Pages

Friday, August 31, 2012

40 சந்திரனே சாட்சி: காமிக்ஸ்–>தொடர்கதை->நாவல்:தமிழில் வாண்டுமாமாவின் புது முயற்சி

காமிரேட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். முதலில் என்னுடைய உடல் நலம் குறித்தான அனைத்து விசாரிப்புகளுக்கும் நன்றி. இப்போதுதான் நாளொன்றுக்கு ஒரு பதிவு இடம் அளவிற்கு தேறி விட்டேனே? அனைவரின் அன்பிற்கும் நன்றி. இதற்காக நான் என்ன செய்து விடப்போகிறேன், வேறு சில (மொக்கையான) பதிவுகளை இடுவதைத் தவிர?

பதிவிற்கு செல்லும்முன் தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியும், சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியுமான திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிடித்த எழுத்தாளர் வாண்டுமாமாவின் இந்த பதிவினை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன். தன்னுடைய பதின்ம வயதினை முடித்துக்கொண்டு இருபதுகளில் காலடி வைக்கும் அன்னாரை வாழ்த்த (எனக்கு) வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழின் மிகச்சிறந்த கதை சொல்லியாகிய வாண்டுமாமா அவர்களைப்பற்றி ஒரு முழுநீள வாழ்க்கை குறிப்பு அடங்கிய பதிவு இடும்வரை அவரைப்பற்றி இணையத்தில் தேடினால் கிடைத்தது நம்ம சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அய்யம்பாளையம் சாரின் இந்த பதிவு மட்டுமே. இந்த பதிவுமேக்கூட நண்பரை தொடர்ந்து இம்சை செய்து இடப்பட்ட ஒன்று என்பது உள்நாட்டு தகவல்.

சென்ற தலைமுறையின் தலை சிறந்த கதை சொல்லியைப் பற்றி இந்த தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லையென்றாலும், வரலாற்றின் பக்கங்களில் இவரது பங்கீடு குறித்து தெரிவிக்கப்படவில்லை எனில் அவமானம் தமிழின் தலை சிறந்த கதை சொல்லிக்கு அல்ல,  தமிழுக்கும், வரலாற்றிக்கும் தான்

கல்கி வார இதழில் வந்த சந்திரனே சாட்சி கதைக்கான விளம்பரம்

Ad for Chandirane Satchi

அதனால்தான் அப்போது முதல் இன்று வரை முடிந்தவரை வாண்டுமாமா அவர்களின் புத்தகங்களைப்பற்றியும், தகவல்களையும் இந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். நம்மைப்போலவே பல நண்பர்களும் அவரைப்பற்றி எழுதி வருகிறார்கள். Children of all ages என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு எழுத்தாளர் வாண்டுமாமா. அவரை சிறுவர் இலக்கியத்தின் சுஜாதா என்று நான் அடிக்கடி சொல்வேன். இப்படி சொல்வதால் சுஜாதா அவர்களுக்குத்தான் பெருமை என்பது உண்மையும் கூட.

ரீ பூட்டிங்: சமீபத்தில் உலக அளவில் இந்த ரீ பூட்டிங் என்கிற விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. தி அமேசிங் ஸ்பைடர்மேன், வரப்போகும் சூப்பர்மேன் போன்றவை அனைத்துமே ரீபூட்டப்பட்ட / படப்போகிற படங்களே. இந்த ரீபூட் பற்றி காமிரேட் லக்கிலூக் என்கிற யுவகிருஷ்ணா என்ன சொல்கிறார் என்பதை தெரிந்துகொண்டு தொடர்ந்து படியுங்கள்:

‘ரீபூட்’ என்றால் ’ரீபோக்’ மாதிரி ஏதோ பிராண்ட் என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தேன். ஏனெனில் இச்சொல்லுக்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தையும், வெவ்வேறு விளக்கத்தையும் தந்து குழப்பித் தள்ளினார்கள். அண்ணன் பைத்தியக்காரன் தந்த விளக்கம்தான் துல்லியமான ஒரு தெளிவினை தந்தது. அதாவது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா காமெடிதான் ரீபூட். “அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மறுபடியும் மொதல்லேருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்”. இவ்வளவு ஈஸியான விஷயத்தை ஏன் அப்படி இப்படியாக இடியாப்பச் சிக்கலாக நம் மக்கள் புரிந்துகொள்கிறார்களோ தெரியவில்லை.

தமிழில், காமிக்ஸ் வடிவத்தில் அப்படி ஒரு ரீ பூட் நடந்துள்ளது. அதுவும் முற்றிலும் மாறுபட்ட வடிவில்.அதனைப்பற்றியதே இந்த பதிவு. தமிழில் சிறுவர் இலக்கியம் சம்பந்தப்பட்ட எழுவாகினும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள Trail-Blazer வாண்டுமாமா அவர்களே இந்த ரீ பூட் விஷயத்திலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதோடில்லாமல் வித்தியாசமான ஒரு விஷயமாக பட்டதால் இந்த பதிவில் பின்னணி விவரங்களுடன் அரங்கேறுகிறது. இந்த ரீ பூட் நடந்ததால் திரு வாண்டுமாமா அவர்களின் பத்திரிக்கை வேலைக்கே ஆபத்து வந்ததும், பின்னர் அது பூமாரங் ஆக மாறி அவர் பணிபுரிந்த இதழின் எடிட்டரின் வேலைக்கு வெட்டு வைத்ததும் கிளைக்கதைகள்.

Circa 1962. கல்கி வார இதழில் தொடர்ந்து Sword & Sorcery என்கிற வகையில் வரும் மந்திரஜால,சரித்திரக் கால கதைகளையே சித்திரக்கதை வடிவில் வழங்கி வந்த திரு வாண்டுமாமா அவர்கள் ஒரு சமூக நாவலை சித்திரக்கதை வடிவில் வழங்க எண்ணினார். அவரது பல முயற்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டிய கல்கி நிர்வாகமும் இசைந்திட, ஓவியர் வினுவின் கூட்டணியுடன் ஒரு ஃக்ரிஸ்ட்மஸ் ஸ்பெஷல் கல்கி இதழில் ஆரம்பித்ததுதான் இந்த சந்திரனே சாட்சி சித்திரக்கதைத்தொடர்.

 

Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page (ஸ்கான் உபயம் - காமிரேட் ஷிவ் அவர்கள்)
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02

சித்திரக் கதை வடிவில் வெளிவந்த இந்த கதையானது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை சொல்லவும் வேண்டுமோ? அப்படி வரவேற்ப்பை பெற்ற இந்த கதை சுமார் இருவது வருடங்கள் கழித்து வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் புயல் வீச காரணமாகவும் இருந்தது. கல்கி இதழில் தனது திறமையால் பிரகாசித்த வாண்டுமாமா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோகுலம் என்கிற சிறுவர் பத்திரிக்கையும் ஆரம்பித்தனர். அது ஆறு ஆண்டுகள் சிறப்பாக வெளிவந்துக்கொண்டிருக்கும் வேளையில், 1977ம் ஆண்டு ஜூன் மாதம் பல பிரச்சினைகளால் கல்கி நிறுவனமே பத்திரிக்கைத் தொழிலை நிறுத்தினர். அப்போது அங்கிருந்து வெளியேறிய வாண்டுமாமா பின்னர் குங்குமம் இதழில் பணியாற்றிவிட்டு மறுபடியும் கல்கி துவங்கியதும் கோகுலத்தின் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 1978ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதியிட்ட இதழுடன் கோகுலம் இதழில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார்.

பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு அப்போதுதான் தினமணிக் கதிர் என்கிற  அற்புதமான பத்திரிக்கை வந்துக்கொண்டு இருந்தது. அதில் வாண்டுமாமா அவர்கள் துணை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே அந்த எழுத்தாளருக்கும் இவருக்கும் ஒரு சிறிய வரலாறு உண்டு. இருந்தாலும் சகஜமாக பணிபுரிந்துக்கொண்டு இருந்தார் வாண்டுமாமா. அப்போது மலேசியாவில் வெளிவந்துக்கொண்டு இருந்த தமிழ் நேசன் என்கிற பத்திரிக்கையில் இருந்து வாண்டுமாமா அவர்களிடம் ஒரு தொடர்கதையை கேட்க, அவர் மறுத்து விட்டார். ஏனென்றால் அப்போது அவர் பணிபுரிந்து கொண்டிருந்த (எக்ஸ்ப்ரெஸ் க்ரூப்) நிறுவனத்தில் ஊழியர்கள் மற்ற பத்திரிக்கைகளில் எழுதக்கூடாது என்பது ஒரு விதியாக இருந்தது.

ஆனாலும் தமிழ் நேசன் நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்த, தன்னுடைய சித்திரத் தொடர்கதையாகிய சந்திரனே சாட்சியை எழுத்துக் கதை வடிவில் தொடர்கதையாக வெளியிட ஒப்புக் கொண்டார் வாண்டுமாமா. டெக்னிகலாக பார்த்தால் இரண்டு விஷயங்களில் வாண்டுமாமா விதிகளை மீறாமல் நடந்துக்கொண்டு இருக்கிறார். ஒன்று:இந்தியாவில் வந்துக்கொண்டிருந்த எந்த பத்திரிக்கையிலும் அவர் எழுதவில்லை இரண்டு: இது அவர் ஏற்கனவே இருவது வருடங்களுக்கு முன்பாக எழுதியது. அதை ரீ பூட் செய்து வெளியிட்டு இருக்கிறார், அவ்வளவுதான்.

Vandumama Chandirane Saatchi July 1988 Cover Vandumama Chandirane Saatchi July 1988 Credits Vandumama Chandirane Saatchi July 1988 Title Page
Vandumama Chandirane Saatchi July 1988 Cover Vandumama Chandirane Saatchi Credits Vandumama Chandirane Saatchi 1st Page

ஆனால் அவர் மீது மிகுந்த கடுப்பில் இருந்த அந்த பத்திரிக்கை ஆசிரியர் தொடர்ந்து இதுபோல பல பிரச்சினைகளை கிளப்பினார். அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நலம் விரும்பியான ஒருவருக்கு வாண்டுமாமா வகித்த துணை ஆசிரியர் பதவியை கைமாற்றவே இத்துனையும். ஆனால் முற்பகல் செய்யின் குறளுக்கேற்ப அந்த பத்திரிக்கை ஆசிரியரையே வேளையில் இருந்து நீக்கியது நிர்வாகம். இப்படியாக வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் ஒரு புயலை வீசிவிட்டே இந்த சாட்சி சென்றது என்றால் அது மிகையல்ல.

இந்த தொடர்கதை தொகுக்கப்பட்டு முழுநீள நாவலாக வானதி பதிப்பக வெளியீட்டில் வந்தபோது (இத்துனை விஷயங்கள் நடந்து இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல்) மிகுந்த சிரத்தையுடன் அழகாக வாண்டுமாமா எழுதியுள்ள இந்த முன்னுரையை படியுங்கள்.

 

Vandumama Chandirane Saatchi July 1988 வாண்டுமாமா முன்னுரை Vandumama Chandirane Saatchi Story 1st Page
Vandumama Chandirane Saatchi Foreword Vandumama Chandirane Saatchi Story 1st Page

கதை சுருக்கம்: பிரபல வக்கீல் சேகரை தேடிக்கொண்டு ஒரு முதியவர் வருகிறார். ஒரு வேலையை அவரிடம் கொடுக்க முன்வரும் அவர் மயங்கி விழுந்து கோமாவிற்கு சென்றுவிடுகிறார். சிறு சிறு கட்டங்களாக, ஒன்றுமே தெளிவில்லாமல், சம்பந்தமில்லாமல் சில குறிப்புகள் மட்டுமே இருக்க, அவற்றை ஒன்று சேர்த்து ஒரு Zig-Zag புதிரை அமைதியாக,அலட்டல் இல்லாமல் ஷெர்லக் ஹோல்ம்ஸ்,சங்கர்லால் பாணியில் துப்பறிந்து இடியப்ப சிக்கல்களை தீர்ப்பதே இந்த கதை.

இந்த புத்தகமானது இன்றும் வானதி பதிப்பகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

வானதி பதிப்பகம்/திருவரசு பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600017
Ph: +9144-24342810

தியாகராய நகரில் பாண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி (ICICI வங்கி ATM எதிரில்) உள்ள பூக்கடை சந்தில் சென்றால் (Left) அங்கு தியாகராயர் நகரின் தபால் ஆபிஸ் இருக்கும். அதன் எதிரில் இருக்கும் தெருதான் தீனதயாளு தெரு. இரண்டாவது மாளிகை நம்ம வானதி பதிப்பகம்.

நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

பின் குறிப்பு - வாண்டுமாமா அவர்களைப்பற்றிய ஏனைய பதிவுகளுக்கான லிங்குகள்:

 

 • வாண்டுமாமா அவர்களின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை -ஒரு சிறப்பு பார்வை-கிங் விஸ்வா-தமிழ் காமிக்ஸ் உலகம்

 • வாண்டுமாமாவின் கனவா? நிஜமா? தமிழின் முதன்மையான சித்திரக்கதை-தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு

 • வாண்டுமாமாவின் தேச தேசக் கதைகள் - உலக நாடுகளின் சிறந்த கதை தொகுப்பு

 • ஒற்று உளவு சதி வாண்டுமாமா 190* Not அவுட் வாண்டுமாமாவின் அற்புதமான உளவாளிகளின் குறிப்பேடு

 • வாண்டுமாமா அவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் - பூந்தளிரில் வந்தவை - தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு

 • எதிர்நீச்சல்-வாண்டுமாமாவின் வாழ்க்கை வரலாறு-கங்கை புத்தக நிலைய வெளியீடு-தமிழ் காமிக்ஸ் உலகின் சிறப்பு பதிவு

 • சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 2

 • சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 1

 • வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு + அவர்களின் லேட்டஸ்ட் படம் கொண்ட கிங் விஸ்வாவின் பதிவு

 • வாண்டுமாமா குறித்த விக்கிபீடியா இடுகை

 • வாண்டுமாமா சித்திரக்கதைகள் 1 -  ரத்தினபுரி ரகசியம் - காமிக்ஸ் பூக்கள் சிறப்பு விமர்சனம்

 • பூந்தளிரின் முதல் இதழ் பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு: காமிக்ஸ் பூக்கள்

 • பூந்தளிரின் முதல் வருட இதழ்களையும், கதைகளை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு

 • வாண்டுமாமா அவர்களை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான ஒரு அறிமுகம்

 • வாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதைகளை பற்றிய சிறந்த பதிவு

 • வாண்டுமாமா எழுதிய திரைவிமர்சனம் பற்றிய பதிவு

 • கனவா நிஜமா குறித்த நண்பர் சிவ்வின் பதிவு

 • சி.ஐ.டி.சிங்காரம் குறித்த நண்பர் சிவ்வின் பதிவு

 • வாண்டுமாமா அவர்கள் எழுதிய சினிமா விமர்சனம்

 • 40 comments:

  1. பல அருமையான,கேள்விப்படாத தகவல்களை உள்ளடக்கிய அருமையான பதிவு.

   நண்பருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

   ராஜேஷ் கே.

   ReplyDelete
  2. அது என்னமோ தெரியவில்லை, இன்னமும் பல வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் விற்பனையாகாமலேயே இருக்கின்றன.

   ஸ்கான்கள் அருமை.

   பதிவுமழை தொடரட்டும்.

   ராஜேஷ் கே.

   ReplyDelete
   Replies
   1. ராஜேஷ் K - புத்தகங்கள் விற்பனை ஆகாமல் இருக்க பல காரணங்கள். இருந்தாலும் நம்மை போன்றவர்கள் அந்த புத்தகங்களை வாங்கி நண்பர்களுக்கு பரிசாக அளிக்கலாமே?

    புலி வளர்த்த பிள்ளை, துப்பறியும் புலிகள், மர்ம மனிதன், கண்ணாடி மனிதன், சந்திரனே சாட்சி என இந்த புத்தகங்கள் எல்லாமே இருவது ரூபாய்க்குள் தான் அடக்கம்.

    Delete
   2. //கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா

    உண்மையுடன், வருந்துவதற்குரிய விஷயம்...//

    உண்மைதான். நம்மால் ஆனதை முயற்சிப்போம். மாற்றுவோம்.

    ஐநூறு புத்தகங்கள் விற்றால் வாண்டுமாமாவின் சித்திரக் கதைகளை மறுபதிப்பு செய்வேன் என்கிறார் வானதி பதிப்பக நிர்வாகி. என்ன சொல்கிறீர்கள்?

    Delete
   3. வாங்க விரும்பும் நண்பர்கள் அனைவரும் ஒரு குழு அமைத்து 500 பேரை திரட்டுவோமே,ஈரோடு நண்பர்கள் அனைவரும் தயாரென நினைக்கிறேன்,என்னையும் இதோடு சேர்த்து கொள்ளுங்கள்,மீதி பேரை அவரவர் வழியில் திரட்டுவோமே..............

    Delete
  3. பல அருமையான,கேள்விப்படாத தகவல்களை உள்ளடக்கிய அருமையான பதிவு.

   நண்பருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

   ராஜேஷ் கே.

   ReplyDelete
  4. ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'முகமூடி'.மிஷ்கின் இயக்க, கே இசையமைத்து இருக்கிறார். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.

   ஒரு சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருப்பதாக மிஷ்கின் அறிவித்த போது, சூர்யா,விஷால், ஆர்யா என பல பேரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஜீவா. தன் நெருங்கிய நண்பரான நரேனை இப்படத்தின் வில்லன் ஆக்கினார் மிஷ்கின்.

   'மிஸ் இந்தியா' அழகி பூஜா ஹெக்டே இப்படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் எப்படி சூப்பர் ஹீரோவாக உருவாகிறான் என்பதை திரைக்கதையாக்கி இருக்கிறார் மிஷ்கின்.

   தமிழில் வெளிவரும் முதல் சூப்பர் ஹீரோ படம் 'முகமூடி' என்பதால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் FIRST LOOK TEASER, போஸ்டர்கள் என ஜீவா சூப்பர் ஹீரோ உடையில் இருக்கும் காட்சிகள் வெளியானபோது திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.

   'முகமூடி' படத்தின் இசையை விஜய் வெளியிட்டார். 'வாய மூடி சும்மா இருடா', 'நாட்டுல..', ' மாயாவி..' ஆகிய பாடல்கள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 'வாய மூடி சும்மா இருடா' பாடல் இளைஞர்களின் காலர் டியூனாகவும், அனைத்து FM ரேடியோக்களில் அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டும் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

   ' இவன் புரூஸ்லி, இவன் காதல், இவன் உலகம், ஒரு அசாத்தியமான சவாலை எதிர்கொள்ளும்போது, இவன் தன்னை உணர்கிறான், முகமூடி பிறக்கின்றான்' என படத்தின் டிரெய்லரிலே கொஞ்சம் போல கதையை கூறி இருப்பது இப்படத்திற்கு பலம்.

   'யுத்தம் செய்' படத்தில் பின்னணி இசையால் அனைவரையும் கவர்ந்த இசையமைப்பாளர் கே, இப்படத்தில் பாடல்கள் மூலமே அனைவரையும் தன்வசமாக்கி இருக்கிறார்.


   மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே ஒவ்வொரு காட்சியையும் மிகவும் மெனக்கெட்டு எடுத்து இருப்பார். அதிலும், இப்படம் சூப்பர் ஹீரோ படம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார்.


   ஜீவா இப்படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். 8 கிலோ கனமுள்ள சூப்பர் ஹீரோ உடையைப் போட்டுக்கொண்டு சண்டையிடுவது என மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

   யு.டிவி நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ்ப் படத் தயாரிப்பு என்பதால் 'முகமூடி' படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.


   FIRST LOOK, டிரெய்லர், பாடல்கள் என அனைத்திற்குமே கிடைத்து இருக்கும் வரவேற்பைப் போலவே படத்திற்கும் கண்டிப்பாக வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது முகமூடி படக்குழு.

   குழந்தைகளைக் கவரும்வண்ணம் காட்சிகள் நிறைந்திருக்கும் 'முகமூடி' ஆகஸ்ட் 31ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கிறது.

   ReplyDelete
  5. 1962 - ஆம் ஆண்டா... இவ்வளவு வருடங்கள் கழித்து வலையேற்றுவது வியப்பாக இருக்கிறது... நன்றி...

   திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

   ReplyDelete
  6. ஐயம்பலயத்தாரின் எம்பளத்தை பார்த்து முதலில் அவரின் பதிவே என எண்ணினேன்.முதலில் பூந்தளிர் ,அம்புலிமாமா என அன்னாரின் திறமைகளை ரசித்திருக்கிறேன்.அப்போதெல்லாம் பதிலிட்டது கிடையாது ,அவரும் தங்களை போன்றட்தொரு மிக சிறந்த பதிவீட்டாளர் ,அவருக்கு பெருமை சேர்க்கும் அன்னாரின் பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக விதமாக பதிவிட்டுள்ள தங்களை என்ன சொல்லி பாராட்ட........................... நானும் அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.வாண்டு மாமா கதைகளை நான் பள்ளி லைப்ரரியில் கல்கி தீபாவளி மலரில் வண்ணத்தில் வரும் சிறு கதைகளுக்காக பழைய புத்தக தொகுப்பை எடுத்து ஒழித்து வைத்து படித்தது மலரும் நினைவுகள் ..............பண்டைய உலகில் பறக்கும் பாப்பா ,என பறக்கும் பாப்பாக்கள் கதைகள் நிறைய வெளியிட்டுள்ளார் என நினைக்கிறேன்.சுவையான நினைவுகள்,கதைகள்......சந்திரனே சாட்சி....இப்புத்தகத்தினை வாங்க ஆவலாய் உள்ளேன்..............

   ReplyDelete
   Replies
   1. நண்பரே,
    தொடர்ந்த தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி. வாண்டுமாமா அவர்களை படிக்காமல் தங்களின் பதின்ம வயதை கழித்தவர்கள் ஏதோ பாவம் செய்தவர்கள் என்று நண்பர் இரவுக் கழுகு கூறுவார். அது உண்மைதான்.

    //அவரும் தங்களை போன்றட்தொரு மிக சிறந்த பதிவீட்டாளர்//

    மறுக்கிறேன். முத்து விசிறி, ஐய்யம்பாளயத்தார் போன்றோர் திறமையான காமிக்ஸ் ரசிகர்கள். அவர்களின் எண்ணங்கள் ரசனைக்குரியதாக இருக்கும். நானெல்லாம் அவர்களின் ரசிகன். ரசிகனும் கலைஞனும் எப்போதுமே ஒரே ஒப்பீட்டில் இருக்க மாட்டார்கள்.

    //சந்திரனே சாட்சி....இப்புத்தகத்தினை வாங்க ஆவலாய் உள்ளேன்..............//

    தயவு செய்து வாங்குங்கள் நண்பரே.

    Delete
  7. neenda nalgaluku perugu alagana padivu. nandri.

   ReplyDelete
   Replies
   1. நன்றி மிஸ்டர் மர்மம் அவர்களே.

    Delete
  8. ஹாய் விஸ்வா,,,,,,,,,, அது என்ன writer சாவியால் தான்,,,,,, வாண்டுமாமா ,,,தின மணி கதிர் ல் இருந்து விலகினார் ,,,,என்று ஆதாரம் இல்லாத குற்ற சாட்டு சொல்லுறிங்க?,,,,,,,, writer சாவி இருந்த period தான் தின மணி கதிர் ன்,,,,,,பொற்காலம் ,என்று கருத படுகிறது ,,,,,,,, அதுவும் இல்லாமல் ,,,,,ராஜேஷ்குமார் ,,,சுபா,,,பட்டுகோட்டை பிரபாகர் ,,,,,, என்று பல எழுத்தாளர்களை ,உருவாக்கியதே ,,,அவர்தான் ,,,,,, இதை நான் சொல்ல வில்லை ,,,,, அந்த எழுத்தாளர்களே சொன்னது ,,,, ,,, உங்களிடம் இருந்து இந்த மாதிரி ஆதாரம் இல்லாத குற்றசாட்டு நான் எதிர் பார்க்க வில்லை ,,,,,,,,,,
   நண்பரே ,,, உடம்பை பார்த்து கொள்ளுங்க ,,,,,,,,, spinalcard problem ஆ ?,,,,,,,,,, namba எடி ன் ,blog பக்கமே உங்களை காணோம் ,வேலைபளுவா?,,,,,,,,,,,,
   காமிக்ஸ் வேட்டை உம் சில கசப்பும் ,,,,,,,,, பதிவுக்கு ,,,,,,, உங்க கமெண்ட் போடுவீங்க என்று ஆவலோடு எதிர் பார்த்தேன் ,,,,,,,, ,,,,,,, ஒரு காமிக்ஸ் ரூபா 1000 வரை வாங்குவது பற்றி ,,,,,,, உங்கள் கருத்து?,,,,,,,பெப் இருக்கவன் வாங்கட்டும் ,,,,,,,, என்று நினைகிறீங்களா ?,,,,,,,,,,,,,
   anyway takecare ,,,,,,,,,,friend
   அப்புறம் ,,,,ஒரு விஷயம் ,,,,,, வாண்டுமாமாவிலேயே இருக்காதீங்க ,,,,,,,, என்டமுரி வீரேந்திர நாத் என்ற தெலுகு writer ன் தமிழ் மொழிபெயர்ப்பு அல்லயன்ஸ் ல் கிடைகிறது ,,,, அவர் ன் பர்ண சாலை என்ற புத்தகம் படிங்க ,,,, சொக்கி போவிங்க ,,,,,,,நீங்க ரெஸ்ட் ஆ இருகிரத்தாலே,,,,,,, ஒரு நட்பின் அடிப்படையில் சொல்லுறேன் ,,,,, தப்பா நினைகாதீங்க,,,,,,,,,,,,,,,,,,,,

   ReplyDelete
  9. லூசு பையன்,

   ஏற்கனவே ஒரு முறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன். தேவை இல்லாத, ஆதாரமற்ற விஷயங்களுக்கு எல்லாம் பதில் சொல்லுவது என்னுடைய வழக்கம் அல்ல. அநேகமாக போன முறை உங்களுக்கு பதில் சொல்லி இருந்தது தவறோ என்று கூட யோசிக்க தோன்றுகிறது.

   1 பதிவை முழுமையாக படிக்கவும். எங்கேயுமே நான் அந்த எழுத்தாளரின் பெயரை சொல்லவில்லை. நீங்களாகவே ஊகித்துக் கொண்டு (அதவும் தப்பாக) இப்படி ஒரு கமென்ட் போட்டால் என்ன சொல்வது? இதற்கெல்லாம் பதில் சொல்வது எப்படி என்றே தெரியவில்லை. இதில் என்னை பார்த்து ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டு என்று குறை வேறு.

   2 சாவி அவர்களை எனக்கு ஓரளவிற்கு நேரிடை பழக்கம் இருந்ததால் அவருடைய கேரக்டர் பற்றி நன்றாகவே தெரியும். இந்த பதிவிலேயே வாண்டுமாமா அவர்கள் குங்குமம் இதழில் பணி புரிந்தார் என்று சொல்லி இருந்தேனே, அப்போது குங்குமம் ஆசிரியர் சாவி அவர்களே.

   3 வாண்டுமாமா அவர்கள் பணியில் இருந்து விலகினார் என்று நான் சொல்லவில்லை. விலக வேண்டி இருந்த அளவுக்கு சூழல் உருவாகியது என்றே சொல்லி இருப்பேன். இந்த பிரச்சினைக்கு பின்னர் அவர் தொடர்ந்து கதிரிலேயே பணி புரிந்து அவரது ரிட்டர்மென்ட் வயதை அடைந்து அதன் பின்னரே ஓய்வு பெற்று வெளியில் வந்தார்.

   4 அந்த பிரபலமான எழுத்தாளர் யார், அவருடைய பிரச்சினை என்ன என்பதும் எனக்கு தெரியும். இருந்தாலும் பொதுவில் அதனை விவாதிக்க எனக்கு மனது வரவில்லை. அதனாலேயே பெயரில்லாமல் எழுதி இருந்தேன். நீங்களாகவே இப்படி கற்பனை செய்துக்கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல.

   5 அவர் யார், என்ன பிரச்சினை என்று தெரிய விரும்பினால் தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பவும். சொல்கிறேன். இனிமேல் கமென்ட் இடும்போது நமக்கு என்ன தெரியும், நமக்கு தெரிந்தது உண்மையா? நாம் கேட்கும் கேள்வி சரிதானா என்றெல்லாம் யோசித்துக் கொண்டு பொதுவில் கேளுங்கள். அப்படி இல்லையெனில் எனக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பி உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் தேவை இல்லாமல் ஒரு நல்ல பத்திரிக்கையாளரின் பெயர் உங்களின் தவறான கற்பனையால் கெடும்.

   ReplyDelete
  10. ஐயம்பாளையத்தாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் கொஞ்சம் அவரை இம்சித்து இன்னும் சில பதிவுகளை வாங்கி விடுங்களேன்.

   இந்த கதை பாதி மட்டுமே படித்துள்ளேன். 'அவள் எங்கே' டைப் கதை என்று படுகிறது. கதை ஓப்பனிங் பக்க வசனங்கள் மற்றும் டீஸர் படங்கள் அருமை. எளிமையான அதே சமயம் அழகான ஓவியங்கள்.

   தினமணி கதிர் அரசியல் பற்றி சில செய்திகளை வாண்டுமாமா அவர்கள் தன் 'எதிர் நீச்சல்' புத்தகத்தில் எழுதி இருப்பதாக ஞாபகம்..

   ReplyDelete
   Replies
   1. //இன்னும் கொஞ்சம் அவரை இம்சித்து இன்னும் சில பதிவுகளை வாங்கி விடுங்களேன்.//

    ஆசைதான். ஆனால் அவர் இப்போது முக்கியாமான பொறுப்பில் இருப்பதால் அவரை இம்சிக்க விரும்பவில்லை. ஆனாலும் உங்களைப்போல எனக்கும் அவரது பதிவுகளை மாதம் ஒரு முறையாவது படிக்க ஆசை. என்ன செய்ய?

    //இந்த கதை பாதி மட்டுமே படித்துள்ளேன். 'அவள் எங்கே' டைப் கதை என்று படுகிறது. கதை ஓப்பனிங் பக்க வசனங்கள் மற்றும் டீஸர் படங்கள் அருமை. எளிமையான அதே சமயம் அழகான ஓவியங்கள்.//

    உண்மைதான். அறுபதுகளின் சாயல் ஒவ்வொரு விஷயத்திலும் பளிச் என தெரிகிறது. வசனங்கள், மனிதர்கள், நடை-உடை-பாவனை, சிந்தனை என்று அனைத்துமே ஒரு ப்ளாக் & வொயிட் ஸ்டைலை கொடுக்கிறது.

    இன்னுமொரு விஷயம் என்னவெனில், முதலில் கதையை படிக்கும்போது கொஞ்சம் ட்ராக் ஆகவே இருந்தது. ஆனால் உங்களின் ஸ்கான்களை அருகில் வைத்துக்கொண்டு மறுபடியும் படிக்க இன்டிரஸ்டிங் ஆகவும், ஒரு விதமான புதுமையாகவும் இருந்தது. அதே சமயம் நாவல் வடிவத்தை படிக்கும் வரை சித்திரக்கதையும் ஒரு கம்ப்ளீட் ஆக இல்லாமல் இருந்ததை போல ஒரு உணர்வு.

    //தினமணி கதிர் அரசியல் பற்றி சில செய்திகளை வாண்டுமாமா அவர்கள் தன் 'எதிர் நீச்சல்' புத்தகத்தில் எழுதி இருப்பதாக ஞாபகம்..//

    ஆமாம், மேலோட்டமாக சொல்லி இருப்பார். ஆனால் அந்த எழுத்தாளருக்கும் அவருக்கும் இருந்த பிரச்சினையை பற்றி புத்தகத்தில் எதுவும் சொல்லவில்லை.

    Delete
  11. சாரி friend ,,,,,,,,, எனக்கு தெரிந்து அந்த கால கட்டத்தில் கதிர் ல் சாவி தான்,,,,, இருந்தார் ,,,,,,,,, அதனால் ,,,,,, தான் ,,,,, name mention செய்தேன் ,,,,,,,,,,
   டியர் friend ,,,,,,,,, உங்களை நான்,குற்றமே ,சாட்ட வில்லையே ,,,,,,, இதில்,,,,,என்ன ஆதாரம் அல்லது ஆதாரம் இல்லாத ,,என்று புரிய வில்லை ,,,,,,,,,
   உங்களின் கருத்தை தான் கேட்டேன் ,,,,,,,,,,,,,,
   தலைவரே ,,,,,,,,,போன பதிவிலே,,,நீங்க சொன்ன கருத்தை நான் ஏற்று கொண்டு ,,, உங்கள் மேல் கொண்ட தப்பான அபிப்ராயத்தை மாற்றி கொண்டு ,,,,,,,நான் ,சாரி கேட்டு விட்டேன் ,,,,,, நீங்க 10 ரூபா விற்கு மேல பழைய காமிக்ஸ் வாங்க மாட்டிங்க ?
   பட் ,,,,1000 ரூபா விற்கு வாங்குகிறவர்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன என்றுதான் கேட்டேன் ,,,,,,,,,,,,,
   ஆனால்,எனக்கு பதில் சொன்னதே தவறு என்று நினைக்க தோன்றுகிறது ,,,,,,,,, என்பதே உங்கள் கருத்து ஆக இருப்பதால் ,,,,,,,,,,
   உங்களிடம் இருந்து விடை பெற்று கொள்கிறேன் ,,,,,,,,,,,,,
   sorry for all ,,,,,,,,,,,,,,,,,
   take care ur health ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

   ReplyDelete
   Replies
   1. //சாரி friend ,,,,,,,,, எனக்கு தெரிந்து அந்த கால கட்டத்தில் கதிர் ல் சாவி தான்,,,,, இருந்தார் ,,,,,,,,, அதனால் ,,,,,, தான் ,,,,, name mention செய்தேன் ,,,,,,,,,,
    டியர் friend ,,,,,,,,, உங்களை நான்,குற்றமே ,சாட்ட வில்லையே ,,,,,,, இதில்,,,,,என்ன ஆதாரம் அல்லது ஆதாரம் இல்லாத ,,என்று புரிய வில்லை//

    லூசு பையன், உங்களின் இந்த கேள்விக்கு உங்களின் முந்தைய கமெண்ட்டுதான் பதில்: //
    லூசு பையன்Friday, August 31, 2012 5:25:00 PM GMT+05:30
    ஹாய் விஸ்வா,,,,,,,,,, அது என்ன writer சாவியால் தான்,,,,,, வாண்டுமாமா ,,,தின மணி கதிர் ல் இருந்து விலகினார் ,,,,என்று ஆதாரம் இல்லாத குற்ற சாட்டு சொல்லுறிங்க?,,,,,,,, writer சாவி இருந்த period தான் தின மணி கதிர் ன்,,,,,,பொற்காலம் ,என்று கருத படுகிறது ,,,,,,,, அதுவும் இல்லாமல் ,,,,,ராஜேஷ்குமார் ,,,சுபா,,,பட்டுகோட்டை பிரபாகர் ,,,,,, என்று பல எழுத்தாளர்களை ,உருவாக்கியதே ,,,அவர்தான் ,,,,,, இதை நான் சொல்ல வில்லை ,,,,, அந்த எழுத்தாளர்களே சொன்னது ,,,, ,,, உங்களிடம் இருந்து இந்த மாதிரி ஆதாரம் இல்லாத குற்றசாட்டு நான் எதிர் பார்க்க வில்லை ,,,,,,,,,,//

    //நீங்க 10 ரூபா விற்கு மேல பழைய காமிக்ஸ் வாங்க மாட்டிங்க ?//

    இந்த ஸ்டேட்மென்ட் ஏன் என்னிடம் கேட்கப்படுகிறது? உண்மையிலேயே உங்களின் பெயர் புனைப்பெயர்தானா?

    அந்த கமென்ட்டை சொன்னவரிடம் சென்று கேளுங்கள்.

    //பட் ,,,,1000 ரூபா விற்கு வாங்குகிறவர்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன என்றுதான் கேட்டேன்//

    லூசு பையன், சமீப காலங்களில் நீங்கள் கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஆதாரம் இல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரே விஷயம் இதுதான். ஆயிரம் ரூபாய்க்கு காமிக்ஸ், ஐந்தாயிரம் ரூபாய்க்கு காமிக்ஸ் என்று. நீங்கள் சொல்லும் கடைகளில் எல்லாம் நான் இப்போதும் மிக மிக குறைந்த விலைக்கே புத்தகங்கள் வாங்குகிறேன்.புத்தகங்களின் விலையை விட கொஞ்சம் ரூபாய்தான் அதிகமாக இருக்கும். அவ்வளவே. இதை என்னால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஆனால் தன்னை யாரென்று வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாமல் மறைவில் இருந்து குருட்டாம்போக்கில் அம்பு விடுபவரிடம் எதற்கு இந்த ஆதாரங்களை விளக்க வேண்டும்?

    என்னுடைய கருத்து கேட்கும் அளவிற்கு நான் வொர்த் இல்லை என்பதுதான் இரண்டாவது விஷயம். நானொரு சாதாரண காமிக்ஸ் ரசிகன், என்னைப்போல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் இருக்கின்றனர்.

    And Remember, Your Sorry Doesn't bring a Dead Man Alive.

    Delete
  12. படம் சரியில்லை என்று "முகமூடி" படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. உண்மை என்னவென்று தெரியவில்லை.

   ReplyDelete
  13. முகமூடி - பேட்மேன் படங்களுக்கான spoof movie போல இருக்கு. ஒரே காமெடி தான்

   ReplyDelete
  14. கார்த்திகேயன், ஷிவ் - உண்மைதான். முதல் நாள் ஆன்லைன் ரிபோர்ட்டுகள் அப்படித்தான் வருகின்றன.

   படத்தில் என்னுடைய பங்களிப்பு சில Brand Incorporation மட்டுமே. ஆனால் தயாரிப்பு நிறுவனம் தந்த சிரமங்களை சொல்லி Reasoning கொடுக்க விரும்ப வில்லை. பார்ப்போம், Lets Wait & See for people's verdict.

   ReplyDelete
  15. டியர் கிங், பல நாட்களாக உங்கள் வலைபக்கத்திற்கு வந்து பதிவேதும் இட்டிருக்கிறீர்களா என்று பார்த்துவிட்டு செல்வேன். கடந்த சில நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லை. ஈமெயில் மூலம் உங்கள் வலைப்பக்கத்தில் உறுப்பினராக இணைந்திருந்தும், ஈமெயில் நோட்டிஃபிகேஷன் பெறுவதில் சில கோளாறுகள் இருக்கின்றது. விவரங்களை மெயிலில் அனுப்புகிறேன்.

   ReplyDelete
   Replies
   1. பாலாஜி சுந்தர் அவர்களே,

    வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    //ஈமெயில் நோட்டிஃபிகேஷன் பெறுவதில் சில கோளாறுகள் இருக்கின்றது. விவரங்களை மெயிலில் அனுப்புகிறே//

    சரிபார்க்கிறேன்.

    Delete
  16. nanber king viswa avergaluku ,thangalidem niria pasa vandum. but tamil il padivida enaku thiriyavillai.computer enaku pudusu.ungal tamil link il tamil translation vurugirathu.anal comments il eppadi kondu veruvathu ena sonnal nalamuden nadriuripen.

   ReplyDelete
   Replies
   1. Dear Mr Murmem,

    Kindly go to this link: http://google.com/transliterate

    In That there will be a drop down box with various language options starting with Hindi. In which Tamil will be there in the last few options. Click Tamil as the language.

    Now in the box below that, Type AMMA and hit enter button you will see that அம்மா is being shown there.

    So, all you have to do is this: type what you want to type in English and convert that into tamil by hiting enter button after every word and then copy the content in tamil and paste it here.

    If you want to speak to me, here is my mail id: Tamilcomicsulagam@gmail.com

    mail me with your number and you will get a call from me or i shall mail my number to you.

    Thanks for being here.

    Delete
   2. sir, ingathanay udikiradhu.pls tamil

    Delete
   3. எனக்கு டெஸ்ட் மெயில் அனுப்பவும் என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.

    mail id: Tamilcomicsulagam@gmail.com

    Delete
  17. // பதிவிற்கு செல்லும்முன் தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியும், சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியுமான திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிடித்த எழுத்தாளர் வாண்டுமாமாவின் இந்த பதிவினை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன்.//

   இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ( தாமதமான ) தலைவரே :))

   //தன்னுடைய பதின்ம வயதினை முடித்துக்கொண்டு இருபதுகளில் காலடி வைக்கும் அன்னாரை வாழ்த்த (எனக்கு) வயதில்லை என்பதால் வணங்குகிறேன். //

   அப்படீன்னா உங்களோட வயசு என்னன்னு கொஞ்சம் எனக்கு மட்டும் சொல்லுங்களேன் விஸ்வா அண்ணே ;-)
   ( நம்ம வயசு அவர விட கம்மிங்கோவ் ஹி ஹி ஹி )
   .

   ReplyDelete
   Replies
   1. // நம்ம வயசு அவர விட கம்மிங்கோவ் ஹி ஹி ஹி )//

    இது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    உண்மை உண்மை உண்மை உண்மை

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    உண்மை உண்மை உண்மை

    உண்மை உண்மை உண்மை உண்மை

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    இதில் எத்தனை உண்மை இருக்கிறதோ, அதுவே சிபி அண்ணனின் வயது. இருந்தாலும் அவர் யூத்து.

    Delete
   2. இந்த விஷயம் அண்ணன் சிபியாருக்கு தெரியுமா?

    Delete
   3. தெரியாது என்று சொன்னால் மேலும் ஒரு உண்மை அதிகரித்து விடும் நண்பரே ........

    Delete
  18. டியர் விஸ்வா!
   வாண்டு மாமா அவர்களை பற்றிய தங்களது பதிவு மிகவும் அருமை! இன்றைய இளைய தலைமுறை அவரை
   தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் . அவரது சிறந்த படைப்பான வீர விஜயன் பற்றியும் தாங்கள் வெளியிட்டால்
   நன்றாக இருக்கும்! சிறு வயதில் அதனை சேகரித்து பின் பார்வதி சித்ரகதையில் படித்த அனுபவம் இன்னும் போகவில்லை.

   ReplyDelete
   Replies
   1. Dear Ultimator,

    கண்டிப்பாக வீர விஜயன் பற்றி பதிவிடுகிறேன். ஆனால் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாக முயல்கிறேன்.

    Delete
  19. ஆர்ப்பாட்டமான பதிவு தலை! உங்க ஸ்கான் கிளிக் செய்தால் அடுத்த டேப்ல திறக்கும் செட்டிங்க்ஸ் சொல்லி தந்தால் கொஞ்சம் உதவியா இருக்கும்!

   ReplyDelete
  20. கிங் விஸ்வா அவேர்களே,முதலில் உங்களுக்கு மிக பெரிய நன்றி .. உங்கள் மூலம் தான் முதலில் நான் நமது புதிய lion வெளியீடு வருவது ,நமது விஜ்யன் சார் இன் புதிய ப்ளாக் அனைத்தும் கண்டுகொண்டேன் .மேலும் உங்கள் பதிவு அனைத்தும் அழகாக ,விரிவாக உள்ளது. ஆனால் தாங்கள் இப்போது வரும் lion ,muthu காமிக்ஸ் பற்றி அலசுவது இல்லையே ?ஏன் நண்பரே ?மூத்த பதிவர் ஆன உங்களிடம் அதை எதிர் பார்க்கிறோம் நண்பரே ...ப்ளீஸ்........

   ReplyDelete

  Dear ComiRade,

  Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

  Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

  Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

  Strictly No PDF Requests.

  Related Posts with Thumbnails