டியர் காமிரேட்ஸ்,
Long long ago, so long ago, nobody can tell how long ago….நானும் ஒரு காமிக்ஸ் ப்ளாக் வைத்திருந்தேன் என்பதை நேற்று சந்தித்த சேலம் நண்பர் மூலமாக நினைவு படுத்திக் கொண்டேன். இந்த பதிவு முழுக்க முழுக்க அந்த சேலம் நண்பருக்காகவே. அதற்காக இனிமேல் பதிவுகள் தொடருமா? என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். மனமிருந்தால் மார்க்கபந்து மார்க்கமுண்டு என்று பத்மஸ்ரீ டாக்டர் கமல் ஹாசன் அவர்களே சொல்லி இருக்கிறார் ஆகையால் ………..
தமிழகத்தின் பல மாவட்டங்களில் காமிரேட்டுகள் நண்பர்களாக பெற்றிருக்கும் பாக்கியம் எனக்கிருந்தாலும் சேலம் மாவட்டத்தில் மட்டும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நண்பர்கள் எனக்கு இருந்தனர். என்னுடைய அலுவல்ரீதியாக மற்ற மாவட்டங்களுக்கு அதிக அளவில் பயணம் செய்யும் நான், சேலத்திற்கு மட்டும் மிகவும் குறைந்த அளவிலேயே வருகை புரிந்திருக்கிறேன். எனவே இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனிவே, தன்னுடைய பெயரை வெளிப்படுத்த விரும்பாத இந்த நண்பரின் இனிய நட்பு ஒரு ஆரம்பமே.
பதிவிற்குள் நுழையும் முன் ஒரு முக்கிய முன் குறிப்பு: இதுவரை வந்த பத்து ருபாய் புத்தகங்களிலேயே இந்த புத்தகம் தான் தர வரிசையில் பெஸ்ட் ஆக இருக்கிறது. பேப்பர் குவாலிடி, அச்சிடப்பட்ட விதம், அட்டைப்பட நேர்த்தி என்று ஒவ்வொரு அம்சத்திலும் மனதை அள்ளும் இந்த இதழைப் பார்க்கையில் இந்த விலையில் வருடத்திற்கு ஒரு சில புத்தகங்கள் வந்தாலும் தவறில்லை என்று என்ன தோன்றுகிறது, Provided அந்த கதைகள் ஒரிஜினலாகவே கருப்பு வெள்ளையில் இருந்தால்
ரிப்போர்டர் ஜானி என்கிற பெயரில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட Ric Hochet (ரிக் ஹோசே) தமிழுக்கு முதன் முதலில் அறிமுகம் ஆனதும் ஒரு டிசம்பர் மாதத்திலேயே. ஆமாம், சரியாக 27 வருடங்களுக்கு முன்பாக லயன் காமிக்ஸின் 20வது இதழாகிய ஆப்பிரிக்க சதி புத்தகத்தில்தான் அறிமுகம் ஆகப்போகும் புதிய கதாநாயர்கள் வரிசையில் சூப்பர் நிருபர் ஜானி நமக்கெல்லாம் அறிமுகம் ஆனார்.
இப்படி 27 வருடங்களுக்கு முன்பு அறிமுகம் ஆன ஜானியின் இந்த கதை (மரணத்தின் நிசப்தம்) முதன்முதலில் விளம்பரப் படுத்தப்பட்டது எப்போது என்பது யாருக்காவது நினைவிருக்கிறதா? சரியாக 40 மாதங்களுக்கு முத்து காமிக்ஸில் மந்திரவாதி மாண்ட்ரேக்கின் கதையாக வெளிவந்த நிழல் எது? நிஜம் எது? என்கிற புத்தகத்தில் தான் இந்த கதை விரைவில் வருகிறது என்று விளம்பரப் படுத்தப்பட்டது. இதில் முரண் நகை என்பது என்னவெனில் அந்த நிழல் எது? நிஜம் எது? கதையே கூட விளம்பரப் படுத்தப்பட்டு பல வருடங்களுக்கு பின்பே வெளிவந்தது என்பது இங்கே வரலாற்றுக் குறிப்பில் பதிவிடப் படவேண்டிய விஷயம். இதோ அதற்க்கான விளம்பரங்கள்:
Lion#020 - Africa Sadhi - December '85 - Ric Hochet - Ad | Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Coming Soon Ad | Lion 208 Next Releases 1 |
இந்த மரணத்தின் நிசப்தம் இதழின் அற்புதமான அட்டைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பே நம்முடைய தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தின் புத்தாண்டு சிறப்பு பதிவாக இடப்பட்டது நினைவிருக்கலாம். For those who suffer from short term memory loss, here is the link: TCU Special Post அப்போது அச்சிடப்பட்ட அட்டைப்படம் என்பதாலேயே பின்னட்டையில் இருக்கும் “வருகிறது” விளம்பரம் குறித்தான கேள்விகளை தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நம்முடைய காமிக்ஸ் வெளியீடுகளில் முதலில் பெரும்பான்மையோனோர் படிப்பது ஹாட் லைன் / காமிக்ஸ் டைம் பக்கங்களையே என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. ஆனால் வழக்கமாக பெரிய சைசில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு ஹாட் லைன் / காமிக்ஸ் டைம் படித்து விட்டு சிறிய சைசில் ஒரே ஒரு பக்க காமிக்ஸ் டைம் படிப்பது என்னவோ ரஜினி படம் பார்க்க தியேட்டர் வந்து தனுஷ் படம் பார்த்த மாதிரி இருந்தது.
Muthu Comics Issue No 318 Dated Dec 2012 Ric Hochet Reporter Johnny Maranathin Nisaptham Editorial Page 03 |
நம்முடைய தள வரலாற்றின்படி இதோ கதையின் முதல் பக்கம். ஒரு மாறுதலுக்கு முழு வண்ணத்தில் வெளிவந்த கதையின் முதல் பக்கத்தில் தமிழ் வசனங்களை நுழைத்து பார்க்கும்போது (நன்றி - முத்து விசிறி ) தான் நாம் எதனை இழந்து இருக்கிறோம் என்பது தெரிகிறது.
தமிழில் வெளியிடப்பட்டுள்ள பக்கத்தில் இருக்கும் காமிக்ஸ் பேனல்களை கவனமாக பாருங்கள். அதே சமயம் அவற்றை முழு வண்ணத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் பக்கத்தில் இருக்கும் கட்டங்களுடன் ஒப்பிடுங்கள். ஒரு மாற்றம் தெரியும்.
என்ன வித்தியாசத்தை கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லையா? என்னது.....உங்களுக்கு அந்த வித்தியாசத்தை இங்கே பதிவில் சொல்லனுமா? இந்த Spoon-Feeding செய்கிற வேலையை விட்டுவிடுவோம். கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவிப்பவர்களுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் கிப்ஃட் உண்டு.
தன்னுடைய வலைதளத்தில் ( லயன் முத்து காமிக்ஸ் வலைத்தளம் ) எடிட்டர் எஸ்.விஜயன் அவர்கள் எழுதும் சில பதிவுகளை சமீப இதழ்களில் புத்தகங்களிலும் (இணையதள ஆக்சஸ் இல்லாத வாசகர்களுக்காக) வெளியிட்டு வருகிறார். அப்படியாக இந்த முக்கியமான ஒரு பதிவு இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
Muthu Comics Issue No 318 Dated Dec 2012 Ric Hochet Reporter Johnny Maranathin Nisaptham SSV Pages From the Blog Page No 92 93 |
சமீப இதழ்களில் லோகோ, எடிட்டோரியல் அடுத்து தவறாமல் வந்துவிடும் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழின் கடைசி செட் விளம்பரமும் இதில் உண்டு. இது கடைசி செட் விளம்பரம் மட்டுமல்ல, முழுமையான விளம்பரமும் கூட. ஏனென்றால் இதற்க்கு பிறகு இந்த இதழில் கதைகளில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை. ஸோ, இதோ அந்த நான்கு பக்க நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழின் விளம்பரம்:
இந்த இதழுடன் இரண்டு இணைப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்று சந்தா விவரங்கள் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் சந்தா விவரங்கள் அளிக்கப்பட்டு இருந்தாலும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் கட்ட / வாங்க விரும்பாத ஒரு சில வாசகர்களுக்காக லயன் & முத்து காமிக்ஸ் இதழ்களின் சந்த விவரம் தனியாக அளிக்கப்படும், ஏனைய காமிக்ஸ் ரசிகர்களுக்கு என்று லயன் & முத்து மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் சந்தா விவரம் ஒருங்கிணைந்தும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கடைசி கடைசியாக, ஆனால் மிகவும் முக்கியமாக (Last, But Not Least என்பதனை இப்படித்தானே மொழி பெயர்ப்பார்கள்?) இந்த இதழுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது விஷயம்: நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழின் சிறப்பு வெளியீடு சென்னை புத்தக கண்காட்சியில் ஜனவரி மாதம் பதினொன்றாம் தேதியில் நடக்கப் போகிறது அல்லவா? அதற்க்கான அழைப்பிதழ் இந்த இதழுடன் அனைவருக்கும் அனுப்பப்படுகிறது. மறக்காமல் வந்து விடுங்கள் மறந்தாலும் வந்து விடுங்கள்.
Muthu Comics Issue No 318 Dated Dec 2012 Ric Hochet Reporter Johnny Maranathin Nisaptham Annex 2 Invitation for CBF 2013 NBS Launch |
புதிய காமிக்ஸ் வலைப்பூக்கள்: சமீப காலமாக தமிழில் காமிக்ஸ் குறித்தான ஸ்பெஷல் வலைதளங்களின் எண்ணிக்கை பெருகி அறுபதை தொட்டு விட்டது. அதில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சில வலைத்தளங்கள் இங்கே:
பாண்டிச்சேரி கார்த்திகேயன் அவர்களின் காமிக்ஸ் கலாட்டா: நேற்றுதான் ஆரம்பித்துள்ளார் ஆனால் ஆரம்பமே அதிரடியாக, டெக்ஸ் வில்லரின் சரவெடி கதையாகிய மரணத்தின் நிறம் பச்சை கதையுடன் துவக்கியுள்ளார் இவரது பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது பதிவு எண் 00001 என்று ஆரம்பித்து இருப்பதுதான். அப்போ (என்னைப்போல சோம்பேறித்தனம் படாமல்) தொடர்ந்து பதிவிட்டு கண்டிப்பாக ஐந்திலக்க பதிவுகளை விரைவில் இடுவார் என்ற நம்பிக்கை தெரிகிறது.
சென்னை பரிமேல் அழகன்: எடிட்டர் விஜயன் அவர்களின் கேள்வியால் ஊக்குவிக்கப்பட்டு திடீரெனெ ஒரு சுபதின காலை நேரத்தில் ஒரே ஒரு பதிவுடன் இந்த வாரம் திங்கள் கிழமை பதிவை ஆரம்பித்து இருக்கிறார். தொடருவார் என்றே நம்புகிறேன்.
தமிழ் ஸ்கான்லேஷன் தளங்கள்: தமிழில் ஃபுல் டவுன்லோட் போட்டு வந்த புலாசுலாகி சமீப நாட்களில் பதிவிடாமல் இருந்த சோகம் தெரியாமல் இருக்க நண்பர் ஜான் சைமன் இப்போதெல்லாம் முழு கதைகளையும் ஸ்கான் செய்து பதிவிடுகிறார் அவரது ராணி காமிக்ஸ் தப்பி ஓடிய இளவரசி , பொன்னி காமிக்ஸ் ஏர்போர்ட்டில் மாயாவி கதைகளை படித்து மகிழ்ந்த வேளையில் அதிரடியாக இரண்டு ஸ்கான்லேஷன் தளங்களை காண முடிந்தது.
தமிழ் ஸ்கான்லேஷன்: இதனை இயக்குபவர் யார், எவரேன்றே தெரியாது. யாராக இருந்தாலும் ஆழ்ந்த காமிக்ஸ் அறிவும், தீவிரமான காமிக்ஸ் காதலும் கொண்டவர்களாகவே இருக்ககூடும. அந்த காமிக்ஸ் மகானுபாவன் யாரோ, அவரை தொடர வேண்டுகிறோம்.
ஆன்லைன் தமிழ் காமிக்ஸ்: இவரது வருகையை வைத்து பார்க்கும்போது மதுரையை சார்ந்தவர் என்று தெரிகிறது ( Feedjit தகவல்). மூன்று பதிவுகள் இட்டுள்ளார் முதல் இரண்டும் அருமையாக இருக்க, திடீரென்று மூன்றாம் பதிவில் டெக்ஸ் வில்லர் கதையினை துவக்கியுள்ளார்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
Welcome back,
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு மிக அழகான பதிவு. கலர்ல ஜானி கலக்கலா இருக்கார். வழக்கம்போல் அசத்தலான ஸ்கேன்கள்.
//இவரது பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது பதிவு எண் 00001 என்று ஆரம்பித்து இருப்பதுதான்// சந்தடி சாக்குல இப்படி கலாய்ச்சிட்டிங்களே பாஸ். :)
ஒரு பிரபல பதிவர் பதிவில் என்னை குறிப்பிட்டது எனக்கு பெருமையாக இருக்கிறது. நன்றி நண்பரே.
Super Viswa welcome back with a nice post....
ReplyDeleteChanging panels is not first time in our history I think... and its always hard to see in bw after the color era... but ok..
Delete//தமிழில் வெளியிடப்பட்டுள்ள பக்கத்தில் இருக்கும் காமிக்ஸ் பேனல்களை கவனமாக பாருங்கள். அதே சமயம் அவற்றை முழு வண்ணத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் பக்கத்தில் இருக்கும் கட்டங்களுடன் ஒப்பிடுங்கள். ஒரு மாற்றம் தெரியும்.//
ReplyDeleteதமிழில் முத்து காமிக்ஸில் முதல் பக்கத்தில் கடைசி இரண்டு கட்டங்கள் இடம் மாறியுள்ளன.
இதுதானே நீங்கள் சொன்ன அந்த வித்தியாசம்?
ராஜேஷ் கே
ஆமாம் அதுதானே அந்த வித்யாசம்?
Deleteஅன்புத்தல! அசத்தறீங்க! கால தேவன் கொஞ்சம் கருணை காட்டிட, அடுத்தடுத்து அதிரடியா பதிவிட வேண்டுகிறேன்! உங்க பதிவைப்படிப்பது மிகமிக சுகமானது!
ReplyDeleteநீ.......ண்ட... நா.... (ஹா....வ்....) இடைவெளிக்குப் பிறகு ஒரு துரிதப் பதிவு. இறுதி 10ரூபா இதழுக்கு பிரியாவிடை கொடுத்திருக்கிறீர்கள். தொடர்ந்தும் பதிவிட வேண்டுகிறேன். நீதிபதி இருக்கும் பானலை இடம் வலமாக மாற்றியதைக் கஷ்டப்பட்டு (!!!!) கண்டுபிடித்துவிட்டேன். கிஃப்ட் அனுப்பிவைக்கமறக்கவேண்டாம்!
ReplyDeleteஎன்னுடைய தளத்திற்கு சுட்டி அமைத்தமைக்கு நன்றி விஸ்வா.
ReplyDeleteஆனால் நான் மதுரைக்காரன் அல்லவே?
முதல் பக்கத்தில் கடைசி இரண்டு பேனல் இடம் மாறி இருப்பதை "நானே சுயமாக சிந்தித்து" கண்டு பிடித்து இருக்கிறேன்.
Deleteஇதில் ஸ்ரீராம்,பொடியன், ராஜேஷ் ஆகியோரது கமெண்ட்டுகளை நான் இன்னமும் படிக்கவே இல்லை என்பது மறுக்கவியலா பேருண்மை.
//அதிரடியாக இரண்டு ஸ்கான்லேஷன் தளங்களை காண முடிந்தது.//
Deleteநீங்க செஞ்சது மட்டும் இன்னவாம்? இதுவுமே ஸ்கான்லேஷன் தானே?
நல்ல படங்கள் பதிவு. ஆனால் கதையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? ஏன்?
ReplyDeleteபின்னாலுள்ள இணைப்பு பக்கங்களை ஸ்கேன் செய்துள்ளது அருமை. NBS இற்கு முன்பதிவு செய்தவர்கள் பட்டியலும் இந்தப் புத்தகத்தில் உண்டா? மொத்தமாக எத்தனைபேர் என்று அறியும் ஆவல்தான்!
ReplyDeleteஇல்லை நண்பரே.
Deleteஅந்த லிஸ்ட் இந்த புத்தகத்தில் இல்லை.
எனக்கும் அறிய ஆவல்தான்
நன்றி உங்கள் தகவலுக்கு(காமிக்ஸ் பதிவுலகுக்கு)மூத்தவரே!
Deleteரிபோர்ட்டர் ஜானியின் முதல் தமிழ் கதை எது? ஆங்கிலத்தில் ஏன் இன்னும் ஜானியின் கதைகள் வரவில்லை?
ReplyDeleteலோகேஷ்வரன்
Neeenda nalgaluku piragu vantha moothavaray vannakam.ungal eluthunadai miga alagu.thaiavu saithu adikadi varavum. Malum NBS pattriya ungal padivai padika avaluden kathirukum...SALEM BARANI.
ReplyDeletesuper post.
ReplyDeleteவெல்கம் பேக் விஸ்வா..
ReplyDelete//தமிழில் ஃபுல் டவுன்லோட் போட்டு வந்த புலாசுலாகி சமீப நாட்களில் பதிவிடாமல் இருந்த சோகம் தெரியாமல் இருக்க //
ReplyDeleteநல்லா தானே போயிட்டு இருந்தது? நடுவுல என்னை இழுக்கணுமா தோழர்?
சென்னை புத்தக திருவிழாவிற்கு ஆசிரியரையும், உங்களையும் பார்க்கவே வருகிறேன் இன்னமும் ரிட்டர்ன் டிக்கெட் கிடைக்கலை இருந்தாலும் வந்து விடுவேன்.
முதல் நாள் திருவிழாவில் இருப்பீர்கள் அல்லவா?
வெல்கம் பேக் விஷ்வா ஜி. தொடர்ந்து எழுதுங்க ஜி.
ReplyDeleteமாரியப்பன்.
வெல்கம் பேக் விஷ்வா ஜி
ReplyDeleteஉங்கள் சிறப்பு கம்பேக் பதிவுக்காக இந்த டவுன்லோட் லிங்க்
(மரணத்தின் நிசப்தம் கதையின் ஃப்ரெஞ்ச் மொழி கதையின் டவுன்லோட் லிங்க்)
http://rapidshare.com/files/51060521/Ric_Hochet__68-70__-_Tibet.rar
link not working. some error message is showing up.
Deletecan you post the correct link?
Boss,
Deletethe link is working fantastically well.
i just checked it out.
One suggestion: avoid internet explorer browser. use something like the firefox, safari , google chrome etc.
அந்த லிங்க்'கில் மொத்தம் மூன்று கதைகள் இருக்கும் அதில் கடைசி (மூன்றாவது) கதைதான் நம்ம மரணத்தின் நிசப்தம்.
ReplyDeletewelcome back to blogging. regular stuff of scans and background info.
ReplyDeletekeep it up.
புத்தகம் இன்னும் கைக்கு வந்துசேரவில்லை. ஜானியை இங்கு வண்ணத்தில் பார்த்துவிட்டு கறுப்பு வெள்ளையில் பார்ப்பது கடினமாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.
ReplyDeleteit was a pleasant thing to see you back in action on your comics blog.
ReplyDeletemore than the news / post on the comics, i was happy that you've still remember me after all those long gaps of time.
what, wouldn't it be some 2 years since we communicated? at that time your blog was also closed.
anyway, wishes for the new beginning and will you be coming for the chennai book fair, am planning to come in the 1st week of january.
iam currently in marthandam, nagercoil. so, visiting chennai in the 1st week.
ReplyDeleteIt is nice to see you again Viswa. As usual a well written and informative post.
ReplyDeleteவெல்கம் பேக் நண்பரே.
ReplyDelete10ரூ இதழுக்கு விடைகொடுக்க வந்து விட்டீர்கள்.
வழக்கம் போல துணுக்குகள் அருமை.
அதுவும் அறிமுக விளம்பரம் வந்தது இதே Dec மாதம் எனபது விஸ்வா டச்.
மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
Dear Friend, editor was promised to list the names of advance booking people for NBS! I have remember that it was not listed on our last special issue, I am curious to know does this issue have the list? If it is not listed, I just wonder why he is not doing that and why he is not answer my question on the same in lion-muthu blog.
ReplyDeleteஅடடே, வெல்கம் பேக். நல்ல பதிவு, நன்றி விஸ்வா.
ReplyDeleteரிபோர்ட்டர் ஜானியின் கதைகள் எத்தனைவந்துள்ளன என்று (சிக் பில் அட்டவணை பதிவு போல) இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
எனக்கு புத்தகம் இன்று காலையிலேயே வந்து சேர்ந்து விட்டது. சினிமா த்ரில்லர் போல ஃப்ளாஷ்பேக் யுத்தியில் ஆரம்பிக்கும் கதை (அப்போதானே ஒரு ஷாக்கிங் ஸ்டார்ட் இருக்கும்? - என்னது ஜானி கொலைகாரனா? வாட் ஆர் யு டாக்கிங்?), விரைவிலேயே ஜானியின் இடியப்ப சிக்கல் ஃபார்முலாவுக்கு சென்று விடுகிறது. பல பல சிக்கல்கள், பெரிய யூ டர்ன் என்று கதை பாரிஸ் நகரத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.
ReplyDeleteஆனால் (என்னுடைய கெட்ட நேரம்) எதேச்சையாக கதையின் கடைசி பக்கத்தை புரட்டும்போது வில்லன் யார் என்பதை முதலிலேயே படித்து விட்டதால் ஓரளவுக்கு சுவாரஸ்யம் குறைந்த மாதிரி இருந்தது (அதனால் மட்டுமா? என்றால் தெரியவில்லை).
இதுவரை வந்த 10 ருபாய் இதழ்களிலேயே இது தான் டாப் என்பது என்னுடைய கருத்து. பேப்பர் குவாலிடி பற்றி புலம்பும் மக்கள் இந்த தரத்தை பார்த்து விட்டு இனிமேல் கருப்பு வெள்ளையில் 10 ருபாய் புக்கே தொடர்ந்து வேண்டும் என்று எடிட்டர் ஆப்பீஸ் முன்னாடி தர்ணா செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.
அதே சமயம், பெரிய சைஸ் புத்தகங்களில் இரண்டு, மூன்று பக்கங்களுக்கு ஹாட் லைன் படித்து விட்டு (இந்த சின்ன சைஸ் புக்கில் நான்கு/ஐந்து பக்கங்களாவது இருக்கும்) ஒரே ஒரு பக்க காமிக்ஸ் டைம் படிக்க கஷ்டமாக இருந்தது. எடிட்டர் இதனை கவனத்தில் கொள்ளவும்.
நீங்க இதைப்பற்றி சொல்லும்போது //சிறிய சைசில் ஒரே ஒரு பக்க காமிக்ஸ் டைம் படிப்பது என்னவோ ரஜினி படம் பார்க்க தியேட்டர் வந்து தனுஷ் படம் பார்த்த மாதிரி இருந்தது.// என்று சொல்லி இருக்கீங்க. எனக்கென்னவோ தனுஷ் அந்த அளவுக்கு மொக்கை இல்லை என்றே தோன்றினாலும் கண்டிப்பாக இனிமேல் தொடர்ந்து வரும் இதழ்களில் எடிட்டோரியல் அதிக பக்கங்கள் இருக்க வேண்டும்.
மற்றுமொரு கேள்வி வாசகர் கடிதங்கள் பகுதி என்னவாயிற்று? இனி இன்பர்மேஷன் ப்ரம் எடிட்டர்?
வெல்கம் பேக் தோழர். NBS வரப்போகும் நிலையில் உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. அடிக்கடி பதிவுகளை எதிபார்க்கிறோம்.
ReplyDelete//தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.//
நீங்கள் கொடுத்த லிங்க் நேராக ஹிந்திக்கு போகிறது தோழர். என்னைப்போன்ற கொடும் , மன்னிக்கவும் கடும் தமிழ்ப் பற்று உள்ளவர்கள் அறச்சீற்றம் அடைய வாய்ப்பிருப்பதால் இந்த லிங்கை போடுங்களேன். நேராக தமிழுக்கு செல்லலாம்.
http://www.google.com/transliterate/tamil
வணக்கம் கிங் விஷ்வா! புத்தகத்தை பற்றிய உங்கள் background தகவல்கள் அருமை.very special and very unique of TCU. தொடர்ந்து கலக்குங்க!
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்து அசத்தியுள்ளிர்கள்.வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல பதிவு.. கொஞ்ச இடைவெளிக்கு பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்.. கிடைத்த இடைவெளியில் நிறைய காமிக்ஸ் படித்திருப்பீர்கள். அவற்றைபற்றி எழுதி அசத்துங்க..
ReplyDeleteHappy come back.
ReplyDeleteHappy come back.
ReplyDeleteநண்பர்களே - முத்து காமிக்ஸின் இலட்சக்கணக்கான ரசிகர்களுள் நானும் ஒருவன். 1975-1985-களில் வெளிவந்த பெரும்பாலான பிரதிகளை, என் தந்தையைக் கெஞ்சி வாங்கிப் படித்திருக்கிறேன்!
ReplyDeleteஎங்கள் ஆர்வத்தை அதிகப் படித்திய அந்தத் தமிழ் உரையாடல்களை, அப்போது தமிழாக்கம் செய்த முல்லை தங்கராசனுக்கு பெரும் பங்கு உண்டு... வேதாளர், லாரன்ஸ்-டேவிட், ரிப் கெர்பி-டெஸ்மாண்ட், இரும்புக்கை மாயாவி, குதிரை வீரன் கிஸ்கோ கிட், மாண்ட்ரெக் - போன்ற சாகச ஹீரோக்கள், எங்கள் இளம் நெஞ்சில் உலா வந்த அந்த வசந்த காலங்களை இன்று நினைவு கூர்ந்தாலும், உடல் சிலிர்க்கிறது! தமிழைக் காதலிக்க வைத்த அந்த இரத்தம் சூடேற வைத்த வீர வசனங்கள் - நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் என்றால் அது மிகையல்ல..!
என் குழந்தைகளுக்கும் அதே அனுபவத்தை வழங்க நினைக்கிறேன்... அன்று அச்சிட்ட அதே பிரதிகளை இன்று மறுபதிப்பு செய்ய முயற்சிக்க முடியுமா? என் விருப்பம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் ரசிகர்களுக்கும் இருக்கும் என் நம்புகிறேன்..