காமிரேட்ஸ்,
இந்த ஏழாம் அறிவு படம் வந்தவுடன் எல்லோரும் போதி தர்மரைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தது நினைவிருக்கலாம் (அதற்க்கு பிறகு தேனாண்டாள் ஃபில்ம்ஸ் ஒரு டப்பிங் படத்தை வேண்டுமென்றே போதி தர்மர் என்று பெயரிட்டு கல்லா கட்டியதும் நினைவிருக்கலாம்). அந்த போதி தர்மரைப்பற்றிய ஒரு முன் குறிப்போடு இந்த ஜென் வெளிச்சம் என்கிற சித்திர நாவல் துவங்குகிறது. அதற்காக இந்த புத்தக வெளியீட்டை பதிப்பகத்தாரின் ஒரு விளம்பர யுத்தி என்று எண்ணிவிட வேண்டாம். அந்த படம் வந்து இரண்டரை மாதங்களுக்கு பின்னரே இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.
இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ஜென் என்றால் என்னமோ அது ஒரு விதமான யோகா என்றே ஒரு நினைப்பிருக்கிறது. ஆனால் ஜென் என்பது என்ன? அதன் கோட்பாடுகள் என்ன என்பதைப்பற்றி பலருக்கும் உண்மையான புரிதல் இல்லை. இந்த குறையை போக்க பல புத்தகங்கள் இருந்தாலும், காமிக்ஸ் (சித்திரக்கதை) வடிவில் முதல் முறையாக ஜென் வெளிச்சம் என்று இந்த புத்தகம் கண்ணதாசன் பதிப்பகத்தில் இருந்து வந்துள்ளது.
ஜென் என்றால் என்னமோ பெரிய கம்ப சூத்திரம் என்று நினைத்து விட வேண்டாம். மிகவும் எளிமையான முறையில் ஒரு அழகான கதை(கள்) வடிவில் ஜென்னை பற்றி ஒரு பக்கத்தில் ஒரு கோட்பாடு / விளக்கம் என்று விளக்கியுள்ளார்கள். முதலில் ஒரு சாம்பிளுக்காக இதனை படியுங்கள், பின்னர் இந்த புத்தகத்தை பற்றி அலசலாம்.
என்ன, நான் சொன்னது தெளிவாகியதா? இத்துனை சுலபமாக ஒரு விஷயத்தை விளக்க சித்திரக்கதை முறையே சரி என்பதை மறுபடியும் ஒரு முறை குன்றிலிட்ட விளக்காக நிரூபித்துள்ளது ஜென் வெளிச்சம் சித்திர நாவல். அதே சமயம் பல மனோதத்துவ புரிதல்களை எளிதாக்குகிறது இந்த புத்தகம்.
இப்படி அன்றாட வாழ்வியலில் பல நுட்பமான விஷயங்களை ஜென் தத்துவங்களுடன் இணைத்து அட்டகாசமாக ஓவியத் தரத்துடன் இருக்கும் இந்த புத்தகத்தினை தமிழில் வெளிக்கொணர்ந்த திரு காந்தி கண்ணதாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த புத்தகத்தின் அட்டைப்படங்களும், முதல் பக்கமும். இந்த ஸ்கான் பக்கங்களை கிளிக் செய்தால் அவை பெரிதாகும்.
வழக்கம் போல இன்னமும் ஏராளமான ஸ்கான்கள் இருந்தாலும்கூட அவற்றை எல்லாம் இங்கே வெளியிடப்போவதில்லை. மாறாக, இந்த புத்தகத்தை பற்றி சிறிது பேசுவோம் படிப்போம்.
ஜென் என்றாலே ஆறு கத தூரம் ஓடும் என் நண்பர் இரவுக் கழுகு போன்றவர்கள் கூட இந்த புத்தகத்தின் மீது ஆர்வம் கொண்டு வாங்கி பத்திக்கொண்டு (ஜென் வெளிச்சத்தில் பத்திக்கிச்சு என்று எழுதினால் கோபித்து கொள்கிறார்கள்) ஆகையால் படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது இந்த புத்தகத்தின் சித்திரத் தரத்திற்கும், மொழியாக்கத்திற்கும் கிடைத்த வெற்றியேயாகும் என்றால் மிகையன்று. இந்த புத்தகம் வெளியான போதே இதனைப்பற்றி நண்பர் அதிஷா என்னிடம் கூறியிருந்தார் (பின்னர் அவர் இதனைப்பற்றி புதிய தலைமுறை வார இதழில் எழுதி இருந்தார் என்பது வேறு கதை).
மிகவும் தெளிவான மொழி நடையில், ஆர்வத்தினை தூண்டும் சித்திரங்களுடன் அருமையான காகிதத் தரத்தில் வெளிவந்துள்ள இந்த புத்தகம், காமிக்ஸ் சாராத அணைத்து விதமான புத்தக ரசிகர்களும் ஒரு முறையேனும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இந்த புத்தகத்தில் இருக்கும் பல கதைகளை பற்றி சக வலைப்பதிவர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அவர் உடனடியாக இந்த புத்தகத்தை என்னிடம் இருந்து வாங்கிக்கொண்டார். அவர் என்ன சொன்னார் என்றால், ஜென் தத்துவங்களையும் மீறி, குழந்தைகளுக்கு சொல்ல அருமையான கதைகள் பல இருக்கிறது-ஆகவே எனக்கு இது வேண்டும் என்றார்.
சொன்னதோடில்லாமல் என்னிடமிருந்து அந்த புத்தகத்தையும் வாங்கிக்கொண்டு சென்றே விட்டார். நானும் வேறு வழியில்லாமல் இப்போது (நாளையோ, அதற்க்கு மறுநாளோ) மறுபடியும் இந்த புத்தகத்தை வாங்கவிருக்கிறேன். ஜென் கோட்பாடுகளை சித்திர வழியில் விளக்கும் புத்தகம்தானே என்று கருதிவிடாமல் இந்த புத்தகத்தினை ஒரு முறையேனும் படிக்க நண்பர்களுக்கு ஒரு அன்பு கோரிக்கை விடுக்கிறேன். இந்த புத்தகத்தை பற்றிய அதிக விவரங்களுக்கும், தமிழகத்தில் எங்கே இந்த புத்தகங்களை வாங்கலாம் எனபதிற்க்கும் கீழ்காணும் ஸ்கான் உபயோகமாயிருக்கும்.
நாவலைகுறித்து என்னுடைய கருத்துக்கள்: ஆரம்ப சில பக்கங்கள் ஏதோ வரலாற்று, ஆவண புத்தகம் படிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கினாலும், அதற்க்கு பிறகு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் புத்தகத்தினை அமைத்திருக்கிறார்கள். இதற்காகவே இந்த புத்தக ஆசிரியரை பாராட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக ஓவியர். சமீபத்தில் இந்த அளவிற்கு என்னை ரசிக்க வைத்த புதிய ஓவியர் யாருமே இல்லை என்றே கூறலாம். ஒவ்வொரு சிறு கதையும், அதற்குண்டான கருத்துக்களும் அட்டகாசம். எனக்கு பிடித்த இரண்டு பக்கங்களை இங்கே பிரசுரித்துள்ளேன். இதனைப்போல நூற்றுக்கணக்கான பக்கங்கள் இருக்கின்றன. படித்து மகிழுங்கள்.
ஜென் வெளிச்சம் - காமிக்ஸ் வடிவில் ஒரு ஜென் கதம்பம்.
பின் குறிப்பு: இந்த மாதிரி பல புத்தகங்களை ஆங்கில மற்றும் பிற மொழிகளில் படித்து ரசித்து அவற்றை தமிழில் கொணர வேண்டும் என்ற ஆர்வத்தில் நமக்கெல்லாம் இந்த புத்தகங்களை பதிப்பித்துக்கொண்டு இருக்கும் திரு காந்தி கண்ணதாசன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
ஹையா மறுபடியும் வந்தோம்ல முதல்ல
ReplyDeleteமிக அருமையாக விளக்கியுள்ளார்கள் / விளக்கியுள்ளீர்கள் கண்டிப்பாக வாங்கி ( மறுபடியும் கவனியுங்கள் ) படித்திடுவோம் :))
ReplyDelete.
// ஜென் என்றாலே ஆறு கத தூரம் ஓடும் என் நண்பர் இரவுக் கழுகு போன்றவர்கள் கூட //
ReplyDeleteஅது யாருங்க அவரு ( இரவு கழுகு )
அவரோட தலைய போட்டு பலபேரு உருட்டுறீங்க ;-)
.
சிபி,
Deleteஇரவுக் கழுகு என்றால் டெக்ஸ் வில்லர் தானே?
ஜோக்ஸ் அபார்ட், நம்முடைய நண்பர் தான் இரவுக் கழுகு. இவரை நீங்களும் ஒரு முறை நம்ம 2011 சேலம் காமிக்ஸ் மாநாட்டில் சந்தித்து உள்ளீர்கள் (என்றே நினைக்கிறேன்).
ஒரு அறிமுக பதிவிற்கு நன்றி. இதற்க்கு முன்பாக மர்ஜானே சத்ரபியின் பெர்சிபோளிஸ் நாவல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதே? அதனை பற்றியும் குறிப்பிடலாமே?
ReplyDeleteவே.மணிமாறன்.
நண்பர் மணிமாறன்,
Deleteஏற்கனவே இந்தப் பதிவில் மர்ஜானே சத்ரபியின் புத்தகங்கள் குறித்து குறிப்பிட்டு இருக்கிறோம்.
நண்பர் விஸ்வா,
ReplyDeleteதவறாக எடுத்துகொள்ளவேண்டாம், எனக்கு பழைய முத்து, லயன், திகில், மினிலயன் புத்தகங்கள் வேண்டும். உங்களால் முடிந்தால் ஏற்பாடு செய்து தரமுடியுமா (யாரிடமிருந்தாலும்). கூடுதல் விலை தரவும் தயாராக உள்ளேன். உங்களுக்கு நேரமிருந்தால் மெயில் பண்ணுங்கள். என்னுடைய mail id : pkarthihr@gmail.com
நன்றி
கார்த்திகேயன் சார்,
Deleteஇந்த கமென்ட்டை ஏற்கனவே பலர் படித்து விட்டார்கள். ஆகையால் அவர்களிடம் இருந்து உங்களுக்கு மெயில் வரும். கவலையே வேண்டாம்.
மிக மிக நல்ல முயற்சி முயற்சி ஜி அதான் தலை ஸ்டைல்
ReplyDeleteதமிழில் இது போன்ற நல்ல முயற்சிகள் நடப்பதை நம் போன்ற வாசகர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகள் வெற்றிபெற்று, தொடர்ந்து நல்ல கதைகள் நமக்கு கிடைக்கும். கிழக்கு பதிப்பகம் பத்ரி கூட இது போல கதைகளை பதிப்பிக்க போவதாக சொல்லி இருந்தார்.
ReplyDeleteமிகவும் அருமையான ஒரு அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteஇதைவிட சிறப்பாக இந்த புத்தகத்தை விளம்பரப்படுத்த இயலாது.
தொடர்ந்து இதே மாதிரி நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள், அவை காமிக்ஸ் ஆக இல்லையென்றாலும் பரவாயில்லை.
இந்த கண்ணதாசன் பதிப்பகமே கன்பூசியஸ் பற்றி ஒரு புத்தகம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்டார்கள். அது உங்களிடம் இருக்கிறதா?
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in