காமிரேட்ஸ்,
சமீப காலமாக தமிழ் காமிக்ஸ் உலகில் நடைபெற்று வரும் நல்ல மாற்றங்கள் வரப்போகும் காலங்களை காமிக்ஸ் உலகின் வசந்த காலமாக மற்றப்போவதாகவே தெரிகிறது. சந்தா கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் அடிக்கடி வீடு மாறிக்கொண்டு இருப்பவர்கள், வாடகை வீட்டில் இருப்பவர்கள், சந்தா கட்ட முடியாதவர்கள் என்று பலரும் இருக்கின்றனர். இவர்களுக்கு சென்னையில் நம்முடைய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்காதது ஒரு பெரும் குறையாகவே இருந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்வதைப்போல சென்னையில் இனிமேல் அபீஷியலாகவே நமது லயன். முத்து மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்கள் இந்த டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக சாலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
டிஸ்கவரி புக் பேலஸ்: இந்த நிறுவனம் நண்பர் திரு வேடியப்பன் அவர்களால் முழுக்க முழுக்க புத்தக விற்பனையை மையமாக வைத்து கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் துவங்கப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கே.கே. நகர் மேற்கில் (K K Nagar West. Near puthuchery guest house) அமைந்துள்ளது. சென்னையின் எந்த இட்த்திலிருந்தும் போக்குவரத்து சிரமமில்லாமல் இங்கு வரலாம்.
இதுவரை சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் புத்தகங்களை தொகுத்து விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.. தொடர்ந்து தமிழில் கிடைக்கக் கூடிய அனைத்து புத்தகங்களையும் டிஸ்கவரி என்ற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து அதை தமிழ் கூறு நல்லுலகம் எங்கும் கொண்டு சேர்க்கும் விதமாக Online விற்பனை சேவையும் துவங்கப் பட்டுள்ளது.ஓராண்டு முடியும் நிலையில் டிஸ்கவரி புக் பேலஸ்-ல் இதுவரை 35 புத்தக வெளியீட்டு விழாவும், ஐந்து புத்தக விமர்சன கூட்டங்களும் நடைபெற்றுள்ளது. தமிழில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் முக்கிய சந்திப்பு முனையாக டிஸ்கவரி புக் பேலஸ் விளங்குகிறது.
Discovery Book Palace West KK nagar Chennai Photo 04 Outside View | Discovery Book Palace West KK nagar Chennai Photo 05 Outside View |
இப்படி தமிழ் இலக்கிய மற்றும் இலக்கியம் சாராத இலக்கிய புத்தகங்களையும் விற்பனை செய்து வரும் டிஸ்கவரி புக் பேலஸ் இந்த மாதம் முதல் சிவகாசியில் இருந்து வரும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினரின் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களை விற்பனை செய்யும் விற்பனையகமாகவும் புது உருப்பெற்றுள்ளது.பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினரின் லேட்டஸ்ட் சூப்பர்ஹிட் வெளியீடுகள் இங்கே விற்பனைக்கு இருப்பதை நீங்கள் காணலாம்.
- லயன் காமிக்ஸ் - கம்பேக் ஸ்பெஷல் (Rs 100/- Special Issue)
- முத்து காமிக்ஸ் - விண்ணில் ஒரு குள்ளநரி (Rs 10/-)
- காமிக்ஸ் கிளாசிக்ஸ் - கொலைகாரக் கலைஞன் (Rs 10/-)
Discovery Book Palace West KK Nagar Chennai Photo 03 Comics On Display | Discovery Book Palace West KK Nagar Chennai Photo 02 On Display |
இது தவிர இனிமேல் விற்பனைக்கு வரவிருக்கும் புத்தம் புதிய காமிக்ஸ் இதழ்கள்:
ஏப்ரல் மாதம்
- காமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு
- லயன் காமிக்ஸ் - சாத்தானின் தூதன் டாக்டர் செவன்
மே மாதம்
- லயன் காமிக்ஸ் - சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் (கோடை மலர்) நூறு ருபாய் புத்தகம்
- காமிக்ஸ் கிளாசிக்ஸ் - திகில் காமிக்ஸ் ஸ்பெஷல் (முதல் மூன்று பெரிய சைஸ் புத்தகங்கள்)
ஜூன் மாதம்
- முத்து காமிக்ஸ் - லார்கோ வின்ச் - முதல் பாகம் - முழு வண்ணத்தில்
- முத்து காமிக்ஸ் - லார்கோ வின்ச் - இரண்டாம் பாகம் - முழு வண்ணத்தில்
டிஸ்கவரி புக் பேலஸ் - முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்: சென்னைக்கு அருகாமையில் இருக்கும் வாசகர்கள் இங்கே வந்து நேரிடையாக புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.டிஸ்கவரி புக் பேலஸ் முகவரி:
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை - 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
தொலைபேசி எண்: 044 – 6515 7525
மின்னஞ்சல் முகவரி: discoverybookpalace@gmail.com
டிஸ்கவரி புத்தக நிலையம் செல்ல மேப்: A = Discovery Book Palace
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
விஷ்வா ஜி!
ReplyDeleteOnline விற்பனை சேவை வசதி உள்ளதால் சென்னையில் உள்ள காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி ம் அனைவருக்கும் இது ஒரு நல்ல செய்தியே....
Periya book stalkalil namathu comics virpathu mika nalla muyarchi!
ReplyDeleteithu pol anaithu periya oorkalilum oru book stal pidithu antha stal addresskalai lion muthuvil pottal anaithu vasakarkalum payan peruvar...
தகவலுக்கு நன்றி. பழைய காமிக்ஸ் புத்தகங்கள் இங்கே கிடைக்குமா?
ReplyDeleteவிஸ்வா!
ReplyDeleteசென்னைவாழ் மக்களுக்கு நல்லதொரு தகவல். இதே போல் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு விற்பனை நிலையம் கிடைக்கப்பெற்றால் காமிக்ஸ் தொடர்பை நண்பர்கள் இழக்காமல் இருக்கலாம்.
அருமை. இனிமேல் இன்னும் ஒரு பிரதி வாங்கி சில/பலருக்கும் காமிக்ஸ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட நல்ல / எளிதான வாய்ப்பு.
ReplyDeleteநாம் அனைவரும் ஏன் சேலம் டாக்டர் சுந்தர் அவர்கள் சொன்னதுபோல புத்தகங்களையோ அல்லது சந்தாவையோ நம்முடைய நண்பர்களுக்கு பரிசளிக்க கூடாது?
ReplyDeleteபாபு.
This comment has been removed by the author.
ReplyDeleteதெய்வமே இதுக்காக எத்தனை நாள் நாள் காத்திருந்தேன் தவம் இருந்தேன் தெரியுமா மிக்க மிக்க நன்றி கோடி நன்றிகள் , மேலும் அங்கேயே நான் சுப்ஸ்க்ரிபே செய்து கொள்ளலாமா ,தேங்க்ஸ் King Viswa.
ReplyDeleteஏப்ரல் மாதம்
ReplyDeleteகாமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு
லயன் காமிக்ஸ் - சாத்தானின் தூதன் டாக்டர் செவன்
மே மாதம்
லயன் காமிக்ஸ் - சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் (கோடை மலர்) நூறு ருபாய் புத்தகம்
காமிக்ஸ் கிளாசிக்ஸ் - திகில் காமிக்ஸ் ஸ்பெஷல் (முதல் மூன்று பெரிய சைஸ் புத்தகங்கள்)
ஜூன் மாதம்
முத்து காமிக்ஸ் - லார்கோ வின்ச் - முதல் பாகம் - முழு வண்ணத்தில்
முத்து காமிக்ஸ் - லார்கோ வின்ச் - இரண்டாம் பாகம் - முழு வண்ணத்தில்
super super love you
flipkart, snapdeal. jabong pol cash on delivery seiyavum
ReplyDeletethanks ji naan miga arugamaiyilthan irukkiren kattayam vist adikkiren mikka nanri
ReplyDeleteநன்றி விஸ்வா, இன்றே புதையல்வேட்டைக்கு கிளம்பிட்டேன்! :)
ReplyDeleteஇந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நான் சென்னைக்கு வருகிறேன். கண்டிப்பாக இந்த டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு சென்றுவிடுவேன். எனக்கு தலை வாங்கி வேண்டும்.
ReplyDeleteஎனக்கு தலை வாங்கி வேண்டும்.
எனக்கு தலை வாங்கி வேண்டும்.
எனக்கு தலை வாங்கி வேண்டும்.
எனக்கு தலை வாங்கி வேண்டும்.
எனக்கு தலை வாங்கி வேண்டும்.
எனக்கு தலை வாங்கி வேண்டும்.
எனக்கு தலை வாங்கி வேண்டும்.
எனக்கு தலை வாங்கி வேண்டும்.
எனக்கு தலை வாங்கி வேண்டும்.
இதைப்போலவே ஒவ்வொரு ஊரிலும் ஒரு காமிக்ஸ் விற்பனைக்கு கடை இருந்தால் நன்றாகவே இருக்கும்.
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
காமிக்ஸ் வாசகர்கள் & விஷ்வா அவர்களுக்கு வணக்கம்! கடந்த ஜனவரிக்கு பின்பு வந்த அனைத்து புத்தகங்களோடு இன்றே கிடைக்கப் பெற்ற “சூப்பர் ஹீரோ ஸ்பெசல்” மற்றும் கேபடன் டைகரின் “தங்கக் கல்லறை” இன்றுமுதல் கிடைக்கும் .
ReplyDeleteவேடியப்பன் சார்,
Deleteநம்ம எடிட்டரின் ப்ளாக் இங்கே இருக்கிறது அந்த http://lion-muthucomics.blogspot.in/ உங்களது நியூஸ் அப்டேட்டப் படும்.