காமிரேட்ஸ்,
லயன் காமிக்ஸின் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் மூன்றாம் நாள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திட்டமிட்டு நடத்தப்பட முடியாமல் திடீரென்று சம்பவித்த ஒன்று என்பதால் அனைவரையும் அழைக்க இயலவில்லை. அந்த விழாவினை நேரில் கண்டு ரசிக்க முடியாத காமிரேட்டுகளுக்காக இந்த ஸ்பெஷல் பதிவு.
லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் புத்தகத்தின் வெளியீடானது எடிட்டர் திரு எஸ் விஜயன் அவர்கள் முன்னிலையில் பிரபல எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் முதல் இதழை வெளியிட, ஓவியர் திரு ட்ராட்ஸ்கி மருது அவர்கள் பெற்றுக்கொள்ள சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மேலே குறிப்பிட்ட மூவருமே சிறப்புரை ஆற்றினார்கள். அந்த விழாவினை மூன்று தொகுப்புகளாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு வீடியோ என்று தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் காணலாம்.
வேகமான இன்டர்நெட் இணைப்பு இல்லாத ரசிகர்களின் வசதிக்காக இதோ திரு எஸ்ரா அவர்கள் பேசியதின் எழுத்தாக்கம்:
தமிழ் காமிக்ஸ் அப்படிங்கறது தனியான ஒரு உலகம். இதுக்கு நெறைய வாசகர்கள் இருக்காங்க. நானும் ஒரு வாசகன்.நான் சிறு வயதில் இருந்து தொடர்ந்து இந்த மாதிரி காமிக்ஸ்'களை தேடிப்பிடித்து படித்துக்கொண்டு இருக்கேன்.
இதை வெளியிடுரதுல பெரும் பங்கு ஆற்றினவங்க விஜயன் மற்றும் அவரது தந்தையார். இன்னும் சொல்லப்போனா, இதற்கான ஓவியங்கள் இருந்து, அதை தமிழில் வெளியிடுவதற்கான முயற்சி ரொம்ப பெருசு.
இப்ப இவங்க புதுசா ஒரு தொகுப்ப வெளியிட்டு இருக்காங்க. ரியலாவே இது ஒரு கம்பேக். ஏன்னா இந்த மாதிரி புத்தகங்கள் கிடைக்காதா என்று நிறைய பேரு தேடிக்கிட்டு இருக்கோம். எல்லாத்தையும் தொகுத்து ரொம்ப அழகா வெளியிட்டு இருக்காங்க.
தமிழ்ல காமிக்ஸ் படிக்குரதுங்கறது இன்னைக்கு இருக்குற சூழல்ல ரொம்ப முக்கியமானது. ஏன்னா இதன் வழியா மட்டும்தான் நான் இன்னைக்கு இருக்குற தலைமுறையை தமிழ் படிக்க வைக்க முடியும்னே நம்புகிறேன்.
ஏன்னா இன்னிக்கு நெறைய குழந்தைகள் தமிழ்ல படிக்குறதுக்கு சிரமப்படுறாங்க. அவங்க தமிழும் கத்துக்கலாம், அதே நேரத்துல அவங்களோட கற்பனை ஆற்றல அதிகப்படுதுரதுக்கு இருக்குற ஒரு மிகச்சிறந்த வழி இந்த காமிக்ஸ் படிக்குரதுதான்.
ஏன்னா, நான்'லாம் காமிக்ஸ் படிச்சு உருவான ஒரு எழுத்தாளன்தான். இந்த காமிக்ஸ் நாம ஒவ்வொருவரும் படிக்க, நாம ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய ஒரு காமிக்ஸ். நாம எல்லாருமே இந்த காமிக்ஸை வாங்கி நம்ம வீட்டுல பாதுகாக்கணும். நம்ம நண்பர்களுக்கு பரிசாக கொடுக்கவேண்டும்.
-------------------------------------
இந்த புத்தக வெளியீட்டு தினத்தன்று மாலை ஐந்தரை மணிக்கு சென்னை அண்ணா சாலையில் தான் கலந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விழா இருந்தும், நம்முடைய காமிக்ஸ் விழாவிற்கு வந்து சிறப்பித்த திரு எஸ்ரா அவர்களுக்கு தமிழ் காமிக்ஸ் உலகம் சார்பில் சிறப்பு நன்றி.
இன்று பிறந்த நாள் காணும் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்த விரும்பும் காமிரேட்டுகள் writerramki@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது வாழ்த்து செய்திகளை அனுப்பலாம்.
நாளைய தினம், நம்முடைய எடிட்டர் அவர்கள் இந்த விழாவில் பேசியதின் வீடியோ வெளியாகும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
பின் குறிப்பு 01: வீட்டில் இருந்த இரண்டு ஸ்கான்னர்'களும் ரிப்பேர் என்பதால் இரண்டு மூன்று முக்கியமான பதிவுகள் இன்னமும் வெயிட்டிங்.
பின் குறிப்பு 02: கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து இன்றுதான் திருத்தணி கோவிலுக்கு சென்றுவிட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன்
பின் குறிப்பு 03: காலையில் இருந்து தொலைபேசியில் முயன்ற நண்பர்களுக்கு - மன்னிக்கவும். இப்போது பேசிவிடுகிறேன்.
எஸ்ரா போன்ற திறமையான எழுத்தாளர்கள் காமிக்ஸ் படித்துதான் எழுத்தாளராக மாறினேன் என்று சொல்வது நமக்கெல்லாம் பெருமையே.
ReplyDeleteவே மணிமாறன்
எடிட்டரின் பேட்டியை காண, படிக்க ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeleteஅவருடைய பேட்டி நாளை மாலையில் தவறாமல் வலையேற்றப்படும்.
Deleteபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎஸ்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசீக்கிரமாக எடிட்டரின் வீடியோவை போடவும். என்னைப்பொறுத்தவரை மூன்று பதிவாக பிரித்துபோடாமல் ஒரே பதிவில் மூன்று வீடியோக்களையும் போட்டு இருக்கலாம்.
பதிவுகளின் கணக்கை கூட்டவோ அல்லது வேறெந்த காரணம் கொண்டோ அப்படி பிரித்து இடவில்லை. ஒரே பதிவில் மூன்று வீடியோக்களும், அதன் சொல்வடிவம்- எழுத்தாக்கமும் இருந்தால் நீண்ட ஒரு பதிவாகிவிடும் என்பதால் அப்படி தனியே பதிவிட முடிவெடுத்தேன்.
Deleteநாளைக்கு எடிட்டரின் பேட்டி பிளஸ் மறுத்து சாரின் பேட்டி இரண்டையுமே ஒருங்கே வலையேற்றி விடுகிறேன். ஒக்கே?
இப்போதுதான் முந்தைய கமண்ட்டை படித்தேன்.
ReplyDeleteஉங்களுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். எஸ்ராவுடன் பிறந்துள்ளதால் உங்களுக்கும் வயது நாற்பதை கடந்துவிட்டதோ?
அண்ணே,
Deleteபிறந்த நாள் மட்டும்தான் ஒன்று, வருடங்கள் வேறு. அண்ணன் எஸ்ரா எல்லாவிதத்திலும் சீனியர்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் King Viswa!
ReplyDeleteநன்றி நண்பரே. Much appreciated.
DeleteDear Viswa,
ReplyDeletePls guide me how to purchase Comics classic online/offline
Kumar,
DeleteKindly visit our Editor S.Vijayan Sir's Blog: Editor S.Vijayan Sir's Blog
Name of Account : PRAKASH PUBLISHERS
Bankers : TAMILNAD MERCHANTILE BANK Ltd., Sivakasi Branch.
Account Number : 003150050421782
IFS Code : TMBL0000003
You can make online transfers for payments in excess of Rs.300.
hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in