Pages

Friday, April 19, 2013

22 சன் ஷைன் லைப்ரரி - டைகர் ஸ்பெஷல் - இரும்புக் கை எத்தன் + பரலோகப் பாதை ஏப்ரல் 2013

காமிரேட்ஸ்,

சிவகாசியில் இருந்து தமிழ் காமிக்ஸ் உலகிற்கு கடந்த நாற்பது ஆண்டுகளாக காமிக்ஸ் வரம் அளித்து வரும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனம்தான் தமிழில் தற்போது எஞ்சியிருக்கும் ஒரே காமிக்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம்.  தமிழில்

  1. முத்து காமிக்ஸ்
  2. லயன் காமிக்ஸ்
  3. காமிக்ஸ் கிளாசிக்ஸ்

என்று மூன்று விதமான காமிக்ஸ் புத்தக வரிசைகளை வெளியிட்டு வருகிறார்கள். கடைசி டினோசர் திடீரென்று குட்டி போட்டால் அது ஒரு சொல்லொணா மகிழ்ச்சியை அனுபவத்தை அளிக்கும். அதைப்போலவே திடீரென்று அமைதியாக அலட்டல் இல்லாமல் புத்தம் புதிய காமிக்ஸ் வரிசை ஒன்றினை விளம்பரமோ, முன்னறிவிப்போ இல்லாமல் தமிழ் புத்தாண்டு பரிசாக தமிழ் காமிக்ஸ் உலகிற்கு சமர்ப்பித்தனர். அந்த புதிய காமிக்ஸ் வரிசையின் பெயரே சன் ஷைன்  லைப்ரரி.

சன் ஷைன் லைப்ரரி: சன் ஷைன் லைப்ரரி என்று "சூரிய தொலைக்காட்சியின்" பெயர், இந்த காமிக்ஸ் வரிசையின் லோகோ வேறு ஆதித்யா டிவியின் லோகோ போலவே இருப்பது, போதாக்குறைக்கு (பக்கங்கள் குறைந்தமையால்) வெளியீடு எண், பதிப்பக விவரங்கள் இல்லாமல் வந்து இருப்பது என்று ஒரு கலவையாக இருந்ததால் பலரும் குழப்பமடைந்தது உண்மைதான். ஆனால் ஜூனியர் எடிட்டரின் மேற்பார்வையில் வந்திருக்கும் இந்த இதழிற்கு சன் ஷைன் லைப்ரரி என்று பெயர் வைத்ததிற்கு மிகவும் சுலபமான ஒரு பதிலே உள்ளது.

பல வருடங்களுக்கு முன்பாகவே அயல்நாட்டு பதிப்பாளர்களிடம் இருந்து உரிமைகளை பெறுவது சம்பந்தமான வணிக தொடர்புகளுக்கு உருவாக்கப்பட்டதே சன் ஷைன் பப்ளிகேஷன்ஸ் என்கிற அமைப்பு. ஆகவே அந்த பெயரிலேயே வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பதால் இப்படி பெயரிடப்பட்டது.

இந்த சன் ஷைன் லைப்ரரி என்ன மாதிரி காமிக்ஸ் வரிசை? சன் ஷைன் லைப்ரரியில் என்ன மாதிரி கதைகள் வரும்? மாதம் ஒரு முறையா? அல்லது ஸ்பெஷல் வெளியீடுகளா? என்று பல கேள்விகள் மனதில் எழும்பியது. நமது எடிட்டரின் பதில்கள் பின் வருமாறு:  

  • வண்ணத்தில் மறுபதிப்புக் காண வாய்ப்புள்ள 'ஹிட்' தொடர்களில் இருந்து selective ஆக சில இதழ்களை - மாதந்தோறும் சிறுகச் சிறுகத் தயாரிக்கத் தொடங்குவது என்ற சிந்தனையினில் உள்ளேன்.
  • அவை எந்தத் தொடர்கள் ; எந்தக் கதைகள் ; எத்தனை இதழ்கள் ; எப்போது வெளியாகும் என்ற விபரங்களெல்லாம்  - இதழ்கள் ஓரளவிற்காவது ொத்தமாய்த் தயார் ஆகிட்ட நிலையினில் தெரியப்படுத்துவேன்.
  • சந்தா செலுத்திடும் அவசியமின்றி - உங்களின் தேவைக்கேற்ப தருவித்துக் கொண்டிடலாம் இவற்றைப் பொறுத்த வரை! So உங்கள் அபிமான நாயகர்களுக்கும்   ; ஆதர்ஷ இதழ்களுக்கும் இந்த வண்ண மறுபதிப்புக் குவியலில்  இடம் கிட்டிடுமா என்ற சந்தோஷக் கனவுகளில் இப்போதைக்கு உங்களை உழல விடப் போகிறேன்.
  • ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்பட்ட புது இதழ்களின் பணிகளோடு ஓசையின்றிப் பின்னணியினில் - இந்த மறுவருகை இதழ்களின் வேலைகளும் இணைந்திடவிருக்கும் பட்சத்தில் அவற்றிற்கு புதிதாய் ஒரு மொழிபெயர்ப்பினை தயார் செய்திடல் நடைமுறைச் சாத்தியமல்ல என்பதால், ஒரிஜினல்களையே பயன்படுத்துவது தவிர்க்க இயலா சங்கதியாகிறது ! அதன் துவக்கமாய் ஏப்ரலில் வரவிருக்கும்"டைகர் ஸ்பெஷலில்" அதே முந்தைய மொழிபெயர்ப்பு !
  • மாதந்தோறும் புது இதழ்களுக்கு அவசியப்படும் நேரமும் , அக்கறையும் , பணமும் போக எங்களிடம் எஞ்சி இருப்பது மாத்திரமே இந்த மறு வருகை முயற்சிக்கு செலவாகும் என்பதால் இப்போதைக்கு அவை நான்கா ? ; ஆறா ? ; பத்தா ? ; பதினாறு இதழ்களா ; என்பது நானே அறிந்திடா விஷயம்! தவிரவும் இதன் தயாரிப்பினில் மேற்பார்வை என்பதைத் தாண்டி எனக்கு பெரிதாய் கம்பு சுற்றும் வேலை ஏதும் கிடையாதென்பதால் எனது focus ; priority ; கவனம் , துளியும் புது இதழ்களின் பாதையிலிருந்து அகன்றிடாது ! ஆகையால் -  இதனை ஒரு அகலக்கால் முயற்சியாய் பார்த்திடல் நிச்சயம் அவசியமல்லவே.

டைகர் ஸ்பெஷல்: சன் ஷைன் லைப்ரரியின் முதல் வெளியீடாக வந்துள்ள டைகர் ஸ்பெஷலில் கேப்டன் டைகரின் இரண்டு அசாத்திய சாகசங்கள் இடம் பெற்றுள்ளன. உண்மையில் இந்த கதைதொடர் மொத்தம் நான்கு பாகங்களை கொண்டது. அதில் முதல் இரண்டு கதைகளை தனித் தனியே முத்து காமிக்ஸில் ஏற்கனவே கருப்பு வெள்ளையில் வெளியிட்டு இருந்தார், எடிட்டர். இந்த நான்கு பாக தொடரின் அடுத்த (கடைசி) இரண்டு பாகங்களை உள்ளடக்கிய "இரத்த தடம்" புத்தகம் மே மாதம் முதல் தேதியன்று எதிர்பார்க்கப் படுகின்றது.

புதிய வாசகர்களுக்காக ஏற்கனவே வெளிவந்த முத்து காமிக்ஸ் இதழ்களின் அட்டைப்படங்கள்: ஒரு மைல் கல் இதழில் (அதாங்க லேண்ட் மார்க் ஸ்பெஷல் புத்தகத்தில்)  எடிட்டரின் காமிக்ஸ் டைம் -  படியுங்கள்.

Muthu Comics Issue No 250 Back Wrapper Muthu Comics Issue No 250 Front Wrapper
Muthu Comics Issue No 250 Back Wrapper Muthu Comics Issue No 250 Front Wrapper
Muthu Comics Issue No 250 Editorial by SV Muthu Comics Issue No 253 Paralokap Paathai Front Cover
Muthu Comics Issue No 250 Editorial by SV Muthu Comics Issue No 253 Paralokap Paathai Front Cover

வாசகர்களுக்கு ஒரு சின்ன பரிசு போட்டி: இந்த இரண்டு கதைகளின் அட்டைப்படங்களை பார்த்தீர்களா? இந்த அட்டைப்படத்திற்க்கும் நடிகர் கெவின் காஸ்ட்னர் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்கள். உங்களுக்கு லயன் / முத்து காமிக்ஸ் குழுமத்தில் இருந்து A 4 சைசில் வெளிவந்த ஒரு முழு வண்ண ஆங்கில காமிக்ஸ் பரிசாக அளிக்கப்படும் (இந்த பரிசு இந்தியாவில் இருப்பவர்களுக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் - அயல் நாட்டு காமிரேட்ஸ் நண்பர்கள் மூலமோ அல்லது வேறு வழியிலோ பெற்றுக் கொள்ளலாம்).

சென்ற பதிவில் அறிவிக்கப்பட்ட போட்டி மிகவும் கடினமாக இருந்ததாக கூறியதால் இந்த போட்டி. இதையும் மீறி ஃக்ளூ கேட்கும் காமிரேட்டுகளுக்கு இரண்டே இரண்டு எழுத்துக்களை தருகிறேன். இது பேருக்கான முதல் எழுத்துக்கள்: R…..C….

டைகர் ஸ்பெஷல் இதழின் முன் பக்க அட்டைப்படம்: அட்டைப்படத்தின் வண்ணக் கலவையை மறுபடியும் ஒரு முறை கூர்ந்து அவதானியுங்கள். மற்ற எண்ணங்களை எல்லாம் ஒருபுறம் திசை திருப்பிவிட்டு அட்டைப்படத்தை மட்டுமே பாருங்கள். கிட்டத்தட்ட அந்த அட்டைப்படமே ஒரு ஆயிரம் கதைகளை சொல்லும் (அந்த கண்களே ஆயிரம் கதை சொல்லுதே என்ற ரொமான்ஸ் கமெண்ட் எல்லாம் பின்னூட்டமாக இட வேண்டாம்).

Twilight என்று சொல்லப்படும் கதிரவன் மயங்கும் மாலைப்பொழுது, புதுமையின் சின்னமான இரெயில் என்ஜினை இருபுறமும் பழமையின் அடையாளமாக கருதப்படும் குதிரையில் சூழ்ந்து வரும் பூர்வீகக் குடியினரான செவ்விந்தியர்கள், இரெயில் இன்ஜினின் கரும் புகை தங்களது இருப்பு பற்றிய அவர்களது குழப்பமான சிந்தனையை படிமமாக காட்டுவது என்று இந்த அட்டைப்படமே ஒரு மரபுக் கவிதையாக அமைந்து இருந்தது.

SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Bluberry Front Cover SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Inner Cover Upcoming Issue Advt Lucky Luke Special 1 Ad


SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Bluberry Front Cover450
SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Inner Cover Upcoming Issue Advt Lucky Luke Special 1 Ad

ஃப்ரெஞ்ச் மூலக்கதையின் அட்டைப்படத்தை விட நமது அட்டையின் வண்ணக் கலவை சிறப்பாக அமைந்து இருப்பதை ஓவியர் மாலையப்பரின் திறமைக்கு மற்றொரு சான்று.உட்பக்க அட்டையில் சன் ஷைன் லைப்ரரியின்  வெளியீடாக வரவிருக்கும் லக்கிலூக் ஸ்பெஷல் இதழ் 1ன் விளம்பரம் அட்டகாசமாக இடம்பிடித்திருக்கிறது.

ஒரே ஒரு குறை என்னவெனில் பயங்கரப் பொடியன் (பொடியர் என்று மரியாதையாக சொல்லலாமே?) என்று லயன் தீபாவளி ஸ்பெஷலில் வெளிவந்த கதை பொடியன் பில்லி என்று வேறொரு பெயரில் வெளிவருவதே.எடிட்டருக்கு இந்த கதையின் தலைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் கருத்தில் இருக்கிறதா என்பது முக்கியமான அம்சம்.

SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Page No 03 Previous Cover SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Irumbuk Kai Ethan 1st Page
SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Page No 03 Previous Cover Image SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Irumbuk Kai Ethan 1st Page

ஏற்கனவே வந்த அட்டையினை முதல் பக்கத்தில் வெளியிட்டது வரவேற்க்கதக்கது. ஆனால் இரும்புக் கை எத்தன் அட்டையினையும் அவ்வாறே வெளியிட்டு இருக்கலாம். இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். எனினும் வரவிருக்கும் சன் ஷைன் லைப்ரரி இதழ்களில் ஒரு நினைவு சின்னமாக பழைய அட்டைப்படங்கள் இடம்பெறும் என்று திடமாக நம்புவதற்கு இந்த ஒரு சான்று போதும்.

அடுத்த மாதம் வரவிருக்கும் இந்த கதையின் இறுதி இரண்டு பாகங்களின் தொகுப்பான இரத்த தடம் இதழின் விளம்பரம் கண்ணை பறிக்கிறது. இதுவரையில் புத்தகம் கைவரப்பெறாத அயல் நாட்டு வாசகர்களுக்காக கதையின் முதல் பக்கமும் சில சாம்பிள் பக்கங்களும்:

SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Paralogap Paadhai 1st Page SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Next Issue Muthu Comics Ad Iratha Thadam May 2013
SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Paralogap Paadhai 1st Page  SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Next Issue Muthu Comics Ad Iratha Thadam May 2013

SunShine Library Issue No 001 April 2013 Tiger Special Irumbuk Kai ethan Sample Page SunShine Library Issue No 001 April 2013 Tiger Special Paralogap Paadhai Sample Page
SunShine Library Issue No 001 April 2013 Tiger Special Irumbuk Kai ethan Sample Page SunShine Library Issue No 001 April 2013 Tiger Special Paralogap Paadhai Sample Page

மதியில்லா மந்திரி - கண்ணா,கலீபா தின்ன ஆசையா? : இந்த இதழின் உச்ச விளக்கு (ஹைலைட் என்பதின் சிறு பத்திரிகை எழுத்தாளர்களின் மொழி பெயர்ப்பு முழி பெயர்ப்பு: நன்றி - சாரு நிவேதிதா, கடவுளும் நானும்) நம்ம மதியில்லா மந்திரியின் கதை என்பது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் முறையாக அறிமுகப் பக்கத்தை வெளியிட்டு இந்த கதாபாத்திரங்களை பற்றிய ஒரு அறிமுகத்தை புதிய வாசகர்களுக்காக ஒரு புரிதலை ஏற்படுத்தியது. மேல் விவரங்களுக்கு மதியில்லா மந்திரி பற்றிய ஒரு முழுமையான பதிவு .

SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Introduction of IzNoGoud Characters SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 IzNoGoud Story Kaleeba thinna Aasaiyaa 1st Page
SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Introduction of IzNoGoud Characters SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 IzNoGoud Story Kaleeba thinna Aasaiyaa 1st Page

சென்ற மதியில்லா மந்திரி கதையைப் போலவே இந்த கதையும் ஏற்கனவே லயன் காமிக்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கதையே. ஆனால் புதியதொரு மொழி பெயர்ப்புடன் வண்ணக் கலவையில் பார்க்கும்போது பழைய கதையை மறக்கடிக்க வைத்து விடுகிறது.

இரத்த நகரம் என்ற பெயரில் 1999ல் வெளிவந்த தீபாவளி மலர் யாருக்காவது நினைவிருக்கிறதா? டெக்ஸ் வில்லரின் முழு நீள சாகசம் நமது இரும்புக் கை மாயாவி கதைகளின் ஆஸ்தான ஓவியர் ஜீசஸ் ப்ளாஸ்கோ அவர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த இந்த கதையின் முடிவில் ஒரு சிறுகதையாக இந்த மதியில்லா மந்திரி கதை "கரைப்பார் கரைத்தால்" என்கிற பெயரில் கருப்பு வெள்ளையில் வெளிவந்து இருந்தது.

Lion Comics Issue No 155 Nov 1999 Ratha Nagaram 2nd Story IznoGoud The Sinister Liquidator EgMont Daragud 1980 Edition IznoGoud The Sinister Liquidator
Lion Comics Issue No 155 Nov 1999 Ratha Nagaram 2nd Story IznoGoud The Sinister Liquidator EgMont Daragud 1980 Edition IznoGoud The Sinister Liquidator

சரி, அப்போ சன் ஷைன் லைப்ரரி மொத்தமுமே பழைய க்ளாசிக் கதைகளின் முழுவண்ண மறுபதிப்புதான் என்று நினைக்கையில் திடீரென்று அந்த எண்ணவோட்டத்தை அடியோடு அசைத்து விடுகிறது இந்த விளம்பரம். ஆமாம், லக்கிலூக்கின் சிறுவயது சாகசங்கள் கிட் லக்கி என்கிற பெயரில் ஃப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் வெளிவருவது தெரிந்ததே.

இப்போது அந்த வரிசைக் கதைகள் தமிழில் சன் ஷைன் லைப்ரரியில் விரைவில் வெளி வர இருக்கின்றன. நல்லதொரு முயற்சி. கண்டிப்பாக வெற்றி பெரும் என்பது அடியேனின் எண்ணம். அப்போ இந்த சன் ஷைன் லைப்ரரி வண்ண மறுபதிப்புகள் மட்டுமின்றி புதிய வரிசை கதைகளையும் கொண்டு இயங்குமா என்கிற கேள்விக்கு ஆமாம் என்கிற விடையினையே இந்த விளம்பரம் அளிக்கின்றது.

ஃப்ரெஞ்ச் மூலக்தை அட்டையில் இருக்கும் வண்ணக் கலவையையும் நமது இதழின் பின் அட்டையையும் ஒரு முறை பார்த்து விட்டு உங்களது கருத்தினை சொல்லுங்கள். பின் அட்டையில் அந்த ஃப்ரேம் போட்ட பார்டர் டிசைன் இந்த இதழிலும் தொடர்கிறது.

 

SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Next SSL Ad Kid Lucky SunShine Library Issue No 001 April 2013 Tiger Special Back Wrapper
SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Next SSL Ad Kid Lucky SunShine Library Issue No 001 April 2013 Tiger Special Back Wrapper
Books Available for Sale in Lion / Muthu Comics Office: SunShine Library Issue No 001 April 2013 Tiger Special Back inner Wrapper
SunShine Library Issue No 001 April 2013 Tiger Special Back inner Wrapper
SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Blueberry Covers
SunShine Library SSL 01 Tiger Special Apr 2013 Blueberry Covers

கைவசமுள்ள பிரதிகள் பட்டியல் நாளுக்கு நாள் வறுமையில் வாடும் முதியவரைப்போல மெலிந்து கொண்டே வருவதைப்பார்க்கையில் மிகுந்த மகிழ்வை அளிக்கிறது. கண்டிப்பாக இந்த புத்தகங்களுமே வெகு விரைவில் தீர்ந்து விடும் என்பது உள்ளங்களை நெல்லிக்கனி. ஆகையால் உடனடியாக இந்த புத்தகங்களை வாங்கி ஸ்டாக் செய்துக்கொள்ளுங்கள்.

சென்ற இதழில் பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னமும் சரியான பதில் வராததால் ஒரு மறு ஒளிபரப்பு:

உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய போட்டி: செக்ஸ்டன் ப்ளேக் கதைகள் (அதாவது வாலியண்ட் இதழில் வந்த கதைகள்) ஒரு குறிப்பிட்ட காமிக்ஸ் ஹீரோவின் கதைகளுடன் "எதேச்சையாக" பொருந்தி இருக்கும். அந்த மற்ற ஹீரோவின் கதையும் தமிழில் வந்துள்ளது. அதனைப்பற்றி நமது முத்து விசிறி அவர்களும் பதிவிட்டுள்ளார்.

  • அந்த மற்றொரு ஹீரோ யார்?

  • அவரது கதைகளுக்கும் செக்ஸ்டன் ப்ளேக் கதைகளுக்கும் என்ன ஒற்றுமை?

  • அந்த மற்றொரு ஹீரோவின் கதை எந்த காமிக்ஸில் வந்தது?

இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நபர்களுக்கு நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் இருந்து A4 சைசில் வெளிவந்த ஆங்கில காமிக்ஸ் இதழ் ஒன்று இலவசமாக அளிக்கப்படும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

22 comments:

  1. சூப்பர் பதிவு ஜி. உங்கள் கேள்விக்கான விடை கண்டுபிடித்துவிட்டதாகவே நினைக்கிறேன். "Dances with Wolves" (1990) காட்சி அது. இதோ புகைப்பட இணைப்பு: http://2.bp.blogspot.com/-S4Z96d7k1HA/T_blOS46sxI/AAAAAAAAAJA/XmeLt5nofJk/s1600/dances+with+wolves.jpg

    ReplyDelete
    Replies
    1. நெத்தி அடி.

      சத்தியமா எனக்கு எவ்வளவு சந்தோஷம் என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது.

      சரியான பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி.

      உங்களது அந்த பரிசு புத்தகத்தை எப்படி பெற்றுக் கொள்ள போகிறீர்கள்?

      Delete
    2. சத்தியமாக பரிசு எனக்கேதானா? எனக்கேதானா? எனக்கேதானா?

      Delete
    3. ஆமாம்,

      பரிசாக நான் கொடுக்கப்போகும் அந்த புத்தகம்

      நமது லயன் . முத்து குழுமத்தினரால் வெளியிடப்பட்ட ஆங்கில, முழு வண்ண காமிக்ஸ்.

      ஒரே ஒரு இதழ்தான் வந்தது. அதுவும் ஆன்லைனிலோ அல்லது புத்தகமாகவோ எங்கேயுமே இப்போதைக்கு கிடைக்கவே கிடைக்காத புத்தகம்.

      ஆகவே, சொல்லுங்கள் - புத்தகத்தை எப்படி பெற்றுக் கொள்ளுகிறீர்கள்?

      Delete
    4. பரிசு இப்போதைக்கு உங்களிடமே பத்திரமாக இருக்கட்டும். பெற்றுக்கொள்ளும் வழிமுறையை யோசித்துவிட்டு மின்னஞ்சல் இடுகிறேன். மிக்க நன்றி.

      Delete
  2. சூப்பர் பதிவு. நான் புத்தகத்தை வாங்கி படித்தேன். பழைய அட்டைப்பட போட்டோக்களுக்கு நன்றி. போட்டோ ஷாப்பில் இவற்றை மேம்படுதுகிரீர்களா?

    ReplyDelete
    Replies
    1. சர்வ நிச்சயமாக.

      போட்டோஷாப் இல்லையெனில் நானில்லை.

      என்னுடைய போட்டோஷாப் குரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கே இந்த பாராட்டுக்கள் போய் சேரும்.

      Delete
  3. //ஒரே ஒரு இதழ்தான் வந்தது. அதுவும் ஆன்லைனிலோ அல்லது புத்தகமாகவோ எங்கேயுமே இப்போதைக்கு கிடைக்கவே கிடைக்காத புத்தகம்.
    What is the name of the book ?
    Still the answers are n't clear . Can you give info on the quiz answer


    ReplyDelete
    Replies
    1. Dear Arun,

      I Don't want to Reveal the Book at least till someone finds the right answer or the month End - Whichever comes first.

      Take this also as a contest and may be you can end up with that book, Who knows?

      Am extremely sorry for making you to wait for the answer.

      Delete
  4. கேள்வியா கேட்டு தள்றீங்களே தலை! புக்கு நீங்க தரும் பரிசுங்களா? எனக்கு பதில் தெரியலை! தேடும் படலத்தை ஆரோக்கியமான பாதையில் மடைமாற்றம் பண்ணி புதியதோர் துவக்கம் கொடுத்துள்ளீர்கள்! நண்பர் பொடியரே வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் போட்டிங்களே ஒரே போடா! உங்க ஆழ்ந்த அறிவையே இது காட்டி நிற்கிறது!

    ReplyDelete
    Replies
    1. நீங்க பதில் சொல்வீங்கன்னு தான் தல எதிர்பார்த்தேன்.

      வாங்க வந்து தொபுக்கடீர்'ன்னு நீங்களும் போட்டியில் குதியுங்கள்.

      Delete
  5. Replies
    1. Siv,

      Am Happy to See you becoming Happy to see my posts often.

      Delete
  6. புத்தகத்தை விட உங்கள் பதிவில் அட்டை படம் கலக்க லாக உள்ளது .சிறந்த பதிவு ,இப்படி தொடர்ந்து பதிவிட்டால் மிகுந்த மகிழ்ச்சி .

    ReplyDelete
    Replies
    1. பரணி சார்,

      இதெல்லாம் ரொம்பவே ஓவர். ஏதோ கொஞ்சம் போட்டோஷாப்பில் டச் அப் செய்தால், அதற்காக இப்படியா கிண்டல் செய்வது?

      Delete
    2. நான் சொல்வது எல்லாம் உண்மை ,உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .

      Delete
  7. நல்ல பதிவு. பொடியன் சரியான அதிர்ஷ்ட சாலி. KBT யிலும் வெற்றி பெற்றார், இங்கேயும் நம் நிறுவனம் வெளியிட்ட ஆங்கில காமிக்ஸ் புத்தகத்தை வென்றிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அங்கே வெற்றிபறவில்லை அண்ணே. 3ஆவது இடம்தான். பரிசு ஓண்ணும் கிடைக்கவில்லை. இங்கேதான் கிடைத்தது. ரொம்ப கஷ்டப்பட்டது ரெண்டுமே... அதிஷ்ர்டம்னு சிம்பிளா சொல்லிட்டீங்களே....

      Delete
  8. நண்பர் பொடியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .... நண்பரே உங்க வயசை சொல்லுங்க... :)

    நண்பர் விஸ்வா ... வாழ்த்து சொல்பவர்களுக்கு ஏதாவது பரிசு உண்டா ? :)

    ReplyDelete
  9. தலைவா பாதி வடையாவது கிடைக்குமா :)

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails