Dear ComiRades,
காமிக்ஸ் ரசிகர்களுக்கு மார்ச் மாதம் பத்தாம் தேதி என்பது ஒரு மோசமான நாள் போலிருக்கிறது. குறிப்பாக கவ்பாய் ஹீரோக்களை பிரதானப்படுத்தி வரையும் ஓவியர்களுக்கு. இந்த தேதியில் தான் நம்முடைய டெக்ஸ் வில்லரின் ஆரம்பகால ஓவியர் அரேல்லியோ கல்லேப்பிணி (பிரியமாக காலேப்) பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இறைவனடி சேர்ந்தார். இதே தேதியில் இந்த ஆண்டு நம் தமிழ் காமிக்ஸ் உலகின் தற்போதைய சூப்பர் ஸ்டார் கேப்டன் டைகர் (ப்ளூபெர்ரி) கதைகளின் ஓவியர் ஆகிய ழான் ஜிராட் (புனைப்பெயர் மோபியஸ்) காலமானார்.
சில காலமாகவே கேன்சர் என்கிற நோயுடன் போராடி வந்த மோபியஸ் இன்று (மார்ச் பத்தாம் நாள்) காலமானார். அவருக்கும், அவரது மறைவால் வருந்தும் கோடானுகோடி காமிக்ஸ் ரசிகர்களுக்கும் தமிழ் காமிக்ஸ் உலகின் ஆழ்ந்த அஞ்சலி.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நண்பரொருவர் ஃபிரான்சில் இருந்து போன் செய்து இந்த தகவலை ஊர்ஜிதப்படுதியபோது மனம் பதைபதைத்தது. என்ன செய்வது என்றே தெரியாமல் இந்த பதிவினை டைப் செய்துக்கொண்டு இருக்கிறேன். விரிவாக பதிவிடும் நிலையில் என்னுடைய மனமோ, நானோ இல்லாததால் இப்போதைக்கு இந்த சிறிய தகவல் பதிவு. ஓரிரு நாட்களில் ஒரு விரிவான ட்ரிப்யூட் பதிவொன்று இடப்படும்.இப்போதைக்கு இந்த கவர் கேலரி மட்டும் உங்கள் பார்வைக்கு:
மோபியஸ் காமிக்ஸ் கதைகக்கேயன்ரி அனைத்துவிதமான தூரிகை ஓவியங்களிலும் கைதேர்ந்தவர், அவரது மற்ற ஓவியங்களின் சாம்பிள்:
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
Oru comics kathalanin kanneer anchali...
ReplyDeleteஇந்த சோகமான செய்தியை சொல்லி ஞாயிறை சோகமான ஒரு நாளாக்கி விட்டீர்கள் .
ReplyDeleteWe Miss him beyond the limit. My Deep Condolences. He is the real artist. he will live in all the hearts of Comics lovers forever.
ReplyDeleteRIP Moebius
ReplyDeleteஒரு சகாப்தத்தின் மறைவு. ஸ்டீவ் ஹாலண்டின் பதிவு: http://bearalley.blogspot.in/2012/03/jean-giraud-moebius-1938-2012.html
ReplyDelete