காமிரேட்ஸ்,
இந்த ஆண்டு தமிழ் காமிக்ஸ் உலகில் மறக்கவியலா ஒரு ஆண்டாக இருக்கப்போகிறது என்று ஒவ்வொரு ஆண்டும் நினைப்பதுண்டு. அது இந்த ஆண்டு கண்முன்னே நடந்துக்கொண்டு இருப்பதை காணும்போது அதனை விவரிக்க வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு வறட்சியாக இருப்பதை உணர்கிறேன்.
இந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்த ஆண்டு மே மாத முதல் வாரத்திலேயே ஆறு காமிக்ஸ் புத்தகங்கள் வந்து விட்டன. இதில் நூறு ருபாய் ஸ்பெஷல் வெளியீடுகள் இரண்டு. இதுவரை இந்த புத்தகங்களை வாங்காத அன்பர்களுக்காக இந்த பட்டியல்:
1. லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் – Jan 2012
2. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - கொலைகார கலைஞன் – Jan 2012
3. முத்து காமிக்ஸ் - விண்ணில் ஒரு குள்ளநரி – Jan 2012
4. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு – March 2012
5. லயன் காமிக்ஸ் - சாத்தனின் தூதன் டாக்டர் செவன் – Apr 2012
6. முத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் - என் பெயர் லார்கோ – May 2012
இந்த புத்தகங்களை வாங்க விரும்புவர்கள் உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலகதொலைபேசி எண்ணிற்கு (04562 – 272649) தொடர்பு கொள்ளவும். சந்தாதாரர்களுக்கு கடந்த வாரம் சனிக்கிழமை மற்றும் இந்த வாரம் திங்கள் முதல் புத்தகங்கள் கொரியர் மூலம் அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே எடிட்டரின் பதிவில் அட்டையை பார்த்து இருந்தாலும், தனியே பார்க்கையில் அட்டை டிசைன் மனதை அள்ளுகிறது. இந்த பதிவு ஒரு பார்வை மட்டுமே என்பதால், விரிவான விமர்சனம் இந்த வார இறுதியில் (சற்றே கார சாரமான ஒரு விவாதத்தோடு) வெளிவரும்.
வழக்கம் போல காமிக்ஸ் வாங்கியதும் அனைவரும் படிப்பது அய்யம்பாளயத்தாரை தவிர அனைவரும் படிப்பது எடிட்டரின் ஹாட் லைன் / காமிக்ஸ் டைம் பகுதியையே. இந்த இதழிலும் அந்த முறையே பலராலும் பின்பற்றப்படும். நம்முடைய ரசனைக்கு விருந்தாக எடிட்டர் இரண்டு பக்கங்கள் எழுதி இருக்கிறார். இனிமேல் அவரை மூன்று பக்கங்கள் எழுத தூண்ட வேண்டும். அதற்க்கு நாம் அனைவரும் வாசகர் கடிதம் எனும் பழைய முறையை பின்பற்ற வேண்டும். ஆமாம், நம்மில் எத்துனை பேர் கடைசியாக வாசகர் கடிதம் எழுதி அனுப்பியது? ஆகவே, அனைவருமே இந்த ஸ்பெஷலுக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதுவோம் என்று ஒரு கோரிக்கையை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.
கதையின் டைட்டில் பக்கமும், ஆரம்ப பக்கங்களும் உங்களின் பார்வைக்கு. வர்ணக் கலவையில், அட்டகாசமான ஆர்ட் பேப்பரில் தமிழ் காமிக்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அனைவருக்கும் இது ஒரு வரம். சாம்பிள் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
Muthu Comics Surprise Special Issue No 314 Dated May 2012 Van Hamme Philippe Francq Largo Winch Tamil Version En Peyar Largo Page No 05 Title Page | Muthu Comics Surprise Special Issue No 314 Dated May 2012 Van Hamme Philippe Francq Largo Winch Tamil Version En Peyar Largo Page No 07 Story 1st Page |
என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த புத்தகத்தின் ஒரே உறுத்தல் திகில் காமிக்ஸின் முதல் இதழ் மறுபதிப்பு தான். தனியாக வேறு இதழில் வந்திருக்கலாம், லார்கோவை தனியாகவே பார்த்திருக்கலாம் என்பன நம் மனதில் ஓடும் எண்ணங்கள். விமர்சன பதிவில் இதை விவாதிக்கலாம். அதைப்போலவே முதல் இதழில் வந்த அனைத்து பக்கங்களும் அப்படியே ரீபிரின்ட் செய்யப்பட்டு இருப்பது சிறப்பு.
Muthu Comics Surprise Special Issue No 314 Dated May 2012 Van Hamme Philippe Francq Largo Winch Tamil Version En Peyar Largo Page No 53 2nd Story 1st Page | Muthu Comics Surprise Special Issue No 314 Dated May 2012 Van Hamme Philippe Francq Largo Winch Tamil Version En Peyar Largo Page No 99 Thigil Comics Reprint Book 1 Page 01 |
சந்தா தொகை எவ்வளவு, புத்தகங்கள் எவ்வளவு வரும், கொரியரா இல்லை தபாலா என்றெல்லாம் கேட்பவர்களுக்கு இந்த இதழில் இரண்டு பக்கங்களை ஒதுக்கி பதில் சொல்லி இருக்கிறார் எடிட்டர். இந்த லிஸ்டில் சிறிய எழுத்துப்பிழை இருந்தாலும் பட்டியல் பிரம்மிக்க வைக்கிறது.
எண்பதுகளில் வந்த நமது காமிக்ஸ் இதழ்களில் சிறப்பே "விரைவில் வெளிவருகிறது" என்று வந்த விளம்பரங்களே. அதிலும் ஸ்பைடர் நல்லவனாக மாறினான் என்று ஒரு செய்தித்தாள் விளாமரம் வெளியிட்டு, விவரங்கள் விரைவில் என்றெல்லாம் தூள் கிளப்பியவர் நமது எடிட்டர். அந்த மறுபடியும் திரும்புகிறது என்பதற்கு உதாரணமாக இந்த இதழில் வந்துள்ள விளம்பரங்களை கூறலாம். அவ்வளவு விளம்பரங்கள். கண்ணை பறிக்கும், சிந்தை மயங்கும், கற்பனை சிறகடிக்கும் (யாருப்பா அது, சரக்கடிக்கும் என்று சொல்வது) இந்த விளம்பரங்களின் கோர்வையே இந்த பதிவின் கடைசி பகுதி.
Muthu Comics Surprise Special Issue No 314 Dated May 2012 Van Hamme Philippe Francq Largo Winch Tamil Version En Peyar Largo Page No 150 Super Hero Special Ad | Muthu Comics Surprise Special Issue No 314 Dated May 2012 Van Hamme Philippe Francq Largo Winch Tamil Version En Peyar Largo Page No 151 Super Hero Special Ad |
Muthu Comics Surprise Special Issue No 314 Dated May 2012 Van Hamme Philippe Francq Largo Winch Tamil Version En Peyar Largo Page No 153 Coming Soon Western Book | Muthu Comics Surprise Special Issue No 314 Dated May 2012 Van Hamme Philippe Francq Largo Winch Tamil Version En Peyar Largo Page No 154 Coming Soon Lucky Luke Special |
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
பின் குறிப்பு: கோவையில் இருந்து, மும்பையில் இருந்து, தில்லியில் இருந்தெல்லாம் பதிவுகள் இட்டுள்ள நாம், இந்த முறை முதன் முறையாக பெங்களூரில் இருந்து இந்த பதிவை இடுகிறோம். வழமை போல வெளியூரில் இருந்து இடப்படும் பதிவுகளில் அதிகம் சொல்ல / டைப்ப முடியாததால் இந்த மேலோட்ட பதிவு. முழுமையான விமர்சன பதிவு இந்த வார இறுதியில் வெளிவரும்.
Me the 1st............. :))
ReplyDelete.
me the 2nd
ReplyDeleteLargo padithu vitten
ReplyDeletemiga arumai
thigil thaniyaka pottu irkkalam...
இந்த வார இறுதியில் (சற்றே கார சாரமான ஒரு விவாதத்தோடு) we eagerly waiting thalai!
ReplyDeleteவிஷ்வா
ReplyDeleteஎடிட்டர் ப்ளாக் பக்கமே உங்கள பாக்கமுடியலையே ...
அப்புறம் புது ஸ்கேனர் போலிருக்கு, படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. டைம் எடுத்து ரொம்ப தெளிவா பதிவு போடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. என்ன ஒரே பிடிக்காத விஷயம், அப்பப்போ காணாம போய்டுறிங்க, அது ஒண்ணுதான்.
நான் புதிதாக போஸ்ட் செய்த போஸ்டுக்கு யாராவது கமெண்ட் இட்டால் அதை எனக்கு இ மெயில் மூலமாக தெரிந்து கொள்ள செட்டிங்க்சில் என்ன செய்ய வேண்டும் ஜி? நான் பதிப்பித்த போஸ்டுக்கு ஒரு நண்பர் பின்னூட்டமிட்டு பதில் வராமல் வருத்தபட்டார்! ப்ளீஸ்
ReplyDeleteநண்பரே! நல்லபதிவு . உங்களின் புள்ளி விபர பதிவை மிக விரைவில் எதிர்பார்கிறேன்
ReplyDeleteகிங் எனக்கு பின்நூட்டம்கள் மின்னஞ்சலில் தெரிய வர என்ன செய்ய வேண்டும்?
ReplyDeleteநண்பர் ஸ்டாலின் அவர்கள் வழி காட்டி விட்டார் நன்றிகள் பல!
ReplyDeleteசூப்பர் ஹீரோ சூப்பர் ச்பெசியலில் இரும்புக்கை மாயாவி இயந்திர படையை சார் சேர்த்து பதிப்பித்து இருக்கலாம்! அது பற்றி உங்க கிட்ட எதாவது சொன்னாரா ஜி?
நண்பரே,
ReplyDeleteநானும் எனது பதிவை இன்று ஆரம்பித்திருக்கிறேன்.
படித்து பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.
நன்றியுடன்,
கிருஷ்ணா வ வெ
http://iravukkalugu.blogspot.com/
திரு கிங் விஷ்வா அவர்களுக்கு வணக்கம். தங்களது வலைப்பதிவைப் பார்த்த பிறகு, டிஸ்கவரி புக் பேலசுக்கு சென்று 6 காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி வந்தேன். உமது வலைப்பதிவில் விவரங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. Hats off to you. keep it up.
ReplyDeleteஎன்னுடைய புதிய வலைப்பதிவை ஒருமுறை வந்து பார்த்து ஊக்கப் படுத்துங்கள்!.
http://picturesanimated.blogspot.in/
நன்றி
பாலாஜி சுந்தர்.
Kathirunthu kathirunthu
ReplyDeletekalankal
ponthadi....