Pages

Tuesday, April 09, 2013

35 லயன் காமிக்ஸ்: ஹாட் & கூல் ஸ்பெஷல் April 2013

டியர் காமிரேட்ஸ்,

வெல்கம் பேக். இந்த ஆண்டு முழுவதுமே பதிவிடக்கூடாது என்று ஒரு "நியூ இயர் ரெசல்யூஷன்" எடுத்து இருந்தேன். அதனை நூறு நாட்கள் கஷ்டப்பட்டு கடைபிடிக்கவும் செய்தேன். ஆனால் சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த பதிவு. இது தொடருமா? என்று நீங்கள் கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் நம்ம வேலு நாயக்கரின் "அதே பதில்" தான் (டோட்ட டோட்ட டைங்க், டோட டொடைங்க்).

கடந்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பித்த தமிழ் காமிக்ஸ் உலகின் கம்பேக், கிட்டத்தட்ட இந்த ஆண்டில் முழுமை பெரும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையை மெய்பிக்கும் வகையில் எடிட்டர் விஜயன் அவர்களும் தொடர்ந்து ஏதேனும் ஒரு வகையில் நம்மை சர்ப்ஃப்ரைஸ் செய்துக்கொண்டே இருக்கிறார்.

கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு "டபுள் ப்ளஃப்" என்றொரு பதம் பரிச்சயமாகி இருக்கும். ஒரு சிறிய உதாரணம் மூலம் இதனை விளக்க முயல்கிறேன் (மற்றவர்கள் தயவு தாட்சண்யம் இல்லாமல் இந்த பத்தியை ஸ்கிப் செய்துவிடவும்). களத்திற்கு புதியதாக வந்துள்ள பேட்ஸ்மேனை அவுட் செய்ய, பந்துவீச்சாளரும் கேப்டனும் (அட, கிரிக்கெட் கேப்டனுங்க) சேர்ந்து ஒரு வியூகம் அமைப்பார்கள். தேர்ட் மேனிலும், ஸ்கொயர் லெக்கிலும் ஃபீல்டர்களை செட் செய்வார்கள். அதனை பார்க்கும் பேட்ஸ்மேன் "ஓகோ, இந்த பந்து பவுன்சர் ஆகவே இருக்கும்" தன்னை தயார் படுத்திக்கொண்டு பேக் ஃபுட்டில் சென்று ஹுக் செய்ய தயாராக இருப்பார்.

ஆனால், சற்றே புத்திசாலியான அந்த பந்துவீச்சாளர் அப்போது பவுன்சர் போடாமல், யார்க்கர் ஒன்றினை வீசி LBW அல்லது கிளீன் போல்ட் செய்து விடுவார். ஏனென்றால் பேக் ஃபுட்டில் யார்க்கரை விளையாடுவது கடினம். இப்படி ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன் என்று குறிப்பால் உணர்த்தி அதற்க்கு நம்மை தயார் படுத்தி விட்டு வேறோன்றினை அளிப்பதற்கே டபுள் ப்ளஃப் என்று பெயர். இதனைத்தான் நமது எடிட்டரும் "லெப்டில் இன்டிகேட்டர் போட்டு, ரைட்லே கையைக் காட்டி விட்டு, நேராய்ப் போகும்" வேலை என்று சொல்கிறார்.

ஒக்கே, விளக்கம் கொடுத்தது எல்லாம் சரி. இந்த இதழில் அப்படி என்னப்பா சர்ப்ஃரைஸ்? என்று கேட்பவர்களுக்கு ........ தொடர்ந்து படியுங்கள்.

ஹாட் & கூல் ஸ்பெஷல்: முதலில் இந்த இதழிற்கு பெயர் சூட்டிய வாசக அன்பர் காமிரேட் P கார்த்திகேயன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. புதிய வாசகர்கள் என்னடா இது, ஒவ்வொரு புத்தகமும் நூறு ருபாய் விலையில் தானே வருகிறது, அப்போது எதற்கு ஒவ்வொரு இதழிற்கும் ஒரு ஸ்பெஷல் பெயர் என்று யோசிக்கலாம். ஆனால் லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு இப்படி ஒரு ஸ்பெஷல் பெயரை கொண்ட புத்தகம் என்று நினைவு வைத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கின்றது. அதற்காகவே ஒவ்வொரு இதழிற்கும் ஒரு ஸ்பெஷல் பெயர் வைக்கப்படுகின்றது.

Lion Comics No 217 Hot n Cool Special Front Cover Lion Comics No 217 Hot n Cool Special Back Cover
Lion Comics No 217 Hot n Cool Special Front Cover Lion Comics No 217 Hot n Cool Special Back Cover

முன்பக்க அட்டைப்படம்: ஓவியர் மாலையப்பன் மற்றும் டிசைனர் கண்ணன் அவர்களின் கூடு முயற்சியில் வெளிவந்துள்ள இந்த அட்டைப்படம் மிகவும் சிறப்பான ஒன்றாகும். அதற்க்கு முழு முதல் காரணம் இந்த இதழின் அட்டையில் இருக்கும் வண்ணக் கலவையே

குறிப்பாக ஹீரோவின் காலடியில் (ராமர் கலர் லைட் ப்ளூ வண்ணத்தில்) ஒரு இடி போன்ற டிசைனை உருவாக்கி (மூலக்கதை அட்டையில் இருந்த) வெறுமையான அமைப்பை மாற்றியது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றால் அதற்க்கு மேலே (ராமர் அப்பா கலர் டார்க் ப்ளூ வண்ணத்தில்) முழு அட்டையையும் ஒரு டார்க் மூடிற்கு நம்மை வரவழைத்தது அபாரம் என்றே சொல்வேன்.

என்னதான் பச்சை கலர் கோட்-சூட் கண்ணை உறுத்துகிறது என்று சொன்னாலும் (மூலக்கதை அட்டையில் இருந்த) க்ரே கலர் கோட்-சூட்டை விட இது அட்ராக்டிவ் ஆகவே இருக்கிறது என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது (என்னிடமும் ஒரு பச்சை நிற கோட் இருப்பதால் இப்படி சொல்லவில்லை, நம்புங்கள்).

மேலும் சமீப காலங்களில் நமது நண்பர்கள் கூறும் சென்சார் இந்த இதழின் அட்டையிலேயே அமலுக்கு வந்திருப்பதை காண கூர்மையான பார்வையும், ........ வேண்டாம் விடுங்க. ரசா,பாசமாகிவிடும்.  இங்கே க்ளிக் செய்து மூலக்கதை அட்டையை ஒரு முறை பார்த்து விட்டு இந்த அட்டையை பாருங்கள்.

என்ன, வித்தியாசத்தை கண்டறிய முடியவில்லையா? ஸ்கர்ட்'டின் உயரம் கீழே அதிகரித்து இருப்பதையும், தேநீர் சட்டையில் உயர்ந்து இருப்பதையும் காணுங்கள். தமிழ் நாட்டில் தமிழ் சினிமா படங்களுக்கு சென்சார் சர்டிஃபிகேட் வழங்கும் பக்கிரிசாமி அவர்களோ, அல்லது ஆந்திராவில் இருக்கும் தனலட்சுமி அவர்களோ கூட இந்த அளவிற்கு கூர்ந்து கவனிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்

பின் பக்க அட்டைப்படம்: இங்கே பதிவில் (சொந்த ஹோம் தளங்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி போல) அட்டகாசமாக காட்சியளிக்கும் பின் அட்டைப்படம் நேரில் பார்க்கும்போது அயல் நாடுகளில் அடிபட்டு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிபோல இருக்கிறது. ஏன் என்று பார்ப்பதற்கு முன்பாக அந்த அட்டைப்பட டிசைனை பாரட்டிவிடுவோம்.

உண்மையிலேயே பின்பக்க அட்டைப்படமும் அங்கு இருக்கும் பஞ்ச் டையலாக்குகளும் பிரம்மாஆஆதம்ம்ம்ம்ம்ம்ம்ம். இந்த சிறப்பு இதழிற்கு ஏன் ஹாட் & கூல் ஸ்பெஷல் என்று பெயர் வந்தது என்பதை விளக்கும் வகையில் "ஒரு போராளி ஜென்டில்மேன் ஆவது ஹாட்" & "ஒரு கோமாளி ஜென்டில்மேன் ஆவது கூல்" என்று அருமையாக வந்திருக்கிறது பின் பக்க அட்டை.

ஆனால், ஏற்கனவே டார்க் கலரில் ஒரு பார்டர் இருக்க, அதற்க்கு உள்ளே வெள்ளையில் ஒரு பார்டர் டிசைன் அமைய, அதையும் தாண்டி ஒரு போட்டோ ப்ரேம் பார்டர் வந்து சிக் பில் தலையில் பாதியை மறைப்பது கொஞ்சம் ஓவரே என்றாலும், பேட்டர்ன் அற்புதமாக இருப்பதால் அதுவும்கூட ஓக்கேதான். ஆனால் அதற்க்கு உள்ளே இருக்கும் படம் லோ ரெசல்யூஷனில் இருப்பதுதான் இந்த இதழிற்கு திருஷ்டி போட்டு. ஏன் இப்படி ஆனது? என்பது எனக்கு தெரிந்து இருந்தாலும், ஹ்ம்ம் திருஷ்டி போட்டுதான்.

   
Lion Comics No 217 Hot n Cool Special Front Inner Cover Lion Comics No 217 Hot n Cool Special Page No 03 Comics Time

முதல் சர்ப்ஃரைசாக ஜூன் மாத டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் வெளியீடு என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும் பூத வேட்டை இதழைப்பற்றி ஒரே ஒரு சிந்தனையை உங்கள் மனதில் தூவி விட்டு செல்கிறேன்: இது டெக்ஸ் வில்லரின் ஐம்பதாவது இதழ் அல்ல. காமிரேட்டுகள் விரும்பினால் (பல வருடங்களாக) கிடப்பில் இருக்கும் டெக்ஸ் வில்லரின் அட்டவணை மற்றும் அட்டைப்படங்களை கொண்ட பதிவை இங்கே தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் இடலாம். டெக்ஸ் ரசிகர்களுக்கு வெறியர்களுக்கு இது சரியான வேட்டையாக இருக்கும். குறிப்பாக இன்று பிறந்த நாள் கண்ட சேலம் டெக்ஸ் விஜயராகவன் போன்ற ரசிகர்களுக்கும், சென்ற ஆண்டே இந்த பதிவைப்பற்றி விசாரித்த "டெக்ஸ் ஃபேன்" ஸ்ரீ ராமிற்கும் ஒரு விருந்தாக அந்த பதிவு இருக்கும். 

டேஞ்சர் டையபாலிக் கதை ஏற்கனவே ஒன்று தமிழில் வந்துள்ளது. இரண்டாவது  கதையாக (இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து) வரவிருக்கும் கதை "குற்றத் திருவிழா". குற்றவியல் சக்கரவர்த்தி ஸ்பைடர் இடத்தினை (தற்காலிகமாகவேனும்) டையபாலிக் நிரப்புவார் என்றே நம்புவோம்.

ஹாட் லைன் காமிக்ஸ் டைம்: நமது பதிப்பக வெளியீடுகளில் பெரும்பான்மையான வாசகர்கள் முதலில் படிக்கும் பகுதி நமது எடிட்டரின் கைவண்ணத்தில் லயன் காமிக்ஸ் இதழ்களில் "ஹாட் லைன்" பகுதியும், முத்து காமிக்ஸ் இதழ்களில் "காமிக்ஸ் டைம்" பகுதியும் தான். ஆனால் இந்த இதழ் லயன் காமிக்ஸ் என்றாலும் இதில் காமிக்ஸ் டைம் என்று வந்து இருப்பதைக்கூட விட்டுவிடலாம், ஆனால் "எனது எழுத்துக்களிலிருந்து உங்களுக்கு ஒரு ப்ரேக்" என்று சொல்லி இருப்பதைத்தான் பொறுத்துக் கொள்ளவே இயலாது என்கிறேன்.

எடிட்டரின் இந்த அடாத செயலை கண்டித்து இன்றுமுதல் தொடர்ந்து வாழைப்பூ வடை சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன். இந்த அரச்சீற்றத்தில் பங்குபெற விரும்புவோர் உடனடியாக வாழைப்பூ வடையை சாப்பிட்டு எடிட்டருக்கு தங்களது கண்டனத்தை போட்டோ, ஸ்க்ரீன்ஷாட், வீடியோ  மூலமாக தெரியப்படுத்துங்கள். அடுத்த வாரம் சிவகாசி செல்லலாம் என்று இருக்கிறேன், அப்போது சுடச்சுட ஒரு டஜன் வாழைப்பூ வடையை பார்சல் கட்டிக்கொண்டு செல்ல உத்தேசம்.

 

Lion Comics No 217 Hot n Cool Special Wayne Shelton Story 1st Page Lion Comics No 217 Hot n Cool Special Wayne Shelton Story Sample Page
Lion Comics No 217 Hot n Cool Special Wayne Shelton Story 1st Page Lion Comics No 217 Hot n Cool Special Wayne Shelton Story Sample Page

ஒரு ஒப்பந்தத்தின் கதை: கதாசிரியர் வான் ஹாம், அடிதடி, சண்டை மசாலாப் பட ரசிகர்களுக்காக இந்த கதையை ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது. பின்னே என்னங்க, விளம்பர இடைவேளைக்கு பிறகு கதை தொடரும் என்று நமது தொலைக்காட்சிகளில் வருவதுபோல சண்டைக்காட்சிகளுக்கு பிறகு கதை தொடரும் என்று கதையின் நடுவில் அடிக்கடி சண்டை ப்ரேக் விடுகிறார். மற்றபடி  கதை என்று பார்த்தால் பிரம்மாதமாக ஒன்றுமில்லை தான்.

ஆனால் மூன்று பாக கதைகளில் மூன்றாவதாக வருவது க்ளைமேக்ஸ்  தானே? க்ளைமேக்ஸில் சண்டையில்லாமல் இருந்தால் கல்யானவிருந்தில் பாயாசம் இல்லாதது போல குறையாகவே இருக்கும்.ஆகவே முதல் இரண்டு பாகங்களுக்கு இதுவே சரியான முடிவு. ஒருமுறை முதல் இரண்டு பாகங்களை படித்துவிட்டு, கதாபாத்திரங்களை நினைவில் கொண்டுவந்துவிட்டு பிறகு இந்த மூன்றாம் பாகத்திற்கு நுழைவது நலம்.

எடிட்டர் ஸ்பெஷல் ஆக வெளியிட்டு இருக்கும் இந்த சாம்பிள் பக்கத்தில் வேய்ன் ஷெல்டன் அந்த பெண்ணிடம் "பல்பு வாங்குவது" போல இருந்தாலும், கதையின் இறுதி பகுதியில் இதற்காக வட்டியும், முதலுமாக ஒரு செம பன்ச் வைத்து இருக்கிறார் கதாசிரியர். அநேகமாக அவர் ரஜினிகாந்த், விஜயஷாந்தி நடித்த மன்னன் படத்தின் ரசிகராக இருப்பார் போலும்....

இதுவரையில் வேய்ன் ஷெல்டன் கதைகள் (அஃபீஷியலாக) ஆங்கிலத்தில் வெளிவந்தது கிடையாது. ஆனால் பெங்களூருவில் நமது காமிக்-கான் முடிந்த மறுநாள் சினிபுக் நிறுவனத்தினர் மூலமாக இந்த தொடரின் முதல் பாகம் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே லார்கொ வின்ச் தொடரை படித்துவிட்டு அதனை படமாக எடுப்பதற்கு இந்திய சினிமா உரிமையை வாங்கிய ஹீரோவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்தேன். (இப்போதைக்கு அவர் இந்த லார்கொ வின்ச் கதையை படமாக எடுக்கப்போவதில்லை என்பது வேறு விஷயம்). அவரிடமே இந்த வேய்ன்  ஷெல்டன்  கதையையும் பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறேன். என்ன, இந்த வேய்ன் ஷெல்டன் கேரக்டரில் நடிக்க அவர் இன்னமும் ஒரு பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

Lion Comics No 217 Hot n Cool Special Chick Bill Story 1st Page Lion Comics No 217 Hot n Cool Special IznoGoud Story 1st Page No 104
Lion Comics No 217 Hot n Cool Special IznoGoud Story 1st Page No 104

ஒரு கழுதையின் கதை: இந்த தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று சிறிது குழப்பம் வந்தாலும், ஷெரிப் டாக்புல் மூலமாக "அந்த கழுதையே நீங்கதாங்க" என்று கிட ஆர்டினுக்கு சொல்லப்படுகிறது. ஒரிஜினல் கதை தலைப்பை சார்ந்தே (லானாவின் கழுதை) இந்த தலைப்பு வைக்கப்பட்டதாக எடிட்டர் சொல்கிறார்.

சமீப காலங்களில் வந்த சிக்பில் குழுவுனரின் கதைகள் காமெடியில் சற்றே பின் தங்கியிருப்பதாக எனக்கு ஒரு அவதானிப்பு உண்டு. குறிப்பாக நீலப்பேய் மர்மம்,விண்வெளியில் ஒரு எலி, விற்பனைக்கு இரு ஷெரிப், இரும்புக் கவ பாய், கொலைகாரக் காதலி என்று மினி லயன் கிளாசிக் வரிசையில் லயன் காமிக்ஸ் இதழ்களில் வந்த கதைகள் எதுவுமே இல்லை. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழில் வந்த கதையும் இதே ரகத்தில் சேர்த்தி என்பதால் இந்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய காத்திருப்பு வீண் போகவில்லை.

கண்டிப்பாக இந்த கதையானது மினி லயன் கிளாசிக் சிக்பில் கதைகள் பட்டியலில் இடம் பிடிக்கும். மிகவும் எளிமையான கதையோட்டம், ஜாலியான சம்பவங்கள், கவுண்டமணி-செந்தில் காமெடி கலாட்டா, குள்ளனின் குறும்புகள் என்று கதை ரெகுலரான டெம்பிளேட்டில் நகர்ந்து எதிர்ப்பார்க்கப்பட்ட முடிவுடன் பயணிக்கிறது. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் படிக்க வேண்டிய சிக்பில் குழுவினரின் சாகசம்.

மதியில்லா மந்திரியின் ஒரு போஸ்டர் படலம்: நமது கதைகளில் "ஒரு" மற்றும் "படலம்" என்கிற வார்த்தைகள் அதிகமாக வருவதாக ஒரு சாரர் குற்றச்சாட்டை சுமத்திவரும் இந்த சூழலில் அந்த இரண்டு வார்த்தைகளை ஒருங்கே கொண்டு இந்த தலைப்பு. வழக்கமான பாணியில், நாம் எதிர்ப்பார்க்கும் வகையில் ஆனால் நாம் எதிர்பார்க்கவே முடியாத சம்பவங்களுடன் இந்த கதை அமைந்திருக்கிறது.

ஜாலியான நமது சுல்தானுக்கு குழிபறிக்க (அட, இந்த கதையில நிஜம்மாவே குழி பறிக்குராறு நம்ம மதியில்லா மந்திரி) முயன்று வழமை போலவே தோற்கும் ந மோடி மஸ்தானும், அவரது நிழலான ஜால்ரா பாயும் மட்டுமில்லாமல் வேறொரு நபரும் சேர்ந்துக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.இன்ஸ்டன்ட் கிளாசிக்.

நமது இதழ்களில் இப்போதெல்லாம் ரெகுலர் ஆகிவிட்ட இரத்தவெறியன் ஹேகர், குட்டிஸ் கார்னர் இங்கே உங்களின் பார்வைக்கு. மற்றும் கலரில் வந்துள்ள ஸ்பெஷல் விளம்பரம்.

Lion Comics No 217 Hot n Cool Special Page No 102 Hagar The Horrible
Lion Comics No 217 Hot n Cool Special Page No 102 Hagar The Horrible
Lion Comics No 217 Hot n Cool Special Page No 103 Kutti’s Corner
Lion Comics No 217 Hot n Cool Special Page No 103 Kuttis Corner
Lion Comics No 217 Hot n Cool Special Last Page No 114 Next Issue Advt
Lion Comics No 217 Hot n Cool Special Last Page No 114 Next Issue Advt

கடைசியாக வந்துள்ள இந்த ஸ்பெஷல் விளம்பரத்தை பற்றியதே எனது அடுத்த பதிவு. அநேகமாக நாளை இரவுக்குள் பதிவிட முயல்கிறேன். ஆரம்பத்தில் சொன்ன அந்த சர்ஃப்ரைஸ் இந்த விளம்பரத்திலும், அடுத்த பதிவிலும் இருக்கிறது.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

35 comments:

  1. வா தலைவா வா! வாழ்க வளமுடன்! அடிக்கடிப் பதிவுலகிற்குன் அற்புத எழுத்தால் மரியாதை செய்! மிக்க மகிழ்ச்சி! அடுத்தடுத்து அதிரடிகளை அரங்கேற்று!

    ReplyDelete
    Replies
    1. ஜான் சைமன் சார்,

      நன்றி.

      ஆனால் இதெல்லாம் //அற்புத எழுத்தால்// கொஞ்சம் (இல்லை இல்லை) ரொம்பவே ஓவர் என்று உங்களுக்கு தெரியவில்லையா?

      Delete
  2. நான் இணையத்தில் நமது காமிக்ஸ் பற்றிய தேடல்களை துவங்கியபோது முதலில் படிக்க ஆரம்பித்தது உங்கள் blog-தான் . உங்கள் மூலமாகவே ஆசிரியரின் blog-ஐ அறிந்தேன்.அடிக்கடி பதிவுகளை எழுதுங்கள் தோழர் விஸ்வா அவர்களே...

    ReplyDelete
    Replies
    1. உண்மை விஸ்வா ஜி ... நானும் நண்பர் ராஜ் பாபு போலவே ... அடிக்கடி பதிவுகளை எழுதுங்கள்

      Delete
    2. மிக்க நன்றி திரு ராஜா பாபு.

      இதற்கெல்லாம் காரணம் நமது முத்து விசிறி அவர்களே. அவர்களுக்கு நன்றி சொல்வோம்

      Delete
    3. //திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்

      உண்மை விஸ்வா ஜி ... நானும் நண்பர் ராஜ் பாபு போலவே ... அடிக்கடி பதிவுகளை எழுதுங்கள்//

      நன்றி நாகராஜன் அவர்களே.

      காமிக்ஸ் பற்றிய பதிவிடுவது ஒருவகையில் மனதிற்கு மிகுந்த நிம்மதியை தருகிறது

      நம்புவீர்களோ மாட்டீர்களோ, இந்த பதிவினை இடும்போது தியானம் செய்வது போன்ற ஒரு மன நிலை வந்துவிடுகிறது.

      Delete
  3. வெல்கம் பேக் விஸ்வா. சுடச்சுட உங்கள் ஸ்டைல் பதிவு.

    முன்னட்டை பின்னணி சரியில்லாவிட்டால் இந்த அளவு சொபிக்குமா என்று தெரிய வில்லை. பின்னணி, படத்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்று விடுகிறது.
    பின்னட்டையையும் முன் அட்டை மாதிரியே ஓபன் ஆக விட்டிருக்கலாம். பஞ்ச் டைலாக்ஸ் சூப்பர்.

    நானும் வாழைப்பூ வடையை சாப்பிட ஆரம்பித்து விட்டேன் என்று எடிட்டரிடம் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ராஜ் முத்து குமார்,

      அட்டைப்படங்களை பற்றிய உங்களது கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.

      வாழைப்பூ வடை மேட்டரை எடிட்டரிடம் சொல்லி விடுகிறேன்

      Delete
  4. பதிவுக்கு நன்றி விஸ்வா. தொடரும் போட்டிருக்கிறீர்கள்... வழக்கம்போல ஒரு மாதம் கழித்துத்தான் தொடருமா....?

    ReplyDelete
    Replies
    1. பொடியர் அவர்களே (நோட் தட் ர் ஃபோர் மரியாதை),

      சத்தியமாக இந்த இரண்டாவது பதிவை (இன்று இட்டு இருக்கிறேன்) உங்களுக்காகவே டெடிகேட் செய்கிறேன்.

      நன்றி.

      Delete
  5. ஹாய் விஸ்வா,

    விமர்சனம் இனிமை.. அங்கங்கே நகைச்சுவையுடன் சீரான நடையில் விமர்சித்திருக்கிறீர்கள்.. தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி விமல்.

      கண்டிப்பாக முயல்கிறேன்.

      பை தி வே, உங்கள் பதிவுகள் வெளிவந்தும் பல மாமாங்கம் ஆகிறது. அங்கேயும் கொஞ்சம் activity இருந்தால் நல்லதே

      Delete
  6. வெல்கம் பேக். நகைச்சுவையுடன் கூடிய நல்ல பதிவு.

    டைகர் ஸ்பெஷல் பற்றிய பதிவு இன்று வருமா?

    ராஜேஷ் கே

    ReplyDelete
    Replies
    1. டைகர் ஸ்பெஷல் நாளைக்கு இரவு வரும் (வரலாம், ஏனென்றால் வேறொரு பதிவு ரெடியாகிக்கொண்டு இருக்கிறது)

      Delete
  7. வெல்கம் பேக் விஸ்வா.
    ஹாட்டான கிளைமேட்ல கூலா ஒரு பதிவு. சூப்பர்.
    தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. //இந்த இதழிற்கு பெயர் சூட்டிய வாசக அன்பர் காமிரேட் P கார்த்திகேயன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.//

      நன்றி. நன்றி. நன்றி.

      Delete
    2. கார்த்திகேயன்,

      நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

      காமிக்ஸ் என்கிற சிறிய சமூகத்தில் இணையும் அனைவருக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்
      .
      தொடர்ந்த உங்களது ஆதரவுக்கு நன்றி

      Delete
  8. நண்பரே ...பல வருடம் வேண்டி இப்பொழுது ஆவது உங்கள் blogil ஒரு புது புத்தகத்தின் விமர்சனம் வந்ததே .மிக்க நன்றி .ஒவ்வொரு புத்தகத்திற்கும் உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் பார்கிறேன் .இனி மேல் ஆவது உங்கள் ப்ளாக் ற்கு என்னை விட அதிக முறை நீங்கள் வர வேண்டும் என்பதே எனது ஆவல் .:)
    சிறந்த எழுத்து நடைக்கு மிகுந்த பாராட்டுகள் ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரணிதரன்.

      தொடர்ந்த உங்களது ஆதரவுக்கு நன்றி. இனிமேல் தொடர்ந்து பதிவிட முயல்கிறேன்

      Delete
  9. அருமையான பதிவு விஸ்வா தங்கள் பதிவுகள் தனித்தன்மை வாய்ந்தவை அதனால் தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்...
    டெக்ஸ் வில்லர் பூத வேட்டை மிகவும் எதிர்பார்க்கும் ஒன்று..
    விரைவில் டெக்ஸ் ஸ்பெஷல் பதிவினை எதிர்பார்க்கிறோம்...

    என்றும் அன்புடன்
    ஸ்ரீராம்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்,

      உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

      கண்டிப்பாக டெக்ஸ் வில்லர் பதிவு வரும். அதற்க்கு முன்பாக வேறு சில பதிவுகளும் வரும்.

      Delete
  10. சார் ,தவறாக நினைக்க வேண்டாம் .உங்கள் ப்ளாக் செல் போன் மூலம் பார்க்கும் பொழுது எழுத்து மிகவும் பொடியதாக இருப்பதால் படிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது .அதை மட்டும் நிவர்த்தி செய்தால் நான் கனணியை தேடி ஓடி போக தேவை இல்லை .ப்ளீஸ் .

    ReplyDelete
    Replies
    1. பரணி சார்,

      தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை சார். தகவலுக்கு நன்றி.

      இப்போது ஓக்கேவா என்று ஒருமுறை சரிபாருங்களேன்?

      Delete
  11. வெல்கம் பேக் விஸ்வா...டெக்ஸ் பதிவை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. லக்கி லிமட்,

      உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

      கண்டிப்பாக டெக்ஸ் வில்லர் பதிவு வரும். அதற்க்கு முன்பாக வேறு சில பதிவுகளும் வரும்.

      Delete
  12. Replies
    1. நன்றிகள் பல பழனிவேல் சார்.

      Delete
  13. சார் ,போனில் இன்னும் பொடி எழுத்து தான் வருகிறது .எனது போன் செட்டிங் மாற்ற வேண்டுமா என பார்த்தன் .ஆனால் மற்ற ப்ளாக் எழுத்து சரியாக வருகிறது .ஒரு வேலை புதிய பதிவில் சரியாக வரும் என நினைக்கிறன் .பார்க்கலாம் .
    (அதர்காக வது புது பதிவை விரைவில் எதிர் பார்க்கலாம் அல்லவா :)
    சார் அப்புறம் நான் குட்டியூண்டு பையன்.எனவே இந்த சார் எல்லாம் வேண்டாம் .பரணி என்றே அழைக்கவும்.:)

    ReplyDelete
    Replies
    1. புதிய பதிவில் எழுத்துருக்கள் எந்த அளவில் இருக்கிறது என்று செக் செய்துவிட்டு சொல்லுங்கள் பரணி அண்ணா (நீங்கள் குட்டியூண்டு பைய்யன் என்றால் நான் பச்சிளம் பாலகன்)

      Delete
  14. welcome back, Brother.

    expecting another post today.

    ravi

    ReplyDelete
  15. கிங் விஸ்வா அவர்களே........

    எஸ்.டி குரியர் கூமுட்டைகள் சொதப்பியதால் ஹாட் அன்ட் கூல் ஸ்பெஷல் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை..........எனினும் உங்கள் விமர்சனம் புத்தகத்தைப்படித்த அனுபவத்தை தந்தது...... நன்றி...

    ReplyDelete
  16. Hi viswa,

    how can i buy the comics in person.and my email is navin_ragul@yahoo.com,.

    ReplyDelete
  17. sir i am in srilanka . how can i get ur comics books. please tell

    ReplyDelete
  18. யாழ்ப்பாண நண்பர்கள் Comics இதழ்களை எமது விற்பனையாளர்களான

    'Best Print' (Kasthuriyar road jaffna),

    'Pakya Stationaries' (Kokuvil Junction, Kokuvil)

    ஆகியோரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails