Pages

Sunday, April 01, 2012

27 காமிக்ஸ் கிளாசிக்ஸ் No 27: தலை வாங்கிக்குரங்கு Comics Classics No 27- March 2012 Tex Willer Adventure–Thalai Vaangi Kurangu

காமிரேட்ஸ்,

கிட்டதட்ட பத்து நாட்களுக்கு முன்பே இந்த காமிக்ஸ் கிளாஸிக்ஸ் இதழை கைவரப் பெற்றிருந்தாலும் பதிவிடாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள்:

  1. கடந்த இரண்டு வாரங்களாகவே நான் மேற்கொண்ட தொடர் பயணங்கள்.
  2. வழக்கம் போல தமிழ் காமிக்ஸ் உலகில் நாம் பதிவிட்டு விட, அதனால் லயன் காமிக்ஸ் ஆபீசில் தொடர்ந்து போன் செய்து மன உளைச்சல் அடையும் காமிரேட்டுகளை மனதில் கொண்டு இந்த தாமதப்பதிவு.

காமிக்ஸ் கிளாஸிக்ஸ் - ஒரு சிறு குறிப்பு:
முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்களில் வந்த மிகச்சிறப்பான கதைகளை தற்போதைய இளைய தலைமுறை வாசகர்களும் படிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட ஒரு தொடர் வரிசையே காமிக்ஸ் கிளாஸிக்ஸ். இதுவரை மொத்தம் 26 காமிக்ஸ் கிளாஸிக்ஸ் புத்தகங்கள் வந்துள்ளன (அவற்றை பற்றி தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக்கவும்). ஆனால் இனிமேல் புதிய சகாப்தமாக இந்த வரிசையில் சிறப்பான உயர்தர ஆர்ட் பேப்பரில் லேமினேடட் அட்டையுடன் காமிக்ஸ் கிளாஸிக்ஸ் இதழ்கள் வரப்போவதாக ஆசிரியர் அறிவித்தது முதலே பலரும் ஆர்வம் மேலிட காத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் முதல் புத்தகமே இந்த தலை வாங்கிக் குரங்கு. இந்த தலை வாங்கிக் குரங்கு கதை முதன்முதலில் லயன் காமிக்ஸில் 1985 ஆண்டு தீபாவளி மலராக வந்தது.தமிழ் காமிக்ஸ் உலகிற்கு இதுவே டெக்ஸ் வில்லரின் முதல் அறிமுகமும் கூட. இதனைப்பற்றிய என்னுடைய (நண்பர் சேரன் பாணியிலான) ஃபிளாஷ்பேக் பதிவு இங்கே.

இந்த மேம்படுத்தப்பட்ட மீள் பதிப்பு புத்தகம் வாசகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதை இந்த பதிவில் காண்போம். இங்கே இந்த புத்தகத்தின் அட்டைப்படங்கள்:

Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint 0f Tex No 045 Issue Dated Jul_y 1964 The Mysterious Voice
Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Cover Image

வழக்கமாக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் புத்தகம் வாங்கியவுடன் படிப்பது எடிட்டரின் ஹாட் லைன் பகுதியையே. தான் அறிமுகப்படுத்திய ஒரு ஹீரோ புகழ் பெறுவதை வாஞ்சையுடனும் பெருமையுடனும் பார்க்கும் ஒரு இயக்குனர் போல, டெக்ஸ் வில்லரைப்பற்றியும் தலை வாங்கியையும் பற்றி எடிட்டர் எழுதி இருப்பதை படிக்கும்போது தோன்றுகிறது. இனிமேல் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களிலும் எடிட்டோரியல் பகுதி வெளிவரும் என்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒரு சங்கதி.

Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Editorial Page 3 Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Story Title Page
Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Editorial Page 3 Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Story Title Page

இளைய தலைமுறை ரசிகர்கள் மற்றும் இதுவரை படிக்காதவர்கள் நலன் கருதி இந்த கதையை இங்கே விவாதிக்கப் போவதில்லை.நண்பர் ஜானி அவர்கள் தன்னுடைய தளத்தில் விலாவரியாக எழுதியுள்ளார். ஜானியின் பதிவை படிக்க இங்கே கிளிக்கவும். தமிழ் காமிக்ஸ் உலகின் வழக்கம் ஆக கதையின் முதல் பக்கம் மற்றும் கடைசி பக்கங்கள் இங்கே.

Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Story 1st Page Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Story Last Page No 98
Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Story 1st Page Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Story Last Page No 98

(அநேகமாக) மே மாதம் முதல் வாரத்தில் கொண்டாட்டமாக வெளியிடப்படவுள்ள கோடை மலர் ஆகிய சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் இதழின் புதிய விளம்பரம் இதோ. ஒரு காலத்தில் இது போன்ற விளம்பரங்கள் தான் ஆர்வத்தை தூண்டி காத்திருக்க வைக்கும். மறுபடியும் இது போல புதிய விளம்பரங்கள் வருவது குறித்து மகிழ்ச்சி.

Comics Classics Issue No 27 Dated March 2012 Tex Willer Thalai Vaangi Kurangu  Summer Special Advt Pages 100 101 Steel Claw, Spider & Robot Archie Stories
Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Summer Special Advt Pages 100 101

ஏற்கனவே எடிட்டர் அவர்கள் தன்னுடைய வலைதளத்தில் இந்த கதையை பற்றி எழுதி இருந்தாலும் புத்தகத்தில் பார்க்கையில் பரவசமாகவே உள்ளது. இன்டர்நெட் பரிச்சயமில்லாத வாசகர்களுக்கும்கூட இந்த செய்தி சென்றடையும். சந்தா கட்ட விரும்பும் வாசகர்கள் மற்றும் சந்தாவை புதுப்பிக்க விரும்பும் வாசகர்கள் ஒரு முறை இந்த பக்கத்தை படித்து விடுங்கள்.

Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint XIII Part 19 Advt Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Page 102
Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint XIII Part 19 Advt Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Page 102

திரி கொளுத்தப்பட்ட ஆயிரம்வாலா பட்டாசுபோல இந்த ரீபிரின்ட் மோகம் தமிழ் காமிக்ஸ் உலகை பற்றிக்கொண்டு உள்ளது என்பதற்கு எடிட்டரின் தளத்தில் வரும் கமேன்ட்டுகளே சாட்சி. ஆகையால் அடுத்து என்னென்ன புத்தகங்களை மேம்படுத்தி மீள்பதிப்பு செய்யலாம் என்று ரீடர்ஸ் சாய்ஸில் அளித்துள்ளார். நடப்பது காமிக்ஸ் முடியாட்சி அல்ல, குடியாட்சியே என்பதற்கு இதனை விட வேறென்ன உதாரணம் வேண்டும்?

Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Page 103 Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Page 104
Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Page 103 Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Page 104

ரெக் வூட்டன் என்பவரது கைவண்ணத்தில் ஆங்கிலத்தில் வந்த இந்த விசு & கிச்சு தொடர்வரிசை நகைச்சுவை கதைகள் அனைவரின் மனதையும் ஈர்த்தவை என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது. டிராகன் நகரம் வந்தபோது வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினைப்பெற்ற விச்சு & கிச்சு ஜோடியினை கொண்டு ஒரு முழு நீள விச்சு & கிச்சு ஸ்பெஷல் இதழை வெளியிடலாம் என்று எடிட்டரே யோசித்து இருந்தார். இந்த கதைதொடரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பதிவை படிக்கலாம். சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு இதே ஏப்ரல் மாத முதல் நாளில் பதித்ததே அந்த பதிவு.

 

Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Cover Inner Font: Reg Wootton’s Sporty Page 01 Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Cover Inner Back: Reg Wootton’s Sporty Page 01
Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Cover Inner Font Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Cover Inner Back

புத்தக மதிப்பீடு: ஒவ்வொரு புத்தகத்தினையும் இனிமேல் தமிழ் காமிக்ஸ் உலக மதிப்பீட்டு குழுவினர் அலசி ஆராய்ந்து தங்களது முடிவினை இங்கே தெரிவிப்பார்கள். அதன்படி இந்த தலை வாங்கி குரங்கின் புத்தக மதிப்பீடு இதோ:

1. அட்டைப்படம் (ஓவியம்/டிசைன்/எழுத்துரு): 9/15

இதற்கான காரணத்தை ஏற்கனவே எடிட்டர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு விட்டார். வழக்கமாக அட்டைப்படங்களை வரையும் அந்த ஓவியரை ஒரு தெருநாய் கடித்து விட்டதால் அவரால் இந்த அட்டைப்படத்தை வரைய முடியவில்லை. ஆகையால் அவசர அவசரமாக தன்னிடம் இருந்த ஒரு டிசைனை வைத்து இந்த அட்டைப்படத்தை தயாரித்தது இருக்கிறார். ஆனால் அடுத்த அட்டைப்படம் வழமை போல பின்னி பெடலேடுக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை.

2. பைண்டிங் மற்றும் புத்தக வடிவமைப்பு: 7/10

ஏற்கனவே சொன்னதுபோல உயர்தர தாளில் அட்டகாசமான சைட் பின் அமைப்பில் பல வருடங்கள் பாதுகாக்க ஏதுவாக இந்த மேம்படுத்தப்பட்ட மீள் பதிப்பு உள்ளது. ஆகவே குறைகள் ஏதுமில்லை. ஆனால் ஏன் முழு பதிப்பீடு பெறவில்லைஎன்றால் அதற்க்கும் காரணம் உள்ளது. இது முதல் மேம்படுத்தப்பட மீள் பதிப்பு என்பதால் படங்கள் சரிவர அமைக்கப்படவில்லை. ஸ்கான் சரியாக இல்லாததால் சில இடங்களில் அவை கண்ணை உறுத்துகின்றன.

3. தலையங்கம் / எடிட்டோரியல்: 10/10

ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனும் புத்தகம் வாங்கியதும் படிக்கும் முதல் பக்கம் இதுவே. ஆகையால் படத்தின் ட்ரெயிலர் எவ்வளவு முக்கியமோ கிட்டத்தட்ட அவ்வளவு முக்கியம் எடிட்டோரியல். இங்கே நம்ம ஆளை அடிச்சுக்க ஆளே இல்லை. ஆகவே ஹாட்ஸ் ஆஃப் டு எடிட்டர்.

4. கதையமைப்பு: 18/20

இந்த கதையை எழுதியவர் கியான்லூயிஜி போனெல்லி. அட்டகாசமான இந்த கதையில் கூட குற்றம் கண்டுபிடிப்பவர்கள் உண்டு. அட நாமெல்லாம் நக்கீரர் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவா? ஆகையால் இந்த கதையில் ஒரு சிறு குறையை முதல் பதிப்பிலேயே வாசகர்கள் கண்டுபிடித்து எழுதியிருந்தார்கள். 48ம் பக்கத்தில் டெக்ஸ் வில்லரை தலைவாங்கி துரத்தும்போது அதன் கையில் போலோ உருண்டைகளே இருக்கும். ஆனால் ஐம்பதாம் பக்கத்தில் மறுபடியும் அதன் கையில் கத்தி இருக்கும். இதற்க்கு Logical ஆக ஒரு விளக்கம் அளிக்கலாம்,இருந்தாலும் அட்டகாசமான ஒரு கதையில் இது ஒரு சிறு Glitch.

5. கதையின் ஓவியங்கள்: 18/20

இந்த ஓவியங்களை வரைந்தவர் இத்தாலிய மாமேதை ஆரெல்லியோ கலேப்பிணி ஆவார். காலெப் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இந்த மாமேதை இந்த அற்புதமான ஓவியங்களை சுமார் நாற்பத்திஎட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரைந்தார். ஒவ்வொரு சித்திரக் கட்டமும் மறக்கவியலா தருணங்களாக இருப்பதற்கு இவரே காரணம். குறிப்பாக தலைவாங்கியை ஊர்மக்கள் சூழ்ந்துக்கொள்ளும் 90ம் பக்க ஓவியங்களை பொறுமையாக ஒரு முறை பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கே புரியும்.

6. தமிழ் மொழியாக்கம் + எடிட்டிங்: 18/20

இங்கேதான் ஒரு சிறந்த கதை கொத்து பரோட்டா போடப்படுவதும், ஒரு சுமாரான கதை சிறப்பாக தெரிவதும் நடைபெறுகின்ற இடம். இந்த கதையை நம் எடிட்டர் அவர்கள் மொழி பெயர்த்த போது அவருக்கு பதினெட்டு வயது. ஆகையால் இப்போது அவரது மொழிபெயர்ப்பில் இருக்கும் முதிர்ச்சியை எதிர்பார்க்க இயலாது. இருந்தாலும் விளையும் பயிருக்கு உதாரணமாக அப்போதே அதிரடி ஆட்டம் ஆடியிருக்கிறார் நம் எடிட்டர். இரத்தப்படலம் கதைகளை மறுபடியும் ஜம்போ ஸ்பெஷல் இதழுக்காக மறு மொழியாக்கம் செய்தாலும், இந்த கதைக்கு ஒரிஜினலாக ஆண்டுகளுக்கு முன்பு செய்த அதே மொழியாக்கதுடன் பதிப்பித்து இருப்பது இந்த மொழியாக்கத்திற்கு ஓர் சான்று.

7. மற்றவை (ஃபில்லர்கள், விளம்பரங்கள் போன்றவை):  4/5

ஒரு புத்தகத்தில் வெறும் கதையும், அடுத்த இதழுக்கான விளம்பரம் மட்டுமே இருந்தால் அது மிகவும் போர் ஆகவே இருக்கும் (பிற்காலத்திய ராணி காமிக்ஸ்). ஆனால் நமது குழும இதழ்களில் மற்ற சமாச்சாரங்கள் மிகையாகவே இருக்கும். விச்சு கிச்சு போல இன்னும் சில கதைகள் வருவது மகிழ்ச்சி.

 

No

மதிப்பீட்டு காரணிகள்

மதிப்பெண்கள்

TCU குழு மதிப்பீடு
1

அட்டைப்படம் (ஓவியம்/டிசைன்/எழுத்துரு)

15 9
2

பைண்டிங் மற்றும் புத்தக வடிவமைப்பு

10 7
3

தலையங்கம் / எடிட்டோரியல்

10 10
4

கதையமைப்பு

20 18
5

ஓவியங்கள்

20 18
6

தமிழ் மொழியாக்கம் + எடிட்டிங்

20 18
7

மற்றவை (ஃபில்லர்கள், விளம்பரங்கள் போன்றவை)

5 4
    100 84

இந்த புத்தகத்தைப்பற்றிய மற்றுமொரு சிறப்பு நோ கமெண்ட்ஸ் பதிவை நாளை எதிர்பாருங்கள்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சில சிறப்பு பதிவுகள் வரும் (என்று நினைக்கிறேன்). அதில் முதலாவதாக வரும் பதிவு ஜேம்ஸ் பான்ட் சம்பந்தப்பட்டது, அடுத்து வரும் இரண்டு பதிவுகள் சமீபத்தில் தமிழில் வந்துள்ள இரண்டு ஃகிராபிக் நாவல்களை பற்றியதாக இருக்கும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

27 comments:

  1. நன்றாக படித்து அனுபவித்து ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள் விஸ்வா. வாழ்த்துக்கள்.

    ஒரு சில எழுத்துப்பிழைகளையும் "இந்த கதைக்கு ஒரிஜினலாக "......" ஆண்டுகளுக்கு என்ற இடத்தில் எத்தனை ஆண்டுகள் என்பதை குறிப்பிட மறந்துவிட்டதையும் கவனியுங்கள்.

    அடுத்தடுத்த பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம். நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பா.. புத்தகம் இன்னும் கைக்கு வர்றல. ஆனா உங்க புண்ணியத்துல ஹாட்லைன் - விளம்பரம்னு எல்லாம் பார்க்கக் கிடைச்சாச்சு. நன்றிகள் பல. அப்புறம்.. நீங்க என்கிட்ட கொடுத்த சந்தா ரிசிப்ட் = திருப்பூரைச் சேர்ந்த நண்பர் கார்த்திகேயனுக்கானது. வேணும்னா சொல்லுங்கய்யா.. அனுப்பி வைக்கிறேன்..:-))

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கா.பா,

      மன்னிக்கவும். அன்றைக்கு மட்டும் மொத்தம் பதினேழு சந்தா கட்டியதால் இந்த குழப்பம். திருப்பூரில் இருக்கும் நண்பர் கார்த்திகேயன் ஒரு டாக்டர். அவருடைய ரசீது மாறி உங்களிடம் வந்து விட்டது போல.

      Delete
    2. எதெது ஏதேது நீங்களே ஆயிரம் சந்தா முடிசுடுவிங்க போல இருக்கே? வாழ்த்துக்கள்

      Delete
  3. எனக்கெல்லாம் புத்தகம் வெள்ளிகிழமை அன்றே கிடைத்து விட்டது.

    தலை வாங்கி குரங்கு - ஒரு ஆசையான பார்வை

    ReplyDelete
  4. "வழக்கம் போல தமிழ் காமிக்ஸ் உலகில் நாம் பதிவிட்டு விட, அதனால் லயன் காமிக்ஸ் ஆபீசில் தொடர்ந்து போன் செய்து மன உளைச்சல் அடையும் காமிரேட்டுகளை மனதில் கொண்டு இந்த தாமதப்பதிவு." அதனால்தான் அய்யா நீங்க கிங்கு பதிவை படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
  5. நடப்பது காமிக்ஸ் முடியாட்சி அல்ல, குடியாட்சியே என்பதற்கு இதனை விட வேறென்ன உதாரணம் வேண்டும்? இந்த கமெண்டை மிக மிக ரசித்தேன் ஆசிரியரை அடிக்கடி அருகே இருந்து பார்க்கும் உம்மை கண்டு கண்டிப்பாக என் காதில் புகை வருவதை என்னால் மறுக்கவே முடியாது அய்யா
    மிக சிறப்பாக பதிவிட்டு விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஜானி சார்,
      எடிட்டர் என்றைக்கு ஊரில் இருக்கிறார் என்பதை (ஒரு யூகத்தில்) தெரிந்து கொண்டு அலுவலகம் சென்றால் நீங்களே சந்தித்து விடலாம். அனைவரையும் சந்திப்பவர் அவர்.

      ஆனால் அதற்க்கு நீங்கள் இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு சென்று பார்க்கவேண்டும். நம்மில் எத்துனை பேர் காமிக்ஸ் ஆசைக்கு இரண்டு நாள் லீவு எடுத்து செல்வார்கள்?

      Delete
  6. ஆஹா, அருமையான பதிவு. ஆனால் என்னை போன்று வாடகைவீட்டில் வசிப்பவர்களுக்கு சந்தா கட்டமுடியாது. ( ஏனெனில் எப்ப வேணா வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை. கடைகளிலும் நம் காமிக்ஸ் கிடைக்குமானால் என்னை போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. கேப்டன் டைகர்,
      நானும் வாடகை வீட்டில் இருப்பவனே. ஆனால் ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் முன்கூட்டியே லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு தெரிவித்து விடுவேன். கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து முறை வீடு மாறியுள்ளேன். இன்றைக்கும் புத்தகங்கள் சரியாக வந்து சேருகின்றன.

      ஒரு விஷயம் தெரியுமா? பல நாட்களில் லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் தொலைபேசியில் அழைத்து காமிக்ஸ் புத்தகம் இன்றைக்கு அனுப்பப் படுகிறது என்று தகவல் சொல்வார்கள். ஆகையால் பயம் வேண்டாம். சந்தா காட்டுங்கள்.

      Delete
    2. நண்பர் கேப்டன் டைகர்,

      நீங்கள் உங்கள் அலுவலக முகவரிக்கு சந்த கட்டலாம். நான் அப்படித்தான் செய்து வருகிறேன்.

      Delete
    3. நன்றி தோழர்களே, என் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது. :)! விரைவாக சந்தா கட்டிடுவேன். இருந்தாலும் திநகர், கோடம்பாக்கம், வடபழனி ஏரியாக்களில் காமிக்ஸ்காக அலைந்த நாட்களை மறக்கமுடியாது. நமது லயன், முத்து ஏதேனும் கடைகளில் பார்க்கமுடிந்தால் அது “ கற்றாழைசெடியை பாலைவனத்தில் பார்த்த கேப்டன் டைகர்” போன்று இருக்கும். விஜயன் சார், பிரபலமான கடைகளிலும் நமது காமிக்ஸ் கிடைக்க முயற்சித்து வருவதாக கூறினார்!

      Delete
  7. விஸ்வா,

    என்னைப்போல இன்னமும் புத்தகம் வந்து சேராதவர்களுக்கு அட்லீஸ்ட் ஹாட் லைன், அட்டைப்படம் போன்றவற்றை பார்க்க உதவியாக இருக்கிறது இந்த பதிவு. தொடர்ந்து இந்த சேவையை செய்யுங்கள்.

    அதனைப்போலவே எப்போதும் பதிவிடுங்கள். வாசகர்கள் புரிந்து கொள்பவர்களே. ஆகையால் புத்தகம் அனுப்புவதில் இருக்கும் சிக்கல், சங்கடம் அறிந்தவர்கள். ஆகையால் மன உளைச்சல் இருக்காது.

    ReplyDelete
  8. கோவை சரவணன்Monday, April 2, 2012 at 2:04:00 AM GMT+5:30

    அன்பின் விஸ்வா,

    உங்களது காமிக்ஸ் குறித்த தொடர்ந்த பதிவுகளை காமிக்ஸின் மீதான அதீத அன்பின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன். ஸ்கான் செய்வது மற்றும் அவற்றை திறமையாக போட்டோஷாப் உதவியுடன் மேம்படுத்தி இங்கே எம் பார்வைக்கு அளிப்பது என்று நீங்கள் படும் கஷ்டங்களுக்கு யாம் எவ்வைகையில் நன்றி சொல்வது?

    தொடருங்கள்.

    ReplyDelete
  9. கோவை சரவணன்Monday, April 2, 2012 at 2:05:00 AM GMT+5:30

    எடிட்டர் அவரது தளத்தில் வெளியிட்ட அட்டை வேறாக இருந்ததே?

    ReplyDelete
  10. உங்கள் உழைப்பை கண்டு வியந்து, உங்களை இனிமேல் "காமிக்ஸ் Dictionary விஸ்வா" என்று அழைக்கபடுவீராக

    ReplyDelete
  11. // இந்த புத்தகத்தைப்பற்றிய மற்றுமொரு சிறப்பு நோ கமெண்ட்ஸ் பதிவை நாளை எதிர்பாருங்கள். //

    ககாங் அப்படி தான் போன முறையும் சொன்னீங்க ;-)
    .

    ReplyDelete
  12. அருமையான ஸ்கேன்கள் விஸ்வா, வரும் பதிவுகளில் கதையை வெளியிடுவதாய் இருந்தால் ஒரு ஸ்பாய்லர் அலர்ட் மட்டும் போட்டு விடுங்கள்!

    -கார்த்திக்
    Bladepedia

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒக்கே, இதுல கதைய எங்கேயுமே சொல்லலையே? அப்புறம் எதுக்கு ஸ்பாய்லர் அலெர்ட்?

      கதையை நம்ம ஜானி சைட்டுல படிங்க என்றுதானே இருக்கும்?

      Delete
    2. இந்த பதிவ சொல்லல :) பொதுவா சொன்னேன், எப்போதாவது கதையை விலாவரியா பிரிச்சு மேயற ஐடியா இருந்த அலர்ட் போட சொன்னேன், அவ்ளோதான் :)

      Delete
  13. விஸ்வா,

    நல்ல பதிவு, வளர்ந்தாச்சு இனிமே காமிக்ஸ் படிக்கணுமானு படிக்காமல் இருக்கேன்,ஆனால் மீண்டும் படிக்க வச்சுடுவிங்க போல இருக்கே.

    ஒரு சந்தேகம், முதலில் இந்த டெக்ஸ் வில்லர் (நடுவில் கில்லர்னும் போட்டாங்க தானே) கதை வந்த போது தலைவாங்கி குரங்கு என்ற பெயரில் வரவில்லை என நினைக்கிறேன், கொலைக்கார குரங்கு அல்லது வேறு ஏதோ ஒரு பெயராக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  14. Any way to get these comics in Canada?

    ReplyDelete
  15. இன்னமும் தலை வங்கி வரவில்லை. ஆனால் இந்த வார இறுதியில் சென்னை வருகிறேன். அங்கேயே வாங்கிவிட உத்தேசம்.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails