காமிரேட்ஸ்,
நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பாக இடப்படவேண்டிய இந்த பதிவு, என்னுடைய கடுமையான பணிச்சுமை காரணமாக (சோம்பலுக்கு இப்படியும் ஒரு மாற்றுப் பெயர்) இன்றுதான் வலையேறுகிறது. சென்ற ஆண்டு இந்த பதிவில் முகமூடி வீரர் வேதாளர் (ராணி காமிக்ஸ் ரசிகர்களுக்கு - மாயாவி) அவர்களது சமீபத்திய கதைகள் தமிழில் வெளியாக இருப்பதாக அறிவித்து இருந்தது தமிழ் காமிக்ஸ் உலகின்தொடர் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அந்த முயற்சியில் இறங்கியவர் எங்கள் நண்பரும் பதிப்புலக ஆசானுமாகிய திரு காந்தி கண்ணதாசன் அவர்களே. கண்ணதாசன் பதிப்பகம் மூலமாக இந்த கதைகளை தமிழில் வெளியிட சில முயற்சிகளை மேற்கொண்டார் (அவை என்ன ஆயிற்று, ஏன் தடைபட்டது என்பது ஒரு மழைக்கால மாலைநேரப்பதிவில் விலாவரியாக விவாதிக்கப்படும்). இப்போதைக்கு அதை மறந்துவிட்டு இந்த பதிவுக்குள் நுழைவோம்.
கண்ணதாசன் பதிப்பகம்: ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒரு முத்திரை உண்டு. அதாவது அந்த பதிப்பகம் எந்தவிதமான புத்தகங்கள் வெளியிடும் என்பதை வாசகர்கள் ஒரு ரசனையோடு தெரிந்து வைத்திருப்பார்கள். அவ்விதத்தில் கண்ணதாசன் பதிப்பகத்தின் முகவரி மொழிமாற்று புத்தகங்களே. உலகின் பல சிறந்த புத்தகங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து அற்புதமான பேக்கிங்கில் விற்பனை செய்கிறார் திரு காந்தி கண்ணதாசன் அவர்கள்.
அது ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ஆக இருக்கட்டும், அல்லது அகியோ மோரிட்டாவாக இருக்கட்டும் - அவர்களது எழுத்து சுந்தர தமிழினில் நாம் படிக்க ஏதுவாக பதிப்பிப்பவர் இவர். இவரைப்பற்றி புத்தகம் படிக்கும் நண்பர்களுக்கு சொல்வது என்பது விளம்பரத்திற்கு விளம்பரம் செய்வது போல. ஆகையால் இத்துடன் முடித்துக்கொண்டு இந்த புத்தகத்தை பற்றி பார்ப்போம். சென்ற ஆண்டு சென்னை புத்தக திருவிழாவிற்கு பிறகு காந்தி கண்ணதாசன் அவர்களை சந்திக்காமல் இருந்த நாம், ஒரு நாள் திடீர் ஞானோதயம் பெற்று சென்னை தியாகராய நகரில் இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்திற்கு சென்றபோதுதான் இந்த டாக்டர் நோ அவர்களை மறுபடியும் (தமிழில்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் இந்த நாவல் விற்பனைக்கு வந்ததும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் (என்றே நினைக்கிறேன்).
தமிழில் நாவல் படிப்பதையும் ஹார்ட் ரீடிங்'ஐயும் நான் விட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. இந்த சூழலில் 432 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை ஒரே இரவில் படித்து முடித்தேன் என்பது என்னாலேயே நம்ப முடியாத ஒரு விஷயம். ஆங்கிலத்தில் இயன் பிளெம்மிங் எழுதிய நாவல் எதனையும் படித்ததில்லை. ஆனால் இந்த தமிழாக்கத்தை படித்தவுடன் ஆங்கல நாவலையும் படிக்க வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது.
ஜேம்ஸ் பாண்ட் நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் அவர்களைப்பற்றிய இந்த ஒரு குறிப்பு மிகவும் அருமையாகவும், ரத்தினசுருக்கமாகவும் எழுதப்பட்டு இருக்கிறது. இதில் சமீபத்திய ஜேம்ஸ் பாண்ட் நாவலாசிரியர் ஜேம்ஸ் கார்ட்னர் அவர்களைப்பற்றி எதுவும் குறிப்பிடாதது வருத்தமளிக்கும் ஒரு விஷயம்.
KannaDasan Pathippagam – Ian Fleming’s Dr No Novel - Tamil Translated Novel Intro On Ian Fleming bu The Editor |
இந்த அருமையான நாவலுக்கு முன்னுரையாக என்ன இருக்கும் என்று புரட்டி பார்த்ததில் ஒரு இனிய அதிர்ச்சி. சைமன் விண்டர் அவர்கள் எழுதிய முன்னுரையை அழகுத்தமிழில் படிப்பது அதிர்ச்சிதானே? சைமன் விண்டர் பற்றி தெரியாதவர்கள் அந்த சுட்டியை கிளிக்கி அவர் எழுகிய ஒரு ஜேம்ஸ் பாண்ட் குறித்த ஆய்வு மற்றும் ஜாலியான விமர்சன புத்தகத்தை வாங்கி ஒரு முறை படித்து விடவும். ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் சில விஷயங்களை லகான் பிடித்து அருமையாக தொகுக்கும் வல்லமை படைத்தவர் இவர்.
South Indian KannaDasan Publiations – Ian Fleming’s Dr No Novel - Tamil Translated Novel Foreword By Simon Winder |
தமிழில் நாவல் எப்படி மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்றறிய துடிக்கும் ரசிகர்களுக்காக ஒரு சாம்பிள் பக்கம். இதுவே அதிகம், இதற்க்கு மேலும் ஸ்கான்'களை கேட்க வேண்டாம். நாவலை விலைகொடுத்து வாங்கி படித்து விடவும்.
South Indian KannaDasan Publications– Ian Fleming's Dr No Novel - Tamil Translated Novel - 1st Page Sample Page |
நாவலைகுறித்து என்னுடைய கருத்துக்கள்: இந்த கதையை பல நூறு முறை காமிக்ஸ் வடிவில் தமிழில் படித்து இருந்ததாலும், டாக்டர் நோ படத்தை எண்ணிய பல்திற வட்டு தேயும் வரை பார்த்திருந்ததாலும் கதையோட்டம் சுவாரஸ்யமாகவே இருந்தது. மொழியாக்கம் சில இடங்களில் தொய்வு தட்டினாலும் எங்கேயும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனால் சில சொற்களை ஆங்கிலத்திலேயே வழங்கி இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குவதை தவிர்க்க இயலவில்லை. குறிப்பாக ஆக்டோபஸ் என்பதை அசுர மெல்லுடலி என்றெல்லாம் மொழி பெயர்க்கத்தான் வேண்டுமா? அப்படியே மொழி மாற்றம் செய்தாலும், இரண்டாவது தடவை அந்த சொற்தொடரை பிரயோகிக்காமல் ஆங்கிலத்தில் வழங்கியிருந்தாலும் தவறில்லையே? அதுவுமில்லாமல் நான் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் நாவலை படிப்பதாலும் எனக்கு இந்த சொல்வழக்குகள் அன்னியமாக பட்டிருக்கலாம். இந்த மொழி பெயர்ப்பாளரின் மற்ற புத்தகங்களையோ அல்லது இந்த தொடரின் அடுத்த புத்தகத்தையோ படித்தால் தெரிந்து விடும்.
டாக்டர் நோ - கண்டிப்பாக ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் ஒரு முறை படிக்கவேண்டிய நாவல்.
இந்த நாவல் எங்கே கிடைக்கு, என்ன விலை என்பதெல்லாம் மேலே உள்ள ஸ்கான் செய்யப்பட்ட கிரெடிட் பக்கங்களிலேயே இருக்கிறது. மறவாமல் வாங்கி விடுங்கள். அடுத்து வரும் இரண்டு பதிவுகள் சமீபத்தில் தமிழில் வந்துள்ள இரண்டு ஃகிராபிக் நாவல்களை பற்றியதாக இருக்கும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa
பின் குறிப்பு: தமிழில் வந்த டாக்டர் நோ காமிக்ஸ் கதையைப்பற்றி தெரிந்து கொள்ள பயங்கரவாதி டாக்டர் செவனின் இந்த பதிவை படிக்கவும். அமெரிக்காவில் டாக்டர் நோ படமாக வந்தபோது வந்த சினிமா காமிக்ஸை படிக்க இங்கே செல்லவும்.
வந்தோம்ல முதல்ல :))
ReplyDelete.
கண்டிப்பாக படிக்க ட்ரை பண்ணுறோம் ( ஓசியில கிடைச்சா )
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது?
Deleteநான் இங்கே ஆட்டைய போடுறதப் பத்தி பேசுறேன், நம்ம சிபி அண்ணன் ஓசியில கெடைக்குமான்னு சொல்றாரு? இதுக்கு பேருதான் டெலிபதியா?
ரெண்டும் ஒண்ணுதான் அக்காங்க்க் ;-)
Delete.
நானும் இப்பதான் உங்கள பத்தி பெருமையா இங்கன சொல்லிக்கிட்டு இருந்தேன்
Deletehttp://mokkaicomics.blogspot.in/2012/04/blog-post.html
What a co-incident
,
அடச்சே, இந்த கரண்ட் கட் ஆகி இன்வர்டார் ஆன் ஆகுறதுக்குள்ளே நம்ம சிபி அண்ணன் வந்துட்டாரே.
ReplyDeleteசரி விடுங்க. இந்த நாவலை நாளைக்கு விச்வாகிட்ட இருந்து ஆட்டைய போட்டுற வேண்டியதுதான்.
அண்ணே இத்தன நாளா எங்கிருந்தீங்க நீங்க :))
Delete.
சிபி அண்ணே, கொஞ்சம் வேலை அதிகம் ஆயிடுச்சி. போன ஜாக்கி சான் படம் நாம தமிழாக்கம் செஞ்சதுதான். இப்போ மூணு பட வேளைகளில் பிசி.
Deleteவாவ் சூப்பர் அடிச்சி தூள் கிளப்புங்க
Deleteஅதே நேரத்துல எங்கள எல்லாம் மறந்துடாதீங்க
.
என்னங்க நடக்குது இங்கே?
ReplyDeleteசிபி அண்ணே, நாளைக்கும் இன்னுமொரு பதிவு இருக்கு. அதுவுமில்லாமல் இந்த மாதம் இன்னும் நிறைய பதிவுகள் காத்திருக்கு.
// என்னங்க நடக்குது இங்கே? //
Deleteசும்மா சும்மா கண்டுக்கபடாது ;-)
// நாளைக்கும் இன்னுமொரு பதிவு இருக்கு. அதுவுமில்லாமல் இந்த மாதம் இன்னும் நிறைய பதிவுகள் காத்திருக்கு. //
நீங்களும் நம்ம விஜயன் சார் மாதிரி வரிசையாக பதிவுகளை போட்டு தாக்குங்கள் :))
.
நல்ல பதிவு.
ReplyDeleteஆனால், காமிக்ஸ், திரைப்படம் என்று படித்த, பார்த்த இந்த கதையை 432 பக்கங்கள் கொண்ட நீளமான கதையாக படிப்பதில் சுவராசியமாக இருந்திடுமா என்பதில் சந்தேகமாக உள்ளது.
விஸ்வா ஜி, எனக்கு இன்னும் தலைவாங்கியார் வரலை, கொஞ்சம் recommend பண்ணுங்களேன்.
ReplyDelete500 வருஷம் நல்லாருப்பிங்க
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//P.KarthikeyanApr 4, 2012 09:59 PM
ReplyDeleteவிஸ்வா ஜி, எனக்கு இன்னும் தலைவாங்கியார் வரலை, கொஞ்சம் recommend பண்ணுங்களேன்.
500 வருஷம் நல்லாருப்பிங்க//
கார்த்திகேயன் சார்,
இன்னமும் எங்க அண்ணனுக்கே தலைவாங்கியார் வந்து சேரவில்லை.என்னுடைய புத்தகத்தையும் நேற்றுதான் நண்பர் @narainக்கு கொடுத்துவிட்டேன். ஆகையால் தயவு செய்து வெயிட் செய்யுங்கள்.
கண்டிப்பாக அடுத்த வாரம் அனைவருக்கும் வந்துவிடும்.
விஸ்வா ஜி,
ReplyDeleteடாக்டர்.நோ நாவல் குறித்த தங்கள் பதிவு அருமை.
இதை தவிர வேறு ஜேம்ஸ்பாண்ட் நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளனவா என்ற விவரங்களை கூறவும்..
மேலும் ஷெர்லாக் ஹோம்ஸ்-ன் நாவல்கள் குறித்தும் பதிவிட்டால் நன்றாக இருக்கும். (பத்ரி சேஷாத்ரியினால் மொழிபெயர்க்கப்பட்ட "ஒரு மோதிரம் இரு கொலைகள்" நாவலை தவிர வேறு நாவல்கள் ஏதேனும் உள்ளனவா???)
ஸ்ரீதர் ரமமூர்த்தி
இப்போதெல்லாம் நாவல் எல்லாம் படிக்கவே முடிவதில்லை. காவல் கோட்டம் தான் கடைசியாக படித்து முடித்த நெடு நாவல். பார்க்கலாம். முதல் பக்கம் ஸ்கானில் தமிழாக்கம் அவ்வளவு சிறப்பாக படவில்லை.
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in