காமிரேட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம். கடந்த இரண்டு வாரங்களாகவே ஏகப்பட்ட புத்தகங்கள்,பரிசுகள் என்று மிகவும் குதூகலமாக கழிந்தது. இணையதள பக்கம் வரமுடியாதது தான் ஒரே பிரச்சினை. அதனை சரி கட்டும் விதத்தில் இன்று முதல் ரெகுலர் ஆக பதிவிட உத்தேசித்து உள்ளேன். நாட்டிற்கு இதனால் நன்மை எதுவும் பயக்கப்போவதில்லை என்றாலும், இன்றுமுதல் பதிவுகள் தொடரும்.
மிக நீண்ட நாட்களாகவே மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் வாண்டுமாமா அவர்களைப்பற்றி எந்தவிதமான கட்டுரைகளும் வந்ததில்லை என்கிற குறையை போக்கும் விதமாக இந்த வார ஆனந்த விகடனில் அற்புதமான ஒரு பேட்டி வந்துள்ளது. பேட்டியை சிறப்பாக, பொறுமையாக முடித்த நண்பர்கள் தமிழ் மகன், திரு சமஸ் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பில் வாழ்த்துக்கள்.
கடந்த இரண்டு வருடங்களாகவே அமர் சித்திரக் கதைகள் ஒரு புதுப்பொலிவுடன் வருவதை கண்கூடாக காண முடிந்தது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே இப்போது தஞ்சாவூரை பற்றிய இந்த காமிக்ஸ் புத்தகம். புதிய பாணி சித்திர வகையுடன் வந்துள்ள இந்த புத்தகத்தை காமிக்ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்.
India Today Dated 13062012 Page No 51 Kadhambam Section ACK Latest Issue News |
வாண்டுமாமாவிற்க்கே இந்த நிலை என்றால், மற்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த குறையை போக்கும் விதமாக ஓவியர் மாயா அவர்களின் அற்புதமான நேர்காணல் ஒன்றினை சூரியகதிர் பத்திரிக்கையில் தொகுத்து வெளியிட்டு இருந்தனர். பேட்டி எடுத்த நண்பர் திரு ஸ்ரீஹரி அவர்களுக்கும், பத்திரிக்கையாளர் திரு பாரதி ராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல.
ஒரு மாறுதலுக்காக எவர் கிரீன் ஸ்டார் திரு செல்லம் அவர்களின் கை வண்ணத்தில் எண்பதுகளில் குங்குமம் இதழில் வந்த ஒரு சில நகைச்சுவை துணுக்குகள்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
super da.
ReplyDeletevery wonderful news.
டியர் கிங்,
ReplyDeleteஎப்போதாவதுதான் விகடன் வாங்குவதுண்டு. அதிசயமாக இந்த வாரம் வாங்கினேன். ஆனால் உங்களது இமெயில் அப்டேட் பார்த்த பின்புதான் வாண்டுமாமா கட்டுரையை படித்தேன். படித்து முடித்தபின் மனதை என்னமோ செய்கின்றது. சிறு வயதில் அவருடைய கதைகளை படித்திருக்கின்றேன். இப்போது எல்லாம் மறந்துவிட்டது. சிறுவயதில் அவருடைய கதைகள் என்னை ஒரு மாய உலகில் சஞ்சரிக்க செய்தவை. ஆனால் வாண்டுமாமா வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள், ஆனால் அந்த துயரங்கள் எல்லாம் அவரை மேலும் மேலும் உறுதிப்படுத்தியதாக அவர் சொல்கிறார். இன்றும் அவர் உடல் நலக்குறைவிலும் உறுதியாக இருப்பதற்கு, அவர் சிறு வயதில் சந்தித்த சோதனைகளும், அவருக்கு இன்றும் உறுதுணையாக இருக்கும் மனைவியும் குழந்தைகளுமே. இறைவன் அவருக்கு எதையும் தாங்கும் இதயத்தையும், உடல் பலத்தையும் தருவதற்கு நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
keep it up King.
விஷ்வா,
ReplyDeleteசிறப்பானதொரு பதிவு.
வாண்டுமாமா, அணில் அண்ணா, ஆலந்தூர் கோ.மோகனரங்கன் போன்றோரின் சிறுவர்கதைகள்,காமிக்ஸ் என ஒன்று விடாமல் படிப்பேன், இப்போ எல்லாம் மறந்துவிட்டது. எழுத்தாளர்கள் பெரிய அளவில் வசதியாக இல்லை என்றாலும் நன்றாக இருப்பார்கள் என நினைத்தேன் ,ஆனால் வாண்டு மாமா , இன்னமும் கடின வாழ்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஹாரிப்பாட்டர் எழுதிய ஜே.கே ரவ்லின்க் எங்கே ,அதற்கு இணையான முன்னோடி குழந்தை எழுத்தாளர் வாண்டுமாமா நிலை என்ன? தமிழ் அச்சு ஊடக முதலாளிகளைத்தான் இதற்கு காரணமாக சொல்லணும்.
வாண்டுமாமா சிறுவர் கதைகள் மட்டுமில்லாமல் "தெரியுமா ,தெரியுமே" என ஒரு பொது அறிவு தொகுப்பு கூடப்போட்டுள்ளார். என்னிடம் ஒரு பிரதி இருந்தது இப்போது என்னாயிற்று என தெரியவில்லை.
//வாண்டுமாமா சிறுவர் கதைகள் மட்டுமில்லாமல் "தெரியுமா ,தெரியுமே" என ஒரு பொது அறிவு தொகுப்பு கூடப்போட்டுள்ளார். என்னிடம் ஒரு பிரதி இருந்தது இப்போது என்னாயிற்று என தெரியவில்லை.//
Deleteஅந்த புத்தகம் இப்போதும்கூட வானதி பதிப்பகத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. தேவை எனில் வாங்கிக்கொள்ளவும்.
நண்பரே,
ReplyDeleteமறுபடியும் பதிவிட ஆரம்பித்தமைக்கு நன்றி. ஆனால் உங்களை எடிட்டரின் பிளாக் பக்கமே காண முடிவதில்லையே?
மடிப்பாக்கம் சுதாகர்
வெல்கம் விஸ்வா சார்.
ReplyDeleteவாண்டுமாமா பற்றிய அருமையான பதிவு.
உடனே ஆனந்த விகடன் வாங்க கிளம்பிவிட்டேன்.
நன்றி.
கிருஷ்ணா வ வெ
வாண்டுமாமாவின் பேட்டி அருமை. இன்னும் இரண்டு புத்தகங்கள் எழுதிக் கொண்டு இருக்கிறாராமே.. அவை சித்திரக்கதைகளாக இருந்தால் மிகவும் மிகவும் மகிழ்ச்சி... அவரின் பெரியவர்களுக்கான எழுத்துகள் சரியான அங்கீகாரம் பெற்றதா எனத் தெரியவில்லை.
ReplyDeleteசிவ்,
ReplyDelete//வாண்டுமாமாவின் பேட்டி அருமை. இன்னும் இரண்டு புத்தகங்கள் எழுதிக் கொண்டு இருக்கிறாராமே.. அவை சித்திரக்கதைகளாக இருந்தால் மிகவும் மிகவும் மகிழ்ச்சி... அவரின் பெரியவர்களுக்கான எழுத்துகள் சரியான அங்கீகாரம் பெற்றதா எனத் தெரியவில்லை//
இல்லை, அந்த இரண்டு புத்தகங்களுமே சித்திரக்கதைகள் அல்ல. அவை சிறுவர்களுக்கான அறிவுசார் புத்தகங்கள்.
சித்திரக்கதைகள் முயற்சி தமிழகத்தில் சற்றே சிரமம் தரும் வேலையாக மாறிவருகிறது. ஓவியர்கள் + அவர்களுடன் கோ ஆர்டினேட் செய்வது இவை இரண்டுமே கடினமான விஷயங்கள். இப்படி இருக்கையில் பதிப்பகம் மூலம் வெளியிடுகையில் இன்னமும் கடினமானதாக அமைந்துவிடும்.
எனக்கே ஒரு சித்திரக்கதையின் கடைசி பனிரெண்டு பக்கங்களை வரைய ஆளில்லாமல் கடந்த ஆறு மாதங்களாக தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனம் கவர்ந்த "வாண்டுமாமா" அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் விஷ்வா வின் இந்த பதிவு சிறந்த பதிவுகளில் ஒன்று.
ReplyDeleteநண்பரே
ReplyDeleteதிரு" வாண்டு மாமா" அவர்களின் பேட்டியை படித்த பின்னர் மனது கனத்தது வறுமைதான் எவ்வளது கொடுமையானது
திரு:" மாயா" அவர்களின் ஓவியங்களை மிக நீண்ட காலங்களாக ரசித்து வந்துள்ளேன், அவர்களின் பேட்டி அவரை நேரில் காண்பது போல் இருந்தது நன்றி
அன்புடன், ஹாஜா இஸ்மாயில்
அன்பு நண்பர் கிங் விஷ்வா அவர்களுக்கு நேச வணக்கம்!
ReplyDeleteநான் தொடர்ச்சியாக ஆனந்த விகடன் வாங்குபவன். வாண்டுமாமா அவர்களின் நேர்காணல் கண்டு மிகவும் வருந்தினேன்! இன்னமும் சிரமப்படுகிறாராமே! நாம் எல்லோரும் சேர்ந்து அவருக்கு ஏதாவது உதவி செய்வோமா? நீங்கள் நினைத்தால் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரையும் ஒன்று திரட்டலாம். என்ன சொல்கிறீர்கள்?
அப்புறம் இன்னொன்று, அண்மையில் தமிழ்நாடு அரசு, வாண்டுமாமா அவர்களுடைய பழைய அறிவுசார் சிறுவர் நூல் ஒன்றுக்கு விருதும் பரிசுத் தொகையும் அறிவித்து அவரைக் கௌரவப்படுத்தியுள்ளது. செய்தித்தாளில் படித்தேன். ஆனால் அந்த நூலின் பெயர் மறந்து விட்டது. இதை இங்கே பகிர்ந்து கொண்டால் அவருடைய விசிறிகள் அனைவருக்கும் சென்று சேரும் என நம்புகிறேன்!