காமிரேட்ஸ்,
வணக்கம். கடந்த மூன்று வாரங்களாக உடல் நிலை சரியில்லாத காரணங்களால், மருத்துவரின் ஆலோசனைப்படி முழுக்க முழுக்க பெட் ரெஸ்ட் எடுக்கும்படி ஆகி விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் இப்படி ஒரேடியாக ஓய்வு எடுத்தது கிடையாது என்பதால் ஆரம்ப நாட்களில் நன்றாக இருந்தாலும், மூன்றாவது நாளில் இருந்து போரடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கடுத்த இரண்டு வாரங்கள் கழிவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதில் ஒரே பொசிஷனில் சாய்ந்து படுத்து இருந்ததால் கழுத்து வலி வேறு.
கடந்த ஓரிரு நாட்களாக பரவாயில்லை என்பதாலும், இப்போது உடலில் ஓரளவு சக்தி கூடியிருப்பது போல தெரிவதாலும் இந்த பதிவு. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான பதிவுகள் மிஸ் ஆகி விட்டன. புதிய லயன் காமிக்ஸ் வெளியீடு, காமிக் கட்ஸ் செய்திகள், ஒரு முழு நீளக்காமிக்ஸ் கதை, காமிக்ஸ் சந்திப்பு, என்று பல. இன்று முதல் பதிவிட்டு அவற்றை சரிகட்ட முயலுமா என்று பார்ப்போம்.
சரி, இந்த மாதம் முழுக்க இப்படியே ஓடி விட்டது, முழுவதுமாக ரெஸ்ட் எடுத்துவிட்டு அடுத்த மாதம் முதல் பதிவிட ஆரம்பிக்கலாம் என்றால், ஞாயிறு இரவு மாலையில் நண்பர் "ஒலக காமிக்ஸ் ரசிகர்" போன் செய்து நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த நீய்ல் ஆர்ம்ஸ்ட்ராங் இறந்து விட்டார். அவர் சம்பந்தப்பட்ட பதிவு ஏதாவது இடுகிறீர்களா? என்று விசாரித்தார்.
நான் மனித எரிமலை நார்மன் போல பெருங்கோபம் கொண்டு அவரை திட்ட, அவர் உடனே "என்னிடம் மனிதன் நிலவுக்கு சென்றதைப்பற்றிய ஒரு அம்புலிமாமா கட்டுரை இருக்கிறது" என்று சொன்னார். சொன்னதோடில்லாமல் அதனை ஸ்கான் செய்து எனக்கு நேற்றிரவே அனுப்பியும் வைத்து விட்டார். கட்டுரையும் நன்றாகவே இருந்ததால் இந்த நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டு விடுவது என்று முடிவெடுத்து ஒரு மூன்று மணி நேரம் கஷ்டப்பட்டு டைப் அடித்து இந்த பதிவை வலையேற்றுகிறேன். நீய்ல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றி நாம் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவரது விக்கிபீடியா லிங்கை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அம்புலிமாமா - ஆகஸ்ட் 1969: மனிதன் நிலவில் காலடிஎடுத்து வைத்த பிறகு கண்டிப்பாக தமிழர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை உருவாகி இருக்கும். சிறு வயதில் பாட்டி நிலவில் வடை சுட்ட கதையை சொல்லியே வளர்த்தார்கள். இப்போதுதான் நிலவும் பூமி போல ஒரு இடம்தான் என்றாகி விட்டதே, அதன் பிறகாவது கதையின் அமைப்பை மாற்றினார்களா? அல்லது சிறு குழந்தைகள் நாட்டு நடப்பை தெரிந்து கொண்டு கதையை மாற்ற சொல்லி போராடினார்களா? நம்ம சிபி அண்ணன் போன்ற புத்திசாலி குழந்தைகளே இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.
இந்த பதிவை டைமிங் பதிவு என்று சொல்பவர்கள் அம்புலிமாமா ஆசிரியரை பற்றி சிறிது யோசிக்க வேண்டும். மனிதன் நிலவில் கால பதித்த அந்த நேரத்தில் சரியாக நமது புராண இதிகாசங்களினபடி நிலவினைப்பற்றிய முழு வரலாற்றினையும், அதற்க்கு அடுத்து லேட்டஸ்ட் அப்டேட் ஆக மனிதனின் நிலவுப் பயணத்தை பற்றியும் கட்டுரையை அழகாக அமைத்து இருக்கிறார். முதலில் நமது புராண வரலாற்றினைப் படிப்போம். இதனை எழுதியது யாரென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் உதவலாம்.
மனிதனின் நிலவுப் பயணம்: இந்த ஸ்கான் பக்கங்கள் இதழின் நடுவில் தனியாக பக்க இலக்கமிடப்பட்டு இருந்ததாக நண்பர் ஒலக காமிக்ஸ் ரசிகர் கூறுகிறார். அதாகப்பட்டது, ரெகுலர் இதழ் அச்சிடப்பட்ட பின்னர் இந்த விஷயம் பிரிண்ட் செய்யப்பட்டு நடுவில் இணைக்கப்பட்டு இருக்கலாம் என்பது அவரது வாதம். இந்த வாதம் சரியாகவும் இருக்கலாம்.
இந்த கட்டுரையை படிக்கும்போது திரு வாண்டுமாமா அவர்களின் உண்மையான தாக்கத்தை உணர்ந்தேன். இந்த கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டு இருந்தபோதிலும், நம்முடைய சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அவர்களின் கைவண்ணத்தில் இந்த கட்டுரை வந்திருந்தால் கண்டிப்பாக (கம்ப ராமாயணத்தில் சொல்லப்பட்டது போல) அழகுக்கு அழகு சேர்ந்தது போல இருக்கும். எந்த ஒரு விஞ்ஞான கட்டுரையையும் தன்னுடைய அழகான நடையால் ஒரு சுவாரஸ்யமான கதை போல மாற்றி கொடுக்கும் அந்த ரசவாத நிபுணரின் கைவண்ணம் யாருக்கு வரும்?
நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
// கடந்த மூன்று வாரங்களாக உடல் நிலை சரியில்லாத காரணங்களால், மருத்துவரின் ஆலோசனைப்படி முழுக்க முழுக்க பெட் ரெஸ்ட் எடுக்கும்படி ஆகி விட்டது //
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பாராக
.
நன்றி, சிபி அண்ணே.
Deleteஊரில் மழையா?
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
Deleteதாங்கள் குணமடைந்து வருவது அறிந்து மகிழ்ச்சி,மேலும் வலுவடைய பிரபஞ்சத்தின் ஆசியை கோருகிறேன்.சந்திரனுக்கு இவளவு கதைகளா,பெரும் பாலும் புராணக்கதைகள் படித்திருக்கிறேன்,விநாயகர் சந்திரன் கதை தவிர வேறு எதுவும் தெரியாது,தங்களால் தங்களது நகைச்சுவை உணர்வுடன் இதனை அறிந்து கொண்டது மகிழ்ச்சியே......இதனை இந்த நிலையிலும் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும், தங்களை பதிவிட தூண்டிய உதவிய ,ஒலக காமிக்ஸ் ரசிகர் அவர்களுக்கும் நன்றி.கண்டிப்பாக வாண்டு மாமாவாக இருந்தால் அவரின் நடையில் இன்னும் மெருகேறியிருக்கும்.முதன் முதலில் சந்திரனில் காலடிஎடுத்து வைத்த மா மனிதர் மறைந்தாலும் அவரது சாதனை மறையாதே.................
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteதொடர்ந்த உங்களின் ஆதரவிற்கு.
உண்மைதான், வாண்டுமாமாவின் கை பட்டால் கட்டுரையும் கதையாகுமே?
வெல்கம் பேக்.
ReplyDeleteதொடர்ந்து பதிவிட்டு கலக்குங்கள். அதே சமயம் தங்கள் உடல் நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
ராஜேஷ். கே
நன்றி ராஜேஷ்.
Deleteஹாய் விஷ்வா
ReplyDeleteசுவாரசியமான பதிவு. சீக்கிரமே உடல் நலம் தேறி வழமை போல பல பதிவுகளை இடுங்கள்.
நன்றி விமல்.
Deleteஆமாம், சரித்திர புராதான கதைகள் என்றுமே சுவாரஸ்யம் தருபவையே.
வான வெளிச் சந்திரன் கட்டுரை படிக்க எளிமையாக அதே சமயம் பல நுண்ணிய தகவல்களடங்கியதாக இருந்தது. சில விஷயங்கள் முதல் முறைப் படித்து தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteஎனக்கு சூரியனும் சந்திரனும் ஒரு திருமணதிற்கு சென்று வரும் கதை மட்டுமே தெரியும். (அதான் பாஸ், நகத்துல கொஞ்சம் ஸ்வீட் ஐட்டங்களை அமுக்கி வரும் கதை).
Deleteநன்றி பின்னோக்கி சார்.
Deleteஆமாம், அந்த கதைகள் சில எனக்கும் முதல் முறையே. அம்புலிமாமாவிற்கு நன்றி.
அன்னாருக்கு அஞ்சலி.
ReplyDeleteR.I.P.
அண்ணே,
Deleteஅடுத்த முறை கொஞ்சம் நல்ல ஸ்கான்களை அனுப்ப முயலுங்கள்.