காமிரேட்ஸ்,
லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு எஸ்.விஜயன் அவர்கள் தங்களுடைய சமீப பதிவுகளில் ரீபிரின்ட்டுகள் குறித்து எழுதி வருகிறார். அதில் முதலாவதாக அவர் வெளியிடப்போகும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ் "தலை வாங்கி குரங்கு". (எடிட்டரின் பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்). அந்த பதிவினை பார்த்தவுடன் அந்த இதழைப்பற்றிய நினைவுகள் என்னுடைய நெஞ்சில் அப்படியே ஃபிளாஷ்பேக்கில் ஓட துவங்கியது. "ஆட்டோகிராப்" சேரன் போல சைக்கிளில் எல்லாம் செல்ல முடியாதாகையால், இந்த பதிவின் மூலம் அந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ரொம்ப மொக்கையாக இருந்தால் இப்போதே ஃபுல்-ஸ்டாப் போட்டுவிட்டு வேறு பதிவு பக்கம் சென்று விடுங்கள்.
Circa 1990.முதன்முறையாக நாங்கள் சென்னைக்கு குடிபெயர்ந்து சில மாதங்களே ஆனதொரு தருணம். அம்பத்தூரில் நாங்கள் ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்தோம். அங்கேயே நானும் அண்ணனும் அண்ணரும் (மரியாதை, மரியாதை) பள்ளியில் படிக்க ஆரம்பித்தோம். அப்போது அம்பத்தூர் பஜார் வீதியில் (சந்தை வீதியில்) டெமரிஸ் என்றொரு பல்பொருள் கடை இருந்தது. அந்த கடையில் இருந்து பத்து கடை தள்ளி ஒரு பழைய புத்தக கடை இருந்தது(கவனியுங்கள்-இறந்த காலம்). அதற்க்கு முந்தைய வருடங்களில் விடுமுறைக்காலங்களில் நாங்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் அந்த கடைக்கு செல்வதுண்டு.அங்கேதான் எனக்கு முதன் முதலில் முத்து காமிக்ஸ் (நடுநிசிக்கள்வன்), லயன் காமிக்ஸ் (கொலைப்படை), ராணி காமிக்ஸ் (மர்ம முகமூடி) போன்றவை அறிமுகம் ஆனது. சில நாட்களில் நாங்கள் ஆவடி விமானப்பயிற்சி நிலைய குடியிருப்புக்கு இடம்பெயர்ந்தோம். அதனால் அம்பத்தூரில் இருந்த பள்ளிக்கு வர தினமும் இரயிலில் பயணிக்க வேண்டியிருந்தது. பள்ளி முடிந்தவுடன் எங்கள் இரெயில் வர நாற்பது நமிடங்கள் வரை நேரமிருந்ததால், மாலையில் இரயில் நிலையம் செல்லும்போதெல்லாம் இந்த கடைக்கு ரெகுலர் ஆக வர ஆரம்பித்தேன். பல காமிக்ஸ் புத்தகங்கள் இங்கேதான் முதல் அறிமுகம் ஆனது (பாதாள போராட்டம், யார் அந்த ஜூனியர் ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி ரீபிரின்ட்,ஜானி இன் லண்டன் ரீபிரின்ட், ராணி காமிக்ஸ் இரும்பு மனிதன் என்று பல புத்தகங்கள் அட்டை இல்லாமல் முதல் பக்கங்கள் இல்லாமல் வாங்கி இருக்கிறேன்).
அந்த பழைய புத்தக கடைக்கு அடுத்த கதவு (மற்றும் ஜன்னல்) எப்போதும் பூட்டியே இருக்கும். ஒரு முறை அந்த வீட்டின் ஜன்னல் திறந்து இருப்பதை பார்த்தேன். ஆர்வம் மேலிட உள்ளே எட்டிப்பார்த்தால், அங்கே, வரிசையாக அடுக்கடுக்காய் ஏகப்பட்ட புத்தகங்கள் சீராக செல்ப்ஃகளில் இருந்தன. விசாரிக்கையில், அது மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரை மட்டுமே இயங்கும் ஒரு நூலகம் என்று சொன்னார்கள். ஆவடி விமானபயிற்சி குடியிருப்புக்கென்றே தனி இரெயில் ஒரு மணிக்கு ஒரு முறைதான் என்ற frequencyயில் இயங்கிக்கொண்டு இருந்தது. எனவே நாலே முக்கால் இரயிலை விட்டால் அதற்க்கு பிறகு ஒன்றரை மணி நேரம் இரயில் நிலையத்தில் தேவுடு காக்க வேண்டியதுதான். சிறுவயது முதலே கண்டிப்புக்கு பெயர்போன எங்க வீட்டில் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் லேட்டாக போனால் அதற்க்கு கிடைக்கும் வரவேர்ப்பே தனி. இருந்தாலும் புத்தகங்கள் மேலிருந்த காதல் என்னை காத்திருக்க செய்தது..
அவரிடம் சென்று இந்த வாடகை நூலகத்தில் மெம்பர் ஆக வேண்டுமென்று சொன்னேன். நாற்பது ருபாய் முன்பணம் கட்டவேண்டும் என்று சொன்னார். இருபது வருடங்களுக்கு முன்பாக பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் ஒரு மாணவனுக்கு நாற்பது ருபாய் என்பது ஒரு கணிசமான தொகை. சரி, விட்டு விடலாம் என்று திரும்பும்போது டேபிள் மீது பைண்டிங் செய்யப்பட்ட நிலையில் இருந்தது ஒரு காமிக்ஸ் புத்தகம்: தலைவாங்கிக் குரங்கு.
அந்த அட்டைப்படமும், அதன் தலைப்பும் என்னை மெஸ்மரிசம் செய்து விட்டது என்றே சொல்லலாம். அங்கிருந்து நகர மனசே வரவில்லை. என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்று பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்த காமிக்ஸ் புத்தகங்களை பார்க்கையில் அது வரையில் நான் கேள்விப்பட்டே இராத பலதரப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தன. நாளைக்கு பணத்துடன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். வீட்டிற்கு சென்று சேர்ந்தபோது மணி ஏழேகால்.வாசலிலேயே அம்மா காத்திருந்தார். லேட்டாக வந்ததிற்கு ஒரு ஊனமுற்ற சாக்கு சொல்லிவிட்டு தப்பித்தேன். பின்னர் அப்பாவிடம் அந்த நூலகம் பற்றி சொல்ல, அவர் மறுத்துவிட்டார். அதற்க்கு பிறகு இரண்டு நாட்கள் சரிவர சாப்பிடாமல் இருந்து, பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்து ஒருவழியாக பகீரத பிரத்யணம் செய்து நாற்பது ரூபாயை வாங்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கதை நேர்கோட்டில் பயணிக்கும் தோட்டா போல மிகவும் வேகமாக நகர்ந்ததால் இரயிலில் செல்லும்போது படித்து முடித்துவிட்டேன். இந்த கதையை படித்து விட்டு இப்போது யோசிக்கும்போது மற்றைய டெக்ஸ் வில்லர் கதைகளில் இருந்து இது எவ்வளவு மாறுபட்டது என்பது தெரிகிறது. அவருடைய நண்பர் குழாமோ,துப்பறியும் தேவையோ இல்லாமல் ஒரு வித்யாசமான கதையாக தெரிகிறது. வழிதவறி வேறு பாதையில் செல்லும் டெக்ஸ், ஒரு பயங்கர மிருகத்தின் குரலை கேட்கிறார். ஊர் மக்கள் அஞ்சி நடுங்கும் ஒரு மனித குரங்கு ரத்தவெறி பிடித்து மனிதவேட்டை ஆடுவதை தெரிந்து கொள்ளும் அவர், அந்த ஆட்கொல்லி மனிதக்குரங்கை வேட்டையாட ஆயத்தமாகிறார்.அதற்கிடையில் டெக்ஸ் வில்லரை தங்க வேட்டையாளர் என்று தவறாக கருதும் ஒரு கும்பல், அவருக்கு இடமளிக்கும் ஒரு பரிவான ஆனால் வித்யாசமான ஒரு குடும்பம் என்று பல தளங்களில் பயணிக்கும் இந்த கதை முடியும்போது உங்கள் கண்களில் ஓரிரு முறையாவது கண்ணீர் வந்து எட்டிப்பார்த்திருக்கும். இயக்குனர் ஷங்கருக்கு முன்பே ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி என்பதனை என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்து காட்டியவர் டெக்ஸ் வில்லர்.
மேலுள்ள இத்தாலி மொழி அட்டைப்படத்தில் இருக்கும் காட்சி கதையின் ஒரு ஹை லைட் ஆகும். மந்தக்குரங்கை வேட்டையாட செல்லும் டெக்ஸ், தண்ணீரில் விழுந்து விடுகிறார். திடீரென்று அவர் எதிரே அந்த தலை வாங்கி குரங்கு நிற்க, அதனை எதிர்கொள்ள ஆயத்தமாகும் டெக்ஸின் துப்பாக்கி தண்ணீரில் விழுந்ததால் இயங்க மறுக்கிறது. அடுத்தது என்ன? என்று விறுவிறுப்பில் வேகமாக படித்த பக்கங்கள் இவை. இன்னும் ஒரு வாரத்தில் மறு பதிப்பில் வர இருப்பதால் இவற்றிற்கும் மேலே வேறெந்த விஷயங்களையும் சொல்லி கதையின் மேல் புதிய வாசகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை குறைக்க விரும்ப வில்லை.
அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சில சிறப்பு பதிவுகள் வரும் (என்று நினைக்கிறேன்). அதில் முதலாவதாக வரும் பதிவு ஜேம்ஸ் பான்ட் சம்பந்தப்பட்டது, அடுத்து வரும் இரண்டு பதிவுகள் சமீபத்தில் தமிழில் வந்துள்ள இரண்டு ஃகிராபிக் நாவல்களை பற்றியதாக இருக்கும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
அப்பாடா ரொம்ப நாட்களுக்கு பிறகு மீ தி பர்ஸ்டு :))
ReplyDelete// அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சில சிறப்பு பதிவுகள் வரும் (என்று நினைக்கிறேன்). அதில் முதலாவதாக வரும் பதிவு ஜேம்ஸ் பான்ட் சம்பந்தப்பட்டது, அடுத்து வரும் இரண்டு பதிவுகள் சமீபத்தில் தமிழில் வந்துள்ள இரண்டு ஃகிராபிக் நாவல்களை பற்றியதாக இருக்கும். //
ReplyDeleteஆவலுடன் எதிர் பார்க்கிறோம் ;-)
.
கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் இந்த மூன்று பதிவுகளுமே வந்துவிடும்.
Deleteஸ்கேன்கள் அருமை....ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் தலைவாங்கிக் குரங்கை.. லயன் காமிக்ஸில் கலரில் தானே வருகிறது????
ReplyDeleteசுஸ்கி & விஸ்கி [Willy & Wanda] தோன்றும் Hoboken தீவும், இரும்பு பூச்சட்டி தலையர்களும்
// லயன் காமிக்ஸில் கலரில் தானே வருகிறது????//
Deleteஇல்லை. லயன் காமிக்ஸில் கருப்பு வெள்ளையிலேயே வருகிறது. ஆனால் உயர்தர ஆப்ஃசெட் பேப்பரில் சிறப்பாக வரவிருக்கிறது.
>> ஊனமுற்ற சாக்கு
ReplyDelete(ஏ)மாற்று(ம்) திறன் சாக்கு!
நீங்கள் போட்டோ ஷாப்பில் (புகுந்து) விளையடுகிறிர்களா அல்லது, உங்களிடம் உள்ள ஒரிஜினல் இதழ்களின் தரமே அப்படி இருக்கிறதா??!! அட்ரஸ் சொன்னால் டோர் பிக்-அப் செய்து கொள்வேன் ;)
//>> ஊனமுற்ற சாக்கு
Delete(ஏ)மாற்று(ம்) திறன் சாக்கு!//
ஹா ஹா ஹா. நொண்டி சாக்கு என்பதையே அவ்வாறு கூறினேன்.
அட, அந்த டோர் பிக்-அப் மேட்டரை அப்படியே அமுக்கி விட்டீர்களே ;) அவ்ளோ பயம், ம்ம்ம்?
Deleteபுத்தகங்கள் என்னிடம் பெரும்பாலும் நல்ல கண்டிஷனிலேயே இருந்தாலும் அவற்றை மேலும் சிறப்பாக (கம்பர் கூறியது போல அழகுக்குக்கு அழகு சேர்ப்பது போல) மெருகூட்ட உதவுவது போட்டோஷாப்பே. இதில் இருவேறு கருத்திருக்க முடியாது.
ReplyDeleteஅருமையான அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteவிஷ்வா நண்பரே,
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் படித்திருக்கிறேன், ஆனால் முதல் முறையாக கமெண்ட் இடுகிறேன். இத்தனை நாள் என்னைவிட நீங்கள் வயதில் மூத்தவரோ என்று நினைத்திருந்தேன், இப்போதுதான் தெரிகிறது நீங்கள் என்னைவிட வயதில் இளையவர் என்று. ஆனால் காமிக்ஸ் படித்ததில், படிப்பதில் நீங்கள்தான் சீனியர். ஏன் என்றால் நான் முதல் முதலாய் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்ததே "பழி வாங்கும் பாவை" லிருந்துதான். "தலைவாங்கி குரங்கு" இதுவரை படித்ததில்லை, ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டு இருக்கிறேன்.
பி.கு. : மெத்த படித்ததிலும், உலக மற்றும் ஆங்கில அறிவிலும் , கம்ப்யூட்டர் ஞானத்திலும் நீங்கள் சீனியர்தான். இது புகழ்ச்சி மட்டும் அல்ல, என்னோட வியப்பும் கூட. தொடரட்டும் உங்கள் பனி.
எச்சரிக்கை : இனி அடிக்கடி உங்களுக்கு தொல்லை கொடுப்பேன்
பெ.கார்த்திகேயன்
ஸ்ஸ்ஸ் ... அப்பா.. தமிழ்ல type பண்ண இவ்ளோ கஷ்டபடவேண்டிஇருக்கே
Delete//Karthik
ReplyDeleteஅட, அந்த டோர் பிக்-அப் மேட்டரை அப்படியே அமுக்கி விட்டீர்களே ;) அவ்ளோ பயம், ம்ம்ம்?//
அப்படி இல்லீங்க, ஏற்கனவே நம்ம கலெக்ஷன் ரொம்ப கம்மி. இதில் நீங்க வேற வந்த ஆட்டைய போட்டீங்கன்னா, அப்புறம் நான் எங்க போறது?
//விஷ்வா நண்பரே,
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் படித்திருக்கிறேன், ஆனால் முதல் முறையாக கமெண்ட் இடுகிறேன். இத்தனை நாள் என்னைவிட நீங்கள் வயதில் மூத்தவரோ என்று நினைத்திருந்தேன், இப்போதுதான் தெரிகிறது நீங்கள் என்னைவிட வயதில் இளையவர் என்று. ஆனால் காமிக்ஸ் படித்ததில், படிப்பதில் நீங்கள்தான் சீனியர். ஏன் என்றால் நான் முதல் முதலாய் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்ததே "பழி வாங்கும் பாவை" லிருந்துதான். "தலைவாங்கி குரங்கு" இதுவரை படித்ததில்லை, ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டு இருக்கிறேன்.
பி.கு. : மெத்த படித்ததிலும், உலக மற்றும் ஆங்கில அறிவிலும் , கம்ப்யூட்டர் ஞானத்திலும் நீங்கள் சீனியர்தான். இது புகழ்ச்சி மட்டும் அல்ல, என்னோட வியப்பும் கூட. தொடரட்டும் உங்கள் பனி.
எச்சரிக்கை : இனி அடிக்கடி உங்களுக்கு தொல்லை கொடுப்பேன்//
இந்த ஜோநோயர் சீனியர் மேட்டரை விட்டு விடுங்கள். எல்லோருமே காமிரேட்டுகள் தான். நோ differences.
உங்களின் ஆனந்த தொல்லையை எதிர்பார்க்கிறேன்.
உங்களது ரிபிரின்ட் ரிக்வெஸ்ட் லிஸ்ட் ஒன்றோடு நிறுத்தி விட்டிர்களே, இரண்டு, மூன்று என தொடருமா, ஆவலுடன் காத்திருக்கிறேன்
ReplyDeleteகண்டிப்பாக தொடரும் நண்பரே. அடுத்த வாரம் பாருங்கள்.
Deleteme too nanba! adobe unga kaiyil pugunthu vilayadugirathu antha அழகுக்குக்கு அழகு சேர்ப்பது miga nalla vishayam
ReplyDeleteஇதற்கெல்லாம் காரணம் என்னுடைய போட்டோஷாப் குருநாதர் சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி திரு அய்யம்பாளயத்தார் அவர்களே.
Deleteவிஸ்வா ஜி சீக்கிரம் அடுத்த பதிவை இடவும் காத்திருக்கிறோம் அப்புறம் மாஜிக் 1000 ஐ எட்டி பிடிக்க என்ன என்ன செய்யலாம் என்று சொல்லுங்க நமது லட்சியம் ஆயிரம்
ReplyDeleteகண்டிப்பாக இன்றிரவு புதியதொரு பதிவு வலையேற்றப்படும்.
Deleteஅது என்ன மாஜிக் ஆயிரம்? கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்களேன்?
unga update எனக்கு இ மெயிலில் வர மாட்டேன்குது ஜி ஆயிரம் பேர் சந்தா கட்ட வைக்கணும் ஜி என்ன பண்ணலாம்?
Delete// Mar 8, 2012 09:44 PM
ReplyDeleteRafiq Raja ; John Simon : இந்த ஆசை..சிந்தனை எனக்குள்ளும் இல்லாது இல்லை...!
கொஞ்சம் கொஞ்சமாய் புதிய பாணிக்கு...புதிய விலைக்கு..புதிய தரத்துக்கு நாங்களும் தயார் ஆகி வருகின்றோம்..! நேரடி விற்பனையே இப்போது உயிர்நாடி என்பதால், நமது சந்தா base இன்னும் சற்றே வலுவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தற்சமயம் சுமார் 450 ல் உள்ள எண்ணிக்கை, குறைந்த பட்சம் 1000 என்ற magic நம்பரைத் தொட்டு விட்டால் அலிபாபாவின் புதையல் கதவுகள் திறந்திட்ட மாதிரி ஆகிடும் !
மாதம் ஒரு டாப் ஹீரோவின் வண்ண ஆல்பம் என்று கூட வெளியிட்டிட இயலும். அது வரை கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டிய நிர்பந்தம் !
மெதுவாய், ஆனால் உறுதியாய் சரியான இலக்கில் இப்போது பயணமாகி வருகிறோம்..! இந்த ஆண்டின் கடைசிப் பகுதியினில் பாருங்களேன்...என்னென்ன வாணவேடிக்கைகள் காத்துள்ளன என்று !! //
This comment done by Vijayan sir on சல்யூட் கேப்டன் டைகர் !
I think this is the answer to you :))
.
Hello visva work athikama? Lion blog new post badichinkala?
ReplyDeleteகொஞ்சம் பிசிதான். எல்லாமே படிச்சுட்டு தான் இருக்கேன்.
Deleteஒரு குட் நியூஸ். நேற்றைய நாள் முழுவதுமே நம்முடைய எடிட்டர் மற்றும் லயன் காமிக்ஸ் ஸ்டாப்ஃகளுடன் கழிந்தது. பல நல்ல விஷயங்களை விவாதித்தோம். இந்த ரீபிரின்ட் லிஸ்ட் மற்றும் நம்ம எடிட்டரின் தலை வாங்கி குரங்கு புத்தக ஹாட் லைன் என்று எல்லாமே படித்துவிட்டு தான் கிளம்பினோம். இவ்வளவு ஏன், அடுத்த ...... சரி வேண்டாம். அதனை எடிட்டரே சொல்லிவிடட்டும்.
நேரா வீட்டுக்கு போய் fridge லதான் உட்காரபோறேன்.... வயறு எரியுது...
DeleteFridge pothathu...
Deletehahaha enakkumthan!! ana namma viswa very lucky!!
DeleteMe the 25th...........!!!!!
ReplyDeleteஅண்ணே அடுத்த பதிவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் :)) ;-)
.
அய்யய்யோ சஸ்பென்ஸ் தாங்கலை ஆனா கொடுத்து வைத்தவர் பாஸ் நீங்க
ReplyDeleteS.vijayan sir pattasu koluthuranka...
ReplyDeleteசிவகாசிக்கே பட்டாசா?
DeleteMr . Viswa எப்போது கும்பகர்ண தூக்கத்துல இருந்து எழுந்திருப்பிங்க
ReplyDeleteஅண்ணே,
ReplyDeleteஇந்த பிளக்கின் சைட் பாரில் என்னுடைய டுவிட்டர் அக்கவுன்ட் செய்திகள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். அதனை கொஞ்சம் பாருங்கள்.
கடந்த வாரம் முழுவதுமே பயணங்கள் தான். முதல் இரண்டு நாட்கள் பெங்களூருவிலும், அடுத்த இரண்டு நாட்கள் மதுரையிலும் கடைசி இரண்டு நாட்கள் திருச்சியிலும் கழிந்தன. இன்று மாலை தில்லி செல்கிறேன். திரும்ப மூன்று நாட்கள் ஆகும். ஆகையால் கண்டிப்பாக இது கும்பகர்ண தூக்கம் கிடையாது.
ஆனால் இந்த முறை மதுரை சென்றபோது தலை வாங்கி குரங்கை சந்தித்து விட்டேன். சீசன் 2 என்று தலைப்பிடப்பட்ட ஹாட்லைன் படித்து விட்டேன். புது விளம்பரங்களை பார்த்து ரசித்தேன். பதிவுதான் எப்போது என்று தெரியவில்லை. பார்க்கலாம்.
ஆபீஸ் பிசியில் இங்கு வரமுடியவில்லை. Year end (march) , IT அது, இது என்று ஆபீஸ்ல புழிஞ்சி எடுக்கிறாங்க. அதுமட்டும் இல்ல எங்க MD யோட mother death க்கு சென்னை போயிட்டு இப்போதான் வந்தேன். அநேகமா நீங்க சென்னை return ஆகிட்டு இருப்பிங்கன்னு நினைக்கிறேன், உங்க tweet ல msg பார்த்தேன்.
ReplyDeleteமீ த கம்பேக்.
Deleteஒருவழியாக கொல்கத்தா பயணம் கேன்சல் ஆனதால் இன்றிரவே சென்னை வந்தாயிற்று. டில்லியில் பல சூப்பர் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கினேன். நாளை முதல் பட்டாசு பதிவுகள் ஆரம்பம்.
முதலில் வருவது தலைவாங்கி குரங்கு.
அதற்க்கு பின்னர் தமிழில் சமீபத்தில் வெளிவந்த இரண்டு காமிக்ஸ் கதைகள்.
தலைவா உன்னை உன் வரவை ஆவலுடன் எதிர் பார்த்து வெறியோடு காத்திருக்கிறேன் சீக்கிரம் பதிவிடுங்க இல்ல தலை வாங்கி வீடு தேடி வரும். எங்கள் சூப்பர் ஸ்டார் கிங் விஸ்வ வாழ்க.
ReplyDeleteஅப்புறம் என் சின்ன பதிவொன்றை உங்களை பார்த்து சூடு போட்டுகொண்ட பூனையாக இணையத்தில் பதிவிட்டு உள்ளேன் ஆசிர்வதியுங்கள் மன்னரே
அண்ணே, பின்னிட்டீங்க.
Deleteமுதல் பதிவே தலைவாங்கி பற்றி என்றால் சொல்லவா வேண்டும். சூப்பர்.
சென்ற வாரமே இந்த புத்தகத்தை பெரும் பேரினைப்பெற்றோம். ஆனால் ஒருவாரமாக மகா பயங்கர பிசி. (அதுல பாதி வேலை நம்ம காமிக்ஸ் குறித்துதான்).
இப்போதைக்கு பதிவு சற்றே சிரமம்தான். இருந்தாலும் நாளைக்கு முயற்சிக்கிறேன்.
உங்க மெயில் ஐடி அனுப்புங்க. இந்த புத்தகத்தோட மத்த ஸ்கான் எல்லாம் அனுப்புறேன்.
நண்பர் ஒலக காமிக்ஸ் ரசிகர் நம்ம புத்தக கண்காட்சியின் வெற்றியை பார்த்து விட்டு மலேசியாவிலும் காமிக்ஸ் கிடைக்க ஒரு புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்து சில திட்டங்களை தீட்டிக்கொண்டு இருக்கிறார். அதனால நாளைக்கு முழுவதுமாக அந்த வேலைதான்.
"இவ்வளவு ஏன், அடுத்த ...... சரி வேண்டாம். அதனை எடிட்டரே சொல்லிவிடட்டும்." அது என்ன தலைவா?
ReplyDelete"நண்பர் ஒலக காமிக்ஸ் ரசிகர் நம்ம புத்தக கண்காட்சியின் வெற்றியை பார்த்து விட்டு மலேசியாவிலும் காமிக்ஸ் கிடைக்க ஒரு புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்து சில திட்டங்களை தீட்டிக்கொண்டு இருக்கிறார்."
வாவ் வாழ்த்துக்கள் கலக்குங்கள்
//"இவ்வளவு ஏன், அடுத்த ...... சரி வேண்டாம். அதனை எடிட்டரே சொல்லிவிடட்டும்." அது என்ன தலைவா//
Deleteவேறு ஒன்றும் இல்லை தல. எடிட்டர் சாரின் அடுத்த வலைப்பதிவு என்ன என்பதை சொல்ல வந்தேன். பின்னர் அது முந்திரிக் கோட்டை போல இருக்கும் என்பதால் அதனை எடிட்டரே சொல்லட்டும் என்று விட்டு விட்டேன்.