காமிரேட்ஸ்,
இந்த ஆண்டு இனிய ஆண்டாக கழிய வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாத நள்ளிரவில் எனக்கு போன் செய்து சொன்ன புண்ணியவானுக்கு நன்றிகள்.உண்மையிலேயே இந்த ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாகவே இதுவரையில் இருந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் காமிக்ஸ் என்னும் கடலில் மறுபடியும் திக்கு முக்காட வைக்கும் வகையில் பல அதிரடி வெளியீடுகள் வந்த வண்ணம் இருக்கின்றது. (என்னைப் போலவே) தியேட்டர்களில் லேட்டாக வந்து "எவ்வளவு நேரம் படம் போச்சு?" என்று கேட்பவர்களுக்காக இதுவரையில் வந்துள்ள காமிக்ஸ் கதைகளின் இந்த சிறிய அட்டவணை:
1. லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் – Jan 2012
2. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - கொலைகார கலைஞன் – Jan 2012
3. முத்து காமிக்ஸ் - விண்ணில் ஒரு குள்ளநரி – Jan 2012
4. காமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு – March 2012
5. லயன் காமிக்ஸ் - சாத்தனின் தூதன் டாக்டர் செவன் – Apr 2012
6. முத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் - என் பெயர் லார்கோ – May 2012
7. முத்து காமிக்ஸ் - சிகப்புக் கன்னி மர்மம் – June 2012
8. முத்து காமிக்ஸ் - தற்செயலாய் ஒரு தற்கொலை – June 2012
இந்த இதழின் அட்டைப்படம் "கொலைவெறி புகழ்" தனுஷ் போல. அதாவது பார்த்தவுடனே பிடித்து விடாது: பார்க்க,பார்க்க தான் பிடிக்கும். ஆகையால் இரண்டு அட்டைகளையும் தனித்தனியே ஸ்கான் செய்து வெளியிட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும். அட்டைகளின் கலர் காம்பினேஷன் வழமை போல சற்றே தூக்கல் தான். இருந்தாலும் கூட முன் அட்டை மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Cover Scan |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Back Cover Scan |
|
இந்த இதழின் உள் அட்டைகளில் ஒன்றில் கேப்டன் டைகரின் தங்க கல்லறை விளம்பரமும், மற்றொன்றில் கைவசம் உள்ள பிரதிகளின் லிஸ்ட்’டும் உள்ளது. இதுவரையில் இந்த பழைய புத்தகங்களை இன்னமும் வாங்காதவர்கள் தயவு செய்து உடனடியாக வாங்கி விடவும். கைவசமுள்ள ஸ்டாக் தீர்ந்து விட்டால், பின்னர் இந்த புத்தகங்களையும் தேடி அலைய நேரிடலாம். ஸ்கான்'கள் இதோ:
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 002 Inner Wrapper Coming Soon Advt 001 Blueberry Special | Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 151 Inner Wrapper Books Available for Sale |
| |
இந்த இதழில் திகட்ட,திகட்ட தேனாக மூன்று ஹாட் லைன் பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று முதல் பக்கத்திலேயே. அதில் சிறப்பம்சமாக வாசக அன்பர் செயின்ட் சாத்தான் அவர்களின் புகைப்படமும்,அவரைப் பற்றிய சிறு குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 003 Editor S.Vijayan's HotLine 01 |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 004 Editor S.Vijayan's HotLine 02 |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 005 Editor S.Vijayan's HotLine 02 |
|
வழக்கமாக ஒவ்வொரு இதழின் ஹை லைட்டும் எடிட்டரின் ஹாட் லைன் தான். இந்த இதழில் மூன்று ஹாட் லைன் கள் இருந்தும், கண்டிப்பாக அவற்றில் ஒன்று கூட இந்த இதழின் சிறப்பம்சம் கிடையாது. இந்த இதழில் அனைவரும் தேடித் படிக்கும் (பார்க்கும்?!) பகுதி என்னவெனில் முத்து காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழின் கதை வரிசையை தெரிந்து கொள்வதே. எடிட்டரின் வலைதளத்தில் மூன்று கதைகளின் அறிவிப்பு மட்டுமே இடம் பெற்று இருந்ததால் இந்த எதிர் பார்ப்பு.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 006 Muthu Comics Never Before Special Advt 01 | Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 007 Muthu Comics Never Before Special Advt 02 |
| |
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 008 Muthu Comics Never Before Special Advt 03 | Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 009 Muthu Comics Never Before Special Advt 04 |
| |
முதல் கதையாக நமது சூப்பர் ஸ்டார் லக்கிலுக் அவர்களின் அட்டகாசமான முழு வண்ண காமெடி தோரணம் இடம் பெற்றுள்ளது. இந்த கதையானது இலங்கையில் இருந்து வெளிவந்த "ஐஸ்பெர்க் காமிக்ஸ்" இதழில் அடுத்து வரப் போகும் வெளியீடாக சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்தது (நினைவு சக்தி கூர்மையாக பெற்றிருக்கும் காமிரேட்டுகள் இந்த இதழின் அட்டைப் படத்தை ஐஸ்பெர்க் இணைய தளத்தில் தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளிவந்ததை நினைவு கூறலாம்). பின்னர் இப்போது மறுபடியும் தமிழில் படிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. வழமை போல நமது எடிட்டரின் மொழி பெயர்ப்பு இந்த கதையின் வேகத்தை அதிகரிக்கிறது. முதல் பக்க ஸ்கான்:
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Special Page No 10 |
|
இந்த இதழின் இரண்டாவது கதையும் லக்கிலூக்கினுடையதே. இந்த கதையின் மூல அட்டைப் படத்தை அழகாக வெளியிட்டு நமது வாழ்த்துக்களை பேர்கின்ற எடிட்டர், முதல் கதைக்கும் இவ்வாறே செய்திருக்கலாமே என்றும் கோபத்திற்கு ஆளாகிறார். மினி லயன் வெளியீடுகளுக்கு முடிவு கொண்டு வந்த பிறகு, லயன் காமிக்ஸ் இதழில் முதலில் வந்த லக்கி லூக்கின் கதை ஜெஸ்சி ஜேம்ஸ். அந்த இதழின் முதல் பக்கத்தில் மிகவும் அழகாக கதை, ஓவியம், தமிழாக்கம் என்று கிரேடிட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் இந்த இதழிலேயே ஒரிஜினல் க்ரெடிட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்க்கதக்கது. அணைத்து கதைகளுக்கும் இது தொடர வேண்டும் என்பதும் ஒரு சிறு வேண்டுகோள்.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 054 Lucky Look Story 2 The Wagon Train Cover Oru Vanavillai Thedi |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 055 Lucky Look Story 2 The Wagon Train Cover Oru Vanavillai Thedi 1st Page |
|
ஒரே நாளில் தொடர்ந்து நான்கு ப்ளாக் பஸ்டர் படங்களை பார்த்தது போல, இந்த இதழிலேயே சிங்கத்தின் சிறு வயதில் தொடரும் அட்டகாசமாக தொகுக்கப் பட்டு அமைந்துள்ளது. விரைவில் எடிட்டர் இதனை தனி புத்தகமாக வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 099 Singathin Siru Vayadhil 19 |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 100 Singathin Siru Vayadhil 19 |
|
எடிட்டர் இந்த இதழில் சர்ப்ரைஸ் ஆக இரண்டு கருப்பு வெள்ளை & கதைகள் வரும் என்று சொல்லி இருந்தார். கண்டிப்பாக அதில் ஒன்று லாரன்ஸ் & டேவிட் கதையாக இருக்கும் என்று நம்பி, பந்தயம் கட்டியும் இருந்தேன். ஆனால் God moves in Mysterious Ways என்பதைப் போல, நம்ம எடிட்டரும் கூட மர்மமாக செயல்படுகிறார். இந்த கதை ஒரு இனிய சர்ப்ரைஸ். அதுவும் டெய்லி ஸ்ட்ரிப் படிக்கும் வகையிலேயே இந்த கதையும் அமைந்துள்ளது.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Special Page No 101 Agent Phil Corrigan Adventure Manidha Vettai 1st Page |
|
சில பல காரசாரமான வாசகர் கடிதங்கள் இந்த இதழில் இடம் பெறப்போவதாக எடிட்டர் கூறி இருந்தார். அதனாலேயே இந்த இதழின் வாசகர் கடிதங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இதோ அந்த வாசகர் கடிதங்கள்:
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 119 Letters to the Editor |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 120 Letters to the Editor |
|
என்னுடைய அபிமான நாயகன் ஜான் ஸ்டீல் மறுபடியும் முத்து காமிக்ஸில் வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. இவரது பல கதைகள் உளவியல் ரீதியாக ரசனைக்குரியதாக இருக்கும். சிங்கத்தின் குகையில் என்றொரு கதை முன்பு வந்தது. அதில் வந்ததொரு வில்லன் இதுவரை வந்த தமிழ் காமிக்ஸ் கதைகளின் வித்யாசமான வில்லன்களில் ஒருவராக,மன்னிக்கவும் தலை சிறந்த வில்லன்களில் ஒருவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். அதுபோலவே இவரது பல கதைகள் அமைந்து இருக்கும். இந்த கதையும் அவ்வாறு அமைந்து இருக்கின்றதா என்பதை வரும் புதன் அன்று வெளிவரும் லயன் நியூ லுக் ஸ்பெஷல் இதழின் விமர்சனப் பதிவில் காண்போம்.
மினி லயனின் டாப் ஹீரோ லக்கி லுக் இங்கே லயன் காமிக்ஸில் வந்த அசத்தும்போது, மினி லயனின் ஆரம்ப கால சூப்பர் ஸ்டார் குண்டன் பில்லி மட்டும் பின் தங்கியிருக்க வேண்டுமா என்று எண்ணி, மறுபடியும் பில்லியின் கதையை வெளியிட்ட ஆசிரியர்க்கு நன்றி.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Special Page No 121 John Steel Adventure Marana Murasu 1st Page |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Special Page No 137 Billy Bunter Story |
|
ஏற்கனவே எடிட்டர் தன்னுடைய வலைதளத்தில் சொன்னது போல முத்து காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழுக்கான முன்பதிவுக் கூப்பன் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மற்றும் இந்த வருடத்தின் கதைகளைப் பற்றிய காமிக்ஸ் கேலண்டர் ஒன்றும் உள்ளது.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 141 Muthu Comics Never Before Special Advance Booking Coupon Page No 141 | Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Pge No 146 Comics Calendar 2012 |
| |
ஆரம்ப கால இதழ்களில் வந்த "விரைவில் வருகின்றது" விளம்பரங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்த வாசகர்கள், மறுபடியும் அந்த வசந்த காலத்திற்கு திரும்பிய Effect ஐ கொடுக்கும் வகையில் இந்த விளம்பரங்கள் அமைந்து இருக்கின்றன.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Coming Soon Advt For Lion Double Thrill Special Page No 144 | Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Coming Soon Advt For Lion Double Thrill Special Page No 145 |
| |
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Special Page Coming Soon Advt for Muthu Wild West Special No 142 | Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Special Page Coming Soon Advt for Muthu Wild West Special No 143 |
| |
மறுபடியும் ஒரு ஹாட் லைன் என்று இந்த இதழில் மூன்றாவதாக ஒரு ஹாட் லைன் வருகிறது. முக்கியமானதும் கூட. அதனை தொடர்ந்து நமது வாசக அன்பர் திரு பாலசுப்ரமணியம் அவர்களின் கடிதமும் உள்ளது. சமீப காலத்தில் இவரது வாரிசும் நமது லயன் காமிக்ஸ் எடிட்டரின் தலத்தில் கமெண்ட்டுகளை இடுவதை காண்கையில் மகிழ்ச்சி உண்டாகிறது.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Editor S Vijayan's Hotline 3 Page No 147 |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Editor S Vijayan's Hotline 3 Page No 148 |
|
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Questtionnaire for Readers Page No 149 |
|
பத்து ருபாய் விலையில் கடைசி செட் ஆக வரவிருக்கும் இரண்டு இதழ்களில் விவரங்கள் இந்த விளம்பரத்தில். இந்த இதழின் அட்டைப்படங்களை இரண்டு வருடங்களுக்கு முன்பே எடிட்டரின் அறையில் கண்டிருக்கிறேன். இவை அச்சிடப்படுவது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், இவையே கருப்பு வெள்ளை வரிசையில் கடைசி செட் புத்தகங்கள் என்பதால் ஒரு நாஸ்டால்ஜியா வகையறாவில் இவற்றையும் இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Lion New Look Coming Soon Advt 10 Rs Books Page No 150 |
|
இந்த இதழின் இணைப்பாக தனியாக ஒரு கடிதம் உள்ளது. அந்த கடிதம் சந்தாதாரர்களுக்கான நினைவூட்டல் கடிதம் ஆகும். தயவு செய்து அனைவரும் சந்தா நீட்டிப்பு செய்து விடுங்கள் தோழர்களே.
Lion Comics Issue No 212 Dated July 2012 28th Annual Special Issue Lion New Look Special Annexure For Subscription |
|
பின் குறிப்பு: இந்த இதழ் அருமையான பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டு, குரியருக்காக உபயோகப்படுத்தும் கிளாத் கவரில் பத்திரமாக வந்தடைந்தது. இனி வரும் இதழ்களும் இப்படியே இருந்தால் நல்லது.
இன்னும் இரண்டு நாட்களில் ஒரு காமிக் கட்ஸ் பகுதியில் தமிழின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் (இவர்தான் ரஜினியின் அடுத்த பட இயக்குனர்) இரும்புக் கை மாயாவியை பற்றி கூறும் பகுதி இடம்பெறுகிறது. அதன் பிறகு இந்த நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.