Pages

Wednesday, July 04, 2012

13 முத்து காமிக்ஸ் - சிகப்புக் கன்னி மர்மம் - டிடெக்டிவ் ஜெரோம் அறிமுகம் - பாகம் 1 off 2 -Muthu Comics #315 – June 2012–Jerome K. Jerome Bloche Adventure

காமிரேட்ஸ்,

அனைவருக்கும் என்னுடைய தாமதமான வணக்கங்கள். வழமை போல இந்த முறையும் ஒரு (ஜாலியான) பயணமே இந்த பதிவின் தாமதத்திற்கு காரணம். ஆமாம், கடந்த பத்து நாட்களாக சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் என்று கொங்கு மண்டலத்தில் சுற்றிக்கொண்டு இருந்ததாலேயே பதிவுலகத்தின் பக்கமே வர இயலவில்லை. இந்த வார கோட்டா இதோ ஆரம்பித்து விட்டது - நாளைக்கு காலையில் ஒரே ஒரு நாள் வேலையாக இந்தியத் தலைநகர் செல்ல வேண்டியுள்ளது. அட, விடுங்க சார், என்னுடைய சொந்த புலம்பல்களை சொல்ல இந்த வலைப்பூ வலைரோஜா ஆரம்பிக்கப்படவில்லை. ஆகையால், கடந்த வாரம் வந்து சேர்ந்த இந்த இரண்டு முத்து காமிக்ஸ் இதழ்களைப் பற்றி தனித்தனியாக இரண்டு பதிவுகளில் பார்ப்போம். முதல் பதிவாக, டிடெக்டிவ் ஜெரோம் அறிமுகம் ஆகும் சிகப்புக் கன்னி மர்மம் இதழைப்பற்றி அலசுவோம்.

இந்த இதழின் அட்டைப்படங்களை ஏற்கனவே எடிட்டரின் வலைதளத்தில் கண்டு களித்திருப்பீர்கள். ஞாபக சக்தி அதிகமுள்ளவர்கள் ஏற்கனவே இந்த அட்டைப்படங்களை தமிழ் காமிக்ஸ் உலகத்திலேயே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பதிவில் பார்த்திருப்பதை நினைவூட்டிக் கொள்ளலாம். இந்த அட்டைப்படங்களை சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே சிவகாசி லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் கண்டிருக்கிறேன். அப்போதே இவை அச்சடிகப்பட்டதால் இவற்றின் உட்பக்க  அட்டைகளில் இருக்கும் (விற்பனைக்கு இருக்கும்) புத்தக தலைப்புகள் இன்றைய சூழலுக்கு பொருந்தாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

 

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Cover Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Back Cover
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Cover Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Back Cover

பிரெஞ்சு மொழியில் வெளிவந்த இந்த தொடரின் actual அட்டைப்படத்தை இந்த பதிவின் முடிவில் நீங்கள் காணலாம். அந்த அட்டைப்படதிற்க்கும் நம்முடைய எடிட்டர் "தயாரித்த" இந்த அட்டைப்படதிற்க்கும் உள்ள வித்தியாசங்களை பாருங்கள். வண்ணக் கோர்வை மிகுந்து வானவில்லாக ஜொலிக்கும் நம் இதழின் அட்டைப்படங்கள், என்னைப்போன்ற தெலுங்கு மசாலாப்பட ரசிகர்களை கவர்வதில் ஆச்சர்யமேயில்லை .

வழக்கமாக வரையும் நம் லயன் காமிக்ஸ் ஆஸ்தான ஓவியர் வரைந்த இந்த இதழ் அட்டையில் ஒரு வித்தியாசம் இருப்பதை நீங்கள் காணலாம். அது என்ன என்பதை நாளை மறுநாள் இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்திற்கான பதிவில் கூறுகிறேன். அதுவரையில் வெயிட் செய்யுங்கள். வெயிட் செய்ய முடியாதவர்கள் அது என்ன வித்தியாசம் என்று பின்னூட்டமாக கூறுங்கள்.

எப்படி ரத்னா கஃபேயில் உள்ளே நுழைந்தவுடன் ஆட்டோமேட்டிக்காக சாம்பார் வடை ஆர்டர் செய்கிறோமோ, அதைப்போலவே நம்முடைய காமிக்ஸ் இதழ்கள் வாங்கியவுடன் முதலில் மேய்வது நம்முடைய எடிட்டரின் எண்ணங்களையே. இந்த விஷயத்தை நான் என்னுடைய வலைத்தளம் ஆரம்பித்த நாளில் இருந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். இன்னமும் சொல்வேன். முடிந்த அளவிற்கு எடிட்டர் இன்னனும் சில பக்கங்களை ஒதுக்கி எழுதலாம். சில விஷயங்களில் மட்டும் போதும் என்பதே கிடையாதே?

 

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Editorial Page 03 & 04
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Editorial Page 03 & 04

Alain Dodier

கதாசிரியர் அலைன் டோடியர்:  55 வருடங்களுக்கு முன்பாக ஃபிரான்சில் இருக்கும் டன்கிர்க் என்னும் ஊரில் மே இரண்டாம் தேதி பிறந்த அலைன் டோடியர்,நம்ம ஊர் மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் போல.அதாவது முறைப்படி ஒரு குருநாதரிடமோ, அல்லது ஒரு பயிற்சி பள்ளியிலோ கற்றுக்கொள்ளாமல், தானே ஒரு ஸ்டைலை உருவாக்கி, அதனை பின்தொடர்ந்து அப்படியே ஓவியங்களை வரைய ஆரம்பித்தார்.

பதின்ம வயதுகளில் மேலும் மும்முரமாக வரைய ஆரம்பித்து பதினெட்டாவது வயதில் முதன்Pierre Makyo முதலாக ஒரு சிறு இதழில் ( Falatoff என்கிற ஒரு fanzine) முதல் காமிக்ஸை பதிப்பில் கண்டார். அதன் பின்னர் உலகப்புகழ் பெற்ற ஸ்பிரோ இதழில் சிறு,சிறு பகுதியில் இவருடைய ஓவியங்கள் பிரிண்ட் ஆக ஆரம்பித்தன. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி (நன்றி:சந்தானம் இன் பாஸ் என்கிற பாஸ்கரன்) என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்பெஷல் ஏஜென்ட் ஜநோடஸ் என்கிற ஒரு துப்பறியும் காமிக்ஸ் கதையை 1977 ஆம் ஆண்டு Pistil என்கிற இதழில் ஆரம்பித்து,இரண்டு ஆண்டுகள் அந்த தொடரை வெற்றிகரமாகவும் கொண்டு சென்றார். அதன் பின்னர் டின்டின், ஜின் போன்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாட்டு பத்திரிக்கைகளில் இவர் ரெகுலர் ஆக வரைய ஆரம்பித்தார்.

Dodier's Original Comic Art from Jerome K Jerome Bloche Series

ஒரு சீரான வேகத்தில் பேசஞ்சர் வண்டி போல சென்றுக்கொண்டு இருந்த டோடியரின் வாழ்க்கை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரெஸ் ஆக உருமாறியது எப்போதென்றால் எண்பதின் அந்திம காலத்தில் நடந்த ஒரு மழைக்கால மாலைநேரத்து சந்திப்பில் தான். . கவிதைத்தனத்தை கட் செய்து விட்டு நேரிடையாக சொல்வதென்றால், 1980ஆம் ஆண்டுதான் மெர்கிரெடி (புதன்கிழமை?) என்கிற ஒரு பத்திரிக்கையில் பியர்ரே மாக்யோ'வை சந்திக்கிறார் நம்ம டோடியர். சம வயதுக்காரர்கள் என்பதைத்தவிர, ஒரே ஊர்க்காரர்கள் என்பதாலும் இவர்களுக்கிடையே ஒரு ஆழ்ந்த நட்பு உருவாயிற்று. இருவரும் இணைந்து (கதை மாக்யோ, ஓவியங்கள் டோடியர்) Gully என்கிற ஒரு வரலாற்று நகைச்சுவை தொடரை ஆரம்பித்தனர்.  இந்த கதை எவ்வளவு வரவேற்ப்பு பெற்றது என்றால், இரண்டு ஆண்டுகள் கழித்து மெர்கிரெடி இதழ் நிறுத்தப்பட்டபோதும்கூட ஸ்பிரோ இதழில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வெளிவந்தது. இந்த தொடர் வந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஜோடி நம்ம சச்சின்-சவுரவ் கங்குலி போல ஒரு திறமையான,வெற்றிக் கூட்டணியாக தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர்.

Dodier's Original Comic Art from Jerome K Jerome Bloche1982 ஆம் ஆண்டு, இந்த ஜோடி உருவாகிய ஹீரோதான் நம்ம முத்து காமிக்ஸின் இந்த இதழின் நாயகன் ஜெரோம் கே ஜெரோம் புளூச். முதல் கதையை Serge Le Tendre உடன் எழுதி வெளியிட்டனர். இரண்டாவது கதையிலும் இதே மூவர் கூட்டணி தொடர்ந்தது. ஆனால், மூன்றாவது கதையை மாக்யோ எழுதி, டோடியர் ஓவியங்களை வரைந்தார். ஐந்தாவது கதையிலும் இதே இருவர் அணி இணைந்து செயல்பட்டது. பல கதைகளில் தனித்தனியே செயல்பட வேண்டிய கட்டாயம் உருவானதால், நான்காவது கதையில் ஒன் மேன் ஆர்மி ஆக கதை, அமைப்பு, ஓவியங்கள் என்று டோடியரே தனித்து நின்று சுயேச்சையாக ஜெயித்தார். அந்த வெற்றியே பின்னர் (இது நாள் வரைக்கும்) தொடர்கிறது.

மகள் கேரோலைன் தன்னுடைய 44வது வயதில் பிறந்ததால், மகள் மீது அளவற்ற அன்பு செலுத்தும் டோடியர், தன்னுடைய மகளையும் ஓரிரு கதைகளில் ஒரு பாத்திரமாகவே (Fauve cage) உலவ விட்டிருக்கிறார். 2010ல் Angoulemeல் நடந்த காமிக்ஸ் பெருவிழாவில் நம் ஹீரோ ஜெரோம் கதாபாத்திரத்திற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Story Page 05 & 06
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Story Page 05 & 06

டிடெக்டிவ் ஜெரோம் - ஒரு அறிமுகம்: டின் டின் இதழில் Leopold and Capucine என்கிற கதைக்கான ஓவியங்களை வரையும்போதேJerome in a leisurely Pose ஒரு காமெடியான இன்ஸ்பெக்டர் கதைதொடரை மனதில் பதித்துக்கொண்டார் டோடியர். அந்த ஹீரோ நம்ம ஜேம்ஸ் பான்ட் போல ஒரு அடிதடி ஆக்ஷன் ஹீரோவோ, அல்லது ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற ஒரு அதிபுத்திசாலி ஆசாமியோ கிடையாது. உதாரனத்திற்க்கு சொல்வதென்றால் நம்ம தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சுபா கதைகளில் வருவாரே ஒரு டிடெக்டிவ் செல்வா, அவரைப் போன்ற ஒரு ஆள்தான் நம்ம ஹீரோ ஜெரோம்.

சரி, ஒரு க்ளம்சியான துப்பறியும் ஹீரோவை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தாயிற்று. அடுத்தது என்ன? பெயர் சூட்டு விழா தான். இவருடைய பெயருக்கு பின்னால் இருவர் இருக்கின்றனர். முதல் பகுதி புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜெரோம் கே ஜெரோம் மற்றும் இரண்டாம் பகுதி ஓவியர் ஹெரோநிமஸ் போஸ்ச். இந்த இருவரின் பெயரையும் ஒருங்கிணைத்து உருவானவரே நம்ம டிடெக்டிவ் ஜெரோம். இந்த கஷ்டமான பெயரை எல்லாம் சொல்லி நம்மை மேலும் கஷ்டப் படுத்தாமல் ரொம்பவும் தெளிவாக நம்ம எடிட்டர் டோனி ஜெரோம் என்று நாமகரணம் சூட்டிவிட்டார்.

Jerome with his cycleபாரிஸ் நகரில் Lamarck Caulaincourt ( line 12) இரெயில் நிலையம் அருகில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் ஜெரோம், எப்போதுமே ஒரு ஓவர் கோட் மற்றும் தொப்பி அணிந்தே காணப்படுவார். லைசென்ஸ் தேவையில்லை என்பதால் சைக்கிள்தான் இவரது பஞ்சகல்யாணி. அந்த பஞ்சகல்யாணியை இவர் எப்போதும் பூட்டியே வைப்பார். நம்ம கிரேசி மோகன் கதைகளில் வருவதைப்போல அந்த சைக்கிளை விட இவர் போட்டிருக்கும் பூட்டுகளுக்கே மதிப்பு அதிகமாக இருக்கும். லைம் ஜூசை (தண்ணீர் மற்றும் சர்க்கரை இல்லாமல்) விரும்பி சாப்பிடும் ஜெரோம், கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் மூலம் துப்பறிவது எப்படி என்று படித்தவர். கணினி துறையில் இவர் எந்த அளவுக்கு வல்லுநர் என்றால் டைம் மெஷினில் பலநூறு ஆண்டுகள் முன்வந்த ஒரு காட்டுவாசியே இவரைவிட தெளிவாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவார்.

இவருக்கு துணையாக பல கதைகளில் துப்பறிவது இவரது காதலியாகிய பப்பெத். இவர் Air France விமான நிறுவனத்தில் ஒரு Air-Hostess ஆக பணி புரிபவர். உயிருக்குயிராக ஜெரோமை காதலிக்கும் இவர், ஜெரோம் வசிக்கும் அதே பாரிஸ் நகரில் தான் வசிக்கிறார். இதைதவிர (இந்த கதையில்) வரும் மற்றுமொரு ரெகுலர் கேரக்டர் ரோசி (ஆண்ட்டி). தபால்காரர் Reneயுடன் Going-Steady ஆக இருக்கும் இவர், ஜெரோம் வசிக்கும் அடுக்குமாடியின் Care-Taker ஆவார்.

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Story Page 96 & 97
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Story Page 96 & 97

சிகப்புக் கன்னி மர்மம்: இதைவிட பிரம்மாதமாக ஒரு கதையை ஆரம்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. மழைபெய்த ஒரு பாரிஸ் இரவின் கடைசியில் ஒரு வீட்டின் கதவை இரண்டு போலீஸ்காரர்கள் தட்டுகின்றனர். உள்ளே நம்ம ஹீரோ போதை கலைந்து "லைட்" ஆக ஒரு கண்ணை திறந்து பார்க்கிறார். அவர் அருகே அந்த வீட்டின் எஜமானி ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். துப்பாக்கி (நம்ம இளைய தளபதி விஜய் படம் இல்லீங்கோவ்) தோட்டா துளைத்து,இரத்தம் இன்னமும் வழிந்தோடிக்கொண்டு இருக்கையில் அதைவிட அதிர்ச்சியான மற்றுமொரு திருப்பமாக நம்ம ஹீரோ கையில் அந்த தோட்டாவை வெளியே துப்பிய துப்பாக்கி. ஒருவேளை நாமளே போதை அதிகமாகி சுட்டிருப்போமோ என்றுகூட ஒரு கட்டத்தில் யோசிக்கும் அளவிற்கு ஹீரோ தெளிவானவர்.

போலிஸ் இடமிருந்து தப்பிக்கும் வேளையில் ஃ ப்ளாஷ் பேக் யுத்தியில் வேகமாக,தெளிவாக சொல்லப்பட்டிருக்கும் இந்த கதை, ஒரு சீரான வேகத்திலேயே பிரயாணிக்கிறது. சில இடங்களில் அட என்று வியக்கவைக்கும் அளவிற்கு சில திரைக்கதை யுத்திகள் இருந்தாலும், பல இடங்களில் சுலபமாக யூகிக்கவும் வைக்கிறது இந்த கதையின் போக்கு. இரண்டாம் பாகத்தையும் ஒருங்கே வைத்து பார்த்தல் தான் இதன் முழு வடிவம் வெற்றியா அல்லது வற்றி வாய்ப்பை இழந்ததா என்று தெரியும். அதைப்பற்றி நாளை மறுநாள் பதிவில் பார்ப்போம்.

Jerome K Jerome Bloche Book No 15: La Comtesse (The Countess) Cover–Dupuis May 2001 – Story & Artwork by Alain Dodier Jerome K Jerome Bloche Book No 15: La Comtesse (The Countess) 1st Page–Dupuis May 2001 – Story & Artwork by Alain Dodier
Jerome K Jerome Bloche 15 La Comtesse Cover Jerome K Jerome Bloche 15 La Comtesse 1st Page

இதுவரையில் மொத்தம் 21 புத்தகங்களாக வந்துள்ள இந்த கதைத் தொடரில், இந்த இரண்டு கதைகளைத் தவிர மற்ற அனைத்துமே தனிப்பட்ட, ஒரே புத்தகமாக 48 பக்கங்களில் வந்த கதைகளே. முழு வண்ணத்தில் சில பல பக்கங்களை பார்க்கும்போது, எடிட்டர் இதனை முழு வண்ணத்தில் வெளியிட்டு இருந்தால் என்ன என்ற எண்ணம் வராமலில்லை. அதே சமயம் இந்த கதை முடிவான தருணம் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அடுத்த கதைகளை எடிட்டர் வெளியிடுவாறேயானால், கண்டிப்பாக முழு வண்ணத்தில் (லார்கோ வின்ச் போல) வெளியிட்டால் கம்ப ராமாயணத்தில் சொன்னது போல அழகுக்கு அழகு சேர்த்தது போலிருக்கும். ஆனால் அதே சமயம் தற்போதைய கதைகளை வெளியிடாமல் ஆரம்பத்தில் வந்த (முதல் பனிரெண்டு கதைகளுக்குள்) ஒன்றினை அடுத்த கதையாக வெளியிடுவது சாலச்சிறந்தது.

Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Advt Page 98
Muthu Comics Issue No 315 Dated June 2012 Detective Jerome Sigappu Kanni Marmam Advt Page 98

நாளைக்கு ஒரு காமிக் கட்ஸ் - காமிக்ஸ் செய்திகள் கொண்ட தொகுப்பு பதிவு வெளிவரும். அதனை தொடர்ந்து நாளை மறுநாள் இந்த கதையின் இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியாகிய தற்செயலாய் ஒரு தற்கொலை புத்தகத்தின் விமர்சனப் பதிவு வெளியாகும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

13 comments:

  1. ஹாய் விஸ்வா,
    நல்ல ரசிக்கத்தக்க அறிமுகம்.. ஜெரோமின் படங்கள் வரையப்பட்ட பாணி நன்றாக இருக்கிறது. அதைவிட புது முத்து காமிக்ஸ் வந்துவிட்டது என்பது இனிப்பான செய்தி.
    //
    காமிக்ஸ் இதழ்கள் வாங்கியவுடன் முதலில் மேய்வது நம்முடைய எடிட்டரின் எண்ணங்களையே.
    //
    நூற்றிலொரு வார்த்தை :)

    ReplyDelete
  2. //நாளை மறுநாள் இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்திற்கான பதிவில் கூறுகிறேன். அதுவரையில் வெயிட் செய்யுங்கள்//

    //நாளைக்கு ஒரு காமிக் கட்ஸ் - காமிக்ஸ் செய்திகள் கொண்ட தொகுப்பு பதிவு வெளிவரும். அதனை தொடர்ந்து நாளை மறுநாள் இந்த கதையின் இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியாகிய தற்செயலாய் ஒரு தற்கொலை புத்தகத்தின் விமர்சனப் பதிவு வெளியாகும்.//

    ஒகே விஷ்வா, எப்படியும் நீங்க ஊர் சுற்றிவிட்டு 20 நாள் கழிச்சி வரப்போறிங்க :) Happy journey .

    ஜெரோம் கதைதொடர் பற்றி தெரியாத அபூர்வமான செய்திகளை உங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட விஷயங்கள்தான் உங்கள் பதிவின் ஸ்பெஷலே. நன்றி.

    ReplyDelete
  3. கதையை பற்றிய பின்னணி விவரங்கள் ஒக்கே, ஆனால் இந்த கதையின் டவுன்லோட் லிங்க் கிடைக்குமா?

    ReplyDelete
  4. டிடேடிவ் ஜெரோம் கதைகளில் முதல் நான்கு கதைகள் ஆங்கிலத்தில் (நம்மை போன்ற காமிக்ஸ் ரசிகர்களால்) மொழி பெயர்க்கப்பட்டு டவுன்லோட கிடைக்கிறது. தேவையெனில் சொல்லுங்கள். லிங்க் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  5. இரண்டு கதைகளையும் ஒரே பதிவில் போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்குமே?

    கு.ஞானசம்பந்தன்

    ReplyDelete
  6. கதையை கலரில் பார்த்தால் அட்டகாசமாக இருக்கிறது.கண்ணை உறுத்தாத வண்ணங்கள்.வரலாறையே காட்டி விட்டீர்கள் .வழக்கம் போல புள்ளி விவரங்களுடன் .அற்புதமான பதிவு .நன்றி நண்பரே

    ReplyDelete
  7. நல்ல பதிவு தலைவரே.
    பல தெரியாத தகவல்களை அளித்துள்ளீர்கள்.
    அடுத்த பதிவை எதி நோக்கி.

    ReplyDelete
  8. கோயிஞ்ச்சாமி எண் 416Thursday, July 5, 2012 at 9:04:00 PM GMT+5:30

    நல்ல பதிவு, நன்றி விஸ்வா.

    ReplyDelete
  9. AGAIN NO POST TODAY. YOU PROMISE AND AGAIN NOT POSTING ......


    THIS IS A TREND OR WHAT?

    SIVA.

    ReplyDelete
  10. //தாமதமான வணக்கங்கள்//

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்னு சூப்பர் ஸ்டார் சொல்வது போல, இந்த பதிவை தாமதமாக இட்டாலும், நிறைய பேக் க்ரவுண்ட் தகவல்களோடு இந்த பதிவை முழுமையாக தந்திருக்கின்றீர்கள் கிங் விஸ்வா.

    //இந்த அட்டைப்படங்களை சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே சிவகாசி லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் கண்டிருக்கிறேன்.//
    நான்கு வருடமாக எடிட்டர் பரணில் தூங்கிய கதையை உங்களைப் போன்ற ரசிகர்களுடைய நான்கு வருட தொந்தரவு பொறுக்க முடியாத காரணமாகத்தான் வெளியிட்டார் என்று தெரிந்துவிட்டது.

    //முடிந்த அளவிற்கு எடிட்டர் இன்னனும் சில பக்கங்களை ஒதுக்கி எழுதலாம். சில விஷயங்களில் மட்டும் போதும் என்பதே கிடையாதே?//
    எடிட்டர், நம் எல்லோருடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் ”காமிக்ஸ்-டைம்” க்கு ஒரு தனி வெளியீடே போட்டு விடப்போகிறார் பாருங்கள். அப்படி போட்டலும் அதையும் பெரிய சைஸ், ஆர்ட் பேப்பர், புல் கலர் வண்ணப் படங்களுடன்தான் எடிட்டர் போட வேண்டும்.:)

    ஆர்வத்துடன் நிறைய உழைப்பை செலவிட்டு இந்த பதிவை உருவாக்கியிருக்கின்றீர்கள். உங்கள் மெனக்கெடுதல் எங்களுக்கும் இதுபோல் பதிவிட ஆர்வத்தை தூண்டுகிறது.
    ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களில் இதுபோல கதாநாயகன், கதை, எழுத்தாளர், வரைகலை நிபுணர் போன்றவர்களின் விவரங்களை சில பக்கங்களில் தொகுப்பாக கொடுத்திருப்பர்கள். உங்கள் வலைப்பதிவை பார்க்கும் போது நமது காமிக்ஸ்களில் அந்த விவரங்கள் இல்லாத குறை தீர்ந்து போகின்றது.

    மேலும் உங்கள் இந்த பதிவில் கூறியுள்ள
    //அடுத்த கதைகளை எடிட்டர் வெளியிடுவாறேயானால், கண்டிப்பாக முழு வண்ணத்தில் (லார்கோ வின்ச் போல) வெளியிட்டால் கம்ப ராமாயணத்தில் சொன்னது போல அழகுக்கு அழகு சேர்த்தது போலிருக்கும். ஆனால் அதே சமயம் தற்போதைய கதைகளை வெளியிடாமல் ஆரம்பத்தில் வந்த (முதல் பனிரெண்டு கதைகளுக்குள்) ஒன்றினை அடுத்த கதையாக வெளியிடுவது சாலச்சிறந்தது.//

    -என்ற கருத்துக்கு எடிட்டர் கட்டாயம் செவிசாய்க்க வேண்டும். புல் கலர், லார்கோ வின்ச் சைஸ் இதுவே என்னுடைய கோரிக்கையும். என் புல் சப்போர்ட் உங்களுக்குத்தான். பெரிய சைஸ், முழு கலர் வேண்டும் என்று அடம் பிடிக்கும் (வருத்தப்படாத) வாலிபர் சங்கம் என்று சங்கம் ஆரம்பித்தால் முதல் உறுப்பினராக நான் சேர ரெடி. (அப்புறம், எடிட்டர் கட்டதொரயா மாறிட்டா நான் காலி)

    ஆரம்பத்தில் வந்த கதைகளுக்குள் ஒன்றினை தேர்வு செய்து அடுத்து வெளியிட வேண்டும் என்று நீங்கள் கூறியிருப்பதன் காரணம் நீங்கள் அனைத்து கதைகளையும் ஏற்கெனவே படித்துவிட்டீர்கள் என்பதுதான் என்று நினைக்கின்றேன்.

    சீராக தொடரட்டும் உங்களது இந்த பதிவுப் பணி.
    உங்க அடுத்த பதிவை ரெண்டு நாள் தள்ளி பதிவு போட்டாலும் பரவாயில்லை, இங்கு இன்னும் சில பின்னூட்டம் விழட்டும் ;-)).

    அன்புடன்,
    பாலாஜி சுந்தர்.
    picturesanimated.blogspot.com

    ReplyDelete
  11. வழக்கம் போல அனைத்து தெரியாத தகவல்களையும் தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி :))
    .

    ReplyDelete
  12. Just saw a comment in the editor's blog stating that while searching for Jerome's stories not being available in English.

    Officially yes, but some of the books were translated by the fans themselves and they are available for download in english.

    the 1st 4 books of the total 21 books in jerome series is available for download in english.

    if somebody wants, let me know. i will provide the download link.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails