Pages

Tuesday, July 31, 2012

11 Comic Cuts 46-News 46: காமிக்கான் எக்ஸ்ப்ரெஸ்,பேட்மேன் செய்திகள்,அனிமேஷன் கார்ட்டூன் படமாக கோகுலத்தில் கண்ணன் மற்றும் 50வது ஆண்டில் அமுல் கார்ட்டூன்கள்

டியர் காமிரேட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். மின்சார பஞ்சம், மின் தடை என்றெல்லாம் தமிழ் நாடே கடந்த இரண்டு ஆண்டுகளாக புலம்பிக் கொண்டிருக்க,நம் தலை நகரில் ஒரு ரியாக்ஷனுமே இல்லையே என்று பலரும் கடுப்பில் இருந்தனர். "தலைவலியும், காய்ச்சலும், கரண்ட் கட்டும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றுகூட சொல்ல ஆரம்பித்தார்கள். அதன் விளைவா இல்லையா என்பது தெரியாது. ஆனால் திங்கள்கிழமை காலையிலும், இன்று மதியம் வரையிலும் இங்கு தில்லியில் முழு மின்சார ப்ரேக். எந்த அளவுக்கு என்றால்,மெட்ரோ ரெயில்கள் கூட தடை பட்டன. அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இந்த பதிவு வலை ஏற்றப்படுகிறது.

காமிக்கான் எக்ஸ்ப்ரெஸ்: கடந்த ஞாயிறன்று எடிட்டரின் வலைதளத்தில் இந்த செய்தி வந்தவுடன் பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இது ஒரு நல்ல ஆரம்பம் என்றும், இதன் தாக்கம் மற்றும் விளைவுகள் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை காண இப்போதே நம்மை தயாராக்கிக் கொள்ளுங்கள் தோழர்களே. இங்கே எடிட்டர் கூறியதை மறுபடியும் பதிக்கிறேன்:

செப்டம்பர் 8 & 9 தேதிகளில் பெங்களூரில் COMIC CON 2012 என்றதொரு காமிக்ஸ் திருவிழாவினை நடத்திட டெல்லியில் தலைமையகம் கொண்டிட்டதொரு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது! ஏற்கனவே டெல்லியிலும். மும்பையிலும் இது போல் ப்ரேத்யேக shows நடத்தி வெற்றி கண்டுள்ளார்கள்! இம்முறை பெங்களூரில் நடநதேறிடவிருக்கும் இந்தத் திருவிழாவில் நாமும் பங்கேற்கிறோம்! நமது லயன் - முத்து காமிக்ஸின் ஸ்டால் அங்கே இருந்திடும்! உங்களை அங்கு வரவேற்பது எனது கடமையும் ; பெருமையும்! Hope to see you there guys!”.

ஆகையால் தோழர்களே, செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் நம்முடைய தாரக மந்திரம் "சலோ,சலோ -பெங்களூரு சலோ" என்பதாகவே இருக்கட்டும். என்னைப் பொறுத்தவரையில் 5 Weeks is Too far to plan ahead right Now. பார்க்கலாம். பயணமும், பணியும் தடையாக வராத வரையில் கண்டிப்பாக ஸ்டாலில் வருகை புரிவேன். அந்த காமிக்கான் எக்ஸ்ப்ரெஸ் பற்றிய ஒரு துணுக்கு செய்தி கடந்த வார டெக்கான் க்ரோனிக்கள் தினசரியில்.

 

Deccan Chronicle Chennai Edition Chennai Chronicle Dated Sunday 22nd July 2012 Page No 22 ComiCon Express Bangaluru News
Deccan Chronicle Chennai Edition Chennai Chronicle Dated Sunday 22nd July 2012 Page No 22 ComiCon Express Bangaluru News

பேட்மேன் செய்திகள் -  சூப்பர் ஹீரோக்களின் சாபம்: பேட்மேன் திரைப்பட துவக்க நாளில் நடந்த துக்க சம்பவம் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது இப்படி ஒரு ஆர்டிக்கிள் கண்டிப்பாக வருமென்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக இந்த செய்தி டெக்கான் க்ரோனிக்கள் பத்திரிக்கையில் வராமல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் சென்னை டைம்ஸ் முதல் பக்க செய்தியாக வந்தது.

 

The Times Of India Chennai Edition Chennai Times Page 01 Dated Monday 23rd July 2012 Curse of the Super Heroes Article
The Times Of India Chennai Edition Chennai Times Page 01 Dated Monday 23rd July 2012 Curse of the Super Heroes Article

பேட்மேன் செய்திகள் -அடுத்த சூப்பர் ஹீரோ படம்?: பேட்மேன் ட்ரைலஜியின் மூன்றாம் பாகமும் முடிந்து விட்டதால் அடுத்த காமிக்ஸ் சூப்பர் ஹீரோவை தேடும் படலம் பற்றிய செய்தியாக இருந்தாலும் சந்தடி சாக்கில் லந்து கொடுக்கும் வகையாக ரசிகர்களுக்கு ஆடோகிராஃப் போட்டு விட்டு கைகளை ஜெல் போட்டு கழுவிய ஹீரோ பற்றி செய்தி போட்டு கொளுத்தி விட்டு விட்டதுதான் இந்த எடிட்டரின் ஸ்பெஷாலிடி.

 

Times Of India Chennai Edition Dated Sunday 22nd July 2012 Page No 13 Hunt for Next Super Hero after Batman
Times Of India Chennai Edition Dated Sunday 22nd Jyly 2012 Page No 13 Hunt for Next Super Hero after Batman

பேட்மேன் செய்திகள் -சிறுவர்களின் உணவுப் பழக்கமும்: நம்ம ஊரில் சினிமா நட்சத்திரங்களை கொண்டு இரத்த தானம், போலியோ ஊசி போட்டுக்கொள்வது போன்ற சமூக நலச் செய்திகளை பாமர மக்களுக்கு கொண்டு செல்கிறோம்.அதுபோலவே ஜன்க் ஃபுட் எனப்படும் உணவு வகைகளின் கெடுதலையும், சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தவும் சூப்பர் ஹீரோக்களை பயன்படுத்துவது பற்றிய செய்தி இது:

 

The Times Of India Chennai Edition Page 13 Dated Tuesday 24th July 2012 The Healthy Knight Rises Article
The Times Of India Chennai Edition Page 13 Dated Tuesday 24th July 2012 TheHealthy Knight Rises Article

பேட்மேன் செய்திகள் - மாட்டிக்கொண்டார் போலி பேட்மேன்: பிரேசில் நாட்டில் ஒரு உணவகத்தில் பேட்மேன் போல உடையணிந்துக்கொண்டு திருட முயன்ற வாலிபரை கைது செய்துள்ளனர். இதற்க்கு மேலே என்ன சொல்வது? வேறு ஏதாவது என்றால் கூட Better Luck Next Time என்று சொல்லலாம், இங்கே? ஹ்ம்ம் ஒன்றுமே இல்லை. 

 

The Times of India Chennai Edition Page 13 Dated Sunday 29th July 2012 Dark Knight Falls News
The Times of India Chennai Edition Page 13 Dated Sunday 29th July 2012 Dark Knight Falls News

கோகுலத்தில் கண்ணன் - அனிமேஷன் கார்ட்டூன் படம் - தமிழில்: ரிலையன்ஸ் நிறுவனம் கார்ட்டூன் / அனிமேஷன் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்பது நாமெல்லாம் அறிந்ததே (அட்லீஸ்ட் எனக்காவது தெரியும்). அவர்களின் தயாரிப்பில் இந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வரவிருக்கும் ஒரு படத்தை பற்றிய செய்திகள் இங்கே. படித்து தெரிந்து கொள்ளுங்கள், என்னுடைய பழைய நிறுவனத்தை பற்றி அதிகமாக சொல்வதற்கில்லை.

 

The Hindu Chennai Edition Metro Plus Page No 01 Dated Wednesday 25th July 2012 Gokulathil Kannan Article
The Hindu Chennai Edition Metro Plus Page No 01 Dated Wednesday 25th July 2012 Gokulathil Kannan Article
Deccan Chronicle Chennai Edition Chennai Chronicle Paper Dated 26th July 2012 Thursday Gkulatil Kannan Article
The Hindu Chennai Edition Metro Plus Page No 07 Advt for Gokulathil Kannan

அமுல் நிறுவனத்தையும், அதனுடைய ட்ரேட்மார்க் கார்ட்டூன் பற்றியும் தெரியாதவர்கள் இந்தியாவில் குறைவானவர்களே இருப்பார்கள். அவர்களுக்கு சென்ற மாதம் ஒரு சிறப்பான மாதமாகும். ஆமாம், அமுல் பேபியின் கார்ட்டூன் வர ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகளை நிறைவடைந்ததையொட்டி சிறப்பான கொண்டாட்டங்களை ஒழுங்கு செய்தார்கள். அதனைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. மிகவும் அருமையாக, ஒரு கார்ட்டன் ரசிகரால் எழுதப்பட்ட கட்டுரை இது, ஆகையால் க்ளிக் செய்து முழுமையாக படித்து மகிழுங்கள்.

 

The Hindu Chennai Edition Metro Plus Page 01 Dated Sunday 29th July 2012 Amul Spoof 50 Years Article
The Hindu Chennai Edition Metro Plus Page 01 Dated Sunday 29th July 2012 Amul Sppof 50 Years Headline
The Hindu Chennai Edition Metro Plus Page 01 Dated Sunday 29th July 2012 Amul Sppof 50 Years Article

இன்னும் இரண்டு நாட்களில் நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

11 comments:

  1. ஹ ஹா ஹா அந்த பெட்மன் போல உடை அணிந்த திருடன் மேட்டர் சூப்பர். அதனை முழுவதுமாக அளித்து இருக்கலாமே? எதற்க்காக அப்படி திருடினான் என்பதே ஒரு சுவையான கதையாக இருக்கக்கூடும்.

    ReplyDelete
    Replies
    1. நியூஸ் மொத்தமே அவ்வளவுதான் சார்.

      Delete
  2. நல்லதொரு செய்தித்தொகுப்பு நண்பரே.
    பகிர்வுக்கு நன்றி.
    நானும் காமிக் கானிற்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  3. பேட் மேன் திருடனா ? அப்படின்னு ஒரு கதை வந்துச்சே? சரிதானா தலை? நல்ல பதிவு இது!

    ReplyDelete
    Replies
    1. தலை,

      அது பேட்மேன் கிறுக்கனா?

      திகில் காமிக்ஸில் வந்தது.

      Delete
  4. சூப்பர் செய்திகள்
    தொடருங்கள் உங்கள் சேவைகளை :))
    .

    ReplyDelete
  5. Replies
    1. கொளுத்திப்போட்டது போதுமா?

      Delete
  6. Guys here is a great forum for tamil comics

    http://tamilcomicsjunction.forumotion.in

    Visit and have fun!

    ReplyDelete
  7. நண்பர் விஸ்வா,

    உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நினைக்கிறேன். விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails