காமிரேட்ஸ்,
இந்த ஆண்டு இனிய ஆண்டாக கழிய வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாத நள்ளிரவில் எனக்கு போன் செய்து சொன்ன புண்ணியவானுக்கு நன்றிகள்.உண்மையிலேயே இந்த ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாகவே இதுவரையில் இருந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் காமிக்ஸ் என்னும் கடலில் மறுபடியும் திக்கு முக்காட வைக்கும் வகையில் பல அதிரடி வெளியீடுகள் வந்த வண்ணம் இருக்கின்றது. (என்னைப் போலவே) தியேட்டர்களில் லேட்டாக வந்து "எவ்வளவு நேரம் படம் போச்சு?" என்று கேட்பவர்களுக்காக இதுவரையில் வந்துள்ள காமிக்ஸ் கதைகளின் இந்த சிறிய அட்டவணை:
1. லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் – Jan 2012
2. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - கொலைகார கலைஞன் – Jan 2012
3. முத்து காமிக்ஸ் - விண்ணில் ஒரு குள்ளநரி – Jan 2012
4. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு – March 2012
5. லயன் காமிக்ஸ் - சாத்தனின் தூதன் டாக்டர் செவன் – Apr 2012
6. முத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் - என் பெயர் லார்கோ – May 2012
7. முத்து காமிக்ஸ் - சிகப்புக் கன்னி மர்மம் – June 2012
8. முத்து காமிக்ஸ் - தற்செயலாய் ஒரு தற்கொலை – June 2012
இந்த இதழின் அட்டைப்படம் "கொலைவெறி புகழ்" தனுஷ் போல. அதாவது பார்த்தவுடனே பிடித்து விடாது: பார்க்க,பார்க்க தான் பிடிக்கும். ஆகையால் இரண்டு அட்டைகளையும் தனித்தனியே ஸ்கான் செய்து வெளியிட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும். அட்டைகளின் கலர் காம்பினேஷன் வழமை போல சற்றே தூக்கல் தான். இருந்தாலும் கூட முன் அட்டை மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
இந்த இதழின் உள் அட்டைகளில் ஒன்றில் கேப்டன் டைகரின் தங்க கல்லறை விளம்பரமும், மற்றொன்றில் கைவசம் உள்ள பிரதிகளின் லிஸ்ட்’டும் உள்ளது. இதுவரையில் இந்த பழைய புத்தகங்களை இன்னமும் வாங்காதவர்கள் தயவு செய்து உடனடியாக வாங்கி விடவும். கைவசமுள்ள ஸ்டாக் தீர்ந்து விட்டால், பின்னர் இந்த புத்தகங்களையும் தேடி அலைய நேரிடலாம். ஸ்கான்'கள் இதோ:
இந்த இதழில் திகட்ட,திகட்ட தேனாக மூன்று ஹாட் லைன் பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று முதல் பக்கத்திலேயே. அதில் சிறப்பம்சமாக வாசக அன்பர் செயின்ட் சாத்தான் அவர்களின் புகைப்படமும்,அவரைப் பற்றிய சிறு குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு இதழின் ஹை லைட்டும் எடிட்டரின் ஹாட் லைன் தான். இந்த இதழில் மூன்று ஹாட் லைன் கள் இருந்தும், கண்டிப்பாக அவற்றில் ஒன்று கூட இந்த இதழின் சிறப்பம்சம் கிடையாது. இந்த இதழில் அனைவரும் தேடித் படிக்கும் (பார்க்கும்?!) பகுதி என்னவெனில் முத்து காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழின் கதை வரிசையை தெரிந்து கொள்வதே. எடிட்டரின் வலைதளத்தில் மூன்று கதைகளின் அறிவிப்பு மட்டுமே இடம் பெற்று இருந்ததால் இந்த எதிர் பார்ப்பு.
முதல் கதையாக நமது சூப்பர் ஸ்டார் லக்கிலுக் அவர்களின் அட்டகாசமான முழு வண்ண காமெடி தோரணம் இடம் பெற்றுள்ளது. இந்த கதையானது இலங்கையில் இருந்து வெளிவந்த "ஐஸ்பெர்க் காமிக்ஸ்" இதழில் அடுத்து வரப் போகும் வெளியீடாக சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்தது (நினைவு சக்தி கூர்மையாக பெற்றிருக்கும் காமிரேட்டுகள் இந்த இதழின் அட்டைப் படத்தை ஐஸ்பெர்க் இணைய தளத்தில் தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளிவந்ததை நினைவு கூறலாம்). பின்னர் இப்போது மறுபடியும் தமிழில் படிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. வழமை போல நமது எடிட்டரின் மொழி பெயர்ப்பு இந்த கதையின் வேகத்தை அதிகரிக்கிறது. முதல் பக்க ஸ்கான்:
இந்த இதழின் இரண்டாவது கதையும் லக்கிலூக்கினுடையதே. இந்த கதையின் மூல அட்டைப் படத்தை அழகாக வெளியிட்டு நமது வாழ்த்துக்களை பேர்கின்ற எடிட்டர், முதல் கதைக்கும் இவ்வாறே செய்திருக்கலாமே என்றும் கோபத்திற்கு ஆளாகிறார். மினி லயன் வெளியீடுகளுக்கு முடிவு கொண்டு வந்த பிறகு, லயன் காமிக்ஸ் இதழில் முதலில் வந்த லக்கி லூக்கின் கதை ஜெஸ்சி ஜேம்ஸ். அந்த இதழின் முதல் பக்கத்தில் மிகவும் அழகாக கதை, ஓவியம், தமிழாக்கம் என்று கிரேடிட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் இந்த இதழிலேயே ஒரிஜினல் க்ரெடிட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்க்கதக்கது. அணைத்து கதைகளுக்கும் இது தொடர வேண்டும் என்பதும் ஒரு சிறு வேண்டுகோள்.
ஒரே நாளில் தொடர்ந்து நான்கு ப்ளாக் பஸ்டர் படங்களை பார்த்தது போல, இந்த இதழிலேயே சிங்கத்தின் சிறு வயதில் தொடரும் அட்டகாசமாக தொகுக்கப் பட்டு அமைந்துள்ளது. விரைவில் எடிட்டர் இதனை தனி புத்தகமாக வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
எடிட்டர் இந்த இதழில் சர்ப்ரைஸ் ஆக இரண்டு கருப்பு வெள்ளை & கதைகள் வரும் என்று சொல்லி இருந்தார். கண்டிப்பாக அதில் ஒன்று லாரன்ஸ் & டேவிட் கதையாக இருக்கும் என்று நம்பி, பந்தயம் கட்டியும் இருந்தேன். ஆனால் God moves in Mysterious Ways என்பதைப் போல, நம்ம எடிட்டரும் கூட மர்மமாக செயல்படுகிறார். இந்த கதை ஒரு இனிய சர்ப்ரைஸ். அதுவும் டெய்லி ஸ்ட்ரிப் படிக்கும் வகையிலேயே இந்த கதையும் அமைந்துள்ளது.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Special Page No 101 Agent Phil Corrigan Adventure Manidha Vettai 1st Page |
சில பல காரசாரமான வாசகர் கடிதங்கள் இந்த இதழில் இடம் பெறப்போவதாக எடிட்டர் கூறி இருந்தார். அதனாலேயே இந்த இதழின் வாசகர் கடிதங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இதோ அந்த வாசகர் கடிதங்கள்:
என்னுடைய அபிமான நாயகன் ஜான் ஸ்டீல் மறுபடியும் முத்து காமிக்ஸில் வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. இவரது பல கதைகள் உளவியல் ரீதியாக ரசனைக்குரியதாக இருக்கும். சிங்கத்தின் குகையில் என்றொரு கதை முன்பு வந்தது. அதில் வந்ததொரு வில்லன் இதுவரை வந்த தமிழ் காமிக்ஸ் கதைகளின் வித்யாசமான வில்லன்களில் ஒருவராக,மன்னிக்கவும் தலை சிறந்த வில்லன்களில் ஒருவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். அதுபோலவே இவரது பல கதைகள் அமைந்து இருக்கும். இந்த கதையும் அவ்வாறு அமைந்து இருக்கின்றதா என்பதை வரும் புதன் அன்று வெளிவரும் லயன் நியூ லுக் ஸ்பெஷல் இதழின் விமர்சனப் பதிவில் காண்போம்.
மினி லயனின் டாப் ஹீரோ லக்கி லுக் இங்கே லயன் காமிக்ஸில் வந்த அசத்தும்போது, மினி லயனின் ஆரம்ப கால சூப்பர் ஸ்டார் குண்டன் பில்லி மட்டும் பின் தங்கியிருக்க வேண்டுமா என்று எண்ணி, மறுபடியும் பில்லியின் கதையை வெளியிட்ட ஆசிரியர்க்கு நன்றி.
ஏற்கனவே எடிட்டர் தன்னுடைய வலைதளத்தில் சொன்னது போல முத்து காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழுக்கான முன்பதிவுக் கூப்பன் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மற்றும் இந்த வருடத்தின் கதைகளைப் பற்றிய காமிக்ஸ் கேலண்டர் ஒன்றும் உள்ளது.
ஆரம்ப கால இதழ்களில் வந்த "விரைவில் வருகின்றது" விளம்பரங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்த வாசகர்கள், மறுபடியும் அந்த வசந்த காலத்திற்கு திரும்பிய Effect ஐ கொடுக்கும் வகையில் இந்த விளம்பரங்கள் அமைந்து இருக்கின்றன.
மறுபடியும் ஒரு ஹாட் லைன் என்று இந்த இதழில் மூன்றாவதாக ஒரு ஹாட் லைன் வருகிறது. முக்கியமானதும் கூட. அதனை தொடர்ந்து நமது வாசக அன்பர் திரு பாலசுப்ரமணியம் அவர்களின் கடிதமும் உள்ளது. சமீப காலத்தில் இவரது வாரிசும் நமது லயன் காமிக்ஸ் எடிட்டரின் தலத்தில் கமெண்ட்டுகளை இடுவதை காண்கையில் மகிழ்ச்சி உண்டாகிறது.
பத்து ருபாய் விலையில் கடைசி செட் ஆக வரவிருக்கும் இரண்டு இதழ்களில் விவரங்கள் இந்த விளம்பரத்தில். இந்த இதழின் அட்டைப்படங்களை இரண்டு வருடங்களுக்கு முன்பே எடிட்டரின் அறையில் கண்டிருக்கிறேன். இவை அச்சிடப்படுவது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், இவையே கருப்பு வெள்ளை வரிசையில் கடைசி செட் புத்தகங்கள் என்பதால் ஒரு நாஸ்டால்ஜியா வகையறாவில் இவற்றையும் இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Coming Soon Advt 10 Rs Books Page No 150 |
இந்த இதழின் இணைப்பாக தனியாக ஒரு கடிதம் உள்ளது. அந்த கடிதம் சந்தாதாரர்களுக்கான நினைவூட்டல் கடிதம் ஆகும். தயவு செய்து அனைவரும் சந்தா நீட்டிப்பு செய்து விடுங்கள் தோழர்களே.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Annexure For Subscription |
பின் குறிப்பு: இந்த இதழ் அருமையான பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டு, குரியருக்காக உபயோகப்படுத்தும் கிளாத் கவரில் பத்திரமாக வந்தடைந்தது. இனி வரும் இதழ்களும் இப்படியே இருந்தால் நல்லது.
இன்னும் இரண்டு நாட்களில் ஒரு காமிக் கட்ஸ் பகுதியில் தமிழின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் (இவர்தான் ரஜினியின் அடுத்த பட இயக்குனர்) இரும்புக் கை மாயாவியை பற்றி கூறும் பகுதி இடம்பெறுகிறது. அதன் பிறகு இந்த நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
I am the first
ReplyDeleteGracias for the Swift post and scintillating scans.I reckon after some time we are seeing a Horizontal front page cover .whether this john steel story was created during the golden 60's or it is a created newly ?
ReplyDeleteHi Arun,
DeleteThese John Steel Stories (Along with Agent 13 stories) were created in UK in the early 60's. Some of these stories were available for sale online. try your luck and you'll never regret buying them.
Next week, i'll post the original stories with the cover scans.
Excellent scans with crisp data makes this post a nice one.
ReplyDeletethanks for the turbo fast post.
viswa,
ReplyDeletecan you provide me the links for the online purchasing links for john steel stories? what is the title for this story in English?
Ravindhar,
DeleteMail has been sent to your mail id for the online purchase links.
The art work is very much confusing. It looks neither Bill Lacey Nor Ron Turner. Hence finding the story with the indices is tough. need to get back to my collection of stories and find the correct one. Anyway, will return to chennai tomorrow and find out the original one.
எனகென்னமோ கடைசியாக வந்த ஜான் ஸ்டீல் கதைகள் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டு மூன்று ஜான் ஸ்டீல் கதைகளை எடிட்டர் வெளியிட்டார். அவை என்னுடைய பொறுமையை ரொம்பவும் சோதித்தன. இந்த கதை எப்படியோ தெரியவில்லை.
Deleteஜான் ஸ்டீல் கதைகளை ரசிக்க ஒரு அட்மாஸ்ஃபியர் வேண்டும். அவசரமாக படித்து,பின்னர் யோசிக்கும் வகை அல்ல இந்த கதைகள். பின்னணி, கால கட்டம், கதை வந்த தருணம், கதையின் பின்னே நடக்கும் சம்பவங்கள் என்று பல உண்டு. உதாரணமாக முத்து காமிக்ஸ் கதை கொலை அரங்கம் படியுங்கள். ஒவ்வொரு முறையும் ரசிக்க வைக்கும் கதை அது.
Deleteமாண்டு போன நகரம் பற்றி நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.
தல நீங்க பயங்கர fast சூப்பர் overview குடுத்திருகிங்க, இதே போல் கொரியர் வந்தால் சந்தோசம் மேலும் இதில் வந்துள்ள ஒரு வானவில்லை தேடி ஒரு கார்டூனாக வந்துள்ளது அதனை பார்க்க -- http://modestynwillie.blogspot.in/2012/07/blog-post.html
ReplyDeleteShriram
ஸ்ரீ ராம்,
Deleteஇப்போதுதான் உங்கள் தளத்தை பார்த்தேன். அட்டகாசம், சூப்பர்.
படங்களின் கார்டூன் டவுன்லோட் லிங்க் இருந்தால் கொடுங்கள், அல்லது நீங்களே அதை அப்லோட் செய்யுங்கள்.
அட்வான்ஸ் நன்றி.
சூப்பர் பதிவு விஸ்வா.
ReplyDeleteஎனக்கு இந்த புத்தகம் வந்திட இன்னும் பத்து நாட்கள் பிடிக்கும். ஆகையால் உடனடியாக ஹாட் லைன், சிங்கத்தின் சிறு வயதில் போன்றவற்றை படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கு நன்றி.
அருமை. ஆனால் எனக்கு இன்னமும் இந்த புத்தகம் வந்து சேரவில்லை.
ReplyDeleteஅதெப்படிங்க, சிவகாசி பக்கத்துல இருக்கும் மதுரைக்கு புத்தகம் வர லேட்டாகுது? ஆனால் சென்னைக்கு மட்டும் சீக்கிரம் போய்விடுகிறது?
நீங்கள் சொன்னது போல எல்லா கதைகளுக்குமே கிரெடிட் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கும் வசதியாக இருக்கும் அல்லவா?
ReplyDeleteஅதைப்போலவே அட்டைப்படங்களை வரையும் ஓவியருக்கும் கிரெடிட் கொடுக்கலாம்.
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே. அட்லீஸ்ட் அதற்க்காகவது அட்டையை வரைவது யாரென்று சொல்லலாம்.
//சிங்கத்தின் குகையில் என்றொரு கதை முன்பு வந்தது//
ReplyDeleteஎச்சூஸ் மீ! அது ரகசிய ஏஜெண்ட் டேவிட் (SPY 13) கதை!
தலைவர்,
அ.கொ.தீ.க.
ஆஹா வந்துட்டாரையா வந்துட்டாரையா ;-)
Delete.
ஸ்பை மற்றும் ஜான் ஸ்டீல் ஆகிய இரண்டு கதை தொடர்களும் ஒரே வரிசைதொடர்கள் தானே?
Deleteஆங்கிலத்தில் வந்தபோது கூட ஒரே வரிசையில் வந்தவை என்றதால் இப்படி சொல்லி இருக்கலாமோ?
ஸ்பெல்லிங் மிஸ்டேக்.....
DeleteViswa, if possible please share the online purchasing links for john steel stories. May be helpful to others also
ReplyDeletebooks sold siv. link no longer valid.
Deletekeep checking on e-bay for such things.
அற்புதமான ஸ்கேன்கள், அட்டகாசமான தகவல்கள் அதைவிட விஸ்வாவின் எக்ஸ்பிரஸ் பதிவு என்னை கவர்ந்துவிட்டது. எனக்கும் நேற்றே புத்தகம் கைக்கு கிடைத்தது. லக்கி லுக் கதைகளை மட்டும் படிக்க நேரம் கிடைத்தது. அதில் இரண்டாவது கதை ஒரு வானவில்லைதேடி நம்பர் ஒன் கதை என்று சொல்லலாம். ஆனால் முதல் கதையான பணியில் ஒரு கண்ணாமூச்சியில் காமடி தூக்கலாக இருந்ததை ரசிக்கமுடிந்தது. முதல் கதையில் லக்கி லுக் ஐ விட டால்டன் சகோதரர்களே நிறைய பக்கங்களை ஆக்கிரமித்துகொண்டனர் எனலாம்.
ReplyDeleteமொத்ததில் புத்தகதரம், அட்டைப்படங்கள், பேகிங் தரம், டெலிவரி ஸ்பீட், விளம்பரங்கள், ஆசிரியரின் ஹாட் லைன், வாசகர் கடிதங்கள் என உண்மையிலேயே விஜயன் சார் நம்மை எல்லாம் திக்குமுக்காட வைத்துவிட்டார் என்பதே உண்மை.
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ஐ மீண்டும் அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டார் என்ற குறைமட்டுமே சொல்லமுடியும்.
//முதல் கதையில் லக்கி லுக் ஐ விட டால்டன் சகோதரர்களே நிறைய பக்கங்களை ஆக்கிரமித்துகொண்டனர் எனலாம். //
Deleteபல லக்கிலூக் கதைகளில் இதுபோல சக கேரக்டர்கள் சிறப்பாக அமைந்து விடுவது உண்டு.
//மொத்ததில் புத்தகதரம், அட்டைப்படங்கள், பேகிங் தரம், டெலிவரி ஸ்பீட், விளம்பரங்கள், ஆசிரியரின் ஹாட் லைன், வாசகர் கடிதங்கள் என உண்மையிலேயே விஜயன் சார் நம்மை எல்லாம் திக்குமுக்காட வைத்துவிட்டார் என்பதே உண்மை. //
அதே அதே, சபாபதே.
//சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ஐ மீண்டும் அந்தரத்தில் தொங்கவிட்டுவிட்டார் என்ற குறைமட்டுமே சொல்லமுடியும்.//
கண்டிப்பாக தீபாவளியன்று நம் கைகளில் இருக்கும்.
விஸ்வா நீங்கள் ரொம்பவும் வெறுப்பேற்றுகிறீர்கள்.
ReplyDelete-
புத்தகம் இன்னமும் கிடைக்க பெறாத ஆதங்கத்தில் உள்ள நண்பர்கள். :(
காலைலேயே ஒரு அற்புதமான பதிவு! விமர்சனமும் சூப்பர்! நான் மொத்தம சிவகாசி போகும்போதுதான் வாங்க முடியும்! இருந்தாலும் உங்களை போன்ற காமிக்ஸ் ஆராய்ச்சியாளர்களின்?! கட்டுரைகளை படிப்பது தனிசுகம் தான்! :)
ReplyDeleteகேடன் டைகர் சார்.
Deleteஇந்த வாரம் முதல் சென்னையிலும் கிடைக்கும். வாங்கி விடுங்கள்.
அது என்னங்க ஆராய்ச்சியாளர் ?@! கிண்டல் தானே?
என்னங்,,,,,,,, நைட் துங்க மாட்டிங்களா,?,,,,,,,,,,,, அருமை யான பதிவு ,,,,,, மற்றும் scanning ,,,,,,,,,,,, இதற்கே 3 மணிநேரம் ஆகி இருக்கு மே,,,,,,,,,, எப்படி நைட் ம் க ண் முழித்து ,,,,,,,,,, காலை யும் வொர்க் செய்யறேங்க ,,, அடுத்த பதிவு kv anand ன் vikadan intraview தானே ,,,,,,,,,, என்ன தலைவரே ,,,,,,,, neengalum சின்ன payan மாதிரி , ஹை,,,,,,, irumbukai மாயாவி பற்றி ஆனந்த் .kv . சொல்லிவிட்டாரே ,,,,, ன்னு ,,,,,,,,,,,,,,,,,,,,,, சந்தோஷ படறிங்க ,,,,,,,,,,,,, ,எனக்கும் & எல்லோருக்கும் சந்தோசம்தான் ,,,,,,,,,,, vikadan 6 lakshs பிரதி விற்கிறது ,,,,,,,,,, எல்லோரும் படித்து இருபாங்க,,,,,,,,,,,, அதை சிரமப்பட்டு ஸ்கேன் எடுத்து போடணுமா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இன்னும் லக்கி லுக் கைக்கு வரலே ,,,,,,,,, உங்க கைல லக்கி லுக் இருந்தாலும் ,,,,,,,,, 2 weeks ku ரிலாக்ஸ் ஆ படிக்க முடியாத அளவுக்கு busy வொர்க் irukanum endru எல்லா ம் வல்ல ஸ்ரீ ஸ்ரீ பரமஹிம்ச ,,,,,,, சாரி பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் ,அவர்களை வேண்டுகிறேன் ,,,,,,,,,,,,, டேக் கேர் friend
ReplyDelete//vikadan 6 lakshs பிரதி விற்கிறது ,,,,,,,,,, எல்லோரும் படித்து இருபாங்க,,,,,,,,,,,, அதை சிரமப்பட்டு ஸ்கேன் எடுத்து போடணுமா//
Deleteஒப்போதைக்கு அது தேவைப்படாத ஒரு விஷயமே பிரதர். ஆனால் பின்னாட்களில் ஒரு தகவல் / விஷயம் சேகரிக்கும்போது இது ஒரு ரெக்கார்ட் ஆக என்றுமே இருக்கும் அல்லவா? அப்படி பார்த்தல் இந்த ப்ளாக்கில் இருக்கும் எல்லாமே அப்படிப்பட்ட விஷயங்கள் தானே? பகிர்ந்து கொள்வதுதானே இந்த ப்ளாக்கின் சிறப்பாக உள்ளது?
கருணாகரன், மலேசியா.
//என்னங்,,,,,,,, நைட் துங்க மாட்டிங்களா,?,,,,,,,,,,,, அருமை யான பதிவு ,,,,,, மற்றும் scanning ,,,,,,,,,,,, இதற்கே 3 மணிநேரம் ஆகி இருக்கு மே,,,,,,,,,, எப்படி நைட் ம் க ண் முழித்து ,,,,,,,,,, காலை யும் வொர்க் செய்யறேங்//
Deleteமறுநாள் காலையில் முகமூடி ஆடியோ லான்ச். ஆகையால் விடியற்காலையிலேயே சென்றுவிட்டேன். அதன் பிறகு டார்க் நைட் ரைசஸ் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ. இப்படியாக அன்றைய தினம் கழிந்தது.
//அடுத்த பதிவு kv anand ன் vikadan intraview தானே ,,,,,,,,,, என்ன தலைவரே ,,,,,,,, neengalum சின்ன payan மாதிரி , ஹை,,,,,,, irumbukai மாயாவி பற்றி ஆனந்த் .kv . சொல்லிவிட்டாரே ,,,,, ன்னு ,,,,,,,,,,,,,,,,,,,,,, சந்தோஷ படறிங்க ,,,,,,,,,,,,, ,எனக்கும் & எல்லோருக்கும் சந்தோசம்தான் ,,,,,,,,,,, vikadan 6 lakshs பிரதி விற்கிறது ,,,,,,,,,, எல்லோரும் படித்து இருபாங்க,,,,,,,,,,,, அதை சிரமப்பட்டு ஸ்கேன் எடுத்து போடணுமா//
நீங்க விகடன் படிக்கிறீங்க, மற்ற காமிக்ஸ் ரசிகர்களும் படிக்கிறாங்களா என்று தெரியுமா? இதுய் ஒரு தகவல் பகிர்வு மட்டுமே. நோ சந்தோசம். நீங்கள் சொல்லும் விஷயம் பொதுவில் ஒக்கே என்றாலும், காமிக்ஸ் படிக்கும் ஒரு குறுகிய சமுதாயத்தில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் அடிக்கடி தேவையே.
//இன்னும் லக்கி லுக் கைக்கு வரலே ,,,,,,,,, உங்க கைல லக்கி லுக் இருந்தாலும் ,,,,,,,,, 2 weeks ku ரிலாக்ஸ் ஆ படிக்க முடியாத அளவுக்கு busy வொர்க் irukanum endru எல்லா ம் வல்ல ஸ்ரீ ஸ்ரீ பரமஹிம்ச ,,,,,,, சாரி பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் ,அவர்களை வேண்டுகிறேன் ,,,,,,,,,,,,, டேக் கேர் பிரிஎந்து//
நன்றிகள், நன்றிகளோ நன்றிகள்.
நாளைக்கே அடுத்த டூர். போதுமா இந்த விவரம்? (உஸ், அப்பா, ஏன்னா கொலைவெறி????????)
லக்கி கிங் விஸ்வா,
ReplyDeleteநீங்கள் உண்மையிலேயே லக்கிதான். புத்தகம் கிடைத்து பதிவும் இட்டுவிட்டீர்கள். உண்மையில்லேயே ஆட்டம் இப்போதுதான் சூடு பிடிக்கிறது என்று நினைக்கின்றேன். ரூ.10 இதழ்கள் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் என்று பாடிக் கொண்டே, பத்மினி பேத்தி வருவளா என்று எட்டி எட்டி பார்ப்பதுபோல் நான் புத்தகத்துக்காக பார்த்துக் கொண்டிருகிறேன்.
உமது பதிவு புத்தகம் கைவரப் பெறாதவர்களை வெறுப்பேற்றினாலும், சந்தா செலுத்தாதவர்கள் உமது பதிவை பார்க்கும் போது நிச்சயம் அவர்களும் ஒரு புத்தகத்தை வாங்குவார்கள். பதிவு அருமை. சுடச் சுட விவரங்களை தந்ததற்கு நன்றி.
//அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் என்று பாடிக் கொண்டே, பத்மினி பேத்தி வருவளா என்று எட்டி எட்டி பார்ப்பதுபோல் நான் புத்தகத்துக்காக பார்த்துக் கொண்டிருகிறேன்.//
Deleteவர வர நீங்கள் ஒரு இலக்கிய வாதி போல பாட்டுக்களையும், உதாரணங்களையும் கொடுக்கிறீர்கள். சூப்பர்.
//உமது பதிவு புத்தகம் கைவரப் பெறாதவர்களை வெறுப்பேற்றினாலும், சந்தா செலுத்தாதவர்கள் உமது பதிவை பார்க்கும் போது நிச்சயம் அவர்களும் ஒரு புத்தகத்தை வாங்குவார்கள். பதிவு அருமை. சுடச் சுட விவரங்களை தந்ததற்கு நன்றி.//
இதுதானே நமது கடமை.
அட்டகாசம். அமர்க்களம். எனக்கும் புத்தகம் கிடைத்து விட்டிருந்தால் மகிழ்ச்சியாக கமென்ட் இட்டிருப்பேன்.
ReplyDeleteகுணசீலன்
ஜான் ஸ்டீல் கதை மரண மொக்கை.
ReplyDeleteராஜன், திருப்பூர்.
ராஜன் ப்ரதர்,
Deleteதயவு செய்து சில நாட்களுக்காவது இது போன்ற கதைகளை குறித்த உங்களின் கருத்துக்களை தேக்கி வையுங்கள். ஏனென்றால் அயல் நாட்டில் இருக்கும் எங்களைப்போன்றவர்களுக்கு புத்தகம் கிடைக்க பாத்து நாட்களாவது ஆகும். அந்த சூழலில் இதுபோல கதை மொக்கை, சரியில்லை என்றெல்லாம் சொன்னால் அதுவே ஒரு வினையாக மாறி கதையை பற்றிய எங்கள் சிந்தனைகளை சிதறடித்து விடுகின்றது.
கருணாகரன், மலேசியா.
நண்பர்களே,
Deleteகதை மொக்கை, சூப்பர் போன்றவை ஒரு மேலோட்டமான கருத்துக்கள். இவற்றின் மூலம் நமது வாசிக்கும் அனுபவம் கண்டிப்பாக குறைபடாது.
// (என்னைப் போலவே) தியேட்டர்களில் லேட்டாக வந்து "எவ்வளவு நேரம் படம் போச்சு?" என்று கேட்பவர்களுக்காக //
ReplyDeleteதலைவரே நீங்க என்னை தானே சொல்லுறீங்க ;-)
.
சிபி அண்ணே,
Deleteஉண்மை எது என்பது நம் இருவருக்குமே நன்றாக தெரியுமே?
சமீபத்தில் மொக்கை ஃபில்ம் கிளப் மெம்பர்களுடன் ஒரு தெலுகு படத்திற்கு சென்றேன். எனக்கு ஒரு மீட்டிங் இருந்ததால் நேரத்திற்கு வர முடியவில்லை. சற்று நேரம் கழித்து லேட்டாக வந்து சேர்ந்துக்கொண்டேன். கொடுமை என்னவெனில் நான் உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தவுடனே அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இடைவேளை விட்டு விட்டார்கள்.
தியேட்டர் மேனேஜரிடம் சண்டை போடலாமா (பின்னே இப்படியா வந்தவுடனே இடைவேளை விடுவது?) என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதுதான் நண்பர்கள் சொன்னார்கள்: நான் ஒன்றரை மணி நேரம் லேட் என்று.
இந்த சாம்பிள் போதுமா அல்லது இன்னும் கொஞ்சம் வேணுமா?
காரிகனின் கதை லயன் சூப்பர் ஸ்பெஷல் மாடஸ்டி யின் கொலை அரங்கத்தை நினைவு படுத்துகிறது :))
ReplyDelete.
அண்ணே,
Deleteஅது உண்மையில் படமாக வந்த ஒரு ஹாலிவுட் ஆங்கில திரைப்படத்தின் கதை. அண்ணன் கிங் விஸ்வா (வெகு சீக்கிரம்) அதைப்பற்றி பதிவிட சொல்லி, அவரும் (வெகு சீக்கிரம்) பதிவிட எல்லாம் வல்ல அந்த நித்தியானந்தரை வேண்டுகிறேன்.
ஜெய ரஞ்சிதா. ஜெய சஞ்சிதா.
நண்பர்களே,
Deleteகதை மொக்கை, சூப்பர் போன்றவை ஒரு மேலோட்டமான கருத்துக்கள். இவற்றின் மூலம் நமது வாசிக்கும் அனுபவம் கண்டிப்பாக குறைபடாது.
//அது உண்மையில் படமாக வந்த ஒரு ஹாலிவுட் ஆங்கில திரைப்படத்தின் கதை. அண்ணன் கிங் விஸ்வா (வெகு சீக்கிரம்) அதைப்பற்றி பதிவிட சொல்லி, அவரும் (வெகு சீக்கிரம்) பதிவிட எல்லாம் வல்ல அந்த நித்தியானந்தரை வேண்டுகிறேன். //
Deleteஉங்கள் ஆசை (வெகு விரைவில்) நிறைவேறும்
// இன்னும் இரண்டு நாட்களில் ஒரு காமிக் கட்ஸ் பகுதியில் தமிழின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் (இவர்தான் ரஜினியின் அடுத்த பட இயக்குனர்) இரும்புக் கை மாயாவியை பற்றி கூறும் பகுதி இடம்பெறுகிறது. அதன் பிறகு இந்த நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும். //
ReplyDeleteஅண்ணே அண்ணன்னே ஆவலுடன் காத்திருக்கிறோம் :))
.
வெல்கம் பேக். (இது எனக்கு நானே சொல்லிக் கிட்டது).
ReplyDeleteபுத்தகம் கைவரப் பெற்றேன். ஆனான் அதற்க்கு முன்பே ஹாட் லைனை படிக்க செய்ததிற்கு நன்றி.
என்னுடைய ரெண்டு செட் புக்கும் வந்துடுச்சு. இன்னும் இரண்டு சந்தா கட்ட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteசந்தா (கவனிக்கவும், சாந்தா அல்ல) ஈஸ் ஆல்வேஸ் பெஸ்ட்
//AnonymousFriday, July 20, 2012 11:11:00 PM GMT+05:30
ReplyDeleteஜான் ஸ்டீல் கதை மரண மொக்கை.
ராஜன், திருப்பூர்.
ReplyDelete
RepliesAnonymousSaturday, July 21, 2012 7:29:00 AM GMT+05:30
ராஜன் ப்ரதர்,
தயவு செய்து சில நாட்களுக்காவது இது போன்ற கதைகளை குறித்த உங்களின் கருத்துக்களை தேக்கி வையுங்கள். ஏனென்றால் அயல் நாட்டில் இருக்கும் எங்களைப்போன்றவர்களுக்கு புத்தகம் கிடைக்க பாத்து நாட்களாவது ஆகும். அந்த சூழலில் இதுபோல கதை மொக்கை, சரியில்லை என்றெல்லாம் சொன்னால் அதுவே ஒரு வினையாக மாறி கதையை பற்றிய எங்கள் சிந்தனைகளை சிதறடித்து விடுகின்றது.
கருணாகரன், மலேசியா.//
கதையை முழுவதுமாக சொல்வதோ, அல்லது அதிகமான பக்கங்களை ஸ்கான் செய்து எனக்கும் ஸ்கான் செய்ய தெரியும் என்று காமிக்ஸ் புத்தகங்களை திருட்டு சீடியில் வாங்கி, அதை தானே ஸ்கான் செய்தது போல பதிவிடுவத்தான் தப்பு. இங்கே ஒரு வாசகர் கதை மரண மொக்கை என்றுதானே அவர் கருத்தை சொல்கிறார்? கதையை சொல்லாத வரைக்கும் அது ஒக்கே தான்.
Who is (இவர்தான் ரஜினியின் அடுத்த பட இயக்குனர்)that Director?
ReplyDeleteWell, Mr K.V.Anand is the director and the detailed scan will appear tonight in this blog.
DeleteHowever, the issue about him being the next director for Rajnikanth is, though not officially confirmed, is from the close sources and credible.