Pages

Saturday, April 07, 2012

15 வாண்டுமாமா பிறந்த நாள் சிறப்பு பதிவு 01: தேச தேசக் கதைகள்

காமிரேட்ஸ்,

இந்த மாதம் 21ஆம் தேதி நம்முடைய அன்பிற்குரிய சிறுவர் இலக்கிய எழுத்தாளர் திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள் வருகின்றது. அதனை கொண்டாடும் வகையில் இன்றுமுதல் தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் அவருடைய (இதுவரை இங்கே விமர்சனம் எழுதாத) பத்து சிறந்த புத்தகங்களை பற்றிய பதிவுகள் இடம்பெறும். இவை எந்தவிதமான ஒரு வரிசைக்கிரமத்திலும் இல்லாமல் எனக்கு பிடித்த பத்து புத்தகங்கள் என்றே வரிசைப்படுத்தப்படும். இவற்றில் சில இன்னும் விற்பனைக்கு கிடைக்கலாம், சில கிடைக்காமல் போகலாம்.

என்னால் முடிந்தவரை தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் புத்தகங்களை மட்டுமே எழுத முயல்கிறேன் (ஆனால் இந்த புத்தகம் மட்டும் ஒரு சிறப்பிற்குரிய ஒன்று என்பதால் இது இப்போதைக்கு விற்பனையில் இல்லை). அப்போதுதான் இந்த பதிவினை படிக்கும் வாசகர்கள் அந்த புத்தகங்களை மீண்டும் வாங்க எதுவாக இருக்கும். என்ன வாசகர்களே,சாகசங்களும், விந்தைகளும் நிறைந்த ஒரு நாஸ்டால்ஜியா பயணத்திற்கு நீங்கள் தயாரா?

தேச தேசக் கதைகள் ஒரு சிறிய முன்குறிப்பு:

தற்போதைய இன்டர்நெட் உலகில் அனைத்தையுமே கூகிளாண்டவர் துணையுடன் கண்டறிய முடியும். இங்கிலாந்தில் ஜனவரி மாத மாலையில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த நாங்கள் இந்த வாரம் முழுவதும் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். திடீரென்று அப்போது அங்கே பனிமூட்டம் அதிகமாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு ஒரு கூகுள் தேடுதலை நிகழ்த்தினால்.அங்கே ஜனவரியில் சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் உணவு விடுதிகளை தவிர மற்ற கடைகள் எல்லாமுமே மூடப்பட்டுவிடும் என்ற விஷயம் தெரிய வந்தது. இந்த விஷயம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இதற்காக இரண்டு மூன்று பேருக்கு போன் செய்து (அதாவது ட்ரன்க் கால் புக் செய்து) கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். அப்போதுகூட போதுமான அளவுக்கு தகவல் இராது. ஆனால் தகவல் தொழில்நுட்பம் இவ்வளவாக முன்னேறியிராத அந்த கால கட்டத்தில் உலகில் இருக்கும் மற்ற நாடுகளைப்பற்றிஎல்லாம் மதியத்தர வர்க்கத்தினருக்கு ஒரு மூடுபனி போலவே அறிந்தும் அறியாமலும் விஷயங்கள் தெரிந்திருக்கும். அதிலும் பள்ளி மாணவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.

இத்தகைய சூழலில், உலகின் மற்ற நாடுகளைப்பற்றியும் அங்கிருக்கும் கலாச்சாரங்களையும் தெரிந்து கொள்வதர்க்கு பள்ளி புத்தகங்களை விட போரடிக்கும் விஷயங்கள் வேறு இருக்காது. ஆனால் அதே விஷயங்களை அலுக்கவே அலுக்காமல் இன்னும் கொஞ்சம் இருக்காதா என்று ஏங்கும் அளவிற்கு சொல்லும் மந்திர விதையை தெரிந்தவர் திரு வாண்டு மாமா அவர்கள். உலக நாடுகளைப்பற்றியும், அங்கிருக்கும் நாட்டுபுற கதைகளை  பற்றியும் இவர் எழுதிய தேச தேசக்கதைகள் வரிசைதொடர் மிகவும் பிரபலமானது. இந்த வரிசையில் மொத்தம் 56 நாட்டுப்புர கதைகளை எழுதியுள்ளார் திரு வாண்டு மாமா அவர்கள். அந்த கதைகளைப் பற்றியும், எவ்வாறு 56 கதைகள் உருவானது என்பதைப் பற்றியும் அவரே எழுதக் கேட்போம் படிப்போம்.

McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Editorial Page

சிறுவர்களுக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1979 - 80ஆம் ஆண்டில் இந்த கதைகள் தொகுக்கப்பட்டு மெக்மிலன் (இந்தியா) நிறுவனத்தால் வெளியிடப்பட்டன. இந்த நிறுவனம் வெளியிட்ட வாண்டுமாமா புத்தக வரிசை இது ஒன்றாகத்தானிருக்க வேண்டும். மெக்மிலன் சிறுவர் வெளியீடுகள் ஆங்கிலத்தில் வெளியிட நாம் படித்திருக்கிறோம். ஆனால் தமிழில், அதுவும் வாண்டுமாமா அவர்கள் கைவரிசையில் இதுவே முதல் முறையாக இருக்க வேண்டும்.

McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Cover Front McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Cover Back McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Title Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Cover Front McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Cover Back McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Title Page

ஓவியர் திலகம் மாருதி அவர்களின் கைவண்ணத்தில் அற்புதமான வண்ணக் கலவையுடன் வந்திருக்கும் இந்த அட்டைப்படங்களுக்காகவே இந்த புத்தகத்தை வாங்கலாம். பின்னர் இதே சித்திரங்கள் வாண்டுமாமா அவர்களின் பிறிதொரு புத்தகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்பது வேறொரு விஷயம்.

ஒவ்வொரு கதையும் ஆரம்பிக்கும்போது அந்த நாட்டைப்பற்றி ஒரு பக்க குறிப்புடனே ஆரம்பிக்கிறது. மேலும் அந்த நாட்டின் விவரப்படம் (மேப்) இல்லாமலே அந்த நாட்டின் புவியியலை புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த புத்தகத்தின் முதல் கதை இங்கிலாந்து நாட்டினைப்பற்றியது.

McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Index Page McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 Intro Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Index Page McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 Intro Page

இந்த கதைகளின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முதல் கதையை மட்டும் முழுமையாக பிரசுரிக்கிறேன். மற்ற கதைகளை படிக்க வேண்டுமெனி தேடிப்பிடித்து இந்த புத்தகத்தை வாங்க முயலுங்கள் (இல்லை எனில் என்னைப்போலவே ஒரு இணைய தளத்தை ஆரம்பியுங்கள், தஞ்சாவூருக்கு அருகில் இருந்து ஒரு வாசகர் இந்த புத்தகத்தை உங்களுக்கு பரிசாக அளிப்பார்).

McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 1st Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 2nd Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 3rd Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 4th Page
McMilan Publications Desa Desa Kadhaigal 3 By Vaandumama Story 1 5th Page

அற்புதமான இந்த கதையை படித்ததும் மற்ற கதைகளை படிக்க ஆவலாக இருக்கிறதா? உங்கள் தேடலை உடனே துவங்குங்கள். இல்லையெனில் மற்ற வாண்டுமாமா கதைகளைப்பற்றி படிக்க காத்திருங்கள். அடுத்த பதிவில் இப்போது விற்பனைக்கு கிடைக்கும் ஒரு வாண்டுமாமா எழுதிய துப்பறியும் நாவலைப்பற்றி எழுதுகிறேன். மூன்று நாட்கள் பொறுத்திருங்கள்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

15 comments:

  1. கொய்யால,

    மீ தி ஃ பர்ஸ்ட். And also the 3000th comment in this blog.

    ReplyDelete
  2. மறுபடியும் நானேதான் ;-)
    .

    ReplyDelete
  3. இந்த தடவே கிடையாது சிபி அண்ணே.

    இதுக்காகவே நாங்க கடந்த அரை மணி நேரமா வெயிட்டிங். ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் பண்ணுறீங்கப்பா

    ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம்

    ReplyDelete
  5. ஹஹா வந்துட்டாரையா வந்துட்டாரையா :))
    .

    ReplyDelete
  6. வாண்டு மாமாவுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே அவருக்கு இச்செய்தியை எப்படி தெரிவிக்கலாம்?

    ReplyDelete
  7. அப்புறம் ஒரு உதவி அணைத்து பதிவுகளினையும் மற்றும் பின்னூட்டங்களையும் உடனே தெரிந்து கொள்ள எதாவது வழி இருக்கிறதா? நண்பர்களுக்கு உடனே பதில் சொல்ல ஆர்வமாக உள்ளது ஆனால் மிக தமதமகதான் தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சுலபம் ஜானி சார்.

      ஒவ்வொரு கமென்ட் பெட்டியின் அடியிலும் Subscribe by email என்று இருக்கும் அல்லவா? அந்த இணைப்பை அழுத்தவும். அதற்க்கு பிறகு அந்த பதிவில் பதியப்படும் ஒவ்வொரு கருத்தும் / கமெண்ட்டும் உங்கள் ஈமெயில் ஐடிக்கு வந்து விடும்.

      உங்கள் செல் போனில் புஷ் மெயில் வசதி இருந்தால் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அலெர்ட் ஆகிவிடும்.

      Delete
    2. மிக்க நன்றி தலைவரே உங்க அறிவுரைக்கு நன்றி மேலும் அப்பப்போ இப்படி எதாவது குழப்பிகிட்டே இருப்பேன். பார்த்துக்குங்க

      Delete
  8. I still remember this collection which was presented to me 22 years back..Use to read them in every summer leave... the scanned cover pages turns me nostalgic..

    ReplyDelete
  9. விஷ்வா

    இப்போதுதான் விஜயன் சார் "நெஞ்சிலிருந்து நேராய்" படித்துவிட்டு வருகிறேன். நேற்றே உங்கள் பதிவை என் ஆபீசில் படித்துவிட்டேன், ஆனால் comment இடவில்லை.

    புதிய வெளியீடு லயன் காமிக்ஸ் விமர்சன பதிவை எதிர்பார்கிறேன்...இன்று அல்லது நாளை...

    ReplyDelete
    Replies
    1. கார்த்திகேயன் சார்,
      பதிவு ரெடி. ஆனால் நாளை மறுநாள் தான் இடப்படும்.

      இன்னும் ஐந்து நிமிடத்தில் ஒரு சிறப்பு பதிவு (சென்னையில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் புத்தக நிலையம் பற்றி) இடப்படும். நாளைக்கு இரண்டு சிறப்பு செய்தி மற்றும் புத்தக அறிமுகப் பதிவுகள் உள்ளன.

      ஆகையால் செவ்வாய் அன்றுதான் சாத்தானின் தூதனை சந்திக்க இயலும்.

      Delete
  10. ஜி அதென்ன சாத்தானின் தூதன் ? பூத வேட்டை மாதிரி ? அப்படியே விஜயன் சார் கிட்ட பூத வேட்டைக்காக ( டெக்ஸ் ) பூதம் போல காத்திருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்லுங்கள் என இங்கே தெரிவித்து கொள்கிறேன் ப்ளீஸ்.

    ReplyDelete
  11. வாண்டுமாமா என்னுடைய சிறுவயது ஆசான். கனவுகளின் மூலம் என்னுடைய பதின்ம வயதினை மறக்கமுடியா ஒரு அனுபவமக்கிய மகான்.

    அவருடைய பிறந்த நாளுக்கு ஏதேனும் செய்ய ஆசை. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மெயில் அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்.

    ReplyDelete
  12. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails