Pages

Thursday, May 31, 2012

16 DC Makes a Come Back to Tamil Comics-தமிழ் காமிக்ஸ் உலகில் DC காமிக்ஸின் மறுவரவு

காமிரேட்ஸ்,

வெல்கம் பேக். நீண்டதொரு இடைவெளிக்கு மன்னிக்கவும். பயணங்களும், பணியும் சேர்ந்து இந்த இடைவெளிக்கு வழி வகுத்து விட்டது. ஆனால் அதனை சரி கட்டும் விதமாக நம்முடைய லயன்-முத்து காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் அவர்கள் அட்டகாசமான விவரங்களுடன் பல பதிவுகளை இட்டு வருகிறார். அதுவுமின்றி பல புதிய காமிரேட்டுகள் காமிக்ஸ் பதிவர்களாக மாறி வருகிறார்கள். அவர்களை பற்றிய விவரங்கள் இந்த பதிவின் முடிவில்.

11052012209என்னடா அது இந்த பதிவின் தலைப்பே பல விஷயங்களை சொல்லுகிறதே என்று யோசிக்க வேண்டாம். இது சும்மா வச்ச ஒரு தலைப்பு. இந்த Deliberately Misleading தலைப்புக்கு மன்னிக்கவும். இந்த பதிவுக்கு செல்வதற்கு முன்பாக வேறொரு விஷயத்தை சொல்லிவிடுவது நமது கடமை.

சென்னை சென்டிரல் இரெயில் நிலையத்தில் இருக்கும் புத்தகக் கடை (அதாவது புற-நகர் இரெயில் நிலையத்தில் இருக்கும் லக்ஷ்மி புக் ஸ்டால்) பற்றி தினசரி இரயிலில் பயணிப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும். அந்த கடையின் உரிமையாளர் ஒரு காமிரேட் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. காமிக்ஸ் பற்றிய அனைத்து விஷயங்களையும் அவரிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவதுண்டு. அப்படித்தான் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள் (May 09th) அவர் திடீரென்று காலையில் அழைத்து ஒரு புதிய காமிக்ஸ் வந்துள்ளது என்று சொன்னார். கடைக்குள் வந்து பார்த்தால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தேசமலர் காமிக்ஸ் இதழ் ஒன்று விற்பனைக்கு அன்று காலைதான் வந்ததாக சொன்னார். என்னாடா இது? சம்பந்தமில்லாமல் இந்த புத்தகம் திடீரென்று வந்துள்ளதே என்று விசாரிக்கையில் மற்ற விவரங்கள் தெரிய வந்தது.

DesaMalar Comics Re-Print No 001 May 2012 NaduVaanil Anugundu Cover

DesaMalar Comics Re-Print No 001 May 2012 NaduVaanil Anugundu Page 01

DesaMalar Comics RePrint No 001 May 2012 NaduVaanil Anugundu Cover DesaMalar Comics RePrint No 001 May 2012 NaduVaanil Anugundu Page 01

இந்த நடுவானில் அணுகுண்டு கதையானது ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ஒன்றாகும். அப்போதே தேசமலர் காமிக்ஸில் வெளிவந்த இந்த கதையை இந்த விடுமுறை நாட்களில் சிறுவர்/சிறுமியர்கள் படிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் மறு விற்பனைக்கு அனுப்பி உள்ளார்கள். இந்த புத்தகம் முழுவதும் விற்று தீர்த்து விட்டால், தொடர்ந்து தேசமலர் கிளாசிக்ஸ் என்று பழைய தேசமலர் காமிக்ஸ்களை மறு பதிப்போ அல்லது மறு விற்பனைக்கோ (பழைய பதிப்பில் விற்காமல் இருந்தால்) அனுப்பவும் உத்தேசம் என்று அவர் கூறினார். அன்று இரவே பெங்களூரு கிளம்பி விட்ட நான், நண்பர்கள் முத்து விசிறி, பயங்கரவாதி டாக்டர் செவன், இரவுக் கழுகு போன்றோருக்கு இந்த பதிவின் தலைப்பை கிண்டலாக குறுஞ்செய்தி அனுப்பினேன்.

 

DesaMalar Comics Re Print No 001 May 2012 NaduVaanil Anugundu Page 48

DesaMalar Comics Re Print No 001 May 2012 Naduvaanil Anugundu Back Cover

DesaMalar Comics RePrint No 001 May 2012 NaduVaanil Anugundu Page 48 DesaMalar Comics RePrint No 001 May 2012 Naduvaanil Anugundu Back Cover

ஆர்வம் மேலிட அனைவரும் பதில் அளிக்க, இந்த ஸ்கான்களை அவர்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட அனைவருமே கடுப்பாகி30052012224 விட்டனர் என்பதே உண்மை. ஆகையால் அதே விஷயத்தை இங்கேயும் தொடரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் மறந்து விட்டேன். பின்னர் இன்று மாலை மறுபடியும் சென்டிரல் இரெயில் நிலையம் வரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுத்த போட்டோ இங்கே. மறக்காமல் அவரிடம் புத்தக விற்பனை பற்றி கேட்டேன். முதலில் வந்த செட் முழுவதும் விற்று தீர்த்து விட்டதாம், இது இரண்டாவது செட்டாம். ஆகையால் காமிக்ஸ் என்று எது வந்தாலும் நம் மக்கள் அதனை ஆதரிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன்.

ஏற்கனவே சென்ற ஆண்டு பொன்னி காமிக்ஸ் பதிப்பகத்தாரிடம் நம்முடைய காமிக்ஸ் குறித்தான டாகுமென்டரிக்காக பேசிக்கொண்டு இருக்கும்போது மறுபடியும் பொன்னி காமிக்ஸ் கொண்டு வருவதைப்பற்றி வினவினேன். அவர்களும் ஆர்வமாகவே இருந்தார்கள். தமிழ் காமிக்ஸ் உலகம் மறுபடியும் சகஜ நிலைக்கு திரும்புகையில் கண்டிப்பாக அவர்களின் பங்கீடு இருக்கும் என்று உறுதி அளித்தனர். சிறுவர் இதழான ரத்தினபாலா பதிப்பகத்தாரும் இதே மன நிலையில் இருக்கிறார்கள். ஆகையால் காமிக்ஸ் பொற்காலம் இனி வெகு தொலைவில் இல்லை.

நடுவானில் வெடிகுண்டு - கதையைப்பற்றி: இந்த கதையானது ஏற்கனவே வெளிவந்த ஒன்று என்பதை நாம் சொல்லிவிட்டோம். ஆனால் அசாத்திய திறமைசாலியான திரு ஸ்ரீகாந்த் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த இதழ் என்பதால் அட் லீஸ்ட் படிக்கவாவது போரடிக்காமல் இருக்கும் என்பதால் படைக்க ஆரம்பித்து, ஒரே மூச்சில் முடித்து விட்டேன். ஒரு மாதிரியான விஞ்ஞான - ஃபேன்டசி கதை இது. ஆனால் ரசிக்க இயலும். பொன்னி காமிக்ஸ் பாசறையில் இருந்து வந்தவர்களில் தமிழ் காமிக்ஸ் உலகில் தனி இடம் பிடித்தவர்களில் க்ருஷ்ணா, சந்திரா ஆகியோருக்கு அடுத்து கண்டிப்பாக ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் தனி இடம் உண்டு.

விரைவில் இந்த தமிழ் காமிக்ஸ் படைப்பாளிகளை பற்றி ATC – Authentic Tamil Comics என்ற பெயரில் தனியாக தொடர் ஒன்றை எழுதும் எண்ணம் உண்டு. பார்க்கலாம். விரைவில் அதற்க்கான முறையான அறிவிப்பு வரும்.

புதிய காமிக்ஸ் வலைப்பூக்கள்:

சமீபத்தில் வந்த காமிக்ஸ் மறுமலர்ச்சியால் நம்முடைய காமிரேட்டுகள் அனைவருமே காமிக்ஸ் பிளாக்கர்களாக மாறி விட்டனர். அவ்வாறாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய காமிக்ஸ் தளங்களை பற்றிய ஒரு அறிமுகப்படலமே இது:

1. இரவுக் கழுகு: நண்பர் கிருஷ்ணா பிரசாத் கிருஷ்ண ராஜ குமரன் அவர்களின் புதிய தளம். கிட்ட தட்ட மின்னல் வேகத்தில் பல பதிவுகளை இட்டு அசத்தி வருகிறார். அதுவுமின்றி அவரிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை பட்டியல் இட்டு நம்முடைய கடுப்பை அதிகமாக்குகிறார்.

http://iravukkalugu.blogspot.in/

2. டார்க் நைட்: நண்பர் பாலாஜி சுந்தர் சென்ற வாரம்தான் பதிவிட ஆரம்பித்துள்ளார். ஆனால் முதல் பதிவே அட்டகாசமாக சென்னையில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் சென்று லேட்டஸ்ட் இதழ் வரை இந்த வருடம் வந்த அணைத்து புத்தகங்களையும் வாங்கி, போட்டோ எடுத்து ஒரு சூப்பர் போஸ்ட் இட்டுள்ளார். பெங்களூரு கார்த்திக் போல இவரும் திரைப்படங்களை பற்றி விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

http://picturesanimated.blogspot.in/

3. காமிக்ஸ்: சென்னையை சேர்ந்த நண்பர் ஸ்ரீராம் அவர்களின் இந்த வலைத்தளம் முதலில் மொபைலில் இயங்க ஆரம்பித்து இப்போது வலைப்பூவாக உருவெடுத்துள்ளது. அருமையான, கிடைத்தற்கரிய சில புத்தகங்களை பற்றிய இவரது பதிவுகள் சூப்பர்.

http://modestynwillie.blogspot.in/

4. தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: ஈரோட்டை சேர்ந்த நண்பர் ஸ்டாலின் அவர்களின் அட்டகாசமான வலைப்பூ. நண்பரிடம் ஈரோடு வந்தால் கண்டிப்பாக அவரை சந்திப்பதாக சொல்லி இருந்தேன். ஆனால் இரண்டு முறை இந்த மாதத்திலேயே வந்து இருந்தும் (மேயர்,  மினிஸ்டர் மற்றும் சென்னிமலை C.P. செந்தில்குமார் அவர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது) இவரை இன்னமும் சந்திக்கவில்லை. அநேகமாக அடுத்த வார இறுதியில் நேரில் சந்திக்க ஒரு திட்டம் உள்ளது. பார்க்கலாம்.

http://25-3-2012.blogspot.in/

5. ஆன் லைன் தமிழ் காமிக்ஸ்: திருச்சியை சேர்ந்த பேரில்லா நண்பரின் புதிய வலைப்பூ. அருமையான ஆங்கில காமிக்ஸ் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எண்ணி ஆரம்பித்துள்ளார். ஆனால் ஒரே ஒரு பதிவு மட்டுமே இதுவரை வந்துள்ளது. தொடர வாழ்த்துக்கள்.

http://onlinetamilcomics.blogspot.in/

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

16 comments:

  1. வெல்கம் பேக்.

    T. அகிலேஷ்

    ReplyDelete
  2. இவ்வளவு பதிவர்கள் காமிக்ஸ் பற்றி எழுதுகிறார்களா?

    தகவலுக்கு நன்றி.

    T. அகிலேஷ்

    ReplyDelete
  3. Ithu mathiriyana comics i padichu parkiravanka than ottu mothama COMICS sinna pillai visayam nu solliduranka!

    ReplyDelete
  4. வந்தாரையா வந்தாரு நல்ல பதிவுடன் வந்தாரு!

    ReplyDelete
  5. நன்றி நண்பரே,
    எனக்கு ஒரு அறிமுகம் அளித்ததற்கு.
    சிறு திருத்தம் எனது பெயர் கிருஷ்ண ராஜ குமரன்.

    நன்றியுடன்
    கிருஷ்ணா வ வெ

    ReplyDelete
  6. //நன்றி நண்பரே,
    எனக்கு ஒரு அறிமுகம் அளித்ததற்கு.
    சிறு திருத்தம் எனது பெயர் கிருஷ்ண ராஜ குமரன்.

    நன்றியுடன்
    கிருஷ்ணா வ வெ//

    தவறுக்கு மன்னிக்கவும் . மாற்றி விட்டேன்.

    ReplyDelete
  7. ஹாய் விஷ்வா!
    தமிழ் காமிக்ஸின் மறுமலர்ச்சி காலம் இது என்று சொல்லியிருக்கிறீர்கள்.. நல்ல சேதிதான்..
    //
    அவரிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை பட்டியல் இட்டு நம்முடைய கடுப்பை அதிகமாக்குகிறார்
    //

    நல்லா கமெண்ட் அடிக்கிற காமிரெடுக்கு அல்சர் மாத்திரை ப்ரீ என்று விளம்பரம் செஞ்சா இரவுக்கழுகு ப்ளாக் இன்னும் ஹிட்டாகும் :)

    ReplyDelete
  8. இதெல்லாம் ஒரு கதை, அதையும் நீங்க புரமோட் பண்ணிக்கிட்டு..... இதெல்லாம் மொக்கை காமிக்ஸ் சார்.

    ReplyDelete
  9. புதிய வலைதளங்களை தொகுத்தற்கு நன்றி விஸ்வா. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இவற்றை படித்திருந்தாலும் இங்கே தொகுத்து இருப்பது மிக்க பயனுள்ளதாக உள்ளது

    ReplyDelete
  10. மிக்க நன்றி நண்பரே !: எனது வலைப்பூ பற்றிய உங்கள் பதிவிடலுக்கு
    மிக்க கோபம் நண்பரே : ஈரோடு வந்தும் தெரியபடுத்தாமல் போனதற்கு
    அடுத்தமுறை வரும்பொழுது அதற்கு ஈடாக சில அன்பு தண்டனை காத்துள்ளது .

    //ஏற்கனவே சென்ற ஆண்டு பொன்னி காமிக்ஸ் பதிப்பகத்தாரிடம் நம்முடைய காமிக்ஸ் குறித்தான டாகுமென்டரிக்காக பேசிக்கொண்டு இருக்கும்போது//
    இந்த டாகுமென்டரி வெளிவந்து விட்டதா ?

    DC காமிக்ஸ் பற்றி குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே . காமிக்ஸ் எதுவாக இருந்தால் என்ன ? அதனுடைய பின்னணி ஒரு நல்ல அனுபவம்தானே . காமிக்ஸ் என்பது நல்ல சித்திரத்துடனும் , நல்ல தமிழ் நடையுடனும், சற்று கதையம்சமும் இருந்தால் வெற்றி அடையும் என்பது உண்மைதானே ?. DC இல் இதில் இரண்டு பழுதடைத்து இருக்கலாம்

    ReplyDelete
  11. அறிமுகத்திற்கு மிக்க நன்றி விஸ்வாஜி :))
    .

    ReplyDelete
  12. Dear king,
    Thank you for mentioning about my blog. I wonder how you manage to keep posting regularly. I am struck in half way in my next update. Lot of teething problem. Any way thanks once again. Always keep remembering me.
    BALAJI SUNDAR

    ReplyDelete
  13. Hi to all.
    Dear friends please make a visit to my blog once and post your opinions.
    BALAJI SUNDAR

    ReplyDelete
  14. Hi to all.
    Dear friends please make a visit to my blog once and post your opinions.
    BALAJI SUNDAR

    ReplyDelete
  15. Earlier inadequate a comment here it is missing?!😨

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails