காமிரேட்ஸ்,
வணக்கம், வந்தனம் மற்றும் அனைத்து விதமான வரவேற்ப்புகளும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. காமிக்ஸ் மற்றும் என்னுடைய தேவை அறிந்து, நான் தேடும் புத்தகங்களை பரிசளித்த மதுரை மற்றும் தேனி நண்பர்களுக்கு உள்ளம் குளிர்ந்த அதே மூன்று எழுத்துக்கள் - நன்றி - இதைதவிர வேறென்ன சொல்ல முடியும், சொல்லுங்கள்.
கடந்த மூன்று மாதங்களாக பல காமிக்ஸ் தகவல்கள், நிகழ்வுகளை இந்த தளத்தில் பதிவிக்க நான் தவறிவிட்டேன். அதில் ஒரு முக்கியமான நேர்காணலும் இருந்தது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாக கல்கி வார இதழில் இயக்குனர் திரு மிஷ்கின் அவர்களின் நேர்காணல் இடம்பெற்று இருந்தது. அந்த நேர்காணலில் அவர் தன்னுடைய காமிக்ஸ் மீதுள்ள காதலை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தார். அந்த நேர்காணல் இந்த வலைப்பூவில் இடம்பெற தேவை இருந்தாலும், மிக மிக விரைவில் மீண்டும் இடம்பெறும் என்று உறுதி கூறுகிறேன்.
ஆகையால் இன்றுமுதல் நீங்கள் எந்தவிதமான காமிக்ஸ் குறித்தான தகவல்களை ஏதாவது பத்திரிக்கையில் படித்தாலோ, அல்லது ஏதாவது ஊடகத்தில் பார்த்தாலோ உடனடியாக என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு (tamilcomicsulagam@gmail.com) தெரியப்படுத்துங்கள். அவை இங்கே உடனடியாக வலையேற்றப்படும்.
அப்படி என்றால் ஏன் இந்த பதிவு மட்டும் கிட்டதட்ட ஒரு வார இடைவெளியில் இங்கே பதிவேற்றப்படுகிறது என்றால் ஒரே ஒரு காரணம் மட்டுமே: என்னுடைய ஸ்கான்னர் பழுதடைந்து,வேறு புதிய ஸ்கான்னர் வாங்க ஏற்பட்ட இடைவெளியே இந்த ஒரு வார கால தாமதம். இனி தாமதமின்றி இந்த பதிவுக்குள் நுழைவோம். இந்த மாதிரி பதிவுகளில் நாம் சொல்ல எதுவுமே இல்லை என்பதால் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.
ஆனந்த விகடனில் இயக்குனர் மிஷ்கின் கொடுத்த பேட்டியால்,அதனை சரியாக புரிந்து கொள்ள முடியாத சிலர், வழக்கம் போல ஒரு புதிய பிரச்சினையை கிளப்ப முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான் Best of Luck.
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 25042012 On Stands 19042012 Cover Story On Mugamoodi Dir Mysskin Interview Page No 40 41 |
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
பிரபல இயக்குனர்கள் காமிக்ஸ் படிப்பது புதிதல்ல எனினும், அதனைப்பற்றிய செய்தி தொடர்ந்து வந்து அதன் மூலம் தமிழ் காமிக்ஸ் கதைகளைப்பற்றிய ஒரு அவேர்னஸ் இருந்தால் நல்லது.
ReplyDeleteமேலே உள்ள கருத்து என்னுடையது. ஆனால் கருத்து பெட்டியில் பெயர் வர மாட்டேங்குது.
Deleteவே மணிமாறன்
வணக்கம் அண்ணே.
ReplyDeleteஉங்க க்ளோஸ் அப் போட்டோ டெர்ரர்'ஆ இருக்கே?
பதிவு ஒரே "கலர்"புல்லா இருக்கு. என்ன விஷயம் விஷ்வா
ReplyDeleteஹீரோயின் பூஜா ஒரே கலர் ஃபுல் ஆளு. அதான் இந்த பதிவே செம கலரா இருக்கு.
Deleteஹாய் விஸ்வா,
ReplyDeleteஅருமையான பதிவு.
முன்பே மிஷ்கினின் காமிக்ஸ் ஆர்வத்தை பற்றி ஒரு பதிவு இட்டதாக ஞாபகம்.
உங்களுடைய டிச்கோவேரி புக்ஸ் பற்றிய பதிவை பார்த்து லைன் comeback ஸ்பெஷல் ஆர்டர் செய்து பெற்றேன்.
ஆர்டர் செய்த அதே நாள் கௌரிஎரில் அனுப்பி விட்டார்கள்.
அடுத்த நாளே எனக்கு கிடைத்தது.
கிருஷ்ணா.வ.வெ
இயக்குனர் மிஷ்கின் ஒரு காமிக்ஸ் காதலர் என்பது பல பதிவுகளில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் இந்த பேட்டியில் கூறியிருப்பது புதியதாக தெரியவில்லை.
Deleteஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? டிஸ்கவரி புக் பேலஸில் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கின்றன என்று SMS அனுப்பியவுடன் நடிகர் நாசர் அனுப்பிய பதில் SMS என்ன தெரியுமா? இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் கிடைக்குமா என்பதுதான். இரண்டாவது நாளே அந்த புத்தகம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நண்பர் வேடியப்பன் இந்த மாதிரி அனைவருக்கும் உடனே டிஸ்பாட்ச் செய்து விடுவார்.
சார், இயக்குனர் மிஷ்கின் போன் நம்பர் பிளீஸ்......
ReplyDeleteராம்.
ராம்,
Deleteஎனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பெரும்பாலானோர் தங்களுடைய கைபேசி எண் பொதுவில் வழங்குவதை விரும்ப மாட்டார்கள்.
please come back again. we need you man!
ReplyDeleteஅண்ணே,
Deleteஉங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் பதிவு நாளை இரவு கண்டிப்பாக வலையேற்றப்படும்.
தல அடிக்கடி காணாம போய்ட்ராறு - நம்ம விஜயன் சார் மாதிரி - என்ன விஷயம்னே தெரியல
ReplyDelete//கண்டிப்பாக இந்த ஆண்டில் நிறைய பதிவுகளும், தகவல்களும், முடிந்தால் சில பல காமிக்ஸ் சந்திப்புகளையும் அரங்கேற்றுவோம் என்பதே இப்போதைய ஒரே வாக்குறுதியாக இருக்கிறது.//
வாக்குறுதியை நம்பறோம்
அண்ணே,
Deleteசமீப நாட்களாக வேலை கொஞ்சம் அதிகம். அதான். அதுவுமில்லாம ஸ்கான்னர் வேறு புதியது வாங்க வேண்டி இருந்தது. அப்புறம் வழக்கம் போல கொஞ்சமே கொஞ்சம் பயணம். அதான். இன்றைக்கோ நாளைக்கோ புதிய பதிவு இடப்படும்.
Yesterdays DC, Today's I.Express and Next weeks anandha vikatan.
ReplyDeleteNew post ethirparkkiren
ReplyDeleteதலைவா ஆரம்பிங்க உங்க ஆட்டத்தை!!!! வீ ஆர் வைட்டிங்!
ReplyDeleteplease start your play yaa! largo just released! we are waiting for your comment on this!
ReplyDelete