலையும் நீங்கள் ஸ்கான் செய்யவோ, போட்டோ எடுக்கவோ தேவை இல்லை. வெறும் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது என்று தகவல் அளித்தாலே போதுமானது. உங்கள் தகவலுக்கான கிரெடிட் கண்டிப்பாக இங்கேயே அளிக்கப்படும்.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: tamilcomicsulagam@gmail.com
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
இரவு நேரத்து நல்வரவு.
ReplyDeleteராஜேஷ் கே
வருகைக்கு நன்றி ராஜேஷ்
Deleteஅடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே . .
ReplyDeleteயஷ்வந்த்,
Deleteஇந்த மாதிரியான கேள்விகள்தான் என்னை மறுபடியும் பதிவிட தூண்டுகின்றன என்பதே உண்மை
பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteவாண்டு மாமா பற்றி இன்றைய பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டுவது ஆச்சரியம் (!!!) தருகிறது. அவரை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டார்கள் என்றும் உங்களைப்போன்ற ஒருசில காமிரேட்ஸ்தான் அவ்வப்போது அவரை நினைவுபடுத்திவருகிறார்கள் என்றும் நினைத்திருந்தேன். கட்டுரையாளருக்கும் நன்றி.
பி.கு: உங்களால் பெயரிடப்பட்ட பரிசு ஒன்று 'பெண்டிங்'கில் நிற்பதை நினைவூட்ட விரும்புகிறேன்!
பொடியரே,
Deleteஉண்மைதான். அத்தி பூத்தார்ப்போல யாராவது பத்திரிகை நண்பர்கள் இதுபோல எழுதினால்த்தான் உண்டு.
உங்களுக்கான பரிசு விரைவில் உங்களை சேரும்
எனக்கு தெரிந்து வாண்டுமாமா பற்றிய தகவல்கள் அறிய கூடிய ஒரே இடமாக உங்கள் வலைபூ இருக்கிறது.
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி விஸ்வா.
அவருக்காக ஒரு டெடிகேடட் இணையதளம் கொண்டு வரவேண்டுமென்பதே என்னுடைய ஆசை கிருஷ்ணா.
Deleteபார்ப்போம்,அதுவரை நம்மால் இயன்றதை செய்வோமே?
This comment has been removed by the author.
ReplyDeleteநான் இங்கு புதிய வருகையாளர். லயனில் உள்ள லிங்க் இந்த புராதான தேசத்திற்கு எனக்கு காலப்பயணம் அமைத்து தந்துள்ளது. முதலில் கண்ணில் பட்ட விஷயம் பரிசு சம்பந்தமான நினைவூட்டலும் அதற்கான பதிலும் தான் ! எனவே, என்னை போன்ற புதியவர்களும் கலந்துக் கொள்ள ஏதுவாக புதிய போட்டி வைத்து ஏதும் பரிசு வழங்கும் சிந்தனை உள்ளதா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன் !
ReplyDeleteபி.கு: ஆசிரியரின் புதிய பதிவை பற்றிய தங்களின் உடனடி பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி சார். இப்படி நன்றி சொல்லி அங்கே பதிவிட்டால் ஐயோ அம்மா அய்யோ அம்மா என்று அனைவரும் என்னை திட்டுவார்கள்; அதனால் தான் இங்கு உங்களுக்கு நன்றி சொல்கிறேன் :)
//நான் இங்கு புதிய வருகையாளர். லயனில் உள்ள லிங்க் இந்த புராதான தேசத்திற்கு எனக்கு காலப்பயணம் அமைத்து தந்துள்ளது. முதலில் கண்ணில் பட்ட விஷயம் பரிசு சம்பந்தமான நினைவூட்டலும் அதற்கான பதிலும் தான் ! எனவே, என்னை போன்ற புதியவர்களும் கலந்துக் கொள்ள ஏதுவாக புதிய போட்டி வைத்து ஏதும் பரிசு வழங்கும் சிந்தனை உள்ளதா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்//
Deleteபோட்டியா? ஹம் பார்க்கலாம்.
ஆர்வமுடன் கலந்துகொள்பவர்கள் மிகவும் குறைவே. ஆகையால் தான் புதிய போட்டிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
//பி.கு: ஆசிரியரின் புதிய பதிவை பற்றிய தங்களின் உடனடி பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி சார். இப்படி நன்றி சொல்லி அங்கே பதிவிட்டால் ஐயோ அம்மா அய்யோ அம்மா என்று அனைவரும் என்னை திட்டுவார்கள்; அதனால் தான் இங்கு உங்களுக்கு நன்றி சொல்கிறேன் ://
Deleteகுறைக்கும் தெரு நாய்களுக்கு பதில் அளிக்க நினைத்து குறைக்க ஆரம்பித்தால் தெருவை கடக்க இயலாது என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார்.
ஆகையால் நம்முடைய எண்ணம் என்ன? தெருவை கடப்பதா? அல்லது தெரு நாய்களுக்கு பதிலளிப்பதா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
//குறைக்கும் தெரு நாய்களுக்கு பதில் அளிக்க நினைத்து குறைக்க ஆரம்பித்தால் தெருவை கடக்க இயலாது என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார்//
Deleteநீங்கள் அடித்த அடியில் தாரை தப்பட்டையெல்லாம் கிழிந்தே விட்டது :) SUPER !
Wednesday, 24 July 2013
ReplyDeletePosted by Vijayan at 12:29
Sculpted By King Viswa at 12:38:00 AM
இந்த ஒற்றுமை பற்றிய விளக்கம் அறிய விரும்புகிறேன் !?
இதில் எதுவுமே இல்லை நண்பரே
DeleteJust Mere Co Incicdence தான்
I was looking for those old writers' details like Vaandu maamaa, Doctor. Poovannan, Vanoli anna. Thankyou
ReplyDeleteThanks for the Visit Mr UnKnown.
ReplyDeleteIn Future, Kindly log in with your ID in order to enable other possible updates being mailed to your id.