Pages

Monday, April 02, 2012

14 தலை வாங்கிக் குரங்கு - ஒரு No Comments பதிவு

காமிரேட்ஸ்,

லேட்டஸ்ட் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழாகிய தலை வாங்கி குரங்கு நம் எல்லோரின் மனதையும் கொய்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் இந்த ஒரு புதிய பதிவு. ஆரம்ப காலத்திலே, சுதந்திரத்துக்கு முன்னாலே,  நம்முடைய முத்து விசிறி அவர்கள் ரெகுலர் ஆக பதிவிட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், இவ்விதமான நோ கமென்ட்ஸ் பதிவுகளை அடிக்கடி இட்டுக்கொண்டு இருந்தார். கால ஓட்டத்தில் இத்தாலி மொழியை தீவிரமாக பயின்று படிக்க மட்டுமின்றி பேசவும் கற்றுக்கொண்ட அவருக்கு தமிழ் காமிக்ஸ் பற்றியும் தமிழ் காமிக்ஸ் பதிவுகளை பற்றியும் யாரும் நினைவூட தவறியதால் அவர் பதிவுகளை இடுவதேயில்லை. பயங்கரவாதி டாக்டர் செவனும் தும்ப பூ தலையில் சொம்ப வச்ச மாதிரி பல விஷயங்களில் ஈடுபாட்டுடன் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதால், வேறு வழியின்றி நானே இந்த மாதிரி நோ கமென்ட்ஸ் பதிவுகளில் இறங்கி விட்டேன்.

இந்த தலை வாங்கி குரங்கு பற்றிய பதிவில் எடிட்டர் அவர்கள் முதலில் முழு நீல வண்ணத்தில் இருந்த இந்த அட்டையை வெளியிட்டு இருந்தார்.

Comics Classics Issue No 27 Dated Mar 2012 Tex Willer Thalai Vangi Kurangu Alternate Cover 01
Comics Classics Issue No 27 Dated Mar 2012 Tex Willer Thalai Vangi Kurangu Alternate Cover 01

ஆனால் பின்னர் மனம் மாறி முழு ஆரஞ்சு வண்ணத்தில் இந்த அட்டையை வெளியிட்டு விட்டார்.

Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Cover Image_thumb
Comics Classics Issue No 27 Dated March 2012 Thalai Vaangi Kurangu Tex Willer Story Reprint Cover Image_thumb[1]

இதற்கிடையில் வேறு சில அட்டைப்படங்களும் பரிசீலனையில் இருந்தன. எடிட்டர் அவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார் என்று (நாங்களாகவே சுயமாக சிந்தித்து) இந்த மாற்று அட்டைகளை இங்கே வெளியிடுகிறோம்.

Comics Classics Issue No 27 Dated Mar 2012 Tex Willer Thalai Vangi Kurangu Alternate Cover 02
Comics Classics Issue No 27 Dated Mar 2012 Tex Willer Thalai Vangi Kurangu Alternate Cover 02

இதனைதவிர வேறு சில அட்டைப்படங்களும் டிசைன் செய்யப்பட்டன. அவற்றை ஸ்கான் செய்யும் வாய்ப்பு இல்லாததால், அவற்றின் புகைப்படங்கள் மட்டும் இங்கே:

Comics Classics Issue No 27 Dated Mar 2012 Tex Willer Thalai Vangi Kurangu Alternate Cover Options 03
Comics Classics Issue No 27 Dated Mar 2012 Tex Willer Thalai Vangi Kurangu Alternate Cover Options 01
Comics Classics Issue No 27 Dated Mar 2012 Tex Willer Thalai Vangi Kurangu Alternate Cover Options 02

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சில சிறப்பு பதிவுகள் வரும் (என்று நினைக்கிறேன்). அதில் முதலாவதாக வரும் பதிவு ஜேம்ஸ் பான்ட் சம்பந்தப்பட்டது, அடுத்து வரும் இரண்டு பதிவுகள் சமீபத்தில் தமிழில் வந்துள்ள இரண்டு ஃகிராபிக் நாவல்களை பற்றியதாக இருக்கும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa

14 comments:

  1. mobilil tamil koncham araychi thevai nanbargale nam nanbarathu pathicai padikka koduthu vaikalai enakku kalai padithu vittu varren

    ReplyDelete
  2. I Also like the second unused blue cover which has got a full page original artwork.

    ReplyDelete
  3. அறிய தகவல்களை அள்ளிவீசும் "காமிக்ஸ் டிக்சனரி விஸ்வா" அவர்களுக்கு நன்றி.

    அதுசரி, உங்கள் தொப்பையையும் சேர்த்து படம் புடிச்சிடிங்கபோல..:)

    ReplyDelete
  4. இந்த புகைப்படங்களை எடுத்தது மட்டும் நான். அந்த அட்டைப்படங்களை பிடித்துக்கொண்டு இருப்பது நமது காமிக்ஸ் நண்பர்கள்.

    ReplyDelete
  5. நண்பர்களை உசுப்பேற்றி விட்டு உள்ளீர்கள் கண்டிப்பா அவங்க பதிவுகளை இந்த வாரமே எதிர்பார்க்கலாம்தனே?

    ReplyDelete
  6. ஹ்ம்ம்ம் கொடுத்து வைத்தவர் நீங்கள்
    நாங்கள் இதை எல்லாம் இப்படித்தான் பாத்துக்கணும்
    நடத்துங்க நடத்துங்க ;-)
    .

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவு (ஜேம்ஸ் பாண்ட் குறித்தது) இன்னும் அரை மணி நேரத்தில்.

      Delete
  7. போன பதிவுல நான் சொன்னத வாபஸ் வாங்கிக்கிறேன்

    சொன்ன மாதிரி பதிவ போட்டு தாக்கிவிட்டீர்கள்

    தொடருங்கள் உங்கள் சேவைகளை ;-)
    .

    ReplyDelete
  8. டெக்ஸ்வில்லர், குரங்கினை சுடும், முழு அளவிலான படம் அருமை. இதையே பின் அட்டையாக வெளியிட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. God Moves in Mysterious ways,But the End Result is always Great என்பதுபோல, நமது எடிட்டரின் பல முடிவுகளும் இருக்கும். ஆனால் முடிவுகள் அட்டகாசமாகவே இருக்கும்.

      Delete
  9. மூன்றாவது அட்டை சூப்பர். அதையே வெளியிட்டு இருக்கலாம்.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails