Pages

Showing posts with label 1983. Show all posts
Showing posts with label 1983. Show all posts

Friday, May 03, 2013

30 சுஜாதாவின் காமிக்ஸ் கதைகள் - சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவு

டியர் காமிரேட்ஸ்,

இன்று (மே மூன்றாம் தேதி) அமரர் சுஜாதா அவர்களின் பிறந்த நாளாகும். இன்று புதியதாக வந்த லயன் காமிக்ஸ் இதழை பற்றி பதிவிடலாம் என்று இருந்தபோது நண்பர் ஒருவர் காலையிலேயே தொலைபேசியில் அழைத்து சுஜாதாவின் கதைகளைப்பற்றியும் அவரது ஓவிய, காமிக்ஸ் ரசனை குறித்தும் ஒரு பதிவிட முடியுமா? என்று கேட்டார். சுஜாதாவின் தீவிர ரசிகரும், நமது லயன் காமிக்ஸ் ரசிகருமாகிய அவரின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவு.

Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition Cover நானறிந்த வரையில் சுஜாதா அவர்களின் கதைகள் இதுவரை மொத்தம் மூன்று காமிக்ஸ் வடிவில் வந்துள்ளன. அவை மூன்றுமே என்னிடம் இருக்கிறது இருந்தது என்பது பெருமை படத்தக்க விஷயமாக கருதுகிறேன். ஆகையால் அவற்றை பற்றி இன்று ஒரு பதிவு இடலாம் என்று சிந்தனை வந்தபோது, கடந்த சென்னை புத்தக திருவிழாவில் விகடன் வெளியிட்ட சுஜாதா சிறப்பு மலரில் வந்த கட்டுரை ஒன்றும் நினைவுக்கு வந்தது. சரி அந்த கட்டுரையையும் இந்த பதிவில் இணைத்து ஒரு முழுமையான பதிவாக்கிவிடுவோம் என்று முடிவெடுத்தேன்.

என் இனிய ஜீனோ: எண்பதுகளின் இறுதியில் தொலைக்கட்சியில் என் இனிய இயந்திரா என்றொரு தொடர் வெளியானது நம்மில் எத்துனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. பூனைக்கண் நடிகைகளில் முதல்வராகிய சிவரஞ்சனி (தெலுங்கில் இவரது பெயர் ஊஹா) ஹீரோயினாக நடித்த இந்த தொடர் சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஜீனோ என்று கூட அவர் எழுதினர்.

தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் வாசுகி என்று ஒரு மாதமிருமுறை இதழ் வந்துக்கொண்டு இருந்தது. இந்தியா டுடே அளவில் மிகவும் அருமையான பேப்பர் குவாலிட்டியில் அற்புதமான கட்டுரைகளையும், கதைகளையும் தாங்கி வந்துக்கொண்டு இருந்த அந்த இதழின் ஒரு தீபாவளி சிறப்பு மலரில் (1993 Dec) வந்த தொடர் கதை தான் என் இனிய ஜீனோ. சரி, மற்றுமொரு சுஜாதா தொடர் கதைதானே? இதில் என்ன சிறப்பு என்று யோசிக்க வேண்டாம். ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் முழு வண்ணத்தில் காமிக்ஸ் வடிவில் வந்ததே இந்த தொடர் கதையின் சிறப்பு அம்சம்.

கடைசியில் ஒரு வாரம் மட்டும் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் கதை மொத்தம் பதிமூன்று அத்தியாயங்கள் வந்து பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடர் கதையை இப்போது யாராவது மறுபடியும் ஒரு முழு வெளியீடாக பதிப்பித்தால் அற்புதமாக இருக்கும். கிழக்கு பதிப்பகம் பத்ரி நமது பதிவுகளை படிப்பவர். இதனை கவனிப்பார் என்றே நம்புகிறேன்.

 

Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 01 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 02
Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 01 Page 03 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 01
Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 02 Vasugi Tamil BiMonthly Dec 1993 Edition En Iniya Jeeno Part 02 Page 03

ப்ரிய சித்ரா மாத இதழ் - நைலான் கயிறு: நைலான் கயிறு நாவலானது சுஜாதாவின் நாவல்களில் மிகவும் முக்கியமானது ஆகும். சுஜாதாவின் முதல் நாவலான இந்த கதை  1968ல் குமுதம் இதழில் தொடர்கதையாக எழுதப்பட்டு 14 வாரங்கள் வெளிவந்தது.இந்த கதையை பற்றி ஏற்கனவே நமது ஈரோடு ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டு இருக்கிறார். இருப்பினும் அந்த கதையை பற்றிய முழுமையான விவரங்களை அளிப்பது இந்த பதிவின் சிறப்பாகும் என்பதால் இங்கே இடம்பெறுகிறது.

எழுத்தாளர் இந்துமதி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்துக்கொண்டு இருந்த மாதமிருமுறை இதழ் அஸ்வினி. எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்துக்கொண்டு இருந்த இந்த இதழின் வெளியீட்டாளர் கீதா வெங்கட்ராமன். எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்த காமிக்ஸ் பேரலையில் இவர்களும் கவரப்பட்டு ஒரு சித்திரக்கதை மாத இதழை ஆரம்பித்தனர். அதன் பெயர் ப்ரியசித்ரா என்பதாகும்.

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நாவல்களை சித்திரக்கதை வடிவில் கொண்டு வருவதே இவர்களின் எண்ணம். ப்ரியசித்ரா வெளியிட்ட  இதழ்கள் பின்வருமாறு:

  • நைலான் கயிறு - சுஜாதா (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்) November 1983.
  • ஹைவே 117 - புஷ்பா தங்கதுரை (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்)
  • மறுபடியும் தேவகி ரா.கி ரங்கராஜன் (ஓவியங்கள் ஜெயராஜ் - இருவண்ணத்தில் 64 பக்கங்கள்)

சரியான அளவில் வரவேற்ப்பு இல்லாததாலும் வேறு சில காரணங்களாலும் ப்ரியசித்ரா இதழ் மூன்றாவது இதழுடனே முடிவடைந்தது. இதற்க்கு பிறகு அடுத்த இதழ்கள் வரவில்லை என்பது பதிப்பாளர் அளித்த தகவல்.ஆகவே இந்த இதழின் முதல் பக்கம் உங்களின் பார்வைக்கு (என்னுடைய புத்தகம் நண்பர் ஒருவரால் கபளீகரம் செய்யப்பட்டதால் நண்பர் ஸ்டாலினின் ஸ்கான்கள்-மேம்படுத்தப்பட்டு-இங்கே அளிக்கப்படுகிறது. வெகு விரைவில் அந்த -முன்னாள்-நண்பரிடமிருந்து என்னுடைய புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டவுடன் புதியதொரு பதிவில் அட்டைப்படங்கள் மற்றும் பல சுவையான தகவல்களுடன் வெளியாகும்).

 

Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru 1st Page Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru Last Page
Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru 1st Page copy Priya Chithra Monthly Nov 1983 Issue No 1 Nylon Kyiru Last Page

இந்த ப்ரிய சித்ரா வெளியான அதே சமயத்தில் இதே ஐடியாவில் வேறொரு பதிப்பகமும் புத்தகங்களை வெளியிட்டது. அவற்றில் பெரும்பாலும் நமது ஆஸ்தான ஓவியர் செல்லம் வரைந்தார் என்பது சிறப்பு தகவல் அந்த பதிப்பகத்தின் முதல் சித்திரக்கதை எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் மூடுபனி. அந்த காமிக்ஸ் இதழ் என்ன என்பதை கமென்ட்டுகளின் மூலம் தெரிவிப்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு காத்திருக்கிறது .

சுஜாதா அவர்களை பற்றி ஓவியர் ஜெயராஜ் - விகடன் சுஜாதா மலர்: சென்ற சென்னை புத்தக திருவிழாவில் ஆனந்தவிகடன் வெளியீடான சுஜாதா மலரில் இரண்டே இரண்டு கட்டுரைகள் மட்டுமே ஒரளவுக்கு என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதில் முதலாவது சுஜாதாவின் நாவல்களை காமிக்ஸ் வடிவில் கொண்டு வந்த ஓவியர் ஜெயராஜின் நினைவு பின்னல்களை கொண்ட இந்த கட்டுரை.

திடீரென்று இந்த பதிவு இடப்படுவதால் வேறு சில விஷயங்களை இங்கே அரங்கேற்ற முடியவில்லை. விரைவில் நானும் சுஜாதா அவர்களை பற்றிய ஒரு முழுநீள பதிவினை இடுகிறேன். அதில் அவர் கைப்பட எழுதி எனக்கு அளித்த புத்தகம் மற்றும் அவரை நான் சந்தித்த சுவையான சம்பவம் பற்றியும் எழுதுகிறேன். அதுவரையில் இந்த பதிவில் ஜெயராஜ் அவர்களின் நினைவு நாடாக்களை சுழலவிட்டு அவற்றை ரசிப்போம்.

Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 03 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 04
Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 05 Vikatan Sujatha Malar Dec 2012 Artist Jeyaraj On Sujatha Page 06

சுஜாதாவுக்கு பிடித்த கார்ட்டூன்: சுஜாதா ஒரு மாஸ்டர் என்பது அவரை படித்த அனைவருக்கும் தெரியும் அவர் காமிக்ஸ் பற்றிய ஒரு ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது. ஓவியங்களையும், கார்ட்டூன்களையும் அவர் ரசித்தவர். அவருடைய விருப்பமான கார்டூன் பற்றி இந்த கட்டுரையில் அவர் குறிப்பிடுவதால் இந்த கட்டுரையும் இங்கே இடம் பிடிக்கிறது.

Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 02
Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 01 Vikatan Sujatha Malar Dec 2012 Sujatha on Cartoon Art Page 02

சென்ற இதழில் பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னமும் சரியான பதில் வராததால் ஒரு மறு ஒளிபரப்பு:

உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய போட்டி: செக்ஸ்டன் ப்ளேக் கதைகள் (அதாவது வாலியண்ட் இதழில் வந்த கதைகள்) ஒரு குறிப்பிட்ட காமிக்ஸ் ஹீரோவின் கதைகளுடன் "எதேச்சையாக" பொருந்தி இருக்கும். அந்த மற்ற ஹீரோவின் கதையும் தமிழில் வந்துள்ளது. அதனைப்பற்றி நமது முத்து விசிறி அவர்களும் பதிவிட்டுள்ளார்.

  • அந்த மற்றொரு ஹீரோ யார்?

  • அவரது கதைகளுக்கும் செக்ஸ்டன் ப்ளேக் கதைகளுக்கும் என்ன ஒற்றுமை?

  • அந்த மற்றொரு ஹீரோவின் கதை எந்த காமிக்ஸில் வந்தது?

இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நபர்களுக்கு நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் இருந்து A4 சைசில் வெளிவந்த ஆங்கில காமிக்ஸ் இதழ் ஒன்று இலவசமாக அளிக்கப்படும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Friday, August 31, 2012

40 சந்திரனே சாட்சி: காமிக்ஸ்–>தொடர்கதை->நாவல்:தமிழில் வாண்டுமாமாவின் புது முயற்சி

காமிரேட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம். முதலில் என்னுடைய உடல் நலம் குறித்தான அனைத்து விசாரிப்புகளுக்கும் நன்றி. இப்போதுதான் நாளொன்றுக்கு ஒரு பதிவு இடம் அளவிற்கு தேறி விட்டேனே? அனைவரின் அன்பிற்கும் நன்றி. இதற்காக நான் என்ன செய்து விடப்போகிறேன், வேறு சில (மொக்கையான) பதிவுகளை இடுவதைத் தவிர?

பதிவிற்கு செல்லும்முன் தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியும், சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியுமான திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிடித்த எழுத்தாளர் வாண்டுமாமாவின் இந்த பதிவினை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன். தன்னுடைய பதின்ம வயதினை முடித்துக்கொண்டு இருபதுகளில் காலடி வைக்கும் அன்னாரை வாழ்த்த (எனக்கு) வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழின் மிகச்சிறந்த கதை சொல்லியாகிய வாண்டுமாமா அவர்களைப்பற்றி ஒரு முழுநீள வாழ்க்கை குறிப்பு அடங்கிய பதிவு இடும்வரை அவரைப்பற்றி இணையத்தில் தேடினால் கிடைத்தது நம்ம சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அய்யம்பாளையம் சாரின் இந்த பதிவு மட்டுமே. இந்த பதிவுமேக்கூட நண்பரை தொடர்ந்து இம்சை செய்து இடப்பட்ட ஒன்று என்பது உள்நாட்டு தகவல்.

சென்ற தலைமுறையின் தலை சிறந்த கதை சொல்லியைப் பற்றி இந்த தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லையென்றாலும், வரலாற்றின் பக்கங்களில் இவரது பங்கீடு குறித்து தெரிவிக்கப்படவில்லை எனில் அவமானம் தமிழின் தலை சிறந்த கதை சொல்லிக்கு அல்ல,  தமிழுக்கும், வரலாற்றிக்கும் தான்

கல்கி வார இதழில் வந்த சந்திரனே சாட்சி கதைக்கான விளம்பரம்

Ad for Chandirane Satchi

அதனால்தான் அப்போது முதல் இன்று வரை முடிந்தவரை வாண்டுமாமா அவர்களின் புத்தகங்களைப்பற்றியும், தகவல்களையும் இந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். நம்மைப்போலவே பல நண்பர்களும் அவரைப்பற்றி எழுதி வருகிறார்கள். Children of all ages என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு எழுத்தாளர் வாண்டுமாமா. அவரை சிறுவர் இலக்கியத்தின் சுஜாதா என்று நான் அடிக்கடி சொல்வேன். இப்படி சொல்வதால் சுஜாதா அவர்களுக்குத்தான் பெருமை என்பது உண்மையும் கூட.

ரீ பூட்டிங்: சமீபத்தில் உலக அளவில் இந்த ரீ பூட்டிங் என்கிற விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. தி அமேசிங் ஸ்பைடர்மேன், வரப்போகும் சூப்பர்மேன் போன்றவை அனைத்துமே ரீபூட்டப்பட்ட / படப்போகிற படங்களே. இந்த ரீபூட் பற்றி காமிரேட் லக்கிலூக் என்கிற யுவகிருஷ்ணா என்ன சொல்கிறார் என்பதை தெரிந்துகொண்டு தொடர்ந்து படியுங்கள்:

‘ரீபூட்’ என்றால் ’ரீபோக்’ மாதிரி ஏதோ பிராண்ட் என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தேன். ஏனெனில் இச்சொல்லுக்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தையும், வெவ்வேறு விளக்கத்தையும் தந்து குழப்பித் தள்ளினார்கள். அண்ணன் பைத்தியக்காரன் தந்த விளக்கம்தான் துல்லியமான ஒரு தெளிவினை தந்தது. அதாவது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா காமெடிதான் ரீபூட். “அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மறுபடியும் மொதல்லேருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்”. இவ்வளவு ஈஸியான விஷயத்தை ஏன் அப்படி இப்படியாக இடியாப்பச் சிக்கலாக நம் மக்கள் புரிந்துகொள்கிறார்களோ தெரியவில்லை.

தமிழில், காமிக்ஸ் வடிவத்தில் அப்படி ஒரு ரீ பூட் நடந்துள்ளது. அதுவும் முற்றிலும் மாறுபட்ட வடிவில்.அதனைப்பற்றியதே இந்த பதிவு. தமிழில் சிறுவர் இலக்கியம் சம்பந்தப்பட்ட எழுவாகினும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள Trail-Blazer வாண்டுமாமா அவர்களே இந்த ரீ பூட் விஷயத்திலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதோடில்லாமல் வித்தியாசமான ஒரு விஷயமாக பட்டதால் இந்த பதிவில் பின்னணி விவரங்களுடன் அரங்கேறுகிறது. இந்த ரீ பூட் நடந்ததால் திரு வாண்டுமாமா அவர்களின் பத்திரிக்கை வேலைக்கே ஆபத்து வந்ததும், பின்னர் அது பூமாரங் ஆக மாறி அவர் பணிபுரிந்த இதழின் எடிட்டரின் வேலைக்கு வெட்டு வைத்ததும் கிளைக்கதைகள்.

Circa 1962. கல்கி வார இதழில் தொடர்ந்து Sword & Sorcery என்கிற வகையில் வரும் மந்திரஜால,சரித்திரக் கால கதைகளையே சித்திரக்கதை வடிவில் வழங்கி வந்த திரு வாண்டுமாமா அவர்கள் ஒரு சமூக நாவலை சித்திரக்கதை வடிவில் வழங்க எண்ணினார். அவரது பல முயற்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டிய கல்கி நிர்வாகமும் இசைந்திட, ஓவியர் வினுவின் கூட்டணியுடன் ஒரு ஃக்ரிஸ்ட்மஸ் ஸ்பெஷல் கல்கி இதழில் ஆரம்பித்ததுதான் இந்த சந்திரனே சாட்சி சித்திரக்கதைத்தொடர்.

 

Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page (ஸ்கான் உபயம் - காமிரேட் ஷிவ் அவர்கள்)
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02

சித்திரக் கதை வடிவில் வெளிவந்த இந்த கதையானது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை சொல்லவும் வேண்டுமோ? அப்படி வரவேற்ப்பை பெற்ற இந்த கதை சுமார் இருவது வருடங்கள் கழித்து வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் புயல் வீச காரணமாகவும் இருந்தது. கல்கி இதழில் தனது திறமையால் பிரகாசித்த வாண்டுமாமா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோகுலம் என்கிற சிறுவர் பத்திரிக்கையும் ஆரம்பித்தனர். அது ஆறு ஆண்டுகள் சிறப்பாக வெளிவந்துக்கொண்டிருக்கும் வேளையில், 1977ம் ஆண்டு ஜூன் மாதம் பல பிரச்சினைகளால் கல்கி நிறுவனமே பத்திரிக்கைத் தொழிலை நிறுத்தினர். அப்போது அங்கிருந்து வெளியேறிய வாண்டுமாமா பின்னர் குங்குமம் இதழில் பணியாற்றிவிட்டு மறுபடியும் கல்கி துவங்கியதும் கோகுலத்தின் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 1978ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதியிட்ட இதழுடன் கோகுலம் இதழில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார்.

பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு அப்போதுதான் தினமணிக் கதிர் என்கிற  அற்புதமான பத்திரிக்கை வந்துக்கொண்டு இருந்தது. அதில் வாண்டுமாமா அவர்கள் துணை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே அந்த எழுத்தாளருக்கும் இவருக்கும் ஒரு சிறிய வரலாறு உண்டு. இருந்தாலும் சகஜமாக பணிபுரிந்துக்கொண்டு இருந்தார் வாண்டுமாமா. அப்போது மலேசியாவில் வெளிவந்துக்கொண்டு இருந்த தமிழ் நேசன் என்கிற பத்திரிக்கையில் இருந்து வாண்டுமாமா அவர்களிடம் ஒரு தொடர்கதையை கேட்க, அவர் மறுத்து விட்டார். ஏனென்றால் அப்போது அவர் பணிபுரிந்து கொண்டிருந்த (எக்ஸ்ப்ரெஸ் க்ரூப்) நிறுவனத்தில் ஊழியர்கள் மற்ற பத்திரிக்கைகளில் எழுதக்கூடாது என்பது ஒரு விதியாக இருந்தது.

ஆனாலும் தமிழ் நேசன் நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்த, தன்னுடைய சித்திரத் தொடர்கதையாகிய சந்திரனே சாட்சியை எழுத்துக் கதை வடிவில் தொடர்கதையாக வெளியிட ஒப்புக் கொண்டார் வாண்டுமாமா. டெக்னிகலாக பார்த்தால் இரண்டு விஷயங்களில் வாண்டுமாமா விதிகளை மீறாமல் நடந்துக்கொண்டு இருக்கிறார். ஒன்று:இந்தியாவில் வந்துக்கொண்டிருந்த எந்த பத்திரிக்கையிலும் அவர் எழுதவில்லை இரண்டு: இது அவர் ஏற்கனவே இருவது வருடங்களுக்கு முன்பாக எழுதியது. அதை ரீ பூட் செய்து வெளியிட்டு இருக்கிறார், அவ்வளவுதான்.

Vandumama Chandirane Saatchi July 1988 Cover Vandumama Chandirane Saatchi July 1988 Credits Vandumama Chandirane Saatchi July 1988 Title Page
Vandumama Chandirane Saatchi July 1988 Cover Vandumama Chandirane Saatchi Credits Vandumama Chandirane Saatchi 1st Page

ஆனால் அவர் மீது மிகுந்த கடுப்பில் இருந்த அந்த பத்திரிக்கை ஆசிரியர் தொடர்ந்து இதுபோல பல பிரச்சினைகளை கிளப்பினார். அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நலம் விரும்பியான ஒருவருக்கு வாண்டுமாமா வகித்த துணை ஆசிரியர் பதவியை கைமாற்றவே இத்துனையும். ஆனால் முற்பகல் செய்யின் குறளுக்கேற்ப அந்த பத்திரிக்கை ஆசிரியரையே வேளையில் இருந்து நீக்கியது நிர்வாகம். இப்படியாக வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் ஒரு புயலை வீசிவிட்டே இந்த சாட்சி சென்றது என்றால் அது மிகையல்ல.

இந்த தொடர்கதை தொகுக்கப்பட்டு முழுநீள நாவலாக வானதி பதிப்பக வெளியீட்டில் வந்தபோது (இத்துனை விஷயங்கள் நடந்து இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல்) மிகுந்த சிரத்தையுடன் அழகாக வாண்டுமாமா எழுதியுள்ள இந்த முன்னுரையை படியுங்கள்.

 

Vandumama Chandirane Saatchi July 1988 வாண்டுமாமா முன்னுரை Vandumama Chandirane Saatchi Story 1st Page
Vandumama Chandirane Saatchi Foreword Vandumama Chandirane Saatchi Story 1st Page

கதை சுருக்கம்: பிரபல வக்கீல் சேகரை தேடிக்கொண்டு ஒரு முதியவர் வருகிறார். ஒரு வேலையை அவரிடம் கொடுக்க முன்வரும் அவர் மயங்கி விழுந்து கோமாவிற்கு சென்றுவிடுகிறார். சிறு சிறு கட்டங்களாக, ஒன்றுமே தெளிவில்லாமல், சம்பந்தமில்லாமல் சில குறிப்புகள் மட்டுமே இருக்க, அவற்றை ஒன்று சேர்த்து ஒரு Zig-Zag புதிரை அமைதியாக,அலட்டல் இல்லாமல் ஷெர்லக் ஹோல்ம்ஸ்,சங்கர்லால் பாணியில் துப்பறிந்து இடியப்ப சிக்கல்களை தீர்ப்பதே இந்த கதை.

இந்த புத்தகமானது இன்றும் வானதி பதிப்பகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

வானதி பதிப்பகம்/திருவரசு பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600017
Ph: +9144-24342810

தியாகராய நகரில் பாண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி (ICICI வங்கி ATM எதிரில்) உள்ள பூக்கடை சந்தில் சென்றால் (Left) அங்கு தியாகராயர் நகரின் தபால் ஆபிஸ் இருக்கும். அதன் எதிரில் இருக்கும் தெருதான் தீனதயாளு தெரு. இரண்டாவது மாளிகை நம்ம வானதி பதிப்பகம்.

நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

பின் குறிப்பு - வாண்டுமாமா அவர்களைப்பற்றிய ஏனைய பதிவுகளுக்கான லிங்குகள்:

 

  • வாண்டுமாமா அவர்களின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை -ஒரு சிறப்பு பார்வை-கிங் விஸ்வா-தமிழ் காமிக்ஸ் உலகம்

  • வாண்டுமாமாவின் கனவா? நிஜமா? தமிழின் முதன்மையான சித்திரக்கதை-தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு

  • வாண்டுமாமாவின் தேச தேசக் கதைகள் - உலக நாடுகளின் சிறந்த கதை தொகுப்பு

  • ஒற்று உளவு சதி வாண்டுமாமா 190* Not அவுட் வாண்டுமாமாவின் அற்புதமான உளவாளிகளின் குறிப்பேடு

  • வாண்டுமாமா அவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் - பூந்தளிரில் வந்தவை - தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு

  • எதிர்நீச்சல்-வாண்டுமாமாவின் வாழ்க்கை வரலாறு-கங்கை புத்தக நிலைய வெளியீடு-தமிழ் காமிக்ஸ் உலகின் சிறப்பு பதிவு

  • சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 2

  • சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 1

  • வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு + அவர்களின் லேட்டஸ்ட் படம் கொண்ட கிங் விஸ்வாவின் பதிவு

  • வாண்டுமாமா குறித்த விக்கிபீடியா இடுகை

  • வாண்டுமாமா சித்திரக்கதைகள் 1 -  ரத்தினபுரி ரகசியம் - காமிக்ஸ் பூக்கள் சிறப்பு விமர்சனம்

  • பூந்தளிரின் முதல் இதழ் பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு: காமிக்ஸ் பூக்கள்

  • பூந்தளிரின் முதல் வருட இதழ்களையும், கதைகளை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான பதிவு

  • வாண்டுமாமா அவர்களை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான ஒரு அறிமுகம்

  • வாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதைகளை பற்றிய சிறந்த பதிவு

  • வாண்டுமாமா எழுதிய திரைவிமர்சனம் பற்றிய பதிவு

  • கனவா நிஜமா குறித்த நண்பர் சிவ்வின் பதிவு

  • சி.ஐ.டி.சிங்காரம் குறித்த நண்பர் சிவ்வின் பதிவு

  • வாண்டுமாமா அவர்கள் எழுதிய சினிமா விமர்சனம்

  • Related Posts with Thumbnails