Pages

Showing posts with label டாக்டர் நோ. Show all posts
Showing posts with label டாக்டர் நோ. Show all posts

Tuesday, April 03, 2012

18 TCU Presents. . . 06: டாக்டர் நோ நாவல் - இயன் பிளெம்மிங்'கின் ஜேம்ஸ் பாண்ட் 007 - தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் – Ian Fleming’s Dr No Novel in Tamil

காமிரேட்ஸ்,
நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பாக இடப்படவேண்டிய இந்த பதிவு, என்னுடைய கடுமையான பணிச்சுமை காரணமாக (சோம்பலுக்கு இப்படியும் ஒரு மாற்றுப் பெயர்) இன்றுதான் வலையேறுகிறது. சென்ற ஆண்டு இந்த பதிவில் முகமூடி வீரர் வேதாளர் (ராணி காமிக்ஸ் ரசிகர்களுக்கு - மாயாவி) அவர்களது சமீபத்திய கதைகள் தமிழில் வெளியாக இருப்பதாக அறிவித்து இருந்தது தமிழ் காமிக்ஸ் உலகின்தொடர் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த முயற்சியில் இறங்கியவர் எங்கள் நண்பரும் பதிப்புலக ஆசானுமாகிய திரு காந்தி கண்ணதாசன் அவர்களே. கண்ணதாசன் பதிப்பகம் மூலமாக இந்த கதைகளை தமிழில் வெளியிட சில முயற்சிகளை மேற்கொண்டார் (அவை என்ன ஆயிற்று, ஏன் தடைபட்டது என்பது ஒரு மழைக்கால மாலைநேரப்பதிவில் விலாவரியாக விவாதிக்கப்படும்). இப்போதைக்கு அதை மறந்துவிட்டு இந்த பதிவுக்குள் நுழைவோம்.

Publisher Gandhi Kannadasan With Dr No Tamil Translated Bookகண்ணதாசன் பதிப்பகம்: ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒரு முத்திரை உண்டு. அதாவது அந்த பதிப்பகம் எந்தவிதமான புத்தகங்கள் வெளியிடும் என்பதை வாசகர்கள் ஒரு ரசனையோடு தெரிந்து வைத்திருப்பார்கள். அவ்விதத்தில் கண்ணதாசன் பதிப்பகத்தின் முகவரி மொழிமாற்று புத்தகங்களே. உலகின் பல சிறந்த புத்தகங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து அற்புதமான பேக்கிங்கில் விற்பனை செய்கிறார் திரு காந்தி கண்ணதாசன் அவர்கள்.

அது ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ஆக இருக்கட்டும், அல்லது அகியோ  மோரிட்டாவாக இருக்கட்டும் - அவர்களது எழுத்து சுந்தர தமிழினில் நாம் படிக்க ஏதுவாக பதிப்பிப்பவர் இவர். இவரைப்பற்றி புத்தகம் படிக்கும் நண்பர்களுக்கு சொல்வது என்பது விளம்பரத்திற்கு விளம்பரம் செய்வது போல. ஆகையால் இத்துடன் முடித்துக்கொண்டு இந்த புத்தகத்தை பற்றி பார்ப்போம்.  சென்ற ஆண்டு சென்னை புத்தக திருவிழாவிற்கு பிறகு காந்தி கண்ணதாசன் அவர்களை சந்திக்காமல் இருந்த நாம், ஒரு நாள் திடீர் ஞானோதயம் பெற்று சென்னைDr.No தியாகராய நகரில் இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்திற்கு சென்றபோதுதான் இந்த டாக்டர் நோ அவர்களை மறுபடியும் (தமிழில்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் இந்த நாவல் விற்பனைக்கு வந்ததும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் (என்றே நினைக்கிறேன்).

KannaDasan Pathippagam – Ian Fleming’s Dr No Novel - Tamil Translated Novel Cover Front KannaDasan Pathippagam – Ian Fleming’s Dr No Novel - Tamil Translated Novel Back Cover KannaDasan Pathippagam – Ian Fleming’s Dr No Novel - Tamil Translated Novel Credita Page
KannaDasan Pathippagam Dr No Tamil Translated Novel Cover Front KannaDasan Pathippagam Dr No Tamil Translated Novel Cover Back KannaDasan Pathippagam Dr No Tamil Translated Novel Credits Page

தமிழில் நாவல் படிப்பதையும் ஹார்ட் ரீடிங்'ஐயும் நான் விட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. இந்த சூழலில் 432 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை ஒரே இரவில் படித்து முடித்தேன் என்பது என்னாலேயே நம்ப முடியாத ஒரு விஷயம். ஆங்கிலத்தில் இயன் பிளெம்மிங் எழுதிய நாவல் எதனையும் படித்ததில்லை. ஆனால் இந்த தமிழாக்கத்தை படித்தவுடன் ஆங்கல நாவலையும் படிக்க வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது.

ஜேம்ஸ் பாண்ட் நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் அவர்களைப்பற்றிய இந்த ஒரு குறிப்பு மிகவும் அருமையாகவும், ரத்தினசுருக்கமாகவும் எழுதப்பட்டு இருக்கிறது. இதில் சமீபத்திய ஜேம்ஸ் பாண்ட் நாவலாசிரியர் ஜேம்ஸ் கார்ட்னர் அவர்களைப்பற்றி எதுவும் குறிப்பிடாதது வருத்தமளிக்கும் ஒரு விஷயம்.

KannaDasan Pathippagam – Ian Fleming’s Dr No Novel - Tamil Translated Novel Intro On Ian Fleming bu The Editor
KannaDasan Pathippagam Dr No Tamil Translated Novel Intro On Ian Flemming

இந்த அருமையான நாவலுக்கு முன்னுரையாக என்ன இருக்கும் என்று புரட்டி பார்த்ததில் ஒரு இனிய அதிர்ச்சி. சைமன் விண்டர் அவர்கள் எழுதிய முன்னுரையை அழகுத்தமிழில் படிப்பது அதிர்ச்சிதானே? சைமன் விண்டர் பற்றி தெரியாதவர்கள் அந்த சுட்டியை கிளிக்கி அவர் எழுகிய ஒரு ஜேம்ஸ் பாண்ட் குறித்த ஆய்வு மற்றும் ஜாலியான விமர்சன புத்தகத்தை வாங்கி ஒரு முறை படித்து விடவும். ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் சில விஷயங்களை லகான் பிடித்து அருமையாக தொகுக்கும் வல்லமை படைத்தவர் இவர்.

South Indian KannaDasan Publiations – Ian Fleming’s Dr No Novel - Tamil Translated Novel Foreword By Simon Winder
KannaDasan Pathippagam Dr No Tamil Translated Novel Foreword By Simon Winter

தமிழில் நாவல் எப்படி மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்றறிய துடிக்கும் ரசிகர்களுக்காக ஒரு சாம்பிள் பக்கம். இதுவே அதிகம், இதற்க்கு மேலும் ஸ்கான்'களை கேட்க வேண்டாம். நாவலை விலைகொடுத்து வாங்கி படித்து விடவும்.

South Indian KannaDasan Publications– Ian Fleming's Dr No Novel - Tamil Translated Novel - 1st Page Sample Page
KannaDasan Pathippagam Dr No Tamil Translated Novel 1st Page

நாவலைகுறித்து என்னுடைய கருத்துக்கள்: இந்த கதையை பல நூறு முறை காமிக்ஸ் வடிவில் தமிழில் படித்து இருந்ததாலும், டாக்டர் நோ படத்தை எண்ணிய பல்திற வட்டு தேயும் வரை பார்த்திருந்ததாலும் கதையோட்டம் சுவாரஸ்யமாகவே இருந்தது. மொழியாக்கம் சில இடங்களில் தொய்வு தட்டினாலும் எங்கேயும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனால் சில சொற்களை ஆங்கிலத்திலேயே வழங்கி இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குவதை தவிர்க்க இயலவில்லை. குறிப்பாக ஆக்டோபஸ் என்பதை அசுர மெல்லுடலி என்றெல்லாம் மொழி பெயர்க்கத்தான் வேண்டுமா? அப்படியே மொழி மாற்றம் செய்தாலும், இரண்டாவது தடவை அந்த சொற்தொடரை பிரயோகிக்காமல் ஆங்கிலத்தில் வழங்கியிருந்தாலும் தவறில்லையே? அதுவுமில்லாமல் நான் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் நாவலை படிப்பதாலும் எனக்கு இந்த சொல்வழக்குகள் அன்னியமாக பட்டிருக்கலாம். இந்த மொழி பெயர்ப்பாளரின் மற்ற புத்தகங்களையோ அல்லது இந்த தொடரின் அடுத்த புத்தகத்தையோ படித்தால் தெரிந்து விடும்.

டாக்டர் நோ - கண்டிப்பாக ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் ஒரு முறை படிக்கவேண்டிய நாவல்.

இந்த நாவல் எங்கே கிடைக்கு, என்ன விலை என்பதெல்லாம் மேலே உள்ள ஸ்கான் செய்யப்பட்ட  கிரெடிட் பக்கங்களிலேயே இருக்கிறது. மறவாமல் வாங்கி விடுங்கள். அடுத்து வரும் இரண்டு பதிவுகள் சமீபத்தில் தமிழில் வந்துள்ள இரண்டு ஃகிராபிக் நாவல்களை பற்றியதாக இருக்கும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa

பின் குறிப்பு: தமிழில் வந்த டாக்டர் நோ காமிக்ஸ் கதையைப்பற்றி தெரிந்து கொள்ள பயங்கரவாதி டாக்டர் செவனின் இந்த பதிவை படிக்கவும். அமெரிக்காவில் டாக்டர் நோ படமாக வந்தபோது வந்த சினிமா காமிக்ஸை படிக்க இங்கே செல்லவும்.

Related Posts with Thumbnails