Pages

Monday, April 16, 2012

14 Lion Comics Issue No 211: சாத்தானின் தூதன் டாக்டர் செவன்: Agent X-9 Phil Corrigan + Rip Kirby Adventure – Apr 2012

காமிரேட்ஸ்,
இந்த பதிவை படித்துக்கொண்டு இருக்கும் பெரும்பாலான வாசகர்களுக்கு இந்நேரம் சாத்தானின் தூதனை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும். அப்படியும் பயங்கரவாதி டாக்டர் செவனை சந்திக்க முடியாதவர்கள் இரண்டொரு நாள் பொறுத்திருங்கள். அந்த வாய்ப்பு கிடைத்து விடும். லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து பெரும்பாலான சந்தாதாரர்களுக்கு இந்த புத்தகம் சனிக்கிழமை அன்று அனுப்பப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து (ச்சை. இந்த நியூஸ் சேனல்களை பார்த்து,பார்த்து நமக்கும் அப்படியே வருது) தகவல்.

அப்படியும் இந்த புத்தகம் கைவரப் பெறாதவர்கள், உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலகதொலைபேசி எண்ணிற்கு (04562 – 272649) தொடர்பு கொண்டு உங்கள் சந்தா விவரங்களை தெரிவியுங்கள். புத்தக விவரங்கள் அப்டேட் செய்யப்படும். இந்த புத்தகம் இந்த ஆண்டு பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள ஐந்தாவது காமிக்ஸ் புத்தகம் ஆகும். நூறு நாளில் ஐந்து புத்தகங்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறப்பான முன்னேற்றமே.

1. லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் – Jan 2012

2. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - கொலைகார கலைஞன் – Jan 2012

3. முத்து காமிக்ஸ் - விண்ணில் ஒரு குள்ளநரி – Jan 2012

4. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு – March 2012

5. லயன் காமிக்ஸ் - சாத்தனின் தூதன் டாக்டர் செவன் – Apr 2012

சரி, அதுதான் இந்த இதழ் அனைவரின் கைகளுக்கும் வந்தாகி விட்டதே, இனிமேலாவது பதிவு இடலாமே என்று இந்த பதிவு:

சமீபத்தில் வந்த லயன் காமிக்ஸ் அட்டைப்படங்களில் இதுபோன்றதொரு சிறப்பான அட்டையை பார்த்ததில்லை. இது குறித்து விவாதிக்க விஷயமே இல்லை. அவ்வளவு அட்டகாசமான அட்டைப்படம். கடைசியாக இப்படி குறுக்குவாட்டில் வந்த அட்டைப்படம் எதுவென்று நண்பர்களுக்கு நினைவிருக்கிறதா? இங்கே கிளிக் செய்து அந்த அட்டையை பாருங்கள்

Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Front Cover
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Front Cover

வழக்கம் போல புத்தகத்தில் அதிகம் படிக்கப்படும் / முதலில் படிக்கப்படும் பகுதி நம்ம எடிட்டரின் ஹாட் லைன் பகுதிதான். இந்த முறையும் இரண்டு பக்கங்கள் எழுதியுள்ளார்.

Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Editorial Hot Line Page 03 Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Editorial Hot Line Page 04
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Editorial Hot Line Page 03 Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Editorial Hot Line Page 04

இந்த கதைகளை படிக்கும் முன்னர் ஓரிரு வார்த்தைகள். எடிட்டரே தன்னுடைய ஹாட் லைனில் கதைகளின் தொன்மையை ஓவியர்களின் கைவண்ணம் overcome செய்திடும் என்று சொல்லி இருந்தாலும் ஒரு விஷயத்தை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த கதைகள் இரண்டுமே தினசரி செய்திதாள்களில் தொடர்கதைகளாக வந்தவை. செய்திதாளில் தொடர்கதை படிப்பது என்பது மிகவும் நுணுக்கமாக, ரசிப்புதன்மையுடன் எழுதப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு நாள் தொடரிலும், முதல் கட்டம் நேற்றைய நிகழ்வை நினைவுபடுத்த வேண்டும், முடிவில் வரும் கடைசி கட்டத்திலும் (முடிந்தால்) ஒரு ட்விஸ்ட், வெள்ளிகிழமை (அல்லது சனிக்கிழமை) அன்று ஒரு திருப்பமான கட்டம் வரவேண்டும் என்று பல தடைகள். அப்படி இருந்தாலும் அவை ஜெயிக்கவேண்டுமேன்றால் அது அந்த ஓவியர் மற்றும் எழுத்தாளரின் கூட்டணி புதுமையான முயற்சியில் தான் இருக்கிறது.

நான் இப்போதும்கூட இந்தியன் எக்ஸ்பிரெஸ் தினசரியில் வரும் முகமூடி வீரர் வேதாளர் கதைகளை தொடர்ந்து படித்துக்கொண்டே வருகிறேன். லீ பாஃக் அளவுக்கு கதைகளின் தரம் இருக்காது என்பது நாம் அனைவரும் நன்கறிந்த உண்மை. ஆனாலும் ஓக்கேதான், தொடர்ந்து படிக்கலாம்.

ஆகையால், இந்த கதைகளை Al Williamson மற்றும் Alex Raymond ஆகிய இரண்டு மகத்தான ஓவியர்களின் கைவண்ணத்தை பறைசாற்றும் ஒரு புத்தகமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த கதைகள் அன்றைய காலகட்டத்தில் மிகவும் ரசிக்கப்படவை என்பதும் மறுக்கவியலா உண்மை. நாம் சில சமயங்களில் பழைய கருப்பு வெள்ளை ரெட்ரோ படங்களை ஒரு மாறுதலுக்காக பார்ப்பதில்லையா? அதைப்போல இதனை எடுத்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் பழைய படங்களே இப்போதைய சூழலில் ஹிட் ஆகிவிடும் (ஒகே ஒகே ரிலீஸ் ஆகும்முன், இந்த ஆண்டின் அபிஷியல் ஹிட் கர்ணன் படம் தான்). ஸோ, ஒரு மாறுதலுக்காக இந்த புத்தகங்களை படியுங்கள். படிக்கும்போது, ஒவ்வொரு மூன்றாம் கட்டத்தையும் கூர்ந்து கவனியுங்கள். நான் சொல்வது புரியும்.

Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Story 1st Page Pg No 05 Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Rip Kirby Story 1st Page Pg No 47
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Story 1st Page Pg No 05 Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Rip Kirby Story 1st Page Pg No 47

கடந்த வாரம் பழைய காமிரேட்டுகள் இருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். இருவருக்குமே இந்த புத்தகம் பிடிக்கவில்லை. பழைய காமிக்ஸ் ரசிகர்களுக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. அதனால்தான் எடிட்டர் தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டாரோ என்று தோன்றுகிறது. என்னுடைய தாழ்மையான கருத்தை பதிவின் முடிவில் காணலாம்.Details

காமிக்ஸ் சீசன் மறுபடியும் களைகட்ட துவங்கிவிட்டது என்பதற்கு சாட்சியாக இந்த இதழில் வந்துள்ள விளம்பரங்களை கூறுவேன். சிங்கத்தின் சிறு வயதில் தொடர் இப்போதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. சமீப காலங்களில் நாம் ரசிக்கும் ஹீரோக்களின் அறிமுகம் ஆரம்பித்துள்ளது.

Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 SSV 18 Pages 96 97
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 SSV 18 Pages 96 97
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Comics Advt Forthcoming Issues Pages 100 101
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Comics Advt Forthcoming Issues Pages 100 101
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Comics Advt Forthcoming Issues Pages 102 103
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Comics Advt Forthcoming Issues Pages 102 103
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Comics Advt Super Hero Summer Special Pages 98 99
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Comics Advt Super Hero Summer Special Pages 98 99

புத்தக விளம்பரங்களை தவிர, விற்பனையாகிறது போன்ற விளம்பரங்களை பார்க்கையில் மனதிற்கு நிறைவை தருகிறது. ஒவ்வொரு முறையும் சந்தா கட்ட விவரங்களை கேட்கும் வாசகர்களே, இந்த சந்தா படிவத்தை உபயோகித்துக் கொண்டு உடனடியாக சந்தா கட்டி தமிழ் காமிக்ஸ் மேலுள்ள உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். இரண்டாயிரம் சந்தா என்பது இந்த ஆண்டு முடிவிற்குள் நடந்துவிட்டால், அடுத்த ஆண்டு நாம் அனைவருமே மாதம் இரண்டுகாமிக்ஸ் புத்தகங்களை படிக்க வாய்ப்பிருக்கிறது.

Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Comics Advt Forthcoming Issues Pages 104 Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7  Subscription Form Page No 95
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Comics Advt Forthcoming Issues Pages 104 Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Subscription Form Page No 95
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Reprint List Page No 105 Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Reprint List Page No 106
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Reprint List Page No 105 Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Reprint List Page No 106

கடைசியாக, நம்முடைய மனம்கவர்ந்த காமிக்ஸ் இரட்டையர்கள் - விச்சு கிச்சு. இவர்களைப்பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆங்கிலத்தில் வழங்கிய ஒரு முன்னுரை இங்கே உள்ளது. கிளிக் செய்து படிக்கவும்.

Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Back Cover Sporty Vichu & Kichu
Lion Comics Issue No 211 Issue Dated Apr 2012 Agent X 9 Phil Corrigan Sathanin Thoodhan Dr 7 Back Cover Sporty Vichu & Kichu

புத்தக மதிப்பீடு: கடந்த இதழில் இருந்து ஒவ்வொரு புத்தகத்தினையும் தமிழ் காமிக்ஸ் உலக மதிப்பீட்டு குழுவினர் அலசி ஆராய்ந்து தங்களது முடிவினை வழங்குகிறார்கள். அதன்படி இந்த சாத்தானின் தூதன் டாக்டர் செவனின் புத்தக மதிப்பீடு இதோ:

1. அட்டைப்படம் (ஓவியம்/டிசைன்/எழுத்துரு): 15/15

சமீபத்தில் வந்த அட்டைப்படங்களிலேயே இதுதான் டாப் என்பதினை பதிவின் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன். லயன் காமிக்ஸ் கவ் பாய் ஸ்பெஷல் தவிர வேறெந்த அட்டையும் இப்படி ஒரு கலர்ஃபுல் காம்பினேஷனில் வந்ததில்லை. அட்டைப்பட ஓவியர் ராக்ஸ்.

2. பைண்டிங் மற்றும் புத்தக வடிவமைப்பு: 4/10

ஏற்கனவே சொன்னதுபோல நியூஸ் பிரின்ட் தாளில் பிரின்ட் செய்யப்படுகின்ற கடைசி வரிசை புத்தகங்கள் இவை. அதனால் ஓவியங்களின் தரத்தை நூறு சதவீதம் ரசிக்க இயலவில்லை.

3. தலையங்கம் / எடிட்டோரியல்: 10/10

மேலே சொன்னதுபோல முதலில் படிக்கப்படும் பகுதி. இரண்டு பக்கங்கள் என்பதால் இன்னமும் அருமை. தொடர்ந்து இனிமேல் இரண்டு பக்கங்கள் எழுத இங்கே ஒரு கோரிக்கை வைக்கிறேன். நோ ஆர்கியுமென்ட்ஸ்.

4. கதையமைப்பு: 12/20

இரண்டு கதைகளுமே நாற்பது / அறுவது ஆண்டுகளுக்கு முன்பாக செய்தித்தாளில் தினசரி தொடராக வந்தவை என்பதால் இப்போதைய சூழலில் அவற்றின் நிலைப்புத்தன்மை என்பது கேள்விக்குறி. ஆனால் ஒரு மாற்றமாக இந்த கதைகளை ரசிக்க இயலும். வருடத்திற்கு கண்டிப்பாக ஓரிரு முறையேனும் இந்த ஹீரோக்களின் கதைகள் வரவேண்டும்.

5. கதையின் ஓவியங்கள்: 18/20

சென்ற ஆண்டு மறைந்த காரிகன் கதைகளின் ஓவியர் அல் வில்லியம்சன் அவர்களுக்கு தமிழ் நாட்டில் ஒரு ரசிகர் மன்றமே உள்ளது (நாங்கதான்). அவரது ஸ்டைல் பற்றி சொல்லவே வேண்டாம். அதைப்போலவே ரிப் கிர்பி ஓவியர் அலெக்ஸ் ரேமன்ட் தான் கிர்பி கதை வரிசையில் சிறந்த ஓவியர். ஆகையால் இந்த கதைகளின் ஓவியங்கள் அட்டகாசம். அடுத்த முறை ஏதேனும் ஸ்பெஷல் இதழில் இந்த ஹீரோக்களின் கதைகளை வெளியிடும் எண்ணம் இருந்தால், கண்டிப்பாக இப்போது இருக்கும் உயர்தர தாளிலேயே வெளியிடுங்க. கண்டிப்பாக இந்த கதையை மறுத்த வாசகர்கள்கூட ரசிப்பார்கள்.

6. தமிழ் மொழியாக்கம் + எடிட்டிங்: 18/20

ஓரிரு இடங்களில் லேசாக ஜெர்க் அடித்தாலும், மொழியாக்கம் வழக்கம்போல உலகத்தரம். அதைப்போலவே கதையின் எடிட்டிங்கும். ஆகையால் நோ கம்ப்லைன்ட்ஸ்.

7. மற்றவை (ஃபில்லர்கள், விளம்பரங்கள் போன்றவை):  5/5

விச்சு கிச்சு கலரில் வந்தது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அதைப்போலவே மற்ற ஓரிரு பக்க கதைகளையும் கொண்டுவந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும். விளம்பரங்கள் தூள் கிளப்புகின்றன.

 

No மதிப்பீட்டு காரணிகள் மதிப்பெண்கள் TCU குழு மதிப்பீடு
1 அட்டைப்படம் (ஓவியம்/டிசைன்/எழுத்துரு) 15 15
2 பைண்டிங் மற்றும் புத்தக வடிவமைப்பு 10 4
3 தலையங்கம் / எடிட்டோரியல் 10 10
4 கதையமைப்பு 20 12
5 ஓவியங்கள் 20 15
6 தமிழ் மொழியாக்கம் + எடிட்டிங் 20 18
7 மற்றவை (ஃபில்லர்கள், விளம்பரங்கள்) 5 5
    100 79

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

14 comments:

 1. நல்ல, விரிவான பார்வை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. விஷ்வா,

  சமிபத்தில் வந்த "விண்ணில் ஒரு குள்ளநரி" "அழகிய அவஸ்தை" கதைகளைவிட, ஓவியங்களை விட காரிகனின் டாக்டர் 7 , ரிப் கிர்பியின் கன்னித்தீவில் காரிகை கதைகளும் ஓவியங்களும் எவ்வளவோ மேல் என்பது என்னோட தாழ்மையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. கார்த்திகேயன் சார்,

   I Agree with you.

   விண்ணில் ஒரு குள்ளநரியின் ஓவியர் பிரான்க் ராபின்ஸ் சளைத்தவர் அல்ல. அவரும் ஒரு அசகாய சூரரே.ஆனால் இந்த இரண்டு ஓவியர்கள் (Al Williamson + Alex raymond) டெய்லி ஸ்ட்ரிப் ஓவியத்தின் சிகரங்கள். ஆகையால் இவர்களது ஓவியங்கள் பற்றி யாருமே குறை சொல்ல இயலாது.

   அடிஷனல் தகவல்: காரிகனை வரைய Al Williamson தன்னுடைய போட்டோக்களையே மாடலாக உபயோகப்படுத்தினார். அதனால்தான் காரிகன் செம ஸ்மார்ட் ஆக தெரிகிறார்.

   Delete
  2. எச்சுஸ்மி, இங்க என்ன நடக்குது?

   நீங்க பதிவில் இந்த கதையின் ஓவியங்கள் சூப்பர் என்று சொல்லி இருக்கீங்க. அதையே தான் கார்த்திகேயரும் (நாங்களும் மரியாதை கொடுப்போம்ல) சொல்றாரு. பின்னாடி நீங்க மறுபடியும் வந்து அதையே சொல்றீங்க.

   ஒண்ணுமே புரியல.

   Delete
 3. தம்பி இன்னும் டீ வரலை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது :-(

  எங்களுக்கெல்லாம் இன்னும் ‘தலைவாங்கி குரங்கு’ கூட வரலை சாமி...

  ReplyDelete
  Replies
  1. அண்ணே,
   நாளைக்கு மதியம் வரை பாருங்கள். அல்லது கொரியரில் வரவழிக்க ஆவன செய்யப்படும்.

   பொறுத்தார் பூமி ஆள்வார்.

   Delete
  2. டி வரவில்லை, காபி வரவில்லை, காமிக்ஸ் வரவில்லை என்று சொல்பவர்கள் எல்லாம் அவை வந்தவுடன் என் வந்து அட்டென்நஸ் போடுவதில்லை?

   Delete
 4. நம்ம சிபி அண்ணன் இப்போதான் லாகின் செய்து உள்ளே வந்து இருக்கிறார். அவருக்கு முன்னே இந்த கமென்ட். இன்றைக்குத்தான் சென்னையில் இருக்கும் பலருக்கும் இந்த புத்தகம் வந்தது.

  கொரியரில் வராமல், எடிட்டர் சொன்னதுபோலவே சாதாரண தபாலில் வந்தது.

  ReplyDelete
 5. King viswa : கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு உங்கள் வலைப்பதிவை பார்த்து அசந்து விட்டேன். தமிழ் கமிக்ஸிர்காக ஒரு வலை பதிவா என்ற இன்ப அதிர்ச்சி . அதன் வாயிலாக ஒலககாமிக்ஸ் ரசிகன் லிங்க் கிடைத்தது மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி நடுவில் இணைப்பு கட்டாகி புறப்பட்ட இடம் மறந்து போனது . அப்போது நினைத்ததுண்டு இவ்வளவு ரசிகர்கள் இருக்கும் போது லயன் விஜயன் மட்டும் ஏன் வலைப்பதிவை ஆரம்பிக்க வில்லை என்று . இந்த ஆண்டு அதுவும் நடந்து விட்டது . ஆசிரியரின் இந்த ஆண்டு காமிக்ஸ் பதிப்புகளுக்கு இந்தபதிவுகள் மிகபெரிய உறுதுணை என்பதில் சந்தேகம் இல்லை

  ReplyDelete
 6. முத்து காமிக்ஸின் மிக பழைய இதழ் : "உதவிக்குவந்த நயவஞ்சகன்" http://25-3-2012.blogspot.in/

  ReplyDelete
 7. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete
 8. I also always think 'Tragon Nagaram' is the best comics ever i read. When I bought it in 1987/1988 I got one free 'pagadai' game also. Still i remember in that comics there was one mini comics was included. If you people remember one orphan child suddenly gets one ancestor fort in an island. I will continue.....

  ReplyDelete
  Replies
  1. செந்தில் குமார்,

   டிராகன் நகரம் இதழுடன் வந்த தாய விளையாட்டு அட்டையை காண வேண்டுமா? தமிழ் காமிக்ஸ் உலகின் இந்த பதிவில் காணவும்:தாய விளையாட்டு

   அதைப்போலவே, நீங்கள் குறிப்பிடும் அந்த கதையின் பெயர் கெக் தீவு மன்னன். ஆனால் அது வந்தது டிராகன் நகரம் புத்தகத்தில் அல்ல. அந்த இதழின் பெயர் இரத்த முத்திரை. டிராகன் நகரம் (Lion Comics No 50) வந்து சரியாக ஐந்து இதழ்கள் கழித்து அதே சைசில் வந்த இதழ் இரத்த முத்திரை (Lion Comics No 56) என்பதால் உங்களுக்கு இந்த பெயர் குழப்பம் ஏற்பட்டு இருக்கும் (என்று நம்புகிறேன்).

   Delete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails