Pages

Tuesday, December 25, 2012

22 Comic Cuts 48-News 48: குமுதம் அரசு பதில்களில் காமிக்ஸ், ஆனந்தவிகடன் லூசுப்பையன் பகுதியில் இரும்புக்கை மாயாவி, வேலையை விட்டுவிட்டு ப்ளாக்கராக மாறிய சூப்பர்மேன்

டியர் காமிரேட்ஸ்,

வெல்கம் பேக். நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு பதிவிட்டதாலோ என்னவோ தெரியவில்லை, சென்ற பதிவிற்கு பிரம்மாதமான வரவேற்ப்பு.ஒருவேளை நடுவில் ஒரு நான்கு மாதங்கள் பதிவுலகம் பக்கம் வராமல் இருந்ததால் அதற்க்கான ஆதரவுதான் இது என்று நண்பர் இரவுக்கழுகு தெரிவித்தார். அப்படியும் இருக்குமோ என்று வியந்தவாறு இன்று காலை குமுதம் இதழை படித்தபோது அரசு பதில்களில் நம்முடைய காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழில் வெளிவந்த காற்றில் கரைந்த கப்பல்கள் பற்றிய பதிலை படித்தவுடன் ரொம்ப நாட்களாக நம்முடைய காமிக் கட்ஸ் பதிவுகளை இடாமல் இருப்பது நினைவுக்கு வந்தது. உடனடியாக கடந்த இரண்டு மாதங்களில் வெளிவந்த முக்கியமான காமிக் கட்ஸ்'களின் தொகுப்பை இங்கே இந்த பதிவில் வழங்கலாமென்று முடிவெடுத்ததின் விளைவே இந்த பதிவு.

குமுதம் அரசு பதில்கள்: தமிழில் அதிகமாக படிக்கப்படும் வார இதழாகிய குமுதத்தில் மக்கள் விரும்பி படிப்பது / முதலில் படிப்பது அரசு பதில்கள் பகுதியே. நம்முடைய லயன் முத்து காமிக்ஸ் இதழ்களில் எப்படி ஹாட் லைன் / காமிக்ஸ் டைமை நாம் முதலில் படிப்பது போல குமுதத்தில் பெரும்பான்மையினரால் முதலில் படிக்கப்படுவது அரசு பதில்களே.

ஆரம்பத்தில் அரசு என்பது யார்? என்றே ஒரு விவாதம் நடந்துக்கொண்டு இருந்தது. ஆனால் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இப்போதைய "அரசு" எனக்கு மிகவும் பரிச்சையமானவ்ர். நம்முடைய லயன் முத்து காமிக்ஸ் இதழ்கள் மீது தீராக் காதல் கொண்டவர். சென்ற ஆண்டு புத்தகத் திருவிழாவின்போது நம்முடைய காமிக்ஸ் ஸ்டாலுக்கு வந்து நம்முடைய கம்பேக் ஸ்பெஷல் மற்றும் ஃபுல் செட் ஒன்றினையும் வாங்கிக்கொண்டு சென்றவர் என்பது குறிப்பிட தக்கது.

இந்த அரசு பதில்கள் பகுதியில் நமது காமிக்ஸ் பற்றி மிகவும் பெருமையாக எழுதப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி அரசு, நன்றி குமுதம், நன்றி அதன் எடிட்டர் அவர்களுக்கு.

 

Kumudam Tamil Weekly Magazine Dated 02012013 On Stand 25122012 Arasu Padhilgal  Page No 34 35
Kumudam Tamil Weekly Magazine Dated 02012013 On Stand 25122012 Arasu Padhilgal  Page No 34 35

ஆனந்த விகடன் லூசுப்பையன்: கடந்த பல வருடங்களாக விகடனின் முகவரியாக மாறிவிட்ட நமது லூசுப் பையன் பகுதியில் நமது முத்து காமிக்ஸின் முகவரி (சொல்லப் போனால் தமிழ் காமிக்ஸின் முகவரி?!?) ஆக இருக்கும் (இருந்த?) இரும்புக் கை மாயாவி அவர்களை பற்றி கிண்டலடிக்கும் வகையில் சொல்லப் பட்டு இருந்தது.

பிரபலமான ஒரு பகுதியில் நம்மை பற்றி பேசுகிறார்கள் என்றாலே அது நம்முடைய புகழை பற்றித்தான் சொல்லும். அந்த வகையில் நன்றி லூசுப் பையன், நன்றி ஓவியர் கண்ணா, நன்றி எடிட்டர் of ஆனந்த விகடன்.

Anandha Vikatan Tamil Weekly Issue Dated 26092012 Loosup Paiyan Gig Page No 110 Lion Muthu Comics Mention Panel
Anandha Vikatan Tamil Weekly Issue Dated 26092012 Loosup Paiyan Gig Page No 110 Lion Muthu Comics Mention Panel

சித்திர பெரிய புராணம்: ஓவியர் - நூலாசிரியர் ராஜம் அவர்களை நம்முடைய தொடர் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்றாக பரிச்சயம் உண்டு. அவரது லேட்டஸ்ட் படைப்பை பற்றி தினமலர் நாளிதழின் விமர்சன அறிமுகப் பகுதி இங்கே உங்களின் பார்வைக்கு. வாங்கிப் படியுங்கள், மோசமில்லை.

DinaMalar Tamil Daily Page No 10 Dated Sunday 28th Oct 2012  Chithira Periya Puraanam
DinaMalar Tamil Daily Page No 10 Dated Sunday 28th Oct 2012  Chithira Periya Puraanam

M.S.சுப்புலஷ்மி அவர்களைப்பற்றிய காமிக்ஸ்: சென்ற ஆண்டு ஜூன் மாதம் லக்ஷ்மி தேவநாத் அவர்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றிய ஒரு கிராஃபிக் நாவலை வெளியிட்டார். அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வெளியீடு அது. எந்த அளவிற்கு அதற்க்கு முக்கியத்துவம் தரப்பட்டது எனில் டெக்கன் குரோனிக்கல் நாளிதழின் சென்னை எடிட்டரே அதனைப்பற்றி நேரிடையாக ஒரு விமர்சனம் எழுதி இருந்தார். அதுமட்டுமில்லாமல், தி ஹிந்து,ஆனந்த விகடன், டைம்ஸ் ஆப் இந்திய என்று பல மீடியா வெளிச்சங்கள் இந்த புத்தகத்தின் மீது விழுந்தது. ஒக்கே, ஒக்கே, தமிழ் காமிக்ஸ் உலகிலும் ஒரு சிறப்பு பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.

இப்போது,அமர் சித்ரா கதா நிறுவனம் மூலம் M.S.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றிய ஒரு கிராஃபிக் நாவல் வெளியிடப் பட்டுள்ளது. அதனைப்பற்றி வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு இங்கே:

Deccan Chronicle Chennai Chronicle Page No 02 Dated 10th Dec 2012 Sunday ACK Comics on MS Subbulakshmi
Deccan Chronicle Chennai Chronicle Page No 02 Dated 10th Dec 2012 Sunday ACK Comics on MS Subbulakshmi
Indian Express Chennai Edition Dated 10122012 News on ACK MS Subbulakshmi Graphic Novel
Indian Express Chennai Edition Dated 10122012 News on ACK MS Subbulakshmi Graphic Novel
The New Indian Express Dated 12122012 Hyd Edition Graphic Biography on Ms
The New Indian Express Dated 12122012 Hyd Edition Graphic Biography on Ms
Kutcheri Bhavan News Update on Lakshmi Devnath 2nd Graphic Novel
Kutcheri Bhavan News Update on Lakshmi Devnath 2nd Graphic Novel

Calvin & Hobbes பற்றிய ஒரு அருமையான Search எஞ்சின்: உலக அளவில் புகழ் பெற்ற தினசரி காமிக் ஸ்ட்ரிப் Calvin & Hobbes தொடர்களை பற்றி அறியாதவர்கள் மிகவும் குறைவானவர்களே இருக்க முடியும். இப்போது கூட தி ஹிந்து,டெக்கன் குரோனிக்கல் என்று தினசரி ஸ்ட்ரிப் ஆகவும், சன்டே ஸ்ட்ரிப் ஆகவும் கலக்கிக் கொண்டு இருக்கும் இந்த தொடரின் அனைத்து விஷயங்களையும் முழுமையாக ஒரு வெப்சைட்டில் உட்புகுத்தி இந்த காமிக்ஸ் ஸ்ட்ரிப் தொடரைப்பற்றிய களஞ்சியமாக (அட, இயக்குனர் களஞ்சியம் கிடையாதுங்க, செய்தி களஞ்சியம்) உருவாக்கி இருக்கிறார்.

நம்முடைய லயன், முத்து காமிக்ஸ் பற்றியும் இப்படி ஒரு காமிக்ஸ் Search எஞ்சின் அமைப்புடைய தளம் அமைக்க விருப்பமே. உதவ விரும்பும் டெக்னிகல் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Times Of India Chennai Edition Page No 13 Dated 10th Dec 2012 Sunday Calvin and Hobbes  Search
Times Of India Chennai Edition Page No 13 Dated 10th Dec 2012 Sunday Calvin and Hobes  Search

ரிப்போர்டர் வேலையை விட்டுவிட்டு ப்ளாக்கராக மாறிய சூப்பர்மேன்: Even though, இரண்டு மாதங்களுக்கு முன்பான நியூஸ் ஆக இருந்தாலும்  இது ஒரு முக்கியமான நியூஸ் என்பதால் இங்கே வெளியிடப்படுகிறது. தன்னுடைய நியூஸ் ரிப்போர்டர் வேலையை கிளார்க் கென்ட் (அதாவது சூப்பர்மேன்) ராஜினாமா செய்து விட்டார். இனிமேல் ஒரு ப்ளாக்கராக இருப்பார் என்ற இந்த தகவல் பல தினசரிகளில் அலசப்பட்டு இருந்தது. CNN-IBN நியூஸ் சேனலில் கூட இதனைப்பற்றிய ஒரு சிறப்பு தகவல் அடங்கிய கேப்சியூல் ஒளிபரப்பினார்கள்.

Deccan Chronicle Daily Chennai Edition Chennai Chronicle Page No 23 Dated Thursday 25th Oct 2012 What is Clark Kents Next Job
Deccan Chronicle Daily Chennai Edition Chennai Chronicle Page No 23 Dated Thursday 25th Oct 2012 What is Clark Kents Next Job
The Hindu Daily Chennai Edition Page No 14 Dated  Thursday 25th Oct 2012 Superman Quits Daily Planet
The Hindu Daily Chennai Edition Page No 14 Dated  Thursday 25th Oct 2012 Superman Quits Daily Planet
Times Of India Daily Chennai Edition Page No 16 Dated Thursday 25th Oct 2012 Superman Goes Digital
Times Of India Daily Chennai Edition Page No 16 Dated Thursday 25th Oct 2012 Superman Goes Digital
Times Of India Daily Chennai Edition Page No 13 Dated Sunday 28th Oct 2012 Superman Quits Again
Times Of India Daily Chennai Edition Page No 13 Dated Sunday 28th Oct 2012 Superman Quits Again

மற்ற காமிக்ஸ் தகவல்கள்: இவை இரண்டுமே Self Explanatory நியூஸ் வகையை சார்ந்தவை என்பதால் படித்து இன்புறுங்கள்.

Times Of India Daily Chennai Edition Times Life Page No 4 Dated Sunday 28th Oct 2012 Archie Theory
Times Of India Daily Chennai Edition Times Life Page No 4 Dated Sunday 28th Oct 2012 Archie Theory
The Hindu Daily Chennai Edition Page No 8 Sunday Magazine Dated  Sunday 28th Oct 2012 Childrens Books
The Hindu Daily Chennai Edition Page No 8 Sunday Magazine Dated  Sunday 28th Oct 2012 Childrens Books

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

22 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு !

    வெல்கம் பேக். அனைவருமே காமிக்ஸ் பற்றிய ஸ்கான்'களை வெளியிட முடியும். ஆனால் இதுபோல தகவல் தொகுப்பை தொடர்ந்து வெளியிட ஒரு திறமையான நியூஸ் சென்ஸ் தேவை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இன்றைய குமுதம் அரசு பதில்கள் பகுதியில் நம்முடைய முத்து காமிக்ஸ் பற்றியும், லாரன்ஸ் டேவிட் சாகசம் செய்துள்ள காற்றில் கரைந்த கப்பல்கள் பற்றியும் அருமையாக ஒரு பதிலில் எழுதப்பட்டுள்ளது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

    அதிலும் குறிப்பாக "வெளி இடங்களில்கூட ஆங்கில வழவழ புத்தகங்கள படிப்போரின் மத்தியில் நான் முத்து காமிக்ஸை சந்தோஷமாக , கூச்சமின்றி படிப்பேன்" என்று கூறி உள்ளது பெருமையாக உள்ளது.

    ReplyDelete
  3. அரசு காமிக்ஸ் ரசிகரா? அருமையான தகவல்! வலை கனகாம்பரத்தில் ஒரு தகவல் களஞ்சியமே நடத்தி வரீங்க! மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  4. காலையிலேயே இந்த பதிவினை எதிர்பார்த்தேன். குமுதம் ஆன்லைனில் ஏதோ கோளாறு போலிருக்கிறது.

    காலையில் எடிட்டர் தளத்தில் இந்த தகவலை ஒருவர் பின்னூட்டமிட்ட நேரத்தில் இருந்து குமுதம் ஆன்லைனில் படிக்க முயற்சி செய்துக்கொண்டு இருதேன்.

    இப்போது இந்த பதிவின் மூலம் என்ன எது என்பதை தெரிந்துகொண்டேன். நன்றி.

    ராஜேஷ். கே


    ReplyDelete
  5. சின்ன படமாச்சே என்று அலட்சியம் செய்த குஜயகாந்த் பகுதியை இவ்ளோ நேர்த்தியாக வெளியிட்டு முடி சூடா ரசிகனாகவே என்றும் உயர்ந்து நிற்கிறீர் தலைவரே!

    ReplyDelete
  6. குமுதம் வாழ்க. குமுதம் அலுவலகத்தில் காமிக்ஸ் படிக்கும் நண்பர் வாழ்க.

    ReplyDelete
  7. டியர் விஷ்வா , மீண்டும் ஒரு கலக்கல் பதிவு , அப்படியே கிளார்க் கென்னட்டோட பிளாக்கர் முகவரி கண்டுபிடிச்சு ஷேர் பண்ணுங்க ...

    ReplyDelete
  8. வழமை போல அருமையான துணுக்குகள் நிறைந்த பதிவு.
    வாழ்த்துக்கள் நண்பரே.இதுபோல தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  9. 48 காமிக்ஸ் நியூஸ் பதிவுகளா? ஆச்சர்யம் தான் தொடர வாழ்த்துக்கள்.


    ReplyDelete
    Replies
    1. 48 காமிக்ஸ் நியூஸ் பதிவுகளா? ஆச்சர்யம் தான் தொடர வாழ்த்துக்கள்.

      ரீ.சிவகுமார்.

      Delete
    2. நன்றி நண்பரே, உங்கள் பெயர் டிலீட் ஆகிவிட்டது. apologies.

      Delete
  10. பல நாட்களுக்கு பிறகு காமிக்ஸ் கட்ஸ்.. நல்ல நிறைய தகவல்கள்.. நன்றி.. வரப்போற superman படத்தில் பிளாக்கர்ஆக வருவார் என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  11. சூப்பர் நியூஸ் போஸ்ட்

    ReplyDelete
  12. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  13. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சூப்பர் பதிவு விஸ்வாஜி :))
    .


    ReplyDelete
  14. சிறப்பான பதிவு தொடர்ந்து கலக்குங்க.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. காமிக்ஸ் பற்றிய தகவல்கள் பத்திரிகையில் வருவது மனநிறைவை அளிக்கிறது. தொகுத்து வழங்கும் தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. THALAI ADUTHTHU NEW YEAR SPECIAL ONNU PODUNGA PLS!

    ReplyDelete
  17. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இனிக்கும் NBS பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  18. புத்தக கண்காட்சி முடியும் தருவாய் வந்தும் அங்கு கிடைக்கக்கூடிய அறிய நூல்களை பற்றி இன்னும் வெளியிடாமல் ம்ம்ம்ம்ம்ம்...... என்ன ஒரு வில்லத்தனம்.......

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails