Pages

Monday, September 23, 2013

6 காமிக்ஸ் டைம் 1: Week 38 வாண்டு தேசம் & கன்னித் தீவு

டியர் காமிரேட்ஸ்,

இந்த ஞாயிற்று கிழமை முதல் "காமிக்ஸ் டைம்" என்கிற புதிய தொடர் பதிவு ஆரம்பம் ஆகின்றது. இந்த தொடர் பதிவில் தமிழில் தற்போது வந்துக்கொண்டு இருக்கும் சித்திரக்கதை, காமிக்ஸ் வடிவில் வரும் கதைகளின் ஸ்கான்கள் இடம்பெறும்.

இந்த தொடர் பதிவுகளின் நோக்கம் என்னவெனில், மிகவும் அறிய வகையாக மாறிக்கொண்டு இருக்கும் சித்திரக்கதைகளின் தொகுப்பிடமாக இருக்க வேண்டும் என்பதே. மேலும் நமது காமிரேட்டுகளில் பலரும் அயல் நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழில் வெளிவரும் சித்திரக்கதைகளை படிக்க வகை செய்வதும், அவ்வாறு படித்த கதைகளை பின்னாளில் தொகுத்து வைத்துக்கொள்ளவும் இந்த தொடர் உதவும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

தி இந்து - வாண்டு தேசம் By வாண்டுமாமா: நமது ப்ளாக்கை தொடர்ந்து படித்து வரும் காமிரேட்டுகளுக்கு வாண்டுமாமாவின் பலே பாலுவைப்பற்றி நன்றாக தெரியும். புதியதாக படிப்பவர்கள் இந்த பதிவை படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பலே பாலுவும் பாட்டில் பூதமும் (அறிமுகம் 1 அறிமுகம் 2) என்கிற பிரபலமான அவரது தொடரின் Re Boot வெர்ஷனாக இந்த கதையை பார்க்கிறேன்.

டோரா, சோட்டா பீம் என்று பழகிய இன்றைய புதிய தலைமுறைக்கு வாண்டுமாமா என்று ஒருவர் இருப்பதே தெரியாது.இவ்வளவு ஏன்? சென்ற தலைமுறைக்கே அவரைப்பற்றி தெரியாது போது இன்றைய தலைமுறையை குற்றம் சொல்லி பயனில்லை. அந்த குறையை போக்கும் வண்ணம் தி இந்து தினசரி பூச்செண்டு என்கிற பெயரில் அவரது சித்திரக்கதையை வெளியிடுவது மனதிற்கு  அளிக்கின்றது. ஊதா கலர் ரிப்பன் பாடல் டிவியில் ஒளிபரப்பாவது,பூதம் மாடர்ன் ட்ரெண்டில் அதுவே இருப்பது போன்றவை இந்த ரீபூட்டின் மீது நம்பிக்கையை அளிக்கிறது.

அதே சமயம் கோகுலம் இதழில் இரண்டு முழு பக்கங்களில்  வெளிவந்த சம்பவங்களை வெறும் நான்கே நான்கு கட்டங்களில் எடிட்டியிருப்பது எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. வண்ணக்கலவை கொஞ்சம் உறுத்துகிற வகையில் இருப்பதும், ஏழாம் நாள் கடைசி கட்டத்தில் வசன பலூனின் அம்புக்குறி ஆள்மாறி இருப்பது போன்ற விஷயங்கள் இந்த தொடர் அவசரகதியில் ஆரம்பிக்கப்பட்டதை பறைசாற்றுகின்றன.

போகட்டும், விரைவில் இவை களையப்பட்டு சீரான வேகத்தில் இந்த தொடர் சென்று, பலே பாலுவின் பல கதைகளும் (பாட்டில் பூதம்,பறக்கும் டிராயர், மர்ம தீவு) புதியதாக பல கதைகளும் வெளிவந்து நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன். தி இந்து குழுமத்தினர் ஆனந்த விகடன் போல இந்த கதைகளை தொகுத்து ஒரு முழு நீள புத்தகமாகவும் வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த ஸ்கான்களை க்ளிக் செய்தால் அவை தனியாக பெரியதாக வேறொரு பக்கத்தில் ஒப்பன் ஆகும். தெளிவாக படிக்க இது உதவும். இனி கதைக்கு செல்லுங்கள்:

வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 001Vaandu Desam 001 Monday 16th Sept 2013 The Hindu வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 002Vaandu Desam 002 Tuesday 17th Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 003Vaandu Desam 003 Wednesday 18th Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 004Vaandu Desam 004 Thursday 19th Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 005Vaandu Desam 005 Friday 20th Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 006Vaandu Desam 006 Saturday 21st Sept 2013 The Hindu Tamil வாண்டு தேசம் By வாண்டுமாமா: நாள் 007Vaandu Desam 007 Sunday 22nd Sept 2013 The Hindu Tamil 

தினத்தந்தி - கன்னித்தீவு தொடர்: வண்ணத்தில் முதன்முறையாக கன்னித்தீவு தொடர் சித்திரக் கதையை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். 18,920 நாட்கள் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் (51 வருடங்கள் மை லார்ட், 51 வருடங்கள்) முழு வண்ணத்தில் மெருகூட்டப்பட்ட ஓவியத்தரத்துடன் சிறப்பாக இருக்கின்றது. கருப்பு வெள்ளையுடனான அந்த கடைசி ஸ்ட்ரிப்புடன் இந்த தொடர் பதிவை ஆரம்பிக்கிறேன். கதையை பற்றி கேட்பவர்கள் அய்யம்பாளையத்தாரின் பதிவை ஒருமுறை படித்துவிட்டு வந்து இங்கே தொடருங்கள்.

சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,920Kanni Theevu 18920 14th Sept 2013 Saturday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,921Kanni Theevu 18921 15th Sept 2013 Sunday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,922Kanni Theevu 18922 16th Sept 2013 Monday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,923Kanni Theevu 18923 17th Sept 2013 Tuesday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,924Kanni Theevu 18924 18th Sept 2013 Wednesday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,925Kanni Theevu 18925 19th Sept 2013 Thursday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,926Kanni Theevu 18926 20th Sept 2013 Friday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,927Kanni Theevu 18927 21st Sept 2013 Saturday சிந்துபாத் தோன்றும் கன்னித்தீவு: நாள் 18,928Kanni Theevu 18928 22nd Sept 2013 Sunday முதல் மூன்று நாட்கள் வேறு வேறு விதமாக இருந்த அந்த டைட்டில் ஸ்ட்ரிப் பிறகு ஒரே சீராக வருவதை கவனியுங்கள். அதைப்போலவே பின்னணி வண்ணங்களையும் கொஞ்சம் கவனம் செலுத்தி இன்னமும் மெருகூட்ட வாழ்த்துக்கள்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Tuesday, September 17, 2013

3 Comic Cuts 52 – News 52: வாண்டுமாமா is Back


டியர் காமிரேட்ஸ்,

கடந்த ஒரு மாதமாக, இன்றைய தினம் தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு மறக்க முடியாத தினமாக இருக்கும் என்று என்னுடைய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். அதற்க்கான காரணம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் கேட்டுக்கொண்டதால் காரணத்தை மட்டும் சொல்லாமல் தவிர்த்து வந்தேன்.

உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரக்கூடிய ஒரு சங்கதியை உங்களிடம் சொல்லிவிட்டு அதனை குறிப்பிட்ட காலம் வரையில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பூட்டு போடுவதை விட கொடுமையான விஷயம் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்களேன், ப்ளீஸ்?

எனிவே, இன்று முதல் வெளிவர துவங்கியுள்ள The Hindu குழுமத்தின் தமிழ் தினசரியை பற்றியதே அந்த தகவல். கடந்த நான்கு மாதங்களாக என் நண்பர்கள் ஒவ்வொருவராக அங்கே சேர்ந்தவண்ணம் இருந்தனர். சில விஷயங்களை பற்றி தீவிரமாக விவாத்தித்தோம். அதைப்பற்றியெல்லாம் பின்னால் எழுதுகிறேன். இப்போது முதன்மையான தகவல்.

The Return of வாண்டுமாமா: பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு வெகுஜன பத்திரிகையில் வாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதை வெளிவந்தது. அதற்க்கு பிறகு அவரது புத்தக தொகுப்புகள் பதிப்பகங்களால் வெளிவந்தாலும் (Special Thanks to வானதி பதிப்பகம்), அனைவரும் படிக்கும் வெகுஜன பத்திரிக்கைகளில் அவரது பங்களிப்பு இல்லாமல் போனது இந்த தலைமுறைக்கு மிகப்பெரிய சாபக்கேடு.

அதனை சரிகட்டும் விதமாக இன்றைய தி ஹிந்து தமிழ் தினசரி பத்திரிகையில் சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி வாண்டுமாமா அவர்களின் புதிய ஸ்ட்ரிப் ஒன்று துவங்கியுள்ளது. நேற்று முகப்புத்தகத்தில் (For the Un initiated, நம்ம Facebook தாங்க!) தினத்தந்தியின் கன்னித்தீவு பற்றி எழுதி  ஒரு Hint கொடுத்திருந்தேன்.இந்த ஸ்ட்ரிப் உருவான பின்னணியை சொன்னால்..... வேண்டாம். நம்ம சுயசரிதம் எழுதும்போது அதனைப்பற்றி பேசுவோம், ஒக்கே? இப்போதைக்கு இந்த ஸ்ட்ரிப்பை பார்த்து, படித்து மகிழுங்கள்.

Vaandu Desam 001 Monday 16th Sept 2013 The Hindu Tamil Alternative Scan நமது ப்ளாக்கை தொடர்ந்து படித்து வரும் காமிரேட்டுகளுக்கு வாண்டுமாமாவின் பலே பாலுவைப்பற்றி நன்றாக தெரியும். புதியதாக படிப்பவர்கள் இந்த பதிவை படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பலே பாலுவும் பாட்டில் பூதமும் (அறிமுகம் 1 அறிமுகம் 2) என்கிற பிரபலமான அவரது தொடரின் Re Boot வெர்ஷனாக இந்த கதையை பார்க்கிறேன். நண்பர்களுக்கு ஒரு போனசாக இந்த கதையின் இரண்டாவது பகுதியையும் இங்கே அளிக்கிறேன் (இந்த பதிவு இடப்ப்படும்போது இரவு மணி ஒன்று).Vaandu Desam 002 Tuesday 17th Sept 2013 The Hindu Tamil 

தினத்தந்தி - கன்னித்தீவு - முழு வண்ணத்தில்: இன்றுமுதல் ஹிந்து குழுமத்தில் இருந்து புதியதாக தமிழில் தினசரி (தி இந்து ) என்று ஆரம்பாமாகியுள்ளது. இந்தன் வருகையை எதிர்நோக்கி ஏற்கனவே களத்தில் இருக்கும் தினசரிகள் போட்டி போட்டுக்கொண்டு அமர்க்களம் செய்ய துவங்கி விட்டன.

1.தினகரன் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பாகவே எடிட்டோரியலில் இருந்து கன்டென்ட் வரை அனைத்தையும் புதுமையாக பேக்கேஜ் செய்ய துவங்கி விட்டார்கள். தினகரனில் செய்யப்பட்ட மாற்றங்கள் நன்றாகவே இருக்கிறது.

2. தின இதழ் (சென்னை மற்றும் திருவள்ளூர்) இந்த வாரம் முதல் 4 ருபாய் என்று இருந்த விலையை 2 ரூபாயாக குறைத்து இருக்கிறார்கள்.

3. தினகரன் போலவே தினத்தந்தியும் முழுமையான வண்ண தினசரியாக மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். அதன் முதல் வடிவம் நேற்று (ஞாயிற்று கிழமை முதல்).

எது நடக்கிறதோ இல்லையோ, வண்ணத்தில் முதன்முறையாக கன்னித்தீவு தொடர் சித்திரக் கதையை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். 18,920 நாட்கள் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் (51 வருடங்கள் மை லார்ட், 51 வருடங்கள்) முழு வண்ணத்தில் மெருகூட்டப்பட்ட ஓவியத்தரத்துடன் சிறப்பாக இருக்கின்றது. இனிமேல் தினத்தந்தியும் வாங்க வேண்டும் போலிருக்கிறதே?

சில பல சாம்பிள் ஸ்கான்களை கண்டு மகிழுங்கள்: மாலைமதி காமிக்ஸ் கடைசி இதழில் (அக்டோபர் 1976) பின் அட்டையில் இனிமேல் மாலைமதி காமிக்ஸ் மாலைமதி நாவலாக, வார இதழாக வெளிவரும் என்று விளம்பரம் செய்தார்கள். அதனாலேயே அந்த விளம்பரம் இன்றளவும் காமிக்ஸ் ரசிகர்களால் மறக்கப்படாமல் இருக்கிறது.

அதைப்போலவே தினத்தந்தியின் கன்னித்தீவு கதைத்தொடர் முழு வண்ணத்திற்கு மாறுவது சிறப்பு என்றால் அதன் கடைசி கருப்பு வெள்ளை ஸ்ட்ரிப் பிற்காலத்தில் மதிக்கப்படும் (என்று நம்புகிறேன்). ஆகையால் அதனை உங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

Kanni Theevu 18920 14th Sept 2013 Saturday 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 15ம் நாளான ஞாயிற்று கிழமை சித்திரக்கதை வரலாற்றில் இடம் பெற்றது எதனால் என்று கேள்வி எழுந்தால், அதற்க்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில் - அன்று முதல் தான் கன்னித்தீவு முழு வண்ணத்தில் வெளிவர ஆரம்பித்தது என்பதே. இதோ அந்த முதல் ஸ்ட்ரிப்:

Kanni Theevu 18921 15th Sept 2013 Sunday போனசாக இரண்டாவது ஸ்ட்ரிப்பும்:Kanni Theevu 18922 16th Sept 2013 Monday நண்பர்களே, நேரமின்மையால் பல தகவல்களின் பின்புலத்தை பற்றி எழுதாமல் வெறும் ஸ்கான் மட்டுமே அளிக்கிறேன். படித்து இன்புறுங்கள்:

1. Times Of India – Star Wars

The Times of India Chennai Editon Dated 5th Sept 2013 Page No 15 Star Wars Comics 

2. Deccan Chronicle – Super Man – Action Comics

Deccan Chronicle Chennai Chronicle Dated 3rd Sept 2013 Pg No 27 Superman Comics

3. Deccan Chronicle – TinTin Car Race

Deccan Chronicle Chennai Chronicle Dated 4th Sept 2013 Pg No 31 TinTin Car Race

4. Deccan Chronicle – Daley’s Comics Book

Deccan Chronicle Chennai Chronicle Dated 24th Aug 2013 Pg No 40 Daley  Comics

5.Deccan Chronicle – Disney’s Cartoon Characters

Deccan Chronicle Chennai Chronicle Dated 20th Aug 2013 Pg No 25 Disney Characters 

6. Salman Khan Inspires Gaming Character

Deccan Chronicle Chennai Chronicle Dated 20th Aug 2013 Pg No 22 Salman Khan Video Game

7. Anifest 2013 – News Update

Deccan Chronicle Chennai Chronicle Dated 23rd Aug 2013 Pg No 32  Animated Expressions

8. News about early reading Habits

The Hindu Chennai Edition Metro Plus Dated 22nd Aug 2013 Chennai Week Readin Habit

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Friday, August 23, 2013

4 Comic Cuts 51 – News 51: மகாபாரதம் ஃக்ராபிக் நாவல் + ஸ்டார் காமிக்ஸ் விமர்சனம் தினமலரில்

டியர் காமிரேட்ஸ்,

சமீப காலங்களில் பதிவுலகம் பக்கம் வருவதற்கே நேரமில்லாமல் இருப்பதால், இரண்டு மூன்று பதிவுகள் ஃட்ராப்ட்டிலேயே உறங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் அவற்றை வலையேற்ற முயற்சிக்கிறேன். அதற்குள்ளாக ஒரு இடைச்செருகலாக இந்த காமிக் கட்ஸ் பதிவு. நம்முடைய காமிக் கட்ஸ் பதிவுகளில் இது 51ஆவது பதிவு என்பது Stats ரீதியிலான சிறப்பு அம்சம்.

மகாபாரதம் - ஃக்ராபிக் நாவல் காணொளி வடிவில்: புகழ் பெற்ற காமிக்ஸ்/ஃக்ராபிக் நாவல் கதாசிரியர் Grant Morrisson பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரைப் பற்றி தேடினால் விக்கியும், கூகுளாண்டவரும் தேவைக்கு அதிகமான தகவல்களை தருவார்கள். இவருடன் பல ஃக்ராபிக் நாவல்களில் பணியாற்றிய என்னுடைய ஓவிய நண்பர் இவற்றைப்பற்றி மணிக்கணக்கில் புகழ்ந்து பேசி இவரைப்பற்றிய மதிப்பை எனக்குள் உயர்த்தி இருக்கிறார்.

இவருடன் நம்முடைய இந்திய காமிக்ஸ் விற்பன்னர்களான ஷரத் தேவராஜனும், கோதம் சோப்ராவும் இணைந்து இந்திய கதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த உருவாக்கிய நிறுவனமே Graphic India. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களையோ / திரைப்பட வரிசைகளையோ கூர்ந்து கவனித்தால் அவற்றில் பெரும்பாலானவை மேஜிக்கல் ரியாலிசம் (புராதான காலத்து கதை, ராஜா ராணி, விசித்திர ஜந்துக்கள், கடவுள்கள் மற்றும் அவர்களின் சார்ந்த கதைகள்) என்றே இருக்கும். ஒரு ஹாரி பாட்டரும், லார்ட் ஆப் தி ரிங்ஸ் தொடரும் மாத்திரமே இங்கே இல்லை. பல தொடர்கள், பல சினிமாக்கள், பல கதைகள்.

இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த மகாபாரதம் இங்கே ஃக்ராபிக் நாவல் மற்றும் காணொளி வடிவில் தயாரிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Deccan Chronicle Chennai Chronicle Saturay 10th Aug 2013  Mahabharatha in You Tube

சான் டியாகோ காமிக் கானில் க்ராண்ட் மோரிசன்னும் நம்ம கோதம் சோப்ரா மற்றும் சரத் தேவராஜன் உடன் இணைந்து மகாபாரதம் பற்றி கொடுத்த மிகவும் விரிவான பேட்டி இது. நேரம் கிடைக்கும்போது பொறுமையாக பாருங்கள். நம்முடைய இதிகாசத்தை அயல்நாட்டை சேர்ந்த ஒருவரின் மதிப்பீடாகவே இதனை நான் பார்க்கிறேன். நம்முடைய கதாபாத்திரங்களை அவர்கள் உச்சரிக்கும் விதமும், சில பெயர்களை உச்சரிக்க முடியாமல் சுருக்கி அழைப்பதும் நிஜம்மாகவே சிரிப்பை வரவழைக்கிறது. உதாரணமாக யுதிஷ்டிரன் (அதாங்க, நமகெல்லாம் தர்மர் என்று சொலப்படுவாறே, அவர்) பெயரை உச்சரிக்க கஷ்டப்பட்டு "யுதிஷ்" என்று அழைப்பதும், அதுவும் துரியோதனனே அவ்வாறு அழைப்பதும் முரண் நகையின் உச்சம்.

பகுதி 1 - நான்கு யுகங்களின் கதை: இந்த மகாபாரதம் தொடர் ஃக்ராபிக் நாவல் வடிவில் மட்டுமின்றி காட்சி தொடராகவும் உருப்பெற்று இருக்கிறது. க்ராபிக் இந்தியா நிறுவனத்தின் வலைதளத்தில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் ஐந்து பகுதிகள் வெளியாகி இருக்கின்றது. இதோ இதுதான் அந்த தொடரின் முதல் பகுதி.

பகுதி 2 - கண்ணனின் பேச்சு: ஜீவன் J காங்'கின் கைவண்ணத்தில் ஓவியங்கள் வழக்கமான பாணியிலேயே அமைந்து இருக்கின்றன. நம்முடைய நேர்த்தியான கட்டமைப்பு கொண்ட காமிக்ஸ் கதைகளை படித்தோருக்கு இந்த மாதிரியான ஓவிய ஒழுங்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ரசிக்கும்படியாகவே அமைந்து இருக்கிறது. மறக்காமல் பாருங்கள்.

பகுதி 3 - பாண்டவர்களின் மறு வருகை: வழக்கமாக க்ராண்ட் மோரிசன்னின் கதையமைப்பில் இருக்கும் டெம்பிளேட் வகையிலேயே இந்த கதையிலும் பீமனின் கதா பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நான் பார்த்த / படித்த மகாபாரதத்தில் கேட்டறியாத சில சம்பவங்கள் இந்த தொடரில் வருவதும் புதுமையாகவே இருக்கிறது.

பகுதி 4 -  பீஷ்மரின் கோபம்: இதுதான் நான் குறிப்பிட்ட அந்த பகுதி. யாராவது இப்படி ஒரு சம்பவம் நாம் பார்த்த / படித்த மகாபாரதத்தில் வருகிறதா? இல்லையா என்று பின்னூட்ட பகுதியில் தெரிவித்தால் நலம். கவிஞர்களுக்கு என்று ஒரு சுதந்திரம் வழங்கப்படுவதை போல, லாஜிக் விஷயத்தில் நம்ம சினிமா இயக்குனர்கள் ஒரு சுதந்திரம் எடுத்துக்கொள்வது போல இங்கே க்ராண்ட் மோரிசன் ஏதாவது சுதந்திரம் எடுத்துக்கொண்டு அவரே இந்த காட்சியை அமைத்தாரா என்பதே என் கேள்வி.

பகுதி 5 - உன் ரத்தத்தில் நான் குளிப்பேன் - சபதம்: தொடர்ந்து க்ராபிக் இந்தியாவின் இணையதளம், காணொளி பக்கம், டுவிட்டர் மற்றும் முகப்புத்தக பக்கங்களை கவனித்து ஒவ்வொரு வாரமும் புதிய பகுதியை கண்டு களியுங்கள். இதோ அந்த லின்க்குகள்:

ஃக்ராபிக் இந்தியா யூ டியூப் தளம்: http://www.youtube.com/graphicindia

ஃக்ராபிக் இந்தியா டுவிட்டர் ஹேண்டில்: http://twitter.com/graphicindia

ஃக்ராபிக் இந்தியா Facebook லிங்க்: http://www.facebook.com/graphicindia

ஓவியர் விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் - அயல்கிரகத்தில் ராஜா: புதியதாக இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் காமிக்ஸ் / க்ராபிக் நிறுவனங்கள் கையில் எடுக்கும் ஒரு தளம் - இதிகாச / புராண கால கதைகள். இந்தியா என்றாலே இப்படித்தான் என்று ஒரு காட்சி விரிந்து அது க்ளீஷே ஆகும் அளவிற்கு இப்படிப்பட்ட கதைகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. எவ்வளவோ கதை தளங்கள் இருக்கையில் இப்படி ஒன்றின் பின்னே ஓடி வருவதின் ரகசியம் எனக்கு இது வரையில் புரியவில்லை.

இப்படி இல்லாமல் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருந்த கதைகளில் நான் விரும்பி ரசித்து படித்தது ஒரு கதை வரிசையை. அதைப்பற்றி விரைவில் பதிவிடுகிறேன்

அது வரையில் இந்த கதையை பற்றி சற்று கவனிப்போம். சென்ற ஆண்டு டிஸ்னி மூலம் திரைக்கு வந்த ஜான் கார்ட்டர் திரைப்படம் நினைவிருக்கிறதா? டார்ஜான் கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் அவர்களின் கதையான இது நூறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் திரைக்கு வந்தது. ஒரு பூலோகவாசி திடீரென்று அயல்கிரகத்திற்கு வந்தடைகிறான். அந்த உலகமே அவனுக்கு புரியாத புதிராக இருக்கிறது. திடீரென்று அவன் வேட்டையாடப் படுகிறான். தப்பிக்கும்போது நண்பர்கள் உருவாகிறார்கள், பின்னர் அந்த கிரகத்தில் நடக்கும் உள்நாட்டு அரசியலில் நுழைகிறான்.

இப்போது நமது செய்தியில் இருக்கும் காமிக்ஸ் பற்றிய செய்தியை பார்ப்போம். D.I. காமிக்ஸ் (Digitally Inspired Comics) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நிறுவனம் சுராஜ் குமாரால் இயக்கப்படுகிறது. இவர்களின் முதல் வெளியீடாக "அயல் கிரகத்தில் ராஜா - Alien Raja" என்ற காமிக்ஸ் கதையை ஓவியர் விஜயன் அவர்களின் துணையுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்.

நம்முடைய இந்திய ராஜா ஒருவர் (ராஜா என்றாலே அது புராதான காலம்தானே?) அயல் கிரகத்தில் நிகழ்த்தும் சாகசங்களே இந்த கதையின் மையகருவாக  அமைக்கப்பட்டு இருப்பது இதன் ஸ்பெஷல். இந்த ஆண்டின் இறுதியில் மும்பையில் நடைபெறவிருக்கும் காமிக் கானில் இந்த கதையை புத்தக வடிவில் வெளியிட உள்ளார்கள்.

Deccan Chronicle Chennai Chronicle Saturay 10th Aug 2013  DI Comics

பேட் மேன் & ராபின் - என்ன கொடுமை சார் இது? ஏற்கனவே டின்டின் பற்றி இப்படி ஒரு தகவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கிளம்பியது இந்த தளத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அதைப்போலவே கிளப்பப்பட்டுள்ளது ஒரு புதிய கதை - பேட் மேன் & ராபின் இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாம்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ரிட்டையர் ஆன அனைத்து கிரிக்கெட் விளையாட்டாளர்களும் தங்களது புத்தகம் விற்பனை ஆக சச்சின் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் எதையாவது எழுதுவது என்பதை ஒழுக்க நெறியாகவே கடைப்பிடித்து வரும் இந்த வேளையில், சூப்பர் ஹீரோக்களை பற்றிய ஒரு புத்தகம் எழுதும்போது என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்து செய்தது போல நடந்துள்ளது இந்த விஷயம்.

மார்க்கோ மேன்கசொலா (பெயரிலேயே மேன் இருப்பதை கவனியுங்கள்) என்கிற பத்தி எழுத்தாளர் (சொல்லாடல் உபயோகம் - நன்றி பேயோன்) தன்னுடைய புத்தக விற்பனை சூடுபிடிக்க இப்படி ஒரு விஷயத்தை கிளப்பியுள்ளார். மார்க்கோ தன்னுடைய சூப்பர் ஹீரோக்களின் காதல் (காம?) வாழ்க்கை என்கிற புத்தகம் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அதைப்பற்றி ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயம் கிளம்பினால் ஒழிய அந்த புத்தகத்தை சீண்டுவாரில்லை என்பதால் இப்படி எழுதி இருக்கிறார் (என்பது என் எண்ணம்).

Deccan Chronicle Chennai Chronicle Wednesday 7th Aug 2013  Batman and Robin

ஸ்டார் காமிக்ஸ் - தின மலர் புத்தக விமர்சனம்: ஸ்டார் காமிக்ஸ் இதழ் வெளியீடு சென்னையில் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. அதனைப்பற்றிய செய்திகள் தினமலர், தி இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினசரி  போன்ற காலை நாளிதழ்களிலும், ஜெயா டிவி, ஜெயா செய்திகள் போன்ற ஊடகங்களிலும் இடம்பெற்றது. குமுதம் (அ) குங்குமம் மற்றும் தி சன்டே இண்டியன் ஆகிய வாரந்திர இதழ்களிலும் வெளியானது. நண்பர் சுந்தர புத்தன் அவர்கள் அட்டகாசமான ஒரு கட்டுரையை அப்போதுதான் எழுதி எனக்கு அறிமுகம் ஆனார். இப்போது அந்த கட்டுரைகளை எல்லாம் தேடிக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 முறை மடிக்கணினி மாற்றியதால் பல போட்டோக்கள், ஸ்கான்கள் எங்கே இருக்கின்றன என்பதே தெரியாமல் இருக்கிறது. நண்பர்கள் யாரிடமாவது இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

ஸ்டார் காமிக்ஸின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நண்பரும் எழுத்தாளருமான திரு எஸ் ரா அவர்கள் இதனைப்பற்றி ஒரு சிறு குறிப்பாக தன்னுடைய கட்டுரை ஒன்றில் போட்டோவுடன் குறிப்பிட்டு இருந்தார் (7ஆவது பத்தி). இதோ அதற்க்கான லிங்க்: http://www.sramakrishnan.com/?p=522

Star Comics DinaMalar 25122007

பின் குறிப்பு: இந்த ஸ்டார் காமிக்ஸ் இப்போதும் கூட (சில இதழ்கள் மட்டுமே) சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக கடலில் விற்பனைக்கு கிடைக்கின்றது. தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளவும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Related Posts with Thumbnails